Relax Please: FB page daily Posts |
- மூளைக்கொரு வேலை
- :)
- :: வாழ்வியல் :: Ø பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். உழைத...
- ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் வாணியம்பாடி செல்லும் சாலையோரத்தில் இருக்கிறது...
- யதார்த்தம் :)
- அன்றைய மதுரை... அரிய புகைப்படம்...
- உண்மையான தோழன் <3
- :)
- லவ்வுன்னா என்ன?? 5 வயசு பொண்ணு : என் பொம்மைய அவன் புடுங்கிட்டு போனான் எனக்கு கோ...
- பொறியியல் பட்டதாரி நண்பர்களுக்கு அருமையான அரசாங்க வேலை வாய்ப்பு... நம்மில் பலபே...
- நல்லது மட்டுமே பண்ணுங்க வாழ்க்கை நச்சுன்னு இருக்கும் ! (y) (y)
- மழலையின் குதூகலம்
- (y)
- சான்றோர் சிந்தனைகள்: நான் எடுக்கும் முடிவு சரியா என்று எனக்கு தெரியாது அனால் நா...
- விருதுநகரில் குறுகலான வீதியில் ஜீப்பை நிறுத்தி விட்டு, காய்கறி வாங்க சென்றார் தா...
- என் முன்னால் வராதே இனி, கோணிப்பைக்குள் வைத்து, கடத்தினாலும் கடத்திவிடுவேன் ! இத்...
- :)
- சின்ன சின்ன ஆசைகள் ================= கொஞ்சும் மழலையாய் மாறிவிட ஆசை வண்ணத்துப்ப...
- இப்போம் இருக்குற நம்ம ஊரு புள்ளைங்களுக்கு தலையைப் பின்னத் தெரியாது.... அப்போ வாழ...
- இன்றைய நமது மீடியாக்களின் செயல்பாடு...
- :)
- பெண் : டாக்டர் என்னோட ரெண்டு வயசு பையன் இன்னும் எப்பவும் ம் விரல் சூபபுரான் . ட...
- இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்... பெறுமதியை சொல்வார்கள்...! ► ஒரு மில்லி செகண்டி...
- தயவு செய்து அவசர ஊர்திக்கு வழிவிடுங்கள் .....! இதை மற்றவருக்கும் தெரியபடுத்துகள...
- :)
- நம்மளால மட்டும் தான் இப்படியெல்லாம் பதில் சொல்ல முடியும். 1.ஏண்டா லேட் ? லேட் ஆ...
- தத்துவம்ஸ் – (பழங்கள்ளு புதிய மொந்தையில்) :P 1) எவ்வளவுதான் நீச்சல் தெரிஞ்சாலும...
- ஓய்வறியா அலைபோல உழைப்பதற்கு தயாராய் நீங்கள் இருந்தால் ......வெற்றி நுரைத்து பொங...
- பஜ்ஜி பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (Y)
மூளைக்கொரு வேலை Posted: 13 Oct 2014 09:40 AM PDT |
Posted: 13 Oct 2014 09:30 AM PDT |
Posted: 13 Oct 2014 09:15 AM PDT :: வாழ்வியல் :: Ø பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம். Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது. Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான். Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும். Ø சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான். Ø வெற்றியின் ரகசியம் - எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல். Ø பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது. Ø மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது. Ø நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே! Ø அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே! Ø செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை! Ø நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை! Ø பறக்க விரும்புபவனால் படர முடியாது. Ø மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை. Ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம். Relaxplzz |
Posted: 13 Oct 2014 09:00 AM PDT ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் வாணியம்பாடி செல்லும் சாலையோரத்தில் இருக்கிறது ஏலகிரி ஓட்டல். அங்குச் சாப்பிட்டுவிட்டுச் சிலர் பணம் கொடுக்காமல் வணக்கம் மட்டும் தெரிவித்து விட்டுச் செல்கின்றனர். கல்லாவில் இருந்தவரும் காசு கேட்பதில்லை. பணத்துக்குப் பதில் வணக்கம் செலுத்தினால் போதுமா? விசாரித்தபோதுதான் மேலே தொங்கிக்கொண்டிருந்த சிலேட்டுப் பலகைகளைக் காட்டினார். விஷயம் புரிந்தது. 'முதியோர், ஊனமுற்றோர்களுக் கு காலை 8 முதல் 11 மணி வரை இலவச உணவு' (100 பேர் வரை), 'பால் வாங்கப் பணமில்லையென்றால் குழந்தைகளுக்கு இலவசமாகப் பால்', 'வாரம் 100 மாணவர்களுக்கு இலவசமாக பேனா அல்லது பென்சில்', '1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை முதல் மாலை வரை பாதி விலையில் உணவு' இந்த அறிவுப்புகள் சிலேட்டுப் பலகைகளில் சாக்பீஸால் எழுதப்பட்டிருந்தன. ஆச்சரியத்துடன் கேட்டால், "பணத்துக்காக வாழ்றதில்லிங்க; வாழ்றதுக்குதாங்க பணம்" பெரிய தத்துவத்தை எளிதாகச் சொல்கிறார் இந்த ஓட்டலின் உரிமையாளர் நாகராஜ். அவர் இந்தச் சேவையை 25 ஆண்டுக்கும் மேலாகச் செய்துவருகிறார். ஒரு நாளைக்கு ஏறக்குறைய 100 பேர் வரை இந்த ஓட்டலை நம்பியே காலம் தள்ளுகின்றனர். ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வட மற்றும் தென் தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திரத்தை இணைக்கும் முக்கியச் சந்திப்பு. இந்த நிலையத்தைக் கடந்ததுதான் அனைத்து ரயில்களும் பயணிக்கின்றன. பயணத்தின்போது காலி தண்ணீர் பாட்டிலை ஜன்னல் வழியே வீசுவதைப்போல குடும்பத்தில் பாரமென கருதப்படும் மனிதர்களை ரயிலில் அழைத்து வந்து இங்கே இறக்கிவிட்டுச் சென்று விடுகின்றனர். அவர்கள் பெரும்பாலும் முதியவர்கள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். மாதந்தோறும் குறைந்தபட்சம் 15 பேராவது இப்படி அனாதைகளாகத் தனித்து விடப்படுகின்றனர். திக்குத் தெரியாமல் தவிக்கும் அவர்கள் ஜோலார்பேட்டையில ேயே சுற்றித்திரிகின்றனர். இவர்களுக்கு இந்த ஓட்டல் ஒரு அன்னச் சத்திரமாக இருக்கிறது. "பசி என்ற உணர்வு மட்டும்தான் சுயநினைவு இல்லாத வருக்குக்கூட உணவு நமக்கு தேவை என்பதை உணர்த்து கிறது" என்கிறார் நாகராஜ். இவர்கள் தவிர சுற்றுவட்டாரங்களில் வீடுகளில் கவனிக்க முடியாத நிலையில் இருக்கும் முதியவர்களுக்குத் தேவையான உணவை அவர்களது குடும்பத்தினர் வந்து இலவசமாக பார்சல் வாங்கிச் செல்லலாம். நாகராஜின் மனைவி சுஜாதாவும் தன் கணவரின் இந்தத் தொண்டுக்குப் பக்கபலமாக இருக்கிறார். மிகச் சின்ன வருமானத்தில் இதையெல்லா எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, "இவர்களுக் கென்று தனியாக உலை வைக்கப்போதில்லை. வழக்க மாக சமைக்கும் அளவோடு கொஞ்சம் கூடுதலாக சமைக்கிறேன். 5 கிலோ மாவு புரோட்டோ போட்டாலும் 10 கிலோ மாவு போட்டாலும் மாஸ்டருக்கு ஒரே கூலிதான். எரிபொருளும் ஏறக்குறைய ஒரே அளவில்தான் செலவா கிறது. சில ஆயிரம் ரூபாய் வருவாய் இழப்புதான் என்றாலும் எனக்கு குடும்பம் நடத்தத் தேவையான லாபம் கிடைக்கிறது. மனதுக்கும் சந்தோஷமாக இருக்கிறது" என்கிறார் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் 'வாடி நிற்கும்' நாகராஜ். Relaxplzz ![]() |
யதார்த்தம் :) Posted: 13 Oct 2014 08:50 AM PDT |
Posted: 13 Oct 2014 08:50 AM PDT |
உண்மையான தோழன் <3 Posted: 13 Oct 2014 08:40 AM PDT |
Posted: 13 Oct 2014 08:30 AM PDT |
Posted: 13 Oct 2014 08:15 AM PDT லவ்வுன்னா என்ன?? 5 வயசு பொண்ணு : என் பொம்மைய அவன் புடுங்கிட்டு போனான் எனக்கு கோவம் வந்திடுச்சு அவன் சைக்கிள தள்ளி விடலாம்னு போறப்ப என் பொம்மைக்கு புது சட்ட போட்டு எடுத்துட்டு வருவது. 10 வயசு பொண்ணு : அவன் சோசியல் சயன்ஸ் புத்தகத்துல கலர் பென்சிலாலக் கிறுக்கிட்ட்டேன் டீச்சர் கேட்டப்ப என்ன மாட்டி விடாம அவனே முட்டி போட்டு நிறபது . 15 வயசு பொண்ணு : ரெகார்ட் நோட் ஒன்னா ஒக்கார்ந்து எழுதும் போது அந்த பேனாவ தான்னு வாங்கும் போது அவன் கைல லேசா உரசுவது 20 வயசு பொண்ணு : நான்கு வருடம் எதையுமே சொல்லாமல் கல்லூரி கடைசி நாளில் விடை பெறும் போது "அப்புறம் எப்ப பார்க்கலாம் ?" என்று அவன் கேட்டது 25 வயசு பொண்ணு : கையில ஒத்த ரோசாவோட வந்து என்னைக் கல்யாணம் பண்ணிப்பாயா என்று கேட்டு அவனையே முட்டாளாக்கி கொண்டது . 35 -45 வயசு பெண் மணி : நான் ரொம்ப களைப்பா இருக்குறதப் பார்த்து நான் காபி போட்டு தரவா என்று அவர் கேட்பது 55 வயசு பெண்மணி : அவருக்கு மைசூர்பான்னா உயிர் எனக்கு சர்க்கரை நோய் நான் சாப்பிட முடியாதென்று அவரும் சாப்பிடாமல் அதை ஒதுக்குவது 65 வயது பெண்மணி நான் கடைசி மூச்ச விடும் போது என் கைய பிடிச்சிகிட்டே என்னையும் கூட்டிட்டு போ என்று அவர் கண்ணீர் விட்டது. Relaxplzz |
Posted: 13 Oct 2014 08:00 AM PDT பொறியியல் பட்டதாரி நண்பர்களுக்கு அருமையான அரசாங்க வேலை வாய்ப்பு... நம்மில் பலபேருக்கு ரெயில்வே வேலைவாய்ப்பு பற்றிய எந்த ஒரு அடிப்படை அறிவும், போதிய விளக்கமும் இருந்ததே இல்லை , இதில் நானும் விதிவிலக்கு அல்ல . ரெயில்வே தேர்வு என்பது ஏதோ மிகவும் கடினம் என்பது போன்ற ஒரு மாயை நம் தமிழக மாணவர்களிடம் உருவாக்கப் பட்டுள்ளது . இந்த ஒரு எண்ணத்தை இல்லாமல் செய்வதுதான் இந்த பதிவின் நோக்கம் . தமிழக கிராமப்புற மாணவர்களுக்கு தெரிந்தது எல்லாம் போலீஸ் வேலையும் , TNPSC ஐ பற்றிய அறிவு மட்டும் தான் . இதை விட எளிதன தேர்வு முறைகளை உள்ளடக்கிய ரயில்வே வேலைவாய்ப்பு பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் இல்லாமல் போய்விட்டது . இதன் காரணமாகத்தான் பல வடஇந்திய மாணவர்கள் நம்முடைய தமிழகத்தை குறிவைத்து இங்குள்ள vacancy போஸ்ட் களுக்கு விண்ணப்பம் செய்து எளிதில் வேலைவாய்ப்பை பெற்று விடுகிறார்கள் , அமைதி பூங்கவான தமிழகத்தில் நிலை கொண்டு விடுகிறார்கள் . நம்மவர்களோ டாஸ்மார்க்கிலும், கால் சென்டரிலும் கிடைக்கும் சொற்ப வருமானத்தை கொண்டு வாழ பழகிகொண்டோம் . இந்த இழி நிலை மாற வேண்டும் , தற்சமயம் ரயில்வே தேர்வு மையம் (Railway Recruitment Board ) வழியாக பொறியியல் பட்டதாரிகள் , டிப்ளோமோ பட்டதாரிகள், மற்றும் கலை அறிவியல் பட்டதாரிகள், +2 & 10 வது மாணவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளிடப் பட்டுள்ளது , இந்த அரியதொரு சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் கைபற்றுங்கள். www.rrbchennai.gov.in/என்ற முகவரியல் தங்களுக்கு தேவையான எல்லா விளக்கங்களும் தரப்பட்டு உள்ளது. ஆன்லைன் முலமாகவே எளிதாக விண்ணப்பிக்க முடியும் . (CENTRALISED EMPLOYMENT NOTICE No.02/2014) ஆன்லைன் விண்ணப்பதிற்கான கடைசி நாள் 19.10.14. நண்பர்களே உங்களால் ஆனதொரு சின்ன உதவி , இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்குள் பகிர்வு செய்யவும், தமிழக மாணவர்கள் அனைவருக்கும் இந்த தகவல் சென்றடைய உதவுங்கள் Relaxplzz ![]() |
Posted: 13 Oct 2014 07:50 AM PDT |
Posted: 13 Oct 2014 07:40 AM PDT |
Posted: 13 Oct 2014 07:30 AM PDT |
Posted: 13 Oct 2014 07:15 AM PDT சான்றோர் சிந்தனைகள்: நான் எடுக்கும் முடிவு சரியா என்று எனக்கு தெரியாது அனால் நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் .... -மாவீரன் அலெக்ஸ்சாண்டர் நீ வெற்றியடைந்தால் நீ எதையும் விளக்கத் தேவையில்லை, ஆனால் நீ தோல்வியடைந்தால் அதை விளக்குவதற்கு அங்கே நீ இருக்கக் கூடாது... -ஹிட்லர் எல்லோரையும் நம்புவது ஆபத்தானது ஆனால் யாரையுமே நம்பாதிருப்பது அதைவிட ஆபத்தானது... -ஆபிரஹாம் லிங்கன் வெற்றிக்கு மூன்று வழிகள்: 1 மற்றவரை விட அதிகம் தெரிந்து வைத்துக் கொள் 2. மற்றவரை விட அதிகமாக வேலை செய் 3 மற்றவரை விட குறைவாக எதிர்பார் -வில்லியம் ஷேக்ஸ்பியர் வாழ்க்கையில் நான்கு பொருள்களை உடைத்து விடக் கூடாது. அவை நம்பிக்கை, நட்பு, உறுதிமொழி, இதயம் ஏனென்றால் அவை உடையும் பொழுது சப்தம் எழுவதில்லை மாறாக வலிதான் ஏற்படும். - சார்ல்ஸ் டிக்கன்ஸ் வாழ்க்கையில் எந்தத் தவறும் தான் செய்யாததாக எப்பொழுது ஒருவன் எண்ணுகிறானோ அப்போதே அவனது வாழ்க்கையில் அவன் புதியதாக எந்த ஒரு விஷத்திலும் ஈடுபடவில்லை என்பது தெளிவாகின்றது. -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் Relaxplzz |
Posted: 13 Oct 2014 07:00 AM PDT விருதுநகரில் குறுகலான வீதியில் ஜீப்பை நிறுத்தி விட்டு, காய்கறி வாங்க சென்றார் தாசில்தார். போக்குவரத்து நெரிசலால் திண்டாடிய வாலிபர் ஒருவர், ஜீப் டயரை பஞ்சராக்குகிறார். உள்படம்: தாசில்தாருடன் வாக்குவாதம் செய்யும் வாலிபர்...!! ## சபாஷ் ராஜா ! (y) (y) இது போன்ற தைரியம் நம்மில் எத்தனை பேருக்கு வரும் !!!. - Relaxplzz ![]() |
Posted: 13 Oct 2014 06:45 AM PDT என் முன்னால் வராதே இனி, கோணிப்பைக்குள் வைத்து, கடத்தினாலும் கடத்திவிடுவேன் ! இத்தனை அழகை மொத்தமாய் அபகரிக்க, எவருக்குத்தான் இஷ்ட்டமிருக்காது? தவழும் நிலவன்றோ நீ குட்டி மனுசி !! # மகளெனும் தேவதை # Relaxplzz ![]() |
Posted: 13 Oct 2014 06:30 AM PDT |
Posted: 13 Oct 2014 06:15 AM PDT சின்ன சின்ன ஆசைகள் ================= கொஞ்சும் மழலையாய் மாறிவிட ஆசை வண்ணத்துப்பூச்சியாய் தேன்சுவைக்க ஆசை மொட்டில் இருந்து பூவாய் வெடித்திட ஆசை கயல் போல நீரில் நீந்திட அசை விண்மீனாய் வானில் உறைந்திட ஆசை மயில் போல தோகை விரித்தாட ஆசை மான் போல துள்ளி குதித்தோட ஆசை கிளி போல கிள்ளை மொழி பேச ஆசை குயில் போல கானம் பாடிட ஆசை வானவில்லை உடையாய் அணிந்துகொள்ள ஆசை நிலவின் மடியில் கண்ணுறங்க ஆசை அன்பெனும் குடைக்குள் உலகை அடைத்திட ஆசை.!!! - கவிதை சாரல்கள். Relaxplzz |
Posted: 13 Oct 2014 06:00 AM PDT இப்போம் இருக்குற நம்ம ஊரு புள்ளைங்களுக்கு தலையைப் பின்னத் தெரியாது.... அப்போ வாழ்ந்தவங்க கல்லுல நம் கலாச்சாரத்தை விட்டு போய்ட்டாங்க, நல்ல பாருங்க கூந்தல பின்னி பூக்கூட வச்சி இருக்காங்க... கோவில்கள் வழிபாட்டு இடம் மட்டும் அல்ல, நம் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிப்பவை.. இடம்:- திருமுட்டம், கடலூர் மாவட்டம்.... நாம போய் பாக்கத்தான் போறது இல்ல லைக் பண்ணி ஷேர் பண்ணுங்க.... ![]() |
Posted: 13 Oct 2014 05:45 AM PDT |
Posted: 13 Oct 2014 05:30 AM PDT |
Posted: 13 Oct 2014 05:15 AM PDT பெண் : டாக்டர் என்னோட ரெண்டு வயசு பையன் இன்னும் எப்பவும் ம் விரல் சூபபுரான் . டாக்டர் : ஒன்னும் problem இல்லை.....சரி பண்ணிடலாம் பெண் : ரொம்போ கேவலமா இருக்கு டாக்டர் ...எவ்வளோ செலவு ஆனாலும் பரவாயில்லை டாக்டர் : ஒன்னும் செலவு இல்லை ...ரெண்டு வயசு பையனுக்கு ஒரு பெரிய பையனோட ...... டவுசர மாட்டி வுட்டுடு....அவ்வளோதான் பெண் : (குழப்பமாக )......எதுக்கு டாக்டர்...????? டாக்டர் : அந்த டவுசர் அவனுக்கு லூசா இருக்கும் ...அதை கீழே விழாமே மேலே இழுத்து விடுறதே அவன் வேலையா இருக்கும் விரல் சூப்ப டைம் இருக்காது... :P :P Relaxplzz |
Posted: 13 Oct 2014 04:56 AM PDT இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்... பெறுமதியை சொல்வார்கள்...! ► ஒரு மில்லி செகண்டின் மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கியவரைக் கேட்டால் தெரியும்...! ► ஒரு செகண்டின் மதிப்பை விபத்தில் உயிர் தப்பியவரைக் கேட்டால் தெரியும்...! ► ஒரு நிமிடத்தின் மதிப்பை தூக்கிலடப் படும் கைதியைக் கேட்டால் தெரியும்...! ► ஒரு மணி நேரத்தின் மதிப்பை உயிர் காக்க போராடும் மருத்துவரைக் கேட்டால் தெரியும்...! ► ஒரு நாளின் மதிப்பை அன்று வேலை இல்லாத தினக் கூலி தொழிளாலரைக் கேட்டால் தெரியும்...! ► ஒரு வாரத்தின் மதிப்பை வாரப் பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியரைக் கேட்டால் தெரியும்...! ► ஒரு மாதத்தின் மதிப்பை குறைப் பிரசவம் ஆகும் ஒரு தாயைக் கேட்டால் தெரியும்...! ► ஒரு வருடத்தின் மதிப்பை தேர்வில் தோல்வியுற்ற ஒரு மாணவனைக் கேட்டால் தெரியும்...! >>நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார்.. ஓடுவது முள் அல்ல..! உன் வாழ்க்கை...!!!<< Relaxplzz ![]() வாழ்வின் மொழி... |
Posted: 13 Oct 2014 04:45 AM PDT |
Posted: 13 Oct 2014 04:30 AM PDT |
Posted: 13 Oct 2014 04:15 AM PDT நம்மளால மட்டும் தான் இப்படியெல்லாம் பதில் சொல்ல முடியும். 1.ஏண்டா லேட் ? லேட் ஆயிருசுங்க சார் (கடைசி வர எதுக்குன்னு மட்டும் சொல்லவே மாட்டான்) 2.எங்க இருக்க? பஸ்ல தான் இருக்கேன் ( கடவுளே...எந்த இடத்துல டா இருக்க ?) 3.எப்ப முடியும்? இதோ இப்ப முடிஞ்சுரும். ( இதையே தான் அரை மணி நேரமா சொல்லிருப்பான்) 4.சாயங்காலம் எப்ப வருவ? வந்துருவேன் சீக்கிரம். ( இதுக்கு நீ பதில் சொல்லாமையே இருக்கலாம் ) 5.சாப்புட என்ன வேணும்? எதையோ போடு ( களிமண் வச்சா கூட தின்னுருவியா?) 6.எங்க கிளம்பிட்ட? வந்து சொல்றேன் (ச்ஷப்பா.....நீ வரதுக்குள்ள எனக்கு வயசாயிரும் டா) 7.காலைல எப்ப எழுந்தறிப்ப? முழிப்பு எப்ப வருதோ அப்பத்தான் ( முழிக்காத, அப்படியே மூடிரு கண்ண..) 8.இங்க இருந்த தைலத்த பாத்தியா? பாத்தேன் போனமாசம் எனக்கு தலைவலி வந்தப்ப. ( இப்படியே பதில் சொல்லு.என் தலை கொஞ்ச நாளைல வெடிச்சுரும்) Relaxplzz |
Posted: 13 Oct 2014 03:59 AM PDT தத்துவம்ஸ் – (பழங்கள்ளு புதிய மொந்தையில்) :P 1) எவ்வளவுதான் நீச்சல் தெரிஞ்சாலும் டம்ளர் தண்ணீலே நீஞ்சமுடியாது! 2) என்னதான் நாய்க்கு நாலு கால் இருந்தாலும் அதாலே கால் மேல கால் போட்டு உக்கார முடியாது! 3) மண்டைல போட்டா "DYE", மண்டைய போட்டா "DIE"! 4) கொசு கடிச்சா யானைக்கால் வரும், ஆனா யானை கடிச்சா கொசுக்கால் வருமா? 5) வாழ்க்கைக்கும், வழுக்கைக்கும் ஒரே வித்யாசம்: ஒண்ணுமே இல்லாத வாழ்க்கை போர் அடிக்கும். ஒண்ணுமே இல்லாத வழுக்கை க்ளேர் அடிக்கும்! 6) நீ என்னதான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுலே எவ்வளவுதான் ரீ-சார்ஜ் பண்ணினாலும், உன்னாலே உனக்கு கால் பண்ண முடியாது! 7) போலீசுக்கும், பொறுக்கிக்கும் என்ன வித்யாசம்? அடி-தடி செஞ்சா பொருக்கி, தடி-அடி செஞ்சா போலீஸ்! 8) என்னதான் கராத்தேலே Black Belt வாங்கியிருந்தாலும், நாய் துரத்தினா ஓடித்தான் ஆகணும்! 9) பஸ்சுலே நீ ஏறினாலும், உன்மேல பஸ் ஏறினாலும், டிக்கெட் வாங்கப்போறது நீதான்! 10) டிக்கெட் வாங்கிட்டு உள்ள போனா, அது சினிமா தியேட்டர். உள்ளபோய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்! 11) சிற்பி கல்லை உளியாலே அடிச்சா அது "கலை"! அதுவே, நாம சிற்பியை உளியாலே அடிச்சா அது "கொலை"! 12) ஷாம்புவுக்கும், பாம்புக்கும் என்ன வித்யாசம்: ஷாம்பூ போட்டால் தலைலே நுரை வரும்! பாம்பு போட்டால் வாயிலே நுரை வரும்! 13) உள்ள போரவரைக்கும்தான் அது "பிராண்டி". வெளிய வந்துட்டா அதுக்குப்பேரு வாந்தி! 14) குவாட்டர் அடிச்சுட்டு குப்புற படுத்துக்கலாம், ஆனா குப்புற படுத்துட்டு குவாட்டர் அடிக்கமுடியாது! 15) தன்னம்பிக்கைக்கும், தலைக்கனத்துக்கும் ஒரு நூல் அளவுதான் வித்தியாசம்: "என்னால FULL அடிச்சுட்டு ஸ்டெடியா நிக்க முடியும்"னு சொல்றது தன்னம்பிக்கை. அதுவே, "என்னாலேமட்டும்தான் FULL அடிச்சுட்டு ஸ்டெடியா நிக்க முடியும்"னு சொல்றது தலைக்கனம்! 16) காக்கா என்னதான் கருப்ப இருந்தாலும், அது போடற முட்டை வெள்ளை. முட்டை என்னதான் வெள்ளைய இருந்தாலும், அதுக்குள்ளேர்ந்து வர குஞ்சு கருப்புதான்! 17) காருக்குள்ள டயர் இருந்தா அது ஸ்டெப்னி. அதே டயர் நம்ம மேலே இருந்தா, நாம சட்னி! 18) நாய் வாலை ஆட்டலாம், ஆனா வால் நாயை ஆட்ட முடியுமா?! 19) வாயால நாய்னு சொல்ல முடியும், ஆனா நாயால வாய்னு சொல்ல முடியுமா?! 20) ரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கும், ஆனா போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்குமா? - T.S.SANKARANARAYANAN Relaxplzz ![]() # படித்ததில் பிடித்தது # - 3 |
Posted: 13 Oct 2014 03:45 AM PDT |
Posted: 13 Oct 2014 03:40 AM PDT |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment