Tuesday, 21 October 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


இந்த EnglishMedium அம்மாக்கள் இம்சை தாங்கமுடியலடா சாமி #stand properly and fire...

Posted: 21 Oct 2014 08:34 PM PDT

இந்த EnglishMedium
அம்மாக்கள்
இம்சை தாங்கமுடியலடா சாமி

#stand
properly and fire it carefully...

@பிரபு

தமிழர்கள் பயன்படுத்திய அதிபயங்கர தாக்குதல் கருவி !! திருச்சி அருகே கி.பி. 12-ம்...

Posted: 21 Oct 2014 06:05 AM PDT

தமிழர்கள் பயன்படுத்திய அதிபயங்கர தாக்குதல் கருவி !!

திருச்சி அருகே கி.பி. 12-ம் நூற்றாண்டை சேர்ந்த சக்கர வடிவ ஆயுதத்தின் புடைப்பு சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி தொன்மை குறியீட்டாய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

கல்தூண்:

திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகே உள்ள மேலரசூரில் உள்ள தியாகராசர் கோவிலின் முன்புறத்தில் 110 செ.மீ. உயரம், 51 செ.மீ. அகலம் கொண்ட கி.பி. 12-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்தூண் ஒன்றில் சிற்ப கலைநயத்துடன் கூடிய திருத்தலத்தை குறிக்கும் வடிவம், சித்திரமேழி பெரிய நாட்டாரின் சின்னங்களான உடுக்கை, ஏர் கலப்பை, 2 போர் வாள்கள், சக்கர வடிவ ஆயுதம், 2 குத்துவிளக்குகள், ஒரு முக்காலியின் மேலே பூர்ணகும்பம் ஆகிய புடைப்பு சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அச்சிற்பங்களில் 19.5 செ.மீ, வெளிவிட்டம் அளவுடைய சக்கர வடிவ ஆயுதம் குறிப்பிடத்தக்கது ஆகும். தட்டையாக இல்லாமல் குவிந்த அமைப்புடையதும், மெல்லியதும், வெளிவட்டம் மட்டும் கூர்மையான நுனி உடையதுமான இதற்கு சக்குரும், சக்கர், சக்ரே, சலிக்கர் போன்ற பெயர்கள் உண்டு. இது பழங்கால போர் படை கருவிகளில் பாணிமுக்தா எனும் எறிந்து தாக்கும் வகையை சார்ந்தது.

அதிபயங்கர ஆயுதம்:

ஆள்காட்டி விரலின் சுழற்சியாலோ அல்லது ஆள்காட்டி விரல், கட்டை விரல் ஆகிய இருவிரல்களால் பிடிக்கப்பட்டு முன் கையின் அதிவிரைவு அசைவாலோ எறிந்து தாக்கப்படும் இது எதிரிகளின் தலை, கை, கால்களை துண்டிக்கக்கூடிய அதிபயங்கர ஆயுதமாகும். 12 செ.மீ. முதல் 30 செ.மீ. வரையிலான விட்டம் அளவுகளுடன் அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் இரும்பு அல்லது பித்தளை ஆகிய உலோகங்களால் தயாரிக்கப்பட்ட இந்த ஆயுதம் முறையே 40 முதல் 60 மீட்டர் அல்லது 80 முதல் 100 மீட்டர் வரை பறந்து சென்று எதிராளியை தாக்கக்கூடியது.

இந்த ஆயுதம் தமிழகம், பஞ்சாப் போன்ற இந்திய மாநிலங்களில் மட்டுமின்றி திபெத், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. 800 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆயுதத்தை கையாளும் வல்லவர்கள் தமிழகத்தில் இருந்துள்ளனர் என்பது இக்கண்டுபிடிப்பின் சிறப்பம்சமாகும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


இவர்கள் அமேசான் காடுகளில் வாழும் பழங்குடியினர்... அவிங்களே சொட்டையா தான் திரியி...

Posted: 21 Oct 2014 03:53 AM PDT

இவர்கள் அமேசான் காடுகளில் வாழும் பழங்குடியினர்...

அவிங்களே சொட்டையா தான் திரியிறாய்ங்க...நாம தான் எர்வா மார்டினை நம்பிட்டு இருக்கோம்...

- பூபதி முருகேஷ்


ஆறு முதல் பதினாறு வரை 1.டிக் டிக் யாரது பேயது. என்னா வேண்டும் நகை வேண்டும், நகை...

Posted: 21 Oct 2014 03:45 AM PDT

ஆறு முதல் பதினாறு வரை

1.டிக் டிக் யாரது பேயது. என்னா வேண்டும் நகை வேண்டும், நகை வேண்டும், என்ன நகை, கலர் நகை, என்ன கலர்

2.ஊரெல்லாம் சுத்தி wills ,gold flake சிகரெட் அட்ட பொட்டிய பொறுக்கி ,நாழா மடிச்சு சப்பாக்கல் ஆடுவோம்

3.ட்ரம்ப் கார்ட்டில் பிக் ஷோ(weight), மைக்கேல் பெவன் (avg) வந்தா, எதிரி கிட்ட கார்டை காமிச்சே வாங்கிருவோம்

4.பிக்பன் சுயிங்கத்துக்குள்ள வர்ற சித்து 4 ரன் சீட்டுக்கு 5 விக்கெட் கொடுத்து வாங்கியிருக்கேன்

5.கிரிக்கெட்ல அவுட்டானா அந்த பால ட்ரெயல் பால்னு ஏமாத்துறது

6.சோடா மூடிய தட்டி, நடுவுல ரெண்டு ஓட்டை போட்டு, அதுல கயிற விட்டு விர்ர்ர்னு சுத்தி இருக்கேன்

7.தொட்டங்குச்சி ஓட்டையில குருவி வெடிய சொருகிவெடிச்சு இருக்கேன்

8.நமக்கு பிடிக்காதவனை டீச்சர் அடிப்பதற்கு எதையாவது தேடும்போது வேகமா ஓடீப்போய் நல்ல குச்சியா எடுத்தாந்து கொடுப்பேன்

9.கட்டுமரம் அடிக்கடி கவுந்துருச்சுன்னு வதந்தி வரும் ஸ்கூல் லீவ் விடுவாங்கன்னு நம்பி ஏமாந்திருக்கேன் .

10.லன்ச் பாக்ஸ மறந்தியா.. அதெப்டி ஹோம்வர்க் நோட் மட்டும் மறக்கும்

11. எல்லாரு வீட்டு பீரோலயும் அல்லைக்கு கைய குடுத்தா மேனிக்கு சக்திமான் போஸ் குடுப்பாரு

12. பலமுகமன்னன் ஜோ , ஜாக்பாட் ஜாக்கி ,ராமு சோமு ,ஜோஸபின் ,எக்ஸ்ரே கண், உயிரை தேடி,பேய் பள்ளி சோனிப்பய்யன் @ சிறுவர்மலர்

13.கர்ச்சீப்ப பந்து மாதிரி செஞ்சு கிரிக்கெட் விளையான்டது

14.பபுள்கம் காலைல போட்டா சாயந்திரம்தான் துப்புறது,லஞ்ச் சாப்டரப்போ எடுத்து வச்சுட்டு மறுபடியும் போட்டுக்கறது

15.சாக்கடைல பந்து விழுந்துட்டா அத லாவகமா எடுத்து, மண்ணுல புரட்டி, ஓங்கி ரெண்டு அடி அடிச்சு பின்ன விளையாடுவோம்

16.சூப்பர் பிகர்னா நல்லா படிப்பாளுகனு நினச்சேன்

17.ரஜினி படம் போட்ட சுரண்டல் லக்கி ப்ரைஸ் கடைசிவரை ஒரு ரூபாய்க்கு மேல் விழாதது

18.ஜீ பூம்பா பென்சில் நமக்குக் கெடைச்சா எப்படி வரையறது?? நமக்கு வரையத் தெரியாதேன்னு கஷ்டப்பட்டேன். ஒவ்வொரு புதன்கிழமை மாலை 5:30 மணிக்கு 'வொன்டர் பலூன்' பார்த்தது,சக்திமான் , ஜங்கிள் புக் ...

19.பிஸ்கட் பிஸ்கட் ஜாம் பிஸ்கட் என்னா ஜாம் , கோ ஜாம் என்னா கோ , டீ கோ

20.சேமியா ஜவ்வரிசி ஐஸ அக்கவுண்ட் வச்சு வாங்கி சூப்பு சூப்புனு சூப்புவேன்

21.டென்னிஸ் பாலை BOOST BALLனும், அஞ்சுரூவா பந்தை PEPSI BALLனும் பேர் வச்சு கூப்புட்றது

22.கையில் பந்தே இல்லாமல்,நான் பவுலிங் செய்வது போன்ற செய்கையை அப்பா அடிக்கடி ஒருவித பயத்துடன் கண்டு மிரட்சியடைவார்

23.ஒரு பொண்ணையும் பையனையும் சேர்த்து பாத்துட்டால் அடுத்த நாள் அவங்க பேரை ஊர் சுவரில் எழுதி அவங்க மானத்தை வாங்குறது

24.பஜாஜ் ஸ்கூட்டர்ல B சிம்பல் பேட்ஜ் 1000 சேத்தா ஸ்கோட்டர் ஃப்ரீங்றத நம்பி, ஆங்காங்க் நின்ற ஸ்கூட்டர்ல 37 பேட்ஜ் களவாடி சேத்தது

25.அப்போ பஞ்சாயத்து டிவினு ஒண்ணுதான் இருந்தது. இப்போ எல்லா டிவியிலும் பஞ்சாயத்து...

@களவாணி பய


கி.பி 90 - 168 வாழ்ந்த தொலமியின் நூட்களை பற்றிய . தொலெமியின் குறிப்புகளை வி. கனக...

Posted: 21 Oct 2014 03:45 AM PDT

கி.பி 90 - 168 வாழ்ந்த தொலமியின் நூட்களை பற்றிய . தொலெமியின் குறிப்புகளை வி. கனகசபை என்பவர்ஆராய்ச்சி செய்து The Tamils 1800 Years Ago என்னும் ஆங்கில நூலை எழுதியுள்ளார் .

மேலும் இதில் தொலெமி குறித்து வைத்த தமிழகத்தின் ஊர்கள் எங்கு இருக்கலாம் என்ற அனுமானங்களையும் முடிவுகளையும் தந்திருப்பார்.

இதில் முக்கிய தலைநகரங்கள் மற்றும் துறைமுகங்கள் பற்றிய கனகசபையின் கூற்றை மற்ற ஆய்வாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அதில் சில ஊர்களை தொலமி குறிபிடுகின்ற்றர்
அதை கனகசபை தன் நூலில் விளக்கி கூறியுள்ளார்

உங்களுக்கு புரியும்படி மேலே உள்ள வரிகள் தொலமியின் குறித்து வைத்த பெயரும்
கீழே உள்ள வரிகள்

அது எந்த ஊரு என்பதையும்
குறிபிடுகின்றேன் பாருங்கள்..

தொலமியின் குறிப்பில் .துண்டிஸ் நகரம்

அதாவது தொண்டி

பிரமகரா
பிரம்மக்குளம்

கலைக்கரியாசு
சாலக்கூரி

பாலூரா
பாளையூர்

முசிறிசு வாணிகக்கள துறைமுகம்
முசிறித் துறைமுகம்

சுயுடோசுடமாசு ஆற்றுமுகம்
பெரியாற்றுக் கழிமுகம்

பொடொபெரூரா
உதியம்பேரூர்

செம்னே
செம்பை

கொரியூரா
கொத்தோரா

பக்கரை
வைக்கரை

பரிசு ஆற்றுமுகம்
பாலிக் கழிமுகம்

கோமேதகம் நிறைந்த புன்னாடா
பூஞ்சற்று

கேரொபொத்ராசின் தலைநகரான கரூரா
சேரர் தலைநகரான கரூர்

அடரிமா கொரியூர்
அதரி மலை

கொட்டனாரா
குட்டநாடு

மெல்குண்டா
நிற்குன்றம்

எலங்கோன் வாணிகக்களம்
விளவங்கோடு

தலைநகர் கொட்டியாரா
கோட்டாறு

பம்மலா
பொன்னணை

மொமாரியா முனை
கன்னியாகுமரி

அட இத்துணை ஊர்களும் கிட்டத்தட்ட ஆயிரத்து எட்நூறு வருடங்களாகவே இருகின்றது

என்பதை நினைக்கும்போது தமிழனுக்கு ஏது தலைக்குனிவு ...

நெஞ்சை நிமிர்த்தி சொல்வோம்

#நாங்கள்_தமிழர்கள்


கடைசி தலைமுறை 1. அப்பன், பாட்டன், முப்பாட்டன் போட்டோவெல்லாம்..ஃப்ரெம் பண்ணி, சு...

Posted: 21 Oct 2014 01:40 AM PDT

கடைசி தலைமுறை

1. அப்பன், பாட்டன், முப்பாட்டன் போட்டோவெல்லாம்..ஃப்ரெம் பண்ணி, சுவத்துல மாட்டி வச்ச கடைசி தலைமுறை நாமதான்..

2.சுத்திப் போடும்" அம்மாக்கள் வாய்த்த கடைசி தலைமுறை நாம்..

3.ஒரே காதலுடன் வாழ்ந்து முடித்துவிட்டவர்களை 'பார்த்த' கடைசி தலைமுறை நாம்

4.ஸ்கூல்ல போர்ட் அழிக்க வீட்ல டஸ்டர் தச்சு கொண்டு வந்த கடைசி தலைமுறையும் நாம தான்.

5.தோழிகளின் சடை நுனியிலிருக்கும் ரிப்பனை பிடித்திழுத்து திட்டு வாங்கிய கடைசி தலைமுறையில் நானும் ஒருவன்

6.SMSக்கு பூஸ்டர் கார்டு போட்டு sms அனுப்பி லவ் பண்ண முதல் மற்றும் கடைசி தலைமுறையும் நாமதான்

7.பள்ளி விடுமுறையை ஸ்பெஷல் கிளாஸ் தொல்லைகளின்றி உறவினர் ஊர்களில் கழித்த கடைசி தலைமுறை நாம் தான்

8.ஒங்கப்பன் கோமணம் அவுத்த நேரம் சரியில்லனு திட்ட கொடுத்து வச்ச கடைசி தலைமுறையும் நம்மள்து தான்.

9.ஜாக்கெட்டுக்குள் பர்ஸை வைத்துக்கொள்ளும் பெண்களை பார்த்த கடைசி தலைமுறையும் நாம்தான்..

10.அடுத்த தலைமுறை எக்கேடு கெட்டா நமக்கென்னானு மரங்கள அழிக்கிற கடைசி தலைமுறை நாம் தான்.!

இந்த மாதிரி கடைசி தலைமுறை ஸ்டேடஸ் போட்டு அடுத்தவன சாவடிச்ச கடைசி தலைமுறையும் நாம தான்..

கத்தி படத்தை பார்க்க வேண்டும் என்று கோபப்பட்டு கொந்தளிக்கும் தமிழ்நாட்டு இளைஞர்க...

Posted: 20 Oct 2014 11:10 PM PDT

கத்தி படத்தை பார்க்க
வேண்டும்
என்று கோபப்பட்டு கொந்தளிக்கும்
தமிழ்நாட்டு இளைஞர்களே!
லட்சக்கனக்கான
அப்பாவி தமிழ்
மக்களை இனபடுகொலை செய்த
காணொலியை பார்த்த
பொழுது எங்கடா போனது இந்த
கோவமும்
கொந்தளிப்பும்?

இந்த போட்டி நிறைந்த உலகத்தில் வாய்ப்பு கிடைப்பதுதான் பெரிய சிரமம். ‘உங்களுக்கு அ...

Posted: 20 Oct 2014 11:10 PM PDT

இந்த போட்டி நிறைந்த உலகத்தில் வாய்ப்பு கிடைப்பதுதான் பெரிய சிரமம். 'உங்களுக்கு அது தெரியுமா?' என்று யாராவது கேட்டால் கொஞ்சம் கூட வெட்கப்படவேண்டியதில்லை. தெரியாது என்று மட்டும் சொல்லக் கூடாது....இங்கு யாருக்குமே எதுவுமே முழுமையாகத் தெரியாது....சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள்....அதனால் நாமும் 'முடிச்சுடுறேன்' என்றுதான் சொல்ல வேண்டும். எதையாவது சொல்லி வாய்ப்பை வாங்கி விட வேண்டும். பிறகு நாமும் சமாளித்துவிடலாம் :)

@வா. மணிகண்டன்

0 comments:

Post a Comment