Saturday, 11 October 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


துப்பாக்கியை கீழே வைத்து விட்டு கலப்பையை எடுங்கள் - நக்சல்பாரிகளுக்கு மோடி அழைப்...

Posted: 11 Oct 2014 11:39 AM PDT

துப்பாக்கியை கீழே வைத்து விட்டு கலப்பையை எடுங்கள்
- நக்சல்பாரிகளுக்கு மோடி அழைப்பு

# இந்திய
ராணுவத்தை பழங்குடியினரின்
காடுகளில்
இருந்து வெளியேற்றுங்கள்,
பசுமை வேட்டையை கை விடுங்கள் ,
பழங்குடி மக்களின் நிலம்
அவர்களின் இயற்கை வளம்
அவர்களுக்கே என
உறுதி மொழி அளியுங்கள்
செயல்படுத்துங்கள்
அப்போதுதான்
மாவோ படையினர்
ஆயுதங்களை கைவிட
சொல்லும்
உரிமை உங்களுக்கே வரும்..

@பிரபு போசு

அழகு தமிழ்நாடு! குமரி மாவட்டம்.

Posted: 11 Oct 2014 11:01 AM PDT

அழகு தமிழ்நாடு!
குமரி மாவட்டம்.


பருவம்.. பாவாடை தாவணி.. மயிர்க்கற்றை... குறுகுறு விழிகள்.. மல்லிகை.. வளையல்கள்.....

Posted: 11 Oct 2014 10:53 AM PDT

பருவம்..
பாவாடை தாவணி..
மயிர்க்கற்றை...
குறுகுறு விழிகள்..
மல்லிகை.. வளையல்கள்..
எல்லாவற்றிலும்
கலந்திருக்கிறது
உயிரோவியம்...

@ஓவியர் மாருதி


மதுரையில் டீ குடிக்க வந்த இரண்டு கீழ் சாதி இளைஞர்கள் செருப்பு போட்டு வந்ததால் தா...

Posted: 11 Oct 2014 10:40 AM PDT

மதுரையில் டீ குடிக்க
வந்த இரண்டு கீழ்
சாதி இளைஞர்கள்
செருப்பு போட்டு வந்ததால்
தாக்கபட்டார்கள்
ன்னு ஒரு செய்தி பார்த்தேன்...

செருப்பு போட்டதுக்கு அவ்ளோ கோவம்
படுற சாதிக்காரங்க
அவுங்களுக்கு ஒரு ஷூ வாங்கி தந்து இருக்கலாமே...

விண்வெளிக்கு மங்கல்யானை விடுறதுக்கு பதிலா....

மனிதனை மனிதனாய்
மதிக்க தெரியாத இந்த
மாதிரி ஊர்காரனுங்களுக்கு ஏவுகணையை அனுப்பி சோலியை முடிச்சிடனும்..

@விக்ராந்த்

Posted: 11 Oct 2014 10:33 AM PDT


மாட்டுக்கறி திங்கேறுனு சொல்றீங்க , சிங்கம், புலி, கரடியெல்லாம் புடிச்சி திங்கலாம...

Posted: 11 Oct 2014 10:21 AM PDT

மாட்டுக்கறி திங்கேறுனு சொல்றீங்க ,
சிங்கம்,
புலி, கரடியெல்லாம்
புடிச்சி திங்கலாம்ல
பயமா?

//சைவ
சாப்பாடு சாப்பிடுறேன்னு சொல்ற
எவனும் ஏன்
அரளி விதையை அரைச்சு குடிக்கிறதில்லையாம்? அரளி விதை என்ன
அசைவமா?

@மகிழ்நன்

தசரா பண்டிகையின் போது வட இந்தியாவில் எரிக்கப்படும் இராவணன் சிலைகள்... நாம் எதை...

Posted: 11 Oct 2014 09:40 AM PDT

தசரா பண்டிகையின் போது வட இந்தியாவில் எரிக்கப்படும் இராவணன் சிலைகள்...

நாம் எதை எரிக்கலாம்??


உலகத்தில ஓரே மாதிரி இருக்கும் 7 பேரையும் கண்டு பிடிச்சுட்டேன்.. :P

Posted: 11 Oct 2014 09:15 AM PDT

உலகத்தில
ஓரே மாதிரி இருக்கும் 7
பேரையும்
கண்டு பிடிச்சுட்டேன்.. :P


பொய்க்கால் குதிரைகள் அழிந்து விடவில்லை!! . குச்சியை குதிகாலில் கட்டிக்கொண்டு ஹைஹ...

Posted: 11 Oct 2014 09:02 AM PDT

பொய்க்கால் குதிரைகள்
அழிந்து விடவில்லை!!
.
குச்சியை குதிகாலில்
கட்டிக்கொண்டு ஹைஹீல்ஸ்
வடிவில் சுற்றி கொண்டுள்ளனர் பலர்.

@சித்தன் கோவை

வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்த நண்பன்...! முதல் வாரத்தில்- ஒன் அன்ட் ஆப்...

Posted: 11 Oct 2014 08:30 AM PDT

வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்த நண்பன்...!

முதல் வாரத்தில்- ஒன் அன்ட் ஆப் லாக்ஸ் சம்பளம் மச்சி, ஆபிஸ் கார், ப்ளாட் தர்றாங்க. பப், பார்ட்டினு வாரத்துக்கு ரெண்டு நாள் ஜாலிதான் போ..

ரெண்டாவது வாரம்- ஒரு லட்சம் வாங்கினாலும் அதுக்கேத்த செலவாயிடும். ஒரு பிலிப்பினிய கரெக்ட் பண்ணி வச்சிருக்கேன். அவளோட ஷாப்பிங். சாப்பிட போனாலே கிரெடிட் கார்டுல 10 ஆயிரம் காலி. அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல.

மூணாவது வாரம்- அங்க எல்லாத்துக்கும் பணத்தை புடிங்கிருவான். குடிக்கற தண்ணிக்கும் காசு தான். கார் பார்க்கிங்குக்கும் பணம்.. இதுக்கே மாசம் 20 ஆயிரம் அழணும்.

நாலாவது வாரம்- மூணு மாசத்துக்கு ஒருக்கா தான் அப்பாவுக்கு ஒரு 20, 30 ஆயிரம் தேத்தி அனுப்புவேன். அதுவே சமயத்துல கஷ்டம்தான்.

ஐந்தாவது வாரம்- நாய்ப் பொழப்புடா அது. லெபனான்காரன் மேனேஜர் பருப்பு மாதிரி பேசுவான். எதிர்த்துப் பேசினா மொதலாளிகிட்ட போட்டுக் குடுத்துருவான். அந்த சீனாக்காரன் என் முட்டி உயரம்தான் இருப்பான். ஆனா, எப்டி திட்டுவான் தெரியுமா..

ஆறாவது வாரம்- போதும்டா அந்த கேவலம்லாம். மாசக்கடைசில எத்தனையோ நாள் சாப்பிட காசு இல்லாம ரூம்மேட் வாங்கிட்டு வர்ற பிரட்டுக்காக காத்திருப்பேன்.

ஏழாவது வாரம்- திரும்பிப் போகலடா மச்சான் நான். அத்தான் கிட்ட ஒரு லட்சம் கேட்ருக்கேன். செகன்ட் ஹேன்ட் கார் ஒண்ணு வாங்கி ஓட்டப்போறேன். அப்பாவுக்கு விவசாயித்துல கூடமாட இருந்து உதவியும் செய்யலாம்னு யோசனை.

எட்டாவது வாரம்- ....தா.. ஊராடா இது. பிடிக்கலடா. எப்டித்தான்டா இங்க வாழ்றது. கசாப்க்கடை காதர் பாய் கிட்ட அம்பதாயிரம் கேட்ருக்கேன். இன்னும் ரெண்டு நாளில் டிக்கெட் போட்டு ஓடிருவேன்டா.. வரும்போது உனக்கெதும் வாங்கிட்டு வரணுமாடா மச்சான்.

நான்.. போடாங்ங்ங்ங்...... :P

பாஜக மதவாதக் கட்சி என்று சொன்னால் மக்கள் நம்பமாட்டார்கள் - தமிழிசை சௌந்தரராஜன்....

Posted: 11 Oct 2014 08:18 AM PDT

பாஜக மதவாதக்
கட்சி என்று சொன்னால்
மக்கள் நம்பமாட்டார்கள் -
தமிழிசை சௌந்தரராஜன்.

#இதை_இட்லின்னு_சொன்னா_சட்ணி_கூட_நம்பாது_மொமெண்ட்

@இளையராஜா
.

:P

Posted: 11 Oct 2014 08:06 AM PDT

:P


:O

Posted: 11 Oct 2014 07:50 AM PDT

:O


Posted: 11 Oct 2014 07:00 AM PDT


மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் ... தன் மரண காலத்தில் அவள் தன் தாய...

Posted: 11 Oct 2014 06:29 AM PDT

மகள்களை பெற்ற
அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் ...
தன் மரண காலத்தில் அவள்
தன் தாயாக இருப்பாள்
என்று...

@செல் முருகன்

எங்களை கடவுளாக வணங்கவேண்டாம் மனிதர்களாக மதியுங்கள் கலாச்சார காவலர்களே...... -...

Posted: 11 Oct 2014 05:44 AM PDT

எங்களை
கடவுளாக
வணங்கவேண்டாம்
மனிதர்களாக
மதியுங்கள்
கலாச்சார காவலர்களே......


-இப்படிக்கு பெண்கள்.

Porunthal Two seasons of excavation, undertaken during May and June, in 2009 an...

Posted: 11 Oct 2014 05:30 AM PDT

Porunthal

Two seasons of excavation, undertaken during May and June, in 2009 and 2010, have put Porunthal firmly on India's archaeological map. The village is a habitational-cum-burial site, datable from the second century Before Common Era (BCE) to the second century Common Era (CE). Excavation at its habitational mound called Pasi Medu and the opening of four graves about a kilometre away have yielded a wealth of artefacts. Among them are 2,000 superbly crafted glass beads in red, white, yellow, blue and green; 12,000 beads made of semi-precious material such as agate, quartz, carnelian and steatite; quartz micro-beads with a diameter of less than 1.4 mm and a hole punched through them; bangles made of glass and shell; exquisite four-legged jars that vary in height from 12 centimetres to one metre; two ring stands with similar Tamil-Brahmi inscriptions datable between the first century BCE and the first century CE; two iron swords; a big iron arrowhead; and a number of knives. A square copper coin belonging to the Tamil Sangam age; dice made of ivory; terracotta objects such as a humped bull, a woman's head with curly hair, a human figurine, gamesmen, spindle whorls and hopscotch; and weights made of quartz and ivory were among the other unearthed artefacts. An important find was two kilograms of paddy in a four-legged jar in a grave that had the remains of a skeleton. The paddy looked as fresh as if it had just been harvested.

Prof. Rajan, director of the excavation project, said: "Our excavation has established that Porunthal was the largest glass bead-manufacturing site in southern India. If an earlier excavation at Kodumanal near Erode had exposed the existence of industries for making beads of semi-precious material, iron and steel in Tamil Nadu, a glass-bead industrial site was eluding archaeologists. The Porunthal excavation has brought to light that also."

Source:

A great past in bright colours

http://www.frontline.in/static/html/fl2720/stories/20101008272006400.htm

Porunthal excavations prove existence of Indian scripts in 5th century BC

http://www.thehindu.com/news/national/tamil-nadu/porunthal-excavations-prove-existence-of-indian-scripts-in-5th-century-bc-expert/article2538550.ece

Palani Excavation triggers fresh debate

http://www.thehindu.com/news/national/tamil-nadu/palani-excavation-triggers-fresh-debate/article2408091.ece

Written for Posterity

http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/written-for-posterity/article4846596.ece

In Tamil

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=90553

http://porunthal.blogspot.in/2011_10_14_archive.html

http://www.vallinam.com.my/issue34/ravikumar.html

http://tamilnation.co/heritage/index.htm


தமிழ்நாட்டின் நீலகிரி மலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த குறியீடு உலகம் முழுக்கவு...

Posted: 11 Oct 2014 05:10 AM PDT

தமிழ்நாட்டின் நீலகிரி மலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த குறியீடு உலகம் முழுக்கவும் இருக்கின்ற பல தொன்மையான வரலாற்றுக்கு முந்தைய நாகரீகங்களிலும் இருந்துள்ளது குறிப்பிடத்தகுந்தது. இது எத்தியோபியாவில் ஆட்சி செய்த பேரரசி ஷேபாவைப் பற்றிய குறிப்புகளிலும் இருக்கிறது என்பது மிகவும் குறிப்பிடத்தகுந்தது.

Labyrinth in the Nilgiri Hills of southwest India. This shape has extremely wide expanse. A lot of the surviving South Asian forms are bound up with art illustrating Buddhist jatakas, as those in Europe are with the churches. It also appears in Ethopian manuscripts about the Queen of Sheba, Scandinavian geoglyphs. In Hopi a squared-off form is called Tapu'at: "Mother-Child," clarifying the meaning of cosmic womb, gestation, and portal into the spirit realm.

Courtesy & News Source:
Suppressed Histories Archives:
https://www.facebook.com/photo.php?fbid=10150692076193321&set=a.423118913320.184632.333661528320&type=1&theater


வீட்டுக்கு ஒருவர் கண் தானம் 'விழி' உயர்த்தும் விழிப்புணர்வு கிராமம்: 137 பேர்...

Posted: 11 Oct 2014 04:19 AM PDT

வீட்டுக்கு ஒருவர் கண் தானம் 'விழி' உயர்த்தும் விழிப்புணர்வு கிராமம்:

137 பேர் கண் தானம் செய்து சாதனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டுக்கு ஒருவர் கண் தானம் செய்ய முன்வந்து பதிவு செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறி அடுத்த மாடத்தட்டுவிளை கிராமம் நேற்று களைகட்டி இருந்தது. காரணம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாவது வியாழக்கிழமை உலக கண்ணொளி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பிரதான பண்டிகை கொண்டாட்டங்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு மாடத்தட்டுவிளை கிராமத்தில் உலக கண்ணொளி தினம் வெகு விமர்சையாக கடைபிடித்து வருவது காண்போரின் பார்வையைக் கவர்ந்தது. சின்னஞ் சிறிய இக்கிராமத்தில் இதுவரை 137 பேர் கண் தானம் செய்திருப்பது விழி உயர்த்துகிறது. இங்குள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் இயங்கிவரும் திருக்குடும்ப திரு இயக்க அங்கத்தினர்கள்தான் இந்த மிகப்பெரிய சேவையை செய்து வருகின்றனர்.

பயிற்சியால் மாற்றம்

இயக்க செயலாளர் ரெக்ஸின் ராஜகுமார் (40) கூறியதாவது:

மறைமாவட்டம் சார்பில் எங்களுக்கு கடந்த 2003-ம் ஆண்டு கண் தானம், ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி கொடுத்தனர். அப்போது ஏதோ ஒரு ஆர்வத்தில் 80 பேர் கண்தானம் செய்ய பெயர் கொடுத்தோம்.

கடந்த 2007-ம் ஆண்டு எங்கள் சங்க உறுப்பினரின் பெரியப்பா மரிய செபஸ்தியான் என்பவர் இறந்தார். சங்கத்தில் பேசி அவரது கண்களை தானம் செய்ய முடிவு செய்தோம். அவர்கள் வீட்டிலும் சம்மதித்தனர். அதில் இருந்து படிப்படியாக கண் தானம் செய்வோர் எண்ணிக்கை பெருகிவிட்டது. இதுவரை எங்க ஊருல 137 பேர் கண் தானம் செய்துள்ளனர்.

ஆசாரிபள்ளத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வந்ததும், முதன் முதலில் உடல் தானம் பெறப்பட்டது, எங்க ஊரைச் சேர்ந்த சுசீலா என்ற பெண்ணின் உடல்தான். இதுவரை 15 பேர் உடல் தானம் செய்ய பதிவு செய்துள்ளனர். வீட்டுக்கு ஒருவர் கண் தானம் செய்ய எழுதிக் கொடுத்துள்ளனர்.

முயற்சிக்கு வெற்றி

முளமுமூடு வட்டார இளைஞர் பணிக்குழு இயக்குநராக உள்ள டைட்டஸ் மோகன் என்பவரின் பெரு முயற்சிக்கு கிடைத்த வெற்றிதான் இது. அவரது முயற்சியால் இப்போது எங்கள் சுற்றுவட்டாரக் கிராமங்களில் 57 பேரிடம் கண் தானம் பெறப்பட்டுள்ளது என்றார்.

கண் தான கிராமம்

மாடத்தட்டுவிளை அருட்தந்தை இயேசு ரத்தினம் கூறியதாவது:

இந்த கிராமத்தையே கண் தான கிராமம் என்றுதான் சொல்கின்றார்கள். இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கண் தானம் செய்ய பதிவு செய்துள்ளனர். இளையர் அமைப்பு, திருக்குடும்ப

திரு இயக்கத்தை சேர்ந்தவர்கள் இதுகுறித்து விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது மாடத்தட்டுவிளையை சுற்றியுள்ள கிராமங்களிலும் இதுபோல் முயற்சி நடப்பது இந்த சேவைக்கு கிடைத்த வெற்றி என்றார் அவர்.

- தி இந்து


காற்றில் உள்ள ஈரப்பதத்தைக்கூட உறிஞ்சும் சீமை கருவேல மரங்களை அழிப்போம்... மழையை...

Posted: 11 Oct 2014 04:01 AM PDT

காற்றில் உள்ள ஈரப்பதத்தைக்கூட உறிஞ்சும் சீமை கருவேல மரங்களை அழிப்போம்...

மழையை ஈர்க்கும் தன்மை கொண்ட ஆல,அரச,வேப்ப,அத்தி,பேயத்தி போன்ற மரங்களை வளர்ப்போம்...

#மரங்களை வளர்ப்போம்,மண்வளம் காப்போம்...


நாம் வசதி வாய்ப்புகளுடன் செழிப்பாக வாழும் போது நமக்கு ஏராளமான நண்பர்கள் கிடைப்பா...

Posted: 11 Oct 2014 03:50 AM PDT

நாம் வசதி வாய்ப்புகளுடன் செழிப்பாக வாழும் போது நமக்கு ஏராளமான நண்பர்கள் கிடைப்பார்கள் ஆனால் கஷ்டங்கள் வரும் போது அனைவரும் ஓடிவிடுவார்கள்..

புயல்காற்று வரும் போது தான் உறுதியான கட்டடம் எது? உறுதியற்ற கட்டடம் எது? என்று நமக்கு தெரிகிறது அதேபோல் நல்ல நண்பனை அறிய நமக்கு வரும் சோதனைகள் சிறந்த அளவுகோலாக பயன்படுகிறது..

#வாழ்வின்_மொழி...

ரசித்தது! 24 மணி நேரமும் நல்ல நேரமே. சோம்பிக்கிடக்கும் நேரமே இராகுகாலம். பிறரை...

Posted: 11 Oct 2014 02:55 AM PDT

ரசித்தது!

24 மணி நேரமும் நல்ல நேரமே. சோம்பிக்கிடக்கும் நேரமே இராகுகாலம். பிறரை அழிக்கநினைக்கும் நேரமே எமகண்டம்.

"Kodumanal" A 2,500-year-old Industrial Estate! Kodumanal, a tiny village in we...

Posted: 11 Oct 2014 02:30 AM PDT

"Kodumanal" A 2,500-year-old Industrial Estate!

Kodumanal, a tiny village in western Tamil Nadu — a place virtually unheard of until archaeologists recently unearthed a 2,500-year-old industrial estate there.

The place is a important Archaeological Site, under the control of State Archaeological Department of Tamil Nadu. Excavations have been carried out and it came out with the layers of a megalithic-cum-early tombs of historic period. Excavations also came out with ancient iron objects such as Arrow heads and Swords. Also they have collected Roman artefacts, iron melting furnaces, beads, shell bangles and pottery with the Tamil Brahmi scripts from the habitation deposits and burials. The ancient the other collections from the excavation of this site includes Roulette Pottery, Roman Silver Coins, and Gold and Silver Spirals. And a Bronze Statue of a Lion and an Iron melting furnace were the important one's helpful in deciding the past history.

Kodumanal, celebrated in Tamil Sangam literature (datable from the second century BCE to the second century C.E.), is now one of the most explored sites in India. The Sangam work Pathitruppatthu refers to Kodumanal as Kodumanam in two places. While the poet Kabilar refers to it as "Kodumanam patta… nankalam", another poet, Arisil Kizhar, celebrates it as "Kodumanam patta vinaimaan arunkalam", that is, Kodumanam, the place where rare jewels are made. A horizontally excavated site, Kodumanal has yielded the highest number of inscribed potsherds (about 315 potsherds with Tamil-Brahmi inscriptions) and also the largest number of exposed graves for any single archaeological site in India.

http://www.frontline.in/static/html/fl2915/stories/20120810291506200.htm

http://www.frontline.in/static/html/fl2915/stories/20120810291507000.htm

http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/kodumanal-excavation-yields-a-bonanza-again/article3463120.ece

http://www.tnarch.gov.in/excavation/kod.htm

In Tamil

http://tnarchsites.blogspot.in/2014/01/kodumanal.html


தங்கள் திருமணம் நடந்த அன்று மாலை அந்த தம்பதியினர், "இன்றிரவு முழுவதும் யார் வந்த...

Posted: 11 Oct 2014 12:45 AM PDT

தங்கள் திருமணம் நடந்த அன்று மாலை அந்த தம்பதியினர், "இன்றிரவு முழுவதும் யார் வந்தாலும் வீட்டின் கதவை திறப்பதில்லை" என்று ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார்கள்..

அன்றிரவே அந்த பையனின் பெற்றோர்கள் வீட்டின் முன் வந்து கதவை தட்டினார்கள்.. அந்த பையனுக்கு கதவை திறந்து தன பெற்றோர்களை உள்ளே அழைக்க வேண்டும் என்று தோன்றியது..ஆனாலும் ஒப்பந்தத்தை மீற மனமில்லாமல் திறக்கவில்லை..ஆகையால் அவனது பெற்றோர்கள் திரும்பி சென்றுவிட்டார்கள்..

சிறிது நேரத்தில் அந்த பெண்ணின் பெற்றோர்கள்.. கதவை தட்டினார்கள்..ஒப்பந்தம் இருந்தபோதும் அந்த பெண்ணில் கண்களிலிருந்து நீர்..அழுதுகொண்டே, " என்னால் முடியாது..எங்க அப்பா அம்மாவை உள்ளே அழைப்பேன்" என்று சொல்லிகொண்டே கதவை திறந்துவிட்டார்...அந்த பையன் எதுவும் சொல்லவில்லை..

இரண்டுவருடங்கள் ஓடியது..அதில் இரு மகன்கள் அவர்களுக்கு..அதற்கு அடுத்த மூன்றாம் வருடம் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.. அதையொட்டி அந்த கணவனுக்கு மிகப்பெரிய அளவில் அனைவருக்கும் ஒரு விருந்து வைக்க வேண்டும் என்று தோன்றியது..உடனே அவரது சுற்றம் மற்றும் நன்பர்கள் அனைவரையும் அழைத்தார்.. சிறப்பாக நடந்து முடிந்தது..

விருந்து முடிந்து அனைவரும் சென்ற பின் அந்த மனைவி தன் கணவரை பார்த்து, " எதற்காக இவ்வளவு பெரிய விழா மற்றும் விருந்து வைத்தீர்கள்..நம் இரு மகன்கள் பிறக்கும் போது அப்படி எல்லாம் செய்யவில்லையே" என்று கேட்டார்

அதற்கு அந்த கணவன், " ஏனென்றால் அவள்தான் எனக்காக கதவை திறந்துவிடுவாள்"

மகள்கள் எப்போதும் ஆகச்சிறந்தவர்கள்..அவர்கள் உங்கள் கையை சில காலம்தான் பிடித்திருப்பார்கள்..ஆனால் அவர்கள் எப்போதும் உங்களை தங்கள் இதயத்தில் வைத்திருப்பார்கள்..மகள் என்பவள் தேவதை. :)


Posted: 10 Oct 2014 09:56 PM PDT


0 comments:

Post a Comment