Wednesday, 22 October 2014

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


1."கடன்காரன் " ஆவதை விட" பிழைக்கத் தெரியாதவன் "எவ்வளவோ மேல் . 2."டை" கட்டிய பணக்...

Posted: 22 Oct 2014 08:11 AM PDT

1."கடன்காரன் " ஆவதை விட"
பிழைக்கத் தெரியாதவன்
"எவ்வளவோ மேல் .
2."டை" கட்டிய
பணக்காரனை விட "கை" கட்டாத
ஏழை எவ்வளவோ மேல் .
3."கெட்டவன்" ஆவதைவிட
"கையாலாகாதவன்"
எவ்வளவோ மேல் .
4."வல்லவன்" ஆவதைவிட "
நல்லவன்" எவ்வளவோ மேல் .
5.குற்றம் புரியும்
"அதிபுத்திசாலி"யை விட
ஒன்றுமறியாத "முட்டாள்"
எவ்வளவோ மேல் .
6."காதலி" க்காக
உயிரை விடுபவனை விட
"கட்டியவளை " காதலிப்பவன்
எவ்வளவோ மேல் .
7.புறத்தில் அழகாய் அகத்தில்
அழுக்காய் இருக்கும்
"ஹீரோ"வை விட புறத்தில்
அழுக்கும் அகத்தில் அழகும்
நிறைந்த "காமெடியன்"
எவ்வளவோ மேல் .
8.மாதர்தம்மை இழிவு செய்யும்"
மதயானைகளை"விட
நெறி தவறாத "எறும்பு"
எவ்வளவோ மேல் .
9.வெற்றிகளி ன் "கர்வங்களை"
விட தோல்வியிலும் "நம்பிக்கை"
எவ்வளவோ மேல் .
10.பொய்யான "புரட்சி"
களைவிட அமைதியான "அன்பு"
எவ்வளவோ மேல்..

குளிர்பானம் வாங்குபவருக்குத்தான் பாட்டில் சொந்தம், சென்னையைச் சேர்ந்த ஒருவர், ப...

Posted: 22 Oct 2014 07:36 AM PDT

குளிர்பானம் வாங்குபவருக்குத்தான் பாட்டில் சொந்தம்,

சென்னையைச் சேர்ந்த ஒருவர், பாட்டிலில் விற்கப்படும் குளிர்பானத்தை வாங்கிக் குடித்துள்ளார்.அப்போது பாட்டில் தவறிக் கீழே விழுந்து உடைந்துவிட்டது.கடைக்காரர் பாட்டிலுக்குக் காசு கேட்க, குளிர்பானம் வாங்கியவர் கொடுக்கமறுக்க, இருவருக்கும் இடையில் கலாட்டாவாகி, போலீஸ் வரை போய், பிரச்னை கோர்ட்டுக்கும் வந்துவிட்டது.

கடைக்காரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், ''ஹோட்டலில் காசு கொடுத்துத்தான் சாப்பிடுகிறோம்.அதற்காக அங்கு உணவு பரிமாறும் தட்டு, கிண்ணம், தண்ணீர் டம்ளர் என எல்லாவற்றையும் நாம் கொண்டுவந்துவிட முடியுமா? அதுபோல்தான் குளிர்பானம் வாங்கினால், பாட்டிலைக் கொண்டுபோக முடியாது'' என்று வாதிட்டார்.

எதிர்த்தரப்பு வழக்கறிஞர் என்ன சாதாரண ஆளா? அவரும் அசராமல் திருப்பி அடித்தார். ''ஹோட்டல் சாப்பாடு என்பது பேக்டு அயிட்டம் (அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பொருள்) அல்ல. அதனால் தட்டு, டம்ளருக்கு நாம் உரிமை கொண்டாட முடியாது. ஆனால், குளிர்பானம் என்பது பேக்டு அயிட்டம். இதுபோன்ற பேக்டு அயிட்டங்கள் விற்பனைக்குவரும்போது பேக்கிங்கிற்கும் சேர்த்துத்தான் விலை வைக்கப்படுகிறது. குளிர்பானம் வாங்கும்போது, பாட்டிலுக்கும் சேர்த்துதான் நாம் விலை கொடுக்கிறோம். எனவே, குளிர்பானம் வாங்கு பவருக்கே பாட்டில் சொந்தம்.

மெடிக்கல் ஷாப்பில் இருந்து ஒயின் ஷாப் வரை பாட்டிலில் வாங்கப் படும் பொருட்கள் பாட்டிலோடுதான் தரப்படுகின்றன''என்று வாதிட்டார்.

ஏறத்தாழு ஆறு மாதங்கள் இழுத்தடித்த இந்த வழக்கில்,

'குளிர்பானம் வாங்குபவருக்குத்தான் பாட்டில் சொந்தம்' என்று தீர்ப்பானது.


உங்கள் செல்பேசி தண்ணீரில் விழுந்து விட்டதா? செல்பேசி தண்ணீரில் விழுந்துவிட்டால்...

Posted: 22 Oct 2014 07:31 AM PDT

உங்கள் செல்பேசி தண்ணீரில்
விழுந்து விட்டதா?
செல்பேசி தண்ணீரில்
விழுந்துவிட்டால்
என்னசெய்வது என தெரியாமல்
பெரும்பாலும் வெயிலில் வைப்பது,
லைட் கீழே வைப்பது, சிலர் இன்னும்
முன்னேறி அடுப்படியில்
வைத்து காய வைப்பது என சரியாக
தவறு செய்வார்கள்.

செல்பேசி தண்ணீரில் விழுந்தால்
என்ன செய்யவேண்டும்??
தண்ணீரில் விழுந்த
போனை எடுத்து பேட்டரியை உடனே கழட்டிவிட
வேண்டும். ஏனெனில் ஈரமான
செல்பேசியின் பாகங்கள்
சாட்சர்க்யூட் ஆகி போன் மேலும்
டேமேஜ் ஆகாமல் இருக்கும்.
பேசியை எவ்வளவு கழற்ற
முடியுமோ அவ்வளவு கழற்றி வெள்ளையான
காட்டன்
துணியை வைத்து துடையுங்கள்.
பின் மெலிதாக வெப்பம் வரும்
இடமாக பார்த்து காயவைக்க
வேண்டும். நேரடியாக வெயிலில்
வைக்க கூடாது. நிழலில்
உலர்த்துங்கள். அடுப்படியும்
வேண்டாம்.

அவ்வளவு தான் நீங்கள் செய்ய
முடியும். மறுபடி பழைய
மாதிரி பேசியை பூட்டி இயக்கி பாருங்கள்.
இயங்கினால் லாபம். இல்லாவிட்டால்
போ வாங்கிய தொகையில் 5 சதவீதம்
தொகையை தயார்
செய்து கொள்ளுங்கள். ரிப்பேர்
கடையில் ரிப்பேர் செய்யதான்.
முடிந்த அளவு தனியார் சர்வீஸ்
சென்டர்களை நாடுங்கள்.
கம்பெனி சர்வீஸ் சென்டர்களில்
தரமாக இருந்தாலும்
விலை நியாயமாக இருக்காது.


உலகில் கொடுமையான விசயங்களில் ஒன்று நாம் நேசிக்கும் ஒருவர் நம் தோல் மீது சாய்ந்து...

Posted: 22 Oct 2014 07:19 AM PDT

உலகில்
கொடுமையான
விசயங்களில்
ஒன்று நாம்
நேசிக்கும் ஒருவர்
நம் தோல் மீது
சாய்ந்து கொண்டு
அவர் நேசிக்கும்
ஒருவருக்காய் அழுவது..

உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில்...

Posted: 22 Oct 2014 04:35 AM PDT

உலர் திராட்சைப்
பழத்தை வெது வெதுப்பான
தண்ணீரில்
அரை மணி நேரம்
ஊறவைத்து காலையில்
அருந்தினால் மாதவிடாய்க்
கோளாறுகள், இதய
நோய் தீரும்.

வாசிப்பு நம் கண்களைத் திறக்கின்றது. நமது அக நிலையை உணர வைத்து எம்மை எமக்கே அடையா...

Posted: 22 Oct 2014 02:48 AM PDT

வாசிப்பு நம் கண்களைத் திறக்கின்றது. நமது அக நிலையை உணர வைத்து எம்மை எமக்கே அடையாளம் காட்டுகிறது.வாசிக்க வாசிக்க மனதின் உள்ளறைக் கதவுகள் திறந்து கொள்கின்றன. நமக்கு வாய்க்கப்பெற்ற ஒற்றை வாழ்க்கையானது வாசிப்பின் வழியாக பலமடங்கு பெருகுகிறது. வாசிப்பும் சுவாசம் போன்றதே.வாசிப்பை நிறுத்தும் போது நமது உலகம் ஒரு இடத்தில் நின்றுவிடுகிறது.

வாசிப்பை சுவாசமாகக் கொண்ட ஒரு தலைமுறையே இன்றைய தேவை.எழுத்துடனும் வாசிப்புடனும் ஊடாடும் ஒரு பரம்பரையை நோக்கி வாசிப்பை விரிவுபடுத்துவோம்.

எல்லைகள் கடந்து வாசிக்க ஆரம்பிப்போம்.நாளைய உலகை நம் கைகளுக்குள் வசப்படுத்துவோம்.

பலவித புதுமை கற்க லைக் செய்வீர் >> நிகழ் [ Nihal Publications - Sri Lanka ]


0 comments:

Post a Comment