Sunday, 19 October 2014

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


சென்னை விமான நிலையத்தில் தமிழும் இல்லை, பணியில் தமிழரும் இல்லை ! அண்மையில் சென்...

Posted: 19 Oct 2014 09:30 AM PDT

சென்னை விமான நிலையத்தில் தமிழும் இல்லை, பணியில் தமிழரும் இல்லை !

அண்மையில் சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திற்கு சென்றிருந்தேன். நுழைவாயிலில் இரு பாதுகாவலர்கள் பணியில் இருந்தனர். அவர்கள் பயணிகளின் ஆவணங்களை பரிசோதித்து பயணிகளை உள்ளே அனுப்பிய வண்ணம் இருந்தனர். அவர்களிடம் நான் சென்று தமிழில் பேசினேன். அதற்கு அவர்களால் பதில் சொல்ல முடியாமல் 'நை நை ' என்றனர் . பின்பு அவர்களிடம் தமிழ் தெரியுமா என்று கேட்க அந்த பாதுகாவலர் இல்லை என்று தலை ஆட்டி 'டெல்லி போலீஸ்' என்றார் .

பின்பு அவரிடம் ஒன்றும் பேசாமல் அங்கிருந்து விமான நிலைய உதவி மையத்தை அணுகினேன். அங்குள்ள உதவி மையத்தில் தமிழில் பெயர் பலகை இல்லை, தமிழில் பேசக்கூடிய அதிகாரியும் இல்லை. இருப்பினும் அந்த அதிகாரியிடம் தமிழில் பேசத் தொடங்கினேன். அவருக்கு சரியாக புரியவில்லை. சற்று நேரத்தில் வேறு ஒரு தமிழ் தெரிந்த ஊழியர் அங்கு வந்து நம்மிடம் விசாரித்தார். அவரிடம் தமிழ் தெரியாத பாதுகாவலரை நியமித்து உள்ளீர் , 90 % பயணிகள் தமிழ்நாட்டு பயணிகள் உள்நாட்டு முனையத்தை பயன்படுத்துகின்றனர் . ஆனால் இந்த பாதுகாவர்களுக்கு தமிழ் பெயரளவுக்கு கூட தெரியவில்லை என்று புகார் அளித்தேன். இதை புரிந்து கொண்ட தமிழ் பேசாத அதிகாரி, இப்போது தமிழ்நாட்டு பயணிகள் யாரும் தமிழ் பேசுவதில்லை அதனால் தான் நாங்கள் தமிழ் தெரியாத பாதுகாவலர்களை நியமித்துள்ளோம் என்று திமிராக ஆங்கிலத்தில் கூறினார் .

பின்பு நானும் ஆங்கிலத்தில் , இப்படித் தான் டெல்லியில் இந்தி தெரியாத ஒரு பாதுகாவலரை நியமிப்பீர்களா என்று கேட்டதற்கு மௌனம் சாதித்தார். இங்குள்ள பல ஆங்கிலம் தெரியாத தமிழர்கள் பயணிக்கிறார்கள், அவர்களுக்கு புரியும் மொழியில் தான் நீங்கள் பேச வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால் அதை பற்றி அந்த அதிகாரி சட்டை செய்யவில்லை . நானும் புகார் கொடுக்க வேண்டிய இடத்தில் புகார் அளிக்க்றேன் என்று புறப்பட்டு வந்து விட்டேன் .

வெளியே வந்ததும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அங்கு வந்தார் . அவரிடம் இது பற்றி கூறினேன் . அவரும், இதெல்லாம் நம் கட்டுப்பாட்டிற்குள் இல்லையே , நடுவண் அரசின் கட்டுக்குள் தானே வருகிறது நாம் என்ன செய்ய முடியும் என்றார் . நான் கூறினேன் , இருப்பினும் தமிழ்நாட்டில் தானே விமான நிலையம் உள்ளது , அதனால் பணியாளர்கள் அனைவர்க்கும் தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்றேன் . அவரும் சரிங்க , நீங்கள் விமான நிலைய இயக்குனருக்கு ஒரு புகார் கொடுங்கள் பார்ப்போம் என்று நகர்ந்தார்.

இன்று விமான நிலைய மேலதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளேன் . அவர்களும் இந்த குறை இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். எனினும் இயக்குனரை நேரில் சந்தித்து புகார் அளிக்க வேண்டும் என்றதால், அவரை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்து நம்மை அழைப்பதாக கூறியுள்ளனர்.

மேலும் விமான நிலையத்தின் வெளியே உள்ள எந்த உணவகங்கள், கடைகளுக்கும் தமிழில் பெயர்பலகை இல்லை. அதையும் அதிகாரிகளுக்கு சுட்டிக் காட்டி உள்ளேன் . அது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளனர் . விரைவில் இதை மாற்றி விடலாம் . ஆனால் பணியாளர்கள் தமிழ் அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டும் நாம் இன்னும் கவனம் செலுத்த வேண்டி உள்ளது .

இரண்டு கோரிக்கைகள் 1 . விமான நிலைய பாதுகாவலர்கள் தமிழ் தெரிந்தவராக இருத்தல் வேண்டும் . 2 விமான நிலையத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை இருத்தல் வேண்டும். நீங்களும் புகார் அளிக்கலாம். விமான நிலையத்தை தமிழ் படுத்தலாம். தொடர்பு எண் . 044 22560551

- இராச்குமார் பழனிசாமி


நீங்கள் உங்கள் குடும்பத்தை மிகவும் நேசிப்பவரா, அப்படியானால் இதை அவசியம் படியுங்க...

Posted: 19 Oct 2014 07:52 AM PDT

நீங்கள் உங்கள் குடும்பத்தை மிகவும் நேசிப்பவரா, அப்படியானால் இதை அவசியம் படியுங்கள்...

ஒரு பெரிய வணிக அங்காடியில்
ஒரு ஐந்து வயது மதிக்கத் தக்க சிறுவன்
பணம் செலுத்துபவரிடம் உரையாடிக்
கொண்டிருந்தான் பணம் பெறுபவர்,
உன்னிடம் இந்த
பொம்மை வாங்குவதற்கு தேவையான
பணம் இல்லை என்று சொன்னார். அந்த
சிறுவன் இந்த பணம்
போதாதா என்று வினவினான்.

அவர் மீண்டும்
பணத்தை எண்ணி விட்டு இல்லடா செல்லம்
குறைவாக உள்ளது என்றார். அந்த
சிறுவன் அந்த
பொம்மையை கையிலேயே பிடித்திருந்தான்.

நான் அந்த சிறுவனிடம் அந்த
பொம்மை யாருக்கு தர போகிறாய்
என்று கேட்டேன். அதற்க்கு அந்த
சிறுவன் அது தன் தங்கைக்கு ரொம்ப
பிடித்ததாகவும் அவள் பிறந்தநாள்
அன்று அவளுக்கு பரிசளிக்க
போவதாகவும் கூறினான் மேலும் அவன்
பேச தொடர்ந்தபோது என் இதயம்
நின்று விட்டது போல் உணர்தேன். அவன்
கூறியது "இந்த பொம்மையை என் அம்மாவிடம் கொடுத்தால் அவர்கள் என்
தங்கையிடம் கொடுத்து விடுவார்கள், என்
தங்கை கடவுளிடம் சென்று விட்டால்,
என் அம்மாவும் கடவுளிடம் செல்ல
இருக்கிறார்.

நான் என் தந்தையிடம் இந்த
பொம்மை வாங்கி வரும் வரை அம்மா
கடவுளிடம் செல்ல வேண்டாம்
என்று கூறி விட்டு வந்தேன்.

எனக்கு என் தங்கையும் அம்மாவும்
ரொம்ப பிடிக்கும். அம்மா கடவுளிடம்
செல்ல வேண்டாம் என்று அப்பாவிடம்
கேட்டேன், அனால் அம்மா கடவுளிடம்
செல்லும் நேரம் வந்துவிட்டதாக
கூறினார்.

மேலும் அவன் கையில் அவனுடைய
புகைப்படம் ஒன்றை வைத்து இருந்தான்
அதை தன் அம்மாவிடம் கொடுத்தால்
அவர்கள் தன் தங்கையிடம்
அதை கொடுப்பார்கள், அதனால் அவள்
தன்னை மறக்காமல் இருப்பாள் என்றும்
கூறினான்.

நான் என்னிடம் இருந்த
பணத்தை அவனுக்கு தெரியாமல் அவன்
வைத்திருந்த பணத்துடன் சேர்த்து,
மீண்டும் எண்ணி பார்க்கலாம்
என்று சொன்னேன். அவனும் இசைந்தான்,
நாங்கள் எண்ணிய போது போதிய
பணத்திற்கு மேல் இருந்தது அவன்
கடவுளுக்கு நன்றி கூறினான்.

நான் கனத்த மனதுடன்
அங்கிருந்து நகர்ந்தேன் பின்னர் உள்ளூர்
தினசரி பத்திரிக்கை ஒன்றில்
படித்தது என் நினைவிற்கு வந்தது,
மகிழ்வுந்தில்(car) பயணம் செய்த
அம்மா மற்றும் மகள் மீது ஒரு திறந்த
சரக்கு வண்டி(truck)
மோதி விபத்துக்குள்ளா னது என்றும்
அதன் ஓட்டுனர்
குடித்து இருந்ததாலேயே விபத்து நிகழ்ந்தது என்றும்
வந்த அந்த செய்தி மேலும் மகள் சம்பவ
இடத்திலேயே இறந்ததாகவும் தாய்
உயிருக்கு போராடும் நிலையில்
மருத்துவமனையில் அனுமதிக்க
பட்டார் என்றும் அவர் சயித்திய (coma)
நிலையில் உள்ளார் என்றும் வந்த அந்த
செய்தி இந்த சிறுவன் அவர்கள் மகனா?

இரண்டு நாள்
கழித்து தினசரி பத்திரிக்கையில் அந்த
செய்தி விபதுக்குள்ளான பெண்
இறந்து விட்டால் என்று.

நான்
அவரது இறுதி சடங்கிற்கு சென்றேன்
அச் சிறுவனின் அம்மா சடலமாக
கிடந்தாள் கையில் சிறுவனின்
புகைப்படமும் அந்த பொம்மையும்
இருந்தது. அங்கிருத்து கனத்த
இதயத்துடன் திரும்பினேன் அந்த
சிறுவனின் தன் அம்மாவிடமும்
தங்கையிடம் வைத்திருந்த அன்பும்
பாசமும் அப்படியே உள்ளது. அனால்
ஒரு குடிகாரன் குடி போதையில் வாகனம்
ஒட்டியதால் ஒரு நொடியில் அந்த
குடும்பம் சிதைந்து விட்டது

தயவு செய்து மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் உங்கள் இதயத்தை இது தைத்திருந்தால் பகிருங்கள் ...


---------சிந்திக்க-------- தாய் புறாவிடம் குஞ்சு புறா கேட்டது,,,, கோவிலில் இரு...

Posted: 19 Oct 2014 03:00 AM PDT

---------சிந்திக்க--------

தாய் புறாவிடம் குஞ்சு புறா கேட்டது,,,,

கோவிலில் இருந்தோம்,
திருவிழா என்று நம்மை விரட்டி விட்டனர்.!!!

நாகூரில் இருந்தோம்,
அங்கேயும் வெள்ளை அடிப்பதாக சொல்லி விரட்டி விட்டனர்.!!!

வேளாங்கண்ணியிலும்
திருவிழா பெயரை சொல்லி துரத்தி விட்டனர்.!!!

ஆனால் ஒரு சந்தேகம் அம்மா...

நாகூருக்கு வருபவர்களை முஸ்லிம்கள் என்றும்,
கோவிலுக்கு வருபவர்களை ஹிந்துக்கள் என்றும், வேளாங்கண்ணிக்கு வருபவர்களை கிறஸ்தவர்கள் என்றும் அழைக்கிறார்கள்.

ஆனால் நாம் எங்கு சென்றாலும் நம்மை
மட்டும் ஏனம்மா
''புறா'' என்றே அழைக்கின்றனர் ???

#தாய்_புறா
அதனால் தான் அவர்கள் கீழேயே வசிக்கிறார்கள்,
நாம் மேலேயே வசிக்கிறோம்....


நம்மில் பலருக்கு, இல்லாத உணர்வு!

Posted: 19 Oct 2014 01:30 AM PDT

நம்மில் பலருக்கு, இல்லாத உணர்வு!


ரோட்டில் விற்கும் பாணி பூரி சாப்பிட போறீங்களா??? அப்ப இத பாத்துட்டு போங்க.......

Posted: 18 Oct 2014 11:55 PM PDT

ரோட்டில் விற்கும் பாணி பூரி சாப்பிட போறீங்களா???
அப்ப இத பாத்துட்டு போங்க....

பாத்துட்டு சும்மா போகாதிங்க...எல்லோருக்கும் share பண்ணுங்க.. நாலு பேரு (வயிறு) நல்லா இருக்கணும்னா இந்த posta-ah share பண்ணறது தப்பே இல்லைங்க..


பெண்கள் தற்காப்பு கலையான கராத்தேவை கற்க தேவையில்லை அவர்களுக்கு என்றே கண்டுபிடிக்...

Posted: 18 Oct 2014 09:53 PM PDT

பெண்கள் தற்காப்பு கலையான
கராத்தேவை
கற்க தேவையில்லை
அவர்களுக்கு என்றே கண்டுபிடிக்கப்ப
ட்ட
தற்காப்பு ஆயுதம்
ஒன்று உள்ளது தமிழில்....
அதுதான்....
*
*
*
*
*
*
*
*
*
*
"அண்ணா...???"

0 comments:

Post a Comment