Facebook Tamil pesum Sangam: FB page posts |
- 'போலீஸ் கமிஷனர் ஆகவேண்டும்' என்ற சிறுவனின் ஆசையை பூர்த்தி செய்த கமிஷனர் ஹைதரா...
- இலங்கையில் எனக்கு நன்கு அறிமுகமான குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் Free Visa...
- ஒரு கணவனும் மனைவியும் துணி கடையின் லிப்ஃடில் மாடிக்கு சென்றார்கள். ஒரு அழகிய பெண...
- முள்ளிவாய்க்கால் படுகொலை ஆவணப்படம் சர்வதேச விருதுக்குப் பரிந்துரை............ இல...
- சமைக்கத் தெரியாததை பெண்ணும் , குடிப்பதை ஆணும் பெருமையாக சொல்லும் கொடுமையான சமுதா...
- மும்பையில், ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரின் "ஆணுறுப்பை" ச...
Posted: 16 Oct 2014 08:46 AM PDT 'போலீஸ் கமிஷனர் ஆகவேண்டும்' என்ற சிறுவனின் ஆசையை பூர்த்தி செய்த கமிஷனர் ஹைதராபாத் நகரத்தில் 10வயது சிறுவன் ஒருநாள் தான் போலீஸ் கமிஷனர் ஆகவேண்டும் என்ற கனவை ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் மகேந்திரா ரெட்டி பூர்த்தி செய்தார். உயிருக்கு ஆபத்தான நோய் கொண்ட அச்சிறுவனுக்கு காக்கி ஆடையை அணிந்து அவரது நாற்காலியில் அமரச் செய்தார். பின்னர் ஆணையர் உள்பட அங்குள்ள போலீஸார் அந்த சிறுவனுக்கு சல்யூட் அடித்தனர்... #salute sir .. தமிழ் நாட்டில் விசாரனைக்கு அழைத்து சென்றவரை நெஞ்சில் நாலுதடவை சுட்டு கொன்று புகழ்பெற்றது தமிழ்நாடு போலிஸ் ..உயிர் போக இருக்கும் சிறுவன் தானே என்று அலட்சியம் காட்டாமல் , அவனின் ஆசையை சிரத்தையோடு பூர்த்திசெய்து நம் கண்ணை கலங்கவைத்த ஆந்திர போலிஸ் கமிசனர் ... புகழ்பெற்ற சிவாஜி பட வசனம் ''அமுதும் நஞ்சும் ஒரே இடத்தில்தான் விளைகின்றன'' #Admin ![]() |
Posted: 16 Oct 2014 08:21 AM PDT இலங்கையில் எனக்கு நன்கு அறிமுகமான குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் Free Visa வில் கட்டார் வந்து வேலை தேடிக்கொண்டிருக்கும் பொழுது ஒரு வெள்ளிக் கிழமை பள்ளியில் வைத்து ஏதேச்சையாக அவனை சந்திக்கக் கிடைத்தது. மூன்று மாதங்கள் கழிந்தும் இன்னும் வேலை கிடைக்கவில்லை என்றும், நாட்டில் இருந்து வரும்பொழுது கடன்பட்டுதான் வந்ததாகவும், என்ன செய்ரன்டே வெலங்குதில்ல ஸப்வான் நாநா என்று அவன் கூறிய பொழுது அவனோடு சேர்ந்து என் கண்களும் கலங்கிவிட்டன. பின்னர் எனக்கு தெரிந்த ஒரு நண்பனின் உதவியோடு அந்த இளைஞனுக்கு ஒரு வேலை பெற்றுக் கொடுக்க முடிந்தது. இன்று அந்த இளைஞன் வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம். முதல் சம்பளம் வழங்கியிருக்கிறார். சற்று முன்னர் அந்த இளைஞன் என் அலுவலகத்துக்கு வந்தான். எனக்கு Thanks சொல்ல வந்தேன் என்றான்.கையில் ஒரு நல்ல தொலைபேசி வைத்திருந்தான். எப்போது வாங்கிநீர்கள் என்று கேட்டேன்.இப்போதுதானாம். சம்பளம் எடுத்தவுடன் வாங்கிட்டு வாராராம். கிட்டத்தட்ட ஒரு இலச்சம் ரூபாய் பெறுமதியான Samsung Note 3 ஒன்று வாங்கியிருக்கிறார். சம்பளத்தின் பெறும்பகுதி ஃபோனோடு சரியாகியிருக்கும். வீட்டில் பெற்றோர் கடன் பட்டு பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு ஆயிரம் கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் அங்கே மகன்களுக்காக காத்துக் கிடக்கிறார்கள். இலங்கையில் இருந்துவரும் இளைஞர்களை இந்த இலத்திரனியல் காய்ச்சல் வெகுவாகவே பாதித்து இருக்கிறது.நிறைய இளைஞர்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வீட்டில் உள்ளவர்கள் பயனடைவதைவிட Samsung,Apple போன்ற நிறுவனத்தினரனே அதிகம் பயன்பெறுகிறார்கள். ஆசைப்படும் பொருட்களை வாங்குவதில் தவரொன்றும் இல்லை. ஆனால் அவற்றுக்கு கால நேரம் இருக்கிறது. இலங்கையிலிருந்து வரும் சில இளைஞர்களின் நடவடிக்கைகளை பார்க்கும் பொழுது லெப்டொப்பும், ஃபோனும் வாங்குவதற்கும், அவற்றில் ஃபொடோ எடுத்து ஃபேஸ்புக்கிள் போடுவதற்குமே வெளி நாட்டுக்கு வருகிறார்கள் என்றுகூடத் தோன்றுகிறது. தனது நிலமை புரியாத இந்த ஆடம்பர மனோ நிலை நமது இளைஞர்களிடமிருந்து இல்லாமல் போகவேனும், S 3 யில் இருந்து S 4 இற்கு மாறுவதைவிட குடும்பப் பொருப்புகள், சமூகப் பொருப்புகள் முதன்மையானவை என்பதை எமது இளைஞர்கள் உணரவேண்டும். வெளிநாட்டில் வந்து குவியும் நமது இளைஞர்கள் வீட்டுக்கும்,நாட்டுக்கும் எந்தப் பிரயோசனமும் இல்லாமல் போவதற்கு வெளிநாட்டு வாழக்கையைக் கண்டதும் தன் குடும்ப சூழ் நிலை மறந்து ஒரு பகட்டான ஆடம்பரமோகம் இளைஞர்களை ஆட்கொள்வது மிக முக்கியமான காரணமாகும். வெளிநாட்டில் இருக்கும் காலம் முழுக்க ஒரு அர்தமற்ற ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு மத்திய கிழக்கு வெயிலுக்கும்,அரேபியர்களுக்கும் ஏசிக்கொண்டு வெறுங்கையோடு நாட்டுக்குப் போய் சேர்கிறார்கள். via - Safwan Basheer |
Posted: 16 Oct 2014 05:27 AM PDT ஒரு கணவனும் மனைவியும் துணி கடையின் லிப்ஃடில் மாடிக்கு சென்றார்கள். ஒரு அழகிய பெண்ணும் லிப்ஃடில் வந்தாள். கணவன் அழகிய பெண்ணை ஒட்டியவாறு நிற்க, திடீரென்று அழகி அவனை அறைந்தாள். கணவன் அதிர்ச்சியடைந்து "ஏன் இப்ப அறைஞ்சே..?" என்று கேட்க " எதுக்கு என் இடுப்பைக் கிள்ளினே..?" என்றாள். கணவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. மனைவிக்கு முன் இப்படி நடந்து விட்டதே என்று அவமானம் வேறு. லிப்ஃட் நின்று எல்லோரும் வெளியேற, மனைவி சொன்னாள்.. "அதையே யோசிச்சுட்டு இருக்காதீங்க.. நாந்தான் அவளைக் கிள்ளினேன்..!" |
Posted: 16 Oct 2014 02:32 AM PDT முள்ளிவாய்க்கால் படுகொலை ஆவணப்படம் சர்வதேச விருதுக்குப் பரிந்துரை............ இலங்கையின் இறுதிக் கட்ட போரின்போது நிகழ்ந்த கொடூரங்களை கொண்டு சனல் 4வினால் தயாரிக்கப்பட்ட நோ பயர் சோன் ஆவணப்படம், அமெரிக்காவின் உயர் தொலைக்காட்சி விரு துக்கு பரிந்துரைக்கப்ப ட்டு உள்ளது. இந்த ஆவணப் படம் நேற்று இரவு ஆண் டின் சர்வதேச எமி விரு துக்கு பரிந்துரைக்கப்ப ட்ட தாக தெரிவிக்கப் பட்டு உள்ளது. இந்தநிலையில் குறித்த விருதை பெறும் படம் குறித்த அறிவிப்பு நவம்பர் 24ம் தேதி நியூயார்க்கில் வெளியிடப்பட உள்ளது. மனித குலத்துக்கு எதிரான கொடுமைகளை, போர்க்குற்றங்களை சாட் சியங்களுடன் இந்த ஆவ ணப்படம் கொண்டிருப்ப தாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். |
Posted: 15 Oct 2014 03:47 PM PDT சமைக்கத் தெரியாததை பெண்ணும் , குடிப்பதை ஆணும் பெருமையாக சொல்லும் கொடுமையான சமுதாயத்தில் தான் வாழ்கிறோம் நாம்... |
Posted: 15 Oct 2014 09:44 AM PDT |
You are subscribed to email updates from பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கம்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment