Relax Please: FB page daily Posts |
- ஆறு வயது பையன் அவன். எதேச்சையாக மூன்று வயது பெண்குழந்தையின் புகைப்படம் ஒன்று அவன...
- மூளைக்கொரு வேலை
- 'இனிமையைக் கண்டு, வாழ்வை செழுமையாக்குவோம்!’ ஒருமுறை, மகாத்மாவைக் கண்டித்து மிக...
- :)
- அருமையான க்ளிக்
- தாய்மை <3
- நெஞ்சைத் தொட்ட குட்டிக்கதை.. ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார...
- உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே உலகில் கப்பல் கண்டுபிடித்தவன்...
- அரிய புகைப்படம்...! இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி...
- (y)
- Face bookஐ தமிழில் மாற்றினால்... facebook - மூஞ்சி புத்தகம் home - வூடு statu...
- கேஎஃப்சி சிக்கனை வீட்டிலேயே செய்ய ஆசையா..? பலருக்கு கேஎஃப்சி சிக்கனை எப்படி செய...
- இரு கரம் கூப்பி கடவுளை வணங்குவதை விட பசி என்று ஒரு கரம் நீட்டும் மனிதனின் பசியை...
- (y)
- ஒரு இன்ஸ்பெக்டர் தன் மகனிடம் ... "டேய் என்னடா இது? எனக்குப் பொறந்த புள்ளயா நீ ....
- காமராஜர் ஒரு முறை, தஞ்சை மாவட்டத்தில் இருந்த பழைமையான கோயில் ஒன்றைப் பார்வையிடச்...
- குழிபணியாரம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)
- :)
- கணவர் தெரிந்து கொள்ள வேண்டிய மனைவிக்கு பிடிக்காத விஷயங்கள்: * உடலில் சதை போடுவத...
- நான் குய்க்கப் போறேன், நீங்க நீங்க வர்ரீங்களா என் கூட குய்க்க... :)
- மக்கள் சக்தியால் மீண்ட பயணி! ஆஸ்திரேலியா ரயில் நிலையத்தில் நடைமேடைக்கும் ரயிலுக...
- உண்மை
- பொது அறிவு 1) உலகில் மிகப்பெரிய விலங்கு எது? திமிங்கிலம் 2) உலகில் உயரமான விலங...
- டிவிட்டரில் நெகிழ வைக்கும் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம்! நீங்கள் டிவிட்டர் பயன...
- அடி ஆத்தி இவகளுக்கு மட்டும் தனி சட்டமா :P
- (y)
- ஒரு பொண்ணும் பையனும் லவ் பண்ணினார்கள்.இருவர் வீட்டிலும் கடும் எதிர்ப்பு. இறுதியி...
- உலகம் போற்றும் விஞ்ஞானியான ஐசக் நியுட்டன் பார்லிமெண்ட் மெம்பராக 1689-90 மற்றும்...
- இன்று வரைக்கும், எந்த விவசாயியும் வயல் வரப்பில் கூட செருப்பு அணிந்து பார்த்ததில்...
- :)
Posted: 07 Aug 2014 09:18 AM PDT ஆறு வயது பையன் அவன். எதேச்சையாக மூன்று வயது பெண்குழந்தையின் புகைப்படம் ஒன்று அவனுக்குக் கிடைத்தது. அவன் அந்தக் குழந்தையை வெகு தீவிரமாக நேசிக்கத் தொடங்கினான். ஆனால் அவள் யாரென்பதை தேடிக் கண்டுபிடிக்க மட்டும் அவனால் முடியவில்லை. இருபது வருடங்களுக்குப் பிறகு.. அவனுடைய மனைவி அலமாரியை ஒதுங்க வைக்கும்போது டைரிக்குள் அந்த புகைப்படத்தை கண்டுபிடித்தாள். "இந்த போட்டோ உங்களுக்கு எப்படிங்க கிடைச்சது?" "ஏன் கேக்குற?" "இது என்னோட போட்டோதான். ரொம்பப் பிடிச்சது. வீடு மாத்தும்போது எப்படியோ தொலஞ்சு போனது உங்ககிட்ட கிடச்சு இருக்கு.." சொல்லியப்படியே அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். நீதி::::: சனி பிடிக்கணும்னு இருந்தா எத்தனை வருஷம் ஆனாலும் விடாது.. ! *** :P :P நோ.. நோ... சண்டைக்கெல்லாம் வரப்படாது.. நெட்ல சுட்டது தான் Photo Aa Photography ![]() குசும்பு... 2 |
மூளைக்கொரு வேலை Posted: 07 Aug 2014 09:08 AM PDT |
Posted: 07 Aug 2014 08:59 AM PDT 'இனிமையைக் கண்டு, வாழ்வை செழுமையாக்குவோம்!' ஒருமுறை, மகாத்மாவைக் கண்டித்து மிக நீளமான கடிதம் ஒன்றை ஒருவர் எழுதியிருந்தார். அதைப் படித்துப் பார்த்த காந்திஜி, அதிலிருந்த குண்டூசியை மாத்திரம் எடுத்துக்கொண்டு, கடிதத்தைக் கிழித்தெறிந்தார். 'இந்தக் கடிதத்தில் குண்டூசி ஒன்றுதான் பயனுள்ளது' எனச் சிரித்தபடியே சொன்னாராம். அப்படிப்பட்ட திடமான உள்ளமே, மிகப் பெரிய எதேச்சதிகாரத்தை எதிர்க்கிற துணிவை நமக்குப் பெற்றுத் தந்தது. காமராஜரைப் பற்றி சிலர் அவதூறு பரப்பினர்; நேர்மையாக இருப்பதாகச் சொல்லிக்கொண்டு, நிறைய சொத்துச் சேர்ப்பதாக எழுதினார்கள். அவரிடம் இதுகுறித்துக் கேட்டபோது, ''நான் நேர்மையானவன். என்மீது வைக்கப்படுகிற குற்றச்சாட்டுக்கெல்லாம் பதில் சொல்லி, என் நேர்மையை நிருபிக்கவேண்டிய அவசியம் இல்லை, எனக்கு யானைக்கால் நோய் இல்லை என்பதற்காக, எல்லோரிடமும் என் காலைத் தூக்கிக் காட்டவேண்டிய அவசியமில்லை'' என நறுக்குத்தெறித்தாற்போல் பதில் சொன்னார். மற்றவர்களின் கடும் விமர்சனங்களால் உண்டான வலியை, தம் பணியால் மகிழ்ச்சியுறுவோரின் புன்னகை போக்கிவிடும். இயேசுவைச் சிலுவை யில் அறைந்த அநியாயமும், லிங்கனைச் சுட்டுக் கொன்ற அவலமும் நிகழ்ந்த கொடுமையான உலகம் இது! ஆனால், சங்ககாலப் பாடல் ஒன்றில் கூறப்படுவதுபோல, 'இவ்வுலகம் இன்னாதது தான். ஆனால், இதிலிருக்கும் இனிமையைக் கண்டு, வாழ்வை செழுமையாக்குவோம்!' ( 'எப்போதும் இன்புற்றிருக்க' தொடரில் - வெ. இறையன்பு) - Vikatan EMagazine. ![]() # படித்ததில் பிடித்தது #- 2 |
Posted: 07 Aug 2014 08:52 AM PDT |
அருமையான க்ளிக் Posted: 07 Aug 2014 08:40 AM PDT |
தாய்மை <3 Posted: 07 Aug 2014 08:30 AM PDT |
Posted: 07 Aug 2014 08:15 AM PDT நெஞ்சைத் தொட்ட குட்டிக்கதை.. ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார்.. ஒருநாள் 'ஆபீஸ்' போய் வேலை செய்து பார்.. சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்.. அவள் ஒருநாள் பொறுமை இழந்து, ஒருநாள் நீங்க வீட்ல இருந்து பசங்களை பார்த்துக்கோங்க.. காலைல குளிப்பாட்டி சாப்பிட வச்சு, வீட்டுப் பாடங்கள் சொல்லிக்கொடுத்து சீருடை அணிவித்து பள்ளிக்கு அனுப்புங்க.. அதோடு சமைப்பது துவைப்பது எல்லாத்தையும் செஞ்சுதான் பாருங்களேன்.. என எதிர் சவால்விட்டாள்.. கணவனும் அதை ஏற்றுக் கொண்டான்.. அவன் வீட்டில் இருக்க.. இவள் ஆபீஸ் போனாள்.. ஒரே குப்பை, கூளமாக கிடந்தது ஆபீஸ்.. முதலாளி மனைவி என்பதை மனதில் கொள்ளாமல் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்தாள்.. வருகைப் பதிவேட்டை சரிபார்த்து தாமதமாய் வருபவர்களை கண்டித்தாள்.. கணக்கு வழக்குகளைப் பார்த்தாள்.. மாலை 5 மணி ஆனதும் வீட்டுக்குப் புறப்பட நினைத்தபோது, ஓர் அலுவலரின் மகள் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் சொல்ல, பரிசுப் பொருள் வாங்கிக்கொண்டு கல்யாண மண்டபத்திற்கு சென்றாள்.. கணவர் வராததற்கு பொய்யான காரணம் ஒன்றை சொல்லிவிட்டு, மணமக்களின் கட்டாயத்தால் சாப்பிட சென்றாள்.. பந்தியில் உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம் வீட்டைப் பற்றியே.. இலையில் வைத்த 'ஜாங்கிரியை' மூத்தவனுக்கு பிடிக்கும் என்று கைப்பையில் எடுத்து வைத்தாள்.. முறுக்கு கணவனுக்குப் பிடிக்குமே என்று அதையும் கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்.. அவள் சாப்பிட்டதை விட, பிள்ளைகளுக்கும் கணவனுக்கும் என பைக்குள் பதுக்கியதே அதிகம்.. ஒரு வழியாய் வீடு வந்து இறங்கியவள், கணவன் கையில் பிரம்போடு கோபத்துடன் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்ததைப் பார்த்தாள்.. இவளை பார்த்ததும், பிள்ளையா பெத்து வச்சிருக்க..? அத்தனையும் குரங்குகள்.. சொல்றதை கேட்க மாட்டேங்குது.. படின்னா படிக்க மாட்டேங்குது.. சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்குது.. அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல படுக்க வச்சிருக்கேன்.. பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள கெடுத்து வச்சிருக்கே என்று பாய.. அவளோ, அய்யய்யோ பிள்ளைகளை அடிச்சீங்களா... என்றவாறே உள்ளே ஓடி கதவை திறந்து பார்த்தாள்.. உள்ளே ஒரே அழுகையும் பொருமலுமாய் பிள்ளைகள்.. விளக்கை போட்டவள் அதிர்ச்சியுடன், 'ஏங்க.. இவனை ஏன் அடிச்சு படுக்க வச்சீங்க..? இவன் எதிர்வீட்டு பையனாச்சே ' என்று அலற.. ஓஹோ , அதான் ஓடப் பார்த்தானா..! என கணவன் திகைக்க.. அந்த நிலையில் இருவருக்கும் ஒன்று புரிந்தது.. இல்லாள் என்றும் , மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம் தொடங்கி நம் மூதாதையர்கள் சொல்வது சும்மா இல்லை... இல்லத்தைப் பராமரிப்பதிலும் பிள்ளைகளுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும் ஒரு பெண்ணின் பங்கு தலையாயது.. அதுபோல, பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும் அளப்பரியது.. ஆனால் இருவரும் வேலைக்கு செல்லும் இந்த காலத்தில் இது ஆணுக்கு, இது பெண்ணுக்கு என்று குடும்பப் பொறுப்புகளை இனம்பிரிக்க இயலாதபடி வாழ்க்கை சமத்துவம் ஆகிவிட்டது.. இந்த சூழ்நிலையில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் கணவன்மீது மனைவியோ, மனைவிமீது கணவனோ ஆதிக்கம் செலுத்தாமல் அன்பால் சாதிக்கும் மனநிலையை கொண்டிருந்தால்தான் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ முடியும்... மக்கள் இதை உணர்ந்து வாழவேண்டும்.. ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் Relaxplzz |
Posted: 07 Aug 2014 07:53 AM PDT உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே உலகில் கப்பல் கண்டுபிடித்தவன் தமிழன்.உலகின் கப்பல் கட்டுமானத்தில் சிறந்துவிளங்கியவன்தமிழன்.இத்துறை வல்லுனர்கள் கம்மியர்கள் எனப்பட்டனர். கடலில் பயணம்செய்வது எப்படிகாற்று எந்த நாட்களில் எப்படி வீசும்? காற்றின்திசைகளை கொண்டு பயணம் செய்வது எப்படி என்று கடல் சார்ந்த அத்தனை அறிவுகளிலும் மேம்பட்டு விளங்கியவன் தமிழன்.உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே.உலகின் முதல் கப்பலையும் கப்பல் படையும் வைத்திருந்தவன் இராஜஇராஜசோழனும் அவன்மகன்ராசேந்திர சோழனும் ஆவான். கலிங்கபாலு எனும் கடல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட செய்தியில்,கடல்வாழ் உயிரினமான ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுபொரிப்பதற்காகவருடாவருடம் தமிழகம் மற்றும் ஒரிசாவரும். ஆமைகள் சராசரி ஒருநாளைக்கு 85 கிமீ தூரமே நீந்த முடியும்.ஆனால்இவ்வளவு தூரத்தை குறுகியகாலத்தில் எட்டியது எப்படி என்று ஆராய்ந்தபோதுஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாடும் நீரோட்டத்தின் உதவியுடன்பல்லாயிரம்கி.மீ.தூரம் நீந்தாமலே பயணிக்கும் உண்மைதெரிந்தது. .இப்படி பயணம்செய்யும் ஆமைகள் செயற்கைக்கோள் உதவியுடன்பின்தொடர்ந்தபோது உலகின் பல நாடுகளின் கடற்கரைகளுக்கு அழைத்து சென்றன.ஆமைகள் சென்ற 53 கடற்கரைகளின் பெயர்களும்,மக்களின் பண்பாடும் மொழியும் ஏதாவதொரு வகையில்தமிழின்தாக்கத்தோடு இருக்கிறது என்று தெரிவித்தனர். உதாரணம்: தமிழா-------------மியான்மர். சபா சந்தகன்-----மலேசியா ஊழன்,சோழவன்,வான்கரை,ஒட்டன்கரை,ஊரு--------ஆஸ்திரேலியா கடாலன்------------ஸ்பெயின் நான்மாடல் குமரி----------பசிபிக் கடல் சோழா,தமிழி,பாஸ்--------மெக்ஸிகோ திங்வெளிர்--------------------ஐஸ்லாந்து கோமுட்டி----------------------ஆப்பிரிக்கா. இப்படி கடலில் பாயும் நீரோட்டங்களை அன்றே அறிந்துஅதன்மூலம் பயணம் செய்துள்ளனர் தமிழர். இதேபோல் தென்பசிபிக்மாகடலில்,ஆஸ்திரேலிய கடல் பகுதியில்கடல் அகழ்வாராய்ச்சியில்மிகப்பெரிய சரக்குக்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது.அக்கப்பலை ஆராய்ந்துபார்த்ததில்அது 2500 வருடங்களுக்கம் மேல் பழமையானது என்றும்,இது தமிழருடையது என்றும்தெரிவித்தனர். நியூசிலாந்தில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட மணி ஒன்றும்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்னும்உலகில் உள்ள கப்பல் மற்றும்,கடல் சார்ந்த துறைகளுக்கு தமிழிலிருந்து மருவியபெயர்களே உள்ளன ![]() "தமிழ் - தமிழர் பெருமை" - 2 |
Posted: 07 Aug 2014 07:44 AM PDT |
Posted: 07 Aug 2014 07:30 AM PDT |
Posted: 07 Aug 2014 07:15 AM PDT Face bookஐ தமிழில் மாற்றினால்... facebook - மூஞ்சி புத்தகம் home - வூடு status - வாய்க்கு வந்தத உளறு... post - தபால் டப்பா comment - காரித்துப்பு reply - திருப்பித் துப்பு angry bird - கவட்ட விளாட்டு people you may know - தெரிஞ்ச மொகரயா பாரு... warning - மரியாதை கெட்டுபோகும் நாயி நாயி search - மாதா கோயிலு (யோவ் அது church யா) you are blocked for 30 days - 30 நாளைக்கு மூடிட்டு இரு friend request- மச்சி என்ன சேர்த்துக்கோ chat- கடலை like- புடிச்சா அமுக்கி போடு settings- எதயாவது மாத்து fake id- ஊரை ஏமாத்து poke- மூஞ்சில குத்து notifications- எவனோ என்னமோ அனுப்பிகீறான் criminal case- குற்றம் நடந்தது என்ன farm ville - கம்பியூட்டர் விவசாயம் developer - அடிமை follow - பின்னாலே போ inbox - உள்ளே போ update info- மேல சொல்லு மேல சொல்லு groups- குட்டி செவுரு wall- பெரிய செவுரு recent activity- கொஞ்சம் மின்னாடி இன்னா பண்ணினு இருந்த logout - வெளிய போடா அயோக்கிய ராஸ்கலு... ![]() குசும்பு... 3 |
Posted: 07 Aug 2014 06:59 AM PDT கேஎஃப்சி சிக்கனை வீட்டிலேயே செய்ய ஆசையா..? பலருக்கு கேஎஃப்சி சிக்கனை எப்படி செய்கிறார்கள் என்ற கேள்வி மனதில் எழும். அத்தகையவர்களுக்காக அந்த கேஎஃப்சி சிக்கனை எப்படி வீட்டிலேயே செய்வதென்று தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. இதன் செய்முறையைப் பார்த்தால், இவ்வளவு தானா என்று பலர் ஆச்சரியப்படுவோம். ஏனெனில் அந்த அளவில் இந்த ரெசிபியின் செய்முறையானது எளிமையாக இருக்கும். சரி, அந்த கேஎஃப்சி சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சிக்கன் - 1 கிலோ (லெக் பீஸ் அல்லது மார்பக பீஸ்) இஞ்சி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் சில்லி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் மிளகு தூள் - 1 டீஸ்பூன் உப்பு - 1 1/2 டீஸ்பூன் தண்ணீர் - 1 கப் மாவிற்கு... மைதா - 1 1/2 கப் முட்டை - 1 (நன்கு அடித்துக் கொள்ளவும்) மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் தண்ணீர் - 2 கப் மிளகு தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கோட்டிங்கிற்கு... பிரட் தூள் - தேவையான அளவு எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு செய்முறை: முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ், இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட், மிளகு தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் அடுப்பில் வைத்து, சிக்கன் முக்கால்வாசி வெந்ததும், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், அடித்து வைத்துள்ள முட்டை மற்றும் தண்ணீர் ஊற்றி சற்று நீர்மமாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு தட்டில் பிரட் தூளை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டை எடுத்து, மாவில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதுப்போன்று அனைத்து சிக்கன் துண்டுகளையும் செய்தால், சுவையான கேஎஃப்சி சிக்கன் ரெடி!!! ![]() "தினம் ஒரு சுவை" |
Posted: 07 Aug 2014 06:44 AM PDT இரு கரம் கூப்பி கடவுளை வணங்குவதை விட பசி என்று ஒரு கரம் நீட்டும் மனிதனின் பசியை போக்கிப்பார் அவனுக்கு நீதான் கடவுள் ![]() "சில நியாயங்கள் - யதார்த்தங்கள்" - 3 |
Posted: 07 Aug 2014 06:30 AM PDT |
Posted: 07 Aug 2014 06:15 AM PDT ஒரு இன்ஸ்பெக்டர் தன் மகனிடம் ... "டேய் என்னடா இது? எனக்குப் பொறந்த புள்ளயா நீ ... எல்லா சப்ஜெக்டிலும் இவ்வளவு குறைவா மார்க் வாங்கி இருக்க ... எனக்குகேவலமா இருக்குடா" * * * * * * * * * * * * * * * * "இந்தாங்க 50 ரூபா வச்சுக்குங்க ... மேட்டர இத்தோட முடிங்க. அம்மாகிட்ட மட்டும் சொல்லிடாதீங்க" :P :P |
Posted: 07 Aug 2014 06:00 AM PDT காமராஜர் ஒரு முறை, தஞ்சை மாவட்டத்தில் இருந்த பழைமையான கோயில் ஒன்றைப் பார்வையிடச் சென்றார். சிதிலம் அடைந்திருந்தாலும் புராதனமான அந்தக் கோயிலின் கட்டுமானம் அவரை வியக்க வைத்தது. ஓர் இடத்தில் நின்றவர், "இந்தக் கோயிலைக் கட்டுனது யாரு?'' எனக் கேட்டார். உடன் வந்த அதிகாரிகளுக்கு அதுபற்றி தெரியவில்லை. பதில் சொல்லத் தெரியாமல் விழித்தனர். அங்கு மேலே இருந்த ஒரு டியூப் லைட்டைச் சுட்டிக் காட்டிய காமராஜர், "இவ்வளவு காலம் நிலைச்சு நிக்கிற இந்தக் கோயிலைக் கட்டியவர் யாருன்னு தெரியலே...ஆனா, ஒரு மாதம்கூட ஒழுங்கா எரியாத இந்த டியூப் லைட்ல உபயதாரர் யாருன்னு எவ்வளவு பெரிசா எழுதி வெச்சிருக்காங்கன்னு பாருங்க...'' என்றார். ## இதுவரை காமராஜர் கட்டிய எதிலும் அவர் சம்மந்தமான எதையும் குறிப்பிட சொன்னதே இல்லை... ""மாமனிதர்"" ![]() "காமராஜர் ஒரு சகாப்தம்" |
Posted: 07 Aug 2014 05:45 AM PDT |
Posted: 07 Aug 2014 05:30 AM PDT |
Posted: 07 Aug 2014 05:15 AM PDT கணவர் தெரிந்து கொள்ள வேண்டிய மனைவிக்கு பிடிக்காத விஷயங்கள்: * உடலில் சதை போடுவது பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. கொழுப்பு, சதையை குறைக்க ஒரு மருந்து கிடைத்தால் போதும். உடனே மிகவும் சந்தோஷமாகி விடுவார்கள். * உங்கள் அம்மா போல் யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனாலும், மனைவியின் சமையலை ஆகா, ஓகோ என பாராட்ட வேண்டும். * வாய் பேச முடியாத வேலைக்காரி போல மனைவி இருக்க வேண்டும் என ஆசைப்படக் கூடாது. சினிமாவில் தான் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை எதிர்பார்க்க முடியும். உண்மையான வாழ்க்கையில் மனைவியையும் சரி சமமாக நடத்த வேண்டும். * காலையில் வேலைக்குச் செல்லும் போது, கண்ணாடி எங்கே, சாவி எங்கே என்றெல்லாம் கேட்டு, தொந்தரவு செய்யக் கூடாது. அவர்கள் தேவையை அவர்களே பொறுப்பாக பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். * விடுமுறை நாட்களில் விரும்பியபடி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது. * எந்த ஒரு விஷயத்தையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக் கூடாது. * சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும். அலுவலம் விடுமுறை தினங்களில் கணவர் சமைக்க வேண்டும் என்று மனைவி விரும்புவார்கள். அன்று ஒரு நாள் மட்டுமாவது சமையலுக்கு விடுமுறை கிடைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். * "இந்த டிரஸ் உனக்கு நன்றாக இருக்கிறது…' என பாராட்ட வேண்டும். எந்த ஒரு விஷயத்திற்கும் கணவர் பாராட்ட வேண்டும் என்று விரும்புவார்கள். via Malaimalar |
Posted: 07 Aug 2014 05:00 AM PDT |
Posted: 07 Aug 2014 04:45 AM PDT மக்கள் சக்தியால் மீண்ட பயணி! ஆஸ்திரேலியா ரயில் நிலையத்தில் நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையில் பயணி ஒருவரின் கால் சிக்கியது. அவரை சக பயணிகளின் முயற்சியால் அவரை மீட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மக்கள் சக்தியால் முடியாது ஒன்றும் இல்லை என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது! video : http://www.foxnews.com/world/2014/08/06/australian-commuters-tip-train-car-to-help-trapped-man/ ![]() |
உண்மை Posted: 07 Aug 2014 04:30 AM PDT |
Posted: 07 Aug 2014 04:15 AM PDT பொது அறிவு 1) உலகில் மிகப்பெரிய விலங்கு எது? திமிங்கிலம் 2) உலகில் உயரமான விலங்கு எது? ஒட்டகச்சிவிங்கி 3) உலகில் மிக உயரமான மலை எது? இமயமலை 4) உலகிலேயே மிக நீளமான நதி எது? அமேசன்(6.750 கிலோமீற்றர்) 5) உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி யாது? நைல் நதி(6.690 கிலோ மீட்டர்) 6) உலகியே மிக ஆழமான ஆழி எது? மரியானாஆழி(11.522மீற்றர்) 7) உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது? லண்டன் உலகிலேயே பெரிய பாலைவனம் யாது? சஹாராப்பாலைவனம் 9) உலகிலேயே மிகச் சிறிய அரசு எது? வத்திக்கான் 10) உலகிலேயே பெரிய சமுத்திரம் எது? பசுபிக் சமுத்திரம் 11) உலகிலேயே பெரிய தீவு எது? கிறீன்லாந்து 12) உலகிலேயே பெரிய கண்டம் எது? ஆசியாக்கண்டம் 13) உலகிலேயே சிறிய கண்டம் எது? அவுஸ்ரேலியா 14) உலகிலேயே பெரிய நாடு எது? கனடா(ரஷ்யா சிதறிய பிறகு) 15) உலகிலேயே அதிகளவில் எரிமலைகள் உள்ள நாடு எது? இந்தோனேஷியா 16) உலகிலேயே அதிக மழை பெறும் இடம் யாது? சீராப்புஞ்சி 17) உலகிலேயே பெரிய நன்னீர் ஏரி யாது? சுப்பீரியர் ஏரி 18) சூரியனை புமி ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம் யாது? 365 நாடகள்.6 மணி 9நிமிடம். 9.54 செக்கன் 19) உலகிலேயே மிகவுயர்ந்த சிகரம் யாது? எவரெஸ்ட் 20) உலகிலேயே பெரிய எரிமலை யாது? லஸ்கார்(சிலி) 5.990 மீற்றர் 21) உலகிலேயே மிக நீளமான மலை எது? அந்தீஸ்மலை 22) உலகிலேயே மிகவும் பரந்த கடல் எது? தென்சீனக்கடல் 23) உலகிலேயே பெரிய ஏரி எது? கஸ்பியன் (ரஷ்யா-ஈரான்) 24) உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது? ஏஞ்சல்ஸ்(வெனிசுவெலா) 979மீற்றர் 25) உலகிலேயே அதிக மக்கள் தொகையுள்ள நாடு எது? சீனா 26) உலகிலேயே குறைந்த மக்கள் தொகையுள்ள நாடு எது? வத்திக்கான் 27) உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் எங்குள்ளது? காரக்புர் 28) உலகிலேயே மிக ஆழமான ஏரி எது? பைக்கால் ஏரி 29) உலகிலேயே மிக நீளமான குகை எது? மாமத் குகை 30) உலகில் உள்ள ஒரே ஒரு இந்து மத நாடு எது? நேபாளம் 31) உலகிலேயே மிகப்பெரிய பு எது? ரவல்சியாஆர்ணல்டி 32) உலகிலேயே மிக நீளமான வீதி அமைந்துள்ள இடம் எது? அலாஸ்கா 33) உலகிலேயே மிகப் பழைமையான தேசப்படத்தை வரைந்தவர் யார்? தொலமி 34) உலகிலேயே மிகப் பிரபலமான விஞ்ஞான சஞ்சிகை எது? நேச்சர் 35) ஆசியாவில் உள்ள கிறிஸ்தவ நாடு எது? பிலிப்பைன்ஸ் 36) உலகில் எரிமலை இல்லாத கண்டம் எது? அவுஸ்ரேலியா 37) உலகில் மிக உயரத்திலுள்ள ஏரி எது? டிடிக்காகா 38) உலகில் மிக உயரமான அணை எது? போல்டர் அணை 39) உலகிலேயே மிகப் பழைமையான கம்யுனிஸ நாடு எது? சீனா 40) உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு எது? இந்தியா 41) உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி எது? மாண்டரின்(சீனா) 42) உலகில் அதிகளவில் அச்சிடப்படும் நூல் எது? பைபிள் 43) கடல்மட்டத்திற்கு கீழே உள்ள நாடு எது? நெதர்லாந்து 44) உலகில் ஆறுகளே இல்லாத நாடு எது? சவுதி அரேபியா 45) உலகில் மிகப் பெரிய இஸ்லாமிய நாடு எது? இந்தோனோசியா 46)உலகில் மிக உயரமான அணை யாது? போல்டர் அணை ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் Relaxplzz |
Posted: 07 Aug 2014 04:00 AM PDT டிவிட்டரில் நெகிழ வைக்கும் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம்! நீங்கள் டிவிட்டர் பயனாளி என்றால் இந்த சிறுவனின் புகைப்படத்தை பார்த்து நெகிழ்ந்து போயிருக்கலாம். யுத்ததின் அழிவுக்கு மத்தியில் நம்பிக்கைக்கு அடையாளமாக கருதப்படும் இந்த புகைப்படம் இதுவரை டிவிட்டரில் பத்தாயிரம் முறைக்கு மேல் பகிரப்பட்டு, பார்த்தவர்கள் உள்ளங்களை எல்லாம் உருக்கிக் கொண்டிருக்கிறது. ஆறு வயது மதிக்கத்தக்க பாலஸ்தீன சிறுவன் குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட பிளாஸ்டிக் பையை மாட்டிக்கொண்டு, 'நானும் ஒரு பத்திரிகையாளர்' என்று போஸ் கொடுத்த புகைப்படம்தான் அது. போர்க்களத்தில் செய்தி சேகரித்து கொண்டிருந்த ஸ்வீடன் பத்திரிகையாளர் சோமர்ஸ்டிராம் சிறுவனின் தீரத்தை பார்த்து வியந்து அந்த காட்சியை கிளிக் செய்து டிவிட்டரில் வெளியிட்டிருக்கிறார். இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான மோதலால் பாலஸ்தீனத்தின் காஸா பகுதி போர்க்களமாகி இருக்கிறது. ராக்கெட் தாக்குதல், குண்டு வீச்சு ,பதில் தாக்குதல் என காஸா கலங்கிக்கொண்டிருக்கிறது. காஸா இடிபாடுகளுக்கு மத்தியில் அந்த ஆறு வயது சிறுவன் யாசன் , ஸ்வீடன் பத்திரிகையாளர் சோமர்ஸ்டிராம் தங்கியிருந்த ஓட்டலுக்கு வெளியே அவரை சந்தித்து பேசியிருக்கிறான். சிறுவர்களுக்கே உரிய அப்பாவித்தனத்துடனும், கண்களில் கனவுகளுடனும் , " நான் ஒரு பத்திரிகையாளன். இங்கு நடக்கும் செய்திகளை சேகரிக்கிறேன். இதுதான் எனது பத்திரிகையாளர் சட்டை " என்று அவன் கூறியிருக்கிறான். பழைய பிளாஸ்டிக் பை ஒன்றை மாட்டிக்கொண்டு பத்திரிகையாளர்போல அந்த சிறுவன் போஸ் கொடுத்ததை பார்த்த சோமர்ஸ்டிராம் உடனே தனது ஹெல்மெட்டை கழற்றி சிறுவன் தலையில் அணிவித்து அவனது பத்திரிகையாளர் தோற்றத்தை பூர்த்தி செய்து படம் எடுத்திருக்கிறார். " நான் பத்திரிகையாளர் ஆடை அணிந்திருக்கிறேன். பெரியவனாகி பத்திரிகையாளராக ஆவேன். புகைப்படங்கள் எடுப்பேன்' என்று அப்போது சிறுவன் கூறியிருக்கிறான். சோமர்ஸ்டிராம், இந்த சிறுவனின் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 'தானே தயாரித்த பிளாஸ்டிக் சட்டையுடன் பத்திரிகையாளர் போல போஸ்கொடுக்கும் காஸாவை சேர்ந்த சிறுவன்' எனும் வாசகத்துடன் இந்த படத்தை அவர் பகிர்ந்து கொண்டார். அவ்வளவுதான் டிவிட்டரில் அந்த படத்தை பார்த்தவர்கள் எல்லாம் நெகிழ்ந்து போய்விட்டனர். யுத்த பூமியிலும் சிறுவனின் நம்பிக்கையும் அவனது அப்பாவித்தமான தோற்றமும் பார்த்தவர்களை உருக வைத்தது. உடனே அதை ரிடீவிட் செய்தனர். இது வரை பத்தாயிரம் முறைக்கு மேல் இந்த படம் பகிர்ந்து கொள்ளப்படுள்ளது. புகைப்படத்தை பார்த்தவர்கள் பின்னூட்டம் மூலம் தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர். அழிவுக்கு மத்தியில் நம்பிக்கையின் அடையாளமாக இந்த படம் அமைந்திருப்பதாக பலரும் கருதுகின்றனர். டிவிட்டரில் பகிரப்பட்ட சிறுவனின் புகைப்படம்: https://twitter.com/ekmathia/status/494778921838452738/photo/1 - சைபர்சிம்மன் Thanks vikatan ![]() |
Posted: 07 Aug 2014 03:45 AM PDT |
Posted: 07 Aug 2014 03:30 AM PDT |
Posted: 07 Aug 2014 03:14 AM PDT ஒரு பொண்ணும் பையனும் லவ் பண்ணினார்கள்.இருவர் வீட்டிலும் கடும் எதிர்ப்பு. இறுதியில் ஒரு வழியாக பெண்ணின் அப்பா சமாதானமாகி காதலனைப் பார்க்க வேண்டும் என்றார். மகள் தன் காதலனை வீட்டிற்கு கூட்டி வந்தாள்.பொண்ணோட அப்பாவும் அவனும் பேச ஆரம்பித்தார்கள். "என்னப்பா உன் எதிர்காலத் திட்டம் என்ன?"பெண்ணின் அப்பா அவனிடம் கேட்டார் . பையன் யோசிக்காமல் பதில் சொன்னான். "அதெல்லாம் கடவுள் பாத்துப்பார் சார் . "சரிப்பா காலேஜ் முடிச்சதும் என்ன பண்ணலாம்னு இருக்க?" அடுத்த கேள்வியை கேட்டார். " அதெல்லாம் கடவுள் பாத்துப்பார் சார்" மீண்டும் அதே பதிலை சொன்னான். "கல்யாணம் பண்ணினா குடும்பம் நடத்த..., குழந்த குட்டி... பணத்துக்கு என்ன பண்ணுவ?" மூன்றாவது கேள்வியை கேட்டார். " அதெல்லாம் கடவுள் பாத்துப்பார் சார்". அதே பதிலை சொன்னான். பெண்ணின் அப்பா சொன்னார் "தம்பி உன்னை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. உன்னை மருமகனா ஏத்துக்க சம்மதம்" பொண்ணு ஒடிவந்து சந்தோஷாத்துடன் கேட்டாள், "பையன் எப்படிப்பா? அவளின் அப்பா பெருமையோடு சொன்னார் "ஓ தங்கமான பையன்! என்னை கடவுளா நினைக்கிறான்..!!" :P :P ![]() குசும்பு... 1 |
Posted: 07 Aug 2014 03:01 AM PDT உலகம் போற்றும் விஞ்ஞானியான ஐசக் நியுட்டன் பார்லிமெண்ட் மெம்பராக 1689-90 மற்றும் 1701-1702 ஆகிய வருடங்களில் இருந்தார். இந்தக் காலங்களில் அவர் பாராளுமன்ற சபையில் பேசியது என்ன தெரியுமா ? " ஜன்னல் கதவை மூடுங்கள் . காற்று பலமாக அடிப்பதால் என் விக் பறந்து விடும் போல் இருக்கிறது " என்று மட்டும்தான். இதைத் தவிர வேறு எதுவும் அவர் பேசியதில்லை. via சாத்தப்பன் நா. ![]() அரிய தகவல்கள் |
Posted: 07 Aug 2014 02:44 AM PDT இன்று வரைக்கும், எந்த விவசாயியும் வயல் வரப்பில் கூட செருப்பு அணிந்து பார்த்ததில்லை.. #தொழில்_பக்தி ![]() "சில நியாயங்கள் - யதார்த்தங்கள்" - 2 |
Posted: 07 Aug 2014 02:30 AM PDT |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment