Thursday, 7 August 2014

FB Posts by Araathu அராத்து

FB Posts by Araathu அராத்து

அம்பாஸிடர் இப்போது எத்தனையோ வெளிநாட்டு கார்கள் பல வண்ணங்களில் பள பள வென ஜொலிப்புடன் ஓடுகின்றன. அப்படி ஓடும் கார்களில் பல துடைக்காமல் , கழுவாமல் அழுக்காகவும் தூசி படர்ந்தும் ஓடுவதை காணலாம். பெரும்பாலும் வெள்ளை நிறத்திலேயே வெளி வந்து கொண்டிருந்த அம்பாஸிடர் கார்கள் அழுக்குடனும் தூசி படர்ந்தும் ஓடி நான் பார்த்ததேயில்லை. டாக்ஸி ஸ்டேண்டில் நின்று கொண்டிருக்கையிலும் சரி , சவாரி சென்று கொண்டிருக்கையிலும் சரி , எப்போதும் பள பளவெனவே காணப்படும் . அந்த அம்பாஸிடர் காரை வைத்திருக்கும் ஓனர் அதன்மீது ரெண்டாம் பொண்டாட்டி போல பாசம் வைத்திருப்பார் என்றால் , அதை ஓட்டும் டிரைவர் அதன் மீது சின்ன வீட்டை விட பாசம் காட்டுவார்.காலை எழுந்ததும் மல ஜலம் கழிக்கப் போகிறாரோ இல்லையோ முதலில் அம்பாஸிடர் காரை ஒரு பார்வை பார்த்து விட்டு , அதன் மேல் கிடக்கும் சில இலை தழைகளை எடுத்துப் போட்டு விட்டு , செல்லமாக ஒரு தட்டு தட்டி விட்டுத்தான் பல் தேய்க்கப்போவார். டீத்தண்ணி குடித்து விட்டு கொஞ்சம் தெம்பாக வந்து கார் சுத்தப்படுத்தும் வேலை ஆரம்பமாகும். இன்ச் பை இன்சாக காருக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கும். பின் பெயிண்டையே பெயர்த்து எடுத்து விடும் நோக்கத்துடன் துணியால் அழுந்த தேய்க்கும் படலம் நடக்கும்.சிலர் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு காருக்கு அடியில் எல்லாம் மல்லாக்க படுத்துக்கொண்டு தேய்த்துகொண்டு இருப்பார்கள்.காரின் கண்ணாடிகளில் விபூதியைப் போட்டு தேய்ப்பதை கண்டிருக்கிறேன். ஏங்க விபூதியைப் போட்டு தேய்க்கறீங்க என்றால் , நல்லா பளிச்சுன்னு ஆவும் தம்பி என்று குரல் வரும். ஒரு வழியாக காருக்கு தீர்த்தவாரி முடிந்து தேய்ப்புப் படலமும் முடிந்ததும் இடது பக்க இடுப்பில் கை ஊன்றியபடி 45 டிகிரியில் காரை பல முனைகளில் இருந்தும் பார்த்து திருப்தி வந்தபின் தான் தங்கள் வேலைகளை பார்க்கச் செல்வார்கள். கடைசி நேரத்தில் திருப்தி வராமல் எச்சில் தொட்டு லேசாக பாலீஷ் போடுபவர்களும் உண்டு. கார் அன்று வெளியே கிளம்புகிறதோ இல்லையோ , இந்த சுத்த நீராட்டல் தினமும் நடந்தேறும். கார் வெளியே கிளம்புகிறது என்று வைத்துக்கொள்வோம். சினிமா தியேட்டருக்கு சென்றால் , காரை பார்க் செய்து விட்டு டிரைவர் செய்யும் முதல் வேலை , வேறென்ன ? காரை மீண்டும் துடைப்பதுதான்.எப்போதெல்லாம் இடைவெளி கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அதை துடைத்துக்கொண்டேயிருப்பார்கள். அந்த அளவுக்கு அதன் மீது பாசம். இன்னொரு முக்கியமான விஷயம் அம்பாஸிடர் கார் டிரைவர்களில் பெரும்பாலானோர் முக்கால் மெக்கானிக்காக இருப்பார்கள். அவர்கள் காரின் சின்ன சின்ன பிரச்சனைகளை அவர்களே சரி செய்து கொள்வார்கள். மெக்கானிக் ஷெட்டில் காரை விட வேண்டி வரும்போதும் , நம்மைப்போல காரை விட்டு விட்டு எப்போ எடுக்க வரலாம் என கேட்க மாட்டார்கள். காரை திரும்ப எடுக்கும் வரை மெக்கானிக் ஷெட்டிலேதான் வாசம். மெக்கானிக் சர்வீஸ் செய்து முடிக்கும் வரையிலும் டிரைவர் கூடவேயிருப்பார். மாடு கன்னுக்குட்டி இருந்தால் அதை வைத்து ஒரு குடும்பமே பிழைத்துக்கொள்ளும் என்பார்கள்.அதைப்போல ஒரு அம்பாஸிடர் காரை வைத்து ஒட்டு மொத்த குடும்பமே பிழைத்துக்கொள்ளும். ஊர்களில் டிரைவர் வூடு எது என்றால் போதும் ? அம்பாஸிடர் கார் நின்றுகொண்டிருக்கும் வீட்டின் முன்னால் கொண்டு போய் நிறுத்தி விடுவார்கள். டிரைவர் வீட்டம்மா , டிரைவர் வீட்டய்யா , டிரைவர் வீட்டு பையன் , டிரைவர் வீட்டு ஃபிகர் என ஒரு கார் அந்த குடும்பத்தில் இருக்கும் பலருக்கும் அடைமொழியைப் பெற்றுத்தந்து ஒரு அடையாளத்தையும் உருவாக்கித்தரும். அந்த காரை ஓட்டும் டிரைவர்தான் அந்த ஊர்ப்பெண்களுக்கே ஹீரோ. அவருக்கு அல்ரெடி 2 பொண்டாட்டி 6 குழந்தைகள் இருக்கின்றன என்ற லௌகீக கணக்கெல்லாம் செல்லுபடியாகாது.அவர் அம்பாஸிடர் கார் டிரைவர் , அதனால் ஹீரோ , அவ்ளோதான். அவருடன் ஊரை விட்டு ஓடிப்போக பல பெண்கள் ரெடியாக இருப்பார்கள். டிரைவருக்கு காரை விட்டு ஓடிப்போக மனசில்லாததால் பல குடும்பங்களின் மானம் காப்பாற்றப்பட்டது. எங்கேனும் சில இடங்களில் சிவப்பு , நீலம் என கலர்களில் அம்பாசிடர் கார்களைப் பார்த்து இருந்தாலும் பெரும்பாலும் வெள்ளையும் சொள்ளையுமாகவே அம்பாஸிடர் திரிந்ததால் அதன் மேல் ஒரு மரியாதை உருவாகியிருக்கக்கூடும் என நினைக்கிறேன். பெரியவர்களுக்குத்தான் மரியாதை. சிறுவர்களுக்கு கவர்ச்சி. ஊருக்குள் அம்பாஸிடர் நுழைந்தால் போதும், சிறுவர்கள் கூட்டம் அந்த காரின் பின்னால் ஹோ வென கத்திக்கொண்டு ஓடுவார்கள். சிறுவர்கள் எனத் தவறாக எழுதி விட்டேன், சிறுமிகளும் சரிக்கு சமமாக பாவாடையை இழுத்து மேலே சொறிகிக்கொண்டு காரின் பின்னால் ஓடுவார்கள்.கார் நின்றதும் அதை சுற்றி சுற்றி வருவதும் , கொஞ்சம் தைரியம் இருக்கும் சிறுவர்கள் டிக்கி மேலும் பேனட் மீதும் ஏறி அமர்வதும் நடக்கும். டிரைவருக்கு வெறி கொண்டு இவர்களை துரத்துவதிலேயே நேரம் போகும். சில பாசக்கார டிரைவர்கள் சிறுசுகளை உள்ளே ஏற்றி ஒரு ரவுண்ட் அடிப்பதும் நடக்கும். என்ன ? கிட்டத்தட்ட 32 சிறுவர்கள் உள்ளே ஏறிக்கொள்வார்கள் ! தாசில்தார் முதற்கொண்டு பிரதமர் வரை பயணித்த பெருமை கொண்டது அம்பாஸிடர் கார். பின் இருக்கையில்தான் ஓனரோ விஐபியோ பெரும்பாலும் அமர்வார். சில துடுக்கான விஐபிக்கள் முன் இருக்கையிலேயே அமர்வதும் உண்டு.இவர்களுக்காக ஒரு குட்டி ஃபேன் சைடில் தொங்கிக்கொண்டு இருக்கும். அந்த ஃபேன் கர்ம சிரத்தையாக காத்தாடி போல சுத்திக்கொண்டிருக்கும். பார்ப்பதற்கு பொழுது போக்காக இருக்கும். என்னது காத்தா ? ஜன்னல் வழியே இயற்கையாக வரும் காற்றையே இந்த ஃபேன் கொஞ்சம் தடுத்து விடும். அம்பாஸிடரின் கடைசி காலங்களில் ஏ/சி என சிவப்பு கலரில் கொட்டை எழுத்துக்களில் போட்டிருக்கும். நோ ஹேண்ட் சிகனல் என்றும் எழுதியிருக்கும். ஏசி என்று போட்டிருந்தாலும் அம்பாஸிடரில் ஏ/சி ஓடி நான் பார்த்ததேயில்லை. அம்பாஸிடர் டிரைவர்கள் அவ்வளவு சிக்கனவாதிகள். பவர் பிரேக் , பவர் ஸ்டியரிங்க் என்றெல்லாம் டிக்கியில் எழுதி அட்ராசிட்டி செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் வண்டியில் உண்மையில் இருந்ததென்னவோ பவர் ஹாரன் மட்டுமே.எந்த ஆட்டோ மேகசின் என்று நியாபகம் இல்லை, உலகின் மிக மோசமான கார் என்ற அவார்டை அம்பாசிடருக்கு வழங்கியிருந்தது. இந்த கார் டிசைனின் சிறப்பம்சம் என்னவெனில் வீட்டினுள் அமர்ந்து தெருவில் போகும் அம்பாசிடர் காரை சைட் வியூவில் பார்த்தால் கார் முன்னால் செல்கிறதா ? ரிவர்ஸில் செல்கிறதா என்றே கண்டுபிடிக்க முடியாது. எந்த புத்திசாலியின் கிரியேட்டிவிட்டி என்று தெரியவில்லை. இந்த அம்பாஸிடர் கார் டாக்ஸியாக ஓட்டும்போது கருப்பு கலர் அடிக்க வேண்டும் என்ற விதி அமல்படுத்தப்பட்டு , பார்க்க அமரர் ஊர்தி போன்றே இருக்கிறது.வெளிநாடுகளில் எல்லாம் டொயோட்டோ டாக்ஸிக்கள், ஃபோர்டு டாக்ஸிக்கள் ராயலாக ஓடிக்கொண்டு இருக்கையில் , நம் நாட்டில் இன்னும் அமரர் ஊர்தி டாக்ஸிக்கள்தான். சென்னை செண்ட்ரல் வரலாற்றிலும் , சென்னை ஏர்போர்ட் வரலாற்றிலும் தவிர்க்க முடியாத இடம் அம்பாஸிடருக்கு உண்டு. இவ்வளவு நீண்ட வரலாறும் , பாரம்பரியமும், மக்களின் அன்பும் பெற்று மக்களோடு ஒன்றாகவே கலந்து விட்ட அம்பாஸிடர் இனி வெளிவராது. தொழிற்சாலை மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கால மாற்றத்திற்கு ஏற்ப மாறாதது மட்டுமே ஒரே காரணமாக இருக்க முடியும்.சென்னையில் கால் டாக்சி பிரபலமான போது சென்னை கால் டாக்ஸி என்ற நிறுவனம் அம்பாஸிடர் கார்களையே பயன் படுத்தியது குறிப்பிடத்தக்கது. இப்போது பல நிறுவனங்கள் குறைந்த விலையில் பலதரப்பட்ட மாடல் கார்களை ,பலப்பல வசதிகளுடன் அறிமுகப்படுத்திக்கொண்ட்டிருக்கையில் , ஒரே மாடல் , ஒரே டிசைன் என எவ்வளவு நாளைக்குத்தான் தாக்குப்பிடிக்க முடியும் ? அம்பாஸிடர் நிறுவனத்தில் ரிசர்ச் & டெவலப்மெண்ட் டிபார்ட்மெண்ட் இருந்திருக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது இப்போது. அந்த அளவுக்கு ஒரு மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து கார்களை வெளியிட்டுக்கொண்டு இருந்தார்கள். காலத்திற்கு ஏற்ப நவீன வடிவமைப்புடன் பலப்பல வசதிகளையும் சொகுசுகளையும் சேர்த்துக்கொண்டே வந்திருந்தால் இன்னும் அம்பாஸிடர் ஓடிக்கொண்டே இருந்திருக்கும். இப்படி பிரேக் டவுன் ஆகி நின்றிருக்க வேண்டியிருந்திருக்காது. தன்னுடைய பின் சீட்டில் பல்லாயிரக்கணக்கான பிரசவங்களையும் , இறப்புக்களையும் பார்த்த அம்பாஸிடர் தன் பிரசவத்தை தானே நிறுத்திக்கொண்டது.அம்பாஸிடரை தஙக்ளின் வாழ்கையில் ஒரு கேரக்டராகவே நினைத்தவர்களுக்கு மனம் வலிக்கத்தான் செய்யும்.கவலையை விடுங்கள் , அம்பாஸிடரை க்ளாஸிக் கலெக்‌ஷனில் சேர்த்து விடுங்கள். மோட்டார் விகடனில் வெளிவந்தது. நன்றி : மோட்டார் விகடன்.

Posted: 06 Aug 2014 08:44 PM PDT

பின் நவீனத்துவ கூறு , மெட்டா ஃபிக்‌ஷன் , இன்னும் என்னென்னவோ இருக்கின்றன உலகில் . ஏதேனும் ஒரு கூறு ஒரு படத்தில் இருப்பதாலேயே அந்தப் படம் சிறந்த படம் ஆகிவிடுமா ? அந்த ஏதேனும் ஒரு கூறை (!) இயக்குநர் எப்படி சிறப்பாக உபயோகித்து இருக்கிறார் ? எந்த விதமான கண்டெண்ட்டை தேர்ந்தெடுத்து எப்படி கையாண்டு இருக்கிறார் என்பதெல்லாம் தேவையேயில்லையா ? சுறா படத்தில் பின் நவீனத்துவமும் மெட்டா ஃபிக்‌ஷனும் பின்னிப் பிணைந்தால் எப்படி இருக்கும் :-)

Posted: 06 Aug 2014 06:44 AM PDT

ஜிகிர்தண்டா சமீபத்தில் வந்த யாமிருக்க பயமே காமடிப்படம் என்ற கேட்டகிரியில் வந்தது. லாஜிக் ஜிக் க் எதுவும் பார்க்காமல் பார்த்து ரசித்து சிரித்தார்கள். ஜிகிர்தண்டா மியூசிக்கல் கேங்க்ஸ்டர் ஃபிலிம் என்ற அடைமொழியோடு வந்திருப்பதால் காமடிப்படமா , சீரியஸ் படமா , ஏதோ உலகத்தரமான புது முயற்சியா ? நம்ம சிற்றறிவுக்குத்தான் எட்டலையான்னு கொழப்பம். கேங்க்ஸ்டர் படம் நாயகன் , தளபதி , புதுப்பேட்டை போன்ற படங்கள் சினிமாத்தனமாகவே எடுக்கப்பட்டு இருந்தாலும் படத்தில் நம்மால் ஒன்ற முடியும்.சினிமாத்தனத்தையும் தாண்டி ஒரு நம்பகத்தன்மை இருக்கும்படி நாம் ஏமாற்றப்பட்டிருப்போம். ஜிகிர் தண்டாவில் படத்தின் ஒன்லைன் , ரவுடி சினிமாவுல ஹீரோவா நடிக்க ஆசைப்படறான், தயாரிப்பாளர் , இயக்குநரை மிரட்டி பட ஷூட்டிங்கும் எடுத்து படத்தை ரிலீஸ் பண்றாங்க என்பதே படத்தை நம்மிடம் அந்நியப்படுத்தி விடுவது போல எனக்குத் தோன்றுகிறது. நிறைய சின்னச் சின்ன காட்சிகள் மெனக்கெட்டு ரசித்து எடுக்கப்பட்டிருந்தாலும் இந்த அந்நியமான ஒன்லைன் படத்தின் நம்பகத் தன்மையை குலைத்து விடுகிறது. சீரியசான தரமான படம் என்றால் , உண்மைக்கு அருகில் இருக்க வேண்டும் அல்லது நம்பவைக்கவாவது வேண்டும். இந்த படத்தில் ஆத்தண்டிசிட்டியே இல்லை. உண்மைக்கு வெகு தூரம் விலகி நிற்கிறது. இது சும்மா கமர்ஷியல் காமடிப்பம்ப்பா என்று சொன்னால் , ஜகா வாங்கிக்கொள்ள வேண்டியதுதான். காமடி வந்தாக வேண்டும் என்று பல இடங்களில் காமடி மெனக்கெட்டு மெனக்கெட்டு சொருகி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் காமடி பார்ட் நன்றாகவே இருக்கிறது. படத்தின் கலர் என்ன ? நோக்கம் என்ன என்பதுதான் சிக்கல். இயக்குநருக்கு புது முயற்சியும் செய்ய வேண்டும் , காமடியாகவும் இருக்க வேண்டும் , அதே நேரத்தில் காமடிப்படம்னு சொல்லிடக்கூடாது , ஒரு ஸ்டேர்ண்டடான படமா இருக்கணும் என்று ஊசாலாட்டம் இருந்திருக்குமோ எனத் தோன்றுகிறது.நாயகனில் மணிரத்னத்தின் விஸ்வரூபம் போலவோ , புதுப்பேட்டையில் செல்வராகவனின் விஸ்வரூபம் போலவோ , இந்தப்படத்தில் கார்த்திக் சுப்புவின் விஸ்வரூபம் ஏதும் இல்லை.புதுப்பேட்டை நிறைய இடங்களில் ஜிகிர் தண்டாவுக்கு உதவியிருக்கிறது. (விஜய் சேதுபதியின் போர்ஷன், ....எட்டெச்ட்ரா) பல காட்சிகள் புதிதாக தோன்றினாலும் , பெரும்பாலான காட்சிகள், அதே க்ளீஷே காட்சிகள்தான், ஆனால் இயக்குநர் அதை கொஞ்சம் கூர் தீட்டி , பாலீஷ் போட்டு , புது ஃபார்மேட்டுக்கு மாத்தியிருக்கிறார். இசை நிச்சயம் பாரட்டப்படவேண்டிய ஏரியா. மொக்கை பாட்டு போட்டு சாவடிக்காம பிட்டு பிட்டா ரகளையா போட்டு பட்டையை கிளப்பியிருக்கும் சந்தோஷ் தமிழ் சினிமாவின் இசையின் போக்கை மாற்றி அமைக்க வாழ்த்துக்கள். நடிப்புப் பயிற்சி சொல்லிக்கொடுக்க படத்தில் ஒரு கேரக்டர் வருகிறார். வில்லன் சிம்ஹாவுக்கு நடிக்க சொல்லிக்கொடுக்கிறார். சிம்ஹா நடிப்பே வராதது போல அருமையாக நடித்திருக்கிறார். உண்மையில் சித்தார்த்துக்கு கார்த்திக் சுப்பு அப்படி ஒரு பயிற்சி ஏற்பாடு செய்திருக்கலாம். ஆரம்ப காட்சிகளில் பள்ளி மாணவன் மேடையில் நடிப்பது போல இருக்கிறது. சில இடங்களில் கழுத்தை வெடுக் வெடுக் என வெட்டுக்கிளி போல ஏனோ திருப்புகிறார். பல படங்களில் பார்த்து சலித்த டெம்ப்ளேட் ஷாட்கள் , டெம்ப்ளேட் எக்ஸ்ப்ரஷன்ஸ் . இதே க்ளோஸ் அப் சிரிப்பை இதே பாணியில் இன்னும் எத்தனை படத்தில் சிரித்து டார்ச்சர் செய்வீர்கள் சித்தார்த் ? இவருக்கு செம டஃப் கொடுத்து போட்டி போடும் இன்னொரு ஆள் லட்சுமி மேனன். விஜய் சேதுபதி கடைசி காட்சியில் விஜய் சேதுபதியாகவே வருகிறார்.அப்போது தொடரும் காட்சிகளில் நடிக்க விஜய் சேதுபதி எப்படி ஒத்துக்கொண்டார் என்றும் தெரியவில்லை. சித்த்தார்த்தே நடிக்க எப்படி ஒத்துக்கொண்டார் என்று தெரியவில்லை. படத்தில் சிம்ஹாவுக்கு தெரியாமல் எடுத்தது போல நிஜத்திலும் விஜய் சேதுபதியையும் சித்தார்த்தையும் ஏமாற்றி விட்டார் போல கார்த்திக் சுப்பு ! படத்தைப் பாத்துட்டு அட்டாக் பாண்டி கார்த்திக் சுப்பு வீட்டு கதவை தட்டினா ஜாலியா இருக்கும் :-) விமர்சனங்களுக்கு விமர்சனம் :- படம் பார்க்கலாமா? நிச்சயம் பார்க்கலாம் , நல்லா சிரிச்சிட்டு வரலாம். அதை விட்டுட்டு திரைக்கதையில் புது முயற்சி , கொரியாப்பட பாணியில் உணர்வுகளை மய்யமா வச்சி எடுத்த படம், இது இன்றய இளைஞர்களுக்கான படம், தமிழ்ப்பட உலகில் புதுப்பாய்ச்சல் , படம் வேற ஸ்டேண்டேர்டில் இருக்கு , உலகத்தரம் அப்பிடி இப்பிடின்லாம் சொன்னா ...........சொல்லி கார்த்திக் சுப்புராஜை ஏத்தி விட்டு இயக்குநர் அகத்தியன் போல ஆக்கிடாதீங்க!

Posted: 06 Aug 2014 03:16 AM PDT

0 comments:

Post a Comment