Relax Please: FB page daily Posts |
- நிழல் தேடாதே உன் நிழலில் ஒரு ஊரையே நிற்கவை ! முட்களில் மோதிக் கிழியாதவனுக்குப்...
- பதில் தெரிந்தவர்கள் சொல்லுங்க பார்ப்போம்
- இரண்டு படங்களுக்கும் இடையில் 60 வருட இடைவெளி உள்ளது, ஆனால் அன்புக்கு இடையில் இல்...
- :)
- புதிதாக மணமான‌ கணவன் -மனைவி இருவரும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டனர். ஒருவர் மற்றவர...
- உண்மையான # நட்பு !!. கார்கில் போரின்போது இரண்டு நண்பர்கள் களத்தில் இருந்தனர். எ...
- இப்படியே இருந்திருக்கலாம்.... இப்படியே இருந்திருக்கலாம் அன்னை மடியில் தந்தை அரவ...
- :)
- அவ்வளவு அறிவு கூர்மை இல்லாத ஒருவன் காவல் துறை அதிகாரி வேலைக்கான நேர்முகத் தேர்வி...
- புரூக்ளின் ப்ரிட்ஜ் - இது ஒரு உண்மை நிகழ்வு... நியு யார்க் நகரில் உள்ள புரூக்ளி...
- :)
- வழக்காடு மன்றத்தில் ஒரு வழக்கு நீதிபதி முன் வந்தது. ஒரு மூதாட்டி, சாட்சி கூண்டுக...
- இப்படித்தான் நாம ;-)
- # படித்ததில் பிடித்தது # இவர் என் கம்பெனி அருகே தினமும் கம்மங்கூழ் வியாபாரம் செ...
- :)
- அப்பாவும், மகளும் உணவு மேஜையில் உட்கார்ந்திருந்தார்கள். அம்மா சுட்டு வந்த தோசை...
- உலகின் மிகச் சிறிய உருவம் கொண்ட எகிப்திய ஆமைகள்
- தேனின் பலன் உங்களுக்குத் தெரியுமா ?? பஞ்சாப் லூதியானா பண்ணை பல்கலைக் கழகத்தின்...
- :)
- சுஜாதாவின் பத்து கட்டளைகள்… (கண்டிப்பாகப் படிக்கவும் !!!) 1. ஒன்றின் மேல் நம்பி...
- சீனாவில் உள்ள இரு மலைகளுக்கிடையிலான பாதை
- எளிமையான வார்த்தைகளே போதுமானது., ஒருவரின் மனசை கொள்ளை கொள்ள . குழந்தையின் துளிர...
- :)
- நீங்கள் ஏதேனும் சூழ்நிலையில் கைது செய்யப்பட்டால் அந்த சமயம் உங்கள் உரிமை என்ன..?...
- நண்பர்களே இந்தக் கணக்கு புதிரின் சரியான விடையை கண்டு பிடியுங்கள்..
- வீர மண்ணில்., வீரம் ஒவ்வொரு உயிரணுவிலும் விதைக்கப்படுகிறது.. - ராக்கி ரேவ்
- :)
- எறும்பும் இறகும். ஒரு நாள் காலை ஒரு சிறிய எறும்பு ஒரு இறகை தூக்க முடியாமல் தூக்...
- இவர் யாரென்று எத்தனை பேருக்கு தெரியும்.? சரி, தெரிந்துகொள்வதற்கு முன், இவருக்கு...
- போதை தெளிய அளவுக்கு அதிகமாக மது குடித்து போதையில் இருப்பவர்களுக்கு மாதுளம்சாறு...
Posted: 02 Aug 2014 09:10 AM PDT நிழல் தேடாதே உன் நிழலில் ஒரு ஊரையே நிற்கவை ! முட்களில் மோதிக் கிழியாதவனுக்குப் பூக்களைத் தடவும் தகுதி கிடையாது ! மகிழ்ச்சியாய்ச் சிரி கவலைகளைப் பிய்த்துக் காற்று மண்டலத்திற்கு அப்பால் வீசு ! எதைக் கண்டும் பிரமிக்காதே பிரமிப்பைப்போல் ஒரு பின்னடைவே கிடையாது ! தோல்வி என்பது சிந்திக்கத் தெரியாதவனின் சித்தாந்தம் ! நிலாவைத் தொட்டது மூன்று தோல்விகளுக்குப் பிறகு தான் ! நீ எழுந்தால் ஒரு எட்டு வந்து பார்க்காதவன் நீ விழுந்தால் விழுந்து விழுந்து விசாரிப்பான் கவனி ! இளைஞனே இரைப்பையையும் நம்பிக்கையையும் காலியாக விடாதே ! நடக்குமா என்ற கேள்வி-உன் நம்பிக்கைக் கோபுரத்தின் அத்திவாரத்தில் விழுந்த கடப்பாறை ! உலகை உலுக்கி உலுக்கி எடுத்தவனெல்லாம் துவக்கத்தில் ஒரு தூசுப்படலமாக இருந்தவன்தான் ! (y) (y) # படித்ததில் பிடித்தது # |
Posted: 02 Aug 2014 09:00 AM PDT |
Posted: 02 Aug 2014 08:45 AM PDT |
Posted: 02 Aug 2014 08:30 AM PDT |
Posted: 02 Aug 2014 08:18 AM PDT புதிதாக மணமான கணவன் -மனைவி இருவரும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டனர். ஒருவர் மற்றவருடைய அலமாரியை திறந்து பார்ப்பதில்லை என்று. 30 ஆண்டுகள் உருண்டோடின.. ஒருநாள் ... மனைவி தன்னுடைய அலமாரியை சுத்தம் செய்யும் போது ஒரு மூலையில் 3 புளியங்கொட்டைகளும், சில்லறையாக 500 ரூபாய்க்கு நோட்டுகளும் இருந்தன. ஆச்சர்யம் அடைந்த மனைவி தன் கணவனிடம் இது குறித்து கேட்டாள். கணவன் சொன்னான்.. " அன்பே என்னை மன்னித்துவிடு.. ஒவ்வொருமுறை திருட்டுத்தனமாக உன் அலமாரியைத் திறக்கும்போதும் ஒரு புளியங்கொட்டையை போட்டு வைப்பேன்.." " பரவாயில்லை உயிரே..! 30 வருடங்களில் மூன்றே மூன்று புளியங்கொட்டைகள் தானே.. அது என்ன பத்தும் ஐம்பதுமாக ரூபாய் நோட்டுகள்..?" " புளியங்கொட்டைகள் சேர சேர கடையில் விற்று காசாக்கிவிடுவேன் கண்ணே..!" :P :P ![]() குசும்பு... 3 |
Posted: 02 Aug 2014 08:00 AM PDT உண்மையான # நட்பு !!. கார்கில் போரின்போது இரண்டு நண்பர்கள் களத்தில் இருந்தனர். எதிரிகள் சுற்றி வளைத்து சுடும்போது ஒருவன் மட்டும் குண்டடி பட்டு விழுந்து கிடந்தான். நான் என் நண்பனை எப்படியாவது தூக்கி வர எனக்கு உத்தரவு கொடுங்கள் கமேண்டர் என்றான். மறைந்து இருந்து தாக்குவது தான் சரியான வழி ,நீ அங்கு போவதால் உன் உயிர்க்கு தான் ஆபத்து என்றார் கமேண்டர். நீ போவது என்றால் போ, ஆனால் நீ போவதால் எதுவும் நடந்துவிட போவதில்லை என்று கமெண்டர் சொன்னார். அதையும் மீறி தன் நண்பனை காப்பாற்ற ஓடினான்,அவனை தோளில் தூக்கி கொண்டு வரும்போது எதிரிகள்சுட்டனர். இவனுக்கும் அடிப்பட்டது, அதையும் மீறி அவனைதூக்கி கொண்டு வந்தான் கமேண்டர் அவனை பரிசோதித்து பார்த்தார் அவன் நண்பன் இறந்து போய் இருந்தான். நான் அப்போழுதே சொன்னேன் நீ அவனை காப்பாற்றப்போவதால் எந்த உபயோகமும் இல்லை ,இப்போது பார் நீயும் அடிப்பட்டு கிடக்கிறாய் என்றார் கமேண்டர். நான் போனது தான் சார் சரி என்றான். என்ன சொல்கிறாய் உன் நண்பன் இறந்து கிடந்தான் நீ சொல்வது எப்படி சரியாகும் என்று கேட்டார் கமேண்டர். நான் அங்கு போகும்போது என் நண்பன் உயிருடன் தான் சார் இருந்தான்."என்னை காப்பாற்ற நீ வருவாய் என்று எனக்கு தெரியும் நண்பா" என்று சொல்லிவிட்டு தான் சார் இறந்தான் .அந்த ஒரு வார்த்தை எனக்கு போதும் சார் இந்த காயம் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை… :) #உண்மையான நட்புக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு (y) ![]() # படித்ததில் பிடித்தது # - 1 |
Posted: 02 Aug 2014 07:45 AM PDT இப்படியே இருந்திருக்கலாம்.... இப்படியே இருந்திருக்கலாம் அன்னை மடியில் தந்தை அரவணைப்பில் பால் வண்ணம் மாறா பச்சை குழந்தையாக.. பசிக்கும் முன் உணவு நினைக்கும் முன் உறக்கம் தூக்கி கொஞ்ச துடிக்கும் 1000 கரங்கள் கேட்காமல் கிடைக்கும் முத்த மழை வாய் உதிர்க்கும் வார்த்தைக்காக வரம் கேட்கும் உறவுகள் வாடா மலராய் இதழோடு ஒட்டிய புன்னகை அழுகை கூட இசையாகிய நாட்கள் இப்படியே இருந்திருக்கலாம் இன்றும்…. - Kanimozhi Maruthalingam. ![]() |
Posted: 02 Aug 2014 07:30 AM PDT |
Posted: 02 Aug 2014 07:15 AM PDT அவ்வளவு அறிவு கூர்மை இல்லாத ஒருவன் காவல் துறை அதிகாரி வேலைக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டான். அவனிடம் "காந்தியைச் சுட்டுக் கொன்றது யார்?" என்று கேள்வி கேட்கப் பட்டது. சிறிது நேரம் அமைதியாக இருந்த அவனைப் பார்த்து "நீங்கள் போகலாம்" என்றனர். வெளியே வந்து அவனைப் பார்த்த நண்பன் ஒருவன் "என்ன வேலை கிடைத்து விட்டதா?" என்று கேட்டான். அதற்கு அவன் "நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஒரு கொலை வழக்கில் குற்றவாளியைக் கண்டுபிடிப்பது பற்றி என்னிடம் பேசினார்கள்" என்றான். :P :P |
Posted: 02 Aug 2014 06:45 AM PDT புரூக்ளின் ப்ரிட்ஜ் - இது ஒரு உண்மை நிகழ்வு... நியு யார்க் நகரில் உள்ள புரூக்ளின் ப்ரிட்ஜ் கட்டிய ஜான் ரூப்ளிங் என்ற இஞ்சினியரின் வாழ்கையில் நடந்த உண்மை சம்பவம். 1883 ஆம் ஆண்டு ஜான் ரூப்ளிங் என்ற இஞ்சினியர் கிழக்கு நதியின் மேல் மிக நீளமான தொங்கு பாலம் கட்ட முடிவெடுத்தார்.பாலம் கட்டுவதில் கைத்தேர்ந்த பல இஞ்சினியர்கள் இது முடியாத காரியம் இதை கை விடுவதுதான் சரியான முடிவு என்றனர்.இது போன்று தொங்குபாலம் இதற்கு முன் யாரும் கட்டியது இல்லை இனி கட்டவும் முடியாது என்றனர். ரூப்ளிங் தன்னால் இதை கண்டிப்பாக கட்ட முடியும் என்று நம்பினார்.முழு நேரமும் இதே சிந்தனையுடன் இருந்தார்.இதை யாரிடமாவது சொல்லி புரிய வைக்க வேண்டும் என்று விரும்பினார்.பிறகு தன் மகனுடன் இதைப்பற்றி சொல்ல நினைத்தார்.அவருடைய மகன் வாஷிங்டன் ஒரு இளம் வயது இஞ்சினியர். தந்தையும் மகனும் இணைந்து எப்படி இந்த பாலத்தை கட்டுவது என்று ஆராய்ச்சி பண்ண ஆரம்பித்தார்கள் .என்னவெல்லாம் இடர்கள் வரும் எப்படி எல்லாம் அதை எதிர்த்து செயல் படுத்த வேண்டும் அன்று ஆலோசித்தார்கள். இரண்டு பேரும் சேர்ந்து பாலம் கட்டுவதற்கான வேலையை ஆரம்பித்தார்கள்.சில மாதங்கள் வேலை நன்றாக நடந்தது,பிறகு ஒரு நாள் வேலை செய்யும் இடத்தில் ஒரு விபத்து நடந்தது.அந்த விபத்தில் ஜான் ரூப்ளிங் இறந்து விட்டார்,வாஷிங்டன்னுக்கு தலையில் அடிப்பட்டு மூளைக்கு பாதிப்பு ஏற்பட்டது. அவரால் நடக்கவும் ,பேசவும் முடியாத நிலை ஏற்பட்டது. எல்லா இஞ்சினியர்களும் நாங்கள் அப்பவே சொன்னோம் இது தேவை இல்லாத வேலை பாலம் கட்டுவது முடியாத காரியம் என்று ஏளனமாக பேச ஆரம்பித்தனர். இந்த பாலம் கட்டுவதை தெரிந்தவர் இரண்டு பேர் மட்டுமே.ஒருவர் இறந்து விட்டார் இன்னொருவர் கை கால் அசைவு இல்லாமல் இருக்கிறார்.வாஷிங்டன் மருத்துவமனையில் படுத்திருந்தாலும் அவர் மனம் முழுக்க அந்த பாலத்தை கட்டுவதை பற்றியே யோசித்து கொண்டு இருந்தது. ஒரு நாள் அவர் மருத்துவமனையில் இருக்கும்போது மெல்லிய காற்று வீசியது ஜன்னல் திரை விலகியதும் அவரால் வானத்தையும் மரங்களையும் பார்க்க முடிந்தது.இயற்கை என்னவோ நம்மிடம் சொல்ல நினைக்கிறது என்று யோசித்தார் பிறகு மெல்லமாக ஒரு விரலை மட்டும் அசைத்து பார்த்தார் விரல் அசைந்தது. விரல் அசைவு மூலம் தன் மனைவியிடம் தன் ஆசையை கூறினார்,மீண்டும் இஞ்சினியர்களை வரவழைத்து வேலையை ஆரம்பிக்க சொன்னார்.விரல் அசைவு உரையாடல் மூலமே தன் மனைவியின் உள்ளங்கையில் தடவி அவளுக்கு புரிய வைப்பார்.மனைவி இஞ்சினியர்களுக்கு கட்டளை பிறப்பித்து கொண்டு இருப்பார்.விரல் அசைவு மூலமாகவே 11 ஆண்டுகள் தன் மனைவி உள்ளங்கையில் தடவி இந்த பாலத்தை கட்டி முடித்தார். இன்று கம்பீரமாக நிற்கும் புரூக்ளின் பிரிட்ஜ் கணவன் மற்றும் மனைவி இருவரின் உள்ளங்கை உரையாடல் மூலமே கட்டப்பட்டது. வாஷிங்டன் உடல் ஊணப்பட்டு இருந்தாலும் அவர் உள்ளம் ஊணம் ஆகாததால் அவரால் சாதிக்க முடிந்தது. "முடியும் என்று நினைத்தால் முடியாதது என்று எதுவும் இல்லை" via Ilayaraja Dentist ![]() |
Posted: 02 Aug 2014 06:30 AM PDT |
Posted: 02 Aug 2014 06:15 AM PDT வழக்காடு மன்றத்தில் ஒரு வழக்கு நீதிபதி முன் வந்தது. ஒரு மூதாட்டி, சாட்சி கூண்டுக்கு அழைக்கப்பட்டார். வழக்கறிஞர், மூதாட்டியை நோக்கி, "திருமதி.மரகதம், என்னை உங்களுக்குத் தெரியும் தானே?" மூதாட்டி, "உன்னைத் தெரியாமல் என்ன, பிரகாஷ் ? சின்ன வயதிலிருந்தே உன்னைத் எனக்கு தெரியும், ஆனால் சிலாக்கியமாக ஒன்றுமில்லை! நீ பொய் சொல்கிறாய், மனைவியை ஏமாற்றுகிறாய், பிறரை உபயோகப்படுத்திக் கொண்ட பின் அவர்களை தூற்றுகிறாய், உன்னை பெரிய மேதாவி என்று நீயே நினைத்துக் கொண்டிருக்கிறாய்! ஆகவே, உன்னை எனக்கு மிக நன்றாகவேத் தெரியும்!" என்றார். மூதாட்டியின் பதிலில் வழக்கறிஞர் ஆடிப்போய் விட்டார்! எப்படி வழக்கைத் தொடர்வது என்று புரியாத குழப்பத்தில், அவர் எதிர்தரப்பு வக்கீலை சுட்டிக் காட்டி, "திருமதி.மரகதம், இவரை உங்களுக்குத் தெரியுமா?" என்று வினவினார்! அதற்கு அம்மூதாட்டி,"ஏன், ரமேஷை பல வருடங்களாக எனக்குத் தெரியும்! அவன் ஒரு சோம்பேறி, நல்லது சொன்னால் கேட்க மாட்டான், நிறைய குடிப்பான். அவனுக்கு யாரிடமும் நல்லுறவு கிடையாது. சட்டத்தை பற்றி ஒரு எழவும் தெரியாமலேயே வக்கீலாகி விட்டவன்! அவனுக்கு மூன்று பெண்களிடம் தொடர்பு இருக்கிறது. அதில் ஒருத்தி உன் மனைவி!?!" என்று கூறியதில் ரமேஷ் என்ற அந்த எதிர்தரப்பு வக்கீல் மூர்ச்சையாகும் நிலைக்கு போய் விட்டார்! அவசர அவசரமாக, இரண்டு வழக்கறிஞர்களையும் தன்னருகே வருமாறு அழைத்த நீதிபதி, மெல்லிய குரலில், "உங்கள் இருவரில் எந்த ராஸ்கலாவது அந்த கிழவியிடம் 'என்னைத் தெரியுமா' என்று கேட்டால் நிச்சயம் அந்த ஆளை தூக்கு மேடைக்கே அனுப்பி விடுவேன்!" என்றார். :P :P |
Posted: 02 Aug 2014 06:00 AM PDT |
Posted: 02 Aug 2014 05:45 AM PDT # படித்ததில் பிடித்தது # இவர் என் கம்பெனி அருகே தினமும் கம்மங்கூழ் வியாபாரம் செய்து வருகிறார் விலை அதிகம் இல்லை 5 ரூபாய் தான்.. அவரிடம் இன்று பேச்சுக்கொடூத்தபோது ஏனம்மா ஊரே பத்துரூபாய்க்கு விற்கிறது நீங்கள் ஏன் விலை ஏற்றவில்லை அதற்க்கு அவர் சொன்ன பதில் என் வாழ்க்கையையே புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்று விட்டது.. இவர் சரியாக ஒரு நாளைக்கு ...பத்து கிலோ மீட்டர் தன் சைக்கிளை தள்ளி சென்று வியாபாரம் செய்கிறார் ,மேலும் கம்மங்கூழ் கேஸ் அடுப்பில் சமைத்தால் சுவை மாறிவிடும் என்று விறகு அடுப்பில் பாணை வைத்து இவரே தயாரிக்கிறார், இவ்வளவு சிரமபட்டு ஏன் குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறீர்கள் என கேட்டால் என் உழைப்புக்குண்டான ஊதியம் இப்போதே கிடைக்கிறது அதிக லாபம் எனக்கு தேவை இல்லை என்கிறார் இந்த பாட்டியின் நேர்மை இங்கே கடை விரிக்கும் வால்மார்ட் போன்ற நிறுவனங்களுக்கு இருக்குமா என்பது சந்தேகம் தான் நண்பர்களே இனி சாக்கடைகளை பற்றி எழுதுவதை விட இந்த மாதிரி உள்ளவர்களை தேடி பதிவிடுகிறேன் # ஒரு அன்பு வேண்டுகோள் இதை அனைத்து நண்பர்களும் பகிரவும் இந்த பாட்டியின் நேர்மை உலகிற்கு தெரியட்டும்... ![]() |
Posted: 02 Aug 2014 05:30 AM PDT |
Posted: 02 Aug 2014 05:15 AM PDT அப்பாவும், மகளும் உணவு மேஜையில் உட்கார்ந்திருந்தார்கள். அம்மா சுட்டு வந்த தோசை தீய்ந்திருந்தது. "நல்ல முறுகலா இருக்கே" என்று ரசித்துச் சாப்பிட்டார் அப்பா. அடுத்த தோசை சுட அம்மா அடுக்களைக்கு போனதும், மகள் கேட்டாள், "அப்பா தோசை தீய்ந்து போயிருக்கிறது, முறுகல் என்கிறீர்களே?". அப்பா சொன்னார், "உன் அம்மாவுக்கு இன்று களைப்பாக இருந்திருக்கும், கவனக்குறைவால் நிகழ்ந்திருக்கும். ஒரு தோசை தீய்ந்து போனதை சுட்டிக்காட்டி அவள் மனம் தீய்ந்து போவதை நான் விரும்பவில்லை". அடுத்த தோசை நிஜமாகவே முறுகலாக வந்தது. குறைகளை நிறைகளாய்க் கொள்ளும்போது குறைகள் தாமாகவே மறைகின்றன. :) |
Posted: 02 Aug 2014 05:00 AM PDT |
Posted: 02 Aug 2014 04:45 AM PDT தேனின் பலன் உங்களுக்குத் தெரியுமா ?? பஞ்சாப் லூதியானா பண்ணை பல்கலைக் கழகத்தின் ஓர் ஆய்வாக 1987 ம் வெளிவந்த தகவல்களை இனிக்கும் வரிகளில் இதோ: 1. தேனை உடலில் உள்ள கட்டியின் மீது பூசி வந்தால் கட்டி உடைந்து குணமாகும். ** கட்டி உடைய தேனைப்பூசு ** 2. சிறு காயங்கள், தீக் காயங்கள் மீதும் தேனை தடவலாம். ** காயங்கள் ஆற தேனைத்தடவு ** 3. நாள்தோறும் தேனை பருகிவந்தால் இதயம் வலுப்படும். கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். வாய்வுத் தொல்லை நீங்கும். ** தேனைக் குடித்தால் இதயம் வலுப்படும் ** 4. களைப்பு, உடல் சோர்வுகளுக்கும், தொண்டை கரகரப்பு, சளித் தொல்லை ஆகியவைகளுக்கும் தேன் சிறந்த மருந்து. ** உள்ளச் சோர்வுக்கு தேனை அருந்து ** 5. கண்ணில் ஒரு சொட்டு தேன் விட்டால் கண் வலி, எரிச்சல் நீங்கும். ** தேன் துளி இட்டால் துலங்கும் பார்வை ** தேனைப் பற்றி திருக்குர் ஆன் கூறுவது: ''மலைகளிலும்> மரங்களிலும்> மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!'' என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது. ![]() |
Posted: 02 Aug 2014 04:30 AM PDT |
Posted: 02 Aug 2014 04:15 AM PDT சுஜாதாவின் பத்து கட்டளைகள்… (கண்டிப்பாகப் படிக்கவும் !!!) 1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும்.. ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது. 2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படித்தான் இருக்கும். செய்துதான் பாருங்களேன்.. 3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரவத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம்.. அதைக் க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள். 4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம். 5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன். 6. இந்தத் தகவல்களைப் படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள். 7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம். குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும்,உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை. 8.எட்டு முறை மைதானத்தைச் சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். ஏதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள்.. எதையாவது வீசி எறியுங்கள்.. உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும். 9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம். 10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான். இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்... |
Posted: 02 Aug 2014 04:00 AM PDT |
Posted: 02 Aug 2014 03:45 AM PDT |
Posted: 02 Aug 2014 03:30 AM PDT |
Posted: 02 Aug 2014 03:15 AM PDT நீங்கள் ஏதேனும் சூழ்நிலையில் கைது செய்யப்பட்டால் அந்த சமயம் உங்கள் உரிமை என்ன..? கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 11 கட்டளைகள். 1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்கவேண்டும். 2. கைது செய்தவுடன் அந்த இடத்திலே கைது குறிப்பு தயாரிக்க வேண்டும். 3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்குத் தெரிவிக்க வேண்டும். 4. கைது செய்யப்பட்ட விபரம் 8 மணி முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும். 5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்குத் தெரிவிக்க வேண்டும் 6. காவலில் உள்ள இடத்தில் கைது விபரம், கைது குறித்தத் தகவல் தெரிவிக்கப்பட்டவிபரம் மற்றும் எந்த அதிகாரியின் பொறுப்பில் இருக்கிறார் என்ற விபரங்களை பதிவேட்டில் குறிக்க வேண்டும்… 7. கைது செய்யப்பட்டவர் உடல் நிலையைப் பரிசோதித்துச் சோதனைக் குறிப்பு தயார் செய்ய வேண்டும். 8. கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். 9. கைது செய்யப்பட்ட ஆவணங்களைக் குற்றவியல் நடுவருக்கு அனுப்ப வேண்டும். 10. கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும்போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும். 11. கைது பற்றிய தகவல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். |
Posted: 02 Aug 2014 03:00 AM PDT |
Posted: 02 Aug 2014 02:45 AM PDT |
Posted: 02 Aug 2014 02:30 AM PDT |
Posted: 02 Aug 2014 02:15 AM PDT எறும்பும் இறகும். ஒரு நாள் காலை ஒரு சிறிய எறும்பு ஒரு இறகை தூக்க முடியாமல் தூக்கி செல்வதை பார்த்தேன்.அது என்னதான் செய்கிறது என்று அதையே பார்த்து கொண்டு இருந்தேன். அந்த எறும்பு போகின்ற வழியில் நிறைய தடைகள் இருந்தன அது சில நேரம் தூக்கி கொண்டும் சில நேரம் அந்த இறகை இழுத்து கொண்டும் சென்றது.ஒரு இடம் வந்ததும் சிறிய இடைவெளி ஒன்று இருந்தது,அது தன் முன் காலால் தூக்கி வைத்து பார்த்தது பின்பு பின் காலால் நீட்டி எக்கி பார்த்தது அந்த எறும்பால் முடியவில்லை. இறகை வைத்து விட்டு சுற்றி சுற்றி வந்தது.பிறகு அந்த இறகை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி இடைவெளி மீது பாலம் மாதிரி வைத்து விட்டு இந்த வழியாக ஏறி அந்த வழியாக இறங்கி விட்டது.மீண்டும் அந்த இறகை தூக்கி கொண்டு நடக்க ஆரம்பித்து விட்டது. நான் மிகவும் ஆச்சரியப்பட்டு போனேன்.ஒரு சிறிய எறும்பு எவ்வளவு லாவகமாக இந்த பக்கம் இருந்து அந்த பக்கம் சென்றது, ஆனால் ஆறறிவு படைத்த நாம் சிறிய இடர்வந்தாலும் துவண்டு போகிறோம். அந்த எறும்பு கடைசியாக அதன் வீட்டை அடைந்தது.அந்த எறும்பின் வீட்டு நுழைவுவாயில் ஒரு சிறிய ஓட்டை மட்டுமே இருந்தது.அது அந்த இறகை உள்ளே எடுத்து செல்ல எவ்வளவோ முயற்ச்சி செய்து பார்த்தது ஆனால் எறும்பால் முடியவில்லை.ஒரு கட்டத்தில் அது அந்த இறகை தூக்கி போட்டுவிட்டு சென்றுவிட்டது. எறும்பு அந்த இறகை அங்கு இருந்து எடுத்து வரும்போது அது சுமையாக தெரியவில்லை எப்போது அது தனக்கு பயன்படாது என்று தெரிந்ததோ அப்போதே அதை தூக்கி போட்டுவிட்டு தன் வேலையை பார்க்க தொடங்கிவிட்டது. நம்ம வாழ்க்கையும் இப்படித்தான்.பணம் சம்பாதிக்க கஷ்டப்படுறோம்,வேலை செய்ய கஷ்டப்படுறோம்,குடும்ப பாரத்தை சுமக்க கஷ்டப்படுறோம்.அந்த இறகு மாதிரி தான் நம்ம கஷ்டமும்.கஷ்டத்தை தூக்கி போட்டுட்டு நாம பாட்டுக்கு நம்ம வேலைய பார்த்துகிட்டே போகணும். |
Posted: 02 Aug 2014 02:00 AM PDT இவர் யாரென்று எத்தனை பேருக்கு தெரியும்.? சரி, தெரிந்துகொள்வதற்கு முன், இவருக்கு உங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் இன்று வாழ்வதற்கு முக்கிய காரணமே இவர்தான். Dr.Jonas Salk, இவர் தான் போலியோ'க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர். சரி, எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த பல அறிவியலாளர்கள் இருக்கும்போது இவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு?? இவர் POLIO தடுப்பு மருந்து கண்டுபிடித்த பிறகு patented right, வாங்க மறுத்து விட்டார்(அதாவதுகண்டுபிடிப்பு உரிமம். சினிமா படம் copyrights வாங்குவது போல்..) இவர் அவ்வாறு செய்திருந்தால் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரனாக இருந்திருப்பார்.ஆனால் அப்படி செய்திருந்தால்,பல கோடி ஏழை எளிய மக்கள் அந்த மருந்தை வாங்க முடியாமல் நோய் வாய் பட்டு இறந்திருப்பார்கள். பேட்டி ஒன்றில் ஏன் நீங்கள் உரிமம் பெறவில்லை எனக்கேட்டதற்கு,சூரியனுக்கு யாராவது உரிமை கொண்டாட முடியுமா என்று கேட்டார், இந்த மாமனிதர்! பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ்... போன்றவர்களை போற்றும் இந்த உலகம், இவரை யாரென்று கூட தெரிந்து கொள்ளவில்லை என்பது கசப்பான உண்மை! இவருக்கு நன்றி தெரிவிக்க நினைத்தால், தகவலை பகிரவும் உங்கள் நண்பர்களும் தெரிந்துகொள்ளட்டும் ![]() |
Posted: 02 Aug 2014 01:45 AM PDT |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment