Relax Please: FB page daily Posts |
- காதலிக்க பெண்கள் தேவை: (இந்த விளம்பரத்தை பாருங்க) 1.10th பெயிலாயிருக்கணும் (நாங...
- சற்று முன் டீ குடித்த கடையின் வாசலில் கண்டேன் இவர்களை... எழுபது வயதுக்கு மேல் ஆ...
- இப்படத்தில் ஏரியோ அல்லது நீர்நிலையோ இல்லை... இதில் உள்ளது சாதாரண மதிலே ஆகும்.....
- அறிவாளி பசங்க
- :)
- ஆறு வயது பையன் அவன். எதேச்சையாக மூன்று வயது பெண்குழந்தையின் புகைப்படம் ஒன்று அவ...
- உஷார்!!! நூதன பெட்ரோல் திருட்டு... நேற்று மதியம் ஒரு பெட்ரோல் பங்கில் சென்று இர...
- கிளி இனமே அழிந்து விடும் என அஞ்சும் சூழ்நிலையில் இவ்வளவு கிளிகளை ஒன்றாக பார்ப்பத...
- வாழ்த்துக்கள் (y)
- :)
- ஒரு நாய் கடைக்கு வந்துச்சு.. கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்...
- சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில் சர்க்கரை நோய்க்கு மாத்திர...
- அன்னை தெரசாவின் அழகிய மணல் சிற்பம் <3
- :)
- கணவன் : டாக்டர் என் வொய்ஃப் ரொம்ப வயிறு வலிக்குதுனு சொல்றா... டாக்டர் : அப்படியா...
- அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்: வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள். 1. பேசும்முன...
- நண்பர்களே இந்த நான்கில் எதாவது ஒன்று சிறு வயது முதல் நமக்கு பிடித்தமானதாக இருந்த...
- :)
- இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:- 1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது...
- மரம் வளர்ப்போம் மரங்கள் பூமித்தாயின் புதல்வர்கள். தாயைக் காப்பதில் தரணியில் இவர...
- அவளுக்குமுன் நான் இறக்க வேண்டும் இல்லை இல்லை அவருக்குமுன் நான் இறக்க வேண்டும் -...
- :)
- காகமே நீ ஏன் கருப்பானாய் ? "காகமே, காகமே நீ ஏன் கருப்பாக இருக்கிறாய்?" என்று கே...
- ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களை உலகமே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய காலகட்டம் அது...
- பாகிஸ்தான் நாட்டிலுள்ள கொராகரம் பாதை...! Korakaram Highway...Pakistan!
- :)
- காலையில் நீ தொலை பேசியில் உன் நண்பனுடன் உரையாடினாய்... உன் முகத்தில் மகிழ்ச்சி,...
- பொக்கை வாய் சிரிப்புக்காரி புன்னைகைக்கும் பூங்குழலி..! ஆணை மேலே அம்பாரி ஏறயிலே...
- இனத்தில் இந்தியனாய் இரு.. மதத்தில் மனிதனாய் இரு... தன்னம்பிக்கையில் தமிழனாய் இரு...
Posted: 10 Aug 2014 09:15 AM PDT காதலிக்க பெண்கள் தேவை: (இந்த விளம்பரத்தை பாருங்க) 1.10th பெயிலாயிருக்கணும் (நாங்க எல்லாம் 7வது பாஸ் , பாஸ் தான் பெருசு அதான்.....) 2.அப்பன் வசதியா இருக்கணும் (வீட்டோட மாப்பிள்ளையா செட்டில் ஆகலாம் ல.....) 3.அப்பா செல்லமா இருக்கணும் (செலவுக்கு பாக்கெட் மணி கிடைக்கும்) 4.மொக்க போடா தெரியனும் (நேரம் போகணும் ல) 5.பொண்ணு அழகா இருக்கணும் (நாலு பேரு கிட்ட பெருமையா சொல்லணும் ல) 6.குறைந்தது ஒரு தங்கை இருக்கணும் (அட போங்கப்பா கூச்சமா இருக்கு) 7.இரு சக்கர வாகனம் இருக்க கூடாது (நாங்க லிப்ட் குடுத்தா தான் கிக்) 8.அதிக தோழிகள் இருக்கணும் (கண்ணுக்கு குளிர்ச்சியா சைட் அடிக்கலாம் ல) 9.ஆண் நண்பர்கள் இருக்க கூடாது (போட்டி லாம் போட முடியாது) 10.பவர் ஸ்டாரின் ரசிகையா இருக்கணும் (அப்பத்தான் தியேட்டர்லயும் காதல் பண்ணலாம்) #இப்படிக்கு காதலிக்க பெண் கிடைக்காதோர் சங்கம் :P :P - Vasantha kumaran |
Posted: 10 Aug 2014 09:00 AM PDT சற்று முன் டீ குடித்த கடையின் வாசலில் கண்டேன் இவர்களை... எழுபது வயதுக்கு மேல் ஆன ஏழை தம்பதிகள்... முதலில் ஒரு பன் வாங்கினர்... அதை ஆளுக்கு பாதியாக பிரித்தனர்... அந்த மனைவி சிறிதாக எடுத்துக்கொண்டு முதியவர்க்கு கொடுத்தார்... ஏதோ நினைத்த பெரியவர் மீண்டும் இரண்டு பிஸ்கட்கள் வாங்கி மனைவிக்கு கொடுக்க அதில் பாதி மட்டும் அவர் எடுத்துக்கொண்டார் ... மனைவி மீண்டும் கொஞ்சம் கணவருக்கு கொடுத்துவிட்டு, இருந்த ஒரு கப் டீயில் கொஞ்சம் குடித்து மீதியை கணவருக்கு வலுக்கட்டாயமாக கொடுக்கிறார்... மறுபடி கணவர் திருப்பிக்கொஞ்சம் பகிர்ந்து கொடுக்கிறார்... தண்ணீரை கூட பகிர்ந்தே குடித்து நகர்ந்தார்கள்... தள்ளாத வயதிலும் தளராத அன்னியோன்யம் கொண்ட அவர்களை பார்த்து ஏனோ கண்கள் பூத்துவிட்டது !! வாழ்வின் அர்த்தத்தை ஏழ்மையில் கூட விடாத விந்தை தம்பதிகள் -சித்தன் கோவை ![]() |
Posted: 10 Aug 2014 08:50 AM PDT |
அறிவாளி பசங்க Posted: 10 Aug 2014 08:40 AM PDT |
Posted: 10 Aug 2014 08:30 AM PDT |
Posted: 10 Aug 2014 08:15 AM PDT ஆறு வயது பையன் அவன். எதேச்சையாக மூன்று வயது பெண்குழந்தையின் புகைப்படம் ஒன்று அவனுக்குக் கிடைத்தது. அவன் அந்தக் குழந்தையை வெகு தீவிரமாக நேசிக்கத் தொடங்கினான். ஆனால் அவள் யாரென்பதை தேடிக் கண்டுபிடிக்க மட்டும் அவனால் முடியவில்லை. இருபது வருடங்களுக்குப் பிறகு.. அவனுடைய மனைவி அலமாரியை ஒதுங்க வைக்கும்போது டைரிக்குள் அந்த புகைப்படத்தை கண்டுபிடித்தாள். "இந்த போட்டோ உங்களுக்கு எப்படிங்க கிடைச்சது?" "ஏன் கேக்குற?" "இது என்னோட போட்டோதான். ரொம்பப் பிடிச்சது. வீடு மாத்தும்போது எப்படியோ தொலஞ்சு போனது உங்ககிட்ட கிடச்சு இருக்கு.." சொல்லியப்படியே அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். நீதி::::: சனி பிடிக்கணும்னு இருந்தா எத்தனை வருஷம் ஆனாலும் விடாது.. ! *** நோ.. நோ... சண்டைக்கெல்லாம் வரப்படாது.. நெட்ல சுட்டது தான் :P :P |
Posted: 10 Aug 2014 08:00 AM PDT உஷார்!!! நூதன பெட்ரோல் திருட்டு... நேற்று மதியம் ஒரு பெட்ரோல் பங்கில் சென்று இரண்டு லிட்டர் பெட்ரோல் போடச் சொன்னேன், அவரும் நல்லாதான் போட்டாரு, மீட்டர் ஓடிட்டே இருக்கு ஆன டேங்க்ல பெட்ரோல் விழுற சத்தமே கேக்கல, என்னடா சத்தமே கேக்கலையேனு அந்த பையன்கிட்ட கொஞ்சம் அந்த பைப்ப மேல தூக்கி போடுங்கனு சொன்னேன், அவரு சொன்னாரு மேல தூக்குனா பெட்ரோல் ஆவியாயிடும்னு சொன்னாரு, இந்த விஷயம் எங்களுக்கும் தெரியும் தூக்குங்கனு அந்த பைப்ப மேல தூக்கி பாத்தா அந்த பைப்ல இருந்து பெட்ரோல் ஒரு துளி கூட வரல "வெறும் காத்துதேன் வருது" ஆனால் பெட்ரோல் மீட்டர் ஓடிட்டே இருக்கு, வந்திச்சு பாருங்க வெறி அவன் சட்டைய பிடிச்சுகிட்டு நான் போட்ட சத்தத்துல அங்க ஒரு பெரிய கூட்டமே கூடிடுச்சு, எனக்கு முன்னாடி பெட்ரோல் போட்ட ஒரு 5,6 பேரு அவங்களும் டேங்க் தொறந்து பாத்தா அவங்களுக்கும் இதேதான் பண்ணிருக்கான், அப்புறம் என்ன அங்க உள்ள கேஷியருக்கு தர்ம அடி கெடச்சது,அங்க இருந்த ஒருத்தர் போலீஸ்கிட்ட போவோம்னு சொல்லிட்டுருந்தாரு ஆனால் எனக்கு அவசர வேலை இருந்ததால நான் அந்த இடத்துல இருந்து கெளம்பிட்டேன், அத பார்த்ததுல இருந்து மனசுக்குள்ள வடிவேல் டயலாக் கேட்டுகிட்டே இருக்கு,"எப்புடியெல்லாம் டெவலப் ஆயி போயிகிட்டு இருக்கானுங்க பாருய்ய இவனுங்க." நீங்க இனிமேல் அந்த பைப்ப மேல தூக்கி பிடிச்சு பெட்ரோல் போட சொல்லுங்க, 100 மிலி ஆவியாகுதுனு நாம பாத்தா அவனுங்க பெட்ரோலே போடாம காசு புடுங்குறானுங்க, உங்களுக்கு தெரிஞ்ச வேற பெட்ரோல் திருட்டு வழிமுறைகளை சொல்லுங்க, எல்லாருக்கும் தெரியட்டும்.,,,,,, ![]() |
Posted: 10 Aug 2014 07:45 AM PDT |
வாழ்த்துக்கள் (y) Posted: 10 Aug 2014 07:40 AM PDT |
Posted: 10 Aug 2014 07:30 AM PDT |
Posted: 10 Aug 2014 07:15 AM PDT ஒரு நாய் கடைக்கு வந்துச்சு.. கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு… என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு… கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். .. நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது. கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்.. அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது.. அப்போது ரெட் சிக்னல்.. அந்த நாய் ரோட்'டை கடக்காமல் நின்றது… பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது… கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை… அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார். அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது. ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது. கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார். இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது. கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார். நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது. கதவு திறந்து ஒரு ஆள் வந்தார். நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார். கடைக்காரர் ஓடி சென்று நிறுத்துங்க?? ஏன் அடிக்கறீங்க?? அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே …??? அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீட்டு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க.. நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லன்னு. Note : நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படி தான்.. நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது... :P ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் Relaxplzz |
Posted: 10 Aug 2014 07:00 AM PDT சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும் வரக்கொத்தமல்லி --அரை கிலோ வெந்தயம் ---கால் கிலோ தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும். இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும். இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது. ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன். ![]() |
Posted: 10 Aug 2014 06:45 AM PDT |
Posted: 10 Aug 2014 06:30 AM PDT |
Posted: 10 Aug 2014 06:15 AM PDT கணவன் : டாக்டர் என் வொய்ஃப் ரொம்ப வயிறு வலிக்குதுனு சொல்றா... டாக்டர் : அப்படியா...? கணவன் : ஆமாம் டாக்டர். அவ சொல்ற அறிகுறியை எல்லாம் வச்சுப் பார்க்கும் போது அவளுக்கு அப்பண்டீசா இருக்குமோனு எனக்கு சந்தேகமா இருக்கு... டாக்டர் லேசாக டென்சனாகிறார். டாக்டர் : என்ன மிஸ்டர் விவரம் இல்லாதவரா இருக்கீங்களே... போன வருசம் தான உங்க மனைவிக்கு அப்பண்டீஸ் ஆபரேஷன் பண்ணினோம். யாருக்காவது ரெண்டாவது தடவை அப்பண்டீஸ் வந்ததுனு கேள்விப் பட்டிருக்கீங்களா.....? கணவன் : (நிதானமாக மீண்டும் அதையே சொல்கிறான்) இல்ல டாக்டர் அவ படுற அவஸ்தையைப் பார்த்தா நிச்சயமா அவளுக்கு அப்பண்டீசா தான் இருக்கும்னு நான் நினைக்குறேன். டாக்டர் இம்முறை கோபத்தின் எல்லைக்கே போகிறார். டாக்டர் : உனக்கென்ன பைத்தியமா... நான் தான் சொல்கிறேனே ரெண்டாவது முறை அப்பண்டீஸ் வராது என்று. கணவன் : எனக்குப் பைத்தியம் எல்லாம் இல்லை டாக்டர். ஆனபோதும், நான் உறுதியாகச் சொல்கிறேன். என் மனைவி அப்பண்டீஸ் வலியால் தான் துடிக்கிறாள். ஏனென்றால்... டாக்டர் : ஏனென்றால்....? கணவன் : ஏனென்றால் நீங்கள் ஆபரேஷன் செய்தது என் முதல் மனைவிக்கு. இவள் என் இரண்டாவது மனைவி ! :P :P Relaxplzz |
Posted: 10 Aug 2014 06:00 AM PDT அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்: வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள். 1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள் 2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும். 3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர். 4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்! 5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்! 6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது. 7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்! 8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை. 9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு. 10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார். 11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள் 12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள் 13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய் 14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை 15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள் 16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம் 17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள் 18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம் 19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும் 20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும் 21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும் 22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம். 23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான் 24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள் 25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும் 26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர் 27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான் 28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை. 29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும். 30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம் 31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும் 32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம். 33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது. ![]() |
Posted: 10 Aug 2014 05:45 AM PDT |
Posted: 10 Aug 2014 05:30 AM PDT |
Posted: 10 Aug 2014 05:15 AM PDT இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:- 1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்! 2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது. 3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும். 4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும். 5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம். 6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம். 7. கடுமையான இருமல் இருந்தால் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும். 8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி வரவும். வலி குறையும். 9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு குளிக்கவும். விரைவில் தழும்புகள் மறையும். 10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தால் விரைவில் இருமல் நிற்கும். காய்ச்சல் குறையும். 11. காரட் மற்றும் தக்காளிச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வலிமை பெரும். 12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது. |
Posted: 10 Aug 2014 05:00 AM PDT மரம் வளர்ப்போம் மரங்கள் பூமித்தாயின் புதல்வர்கள். தாயைக் காப்பதில் தரணியில் இவர்க்கு நிகர் யாருமில்லை. சூரியக்கதிர்களின் தாக்குதல்களை இலைக் கேடயங்களால் தடுத்து பூமி வெப்பமடையாமல் பார்த்துக்கொள்கிறது. கரியமிலவாயுவை உட்கொண்டு பிராணவாயுவை வெளிவிடுகிறது. இதனால் நமக்கு பிராணவாயு கிடைப்பது எளிதாகிறது. மரங்கள் இல்லையேல் மழை இல்லை. மழை இல்லையேல் உயிர்கள் இல்லை. மக்களுக்கு இயற்கை அளித்துள்ள இலவச குடை இந்த மரங்கள். கோடைகாலத்தில் வெயிலின் கொடுமைக்கு, மர நிழலில் இளைப்பாறுதல் இன்பம் தரும். அதன் சுகமே அலாதி தான். சுகம் தரும் சொர்க்க மரம். உன் வீட்டில் ஒரு மரம் வளர்த்துப்பார். வளரும் போது கவனித்துப்பார். காற்றுடன் இலைகள் பேசும் காதல் மொழிகளை. குருவிகள் அமர்ந்து குதூகலிப்பதை. நீ வீட்டில் அதற்கு இடம்கொடுத்தால், அது பறவை இனங்களுக்கு இடம் கொடுக்கும் உன்னிடம் கேட்காமலே. அவ்வளவு பரந்த மனசு. உனைப்போலவே. மரத்தை நீ வளர்த்தால், அது உன்னை வளர்க்கும். வாரிசாக ஒரு மரத்தை வளர்த்து வை. வையகம் சி(ரி)றக்கும்... மனிதன் சி(ரி)றப்பான்.. ![]() |
Posted: 10 Aug 2014 04:45 AM PDT |
Posted: 10 Aug 2014 04:30 AM PDT |
Posted: 10 Aug 2014 04:15 AM PDT காகமே நீ ஏன் கருப்பானாய் ? "காகமே, காகமே நீ ஏன் கருப்பாக இருக்கிறாய்?" என்று கேட்டான் கருப்பன். "ஒரு காலத்தில் நான்தான் உலகிலேயே அழகான பறவையாக இருந்தேன் என்று சொன்னால் நீ நம்புவாயா?" என்று கேட்டது காகம். "எப்படி நம்ப முடியும்?" என்று ஆச்சரியப்பட்டான் கருப்பன். "நம்பித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் அதுதான் உண்மை. வண்ண வண்ண சிறகுகள், அழகான தோகை, இனிய குரலுடன் அவ்வளவு வசீகரமாக இருந்தேன் நான்" "பின் எப்படி நீ இப்படியானாய்?" "என் இரக்க குணத்தால்" "அந்த கதையை கொஞ்சம் சொல்லேன்" "என் அழகான தோற்றத்தைக் கண்டு பொறாமைக் கொண்ட மற்ற பறவைகள் என் இரக்கக் குணத்தை பயன்படுத்தி பலன் அடைய நினைத்தன" 'உன் பச்சை நிறத்தை எனக்கு கொடேன்' என்று கேட்டு வாங்கிக் கொண்டது பச்சைக்கிளி. 'எனக்கு நீல நிறம் என்று வாங்கிக் கொண்டது. மீன்கொத்தி. 'வெண்மை எனக்கு' என்று எடுத்துக் கொண்டது புறா. இப்படியாக ஒவ்வொரு நிறமும் போக என்னிடம் மிஞ்சியிருந்தது என் கம்பீரமான கொண்டையும் அழகான தோகையும்தான். பின் சேவல் கொண்டையையும் மயில் தோகையையும் வாங்கிக் கொண்டன. அவை போன பிறகு என்னிடம் மெல்ல வந்தது குயில். 'காகமே, காகமே நீயும் கருப்பு நானும் கருப்பு. எனவே எனக்கு உன் நிறமெல்லாம் வேண்டாம். உன் குரலை மட்டும் கொடு போதும்' என்றது. அதையும் நான் மகிழ்ச்சியோடு தந்து விட்டேன்" என்று சொல்லி முடித்தது காகம். இதைக் கேட்ட கருப்பன், "என்ன காகமே, இவ்வளவு இளித்தவயாக இருந்திருக்கிறாய" என்று செல்லமாக கடிந்து கொண்டான். அதற்கு காகம் "நானே கொடுத்தாலும் யாரும் வாங்கிக் கொள்ளாத ஓர் உயர்ந்த குணம் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. எனக்கு அதுவே போதும்" என்றது. "அது என்ன குணம்?" என்று கேட்டான் கருப்பன். "ஒற்றுமை" கருப்பன் யோசித்தான். காகம் சொன்னது உண்மைதானே? அதன் ஒற்றுமை குணம் பற்றி நமக்கே தெரியும். அதனால்தான் எல்லா பறவைகளையும் கூண்டில் அடைத்து வைத்து வளர்க்கும் நாம் காகங்களை மட்டும் சுதந்திரமாக விட்டு வைத்திருக்கிறோம்... அது மட்டுமா? "கா... கா..." என உரிமையோடு நாம் சாப்பிட அழைக்கும் ஒரே பறவையும் அதுதானே? கருப்பனுக்கு ஒன்று தெளிவாக புரிந்தது... ##### மனசுக்கு ஏது நிறம் ? Relaxplzz |
Posted: 10 Aug 2014 04:00 AM PDT ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களை உலகமே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய காலகட்டம் அது. ஆனால், அமெரிக்கா சென்றபோது அதே சூப்பர் ஸ்டார்களை தன்னை தேடிவந்து பார்க்கச் செய்தவன், நம் தமிழ்மண்ணின் தவப்புதல்வன் சிவாஜி கணேசன். சிவாஜியின் நடிப்பாற்றலை கேள்விப்பட்டு அவருடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டு தங்கள் வீடுகளுக்கே அழைத்துச் சென்று உபசரித்தார்கள் அந்த ஹாலிவுட் ஸ்டார்கள். "காட்பாதர்" கதாநாயகன் மார்லன் பிராண்டோ, "பென் ஹர்" நாயகன், சார்டன் ஹெஸ்டன், டென் காமாண்ட்மெண்ட்ஸ்சில் கலக்கிய "பூல்பிரன்னர்" உள்பட ஹாலிவுட் பஞ்ச பாண்டவர்கள் மத்தியில், எவ்வளவு கம்பீரமாய் அமர்ந்திருக்கிறது நமது தமிழ் சினிமா.. ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும் Relaxplzz ![]() |
Posted: 10 Aug 2014 03:45 AM PDT |
Posted: 10 Aug 2014 03:30 AM PDT |
Posted: 10 Aug 2014 03:15 AM PDT காலையில் நீ தொலை பேசியில் உன் நண்பனுடன் உரையாடினாய்... உன் முகத்தில் மகிழ்ச்சி, தொடர்ந்த சிரிப்பு.. உடனே கூறினேன், அடுத்த ஜென்மத்தில், உன் நண்பனாக பிறக்க வேண்டும் என்று.. அதற்கு நீ வேகமாக வேண்டாம் என்று தலையாட்டினாய், அதிர்ந்தேன்... உன் முகத்திலோ சிரிப்பு.. உடனே அடுத்த கேள்வி கேட்டேன், அடுத்த ஜென்மத்திலும் மனைவியாகவா??? நீ ஆம் என்று தலையாட்ட.. நானோ, வெட்கத்தில், சந்தோஷத்தில், ஏழு ஜென்மத்தையும் அனுபவித்தேன்... ♥ ♥ - - ஸ்,பஸ்மிர்.சில்மியா |
Posted: 10 Aug 2014 03:00 AM PDT பொக்கை வாய் சிரிப்புக்காரி புன்னைகைக்கும் பூங்குழலி..! ஆணை மேலே அம்பாரி ஏறயிலே... எம்மன ராஜ்ஜியத்தின் இளவரசியடி..! பட்டுசொக்கா போட்டு போகையிலே.. பால் நிலவும் மங்குதடி..! தத்தி தத்தி நீ நடக்கையிலே.. என்னுடல் தரிசாய் மாறிட துடிக்குதடி..! ஒற்றைப்பல் தெரிய ஓங்கி நீ சிரிக்கையிலே.. ஒலகமே உன் கண்ணில் தெரியுதடி..! கையிலேந்தி கொஞ்சிட நினைக்கையிலே.. கண்டதெல்லாம் கனவாகி போனதடி..! - Praveena Sridharan. ![]() |
Posted: 10 Aug 2014 02:45 AM PDT |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
0 comments:
Post a Comment