Friday, 8 August 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


தினமும் அரைமணிநேரம் தியானம் செய்வதென்று முடிவெடுத்து காலை 5 மணிக்கு எழுந்து கண்க...

Posted: 08 Aug 2014 08:21 AM PDT

தினமும் அரைமணிநேரம் தியானம் செய்வதென்று முடிவெடுத்து காலை 5 மணிக்கு எழுந்து கண்களை மூடி அமர்ந்தேன்,ஆழ்நிலை தியானம் அரைமணி நேரம் தாண்டி சென்றுவிட்டது,திடீரென்று "என்னடா தியானத்தில் கனவெல்லாம் வருதே?" என்று அதிர்ச்சியுடன் எழுந்து பார்த்தேன்.

மணி 8.10...அடச்சேய்.. இவ்ளோ நேரம் அப்படியே தரைல படுத்து தூங்கிருக்கேன்

- பூபதி முருகேஷ்

“காலம் கடந்தாலும் அன்பு அழிவதில்லை" --------------------------------------------...

Posted: 08 Aug 2014 07:51 AM PDT

"காலம் கடந்தாலும் அன்பு அழிவதில்லை"
--------------------------------------------------------------
வயதான பெரியவர் ஒருவர் காலை 8.30 மணிக்கு ஒரு மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவர் மணி பார்ப்பதும் பிறகு அவர் கையில் இருக்கும் டோக்கனையும் அடிக்கடி பார்த்து கொண்டே இருந்தார்.
நோயாளிகள் ஒவ்வொருவராக பார்த்தபின் அவர் டோக்கன் எடுத்து கொண்டு உள்ளே வந்தார். என்ன பெரியவரே ஏதாவது அவசர வேலை இருக்கா அடிக்கடி மணி பார்த்துகிட்டே இருக்கீங்க என்றேன். ஆமாம் டாக்டர் என் மனைவிக்கு நான் போய் தான் சாப்பாடு குடுக்கனும் என்றார்.
ஏன் அவங்களுக்கு உடம்பு சுகம் இல்லையா என்று கேட்டேன். ஆமாம் டாக்டர் கடந்த மூன்று வருடமா அவளுக்கு நியாபக மறதி வந்து விட்டது. என்னையே கடந்த மூன்று வருடமா அவளுக்கு யார் என்று தெரிவதில்லை என்றார்.
கடந்த மூன்று வருடமா உங்களை யாருன்னே தெரியாமலே அவங்களுக்கு நீங்க தான் சாப்பாடு கொடுக்கறீங்களா...என்று கேட்டேன்.
நியாபக மறதி நோய் அவளுக்கு தான் டாக்டர்.
"என்னை யார் என்று அவளுக்குத்தான் தெரியாது, ஆனால் எனக்கு அவள் யார் என்ன உறவு என்பது நன்றாக தெரியும் என்றார்."
அவர் சொன்ன வார்த்தை என் கண்களை கலங்க செய்து விட்டது. இது தான் உன்மையன பாசம். சீக்கிரம் அவருக்கு சிகிச்சை அளித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
"காலம் கடந்தாலும் காதல் அழிவதில்லை"

- மாலை மலர்


PEPSI (பெப்சி) குளிர்பானத்திற்கு எதிரான நியாயமான மக்களின் போராட்டம் நிச்சயம் வெல...

Posted: 08 Aug 2014 07:40 AM PDT

PEPSI (பெப்சி) குளிர்பானத்திற்கு எதிரான நியாயமான மக்களின் போராட்டம் நிச்சயம் வெல்லும்.


"ஏண்ணே... தண்ணி எங்கேயிருக்கு, எதுக்காக தண்ணியெடுக்குறே?"ன்னு கேட்டேன். "அரை பள...

Posted: 08 Aug 2014 07:21 AM PDT

"ஏண்ணே... தண்ணி எங்கேயிருக்கு, எதுக்காக தண்ணியெடுக்குறே?"ன்னு கேட்டேன்.

"அரை பள்ளாங்கு போவனும் தம்பி. தென்னம்புள்ளே நட்டு வச்சேன். வதங்குற மாதிரி இருந்துச்சி, மனசு கேக்கலே"ன்னு சொல்லிக்கிட்டே போயிக்கிட்டிருந்தார்.

அவருக்கு தெரியாமல் இந்த போட்டோ எடுத்து க்கிட்டு ரொம்ப நேரமா அங்குனே நின்னேன்!

-சங்கர் அஷ்வின்


நரேந்திர மோடி ஆசியாவின் இன்னொரு ராஜபக்சே - ஃபசில் ராஜபக்சே # இது வாழ்த்தா? இல்ல...

Posted: 08 Aug 2014 07:10 AM PDT

நரேந்திர மோடி ஆசியாவின் இன்னொரு ராஜபக்சே - ஃபசில் ராஜபக்சே

# இது வாழ்த்தா? இல்லை வசவா?

கரடியே கன்ஃபியூசான மொமன்ட்

- நம்பிக்கை ராஜ்

அரிய 1,700 சமஸ்கிருத ஓலைச்சுவடி நுண்பட சுருள்களை ஸ்கேனிங் செய்து மின்னணு வெளியீட...

Posted: 08 Aug 2014 02:00 AM PDT

அரிய 1,700 சமஸ்கிருத ஓலைச்சுவடி நுண்பட சுருள்களை ஸ்கேனிங் செய்து மின்னணு வெளியீடாக (இ-பப்ளிஷிங்) வலைதளத்தில் ஏற்றிட ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் கே.சி.வீரமணி

(செய்தி தி இந்துவில்).

// யார் வீட்டுப் பணத்தை எடுத்து யாருக்குச் செலவு செய்கிறீர்கள் தமிழக அரசே. //

// தஞ்சாவூர் சரசுவதி மகால் அருங்காட்சியகதில் படிக்கப்படாமல் உள்ள மூன்று லட்சம் ஓலைச்சுவடிகள். //

// இந்திக்கும், சமஸ்கிருதத்திற்கும் மத்திய அரசு நிதி அளித்து இல்லாததை இருப்பது போல் இட்டுக்கட்டி காட்டிவருகின்றனர்.

தமிழன் தன் வரலாறு தெரியாமல் தள்ளாடிக் கொண்டுள்ளான்.


எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது நாம்தான்!

Posted: 08 Aug 2014 01:45 AM PDT

எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது நாம்தான்!


Posted: 08 Aug 2014 12:45 AM PDT


0 comments:

Post a Comment