Saturday, 2 August 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


அழகிய ஈழம்! காரைநகரில் அமைந்துள்ள கோவளம் கடற்கரை!

Posted: 02 Aug 2014 09:55 AM PDT

அழகிய ஈழம்! காரைநகரில் அமைந்துள்ள கோவளம் கடற்கரை!


Posted: 02 Aug 2014 09:40 AM PDT


Posted: 02 Aug 2014 08:30 AM PDT


புருஷன் பொண்டாட்டி பிரச்சணைகளை,ஒரே அறையில் தீர்த்து கொள்ளுங்கள் என்று பெரியவர்கள...

Posted: 02 Aug 2014 07:05 AM PDT

புருஷன் பொண்டாட்டி பிரச்சணைகளை,ஒரே அறையில் தீர்த்து கொள்ளுங்கள் என்று பெரியவர்கள் சொன்னதை பல பொண்டாட்டிங்க தப்பா புரிஞ்சிகிட்டு இருக்காங்க...

#ஒரே_அறை

யாருக்கு... யாருக்கோ... :(

@இளையராஜா டென்டிஸ்ட்

இப்பவே கண்ண கட்டுதே ... முடியல - விகடன்

Posted: 02 Aug 2014 06:48 AM PDT

இப்பவே கண்ண கட்டுதே ... முடியல

- விகடன்


எல்லா அப்பாவும் இப்படிதான். . . . வழக்கம் போல் இன்றும் என் மகளை (LKG) வீட்டிற்க...

Posted: 02 Aug 2014 04:55 AM PDT

எல்லா அப்பாவும் இப்படிதான். . . .

வழக்கம் போல் இன்றும் என் மகளை (LKG) வீட்டிற்கு அழைத்துச் செல்ல பள்ளிக்குச் சென்றிருந்தேன். மணி அடித்ததும் வகுப்பறையில் இருந்து கள்ளமில்லாச் சிரிப்போடு வெளிவந்த என் மகளைக் கண்டதும் என் கண்கள் தானாக கலங்கியது. இப்போது கூட கலங்கிய கண்களுடன்தான் இதை பதிந்துக் கொண்டிருக்கிறேன்.

முதன் முதலாக என் மகளைப் பள்ளியில் சேர்க்க ஆயத்தமான பொழுது, நான் உறுதியாக இருந்தது
பள்ளியின் அடிப்படை வசதிகள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும் என்பதில் தான். மாணவர்கள் நுழையும் வெளியேறும் வாசல், பள்ளி அறைகள், கட்டிடங்கள் இவற்றில் நான் எந்த சமரசமும் கொள்ளவில்லை. பள்ளி பேருந்தை குறைந்த பட்சம் நான்கைந்து நாட்களாவது அதன் பின்னாலே சுற்றியிருப்பேன். பின் சில காரணங்களுக்காக பள்ளி பேருந்தை நான் விரும்பவில்லை.

இதை படிக்கும் உங்களுக்கு நான் ஆர்வக் கோளாறாகவும், பைத்தியக் காரனாகவும் தோன்றும். சிலர் என்னிடம் நேரடியாகவே கேட்டனர் "நீ என்ன அதிசயமாகவா பிள்ளை பெற்றிருக்கிறாய்" என்று. அதையெல்லாம் சட்டை செய்யவில்லை. அப்போது என் மனதில் இருந்தது கும்பகோணம் பள்ளி தீ விபத்தும், "ஸ்ருதி" பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டையின் வழியே தவறி விழுந்து இறந்ததும் தான்.

விபத்து நடக்க வேண்டும் என்று விதி இருந்தால் நடக்கத்தான் செய்யும் விதியை மாற்ற இயலாது என்று நீங்கள் கூறலாம். ஆனால் வருமுன் காப்பது சிறந்தல்லவா?

ஒருவனுக்கு எத்தனை செல்வங்கள் இருந்தாலும், அதில் மகிழ்ச்சி தரக் கூடியது மழலைச் செல்வங்கள் தான். தன் குழந்தை இறந்து விட்டது அதிலும் தீக்கிரை, விபத்து ... இதெல்லாம் ஒரு பெற்றோருக்கு எவ்வளவு கொடுமையான செய்தி.. நினைத்துப் பார்த்தாலே ஒரு படபடப்பாக இருக்கிறது.

இச்சம்பவம் நடைபெற்ற போது நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது இச்சம்பவம் நடைபெற்றதற்காக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியது இன்றும் என் நினைவில் உள்ளது.

ஆனால் ஒரு தந்தையான பிறகு இன்று அதன் நினைவுகளால் இதயம் மிகவும் கனத்து விட்டது.
பெற்றோர்கள் இப்படிப்பட்ட அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகளைப் புறக்கணிக்க வேண்டும். இது அந்த பெற்றோர்களுக்கு மீட்டெடுக்க முடியாத இழப்பு.

- சார்லஸ் பா

அழகு தமிழ்நாடு! இடம்: பெரும்செல்வவிளை, குமரி மாவட்டம்

Posted: 02 Aug 2014 04:50 AM PDT

அழகு தமிழ்நாடு!

இடம்: பெரும்செல்வவிளை, குமரி மாவட்டம்


வடக்கே போருக்கு போன இராஜேந்திரன் படையினர் வெற்றிச் சின்னங்களாக நுளம்ப நாட்டில் இ...

Posted: 02 Aug 2014 12:10 AM PDT

வடக்கே போருக்கு போன இராஜேந்திரன் படையினர் வெற்றிச் சின்னங்களாக நுளம்ப நாட்டில் இருந்து (மைசூருக்கு வடக்கே) கொண்டு வந்த தூண்கள். தஞ்சை மாவட்டம் திருவையாறு கோயிலில் தெற்கு பக்கம் பஞ்சவன் மாதேவி. எழுப்பிய "தென் கைலாயம்" என்றழைக்கப்படும் கோயிலில் உள்ளது.


0 comments:

Post a Comment