Monday, 11 August 2014

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


ம்ம்ம்! என்றால் சிறைவாசம்! ஏன்? என்றால் வனவாசம் இதுதான் இன்றைய இந்தியாவின் நிலை!...

Posted: 11 Aug 2014 11:55 AM PDT

ம்ம்ம்! என்றால் சிறைவாசம்!
ஏன்? என்றால் வனவாசம்
இதுதான் இன்றைய
இந்தியாவின் நிலை!
------------------------------
------------------------------
------------------------------
---------------
காஷ்மீர் வலுக்கட்டாயமாக
இணைக்கப்பட்டது:
கருத்துக் கூறிய டிஆர்எஸ்
எம்பி கவிதா மீது வழக்கு பதிவு?
***************
***************
***************
***************
*****************
தெலங்கானா முதலமைச்சர்
சந்திரசேகர் ராவ் மகளும்
டி.ஆர்.எஸ்.
கட்சி எம்.பி.யுமான
கவிதா ராவ்
மீது இன்று ஒரு முதல்
தகவல்
அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
ஐதராபாத்தும், காஷ்மீரும்
வலுக்கட்டாயமாக
இந்தியாவுடன்
இணைக்கப்பட்டவை என்று கவிதா ராவ்
பேசியிருந்தார்.
இதையடுத்து அவர்
மீது தேச
நலனுக்கு எதிராகக்
கருத்து கூறியதாக
பிரிவுகள் 123 ஏ 153 பி, 505
ஆகியவற்றின் கீழ் ஜாமீனில்
வெளிவர முடியாத
வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள
து.


ஆனந்த விகடனில் ஸ்குவாஷ் வீராங்கனைகள் தீபிகா பல்லிக்கல் மற்றும் ஜோஷ்னா சின்னப்பா...

Posted: 11 Aug 2014 11:10 AM PDT

ஆனந்த விகடனில்
ஸ்குவாஷ்
வீராங்கனைகள்
தீபிகா பல்லிக்கல்
மற்றும்
ஜோஷ்னா சின்னப்பா பற்றி 'தங்கத்
தமிழச்சிகள்' என்ற
தலைப்பில்
கட்டுரை எழுதியிருக்கிறா
ர்கள்.
நான்
ஒரு முறை தீபிகாவை பேட்டி எடுக்க
சந்தித்தபோது தமிழில்
பேச சொன்னேன். அவர்
வளர்ந்தது சென்னை என்று எனக்குத்
தெரியும்.
அதனாலேயே அப்படி கோரினேன்.
ஆனால் 'I dont speak tamil'
என்று அவர்
மறுத்துவிட்டார்.
அவருக்கு தமிழ்
தெரியுமா?
தெரியாதா?
என்பது நிச்சயமாய்
எனக்கு தெரியாது.
அவரை நான் பழிக்கவும்
இல்லை. என்
வியப்பெல்லாம் ஆனந்த
விகடனின்
கட்டுரை குறித்துதான்.
பிறப்பால் அவர்
ஒரு மலையாளி,
தற்போது வசிப்பது பெங்களூருவில்.
தமிழ் பேச மாட்டார். எந்த
அடிப்படையில் 'தங்கத்
தமிழச்சிகள் என்ற
தலைப்பில் இவர்கள்
கட்டுரை எழுதியிருக்கிறா
ர்கள்.?

அழகிய ஈழம்! பனைமரக் காடே பறவைகள் கூடே! இடம்: காரைநகர்!

Posted: 11 Aug 2014 09:55 AM PDT

அழகிய ஈழம்! பனைமரக் காடே பறவைகள் கூடே!

இடம்: காரைநகர்!


அழகு தஞ்சை தரணி...

Posted: 11 Aug 2014 08:49 AM PDT

அழகு தஞ்சை தரணி...


பகீர்’ பானங்கள்! இன்று வீட்டுக் குளிர்சாதனப்பெட்டியில் வெயில் காலமோ, மழைக்காலமோ...

Posted: 11 Aug 2014 08:40 AM PDT

பகீர்' பானங்கள்!

இன்று வீட்டுக் குளிர்சாதனப்பெட்டியில் வெயில் காலமோ, மழைக்காலமோ எப்போதும் இரண்டு லிட்டர் கலர் பாட்டில் இருக்கிறது. உப்புமா சாப்பிடுவதாக இருந்தால்கூட ஒரு டம்ளர் கலர் ஊற்றி குடிக்கிறார்கள். 'நான் சோடா கலர் குடிப்பது இல்லை. பாட்டிலில் அடைக்கப்பட்ட பழச்சாறுகளைத்தான் குடிக்கிறேன்' என்று ஒரு பிரிவினர் பெருமையடித்துக்கொள்கிறார்கள். 'கழுதை விட்டையில் முன்விட்டை என்ன... பின்விட்டை என்ன?' என்று கிராமத்தில் சொல்வார்கள். அதுபோல உடலைக் கெடுப்பதில் கார்பனேட்டட் குளிர்பானங்களும் பாக்கெட் பழச்சாறுகளும் ஒன்றுபோலதான். ரெடிமேட் பழச்சாறில், 10 சதவிகிதம் மட்டுமே பழச்சாறு உள்ளது. மீதமெல்லாம், சர்க்கரை, நீர், செயற்கை நிறங்கள், சுவையூட்டிகள் மட்டுமே.

ஒரு குளிர்பான நிறுவனம் ஆண்டுக்கு 300 கோடி விளம்பரத்துக்கு செலவு செய்கிறது. 50 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு லிட்டர் குளிர்பானம் தயாரிப்பதற்கு விநியோகச் செலவு உள்பட சேர்ந்து 5 முதல் 7 ரூபாய் ஆகக் கூடும் என்கிறார்கள். ஒரு லிட்டருக்கு 43 ரூபாய் லாபம் என்றால், ஆண்டுக்கு விற்பனையாகும் 430 கோடி பாட்டில்களுக்கு எவ்வளவு பணம் என்று நீங்களே கணக்குப் போட்டு பார்த்துக்கொள்ளுங்கள்.

குளிர்பானச் சந்தை வெறும் தாகம் தணிக்கும் விவகாரம் இல்லை. அது உடலைக் கெடுப்பதில் பன்னாட்டு நிறுவனங்களின் யுத்த களம். இரண்டு முக்கிய அமெரிக்க நிறுவனங்களே இந்தியக் குளிர்பானச் சந்தையின் 70 சதவிகிதத்தை தனது கையில் வைத்திருக்கின்றன. பிரபல நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், பாடகர்கள் என அத்தனை பேரும் அவர்கள் பாக்கெட்டில்!

- எஸ்.ராமகிருஷ்ணன்
- ஜூனியர் விகடன், உணவு யுத்தம் தொடரில் இருந்து...


இந்திய சமையலில் சேர்க்கப்படும் 'கசகசா' போதை பொருட்கள் தயாரிக்க உதவும் மூலப்பொருள...

Posted: 11 Aug 2014 08:30 AM PDT

இந்திய சமையலில் சேர்க்கப்படும் 'கசகசா' போதை பொருட்கள் தயாரிக்க உதவும் மூலப்பொருள் என்பதால் அதுவும் UAEல் தடைசெய்யப்பட்ட பொருள்.கசகசாவை கொண்டு வந்தால் 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.

இது தெரியாமல் துபாய் வழியாக லண்டனுக்கு போக வந்த ஒரு இந்தியரிடம் 'கசகசா' இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள அவருக்கு நீதி மன்றத்தில் வாதாட வழக்கறிஞர் கட்டணம் மட்டும் இந்திய ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 12-15 லட்சங்கள் ஆகும்.

பான் பராக்,பான்,குட்கா போன்றவையும் இங்கு தடை செய்யப்பட்ட பொருட்கள்.துபாய்,ஷார்ஜா,அபுதாபிக்கு வருபவர்கள் அல்லது இந்த விமான நிலையங்கள் வழியாக மற்ற நாடுகளுக்கு போகிறவர்கள் மேற்சொன்ன எதையும் கொண்டு போக வேண்டாம்.
இன்னும் விரிவான தகவல்கள் வேண்டுமென்றால் இந்நாட்டு கஸ்டம்ஸ் இணைய தளத்தில் பார்க்கவும்.

சிறிய கவனக்குறைவுகூட பெரிய விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

- நம்பிக்கை ராஜ்

மருந்தை தேடி அலைய வேண்டாம்...! தீக்காயம் பட்ட உடன், உடனடியாக குளிர்ந்த நீரை சூட...

Posted: 11 Aug 2014 07:40 AM PDT

மருந்தை தேடி அலைய வேண்டாம்...!

தீக்காயம் பட்ட உடன், உடனடியாக குளிர்ந்த நீரை சூடு குறையும் வரை காயத்தில் விடுங்கள்...

பின்னர் ஒரு முட்டையை எடுத்து அதன் வெள்ளைக்கருவை பிரித்து காயத்தின் மீது முழுவதும் படரும் படி தடவுங்கள்...

சிறிது நேரத்தில் வெள்ளைக்கருவானது காய்ந்து ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது...

சிறிது நேரத்தில் வலி முற்றிலும் குறைந்து விடும்...

தொடர்ந்து செய்து வந்தால்.....

அடுத்த 10 நாட்களில் காயத்தின் தடயம் மறைந்து விடும்....

{தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் பயன்படுத்தும் யுக்தியும் இதுவே.}


அழையா விருந்தாய் நுழைந்த வட மொழி! **********************************************...

Posted: 11 Aug 2014 07:40 AM PDT

அழையா விருந்தாய் நுழைந்த வட மொழி!
*********************************************************
வடமொழிச்சொற்கள் மற்றும் அதற்கு நிகரான தமிழ்ச்சொற்கள் முறையே!

அக்கினி - தீ
அநியாயம் - முறைகேடு
அன்னியதேசம் - பிறநாடு
அபராதம் - குற்றம்
அபிஷேகம் - முழுக்கு, நீராட்டு
அர்ச்சனை - வழிபாடு
அற்பம் - சிறுமை
ஆகாயம் - வான், விண்
ஆச்சாரம் - நடத்தை,ஒழுக்கம்
ஆடம்பரம் - பெருமிதம்
ஆத்மா - உயிர்
ஆபத்து - இடுக்கண்
ஆசனம் - இருக்கை
ஆபரணம் - அணிகலன்
ஆரம்பம் - தொடக்கம்,கால்கோள்
ஆசை - விருப்பம்
ஆயுதம் - படை
இச்சை - விருப்பம்
இந்திரன் - வேந்தன்
இயந்திரம் - பொறி
இரகசியம் - மறை
இரசிகன் - சுவைஞன்
இராசா - வேந்தன், மன்னன்
இலகு - எளிமை
இலாபம் - ஊதியம்
உத்தியோகம் - வினை, தொழில்
உபதேசம் - அறிவுரை
உபத்தியாயன் - ஆசிரியன்.
உபமானம் - ஒப்புப்பொருள்.
ஐசுவரியம் - செல்வம்.
கதி - நிலை
கல்யாணம் - திருமணம்
கவி - பா. செய்யுள்
கவிஞன் - பாவலன்,புலவன்
களங்கம் - மறு
காகம் - காக்கை
கிரகம்-கோள்
கிரமம் - ஒழுங்கு
கிராமச்சங்கம் - ஊர்மன்றம்
கீர்த்தி - மிகுபுகழ்
கும்பாபிஷேகம் - குடமுழக்கு
கோபம் - வெகுளி
இந்திரன் - வேந்தன்
சக்தி - ஆற்றல்
சத்தம் - ஒலி
சத்தியம் - உண்மை
சந்திரன் - திங்கள்
சந்தோஷம் - மகிழ்ச்சி
சந்நியாசி - துறவி
சமயம் - நெறி
சமீபம் - அண்மை
சம்பவம் - நிகழ்ச்சி
சங்கம் - அவை
சர்வகலாசாலை - பல்கலைக்கழகம்.
சாட்சி - கரி
சாதம் - சோறு
சாமர்த்தியம் - திறமை
சினேகம் - நட்பு
சிந்தை - எண்ணம்
சிரத்தை - ஊற்றம், நாட்டம்
சுகம் - நலம்
சுத்தம் - தூய்மை.
சுயதேசம் - தன்னாடு
சூரியன் - ஞாயிறு.
சொப்பனம் - கனவு.
சோதி - ஒளி.
ஞானம் - அறிவு.
தண்டித்தல் - ஒற்றுதல்.
தத்துவம் - உண்மை.
தரித்திரம் - வறுமை.
தர்க்கம் - சொற்போர்.
தவம் - நோம்பு.
தானதிகாரி - பொருளாளர்.
தாகம் - வேட்க்கை.
தாசன் - அடியான்.
தாரம் - மனைவி.
தானியம் - கூலம்.
தினம் - நாள்.
தெய்வம் - கடவுள்.
தேசம் - நாடு.
நகரம் - பட்டினம்.
நட்சத்திரம் - நாள், நாள் மீன்(விண்மீன்).
நாசம் - அழிவு.
நியாயவாதி - வழக்குரைப்போன்.
நிர்வாகசபை - ஆட்ச்சிக்குழு.
நித்திரை - உறக்கம்.
நீதிபதி - முறைவேந்தன்.
பக்தி - அன்பு.
பரீட்சை - தேர்வு.
பத்திரம் - ஆவணம்.
பத்திரிகை - இதழ்.
பத்திராதிபர் - இதழாசிரியர்.
பாகம் - கூறு.
பாத்திரம் - கலம், தகுதி.
பிரகாசம் - ஒளி.
பிரசங்கம் - சொற்ப்பொழிவு.
பிரமசாரி - மாணி.
புராணம் - பழமை, பழங்கதை.
புதினப்பத்திரிக்கை - செய்தித்தாள்.
பூசை - வழிபாடு.
மந்திரி - அமைச்சன்.
மந்திரம் - மறைமொழி.
மாதம் - திங்கள்.
மாமிசம் - ஊன்.
முகூர்த்தம் - ஓரை.
முத்தி - வீடு.
மேகம் - முகில்.
மோட்சம் - வீடு.
வசனம் - உரை.
வருஷம் - ஆண்டு.
வாகனம் - ஊர்தி.
வாதி - வழக்காளி.
வாரம் - ஏழல்(ஏழு நாள் கொண்டது)
விசனம் - கவலை.
விதி - ஊழ்.
விஞ்ஞானம் - அறிவியல்.
விஷேசம் - சிறப்பு.
வித்தியாசம் - வேறுபாடு.
விமர்சனம் - திறனாய்வு.
வியாசம் - கட்டுரை.
வைத்தியர் - மருத்துவர்.
ஸ்ரீமான் - திருவாளர்.

சென்னையின் அழகான இடங்களை அழகா காட்டும் நிறைய புகைப்படங்கள் பார்த்திருக்கேன்...ஆன...

Posted: 11 Aug 2014 07:10 AM PDT

சென்னையின் அழகான இடங்களை அழகா காட்டும் நிறைய புகைப்படங்கள் பார்த்திருக்கேன்...ஆனால் ஒரு அழுக்கான இடத்தை இவ்ளோ அழகா காட்டுனது மதன் சுந்தர் அவர்கள் தான்..


பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி வெள்...

Posted: 11 Aug 2014 05:35 AM PDT

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி வெள்ளம் வந்து மக்கள் துயரப்படுவதை கண்டு அதை தடுக்க ஒரு தடுப்பணை கட்ட எண்ணினான் . நொடிக்கு இரண்டுலட்சம் கண அடி நீர்பாயும் காவிரியில் அப்படி ஒரு தடுப்பணை கட்டுவது அவ்வளவு எளிதல்ல ஆனால் அதற்கும் ஒரு வழி கண்டுபிடித்தான் தமிழன் .

நாம் கடல் மணலில் நிற்கும்போது அலை நம் கால்களை அனைத்துச் செல்லும் அல்லவா அப்போது நம் பாதங்கள் மணல் அரிப்பு ஏற்பட்டு மண்ணுக்குள்ளே புதையும் அந்த சிறு சம்பவத்தையே சூத்திரமாக மாற்றி காவிரிக்குள் பெரிய பெரிய பாறைகளை கொண்டுவந்து போட்டார்கள் பின் அது மண் அரிப்பால் புதைந்தபின் அதன் மேல் தண்ணீர் புகாத களிகளை பூசி அதன் மீது வேறு ஒரு பாறையை வைப்பார்கள் பின் அது ஒட்டிக் கொள்ளும் இப்படியாக கட்டப்பட்ட அணைதான் கல்லணை .

இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அணைத்தான் உலகின் மிகப் பழமையான அணை அதற்கு முன்பு உலகில் வேறெங்கும் அணை கிடையாது.இன்றளவிலும் நீர்ப் பாசனத்திற்கு பயன்பட்டு வரும் அணைகளில் மிகப்பழமையானதும், உறுதியானதும் நம் தமிழர்கள் கட்டிய கல்லணை தான் என்று உலகெங்கிலும் உள்ள பொறியாளர்கள் போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கிரார்கள் . இப்படி கட்டுமானத் துறையிலே சிறந்து விளங்கியவன் தமிழன். உலகின் முதல் அணை கட்டியவன் தமிழன்

Posted: 11 Aug 2014 04:50 AM PDT


ஆறு வயது பையன் அவன். எதேச்சையாக மூன்று வயது பெண்குழந்தையின் புகைப்படம் ஒன்று அவன...

Posted: 11 Aug 2014 03:01 AM PDT

ஆறு வயது பையன்
அவன்.
எதேச்சையாக
மூன்று வயது பெண்குழந்தையின்
புகைப்படம்
ஒன்று அவனுக்குக்
கிடைத்தது. அவன் அந்தக்
குழந்தையை வெகு தீவிரமாக
நேசிக்கத்
தொடங்கினான்.
ஆனால் அவள்
யாரென்பதை தேடிக்
கண்டுபிடிக்க மட்டும்
அவனால்
முடியவில்லை.
இருபது வருடங்களுக்குப்
பிறகு..
அவனுடைய
மனைவி அலமாரியை ஒதுங்க
வைக்கும்போது டைரிக்குள்
அந்த
புகைப்படத்தை கண்டுபிடித்தாள்
.
"இந்த
போட்டோ உங்களுக்கு எப்படிங்க
கிடைச்சது?"
"ஏன் கேக்குற?"
"இது என்னோட
போட்டோதான். ரொம்பப்
பிடிச்சது.
வீடு மாத்தும்போது எப்படியோ தொலஞ்சு போனது உங்ககிட்ட
கிடச்சு இருக்கு.."
சொல்லியப்படியே அவன்
தோளில்
சாய்ந்து கொண்டாள்.
நீதி:::::
சனி பிடிக்கணும்னு இருந்தா எத்தனை வருஷம்
ஆனாலும் விடாது.. !
***
நோ.. நோ...
சண்டைக்கெல்லாம்
வரப்படாது.. நெட்ல
சுட்டது தான

இந்த ஜாதியில் மணமகன்/மகள் தேவையென விளம்பரம் தரும் எவர்க்கும் மருத்துவமனை சூழலில்...

Posted: 11 Aug 2014 12:45 AM PDT

இந்த ஜாதியில் மணமகன்/மகள்
தேவையென விளம்பரம் தரும்
எவர்க்கும்
மருத்துவமனை சூழலில்
அதே ஜாதியில்
இரத்தம்தேவை என விளம்பரம் தர
தைரியமிருப்பதில்லை.

# படித்ததில் பிடித்தது #

0 comments:

Post a Comment