Monday, 25 August 2014

FB Posts by Araathu அராத்து

FB Posts by Araathu அராத்து

சயனைட் குறுங்கதைகள்- பாம்பு பாம்புக்கு குளிரும். வளைந்து நெளிந்து பம்பு செட்டு கொட்டாய்க்குள் புகுந்த பாம்பு , மீந்து கிடக்கும் கம்பளிக்குள் ஒடுங்கிக்கொண்டது. பாம்பு, தூங்கும்போது வளைந்து நெளியாமல் நேர்க்கோட்டில் ஓய்வெடுக்கும். விடிகாலை வரை படுத்திருந்தவன் பாம்பு மேல் கால் போட்டானோ , இல்லை அவன் மேல் பாம்பு வால் போட்டதோ தெரியவில்லை. விடிந்து எழுந்து சோம்பல் முறித்தவன் அப்போதும் கோடு போல கிடக்கும் பாம்பைப்பார்த்தான். பதறி ஓடு பெருந்தடி எடுத்து வந்தான். சத்தம் கேட்டு கண் விழித்த பாம்பு படம் எடுத்தது.தூக்கக் கலக்கத்தில் எடுத்த படமே பிரமாதமாக இருந்தது. திரும்ப எடுத்த படத்தை வாபஸ் வாங்கி மீண்டும் ஒரு சிறப்பான படம் எடுத்தது. ஏதோ யோசித்தவன் தடியைத் தூக்கிப்போட்டு பல் தேய்க்கப்போனான். அவனனும் பாம்பும் சில நாட்கள் தூக்கம் வராமல் புரண்டபடி கிடந்தனர்.

Posted: 24 Aug 2014 01:54 PM PDT

0 comments:

Post a Comment