Sunday, 27 July 2014

Interesting Tamil Facebook posts: 27 Jul 2014

  • Posted:Sun, 27 Jul 2014 17:52:46 +0100
    வேலையில்லா பட்டதாரி- விமர்சனம்

    1) ஒருமுறை நான் ஒரு பெட்டி கடையில் பெப்சி வாங்கினேன். 8ரூபாய்க்கு பதில் 10ரூபாய் கேட்டார் கடைக்காரர். ஏன் எனக் கேட்டபோது அவர் சொன்ன பதில் தூக்கிவாரிப்போட்டது. ”நீங்கள்லாம் ஐடில லட்சம் லட்சமா வாங்குவீங்க நாங்க மட்டும் 8ரூபாய்க்கு விக்கனுமா? நீங்க சம்ப்ளத்த குறைச்சுக்கங்க நான் விலையை குறைச்சுக்குறேன்” என சம்பந்தமே இல்லாமல் ஒரு பதிலை கோபத்துடன் சொன்னார். அந்த பெப்சியை வாங்கிய காலத்தில் எனக்கு வேலை கூட இல்லை. பொம்மை போட்ட டீஷர்ட் போட்டிருந்த ஒரே பாவத்துக்காக என்னையும் ஐடி ஊழியனாக அவரே முடிவுசெய்துகொண்டார். பெட்டிக்கடைக்காரர் பிரச்சினையாவது 2ரூபாய் பிரச்சினை. ஆனால் சென்னை வீட்டு உரிமையாளர்கள் பலர் ஐடி கம்பனி என்றாலே லட்சம் லட்சமாக சம்பளம் வாங்குகிறார்கள், எடுத்த உடனேயே 50000ரூபாக்கு மேல் சம்பளம் வாங்குவார்கள் என்றெல்லாம் அவர்களாகவே கற்பனை செய்துகொள்கிறார்கள். வீட்டு வாடகைகள் தமிழக அரசின் விலையேற்றம் போல கண்டபடி ஏறியதற்கும் இந்த கற்பனாசக்தி தான் காரணம். ஐடி துறையில் 4000ரூபாயில் இருந்து 500000ரூபாய் வரைக்கும் இளைஞர்கள் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் 4000-25ஆயிரம் சம்பளம் வாங்குகின்றவர்கள் தான் மிகப் பெரும்பான்மையானவர்கள். நிலைமை இப்படி இருக்க வேலையில்லா பட்டதாரி படத்தில் கால்செண்டர் வேலைக்கு 50000ரூபாய் சம்பளம், பி.டி.எஸ் படித்தால் 2லட்சம் சம்பளம்
    என்றெல்லாம் கூச்சப்படாமல் புருடா விடுகிறார்கள். பி.பி.ஓக்களில் அதிகபட்சமாக புதிய ஆளுக்கு 15ஆயிரம் கொடுப்பார்கள். பி.டி.எஸ் படித்துவிட்டு 10000ரூபாய்க்கு கால் செண்டரில் வேலை பார்க்கும் ‘பல் டாக்டர்கள்’ எத்தனையோ பேரை பார்த்திருக்கிறேன். ஆனால் பெரும்பாலான தமிழ் படங்களில் ஐடி கம்பனியில் வேலை பார்க்கிறவன் என்றாலே பெரும் பணத்தில் புரள்கிறவன் என எடுக்கிறார்கள். வேலையில்லா பட்டதாரி வேறு ஹிட் ஆகித் தொலைத்திருக்கிறது. இதனால் எவன் எவன் என்ன என்ன விலைகளை எல்லாம் ஏற்றித்தொலைக்கப் போகிறான் எனத் தெரியவில்லை.

    2) படத்தில் ஆங்காங்கே “என்னை பொட்டைனு நினைச்சியா?” “அப்பாவும் பையனும் பொட்டையாக இருக்கீங்க” என்றெல்லாம் வசனம் வருகிறது. இந்த வசனங்களை பேசிய வாயாலேயே படம் முழுக்க அம்மா செண்டிமெண்ட்டும் பேசுகிறார் தனுஷ். உலகின் அனைத்து அம்மாக்களுமே பொட்டைகள் தான். பொட்டைகளால் தான் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. தனுஷ் இயங்கிக்கொண்டிருக்கிறார். நான் இயங்கிக்கொண்டிருக்கிறேன். பொட்டைகள் என்பதை தரக்குறைவான வார்த்தையாக அடுத்த தலைமுறையினரிடமும் கடத்தும் வேலையை தனுஷ் போன்றவர்கள் தயவுசெய்து நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    3) படத்தின் முதல்பாதி நன்றாக இருக்கிறது. இரண்டாம் பாதி 80களின் ’மிஸ்டர் பாரத்தை’ சூர மொக்கையாக ரீமேக் செய்திருக்கிறார்கள்! நன்றாக எழுதுகிறார் எனச் சொல்லமுடியாவிட்டாலும் இளைஞர்களுக்கு பிடித்த வகையில் பாடல்களை எழுதியிருக்கிறார் தனுஷ். ரஜினியிச வாடை நிறைய அடித்தாலும் படம் முழுதும் தனுஷ் பின்னுகிறார். தனுஷுக்காக மட்டும் படத்தை பார்க்கலாம்...
  • Happy birthday to next illaiya thala

    Posted:Sun, 27 Jul 2014 17:46:47 +0100
    Happy birthday to next illaiya thala

  • Posted:Sun, 27 Jul 2014 16:30:32 +0100
    ''மனதைக் கவர்ந்த ஆட்டோ வாசகங்கள்?''

    ''இதோ...

    * உலக எண்ணிக்கையில் ஒருவனாக இருப்பதைவிட, உலகமே உன்னை எண்ணும் அளவுக்கு இரு!

    * முதுகுக்குப் பின்னால் ஒரே ஒரு காரியம் மட்டும் செய்யலாம். அது அடுத்தவரின் முதுகைத் தட்டிக்கொடுப்பதுதான்.

    * கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழை அல்ல; அதிகமாக ஆசைப்படுபவனே ஏழை!

    * உங்கள் கௌரவம் வேறு எங்கும் இல்லை; உங்கள் நாக்கு நுனியில்தான் இருக்கிறது!'

    * கடவுளின் பெயரை உச்சரிக்கும் உதடுகளைக் காட்டிலும், ஓர் ஏழைக்கு உதவும் கைகளே புனிதமானவை!

    * கதவைத் தட்டாதவர்கள் எத்தனையோ வாய்ப்புகளை இழந்திருக்கிறார்கள்!

    * இந்தியாவுக்கு இப்போதுள்ள முக்கியமான பிரச்னையே மக்கள்தொகை பெருக்கம்தான். எனவே, இந்த ஆட்டோவில் பிரசவத்துக்கு இலவசம் இல்லை. மீட்டர் தொகைக்கு மேல் 50 ரூபாய் வசூலிக்கப்படும்!

    எப்பூடி!''

    - மூ.சித்திரக்குமரன், சென்னை.
    நானே கேள்வி... நானே பதில்!
  •  
  • Posted:Sun, 27 Jul 2014 16:00:33 +0100
    தன்னம்பிக்கை இல்லாதவனுக்கு
    .
    எந்த கடவுளையும் நம்பி
    .
    பயன் இல்லை !!
    .
    தன்னம்பிக்கை உள்ளவனுக்கு ,

    .
    எவனை கண்டும் பயம் இல்லை !!!
    .
    [ உன்னை நம்பு , நீ தான் உனக்கு கடவுள் ]

     
  • Posted:Sun, 27 Jul 2014 15:30:02 +0100
    இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்... பெறுமதியை சொல்வார்கள்...!

    ► ஒரு மில்லி செகண்டின் மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கியவரைக் கேட்டால் தெரியும்...!

    ► ஒரு செகண்டின் மதிப்பை விபத்தில் உயிர் தப்பியவரைக் கேட்டால் தெரியும்...!

    ► ஒரு நிமிடத்தின் மதிப்பை தூக்கிலடப் படும் கைதியைக் கேட்டால் தெரியும்...!

    ► ஒரு மணி நேரத்தின் மதிப்பை உயிர் காக்க போராடும் மருத்துவரைக் கேட்டால் தெரியும்...!

    ► ஒரு நாளின் மதிப்பை அன்று வேலை இல்லாத தினக் கூலி தொழிளாலரைக் கேட்டால் தெரியும்...!

    ► ஒரு வாரத்தின் மதிப்பை வாரப் பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியரைக் கேட்டால் தெரியும்...!

    ► ஒரு மாதத்தின் மதிப்பை குறைப் பிரசவம் ஆகும் ஒரு தாயைக் கேட்டால் தெரியும்...!

    ► ஒரு வருடத்தின் மதிப்பை தேர்வில் தோல்வியுற்ற
    ஒரு மாணவனைக் கேட்டால் தெரியும்...!

    >>நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார்.. ஓடுவது முள் அல்ல..! உன் வாழ்க்கை...
  • Chennai Amirtha.. :p

    Posted:Sun, 27 Jul 2014 15:00:59 +0100
    Chennai Amirtha.. :p

  •  
  • Posted:Sun, 27 Jul 2014 14:13:31 +0100
    செருப்பில்லாமல் நடப்பவர்களை விட,

    பொறுப்பில்லாமல் நடப்பவர்களே அதிகம்!
     
  •  Posted:Sun, 27 Jul 2014 13:51:25 +0100
    அடுத்த வருசம் பாருங்களேன்...மறந்தாப்ல சிவா நடிச்ச வெளம்பரத்துக்கும் அவார்டு கொடுப்பாய்ங்க #MarkMyWords
  • Posted:Sun, 27 Jul 2014 13:35:18 +0100
    அஜித்தின் பாடலை கூட சன் டிவியில் போட மாட்டர்கள் சில வருடங்களுக்கு முன்பு-ஆனால்
    இன்று அதிகமான டிஆர்பி கிடைக்கும் விருது வழங்கும் விழாவுக்கு சமமான டிஆர்பி வாங்க இன்று அஜித் தேவைப்படுகிறார்

    #தலடா

  • Twitter Ajith Fans _/\_ #MASSBAA

    Posted:Sun, 27 Jul 2014 13:12:57 +0100
    Twitter Ajith Fans _/\_ #MASSBAA

  • #ROFL #VIJAYAWARSDS #OSCARAWARDS

    Posted:Sun, 27 Jul 2014 13:04:58 +0100
    #ROFL #VIJAYAWARSDS #OSCARAWARDS

  • Oru manidhanin veveru mugangal - SARABHAM - nice poster

    Posted:Sun, 27 Jul 2014 12:03:49 +0100
    Oru manidhanin veveru mugangal - SARABHAM - nice poster

  • #sun_tv vs #vijay_tv #veeram vs #vijay_awards

    Posted:Sun, 27 Jul 2014 09:49:06 +0100
    #sun_tv vs #vijay_tv

    #veeram vs #vijay_awards

  • <3

    Posted:Sun, 27 Jul 2014 07:30:47 +0100


  • Sarabham - August 1st

    Posted:Sun, 27 Jul 2014 07:00:26 +0100
    Sarabham - August 1st

     
  •  
  •  
  • Posted:Sun, 27 Jul 2014 06:54:27 +0100
    மத்த எல்லாருக்கும் பேன்ஸா இருக்க தில்லு இருக்கலாம் விஜய்க்கு பேனா இருக்க தியாகம் வேணும்
  • Guess ??????

    Posted:Sun, 27 Jul 2014 06:30:17 +0100
    Guess ??????

  • Posted:Sun, 27 Jul 2014 05:52:27 +0100
    அசிங்கங்கள் நிறைந்த
    இவ்வுலகை ஆங்காங்கே
    அழகு செய்து கொண்டிருக்கிறது
    அன்பு என்னும் மந்திரம்...!

  • CSE Department gethu ! #VIP Inspired... #SSN #paradigm #VIP Source : CSE Dept,...

    Posted:Sun, 27 Jul 2014 05:31:37 +0100
    CSE Department gethu !
    #VIP Inspired...

    #SSN #paradigm #VIP
    Source : CSE Dept, SSN College


    Veralevel Intha Paradigm! (VIP)

    Click Paradigm and like our page for more updates on our sympo :)#VeralevelInthaParadigm inspired from Velai Illa Pattathari(VIP) Trailer :D
  • Pls inimey yaarumey Drink pannathinga pls :'(

    Posted:Sun, 27 Jul 2014 05:23:14 +0100
    Pls inimey yaarumey Drink pannathinga pls :'(

  • Iniya Kaalai vanakkam

    Posted:Sun, 27 Jul 2014 04:28:30 +0100
    Iniya Kaalai vanakkam

  • Wow what a two semma eyes

    Posted:Sat, 26 Jul 2014 19:25:10 +0100
    Wow what a two semma eyes

  • Ithuvum Nadakalam....

    Posted:Sat, 26 Jul 2014 18:00:10 +0100
    Ithuvum Nadakalam....

  • Posted:Sat, 26 Jul 2014 17:30:58 +0100
  • <3

    Posted:Sat, 26 Jul 2014 17:00:55 +0100


  • Posted:Sat, 26 Jul 2014 16:30:49 +0100
    தனியாக சீட்டு விளையாடுபவர்களை
    தனியாக சமைத்துச் தனியாக சாப்பிடுகிறவர்களை
    தனியாக பழைய பாடல்கள் கேட்பவரை
    தனியாக மது அருந்துகிறவர்களை
    தனியாக அமர்ந்து நூலகங்களில் வாசிப்பவர்களை
    தனியாக உலர்சலவையகங்களுக்கு வருபவர்களை
    தனியாக நகராட்சிப் பூங்காவில் அமர்ந்திருப்பவர்களை
    தனியாக தேவாலயங்களில் பிரார்த்திப்பவரை
    தனியாக கிளிஜோஸ்யம் பார்ப்பவரை
    தனியாக அரசமர இலையை அவதானிக்கிறவரை
    தனியாக நின்று காக்கை கொத்தி இழுக்கும்
    பெருச்சாளியின் திறந்த வயிற்றைக் காண்கிறவரை
    தனியாக இருக்கும் அவர் பக்கம் உருண்டுவரும்
    விளையாட்டுப் பந்தை எடுத்து வீசாதவர்களை
    தன்னுடைய கால்பக்கம் நிழற்குடையில் ஒதுங்கும்
    நாய்க்குட்டியைக் குனிந்து பார்க்காதவர்களை
    ஒன்றும் செய்ய முடியாததற்கு வருத்தப்படாதீர்கள்.
    அவர்கள் தேர்ந்தெடுத்த தனிமையில்
    அப்படியே பத்திரமாக இருக்கட்டும்.
    அவர்களின் தீவைச் சுற்றியே இருக்கிறது
    அத்தனை திசைகளிலும்
    நம் கடல்.
  • :p

    Posted:Sat, 26 Jul 2014 16:00:38 +0100
    :p

  • Posted:Sat, 26 Jul 2014 15:28:26 +0100
  • Posted:Sat, 26 Jul 2014 15:21:16 +0100
    #பொய் சொல்பவர்களும், சந்தர்ப்பவாதிகளும் வெற்றி பெறும் உலகில்..

    உண்மைகளையும் , கடவுளையும் நம்பி ஏமாந்து போகின்றனர் அப்பாவிகள்.

    இனிய இரவு

0 comments:

Post a Comment