Wednesday, 3 June 2015

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts

Therinthu Kolvom: Tamil Facebook Wall posts


புதிய வழியில் குடும்ப பெண்களை குறிவைக்கும் போலி கஸ்டமர் கேர்.......!! குடும்ப பெ...

Posted: 03 Jun 2015 08:54 AM PDT

புதிய வழியில் குடும்ப பெண்களை குறிவைக்கும் போலி கஸ்டமர் கேர்.......!!
குடும்ப பெண்களை குறிவைத்து அவர்களின் செல்போனுக்கு Private Number லிருந்து போன் செய்து தாங்கள் கஸ்டமர் கேரிலிருந்து பேசுவதாகவும் உங்களது செல்போன் இணைப்பு யாருடைய பெயரில் உள்ளது என்றும் கேள்வி கேட்கிறார்கள்.
கணவரின் பெயரில் இருக்கிறது அவர் வெளிநாட்டில் இருக்கிறார் என்று கூறும்போது அது ஏற்றுக் கொள்ளப்படாது.
உங்களுடைய போட்டோக்களையும், முகவரியையும் நாங்கள் கொடுக்க கூடிய நம்பருக்கு அனுப்புங்கள், இல்லையென்றால் உங்களது சிம் கார்ட் ரத்து செய்யப்படும் என்று பேச்சு கொடுத்து காம வலையில் விழ வைக்கும் நாசக்கார சம்பவம் தமிழகத்தில் ஒரு மாதமாக நடந்து வருகிறது.
மேலும் அவர்கள் கூறும்போது உங்களது சிம் கார்டை ரத்து செய்து விட்டால் கார்டிலுள்ள அனைத்து பணமும் ரத்தாகிவிடும் என்றும் மிரட்டி சொந்த விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
ஆகையால் குடும்ப பெண்களுக்கு தெரியாத நம்பரிலிருந்து எந்த போன் வந்தாலும் அவர்களுக்கு எவ்வித முக்கியத்துவமும் கொடுக்க வேண்டாம்.


0 comments:

Post a Comment