Wednesday, 3 June 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


நம் முன்னோர் பெருமையை உலகறிய செய்வோம்..! #######################################...

Posted: 03 Jun 2015 10:10 AM PDT

நம் முன்னோர் பெருமையை உலகறிய செய்வோம்..!
#################################################

வாகனங்களுக்கு முன்னால் எலுமிச்சம்பழம், மிளகாய் கட்டும் பழக்கம் மூடநம்பிக்கை இல்லையென்று இன்றைய விஞ்ஞானம் சொல்கிறது.

எலுமிச்சம் பழத்தில் உள்ள சிட்ரோனிக் அமில்கா (Cidronic amilga) என்னும் அமிலமானது மிளகாயில் உள்ள பென்னியோசிட் (Benniyocid) என்னும் காரத்துடன் இரசாயனப் பகுப்பாகி, மிதீரியட் (methiriyed) என்னும் ஒருவகை உந்து வாயுவை வெளியிடுகிறது. அந்த வாயுவை வாகனத்தின் பானட்டில் இருந்து ஸ்டியரிங் வரை செல்லும் எத்ஹோயிட் (Ethgoid) என்னும் கலப்பு மூலகத்திலான உலோகக்கம்பி வாகனத்தின் உட்பகுதிவரை கடத்துகிறது.

அந்த வாயுவானது ஓட்டுனரை நித்திரை கொள்ளாமலும், உற்சாகத்துடனும் இருக்கச் செய்வதுடன், பிரேக் ஆயிலையும் வற்றாமல் பாத்துக்கொள்கிறது. இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த வாயுவானது மேற்சொன்ன இரசாயனப் பகுப்பால் ஒரு வாரம் மட்டுமே கிடைக்கிறது. அதனால்தான் வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் ஏற்கனவே கட்டப்பட்டவை அகற்றப்பட்டு புதிதாகக் கட்டப்படுகின்றது..!

வெள்ளிக்கிழமைகளில் இதனைச் செய்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. பூமியானது சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடையில் வடமத்திய ரேகையில் கடக்கக் கோட்டுக்கு தெற்கே 5 டிகிரி மேல்நோக்கி ஏறி, 3 டிகிரி கீழ்நோக்கி இறங்குவதால் இந்த இரசாயன பகுப்பு அதிகம் நடக்கிறது ..!!!

நம் முன்னோர்கள் மூடர்கள் அல்ல..!
விஞ்ஞான அடிப்படையில் தான் செயல்பட்டிருக்கிறார்கள்..!
நம் முன்னோர் பெருமையை உரக்க சொல்வோம்..!
இந்த செய்தியை பகிர்ந்து உலகறியச் செய்வோம்..!

மூடத்தனங்களின் பின்னால் எல்லாம் அறிவியில் உண்மை இருப்பதாகச் சொல்லிக்கொண்டு மனட்சாட்சியே இல்லாமல் மோசடி வேலையில் இறங்கிவிடும் ஃபேஷன் ஒன்றை ஆங்காங்கே காணமுடிகிறது.

இப்படி ஒன்றுதான் இது

இவன் செய்யும் லுல்லுல்லாயிக்கெல்லாம் "சாமி கண்ணைக் குத்தும்" தரத்திலான விஞ்ஞானக் காரணம் கண்டு பிடித்து சொல்லிக் கொண்டிருக்கிறான்.
இந்த மோசடி வேலைகளில் இறங்கும் நேரத்தில் ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பைச் செய்து கொடுதாலாவது தேசம் உருப்படும்.

இப்பல்லாம் பொய்யை சொல்லுபவர்கள் கொஞ்சம் அறிவியலில் உள்ள பெயர்களை சேர்த்து சொல்லி உண்மைப்போல் பரப்புறார்கள் .உஷார் உஷார் .

Relaxplzz

மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்கு கீழ் பல சிற்றரசுகள் உள்ளன. ஒரு முறை இந்த...

Posted: 03 Jun 2015 08:10 AM PDT

மிகப் பெரிய சக்கரவர்த்தி அவன். அவனுக்கு கீழ் பல சிற்றரசுகள் உள்ளன. ஒரு முறை இந்த அரசனின் அவைக்கு வருகை தந்த சீன தேசத்து சேர்ந்த அறிஞர்
ஒருவர் தாயை இழந்த இரண்டு பஞ்சவர்ண கிளிக்குஞ்சுகளை பரிசளித்துவிட்டு சென்றார். பஞ்சவர்ண கிளியை அதிர்ஷ்டத்தின் சின்னமாக
கருதுவர் என்பதால் அரசன் மிகவும் அக மகிழ்ந்து தனது
நாட்டின் பறவைகள் பயிற்சியாளரை அழைத்து
"இவற்றை நல்ல முறையில் பராமரித்து, பழக்கப்படுத்தி
பறப்பதற்கு பயிற்சியளியுங்க ள்!" என்று கட்டளையிட்டான்.

மாதங்கள் உருண்டோடின. பறவைகள் எப்படி வளர்கின்றன? நன்றாக பறக்கின்றனவா? என்று
தெரிந்துகொள்ள பயிற்சியாளரை அழைத்தான்
மன்னன். "அரசே… இரண்டு பறவைகளில் ஒன்று நன்றாக பறக்க கற்றுக்கொண்டுவிட்டது. மற்றொன்று எவ்வளவோ முயற்சித்தும் அது அமர்ந்திருக்கும் கிளையை விட்டு நகர மறுக்கிறது" என்றான்.

உடனே மன்னன், தனது நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற
கால்நடை மருத்துவர்களையும் பறவையியல் நிபுணர்களையும் அழைத்து பறவைக்கு என்ன ஆயிற்று?
அது ஏன் பறக்க மறுக்கிறது? என்று ஆராயுமாறு
கட்டளியிட்டான். அவர்களும் அதை முற்றிலும்
பரிசோதித்துவிட்டு, "இந்த பறவையிடம் எந்த
குறையுமில்லை. உடலில் ஊனமுமில்லை. ஆனால் அது ஏன் பறக்க மறுக்கிறது என்று புரியவில்லை அரசே" என்றனர்.

உடனே தனது அமைச்சரை அழைத்து "என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ தெரியாது. இந்த கிளி
இன்னும் இரண்டு நாளில் பறக்கவேண்டும்" என்றான்
கண்டிப்புடன். சில நாட்கள் கழித்து ஒரு நாள் தனது மாளிகையின் உப்பரிகையிலிருந்து வெளியே பார்க்கிறான். கிளி அதே இடத்தில் தான் உட்கார்ந்திருந்தது. நகரவேயில்லை. மன்னனுக்கு
என்னவோ போலிருந்தது. "இதற்கு என்ன ஆயிற்று ஏன்
பறக்க மறுக்கிறது என்று தெரியவில்லையே?

நாட்டுப்புறத்தில் உள்ள வயலில் வேலை செய்யும்
விவசாயிகள் அல்லது மூத்த குடிமக்கள் எவரையேனும்
அணுகி இது பற்றி கேட்கவேண்டும். அவர்களுக்கு
ஒருவேளை இது பறக்க மறுப்பதன் காரணம்
தெரிந்திருக்க்கலாம்" என்று கருதி உடனே காவலர்களை
அழைத்து, "நாட்டுப்புறத்திற்கு போய் யாரேனும் ஒரு
மூத்த விவசாயி ஒருவரை அழைத்து வா" என்று
கட்டளையிட்டான்.

அடுத்தநாள் காலை கண்விழிக்கும்போது, அந்த
பஞ்சவர்ணக் கிளி மரத்தை சுற்றி அங்கும் இங்கும்
பறந்துகொண்டிருப்பதை பார்த்தான். அவனுக்கு ஒரே சந்தோஷம். "இந்த அற்புதத்தை செய்தவரை உடனே அழைத்து வாருங்கள்!" என்றான்.

அந்த விவசாயி மன்னன் முன்பு வந்து பணிந்து நின்றார்.
"எல்லாரும் முயற்சி செய்து தோற்றுவிட்ட நிலையில் நீ
மட்டும் கிளியையை எப்படி பறக்கச் செய்தாய்?"

மன்னன் முன் தலையை வணங்கியபடி விவசாயி
சொன்னார்… "அது ரொம்ப சுலபமான காரியம் அரசே.
மரத்தில் ஏறி அந்த பறவை உட்கார்ந்திருந்த கிளையை
நான் வெட்டிவிட்டேன். வேறொன்றுமில்லை!"
என்றார்.

இறைவனும் சில சமயம் அந்த விவசாயி போல, நம்மை நமது சக்தியை உணரச் செய்யவேண்டி, நாம்
அமர்ந்திருக்கும் கிளையை வெட்டிவிடுவான். அது நமது
நன்மைக்கே. நம் சக்தியை ஆற்றலை நாம் உணரவேண்டியே என்று கருதி நம்மை உயர்த்திக்கொள்ள முயற்சிக்கவேண்டும். நாம் அனைவரும் உயர உயர பறப்பதற்கு படைக்கப்பட்டவர்கள். ஆனால் பல சமயங்களில் நாம்
நமது சக்தியை உணராமல் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு பழக்கப்பட்ட வேலைகளை மட்டுமே அது தான் நம்மால் முடியும் என்று கருதி செய்து வருகிறோம். நாம்
சாதிக்க கூடியவை எண்ணற்றவை. முடிவற்றவை.

ஆனால் நம்மில் பலருக்கு அது கண்டுபிடிக்கப்படாமலே
போய்விடுகிறது. செக்கு மாடு போல, ஒரே இடத்தில்,
மிக சுலபமான, ஒரே வேலையை செய்வதிலே தான்
நாம் ஆர்வம் செலுத்துகிறோம். ஆகையால் தான் பலருக்கு வாழ்க்கை ஒரு உற்சாகமான, த்ரிலிங்கான, மன நிறைவான ஒன்றாக இல்லாமல் மிகச்
சாதாரணமாக கழிந்துவிடுகிறது. நாம் அமர்ந்திருக்கும்
(ஒட்டிக்கொண்டிருக்கும்) பயமென்னும் கிளையை
வெட்டி எறிந்து, உயரப் பறக்கும் பெருமிதத்திற்க்காக
சுதந்திரப் பறவைகளாய் நம்மை விடுவித்துக்கொள்வோம்.

நாம் சாதிக்கப் பிறந்தவர்கள்.செக்கு மாடுகள் அல்ல.

(y) (y)

Relaxplzz

பல ஆண்டுகளாக ஃபேர் அன் லவ்லி மார்க்கெட்டில் விற்பனையாகுது அப்படின்னா கருப்பான பெ...

Posted: 03 Jun 2015 07:35 AM PDT

பல ஆண்டுகளாக ஃபேர் அன் லவ்லி மார்க்கெட்டில் விற்பனையாகுது அப்படின்னா கருப்பான பெண்களே நாட்டில் இருக்கக்கூடாது அல்லவா.!

#இதுக்கு_போடுங்கய்யா_வழக்கு

- வெங்கடேஷ் ஆறுமுகம் @ Relaxplzz

இது நம்ம சென்னை பா... சும்மா அதிருதில்ல...

Posted: 03 Jun 2015 07:13 AM PDT

இது நம்ம சென்னை பா... சும்மா அதிருதில்ல...


இது நம்ம சென்னை பா... சும்மா அதிருதில்ல...

தொட்டிலில் தூங்கினால் விழுந்து விடுவேன் என்று தன் தோளிலே தூங்க வைப்பார் #அப்பா

Posted: 03 Jun 2015 06:50 AM PDT

தொட்டிலில் தூங்கினால் விழுந்து விடுவேன் என்று
தன் தோளிலே தூங்க வைப்பார்

#அப்பா


Posted: 03 Jun 2015 06:47 AM PDT


இப்படிதான் பெப்சி, கோக்கில் பூச்சி மருந்து இருக்கிறது என 14 இந்திய ஆராய்ச்சி அமை...

Posted: 03 Jun 2015 05:38 AM PDT

இப்படிதான் பெப்சி, கோக்கில் பூச்சி மருந்து இருக்கிறது என 14 இந்திய ஆராய்ச்சி அமைப்புகள் ஒன்று கூடி அறிக்கை எல்லாம் வெளியிட்டது ...அவன் அசால்ட்டா ..உங்க நாட்டு நிலத்தடி நீரில் இருக்கும் பூச்சி மருந்துதான் இதற்கு காரணம் ..அதனை சரி செய்யுங்கள் என மறுப்பறிக்கை வெளியிட்டுவிட்டு இன்று வரை குளிர்பான வியாபாரம் அமோகமாக நடந்துதான் வருகிறது ....

இன்று மேகிக்கு எதிராக பொங்கும் மக்களுக்கு Nestle நிறுவனம் எப்படிபட்ட பகாசூர நிறுவனம் என தெரியுமா என தெரியவில்லை ....நமது நாட்டின் குழந்தைகள் குடிக்கும் பால் பவுடர், சாக்லேட், காலை உணவு என பலவற்றிலும் nestle வின் முத்திரையை பார்க்கலாம் .....சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் "Nestle"

சில வாரங்களுக்கு முன்பு ..ஸ்விட்சர்லாந்தின் Cantonal Bank என்னும் வங்கி 2013 ல் வெளியிட்ட விளம்பரத்தில் இடம்பெற்றிருந்த சக்கரங்களுடன் கூடிய சிங்கத்தின் படத்தை காப்பி அடித்தே மோடியின் "Make In India" லோகோ உருவாக்கபட்டுள்ளதாக வெளியான சர்ச்சையை தொடர்ந்து ....இன்று இந்திய அரசு .எங்களின் சிங்கம் அசோக சக்கரத்தின் சின்னம் என்கிற விளக்கத்தை வெளியிட்டு உள்ளது.....

மேகி நூடூல்ஸ்க்கும் ..மேக் இன் இந்தியா லோகோ சர்ச்சைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்றே நம்புவோமாக

இதையெல்லாம் தாண்டி ...நான் பெப்சி, கோக் குடித்து 13 ஆண்டுகள் ஆகிறது ..மேகி நூடூல்ஸ் மட்டுமல்ல எந்த நூடூல்சையும் வாங்குவதை நிறுத்தி 4 ஆண்டுகள் ஆகிறது ...இடியாப்பம் மட்டுமே நாங்கள் சாப்பிடும் நூடூல்ஸ்

மேலிருந்து போடுவதுதான் தடை....கீழிருந்து நாமே செய்வது கட்டுப்பாடு ...கட்டுப்பாட்டின் மூலமே ..இத்தகைய தேவையற்ற உணவை நாம் ஒதுக்கி தள்ள முடியும் என்பது எனது தாழ்மையான கருத்து ..

- நிக்கோலஸ் கோபர்நிக்கஸ் @ Relaxplzz

ஆணுறையோ பெண்ணுறையோ அவசியமெனில் அணிந்துத் தொலையுங்கள் தேவை முடிந்தபின்பு - நடுத...

Posted: 02 Jun 2015 06:00 PM PDT

ஆணுறையோ பெண்ணுறையோ
அவசியமெனில் அணிந்துத் தொலையுங்கள்
தேவை முடிந்தபின்பு - நடுத்
தெருவில் போடாதீர்கள்
அரும்புகளும் அதைக்கண்டு
அர்த்தம் தேடித் தவிக்கிறது...

மாதவிடாய் என்பது - பெண்
மகத்துவத்தில் ஒன்றாகும்
வீதியில் போட்டு நீங்களும் - அதனை
விளம்பரம் செய்யாதீர்
நெகிழிப்பையில் முடித்து
குப்பையலிட மறவாதீர்....

இரவுகென்றுப் பல உடைகள்
விருப்பம்போல் அணியுங்கள்
ஆனால் அறிவின்றி அதனோடே
சந்தைவரை செல்லாதீர்
ஆடவரைத் தூண்டாதீர்..
..
பொதுக் கழிப்பிடங்கள்
போதுமானவரை உண்டு - இனியும்
மூச்சடைக்க வைக்காதீர்
விலங்கினம் போல் வீதியிலே கழிக்காதீர்...

சின்னஞ்சிறு குழந்தைகளும்
உண்டுக் களிக்கிறது பலகாரம்
தள்ளுவண்டித் தோழமைகளே
கைகள் சுத்தம் செய்ய மறவாதீர்
குழந்தைகளைப் பேணத் தவறாதீர்....

வீசும் குப்பைக் காற்றில் பறந்து
வாகன ஓட்டியின் மேல் விழுந்து
நிலைத்தடுமாறி விபத்துகளும் நிகழக்கூடும்
குப்பைகளைத் தொட்டியில் போடப் பழகிடுவீர்...

நன்மைக்கென்றுப் புரிந்திடுவீர் - நம்
செல்வங்களின் நலன்கருதி நடந்திடுவீர்
பாதிக்கப்படுவோரில் நாமும் அடக்கம் - எனவே
சுகாதாரம் கடைபிடிப்பீர் - நம்
சுற்றுப்புறம் காத்திடுவீர்.....

(நாசூக்கா சொல்லத் தெரியலங்க.... சில கன்றாவிகள சகிக்க முடியலங்க....)

- தோழி ஷியாமிளா

Relaxplzz

0 comments:

Post a Comment