Relax Please: FB page daily Posts |
- சிரிக்க மட்டும்.. இதெல்லாம் சீரியஸா எடுத்துகிட்டு சண்டைக்கு வரகூடாது. கேள்வி :...
- கடாபியின் மறுபக்கம்...... 1. லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவ...
- கொஞ்சம் சிரிங்க பாஸ்... :P :P கணவன்: “என்னடி சாம்பார்ல ஒரே சில்லறைக் காசா கிடக்...
- *அன்பு மகள் அனுப்பும் மடல் ....* ''ஒவ்வொரு பெண் பிள்ளைக்கும் அவர்கள் தந்தைக்கும...
- நிறைய நண்பர்கள் கிடைக்க வேண்டுமா? 1.யாரிடமும் பணம்,வருமானம் பற்றித் துருவித்துர...
- வீட்டை இரண்டாக்கும் குறும்பு குழந்தைகள் தான் வீட்டில் உள்ளவர்களையும் ஒன்றாக்குகி...
- ஞான ஒளி :) நெட்டு சுத்துதடா ஸ்பீட் பத்தலைடா டவர் எட்டலைடா சிக்னல் கிட்டலைடா டவ...
- அன்பு மட்டுமே உலகில் உயர்ந்த மொழி, அதை வார்த்தை இல்லாமல் பேசிட இயலும்.
- ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆனா கேட்க முடியாம மனசுக்குள்ளேயே புதைச்சு...
- அன்பை அள்ளிப்பொழியும் தருணம்.... அவளே ஆகிறாள் உலக அழகி..... பசிக்கும் தருணம் அ...
- "கரும்பு தின்னக் கூலியா ?" பயனுள்ள காரியத்தை செய்ய அதற்கு கைமாறாக என்ன செய்வார்...
- "வலது காலை எடுத்து வைத்து வா - விளக்கம்" புதியதாக திருமணம் முடிந்து வீட்டுக்கு...
- பொது அறிவு தகவல்கள்....! * டால்பின்கள் நீர்ப்பரப்பில் இருந்து 20 அடி உயரம் வரை...
- தவறை ஒத்துக்கொள்பவன் மனிதன் ஆகின்றான்; தவறை திருத்திக்கொள்பவன் சாதனை படைக்கின்றா...
- மனித உறவுகள் மேம்பட.....!!! 1. தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங...
- *கையில் பேருந்துக்கு காசில்லாமல் பல கிலோமீட்டர்கள் வெயிலில் நடந்தது. *தூங்கி எழ...
- சேமிப்பு பணம் மொத்தமும் நிதிநிறுவனத்தில் முதலீடு!! ஓடிப் போகும் அதிபரிடம் முட்டா...
- ஜப்பானிய கோட்பாடு : ஒருவர் ஒரு வேலையை செய்ய முடியும் என்றால் நீயும் கூட அதைச் ச...
Posted: 23 Jun 2015 08:10 AM PDT சிரிக்க மட்டும்.. இதெல்லாம் சீரியஸா எடுத்துகிட்டு சண்டைக்கு வரகூடாது. கேள்வி : உங்க பொண்டாட்டிகிட்ட உங்களுக்கு பிடிக்காத விஷயம் என்ன? கல்யாணத்துக்கு முன்: ம்... (கொஞ்சம் யோசித்து) அப்படி எதுவும் பெருசா இல்ல... ஒண்ணு வேணா சொல்லலாம், என்னை பத்தி ரெம்ப யோசிச்சு டென்சன் ஆய்டுவா, அவ்ளோ அக்கறை என் மேல. கல்யாணத்துக்கு பின் : அட போங்க பாஸ், அது இருக்கு ஒரு மொழத்துக்கு. முக்கியமா சொல்லணும்னா, எப்ப பாத்தாலும் நான் என்ன பண்றேங்கறதே யோசனை, அதை வெச்சே டார்ச்சர். ச்சே :O :O *************************************** கேள்வி : உங்க பொண்டாட்டிகிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம்? கல்யாணத்துக்கு முன்:: எதையும் மனசுல வெச்சுக்க மாட்டா, அப்படியே பேசிடுவா... எனக்கு அந்த வெளிப்படையான குணம் ரெம்ப பிடிக்கும்... சோ ஸ்வீட் யு நோ... கல்யாணத்துக்கு பின்: சரியான பஜாரிங்க அது... கொஞ்சம் கூட முகதாட்சண்யமே பாக்காம பிசாசு மாதிரி திட்டும். அடுத்தவன் மனசு எவ்ளோ பீல் பண்ணும்னு யோசிக்கவே மாட்டா ராட்சசி :( :( *************************************** கேள்வி : ஒருவேள உங்க பொண்டாட்டி உங்களுக்கு கிடைக்காம இருந்துருந்தா? கல்யாணத்துக்கு முன் : ப்ளீஸ், விளையாட்டுக்கு கூட அப்படி சொல்லாதீங்க. என்னாலே நெனச்சே பாக்க முடியல. கல்யாணத்துக்கு பின் : ஹும்....(பெருமூச்சு) என்னத்த யோசிச்சு என்னத்த... போங்க பாஸ், நமக்கேது அந்த அதிஷ்டம் எல்லாம். :P :P *************************************** கேள்வி : உங்களுக்குள்ள சண்டை வருமா? கல்யாணத்துக்கு முன் : சும்மா செல்ல சண்டைகள் அப்ப அப்ப வர்றது தான், மத்தபடி சீரியஸ் சண்டைகள் எப்பவும் வந்ததில்ல. அவளுக்கு கோபம் வரும் போது ரொம்ப கியூட்டா இருப்பா, அதை பாக்கவே செல்ல சண்டை போடலாம்னு தோணும் கல்யாணத்துக்கு பின் : நல்லா கேட்டீங்க போங்க, அது வராம இருந்தாத்தான் அதிசயம். சரியான பிடிவாதம். அவளுக்கு கோபம் வந்தா மனுஷன் பாப்பானா, அதுக்கே கண்ணு முன்னாடி நிக்காம வெளிய போய்டுவேன் :D :D *************************************** கேள்வி :உங்க பொண்டாட்டி சமையல்ல உங்களுக்கு பிடிச்சது? கல்யாணத்துக்கு முன் : என்னங்க கேள்வி இது? ஏன் அவதான் சமைக்கணுமா? இன்னும் எந்த காலத்துல இருக்கீங்க? அவள உள்ளங்கைல வெச்சு தாங்கனும்னு நான் நெனச்சுட்டு இருக்கேன். ஆனா இந்த விஷயம் சொல்லியே ஆகணும், நான் ஒரு வாட்டி ஆனியன் பஜ்ஜி செஞ்சுருந்தா, செம டேஸ்டி... சந்தோசத்துல எனக்கு கண்ணுல தண்ணி வந்துடுச்சு போங்க . கல்யாணத்துக்கு பின் : அட ஏங்க நீங்க வேற அந்த வயிதேரிச்ச்சலை கொட்டிக்கறீங்க? அநியாயத்துக்கு சமத்துவம் பேசுவா... ஸ்ஸ்ஸ்ஸ்பப்பா ஒரு வெங்காய பஜ்ஜி செய்யணும்னா கூட நான் வெங்காயம் வெட்டி தரணும் அவ பஜ்ஜி போடுவா... வெங்காயம் வெட்டி வெட்டியே கண்ணுல தண்ணி நிக்கலங்க. :P :P *************************************** கேள்வி : உங்க பொண்டாட்டி உங்ககிட்ட அடிக்கடி கேக்கற கேள்வி? கல்யாணத்துக்கு முன் : டூ யு லவ் மீ? இதான் தினமும் கேப்பா. ஒரு ஒரு வாட்டி அவ இதை கேக்கும் போதும் இன்னும் லவ் அதிகமாய்டும் எனக்கு கல்யாணத்துக்கு பின் : டூ யு லவ் மீ? இதான் தினமும் கேப்பா. சரியான சந்தேக பிராணிங்க அது, தினமும் கேட்டு கேட்டு கன்பார்ம் பண்ணிக்கணும் அவளுக்கு... ஹும் :) :) *************************************** கேள்வி : உங்க பொண்டாட்டிய செல்லமா எப்படி கூப்பிடுவிங்க? கல்யாணத்துக்கு முன் : ம்... ஒண்ணு ரெண்டு இருந்தா சொல்லலாம்... அது பெரிய லிஸ்ட் இருக்கே. சாம்பிள்'க்கு 'ஸ்வீட்டி', 'ஏஞ்சல்', 'பேபி' இன்னும் நிறைய இருக்கு. கல்யாணத்துக்கு பின் : ஹ்ம்ம்... அது ஒண்ணு தான் கொறச்சல். பேசினாலே சண்டை தான் வரும், இதுல எங்கத்த செல்லமா கூப்பிடறது? :P :P *************************************** ##கல்யாணம் ஆகாதவனுக்கு ஒரு கவலை.. கல்யாணம் ஆனவனுக்கு ஆயிரம் கவலை. எல்லா புகழும் இதை எழுதிய அறிவாளிகே. :P :P Relaxplzz |
Posted: 23 Jun 2015 08:10 AM PDT கடாபியின் மறுபக்கம்...... 1. லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம். 2. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது. 3. வீடு மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது , லிபியாவில் வாழும் அனைத்து மக்களும் வீடுகள் பெறும் வரை தனக்கோ தனது பெற்றோருக்கோ வீடு கட்டமாட்டேன் என்று கடாபி சபதம் பூண்டிருந்ததால், அவரது பெற்றோர்கள் இறக்கும் போது அவர்கள் வீடுகள் இல்லாமல் கூடாரங்களிலேயே இறந்தனர் . 4.அந்த நாட்டில் மனம் முடிக்கும் ஒவ்வொரு புதுமணத் தம்பதியினர்களுக்கும் அந்நாட்டின் அரசு 60,000 தினார், அதாவது அமெரிக்க பணம் 50,000 டாலர் அதாவது இந்திய பணம் சுமார் 28,00,000 ரூபாய் பணத்தை இலவசமாக வழங்கியது. 5.லிபியாவில் கல்வி மற்றும் மருத்துவம் முற்றிலும் இலவசம், கடாபி அதிகாரத்தை கைப்பற்றும் பொழுது லிப்ய மக்களில் எழுத படிக்கத் தெரிந்தோர் வெறும் 25% மட்டுமே , ஆனால் அவர் ஆட்சிக்கு வந்ததன் பின் அது 83% உயர்ந்தது. 6.எந்த ஒரு லிப்யனும் விவசாயம் செய்ய விரும்பினால் அவன் விவசாயம் செய்யும் இடத்தில் வாழ்வதற்கு அவசியமான ஒரு வீடும், விவசாயம் செய்வதற்கு தேவையான காணி நிலமும் விவசாய உபகரணங்களும், விதைகளும் பசளைகளும் இன்னும் இதற்கு அவசியமான அனைத்தும் முற்றிலும் இலவசம். 7. லிப்யர்களுக்கு லிபியாவில் மருதுவ வசதி பெறுவதற்கோ அல்லது வெளிநாட்டில் மேற்படிப்பு தொடர்வதற்கோ வசதி இல்லை எனில் அந்த நாட்டு அரசு இலவசமாக அவர்களுக்கு உதவிகள் வழங்கும். 8. எந்த ஒரு லிபியனும் ஒரு வாகனம் வாங்கும் போதும் அதன் மதிப்பில் அரைவாசித் தொகையை அந்நாட்டின் அரசு இலவசமாக வழங்கும். 9. அந்த நாட்டில் ஒரு லிட்டர் பெற்றோலின் விலை வெறும் $0.13 மட்டுமே. 10. லிப்யா உலக வங்கிகளிடம் இருந்து இதுவரை கடன் வாங்கியது கிடையாது. 11. உயர் கல்வி கற்று பட்டதாரி ஆகும் மாணவர்கள் தமக்குரிய வேலை வாய்ப்பு கிடைக்காது போகும் பட்சத்தில், அவர்களுக்குரிய தகுந்த தொழில் கிடைக்கும் வரை அந்தத் தொழிலுக்குரிய சம்பளத்தை அந்த அரசு மாத மாதம் வழங்கி வந்தது. 12. அந்த நாட்டிற்கு கிடைக்கும் எண்ணெய் வருமானத்தில் ஒரு தொகையை அந்த நாட்டு மக்களின் வங்கிக் கணக்கில் சேமிப்பில் இடும் அந்த அரசு. 13. ஒவ்வொரு குழந்தை பிரசவத்தின் போதும் அந்தத் தாயிற்கு அந்த நாட்டு அரசு 5500 அமெரிக்க டாலர் நாணயத்துக்கு பெறுமதியான லிபிய தினாரை வழங்கும் அதாவது இந்திய பணம் மூன்று லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய். 14. 40 ரொட்டிகள் வெறும் $ 0.15 தினார் மட்டுமே. 15. 25% லிப்யர்கள் பல்கலைக்கழக பட்டதாரிகளாவர். 16. உலகிலேயே மிகப்பெரிய செயற்கை ஆறை உருவாக்கி லிபியாவின் பாலை நிலத்தை பசுமையாக்கியவர் என்ற பெருமை கடாபிக்கு உண்டு Relaxplzz |
Posted: 23 Jun 2015 08:10 AM PDT கொஞ்சம் சிரிங்க பாஸ்... :P :P கணவன்: "என்னடி சாம்பார்ல ஒரே சில்லறைக் காசா கிடக்குது?" மனைவி: "நீங்கதானே சாம்பார்ல கொஞ்சம் சேஞ்ச் வேணும்னு சொன்னீங்க!" +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ திருடன் 1: "ஒரு வீட்டுல திருடும்போது தூங்கிட்டு இருந்தவர் காலை தெரியாமல் மிதிச்சிட்டேன்" திருடன் 2: "திருடன்-னு அலறியிருப்பாரே?" திருடன் 1: " 'கால் வலிக்கு இதமா இருக்கு; ஒரு அரை மணி நேரம் மிதிச்சிட்டு அப்புறம் திருடு'ன்னு சொல்லிட்டார்" +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ஒருவர் : "உங்க மனைவி எடுத்தெறிஞ்சி பேசுவாங்கன்னு சொல்றீங்களே… அந்த சமயத்தில நீங்க என்ன பண்ணுவீங்க?" மற்றவர்: "எரிகிற பாத்திரங்களை கேட்ச பிடித்து அவளை வெறுப்பேத்துவேன்." +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ உங்க வீட்டு முகவரியைக் கண்டுபிடிக்கிறதுக்குள்ளே நாயா அலைஞ்சுட்டேன். சரி உள்ளே வாங்க, என்ன சாப்பிடறீங்க, பொறையா, பிஸ்கட்டா ? ---------------------------------------------------------- பள்ளிக்கூட திறப்பு விழாவுக்கு நம்ம தலைவரைக் கூப்பிட்டது ரொம்பத் தப்பா போச்சு. எதனால? வகுப்பு அறைகளைப் பார்த்துட்டு, இதென்ன ரூம், ரூமா கட்டியிருக்கு, லாட்ஜா? -னு கேட்கிறார். ------------------------------------------------------------- உங்க பையன் ரொம்ப அதிகப்பிரசங்கித்தனமாக பேசுறான்… அப்படி என்ன பேசினான்: வெங்காயத்தை உரிச்சா கண்ணில தண்ணீர் வரும்ன்னு சொன்னிங்க, பெருங்காயத்தை உரிச்சா என்ன வரும்னு கேட்கிறான்? --------------------------------------------------------- நிதி வசூலிப்பவர்:" flood donation" நிதி கேட்டா ஒரு பாட்டில் தண்ணீர் தர்றீங்களே… என்னை என்ன கேனப் பயன்னு நினைச்சிங்களா…. "blood donation" என்று வந்திங்க ஒரு பாட்டில் ரத்தம் கேட்டிங்க கொடுத்தேன், இப்போ "flood donation" கேட்கிறீங்க அதான் சரியா ஒரு பாட்டில் தண்ணீர் கொடுத்தேன்! :O :O Relaxplzz |
Posted: 23 Jun 2015 08:10 AM PDT *அன்பு மகள் அனுப்பும் மடல் ....* ''ஒவ்வொரு பெண் பிள்ளைக்கும் அவர்கள் தந்தைக்கும் சமர்ப்பணம்'' !!!!!!!! உறவில் தந்தையாய் உணர்வில் அன்னையாய் உயிரில் கலந்தாய் அப்பா _ நான் இரவில் தனியாக தெருவில் வரும் போது மழையில் நனைந்தாய் அப்பா.. குடையில் இடமிருந்தும் நடுவில் எனை நிறுத்தி மழையில் நனைந்தாய் அப்பா - தினம் மனதில் எனை நிறுத்தி உடலில் தளர்ந்தாலும் உழைத்து களைத்தாய் அப்பா.. தஞ்சை பெருங்கோயில் தலைய சிற்பி போல் என்னை வளர்த்தாய் அப்பா _ தினம் கொஞ்சம் கொஞ்சமாய் என்னை செதுக்க நீ உன்னை வருத்தாய் அப்பா.. பணியில் இருந்து நீ திரும்பி வரும் வரையில் பசியில் இருப்பேன் அப்பா _ உன் மடியில் அமர்த்தி என் இதழில் உட்டியதை நினைத்து அழுதேன் அப்பா.. கல்வி கற்க நான் பள்ளி சென்ற தினம் இன்றும் நினைப்பேன் அப்பா - உன் கையை இழந்து நான் உள்ளே போகும் போது கண்கள் நனைத்தேன் அப்பா.. என்னை கரை சேர்க்க உன்னை அலையாக்கி அலைந்து உழைத்தாய் அப்பா விண்ணை அழகாக்கும் வெள்ளி மலர் போல என்னை வளர்த்தாய் அப்பா.. உடலில் நலமின்றி உறைந்த பனி போல படுத்து சாய்ந்தேன் அப்பா _ என் தலையில் வருடி நீ உணவு ஏதுமின்றி இரவை கழித்தாய் அப்பா.. கழுத்தில் மணி வைரம் காலில் புது வெள்ளி போட்டு ரசித்தாய் அப்பா _ கோயில் குளத்தில் மீன் உண்ணும் அழகை பொறி போட்டு படியில் ரசிப்போம் அப்பா.. நிலத்தில் விளைந்த அந்த நெடிய கரும்பை கடித்து ருசித்தோம் அப்பா படிக்க உன்னை பிரிந்து வசிக்க நேர்ந்தும் நம் அகத்தில் வசித்தோம் அப்பா.. கொடுத்த வாழ்விற்கு கோடி நன்றிகள் கொடுத்த இறைவா அப்பா _ நீ இருக்கும் இடத்தில் தான் இறைவன் இருக்கிறான் கோயில் வேண்டாம் அப்பா.. அடுத்த பிறவியில் அன்னையாக நான் இருக்க நேர்ந்தால் அப்பா - இனி எடுக்கும் பிறவியெல்லாம் உன்னை குழந்தையாய் சுமக்க வேண்டும் அப்பா .I Relaxplzz |
Posted: 23 Jun 2015 08:10 AM PDT நிறைய நண்பர்கள் கிடைக்க வேண்டுமா? 1.யாரிடமும் பணம்,வருமானம் பற்றித் துருவித்துருவி விசாரிக்கக் கூடாது. 2.அன்பாக,சாந்தமாகப் பேசிப் பழக வேண்டும். 3.சொந்த விசயங்களைப் பற்றி அனாவசியமாகப் பேசக்கூடாது. 4.எதிலும் தான் மட்டும் உயர்வு என்ற ரீதியில் பேசக் கூடாது. 5.பிறர் மனம் நோகும் வகையில் கேலி வார்த்தை பேசக்கூடாது. 6.எதெற்கெடுத்தாலும் விவாதம் செய்து கொண்டிருக்கக் கூடாது. 7.முடிந்த அளவு உதவிகள் செய்ய தயங்கக் கூடாது. 8.மற்றவரைப் பற்றி புரளிப் பேச்சு அறவே கூடாது. 9.பிறரிடம் உள்ள சிறந்த குணங்களைப் பாராட்ட வேண்டும். 10.ஒருவரின் குறைகளை பிறர் முன்னிலையில் கண்டிப்பாய்க் காட்டக் கூடாது. Relaxplzz |
Posted: 23 Jun 2015 07:50 AM PDT |
Posted: 23 Jun 2015 07:10 AM PDT ஞான ஒளி :) நெட்டு சுத்துதடா ஸ்பீட் பத்தலைடா டவர் எட்டலைடா சிக்னல் கிட்டலைடா டவர் எட்டலைடா சிக்னல் கிட்டலைடா நாலு லைக்கு போடும் முன்னால் நாக்குத் தொங்கிப் போனதடா :P (நெட்டு சுத்துதடா..) ரெண்டு ஜிபி என்று சொன்னான் பிபி ஏறுதடா ஜேபி காசு காற்றில் கரைந்து மாயம் ஆனதடா மெயிலைப் பார்க்க பத்து நிமிஷம் தொங்க வைக்குதடா தொங்கித் தொங்கி கண்கள் மங்கிச் சாகடிக்குதடா (நெட்டு சுத்துதடா..) மோட மோடு இணைப்பு வைத்தேன் ஆப்பு வைத்ததடா ஒயர்லெஸ் இணைப்பு கொடுத்துப் பார்த்தேன் சூப்பு வைத்ததடா வைஃபை இணைப்பு குடைச்சல் தந்து டார்ச்சர் பண்ணுதடா மனம் பொறுமை என்னும் சிகரம் ஏறி கடவுள் ஆனதடா (நெட்டு சுத்துதடா..) போர்ட்டல் இணைப்பை வாங்கிப் பார்க்க பூதம் வந்ததடா நான் வேறு இணைப்பை மாற்றிப் பார்த்தேன் மூளை வெந்ததடா இணையம் இல்லா உலகில் வாழும் அமைதி வந்ததடா மனம் இணையம் என்னும் மாயை கடந்து ஞானம் கொண்டதடா (நெட்டு சுத்துதடா..) - பெ. கருணாகரன் |
Posted: 23 Jun 2015 06:50 AM PDT |
Posted: 23 Jun 2015 05:10 AM PDT ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆனா கேட்க முடியாம மனசுக்குள்ளேயே புதைச்சு வெச்சுக்குற சில கேள்விகளை, நாம இந்தப் பதிவுல பார்க்கலாம்.. 1. நாங்கதான் உங்களுக்கு ரீ-சார்ஜ் பண்ணி அனுப்புறோம். ஆனாலும் நீங்க எதுக்கு மிஸ்டு கால் கொடுத்தே எங்க உயிரை வாங்குறீங்க? உங்ககிட்ட ஃபோன்ல பேசின காசையெல்லாம் சேர்த்து வெச்சிருந்தா, நான் லோன் போட்டு பைக் வாங்கி இருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது . 2. ஒரு பொண்ணு கொடுக்குற மிஸ்டு காலை மட்டும் யாராலும் அட்டெண்ட் பண்ணவே முடியாது. அவ்ளோ ஷார்ப்பா கட் பண்ணுவாங்க. இப்படி மிஸ்டுகால் கொடுக்க நீங்க எந்த யுனிவர்சிட்டியில ட்ரெயினிங் எடுத்துகிட்டிங்க? 3. அது ஏன் எப்போ பார்த்தாலும், எது கேட்டாலும் ஹி.. ஹி'ன்னு சிரிச்சுகிட்டே இருக்கீங்க? ஒரு மணி நேரம் உங்ககிட்ட ஃபோன்ல பேசினா அதுல நாற்பது நிமிஷம் கேனத்தனமா சிரிச்சுகிட்டேதான் இருக்கீங்க. ஏன் நீங்க ஏதாவது பேஸ்ட் விளம்பரத்துல நடிக்கிறதுக்கு எங்ககிட்ட ட்ரெயினிங் எடுக்கிறீங்களா? 4. ஃபோன்ல நாங்களேதான் பேசிகிட்டு இருக்கோம். எதைக்கேட்டாலும் "நீங்க சொல்லுங்க, நீங்க சொல்லுங்க'ன்னா" நாங்க என்னத்தை சொல்லி தொலைக்குறது? உங்களுக்கு எதையுமே பேச தெரியாது போலன்னு நினைச்சு நாங்க பாட்டுக்கு எதையாவது சொல்லி தொலைச்சுடுவோம். அதையே மனசுல வெச்சுகிட்டு, கல்யாணத்துக்கு அப்புறம் வாங்கி கட்டிக்கிறது எங்களுக்கு மட்டும்தான் தெரியும். அது எப்படி பேசவே தெரியாத மாதிரி சீன் போடுறீங்க? 5. மெசேஜ்'ல மட்டும் ரொம்ப ரொமாண்டிக்கா SMS அனுப்பி எங்க தூக்கத்தை கெடுக்குறீங்க. ஆனா அதையே நேர்ல சொல்ல சொன்னா மட்டும் வெட்கத்தையே என்னமோ நீங்கதான் குத்தகைக்கு எடுத்த மாதிரி வெட்கப்படுறீங்க? இது எப்படி உங்களால மட்டும் முடியுது? மெசேஜ் அனுப்பும் போதெல்லாம் உங்க வெட்கத்தை என்ன ஃப்ரிட்ஜ்'க்கு உள்ளே ஒளிச்சி வெச்சிடுவீங்களா? 6. ஹேய்... உனக்கு எப்படி அது தெரியும்? அப்படிங்கிற கேள்வியை மட்டும் கேட்டுட்டா போதும். உடனே "நான் உங்க இதயத்துல தானே இருக்கேன். இது கூட எனக்கு தெரியாதான்னு" உடனே ஒரு டயலாக் விடுவீங்க. இந்த மாதிரி எல்லாம் டயலாக் விட டைரக்டர் கதிர்கிட்ட கத்துகிட்டீங்களா என்ன? 7. Loss of Pay' ல லீவு போட்டுட்டு, உங்களை பைக்ல தியேட்டருக்கு கூட்டிட்டு போனா, அப்பத்தான் ரொம்ப கவனமா ஹேண்ட் பேகை எடுத்து நம்ம ரெண்டு பேருக்கு நடுவுல வெச்சுகிட்டு வருவீங்க. என்ன கொடுமை சார் இதெல்லாம்? 8. அப்புறம் அப்புறம்'ங்கிற மொக்கையவே அரை மணி நேரமா போடுறீங்க. சரி வெச்சுடுறேன்னு நாங்க ஃபோனை கட் பண்ண போகும்போதுதான் "என் கூட பேசறது உங்களுக்கு போரடிக்குதா"ன்னு ஒரு சென்டிமென்ட் சீன் ஓபன் பண்ண வேண்டியது. உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி? 9. நீங்க கிஃப்ட் கொடுத்தா மட்டும் விலையைப் பார்க்க கூடாது. அதுல உங்க அன்பைத்தான் பார்க்கணும். ஏன்னா நிச்சயமா அந்த கிஃப்ட் கீ- செயினாவோ, கர்ச்சீஃபாவோ, இல்லை அதிகபட்சமா மணிபர்ஸாவோதான் இருக்கும். ஏன்னா அதுங்கதான் ஐம்பது ரூபாய்க்கு கிடைக்கும். ஆனா இதே நாங்க கிஃப்ட் கொடுக்கும் போது மட்டும் சுடிதாரோ, செல்ஃபோனோ, தங்க செயினோ, வெள்ளி கொலுசோ, குறைஞ்சது 3,000/- ரூபாய்க்கு செலவு பண்ணாதான் நாங்க உங்க மேல உண்மையான அன்பு வெச்சிருக்கிறதா அர்த்தம். என்ன கரெக்ட்டா? உங்க அன்போட அளவுகோலுக்கு எல்லையே கிடையாதா? 10. "உன் நியாபகமாவே இருந்துச்சு. ராத்திரி எல்லாம் தூக்கமே வரலை"ன்னு மனசாட்சி இல்லாம பொய் சொல்றீங்களே.. என் நியாபகமாவே இருந்துச்சினா என் கூட பேச வேண்டியது தானே. இந்தக் கேள்வியை நாங்க கேட்டுடக் கூடாதுனு அர்த்த ராத்திரியில பேய் முழிச்சுகிட்டு இருக்கிற நேரத்துல, ஒரு மிஸ்டுகால் கொடுத்துட்டு, மறுநாள் காலையில உனக்கு என் நியாபகமே இல்லைன்னே சண்டை போட வேண்டியது. இந்த விஷயத்துல சத்தியமா உங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது. 11. நீங்க யூஸ் பண்ணி தூக்கி போட்ட பொருளை எல்லாம் நாங்க சேர்த்து வெச்சிருக்கணும்னு எதிர்பார்க்குறீங்களே, நாங்க என்ன நீங்க தூக்கி போடுறதை எல்லாம் சேர்த்து வெக்கிற குப்பை தொட்டியா? நண்பர்களே இந்தக் கேள்விகளை எல்லாம் படிக்கிறதோட நிறுத்திக்குங்க. தப்பித்தவறி கூட இந்தக் கேள்விகளை நீங்க உங்க காதலிகிட்ட கேட்டீங்கன்னு வெச்சுக்குங்களேன்........ அவ்வளவுதான் ஜோலி முடிஞ்சுது. Relaxplzz |
Posted: 23 Jun 2015 05:10 AM PDT அன்பை அள்ளிப்பொழியும் தருணம்.... அவளே ஆகிறாள் உலக அழகி..... பசிக்கும் தருணம் அவளே ஆகிறாள் அன்ன பூரணி..... துன்பப்படும் நேரம் நீயே ஆகிறாய் இன்ப ராணி.... ஏழு ஜென்மங்கள் நம்பிக்கை இல்லையெனக்கு இருக்கும் பொழுதே சுகிக்க விடு அதுவே போதுமெனக்கு..... #மனைவி ♥ ♥ - சுகன் என்கிற சுகுணசீலன் |
Posted: 23 Jun 2015 05:10 AM PDT "கரும்பு தின்னக் கூலியா ?" பயனுள்ள காரியத்தை செய்ய அதற்கு கைமாறாக என்ன செய்வார்கள் என்று எதிர்பார்ப்பவர்களைப் பார்த்து "கரும்பு தின்னக் கூலியா ? " என்று கேலியாக கேட்கிறது இந்த பழமொழி . சுவையுள்ள கரும்பே வெகுமதி தானே , அப்படியிருக்க அதை உண்ணக்கூட கூலி கேட்கலாமா என்று கேட்டு சிந்திக்க வைக்கிறது இந்த பழமொழி . வரதட்சனை கேட்கிற மாப்பிள்ளைகளுக்கு இது மண்டயிலடித்தாற் போன்ற கேள்வியாகவும் அமைகிறது. வாழ்நாள் முழுக்க துணையாய் இருந்து உதவ வருகின்ற , உணவு கொடுக்க வருகின்ற , இன்பங் கொடுக்க வருகின்ற , அன்பான அழகான ஒரு பெண்ணை மணக்க வரதட்சனை கேட்பது கரும்பு தின்னக் கூலி கேட்பது போன்ற அற்பச் செயலல்லவா ? என்று கேட்டு அதன் உள்ளடக்கத்திற்கு பெருமை சேர்க்கிறது . மூன்று வார்த்தையில் எவ்வளவு முத்தான சிந்தனை பாருங்கள்.. - Nagaraj Relaxplzz |
Posted: 23 Jun 2015 03:10 AM PDT "வலது காலை எடுத்து வைத்து வா - விளக்கம்" புதியதாக திருமணம் முடிந்து வீட்டுக்கு வருகிற மணமகளை, வலது காலை எடுத்து வைத்து வா என்று கூறுவதற்கு என்ன காரணம்? மனிதன் ஒரு சமுதாய விலங்கு. அதாவது மனிதனால் ஒருபோதும் தனிமையில் வாழ முடியாது. அப்படி வாழ்வதும் வாழ நினைப்பதும் விதிவிலக்காக கொள்ளலாமே தவிர விதியாக கொள்ள இயலாது. சமூகமாக கூடி வாழ்வதற்காக தான் மனிதன் படைக்கப்பட்டிருக்கிறான். பத்துபேர் இருக்கிற ஒரு சபையில் எல்லோருக்குமான கட்டுப்பாடு உண்டு. தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் நாலுபேர் முன்னால் நாம் மட்டும் தனித்த ஒரு செயலை செய்ய முடியாது, செய்யவும் கூடாது. அப்படி செய்வதனால் பொது அமைதி கெட்டுவிடும் இதனால் தான் நமது முன்னோர்கள் நீதியை, பொது நீதி, தனி நீதி என்று இரு பகுதிகளாக பிரித்து நமக்கு தந்தார்கள். "உலகப்பொதுமறை" தந்த வள்ளுவன் கூட, உலகத்தவரோடு ஒட்டி உறவாடி செல்லாதவன், பலவிதமான கல்வியை கற்றிருந்தாலும் பயனில்லை என்று கூறுகிறார். நாலுபேர் ஒரு பாதையில் போகும் போது நாமும் அதை கடைபிடிக்க வேண்டும் தனிபாதை போட நினைத்தால் தடுமாற வேண்டிய சூழல் வரும். நாம் வாழுகிற இந்த பூமி வலது புறமாகவே சுற்றுகிறது. இதனோடு சேர்ந்து மற்ற கிரகங்களும் வலது முகமாக தான் நகர்கின்றன. நீனும் அதைபோலவே உலகம் போகிற பாதையில் சேர்ந்து இணைந்து போக வேண்டும் என்பதை நினைவுபடுத்தி வலியுறுத்தி காட்டுவதற்காகவே வலது காலை எடுத்து வைத்து வா என்று சொன்னார்கள். Relaxplzz |
Posted: 23 Jun 2015 02:10 AM PDT பொது அறிவு தகவல்கள்....! * டால்பின்கள் நீர்ப்பரப்பில் இருந்து 20 அடி உயரம் வரை கூட துள்ளிக் குதிக்கும். * மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 முறை கொத்தும். * பாண்டா கரடிகள் ஒரு நாளைக்கு 20 கிலோ மூங்கில் வரை உண்ணும். * சிங்கங்கள் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வரை தூங்கும். இதனால் அவை சில நேரம் ஓரிரு நாள்கள் சாப்பிடாமல் கூட இருந்துவிடும். * ஆப்பிரிக்காவின் பாவோபாப் மரங்களின் அடிப்பகுதி 180 அடி சுற்றளவைக் கொண்டிருக்கும். மரங்களின் உள்பகுதி காலியாக இருந்தால், அதில் 20 மனிதர்களை அடைக்கமுடியுமாம்! * மனிதனின் கைகள் 155 வகையான வேலைகள் புரியும். * நமது கண்கள் ஒரு லட்சம் வண்ணங்களை பிரித்தறியும். * நமது எலும்பின் வலிமை இரும்பை விட அதிகமானது. * கம்ப்யூட்டரை விட மனிதனின் மூளை ஒரு லட்சம் மடங்கு நினைவுத் திறனுடையது. * இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கப்பலின் பெயர் எஸ்.எஸ். ஜலஜா (1952). * இந்தியாவின் முதல் துணி மில் 1817-ல் ஆரம்பமானது. * இந்தியாவின் முதல் மாநகராட்சி கழகம் 1688-ல் சென்னையில் உருவாக்கப்பட்டது. * இந்தியாவின் முதல் கடற்படை பயிற்சி கேந்திரம் கொச்சியில் 1969-ல் ஆரம்பமானது. * இந்தியாவில் அறிவியல் உபகரணங்கள் தயாரிப்பில் புகழ்பெற்ற இடம் அம்பாலா (ஹரியானா) * இந்தியாவின் நீளமான மலைக் குகைப் பாதை ஜவஹர் பாதை (காஷ்மீர்) * இந்தியாவின் முதல் அறிவியல் பூங்கா மும்பையில் அமைக்கப்பட்டது. * அஜந்தா குகைகள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1891 Relaxplzz |
Posted: 23 Jun 2015 01:50 AM PDT |
Posted: 22 Jun 2015 08:15 PM PDT மனித உறவுகள் மேம்பட.....!!! 1. தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள். 2. அர்த்தமில்லாமிலும்,தேவையில்லாமிலும் பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள். 3. எந்த விடயத்தையும் பிரச்சனையும் நாசூக்காகக் கையாளுங்கள். 4. விட்டுகொடுங்கள். 5. சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துதான் ஆகவேண்டும் என்று உணருங்கள். 6. நீங்கள் சொன்னதே சரி செய்வதே சரி என்று கடைசிவரை வாதாடதீர்கள். 7. குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள். 8. உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள். 9. மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வபடாதீர்கள். 10. அளவுக்கு அதிகமாய்,தேவைக்கு அதிகமாய் ஆசைப்படாதீர்கள். 11. எல்லோரிடத்திலும் எல்லா விடயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். 12. கேள்விப்படுகிற எல்லா விடயங்களையும் நம்பிவிடாதீர்கள். 13. அற்ப விஷயங்களையும் பெரிதுபடுத்தாதீர்கள். 14. உங்கள் கருத்துகளில் உடும்புப்பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள். 15. மற்றவர் கருத்துக்களை, செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். 16. மற்றவர்களுக்கு உரிய மரியாதையைக் காட்டவும், இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள். 17. புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரமில்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள். 18. பேச்சிலும், நடத்தையிலும் திமிர்த்தனத்தையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும், பண்பாட்டையும் காட்டுங்கள். 19. பிணக்கு ஏற்படும்போது, அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள். 20. தேவையான இடங்களில் நன்றியையும், பாராட்டையும் சொல்ல மறக்காதீர்கள். பாராட்டுக்கு மயங்காத மனிதனே இல்லை. அதுவே உங்களுக்கு வெற்றியாக அமையும்... Relaxplzz |
Posted: 22 Jun 2015 06:00 PM PDT *கையில் பேருந்துக்கு காசில்லாமல் பல கிலோமீட்டர்கள் வெயிலில் நடந்தது. *தூங்கி எழுந்தால் பசிக்கும் என்று, வேலை தேடிய நாட்களில் மதியத்தில் எழுந்தது. *பார்லே ஜி மூன்று ரூபாய் பிஸ்க்ட்டை நீரில் முக்கி சாப்பிட்டால் கூடுதலாக கொஞ்ச நேரம் பசிக்காமல் இருக்கும் என்று கண்டுபிடித்தது. *நேர்முகத்தேர்வுக்கு போகும்போது இஸ்திரி செய்ய காசில்லாமல், வெயிலில் காய்ந்தவுடன் துணியை மடித்து வைத்தது. *நேர்முகத்தேர்வுக்கு போகும்போது ஷு வுக்கு பாலிஷ் போட காசில்லாமல், தேங்காய் எண்ணெய்யை தேய்த்துக்கொண்டு போனது. *நேர்முகத்தேர்வு முடிந்து வெளியே வந்த நண்பனிடம் இருந்து இரவலாக, கழுத்தில் கட்டும் டையை வாங்கிக்கொண்டு அடுத்து நான் உள்ளே ஓடியது. *வேலை தேட போகிறேன் என்று வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு அவர்களிடம் பணம் கேட்க கூடாது என்ற வைராக்யத்தை கடைசி வரை காப்பற்றியது. *அறை வாடகை கொடுக்க பணம் இல்லாமல், அறையில் இருந்த ஐந்து நண்பர்களும் சேர்ந்து ரத்த தானம் செய்து, அதில் வந்த பணத்தை எடுத்து வாடகை கொடுத்து விட்டு, அவர்கள் தந்த மாசா வை மட்டும் குடித்து வேறு எதுவும் சாப்பிட காசில்லாமல், அரைமயக்கத்துடன் தூங்கியது. அன்று, இந்த வாழ்க்கை வாழ்ந்த போதும், ஒருநாள் கூட சிரிக்காமல் இருந்ததில்லை நான்..!! இன்றோ, இந்த இயந்திர வாழ்க்கை "ஊதியம்" என்ற ஒன்றை தந்துவிட்டு, அதற்கு விலையாக, அது என்னுடைய பெரும்பாலான மகிழ்ச்சியை பிடுங்கி கொண்டதாகவே நினைக்கிறேன்..!! பொன்னையும், மண்ணையும் தேடி அலையும் இன்றைய வாழ்க்கையிலே, சிறிதளவு "மகிழ்ச்சி" தேடிக் கொண்டிருக்கிறேன். "கிடைக்கும்" என்ற நம்பிக்கையோடு............ இப்படிக்கு, இன்றைய இளைஞன்..!! Relaxplzz |
Posted: 22 Jun 2015 10:10 AM PDT சேமிப்பு பணம் மொத்தமும் நிதிநிறுவனத்தில் முதலீடு!! ஓடிப் போகும் அதிபரிடம் முட்டாளாய்.. சாப்பாட்டில் விஷமாய்!! அத்தியாவசிய பொருளில் கலப்படம் வர்த்தகனிடம் ஏமாறும் நுகர்வோர் முட்டாளாய்.. பீரோவில் நகை !! சமத்தாய் திருடும் திருடனிடம் ஏமாறும் உடையவன் முட்டாளாய் .. ஓட்டுக்கு பணம்!! வீடு தேடி காலில் விழும் அரசியல்வாதியிடம் ஏமாறும் வாக்காளர் முட்டாளாய்.. நடிகருக்கு பாலபிஷேகம்!!! வீட்டில் குழந்தை பசியால் துடிக்க ஏமாந்த ரசிகன் முட்டாளாய் .. பொத்தல் விழுந்த ரோடுகளாய்!! லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்கும் ஒப்பந்தகாரனிடம் ஏமாறும் குடியானவன் முட்டாளாய்.. சீரியலின் படையெடுப்பு!! அறியாமலே முன்னேற்ற நேரங்களை அடகு வைத்து ஏமாறும் இல்லத்தரசிகள் முட்டாளாய்.. இணையதள போதை!! இளைஞர்களிடம் எதிர்காலத்தை நம்பி ஏமாறும் பெற்றோர்கள் முட்டாளாய்.. நவீன காதல்!! தம்மை தொலைத்து கற்பை பறிகொடுத்து காளையரிடம் ஏமாறும் கன்னியர் முட்டாளாய.. முதியோர் இல்லங்களாய்!! பெருகும் சமூகத்தில் நேசங்களை தொலைத்து பெற்ற பிள்ளைகளிடம் ஏமாறும் நேசமிகு முட்டாளாய்.. ஊழல் பெருச்சாளிகள்!! கணக்கை கண்டும் காணமல் ஏமாறும் குடிமகன்கள் முட்டாளாய்.. டாஸ்மாக் குடிபோதை!! தடம் மாறும் இந்தியாவின் தலையெழுத்தை நம்பி ஏமாறும் நம்பிக்கைவாதிகள் முட்டாளாய்... எஞ்சியவர்கள் எங்கோ எதற்கோ யாரிடமோ தெரியாமல் ஏமாறும் முட்டாளாய். . - இன்போ.அம்பிகா. Relaxplzz |
Posted: 22 Jun 2015 10:10 AM PDT ஜப்பானிய கோட்பாடு : ஒருவர் ஒரு வேலையை செய்ய முடியும் என்றால் நீயும் கூட அதைச் செய்யலாம்.!! யாருமே செய்ய முடியவில்லை என்றால் நீ கண்டிப்பாக செய்ய வேண்டும்.!! இந்தியக் கோட்பாடு: ஒருவர் ஒரு வேலையை செய்ய முடியும் என்றால் அவரே அந்த வேலையைச் செய்யட்டும்.! யாராலும் செய்ய முடியவில்லை என்றால் நான் மட்டும் எப்படி செய்ய முடியும் ? # இதனால்தான் ஜப்பான் ஒரு வளர்ந்த நாட்டுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது.! - Ganapathy Subramanian Relaxplzz |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment