Monday, 15 June 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


10 வருடங்களுக்கு முன் : வெள்ளிக்கிழமை ஒலியும் ஒலியும் ஊரே அமர்ந்து பார்த்தோம்.....

Posted: 15 Jun 2015 06:10 AM PDT

10 வருடங்களுக்கு முன் :

வெள்ளிக்கிழமை ஒலியும் ஒலியும் ஊரே அமர்ந்து பார்த்தோம்..

ஞாயிற்றுக்கிழமை மாநில மொழி திரைப்படம் போடமாட்டார்களா என்று ஏங்கி தவித்தோம்..

திங்கள்கிழமை பள்ளியில் அமர்ந்து கொண்டு ஞாயிற்றுக்கிழமை பார்த்த திரைப்படத்தை பற்றி விவாதித்தோம்

அப்பா தியேட்டருக்கு கூட்டிக்கொண்டு செல்ல மாட்டாரா என்று ஏங்கிக்கிடந்தோம்..

ஒரே ருபாயை வைத்துக்கொன்டு ஒரு நாள் முழுவதும் செலவு செய்தோம்..

100 ருபாய் கிடைத்தால் ஆச்சிரியத்துடன் பார்த்தோம்...

TVS 50 இருந்தால் அவர்கள் பணக்காரர்கள்...

அனைவர் வீட்டிலும் உண்டியல் இருந்தது..

வீட்டு அலமாரியில் சக்திமான் ஸ்டிக்கர்..

பழைய மாடல் கேசட்கள் சிக்கிக் கொன்டால் ரெனால்ட்ஸ் பென் கொன்டு சிக்கு எடுப்பது..

பெரு மழை வந்தால் பள்ளிகளுக்கு விடுமுறை மகிழ்ச்சியடைவது

Relaxplzz

வீட்டு பூஜை அறையில் இருக்க வேண்டிய ஸ்வாமி படங்கள்... பூஜை அறையில் ஸ்வாமி படங்கள...

Posted: 15 Jun 2015 05:10 AM PDT

வீட்டு பூஜை அறையில் இருக்க வேண்டிய ஸ்வாமி படங்கள்...

பூஜை அறையில் ஸ்வாமி படங்களை வைப்பதில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி கருத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன, சாஸ்த்திர கருத்தானது பூஜையில் இருக்க வேண்டிய படங்கள் என்னன்ன என்பதை பார்ப்போம். விநாயகர், வள்ளி,தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், ஸ்ரீ.லக்ஷ்மியுடன் கூடிய நாராயணன், அம்பிகையுடன் கூடிய சிவபெருமான், பசுவுடன் அல்லது பத்னியுடன் கூடிய கிருஷ்ணர், தனித்த உருவத்துடன் காணப்படும் படங்கள் என்றால் காமாக்ஷி,மீனாக்ஷி,விசாலாக்ஷி,மற்றும் llலலிதாம்பாள், அஷ்டலக்ஷ்மி. இது தவர பானலிங்கம், சிவலிங்கம்.{ஒரு ஜான் அளவு அதற்கு மேல் போக கூடாது}

கூடாத படங்கள் – {உக்கிர வடிவம் கொண்ட ஸ்ரீ.காளியம்மன்,மகிஷாசுர மர்த்தினி, ஆஞ்சனேயர், நரசிம்ம மூர்த்தி, தனித்த கிருஷ்ணர்,முருகர், பிரத்தியங்கிரா தேவி, சரப மூர்த்தி போன்ற உக்கிர படங்கள் வைக்க கூடாது. {உக்கிர தெய்வங்கள் நமது குல தெய்வமாக இருக்கும் பக்ஷத்தில் அந்த தெய்வப் படம் மட்டும் வைக்கலாம்.} ஆகம நெறிகளை கடைப்பிடிப்பவர்கள் மட்டுமே இப்படங்களை வைத்துக் கொள்ளவேண்டும். மேலும் உடைந்த படங்கள், பின்னமான ஸ்வாமி சிலைகள் இவைகளை வீட்டில் வைத்து பூஜிக்க கூடாது. சமுத்திரத்திலோ ஆற்றிலோ அல்லது ஏரியிலோ விட்டுவிட வேண்டும்.

நமது முன்னோர்கள் படங்களை தனியாக இருக்கவேண்டும் பூஜை அறையில் ஸ்வாமிக்கு நிகராக வைக்க கூடாது.

ஒரு ஜான் {கட்டை விரல் அளவு} மேல் உள்ள விக்கிரங்கள் வைப்பதாக இருந்தால் கண்டிப்பாக தினசரி அன்னம் வைத்து பூஜிக்கப்பட வேண்டும். தினசரியோ அல்லது வாரம் ஒரு முறையோ அபிஷேகம் செய்ய வேண்டும் என சாஸ்த்திரம் தெரிவிக்கிறது.

மேரு,ஸ்ரீ.சக்ரம், மற்றும் யந்திரங்கள் இவைகளை முறைப்படி உபதேசம் வாங்கிக்கொண்டு ஜபம்,தியானம் செய்வதாக இருந்தால் மட்டுமே வீட்டில் வைக்க வேண்டும் தவறினால் சில யந்திரங்கள் விபரீதமான கெடு பலங்களை தரும். சக்தி உபாசகர்கள் மட்டுமே ஸ்ரீ.சக்ரம்,மேரு வைத்து பூஜிக்க தகுதியுள்ளவர்கள் ஆவார்கள். வீட்டில் வலம்புரி சங்கு இருந்தால் அந்த சங்கில் அரிசியோ அல்லது ஜலமோ வைத்து பூஜிக்க வேண்டும் சங்கை காலியாக வைக்கலாகாது. சங்கை எதுவும் போடாமல் இருக்கும் பக்ஷத்தில் கமுத்தி வைக்கலாம். சங்கின் நுனி கிலக்கு திசை நோக்கி இருக்க வேண்டும்.

Relaxplzz

பக்க வாதமும் அதன் புது அறிகுறியும்........ தயவு செய்து வாசியுங்கள்...... பகிருங...

Posted: 15 Jun 2015 05:10 AM PDT

பக்க வாதமும் அதன் புது அறிகுறியும்........

தயவு செய்து வாசியுங்கள்...... பகிருங்கள்..... இதை 10 பேர் படித்தால் அதன் மூலம் ஒரு உயிர் காப்பாற்றப் பட்டாலும், மிகச் சந்தோஷம் தான்......

இரத்த உறைவு / பக்கவாதம்(Stroke) ஒரு ஆள்க் கொல்லி ஆகும். மருத்துவ உலகம் இப்போது ஒருவருக்கு பக்கவாதம் வந்து 3 மணி நேரத்துக்குள் அவருக்கு மருத்துவ உதவி கிடைக்கும் பட்ஷத்தில் எந்த வித பக்கவிளைவுகளும் இன்றி குணப்படுத்தி விடலாம் என நம்புகிறது. ஆனால் அந்த நபரோ இல்லை அருகில் இருப்பவர்களோ அசண்டையாக இருப்பதனால்த் தான் இன்னும் பல உயிர்கள் பறிபோய்க் கொண்டு இருக்கின்றன.

இதன் அறிகுறிகள் தான் என்ன?????
இதன் முதன் மூன்று எழுத்துக்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் STR அத்துடன் இப்போது Pஐயும் மருத்துவ உலகம் இணைத்து இருக்கிறது.

S-Smile- சிரிக்கச் சொல்லுங்கள் வாய் கோணிப்போய் இருக்கிறதா என அவதானியுங்கள்.

T-Talk- பேசச் சொல்லுங்கள், வார்த்தைகள் தெளிவாக வருகிறதா என அவதானியுங்கள்.

R-Raise- இரண்டு கைகளையும் மேலே உயர்த்தச் சொல்லுங்கள், சமச்சீராக முழு உயரத்துக்கும் கைகளை உயர்த்துகிறாரா என்பதனை அவதானியுங்கள்.

P-Poke- நாக்கை நீட்டச் சொல்லுங்கள், நாக்கு கோணிப்போய் இருக்கிறதா எனப் பாருங்கள்.

இந்த நான்கில் ஏதாவதில் உங்களுக்கு சந்தேகம் வந்தாலும் உடனடியாக உங்களுடைய நாட்டுக்கு உரிய அவசர சேவை இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மருத்துவ சிகிச்சைக்கு உதவி கோருங்கள். ஐக்கிய ராச்சியத்தில் இது 999, அமெரிக்காவில் 911 அதே போல உங்கள் நாட்டின் பெயரையும் இலக்கத்தையும் பின்னூட்டமிடுங்கள் நண்பர்களே.

மருத்துவ சேவையின் சில மணி நேர முதலீட்டினால் ஒரு உயிரைக் காப்பாற்றலாம் என்றால் அது முக்கியம் தானே. அதுக்குத் தானே அவர்கள் இருக்கிறார்கள். உங்கள் தொலைபேசி அழைப்பை அவர்கள் ஒரு போதும் ஒரு தொல்லையாக நினைக்க மாட்டார்கள்.....

தயவு செய்து இந்தச் செய்தியை எவ்வளவு பகிர முடியுமோ அவ்வளவு பகிருங்கள்..........

Relaxplzz

காலை வகுப்பிலே "வீட்டுப்பாடம் செய்யாத பிள்ளைகள் பெஞ்சில் ஏறி நில்லுங்கோ" என்று ஆ...

Posted: 14 Jun 2015 11:59 PM PDT

காலை வகுப்பிலே "வீட்டுப்பாடம் செய்யாத பிள்ளைகள் பெஞ்சில் ஏறி நில்லுங்கோ" என்று ஆசிரியர் சொல்ல, செய்யாதவர்கள் எழுந்து நின்றார்கள்.

அதிலே ஒரு குழந்தை மட்டும் கொஞ்சம் பாவமாய் அழுமாப்போல நின்றது.

ஆசிரியர் அந்த குழந்தையை "இங்கே வாம்மா" என்று அழைத்தார்.
"வீட்டுப்பாடம் செய்தியா?"
"இல்ல சார், எனக்கு அது விளங்க இல்ல"
"வீட்டில அம்மாவிடம் கேட்டிருக்கலாமே"
குழந்தை தயங்கியபடியே சொன்னது.

"எனக்கு அம்மா இல்ல"
ஆசிரியர் துணுக்குற்றுபோனார். அடடா அவசரப்பட்டு பெஞ்சில்ஏற்றிவிட்டோமோ என்று வருந்தினார்.

"அம்மா இல்லாட்டி அப்பாவிடமாவது கேட்டிருக்கலாமே கண்ணா"

"எனக்கு அப்பாவும் இல்லை சேர்"
குழந்தை பயந்த படியே சொல்ல ஆசிரியருக்கு தூக்கிவாரிப்போட்டது.
அம்மாவும் இல்லாமல் அப்பாவும் இல்லாமல் இந்த குழந்தை என்ன பாடுபட்டிருக்கும்? ச்சே எப்படிப்பட்ட்ட கொடுமையை செய்துவிட்டோம் என்று வருந்தினார்.
குழந்தையை பார்க்க பார்க்க ஆசிரியரின் கண்கள் கலங்கிவிட்டது.

"கண்ணம்மா .. இங்க பாரு .. அம்மாவும் அப்பாவும் இல்லையா? ..
பரவாயில்ல..நாங்க எல்லாம் இருக்கிறம் தானே .. கவலைப்படாதே. அது சரி, வீட்டில நீ யாரோட இருக்கிறாய்?"

குழந்தை அதே உணர்ச்சியோடு சொன்னது.
"மம்மி டாடியோட"

ஆசிரியர்-??????????? :O :O

Relaxplzz


# படித்ததில் பிடித்தது # - 5

ஒரு முறை ஒரு சிறுவன் குட்டி நாய்கள் விற்கும் கடைக்குச் சென்றான். அங்கே ஒரு குட்ட...

Posted: 14 Jun 2015 10:10 PM PDT

ஒரு முறை ஒரு சிறுவன் குட்டி நாய்கள் விற்கும் கடைக்குச் சென்றான். அங்கே ஒரு குட்டி நாய் மட்டும் தனியாக இருப்பதைக் கண்ட அவன் கடைக்காரரிடம் அது பற்றி விசாரிக்க
அவர் " அந்த குட்டி நாய்க்கு ஒரு கால் கிடையாது . அதனால் அதை விற்பனைக்கு வைக்காமல் சும்மா வைத்திருக்கிறோம் " என்றார்.

அந்த சிறுவன் அந்த குட்டி நாயை கையில் ஏந்தி அதன் காதுகளை மென்மையாக நாக்கில் தடவிக் கொடுத்தான். உடனே அந்த நாயும் அவன் காதுகளை மெலிதாக தனது நாவால் தடவிக் கொடுத்தது.

உடனே அவன் இந்த நாயை வாங்கியே தீர வேண்டும் என்று நினைத்தான் . நல்ல நிலையில் இருக்கும் நாய்களின் விலையோ 50 டாலர். அந்த சிறுவனிடம் இருப்பதோ 2 டாலர் மட்டுமே. உடனே வீட்டுக்கு விரைந்து சென்று 48 டாலர் திரட்டி கடைக்காரரிடம் கொடுத்து அந்த நாயை விலைக்கு வாங்கினான்.

அந்த கடைக்காரர் " இந்த ஊனமுற்ற நாயைப் போய் இவ்வளவு விலைக்கு வாங்குகிறாயே ? நீ என்ன முட்டாளா ? " என்று கேட்க அந்தச் சிறுவன் பதில் எதுவும் பேசாமல் தனது இடது கால் பேண்டைத் தூக்கி காட்டினான். அவன் தனது காலில் மரக் கட்டை அணிந்திருந்தான். அவனுக்கும் ஒரு கால் இல்லை.

மாற்றுத் திரனாளி என்றாலே பயன்படாதவர் என்று எண்ணக் கூடாது என்பதற்காகவே முழுத் தொகையையும் கொடுத்து வாங்கியதாக சொல்லாமல் சொன்னான்.

Relaxplzz

பொது அறிவு தகவல்கள் :- * மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள...

Posted: 14 Jun 2015 09:10 PM PDT

பொது அறிவு தகவல்கள் :-

* மனிதனுடைய காதுகளால் 130 டெசிபல் அளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்

* புலியே தாக்க பயப்படும் விலங்கு - காட்டு எருமை

* வாலில்லாத பூனைகளின் பெயர் மாங்க்ஸ் (Manx)

* ராட்ஷச பாண்டாவின் முக்கிய உணவு மூங்கில் கிளைகள்

* முள்ளம்பன்றி விரும்பி சாப்பிடும் உணவு உதிர்ந்த மான் கொம்புகள்

* உலகின் மக பெரிய கங்காரு - சிவப்பு கங்காரு

* எதிரிகள் பயமுறுத்தும் போது மயங்கிவிழும் விலங்கு - அப்போசம் (ஒருவகையான எலி )

* ட்ரே என்னும் கூண்டுகளில் வாழ்பவை அணீல்கள்

* மிக குறைவான ஆயுட்காலத்தை உடையது - ஈ

* மிக மெதுவாக இயங்கும் பாலூட்டி - தேவாங்கு

* எலும்பு கூடு இல்லாத விலங்கு - ஜெல்லி மீன்

* பூனையின் கண்பார்வை மனிதனைவிட எட்டு மடங்கு கூர்மையானது.

* ஒட்டகம் 1 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தண்ணீரை எளிதாக கண்டுபிடித்துவிடும்.

* கரையான் ஒரு நாளைக்கு முப்பதாயிரம் முட்டை இடும்.

* நத்தைகளால் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வரை நித்திரை கொள்ள முடியும்.

Relaxplzz

இரண்டு பெண்களின் தகப்பன் பேசுகிறேன். *******************************************...

Posted: 14 Jun 2015 08:15 PM PDT

இரண்டு பெண்களின் தகப்பன் பேசுகிறேன்.
*********************************************************

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒரு நிகழ்ச்சி பார்த்தேன்.பிரபல
நடிகரை , பல
கல்லூரி கன்னிகளும் கலந்து கொண்ட
நிகழ்ச்சி அது...

அதில் ஒரு பெண் அந்த நடிகருக்கு
வீட்டிலிருத்து பொங்கல்
கொண்டு வந்து ஊட்டி விட்டே ஆக
வேண்டும்
என்று ஊட்டி விடுகிறார். இன்னொரு
பெண்
நீங்கள் என்னை தொட்டு தூக்க வேண்டும்
என
அடம் பிடிக்கிறார்.

நடிகர் அவர்
நாகரீகமா என்னை வீட்டுக்கு போக விடாமல்
ஆக்கிடுவீங்க போல என்று தன் தர்ம
சங்கடத்தை மறைமுகமாக கூறுகிறார்...

இயக்குனர் அழ சொன்னால் அழும்,
சிரிக்க
சொன்னால் சிரிக்கும், பல
பெண்களோடு பல
பேர் மத்தியில் கட்டிப் புரளும் ஒரு நடிகன்
மீது இந்த பெண்களுக்கு ஏன் இத்தனை
பெரிய
ஈர்ப்பு? தன்னை சுற்றி பல உறவுகள் அன்பாக
இருக்கும் தருவாயிலும் பணத்துக்காக
நடிக்கும்
ஒரு நடிகன் மீது ஏன் தன்னை தொட்டு
தூக்க
வைக்கும் அளவிற்கு அன்பு?

விளங்கவே இல்லை நவீன தமிழச்சிகளே...

பணம் செலவழித்து படம் பார்த்தால்
அந்த
இரண்டரை மனி நேரம்
பொழுது போக்கு என்று உணருங்கள்
குழநதைகளே. அதை கடந்து அந்த
நடிகனை மன்மதனாக பார்க்காதீர்கள்
உங்கள்
மனாளனை மன்மதனாக பாருங்கள்.
சிந்தியுங்கள் பெண்களே!!!

இப்படி கேவலமாக நடந்து கொள்ளும்
பெண்களும், அதைக் கண்டிக்காத,
கண்டுகொள்ளாத பெண்கள்
அமைப்புகளுக்கும்,
ஏதாவது தவறுநடநதால் மட்டும்
வரிந்து கட்டிக் கொண்டு,
பெண்ணினத்தைக்
காக்க வந்த ரட்சகர்கள் போல்
பேசுவது பச்சை ஏமாற்றுவேலை.

பெண்கள் தவறாக
நடத்து கொள்ளும்போது அதைக்
கண்டிக்காத,
அவர்களை சரியாக வழி நடத்த எந்த
முயற்சியும் எடுக்காத பெண்களுக்கும்,
பெண்கள் அமைப்புகளுக்கும், தவறுகள்
நடக்கும் போது குரலெழுப்ப எந்த தார்மீக
உரிமையும் இல்லை.

அப்போது மட்டும்
கொதித்து எழுபவர்கள், பாதிக்கப்பட்ட
பெண்ணை வைத்து பிரபலமாகத்
துடிப்பவர்களே.

பெண்கள் இப்படி அதுவும்,
ஒரு தொலைக்காட்சி நிகழ்சியில்
நடநது கொள்ளும்போது பார்தது,
பெருமையடையும், பூரித்துப் போகும்
அவர்களின் கேடுகெட்ட பெற்றோர்களை
எந்த
வகையில் சேர்ப்பது..

Relaxplzz

Posted: 14 Jun 2015 07:33 PM PDT


0 comments:

Post a Comment