Thursday, 28 May 2015

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


நெஞ்சைத் தொட்ட உண்மைப் பதிவு: இன்று குழந்தைகளுக்கு தேர்வு முடிவுகள் என்று பள்ளி...

Posted: 28 May 2015 08:21 AM PDT

நெஞ்சைத் தொட்ட உண்மைப் பதிவு:

இன்று குழந்தைகளுக்கு தேர்வு முடிவுகள் என்று பள்ளி சென்று இருந்தேன்...
அப்போது ஒரு இஸ்லாமிய சகோதரியின் மடியில் இருந்த இரண்டு வயது குழந்தை என்னை பார்த்து சிரித்தது... நானும் சிரித்தேன்..அழகான குழ்தை.. நான் என் கைகளை நீட்ட...
அந்த தாயிடம் இருந்து தாவி என்னிடம் வந்தது.... என் மீசையை... தாடியை இழுத்து விளையாடிக்கொண்டே இருந்தது...
சிறிது நேரம் கழித்து அந்த இஸ்லாமிய தாய் தனது குழந்தையை கை நீட்டி அழைக்க...
அந்த குழந்தை தனது தாயிடம் கூட போகாமல் என்னுடனே இருக்க வேண்டும் என்று அடம் பிடித்தது...!! நான் ஆச்சரியாமாகி விட்டேன்... என்னிடம் அப்படி என்ன தான் குழந்தைகளை கவரும் திறன் உள்ளது என்று...!!
அப்போது ஒரு நெஞ்சை உலுக்கும் ஒரு நிகழ்வு..அந்த இஸ்லாமிய தாய் குலுங்கி குலுங்கி அழுதவாறே தனது குழந்தையை மீண்டும் அழைத்தார்...!!
நான் திகைத்தேன்..."... எங்க அழறீங்க..?? இந்தாங்க.." என்று குழந்தையை வலுக்கட்டாயமாக அவர் கையில் கொடுத்தேன்...அப்போது அந்த தாய்... "..மன்னிக்க வேண்டும் அண்ணா...நீங்கள் என் அண்ணனை போலவே உள்ளீர்கள்...!! குழந்தை உங்களை தனது தாய் மாமா என்று
நினைத்து விட்டது..." என்று அழுதபடியே கூறினார்...
உடனே நான்... "சரிங்க.. ஆனால் அதுக்கு நீங்க ஏன் அழறீங்க....?.." என்று கேட்டேன்.. .."போன வாரம் என் அண்ணன் ஒரு விபத்தில் இறந்து விட்டார்... அவர் எனக்கு ஞாபகம் வந்து விட்டது.. அது தான்... தப்பா நினைக்காதீங்க...!!.." என்றார்..நான் என் கண்ணில் நிரம்பிய நீரை நாசுக்காய் துடைத்துக் கொண்டேன்...!!
இங்கே மதமோ.. ஜாதியோ.. குலமோ.. கோத்திரமோ .. இல்லை... அன்பே சிறந்தது.. என்று ஒரு இரண்டு வயது
குழந்தை விளக்கி விட்டது...

நன்றி : தமிழ் உணர்வாளன்

பா விவேக்

திருமண பொருத்தம்......!!!! (இது பழைய "தமிழ் ஓலைச்சுவடியில்" கண்ட விஞ்ஞானத்துவமா...

Posted: 28 May 2015 08:17 AM PDT

திருமண பொருத்தம்......!!!!

(இது பழைய "தமிழ் ஓலைச்சுவடியில்" கண்ட விஞ்ஞானத்துவமான குறிப்பு)

"ஆக்கினா பொருத்தம் " என்பது ஒருவருக்கு பொருத்தமான வரனை தேர்ந்தெடுக்க உதவும் துல்லியமான முறையாகும்.

இம்முறைப்படி,
மனிதர்களை அவர்களின் புருவ அமைப்பை கொண்டு நான்கு வகையாக பிரிக்கப்படுகிறார்கள்

1.இணைந்த புருவ ஆண்கள் 65%பேர்
2.தனிப்புருவ ஆண்கள் 35%பேர்
3.இணைந்த புருவ பெண்கள் 35%பேர்
4.தனிப்புருவ பெண்கள் 65%பேர்

இணைந்த புருவ ஆணுக்கு,
தனிப்புருவ பெண்ணையும் , தனிப்புருவ ஆணுக்கு, இணைந்த புருவ பெண்ணையும் திருமணம் செய்து வைத்தால் தம்பதிகள் எப்போதும் ஒற்றுமையாக இருப்பார்கள்
அப்படியில்லாமல் கணவன் மனைவி இருவரும் இணைந்த புருவம் உள்ளவர்களாகவோ, அல்லது கணவன் மனைவி இருவரும் " தனிப்புருவம் உள்ளவர்களாகவோ, ஜோடி சேர்ந்திருந்தால் அவர்கள் எப்போதும் சண்டையிட்டுக்கொண்டே இருப்பார்கள்
இதை முதலில் நான் நம்பவில்லை, சிரிப்பு தான் வந்தது.
ஆனால் பல நூறு சிக்கல்கள் நிறைந்த தம்பதிகளிலும் ,ஜாதகத்தில் பொருத்தம் இருந்தும் Diverse ஆன பல தம்பதிகளிலும் ஆராய்ந்தபோது100%உண்மை என்றே தெரிகிறது.....

நம்பமுடியலையா???
அப்படியானால், உங்கள் வீட்டு பெரியவர்களிடம், இதை பற்றி கேளுங்கள் !! அவர்களே சொல்வார்கள் இது உண்மை என்று.....

"தீதும் நன்றும் பிறர் தர வரா.,
தத்தம் கருமமே கட்டளை கல்"

ஏமாறாதே,ஏமாற்றாதே...!
"அகத்தின் அழகு முகத்திலே தெரியும்"

உண்மையான ஆராய்ந்து பார்த்து சொல்லுங்கள்...

நன்றி : முத்துக்குமார்

பா விவேக்

0 comments:

Post a Comment