Tuesday, 19 May 2015

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


இன்றைய நிலை... பெரிய வீடு ஆனா பெற்றவர்களுக்கு இடமில்லை... விலை அதிகமான வாட்ச்...

Posted: 18 May 2015 10:15 PM PDT

இன்றைய நிலை...

பெரிய வீடு
ஆனா பெற்றவர்களுக்கு இடமில்லை...
விலை அதிகமான வாட்ச்
அதை பார்க்க நேரமில்லை...
நிலவை தொட்டாச்சு
ஆனா பக்கத்து வீட்ல யார் இருக்கான்னு தெரியாது...
மெத்த படிப்பு
பகுத்தறிவு இல்லை...
மருத்துவத்தில் முன்னேற்றம்
ஆரோக்கியத்தில் குறைபாடு...
அதிக வருமானம்
நிம்மதி இல்லை...
அதிகம் சாராயம்
குடிநீர் பற்றாக்குறை...
அகண்ட சாலைகள்
ஒதுங்கி போக இடமில்லை..
அதிக முகநூல் நட்பு
உயிர் நட்பு இல்லை...
அதிகம் மனிதர்கள்
மனித நேயம் குறைந்து விட்டது.

பா விவேக்

0 comments:

Post a Comment