Thursday, 14 May 2015

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


தமிழின் பெருமை... இங்கிலாந்தின் நடுவில் நியுயார்க் (Newyork) என்ற பகுதியில் உணவ...

Posted: 14 May 2015 04:21 AM PDT

தமிழின் பெருமை...

இங்கிலாந்தின் நடுவில் நியுயார்க் (Newyork) என்ற பகுதியில் உணவு அருந்திக் கொண்டிருந்த எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சி..

உணவு பரிமாறிய வெள்ளைக்காரரின் கையில் தமிழில்
பச்சை குத்தியிருந்தது .அவரிடம் பேசியதில்
"ஏதாவது வித்தியாசமாக பச்சை குத்த நினைத்தேன். இந்த மொழியின் எழுத்து என்னை மிகவும் கவர்ந்தது.
இது தமிழ் மொழி. உலகின் பழமையான மொழி" என்றார்.

"இது என்னுடைய பெயர். பாருங்கள்..ஜெ.. ர்.. ரி.." என்று தமிழிலில் சரளமாக உச்சரித்துக் காட்டினார். தமிழன் என்று சொல்லி தமிழ் பேச வெட்கப்படும் எம்மவர்கள் இந்த ஜெர்ரியைப் பார்த்தாவது மனம் மாறுகிறார்களா பார்ப்போம்...

தமிழன் என்று சொல்லடா...
தலை நிமிர்ந்து நில்லடா...

ஒவ்வொரு தமிழனும் பகிர்ந்து கொள்ள வேண்டிய செய்தி ...

நன்றி : ரமேஷ்

பா விவேக்


0 comments:

Post a Comment