Relax Please: FB page daily Posts |
- கேட்டதும் சிரிக்க வைக்கும் கவுண்டர் டயலாக்குகள் !! அண்ணே உங்க கைய கால நெனச்சு க...
- (y) Relaxplzz
- ஞாபகம் இருக்கா...?
- ஒரு அனுபவம்.. ஒரு உண்மை... :) ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம்....
- கவுண்டமணி : என்ன டா கருபர்கள் மாநாடா? செந்தில் : அண்ணே ரொம்ப சிகப்பு டா சட்டைய...
- "படித்ததில் பிடித்தது." புலிகளையெல்லாம் கூட்டமாய் பிடித்து பொதி சுமக்க வைக்கிறத...
- எப்பவும் ஆண்களைவிட பொண்ணுங்களுக்கு தான் தலைக்கனம் ஜாஸ்தி... . . . . . . . . . ....
- கவுண்டமணி அவர்க்ள் பேசி புகழ் பெற்ற வசனங்கள் அன்று முதல் இன்று வரை ................
- ரம்யா : வாங்க வாங்க உங்களுக்கும் அவார்ட் இருக்கு எப்படி ஃபீல் பண்றீங்க? வந்தவர்...
- சத்தியராஜ் : நா வேணும்ணா படிச்சி ஒரு டாக்டரா-வோ, இன்ஜினியரா-வோ ஆகிடறனே... கவுண்...
- சிக்சர் அடித்திருக்கிறார் அருள்நிதி! யாரிடமும் கதையையோ விமர்சனத்தையோ கேட்டுவிட்...
- ***கவுண்டமணி பற்றி சுவையான தகவல்…*** சுப்பிரமணி’யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப...
- இனி இப்படி ஒருவரை நாம் பார்க்க முடியுமா ? இதை படித்து உங்கள் கண்களில் கண்ணீர் வர...
- கவுண்டமணி என்றாலே நக்கல், நையாண்டி, யாரையும் மதிக்காத பேச்சு என்று எல்லோர் மனதில...
- கவுண்டமணி அவர்கள் தன் திருமணத்தில்
- சிரிப்புக்கு மறு உருவம் கொடுத்து..! நகைச்சுவையை தன் வசப்படுத்தி..! தமிழ் மக்களை...
Posted: 25 May 2015 08:20 AM PDT கேட்டதும் சிரிக்க வைக்கும் கவுண்டர் டயலாக்குகள் !! அண்ணே உங்க கைய கால நெனச்சு கேக்றேன், கவுண்டர் : எங்க கைய கால நெனச்சு ஒரு பத்தடி தலைகீழ நடந்துட்டு வா பாக்கலாம் .. அண்ணே இவங்கலாம் தூரத்து சொந்தம்னே! தூரம்னா ஒரு 30 கிலோமீட்டர் இருக்குமா? டேய்! புலி நக்குனாலே நீ செத்துப்போயிடுவ, இதுல புலி மாதிரியே கொறட்டவேற! பர்ஸ காணோம்டா... என்னது நர்ஸ்ஸ காணோமா.. நர்சு இல்லடா பர்சு பர்சு.. ஓ நர்ஸோட பர்ஸா.... செந்தில்: மை சன் தாய் சொல்ல தட்டாதப்பா.. கவுண்டா்: தாய் என்ன டென்னிஸ் பந்தாடா மட்டைய எடுத்து தட்டுறதுக்கு !! நானாவது பரவால்ல எங்கப்பா தேங்கா உடைச்சார்னா அது அடுத்த செகண்ட் எங்க வீட்ல சட்னியாயிருக்கும் !! வீட்ல பெரிய மனுசன் நான் இருக்கேன் அது என்ன அவ பிச்சை இல்லைனு சொல்றது...நீ வா.. இப்ப நான் சொல்றேன் பிச்சை இல்லை போ ;-) ;-) Relaxplzz |
Posted: 25 May 2015 07:59 AM PDT |
ஞாபகம் இருக்கா...? Posted: 25 May 2015 07:45 AM PDT |
Posted: 25 May 2015 07:38 AM PDT ஒரு அனுபவம்.. ஒரு உண்மை... :) ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம். அப்போது எனக்கு 18 வயது இருந்திருக்கக்கூடும். நேருநகர் அரசு குடியிருப்பில் 60 அரசு ஊழியர் குடும்பங்களுக்கு மத்தியில் ஒரு குடும்பமாக கவலையேதுமில்லாமல் வாழ்ந்த பொற்காலம். எதிர்ப்படுபவர்கள் எல்லோருமே நமது நண்பர்களாகவும் தெரிந்தவர்களாகவும் இருந்துவிட்ட காலம். இப்போதுபோல அப்போது வீட்டுக்குள்ளேயே எல்லோரும் முடங்கியிராத காலம். வீட்டுக்குள் தூங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் ஏதாவது முக்கியமான கிரிக்கெட் போட்டியென்றால் பார்ப்பதற்கும் மட்டுமே இருப்போம். மற்றெல்லா சமயங்களையும் வீட்டுக்கு வெளியேதான் செலவழிப்போம். படிப்பதுகூட மொட்டை மாடியில்தான். அதனைவிட பாதுகாப்பான ஒரு வாழ்க்கையினை இனி எந்த காலத்திலும் வாழமுடியாது என்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது. போகட்டும்.......... விஷயத்திற்கு வருகிறேன். அந்த சமயத்தில் எங்கள் வீட்டுக்கு எதிரே சரவணன் (பெயரை மாற்றியுள்ளேன்) என்றொரு அரசு ஊழியர் தன் குடும்பத்துடன் வசித்துவந்தார். அவர் விந்தி விந்தி நடப்பார். சைக்கிளில்தான் பணிக்குச் சென்று வருவார். மிகவும் சாதாரண அரசுப்பணியில் இருந்தவர். போவதும் தெரியாது வருவதும் தெரியாது. தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருப்பார். ஒடிசலான தேகமும் குள்ளமான உடல்வாகும் கொண்ட அவருக்கு கரடுமுரடான உருவம்கொண்ட ராட்சசிபோன்ற ஒரு மனைவி. அந்த பெண்மணி வெளியில் வந்தாலே மற்றெல்லோரும் ஓடி ஒளிந்துகொள்வர். அந்த அளவுக்கு கெட்டவார்த்தை புழங்கும் நா கொண்டவர். இந்தக் கேடுகெட்ட நாகரிகமற்றவர்களையெல்லாம் இங்கு யார்தான் குடிவைத்தது என்று எல்லோரும் புலம்புவார்கள். அவர்களுக்கு ஒரு பெண்குழந்தை இருந்தது. ஒருநாள் இரவு ஏழுமணியிருக்கலாம் நான் வீட்டுக்கு வெளியில் நின்றிருந்தேன். அப்போது யாரோ ஒருவர் என்னிடம் வந்தார். "தம்பி... இங்கே சரவணன் வீடு எதுப்பா?" "எந்த சரவணனைக் கேட்கறீங்க சார்?" அவர்செய்யும் வேலையையும் அவர் விந்தி விந்தி நடப்பார் என்பதையும் கூறிவிட்டு, "அந்த சரவணன்தான்பா" என்றார். அவரது வீட்டைச் சுட்டிக்காட்டி, "அதோ அந்த முதல்மாடியில் இருக்கிறதே அந்த வீடுதான் சார் அவரது வீடு. போய்ப் பாருங்கள்" என்றேன். "ஓ.. அதுதானா!" என்று ஏற்கனவே தெரிந்த செய்தியை உறுதிபடுத்திக்கொள்ளும் தொனியில் பேசியவர், தொடர்ந்தார் "அவர் ஏன் தம்பி வீட்லயே இருக்க மாட்டேன் என்கிறார்? எப்போது கேட்டாலும் வெளியே போயிருக்கிறார் வெளியே போயிருக்கிறார் என்று சொல்கிறார்களே.. அது உண்மைதானா இல்லை வீட்டிலேயே இருந்துகொண்டு அவ்வாறு சொல்லச் சொல்கிறாரா?" "அதெல்லாம் அப்படி ஒன்றும் பொய் சொல்லமாட்டாங்க சார். அவர் எப்போதும் சைக்கிளில்தான் வெளியே போவார். பாருங்க அவர் சைக்கிள் கூட இல்லை......" என நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே குடியிருப்பின் நுழைவு வாயிலில் போடப்பட்டிருக்கும் கேட்டுக்குள் சர்ரென்று சைக்கிளில் நுழைந்தார் சரவணன். நுழைந்தவர் எங்கள் இருவரையும் பார்த்துவிட்டார். அவர் வருவதை நான் கவனித்துவிட்டேன் ஆனால் அவரை விசாரிக்க வந்தவர் கவனிக்கவில்லை. எங்களைப் பார்த்த சரவணனோ சடக்கென்று பிரேக்கைப்பிடித்து சைக்கிளிலிருந்து இறங்கி சைக்கிளைப் பிடித்து அலேக்காகத் தூக்கி அப்படியே வந்தவழியாகத் திருப்பி தப்பியோட முயற்சித்தார். நானோ இது புரியாமல் "அதோ சரவணன் சார் வந்துட்டார் பாருங்க" என்று இவரிடம் போட்டுக்கொடுத்துவிட்டேன். திரும்பிப்பார்த்த அவர், "ஏ.. சரவணா..... நில்லுப்பா... நில்லுப்பா..." என்று அவர் பின்னால் ஓட அவரோ இவர் கூறியதே காதில் விழாதவராகவும் இவரைக் கவனிக்காதவராகவும் வேக வேகமாய் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு ஓடிப்போய் ஒரு ஜம்ப் பண்ணி சைக்கிளில் ஏறி அமர்ந்து பறந்துவிட்டார். இந்த துரத்தல் ஆசாமியும் அவர் பின்னே கத்திக்கொண்டே ஓடி மறைந்தார். இதைப்பார்த்த நான் வயிற்றைப்பிடித்துக்கொண்டு ரோட்டிலேயே அமர்ந்து சிரிக்கத் தொடங்கிவிட்டேன். விழுந்து விழுந்து சிரித்தேன். பிறகு நண்பர்கள் அனைவரும் கூடியபொழுது இந்த செய்தியைக்கூறி குடியிருப்பே அதிரும் அளவுக்கு சிரித்துக்கொண்டோம். அப்போது நண்பனொருவன் சொன்னான் அவர் நிறையபேரிடம் கடன்வாங்கிவிட்டதாகவும் அதனால் இப்படி ஓடி ஒளிவதாகவும். "கடன் வாங்குனா திருப்பி கொடுக்கணும்... இப்படியா தலைதெறிக்க துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு ஓடுறது?" என்று நான் சொல்ல அனைவரும் 'கொல்' என்று சிரித்தோம். இப்போது நான் அதை நினைத்துப்பார்க்கையில் துளிகூட சிரிப்பு வரவில்லை. மாறாக சோகம் என்னைப் பீடிக்கிறது. குடும்பக் கஷ்டத்துக்காகக் கடன்பட்டு அதை அடைக்க வழியில்லாமல் அதேநேரம் குடும்பத்தை நடத்தவும் வழியில்லாமல் மேலும் கடன்பட்டு ஓடி ஒளிந்த அந்த அலுவலரின் வாழ்க்கை எனக்கு அனுதாபத்தை உண்டாக்குகிறது. கடன்பட்டால் கொடுப்பதுதானே நியாயம் என்று அன்று நான் கேட்ட கேள்வி இன்று முடியாதவன் என்ன செய்வான் என்ற எதிர்க்கேள்வியை எழுப்புகிறது. அவர் மீதான பரிதாபம் மேலோங்குகிறது. 5000 கோடி கடன்வாங்கிய விஜய் மல்லய்யா அதைத் தன்னால் கட்டமுடியவில்லை என்று கைவிரித்தபோது அவரை ஒரு பொருட்டாக எண்ணாத இந்த சமூகத்தில் வெறும் ஆயிரம் ஐந்நூறு கடன்வாங்கி அதை அடைக்க இங்கே கடன்வாங்கி இதை அடைக்க அங்கே கடன்வாங்கி கடனில் மூழ்கிச்சாகும் சாதாரண மனிதனின் நிலை கண்ணீரை வரவழைக்கிறது. நியாய தர்மங்களைப்பேச நாக்கு எழவில்லை. உன்வீட்டுப்பணத்தைக் கொடுத்திருந்தாயானால் இப்படிப் பேசுவாயா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. பேசியிருக்க முடியாதுதான். நியாயத்தையும் தர்மத்தையும் அடுத்தவன் விஷயத்தில் மட்டும் பேசும் சராசரி மனிதன்தான் நான் என்பதை எந்த வெட்கமும் இல்லாமல் ஒப்புக்கொள்கிறேன். பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை. சொல்லத்தோன்றியது... சொல்லிவிட்டேன்! - வசந்தன் காரைக்கால் @ Relaxplzz |
Posted: 25 May 2015 03:30 AM PDT கவுண்டமணி : என்ன டா கருபர்கள் மாநாடா? செந்தில் : அண்ணே ரொம்ப சிகப்பு டா சட்டைய பாத்தியா? கவுண்டமணி : அது சரி என்ன பேசிட்டு இருக்கிங்க..! செந்தில் : இவங்க மச்சா சிங்கப்பூர்ல இருந்து பணம் அனுப்பி இருக்காறாம், அதான் என்ன தொழில் பன்னலாம்னு கேக்கறான்? கவுண்டமணி : என்ன டா யார கேட்டாலும் சிங்கப்பூர்-ல இருந்து பணம் வருதுன்றிங்க, ஜப்பான்-ல இருந்து வருது, மலேசியா-ல இருந்து வருது, அப்ப இந்தியா-ல பணமே இல்லையா? இந்தியா-ல இருத்த பணமெல்லாம் எங்க கவுண்டர் டயலாக்ஸ் @ Relaxplzz ![]() |
Posted: 25 May 2015 02:38 AM PDT "படித்ததில் பிடித்தது." புலிகளையெல்லாம் கூட்டமாய் பிடித்து பொதி சுமக்க வைக்கிறது! இந்த கல்வி முறை. சிங்கங்களை சிறையில் அடைத்து சிட்டுக் குருவி மாதிரி கத்தப் பழக்குகிறது! பாக்கட் பால் சமூகத்திடம் பசுமாட்டைப் பற்றி கட்டுரை எழுதச் சொல்கிறது இந்த கல்வி முறை. படிப்பை திணிக்கும் பதற்றத்தில் பிஞ்சுகளின் பட்டாம் பூச்சிக் கனவுகளில் பெட்ரோல் ஊற்றி விடுகிறது! தன்னம்பிக்கையற்ற தக்கைகளை உருவாக்கி பன்னாட்டு நிறுவனங்களுக்கு பார்சல் அனுப்புகிறது! இந்த கல்வி முறை எழுதப் படிக்கத் தெரிந்த பாமரர்களுக்கு பட்டை தீட்டி வைரமென விற்கிறது.! நூற்றுக்கு நூறு மதிப்பெண்ணைக் காட்டி வருகிற பள்ளிகளின் விளம்பரம் நூறு சதவிகித பிலேஸ்மான்ட்டைக் காட்டி வருகிற கல்லுரி விளம்பரம் எல்லாம்.. செக்கிழுக்க இங்கே எருதுகள் செய்து தரப்படும் என்பதன் முகமூடிகள் தானே! வகுப்பறை தாண்டி வாசிக்காத சமூகம்! பாட புத்தகம் தாண்டி சிந்திக்காத சமூகம்! வரலாறுகளை வெறும் தேதிகளாய்.. பூகோளத்தை நாட்டின் தலை நகரங்களாய் மட்டும் மனப்பாடம் செய்த சமூகம்! கேல்குலஸ் கணக்குகளை எதற்குப் படித்தோம் என்று-ஒரு பொறியாளனே புரிந்து கொள்ள முடியாத சமூகம்! பத்து மார்க் கேள்விக்காக பிக் பேங்கைப் படித்த சமூகம்! கலித்தொகை தொடங்கி கலிங்கத்து பரணி வரைக்கும் ராபர்ட் ப்ராஸ்ட் தொடங்கி வில்லியம் வேர்ட்ஸ்வர்த் வரைக்கும் படித்தாலும் தப்பின்றிப் பேசத் தடுமாறுகிற சமூகம்! அடடா பட்டியலிட்டால் அடங்காது இந்த கல்வி முறையின் சாதனைகள்.! வெறும் வார்த்தகளால் விளக்க முடியாத வேதனைகள்! Relaxplzz ![]() # படித்ததில் பிடித்தது # - 4 |
Posted: 25 May 2015 02:04 AM PDT எப்பவும் ஆண்களைவிட பொண்ணுங்களுக்கு தான் தலைக்கனம் ஜாஸ்தி... . . . . . . . . . . . #லாங் ஹேர், ஹேர் பின்,சவுரி.... :P - விவிகா சுரேஷ் @ Relaxplzz |
Posted: 25 May 2015 01:30 AM PDT கவுண்டமணி அவர்க்ள் பேசி புகழ் பெற்ற வசனங்கள் அன்று முதல் இன்று வரை .............. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா சங்கூதுற வயசுல சங்கீதா இது உலக நடிப்புடா சாமி உலகத்திலேயே ரெண்டு புதிசாலிங்க. ஒண்ணு ஜி.டி. நாயுடு. இன்னொன்னு இந்த தர்மடி தர்மலிங்கம் "நீ வாங்குற அஞ்சுக்கும் பத்துக்கும் இந்த விளம்பரம் தேவயா?" பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா? ஆங்! இதுக்குத்தான் ஊருல ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்கறது! இப்போ ஆலையில ஓடுற கரும்பில அடிக் கரும்பா இருந்தா என்ன நுனிக்கரும்ப இருந்தா என்ன? நமக்கு வேண்டியது வெல்லம் தானேடா கோமுட்டித்தலையா! கூடை வைச்சிருக்கவங்களுக்கெல்லாம் பெட்ரோமேக்ஸ் லைட் தரதில்லை அட்ரசக்க... அட்ரசக்க... அட்ரசக்க... அ....ட்....ர....ச...க்...க ஆடு எப்புட்றா பேசும் நாராயணா! இந்த கொசுத்தொல்லைத் தாங்கமுடியலடா! மருந்தடிச்சு கொல்லுங்கடா காந்தக் கண்ணழகி உனக்கு மினிஸ்ட்ரி ல இடம் பார்க்றேன் இப்வே கண்ண கட்டுதுடா சாமி நல்ல சங்கீதத்தை கேளுங்கப்பா! ஒரு வித்வான பாத்து கேக்குற கேள்வியாயா இது! பாரு கேக்குறதையும் கேட்டுபுட்டு நையா பைசாவுக்கு ப்ரயோஜனம் இல்லாதவன் மாதிரி நிக்கிறான் அய்யோ ராமா! ராமா என்னை ஏன் இந்த மாதிரி கழிசடை பசங்களோட எல்லாம் சேர வைக்குற? சத்திய சோதனை ஏம்பா ரிக்ஷா வருமா? கவுண்டமணி: ரிக்ஷா தானா வராது நான் வந்தாதான் வரும். பேப்பர் ரோஸ்ட் சாப்பிட்டா, லிவருக்கு ரொம்ப நல்லது. சூரியனை யாரும் சுட முடியாது சார். சூரிய வெப்பம்தான் நம்மளைச் சுடும். போலீஸ்கார்... போலீஸ்கார்... எனக்கு ஒன்னும் தெரியாது போலீஸ்கார்... இதை தஞ்சாவூர் கல்வெட்டுல செதுக்கி வச்சிட்டு பக்கத்துல உட்கார்ந்துடு. உனக்குப் பின்னால வர சந்ததிகள் அதைப் பாத்துத் தெரிஞ்சுக்கட்டும். நாயக்... கல்நாயக்... ஊருக்குள்ளாற இந்த சினிமாகாரனுங்க மட்டும்தான் பொறந்தானுங்களா? டேக் த டொண்ட்டி பைவ் ரூப்பீஸ். குட் மார்னிங்க் ஆபீசர். ஸ்டார்ட் மியூசிக்... ஏம்மா நரி, ஒருக்கா ஊளையிடுமா... எட்டணா போட வக்கில்லாத நாயி, லா பேசுது பாரு. சேதுராமன் கிட்ட ரகசியமா? மர்க்கா மர்க்கா சொல்லு... பிச்சகாரனுக்கு செக்கூரிட்டி பிச்சகாரனே அட பரதேசி நாய.. புள்ளைய குடுக்குறதுக்கு முன்னாலயே ஆணா பொண்ணான்னு சொல்லிட்டு குடுங்கடா, இல்ல ஜட்டியவாவது அவுத்துட்டு குடுங்கடா. தமிழ்நாட்டு மானத்தை நான் தான் காப்பாத்த போறேன். தலை கீழாகத்தான் குதிப்பேன். ஏண்டா எப்பப் பாத்தாலும் மூஞ்சில எருமை சாணியை அப்புன மாதிரியே திரியுற. தூம் தாதா திங்குறதுக்கு சோறு இருக்காடா நாயே, உனக்கெதுக்குடா கிரிக்கெட் ஸ்கோரு??? கழுத மேய்க்குற பையனுக்கு இவ்ளோ அறிவான்னு ஊர்காரனுங்களுக்கு பொறாமை. இந்த தெரு எவ்ளோ வெலைன்னு கேளு... அது ஏண்டா என்னைப்பார்த்து அந்தக் கேள்வியைக் கேட்ட? ஆ! இங்க பூசு... இந்தா! இங்க பூசு... ஆங் ரைட்ல பூசு... இந்தா லெப்ட்ல பூசு... காந்தக் கண்ணழகி... ஸ்டார்ட் மியூசிக் அந்த இன்னொரு வாழைப்பழம் எங்கடா? டேய் நாதஸ்... ஜிம்பலக்கடி பம்பா. ஆப்பிரிக்கன் அங்கிள் உலகம் உருண்டைனு அமெரிக்காக்காரன் கண்டுபுடிக்கலை. ஐயம் (I am) தான் கண்டுபுடிச்சது. துண்டு போட்டவன எல்லாம் புடிச்சீங்கன்னா குண்டு போட்டவனையும் புடிச்சிரலாம். - ரகசிய போலீஸ் நன்றி - விக்கி மேற்கோள் . Relaxplzz ![]() |
Posted: 25 May 2015 12:59 AM PDT ரம்யா : வாங்க வாங்க உங்களுக்கும் அவார்ட் இருக்கு எப்படி ஃபீல் பண்றீங்க? வந்தவர் : அட போம்மா, நான் ஃபன்ஷனுக்கு chair போட வந்தவன்.. #விஜய்அவார்ட்ஸ் - Chelli Sreenivasan @ Relaxplzz |
Posted: 25 May 2015 12:30 AM PDT சத்தியராஜ் : நா வேணும்ணா படிச்சி ஒரு டாக்டரா-வோ, இன்ஜினியரா-வோ ஆகிடறனே... கவுண்டர் : யாரு நீயா..! அது எப்படி மாப்பு கொஞ்ச கூட வெக்க படமா பேசிட்ட, படிப்பு என்ன அவ்வளோ Cheap-a போயிடுச்சா..? ஏய் படிப்பு இப்பலாம் வேற Range-ல போய்டு இருக்கு மாப்பு, LKG, UKG-னு கேள்வி பட்டு இருக்கி-யா... அதுக்கு முன்னாடி ஒரு ஒன்றை வருஷம் குழந்தைங்க "சறுக்கு விளையாட்டு, தூறு விளையாட்டுலாம்" விளையாடனும்... அதுக்கு அப்புறம் ஒரு ஆயா வரும், மடியல உக்கார வச்சி சோறு ஊட்டும், "உன் நெஞ்சுல இருக்க முடி Rangeக்கு" நீ ஆயா மடியல உக்கார முடியுமா, ஆயா வேணா உன் மடில உக்காரலாம்.. அடேங்கப்பா "LKG, UKG, +2, BABL" நினைத்தாலே தல சுத்து-து அத நீ படிக்கறன்-ற யப்பா... #கவுண்டர்_டயலாக்ஸ் Relaxplzz ![]() |
Posted: 25 May 2015 12:00 AM PDT சிக்சர் அடித்திருக்கிறார் அருள்நிதி! யாரிடமும் கதையையோ விமர்சனத்தையோ கேட்டுவிட்டுப் பார்க்க எண்ணாதீர்கள். படத்தை ரசிக்கவே முடியாது. இரவுநேரத்தில் பார்த்தால் மட்டுமே முழுமையாக ஒன்ற முடியும். ஹீரோயின் கழுத்தறுப்பு இல்லாத கம்ப்ளீட் எண்டெர்டெயினர். நேரம் போவதே தெரியவில்லை அத்தனை விறுவிறுப்பு. குழந்தைகளை பார்க்க வைப்பதை தவிர்க்கவும். பேய் படத்தில் நகைச்சுவைப்பேய் என்றும் பேயே நகைச்சுவை என்றும் எரிச்சல் மூட்டாத சின்சியர் முயற்சி. பீட்சா படத்திற்குப் பிறகு முழுமையாய் பயமுறுத்திய படம். கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து சீட் நுனிக்கு நீங்கள் வரப்போவது உறுதி. இதுமாதிரிப் படங்கள் நிறைய வரவேண்டும். - வசந்தன் காரைக்கால் @ Relaxplzz ![]() ![]() |
Posted: 24 May 2015 11:30 PM PDT ***கவுண்டமணி பற்றி சுவையான தகவல்…*** சுப்பிரமணி'யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப் பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக் கொண்டபுரம்!. கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் முற்போக்கான மேற்கோள்கள் தெறிக்கும். `பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி' என்பார் இயக்குநர் மணிவண்ணன்! பாரதிராஜாதான் `கவுண்டமணி' எனப் பெயர் மாற்றினார். `16 வயதினிலே' தான் அறிமுகப் படம்! அம்மாவை `ஆத்தா' என்று தான் ஆசையாக அழைப்பார். வீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டு விட்டுத்தான் நகர்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின்போதுதான் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது. அவ்வளவு தூரம் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பார்!· மிகப் பிரபலமான கவுண்டமணி –செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். இது ஓர் உலக சாதனை! இவர் மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக மட்டும் நடித்த படங்கள் 12. கவுண்டமணிக்குப் பிடித்த நிறம் கறுப்பு . எந்நேரமும் அந்த நிறம் சூழ இருந்தால்கூட `சரி' என்பார். `இங்கிலீஷ் கலருடா ப்ளாக்!' என்பவர், எங்கே போவதென்றாலும் ஜீன்ஸ்–கறுப்பு நிற பனியன் அணிந்துதான் செல்வார்! உணவு வகைகளில் ரொம்பக் கண்டிப்பு, `பசி எப்போதும் அடங்காத மாதிரியே சாப்பிடுங்கப்பா' என நண்பர்களுக்கு அறிவுறுத்துவார். பக்கா சைவம்!· சினிமா உலகில் அவருக்குப் பெரிய நட்பு வட்டம் கிடையாது. ஆனாலும் சத்யராஜ், அர்ஜீன், கார்த்திக் ஆகிய மூவரிடமும் நெருக்கமாகப் பழகுவார்! கவுண்டமணிக்குப் பிடித்த நகைச்சுவை நடிகன் சுருளிராஜன்தான். அவரின் நகைச்சுவைபற்றி அவ்வளவு பெருமிதமாகப்பேசுவதைக் கேட்டு கொண்டே வயிறு வலிக்கச் சிரித்து வரலாம்! புகைப் பழக்கம் அறவே கிடையாது. வெளியே விழாக்கள், பார்ட்டிகள், பிறந்த நாள் நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்துகொள்கிற வழக்கம் கிடையாது தனிமை விரும்பி! கவுண்டமணி தி.நகர் ஆபீஸீக்குப் போனால் சின்ன வயதுக்காரராக இருந்தாலும் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் சொல்வார். நாம் அமர்ந்து பிறகுதான் அவர் உட்கார்ந்து பேச்சை ஆரம்பிப்பார்! · கவுண்டருக்கு எந்தப்பட்டங்களும் போட்டு கொள்ளப் பிடிக்காது. `என்னடா, சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம், அவருக்கு பட்டம் கிடையாதுடா!' என்பார். சாமியார்களைப் பயங்கரமாகக் கிண்டல் செய்வார், `மனிதனாகப் பிறந்தவர்களைத் தெய்வமாகச் சித்தரிப்பது ஏமாற்று வேலை' என்பார். நமக்கும் கடவுளுக்கும் சாமியார்கள் மீடியேட்டரா எனச் சாட்டை வீசுவார்.! கவுண்டருக்கு, அவர் நடித்ததில் பிடித்த படங்கள் `ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்' `வரவு எட்டணா செலவு பத்தணா', `நடிகன்', அட… என்னடா பெருசா நடிச்சுப்புட்டோம், மார்லன் பிராண்டோவா நானு' என சுய எள்ளலும் செய்துகொள்வார்! `மறக்கவேண்டியது நன்றி மறந்தவர்களை, மறக்கக் கூடாதது உதவி செய்தவர்களை' என அடிக்கடி குறிப்பிடுவார். ஒருவரை எதிரி என நினைத்துவிட்டால் அவர்களை அப்படியே புறக்கணித்துவிடுவார். ஆனால், நண்பர்கள் கோபித்தாலும், அவரே சமாதானத்துக்குப் போவார்! சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மருந்துவமனையில் சேர்ந்து, சிகிச்சைக்குப் பிறகுகுணமானார் கவுண்டர். அப்போது மருந்துவமனைக்கு உலகம் முழுவதிலும் இருந்து வந்த போன் கால்கள், இ-மெயில்கள் கணக்கில் அடங்காதவை. அதைப்பற்றிப் பேசினால் சிரிப்பு அரசனின் கண்களில் நீர் சுரக்கும்! ஒரே ஒரு தடவைதான் விகடனில் மிக நீண்ட பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். மற்றபடி பேட்டி, தொலைக்காட்சி நேர்காணல் என எதிலும் தலை காட்டியது இல்லை! Thanks ஆனந்தி ராம்குமார். Relaxplzz ![]() |
Posted: 24 May 2015 10:49 PM PDT இனி இப்படி ஒருவரை நாம் பார்க்க முடியுமா ? இதை படித்து உங்கள் கண்களில் கண்ணீர் வருவதற்கு நான் உத்திரவாதம் அளிக்கின்றேன் சம்பவம் 1 காமராஜர் முதல்வராக இருந்தப் பொழுது , அவரது அமைச்சரவையில் பங்கு பெற்ற முன்னாள் ஜனாதிபதி ஆர் . .வெங்கட்ராமன் . ஒரு முறை விருதுநகரில் இருந்த காமராஜரின் வீட்டிற்கு கோடை காலத்தின் பொழுது சென்றிருந்தார் . அப்பொழுது அங்கு காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் பனை ஓலை விசிறியால் விசிறிக் கொண்டிருந்தார் . உடனே தன்னுடைய சொந்த செலவில் ஒரு மின் விசிறியை வாங்கி வந்து , அதை இயக்குவதைப் பற்றி அவரிடம் சொல்லிக் கொடுத்து விட்டுப் போனார் . பிறகொரு சமயம் வீட்டிற்குப் போன போது மின் விசிறியைப் பார்த்துவிட்டு விசாரித்த காமராஜர் , எத்தனையோ தாய்மார்கள் பனை ஓலை விசிறியால் தான் விசிறிக் கொள்ளும் பொழுது , உனக்கு மட்டும் வெங்கட்ராமன் மின் விசிறி ஏன் வாங்கித் தந்தார் ? முதல் அமைச்சரின் அம்மா என்பதால் தானே . இது கூட சலுகை லஞ்சம் மாதிரி தான் என்று சொல்லி விட்டு அந்த மின்விசிறியை விருது நகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு எடுத்துக் கொண்டு போகச் சொல்லிவிட்டார் . சம்பவம் 2 டெல்லியில் உலகக் கண்காட்சி நடந்த சமயம் , அதன் துவக்க வ்ழாவுக்கு அன்றைய பிரதமர் நேருவுடன் காமராஜரும் சென்றிருந்தார் . தற்பொழுது பேரூந்து நிலையங்களிலும் இரயில் நிலையங்களிலும் வெகு சாதாரணமாகக் காணப் படுகிற எடை பார்க்கும் எந்திரம் அந்தக் கண்காட்சியில் அறிமுகமாகியிருந்தது . நேரு எந்திரத்தில் ஏறி நின்று . காசு போட்டு எடை பார்த்தார் . மத்திய அமைச்சர்கள் பலரும் அவ்வாறே செய்தனர் ... காமராஜர் மட்டும் சற்றே ஒதுங்கி நின்றிருந்தார் . நேரு அவரையும் எடை பார்க்கும் படி கட்டாயப் படுத்தினார் . அவரோ மறுத்துவிட்டார் . சுற்றி நின்றிருந்தவர்களுக்கு ,திகைப்பு பிரதமர் சொல்லியும் காமராஜர் மறுக்கிறாரே என்று . அப்பொழுது நேரு சொன்னார் ; " காமராஜர் எதற்கு மறுக்கின்றார் என்று எனக்குத் தெரியும் , இந்த எந்திரத்தில் ஏறி நின்று போடும் காசு கூட இபொழுது இவரிடம் இருக்காது " ,என்றார் பிறகு , காமராஜருக்கு தானே காசு போட்டு எடை பார்த்தார் நேரு . சம்பவம் 3 தன்னுடைய பெயரை பயன் படுத்தி தனது குடும்பத்தினர் எந்த தவறான காரியத்திலும் ஈடு படக் கூடாது என்று காமரஜார் மிகவும் கண்டிப்பாக இருப்பார் . இதனாலேயே தனது தாயாரை தான் முதல்வரான பிறகும் விருது நகரிலேயே தங்க .வைத்தார் . ஒரு முறை ஒரு காங்கிரஸ் பிரமுகர் , காம்ரஜாரின் தாய் சிவகாமி அம்மாள் அவர்களை விருது நகரில் சந்தித்த பொழுது ... அவர் மிகவும் வருத்ததுடன் சொன்னது : " என்னை எதுக்காக இங்கயே விட்டு வச்சிருக்கான்னே தெரியல . , என்னையும் மெட்ராசுக்கு அழைச்சிக்கிட்டா நான் ஒரு மூலையில் ஒன்டிக்கப் போறேன் " என்று சொல்ல . அதை அந்த பிரமுகர் காமராஜரிடம் தெரிவிக்க , அதற்கு காமராஜர் சொன்ன பதில் : " அடப்போப்பா , எனக்கு தெரியாதா அம்மாவை கொண்டு வந்து வச்சிருக்கணுமா வேணாமான்னு ? . அப்படியே கூட்டிட்டு வந்தா தனியாவா ?வருவாங்க அவங்க கூட நாலு பேரு வருவான் . அப்புறமா அம்மாவை பாக்க , " ஆத்தாவை பார்க்கன்னு பத்து பேரு வருவான் . இங்கேயே டேரா போடுவான் . இங்க இருக்குற டெலிபோனை யூஸ் பண்ணுவான் . முதலமைச்சர் வீட்டிலிருந்து பேசறேன்னு சொல்லி அதிகாரிகளை .மிரட்டுவான் எதுக்கு வம்புன்னு தான் அவங்களை விருது நகர்லயே விட்டு வச்சிருக்கேன் """"" என்றார் ..... சம்பவம் 4 காமராஜரின் குடும்பத்தினர் அதிகாரப் பூர்வமாக கலந்துக் கொண்ட ஒரே பொது நிகழ்ச்சி அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சி தான் . அவரது உடலுக்கு ஈமச்சடங்குகளை காமராஜரின் சகோதரி மகன் ஜவஹர் வைதீக முறைப் படி செய்ய . அவரது சிதைக்கு அவரது தங்கை பேரன் கனகவேல் தீ ..மூட்ட . தலைவா என்ற குரல் விண்ணை பிளக்க ... அங்கு வந்திருந்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அழுகையை அடக்க முடியாது கை கொண்டு வாய் பொத்தி .கதறினார் ... -Kishore Kswamy & Arasiyal Galatta. Relaxplzz ![]() "காமராஜர் ஒரு சகாப்தம்" |
Posted: 24 May 2015 10:30 PM PDT கவுண்டமணி என்றாலே நக்கல், நையாண்டி, யாரையும் மதிக்காத பேச்சு என்று எல்லோர் மனதிலும் வேரூன்றிப் போயிருக்கும் அம்சங்கள், ஆனால் இவை அனைத்தையும் கடந்து கவுண்டமணி என்பவர் மற்ற சராசரி நகைச்சுவை நடிகர்களைப் போல் தன்னைச் சுற்றி ஒரு வட்டத்தைப் போட்டுக் கொள்ளாதவர். அவர் சில காட்சிகளில் யாரும் சொல்லத் துணியாத சமூக, அரசியல் அவலங்களை வெகு இயல்பாக சொல்லிவிட்டுச் செல்பவர். ஆனால், அவரை வெறும் நக்கல் மன்னன் என்ற அளவில் மட்டும் மக்கள் அவரை உருவகம் செய்துவிட்டனர். அப்படி நாம் கவனிக்கத் தவறிய கவுண்டமணியின் படங்களில் ஒன்றுதான் "ஒன்னா இருக்க கத்துக்கனும்". இந்தப் படத்தில் அவர் ஊர் வெட்டியான் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார். இதை சாதாரணமாக எந்த நகைச்சுவை நடிகரும் ஏற்றி நடிக்காத ஒரு பாத்திரம். வடிவேலு ஒரு படத்தில் நடித்திருப்பதாக ஞாபகம், ஆனால் அதில் வடிவேலுவின் வசனங்கள் எல்லாம் மேம்போக்கானவை மட்டுமே. சட்டை கசங்காமல், கண்ணாடி கழட்டாமல் நகைச்சுவை பண்ணித் திரிந்த விவேக்கும், அதையே பின்பற்றி நடக்கும் சந்தானமும் இந்த விஷயத்தில் கவுண்டரிடம் பிச்சை வாங்க வேண்டும். மேலும், அந்தப் பாடம் வெளிவந்த காலகட்டம் மிகவும் முக்கியமானது. 1992, அந்த ஆண்டில்தான் கவுண்டமணியின் நடிப்பில் திருமதி பழனிச்சாமி, சூரியன், சிங்காரவேலன், மன்னன் போன்ற படங்கள் வெளிவந்திருந்தன. அந்தப் படங்கள் அனைத்துமே நகைச்சுவையில் வெற்றிக்கொடி கட்டிய படங்கள். அதுவும் அந்தப் படங்களில் ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் சேர்ந்து கலக்கியிருப்பார் கவுண்டர். அப்படிப்பட்ட வெற்றிப் படங்களை கொடுத்த ஒரு நடிகர், இப்படி ஒரு சிறிய படத்தில் அதுவும் வெட்டியான் பாத்திரத்தில் நடிப்பது என்பது அரிதான ஒன்று. அந்தப் படம் கிராமங்களில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகள், உயர்சாதி ஆட்களால் வஞ்சிக்கப்படும் சேரிவாழ் மக்களின் எதார்த்த வாழ்க்கையை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் படம். அதில், தன் மகனுக்கு கல்வி வழங்கத் துடிக்கும் தகப்பனாக, தான் வஞ்சிக்கப்படுகிறோம் என்று அறிந்ததும் ஆதிக்க சாதியினரை எதிர்க்கும் கிளர்ச்சியாளனாக சிறப்பாக நடித்திருப்பார் கவுண்டர். இதைப் படிக்கும் பொழுது சிலருக்கு சிரிப்பு வரலாம், ஆனால் உண்மையில் ஒரு சமூக பொறுப்புள்ள ஒரு கலைஞனை வெறும் காமெடி நடிகனாக மட்டுமே சித்தரிப்பதற்கு நாம் வெட்கப்பட வேண்டும். இப்பொழுது இருக்கும் அரைகுறை காமெடியன்கள் கவுண்டரின் கால் தூசிக்குக் கூட நிகரானவர்கள் கிடையாது. - Manoj Ramasamy Relaxplzz ![]() |
Posted: 24 May 2015 09:44 PM PDT |
Posted: 24 May 2015 09:40 PM PDT |
Posted: 24 May 2015 09:25 PM PDT சிரிப்புக்கு மறு உருவம் கொடுத்து..! நகைச்சுவையை தன் வசப்படுத்தி..! தமிழ் மக்களை 30வருடங்களாய் தன் கவலையை மறந்து சிரித்தது உங்களால் தான்..! கவுண்டமணி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. பிரபல குணச்சித்திர நடிகர் பீலி சிவம், தனது இனிய நண்பர் கவுண்டமணி பற்றி ஒரு முறை அளித்த பேட்டி: // கவுண்டமணி என்னும் உன்னத மனிதனின் மனம் // "நாங்கள் இருவரும் சிறு வயதில் நாடகங்களில் நடித்து வந்த காலம் அது. கவுண்டமணி என் உயிர் நண்பன். ஒரு நாள் இரவு, வீதியில் நடந்து கொண்டு இருந்தோம். இருவரும் அன்று சாப்பிடவில்லை. எனக்கு கடும் பசியாக உள்ளதென அவனிடம் கூறினேன். இருவரிடமும் பணம் இல்லை. கவுண்டமணி என்னிடம் 'சிறிது நேரம் பொறுத்திரு. இதோ வருகிறேன்' என்று சொல்லிவிட்டு சென்றான். ஒரு சில மணி நேரம் கழித்து கையில் பரோட்டா பொட்டலத்துடன் வந்தான். அதை என் கையில் தந்து விட்டு சாப்பிட சொன்னான். 'உன்னிடம் தான் பணம் இல்லையே? எப்படி வாங்கினாய்?' என்று கேட்டேன். அவன் பதில் சொல்லவில்லை. நான் தொடர்ந்து வற்புறுத்தி கேட்டதும் அவன் சொன்ன பதில் "அருகில் உள்ள ரத்த வங்கிக்கு சென்று என் ரத்தத்தை தானம் செய்து கிடைத்த பணத்தில் வாங்கினேன்" என்றான். என் கண்கள் கலங்கி விட்டன. நண்பன் பசிக்காக தன் ரத்தத்தை விற்று உணவு தந்த அவனை என் வாழ்நாளில் எப்படி மறப்பேன்". நட்புக்கு உதாரணமாய் திகழும் தலைவர் கவுண்டமணி அவர்கள் வாழ்க பல்லாண்டு! Thanks KCC. Relaxplzz ![]() |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment