Relax Please: FB page daily Posts |
- அம்மா... நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை. என்னைச் சுற்றி ஏதோ தண்ணீர் ந...
- விசேச வீட்டுக்கு சென்றால் பையன் சாப்டானான்னு வருத்தபட்டா, அது அம்மா, கையோட நால...
- பெண்களின் காதலையும் மதிப்போம்..... ஒரு பெண் விரும்புவது உங்களுடைய காரையோ, பர்...
- எனக்கு ஏன் இங்கிலீஷ் படம் புடிக்கும்னா .. 1. ஹீரோக்களின் பெயர்களுக்கு முன்னால்...
- இந்த பத்தாவது பொது தேர்வுல ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்த 41பேரிடமும் ஒரு பேங்க் சலான பூர்...
- உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது...? * குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க க...
- முன் குறிப்பு:"இளகிய மனதுடையோர் இதை படித்து எதாவது ஆனால் நான் பொறுப்பல்ல". 15 வ...
Posted: 22 May 2015 08:10 AM PDT அம்மா... நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை. என்னைச் சுற்றி ஏதோ தண்ணீர் நிரம்பியிருக்கிறது. எப்போதும் மிதந்து கொண்டே இருக்கிறேன். கண்களைத் திறக்க முடியவில்லை. ஆனால் திறந்து பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது. என் வயிற்றில் இருந்து ஏதோ கயிறு போல் கட்டப்பட்டு இருக்கிறது. அந்த கயிற்றில் தொங்கியபடி நான் ஆடிக் கொண்டிருக்கிறேன். இங்கே எந்த சப்தமும் கேட்கவில்லை. நீண்ட காலமாக ஒரே ஒரு சப்தம் தான் கேட்டுக் கொண்டிருக்கிறது. அது இதயத்துடிப்பு. அவ்வப்பொழுது என்னை யாரோ தொடுவது போலவும் என்னுடன் பேசுவது போலவும் உணர்கிறேன். அந்தத் தொடுதலும் பேச்சும் மிக மென்மையாக இதமாக இருக்கிறது. அதற்கு பதில் பேசும் விதமாக நிறைய முறை கை கால்களை அசைத்திருக்கிறேன். கூடவே அவ்வப்பொழுது இன்னொரு குரலும் கேட்கும். ஆனால் அது கொஞ்சம் கரடு முரடாக இருக்கிறது. எத்தனை விதமான சப்தங்கள் கேட்டாலும் எப்போதும் மாறாதிருப்பது அந்த இதயத்துடிப்பின் சப்தம் தான். அதுயாரிடம் இருந்து வருகிறது என்பதை நிச்சயம் ஒருநாள் பார்த்து விட வேண்டும். என்னவோ தெரியவில்லை... இரண்டு மூன்று நாட்களாக இங்கிருந்து வெளியே சென்று விட வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருக்கிறது. கை கால்களை உதைத்து எவ்வளவோ முயற்சி செய்கிறேன் ஆனால் முடியவில்லை. இறுதியாக ஒரு நாள் நான் இருந்த இடம் கொஞ்சம் கொஞ்சமாக இடம் மாறி எங்கோ நகரத் தொடங்கியது. நான் தலை கீழாக மாறிவிட்டேன். அந்த இதயத்துடிப்பின் சத்தம் மெல்ல மெல்லக் குறைகிறது. இந்த உலகத்தை விட்டு வேறெங்கோ செல்கிறேனோ என்று பயமாக இருக்கிறது. எனக்கு மென்மையாகக் கேட்ட அந்தக் குரல் இப்போது வலியில் கதறுகிறது. ஏனோ எனக்கு கஷ்டமாக இருக்கிறது. எல்லாம் என்னால் வந்தது. நான் தான் கை கால்களை உதைத்து ஏதோ செய்துவிட்டேன். திடீரென நான் இருந்த தண்ணீர் தொட்டியில் ஓட்டை விழுந்து விட்டது. சோதனைக்கு மேல் சோதனை. தண்ணீரோடு அடித்துக்கொண்டு எங்கோ செல்கிறேன். இடையில் எங்கோ சிக்கிக்கொள்கிறேன். யாரோ என் தலையைப் பிடித்து இழுக்கிறார்கள். அதே நேரத்தில் அந்தக் குரலும் உயிர் போவதுபோல் கதறுகிறது. எனக்கும் வலிக்கிறது. ஒரு வழியாக வெளியே வந்து விட்டேன். எனக்கும் அந்த உலகத்துக்கும் இருந்த கடைசித் தொடர்பான அந்தக் கயிறையும் வெட்டி விட்டார்கள். இவ்வளவு நாளும் நான் கேட்டு வந்த இதயத்துடிப்பும் முற்றிலும் நின்றுவிட்டது. கதறிய அந்த குரலும் கேட்கவில்லை. அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. முதன் முறையாக வாய்விட்டு அழுகிறேன். ஆனால் என்னைச் சுற்றி எல்லோரும் சிரிக்கிறார்கள். அப்போதே தெரிந்து விட்டது இது ஒரு மானங்கெட்ட உலகம் என்று. தண்ணீரில் குளிக்க வைக்கிறார்கள். ஆனாலும் அழுகிறேன். ஏதோ துணியில் சுற்றி எல்லோருக்கும் என்னைக் காட்டுகிறார்கள். என் இடுப்புக்கு கீழ் எதையோ பார்த்துச் சிரிக்கிறார்கள். எனக்குக் கோபமாய் வருகிறது. ஆனாலும் அழுகிறேன். அவர்கள் மட்டும் என்னைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து ஈ... என்று இளிக்கிறார்கள். அந்த இதயத்துடிப்பும் மென்மையான பேச்சும் எனக்குக் கேட்கவில்லை. அதனால் இந்த உலகம் எனக்கு பிடிக்கவில்லை. என்னைக் கொண்டு சென்று யார் பக்கத்திலோ படுக்க வைத்தார்கள். நான் அழுவதை நிறுத்தி விட்டேன். காரணம் அந்த இதயத்துடிப்பு இப்போது கேட்க ஆரம்பித்துவிட்டது. கைகளால் என்னைத் தடவினார்கள். ஆம் என் உலகத்தில் இருந்தபோது உணர்ந்த அதே தொடுதல். அவர் மாதிரியே இருக்கான் இல்ல... என்று பேசிய போது அந்த குரலின் அதே மென்மையை உணர்ந்தேன். அது யாரென்று பார்த்து விடவேண்டும் என்று துடிக்கிறேன். ஆனால் கை கால்களை மட்டுமே அசைக்க முடிகிறது. திரும்ப முடியவில்லை. எப்படியாவது பார்க்க வேண்டும் என்று நினைக்கும் போது இரண்டு கைகள் என்னைத் தூக்குகிறது. தன் முகத்துக்கு நேராய்க் கொண்டு போய் வைக்கிறது,. மரணம் வரை சென்று வந்த துயரத்திற்கு நடுவே மகிழ்ச்சி நிறைந்த புன்னகை அந்த முகத்தில். அந்த முகத்தைப் பார்த்த போது எனக்குள் ஏற்பட்ட சந்தோஷத்தை, பரவசத்தை விவரிக்க எந்த மொழியிலும் வார்த்தைகளில்லை. அது என் தாய் என்பதை உணர்ந்து கொண்டேன். ஆனாலும் ஏனோ அழுது கொண்டே இருக்கிறேன். நான் அழுத போதும் அம்மா மட்டும் சிரித்துக் கொண்டே இருக்கிறாள். எனக்குக் கோபமாய் வந்தது. அப்போது எனக்குத் தெரிய வில்லை... என் மொத்த வாழ் நாளில் நான் அழுவதைப் பார்த்து என் அம்மா சிரிக்கும் ஒரே ஒரு நாள் அது தான் என்று.... - Muthukumar Dhana Relaxplzz |
Posted: 22 May 2015 07:50 AM PDT |
Posted: 22 May 2015 06:10 AM PDT பெண்களின் காதலையும் மதிப்போம்..... ஒரு பெண் விரும்புவது உங்களுடைய காரையோ, பர்ஸையோ, பரிசுப் பொருட்களையோ அல்ல. அவளுக்கு தேவைப்படுவதெல்லாம் * உங்களுடைய நேரம் * உங்கள் புன்னகை * உங்கள் நேர்மை * உங்கள் புரிதல் மற்றும் உங்களுடைய முதல் சாய்ஸாக அவள் இருக்க வேண்டும்என்பதைத்தான் பெண்ணிற்கும் உண்டு காதல் தோல்வி . . . ஆனாலும் , இவள் ஆறுதல் தேடியதில்லை மதுவிலோ போதையிலோ . . . ! இவள் பரிதாபம் எதிர்பார்த்ததில்லை மாப்ள- மச்சான் நண்பர்களிடத்தில் . . . ! இவள் சோகத்தை மறந்ததில்லை கானா மெட்டுக்கள் பாடி . . . ! இவள் பழி சுமத்தியதில்லை ஒட்டு மொத்த ஆண்கள் வர்க்கமே மோசமென்று ! இவள் கவனிக்கத் தவறியதில்லை கேட்கக்கூசும் விமர்சனங்களை . . . ! இவளுக்கு தெரிந்தது, முடிந்தது, அனுமதிக்கப்பட்டது எல்லாம் வெறும் "தலையணை நனைத்தலும் யாருக்கும் தெரியாமல் தன்னை வருத்துவது'' மட்டுமே . . . ! ! ! Relaxplzz |
Posted: 22 May 2015 06:10 AM PDT எனக்கு ஏன் இங்கிலீஷ் படம் புடிக்கும்னா .. 1. ஹீரோக்களின் பெயர்களுக்கு முன்னால் பட்டம் இருக்காது.. 2.அஞ்சு பாட்டு போட்டு அறுக்க மாட்டானுக... 3.உலகம் அழியுறப்பல்லாம் அவனுகதான் காப்பாத்துறானுக 4.ஹீரோ கிளைமேக்ஸ்ல மூச்சபுடிச்சு பத்து பக்கம் வசனம் பேச மாட்டாரு! அரசியல், பஞ்ச் டயலாக் பேசமாட்டாங்க 5.படம் ரிலிஸ்னா அமைதியா ரிலிஸ் அயிரும் ஓவ்வொரு டிவிலயும் ஒரு மணி நேரம் படத்த பத்தி அளக்க மாட்டாங்க 6.ஹீரோ ஒரு பாட்டுல பணக்காரன் ஆக மாட்டார் 7. கிளைமேக்ஸ்ல லிப் 2 லிப் கிஸ் அடிச்சுதான் endcard போடுவாங்க! 8.காலை காமிச்சு, கையை காமிச்சு, கண்ணை காமிச்சு இதெல்லாம் இல்லாம, இன்ட்ரோடக்சனே இல்லாத ஹீரோ இன்ட்ரோடக்சன். 10.ஹீரோயினுக்கு படம் ஃபுல்லாம் முண்டா பனியன் மட்டுமே கொடுத்து பட்ஜட்ட கன்ட்ரோல்ல வச்சுருப்பாய்ங்க 11.குண்டடி பட்டு சாகும் நேரத்துல பத்து பக்க டையாக் பேசமாட்டாங்க . 12.பஞ்சாயத்து, சொம்பு, நீதிடா நியாயம்டா கட்டுபாடு எல்லாம் இருக்காது 13.கற்பழிப்பு சீன், புலி மேல மான் பாயுரத காட்டமாட்டாங்க. 14.ஒரே பாட்ல ஒபாமா ஆகமாட்டாங்க 15. First Night எல்லாம் இருக்காது.. எல்லா Nightயும் First Night தான்..நோ சென்சார் கட்டிங்ஸ் . #இதெல்லாம் படிச்சீங்களே நடுவுல 9-ஆவது ஒண்ணு விட்டுக்கே, அதுக்கு உங்க கற்பனைக்கு பிடிச்ச ஒரு பாயின்ட் சொல்லுங்க பாப்போம்... ;-) - களவாணி பய @ Relaxplzz |
Posted: 21 May 2015 07:39 PM PDT இந்த பத்தாவது பொது தேர்வுல ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்த 41பேரிடமும் ஒரு பேங்க் சலான பூர்த்தி செய்ய சொன்னா தெரிஞ்சிடும் கல்வி தரம்.. :) - கப்பல் வியாபாரி @ Relaxplzz |
Posted: 21 May 2015 10:19 AM PDT உங்கள் குழந்தை எப்படி வளர்கிறது...? * குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது... * அடக்கி வளர்க்கபடும் குழந்தை சண்டையிடக் கற்றுக்கொள்கிறது... * கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது... * அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது... * ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது. சின்ன விசயத்துக்கும் கைகொடுத்து பாராட்டுங்க... * புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக் கொள்கிறது... * நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது... * பாதுகாக்கபடும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது... * நட்போடு வளரும் குழந்தை உலகத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது... * 4,5 வயதில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும். தினமும் அரைமணி நேரம் தந்தை ,நண்பனை போல உரையாடுங்கள்...! Relaxplzz |
Posted: 21 May 2015 10:19 AM PDT முன் குறிப்பு:"இளகிய மனதுடையோர் இதை படித்து எதாவது ஆனால் நான் பொறுப்பல்ல". 15 வது மாடி அது.குட்டை சுவர் வேறு.மாடியின் சுவர் ஓரம் நின்று துணி உணர்த்திக் கொண்டிருக்கிறாள் ரோஸ்லின்.வெகு வேகமாக வந்த அவள் கணவன் "ஐயோ,JACOB செத்துவிட்டான்" என்று அலறுகிறான். திரும்பி தன் கணவன் ஜோசப் யை பார்த்த ரோஸ்லின் அடுத்த நொடி சுவற்றை தாண்டி குதித்து விடுகிறாள். 15 வது மாடிமுதல் GROUNDFLOOR வரை அவளின் என்ன ஓட்டங்கள். 13 வது மாடி. "ஆமாம். JACOB யாரு???" 11 வது மாடி. " அவன் செத்தான் அப்படின்னு என் கணவன் ஏன் என்னிடம் கூற வேண்டும்???" 10 வது மாடி. "ஒரு வேளை என்னை சாகடிக்க நினசிருப்பானோ???" 8 வது மாடி. "நான் எதுக்கு இப்போ குதிச்சேன்??" 6 வது மாடி. "ஐயோ,அய்யய்யோ" 4 வது மாடி. "யாராவது என்னை காப்பாத்துங்க" 2 வது மாடி. "செத்தேன் நானு" GROUND FLOOR "தொபுக்கடீர்" மொட்டை மாடியில் நின்ற ஜோசெப் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.அதித உணர்ச்சி வசப்படும் தன் மனைவியை நினைத்துக்கொண்டு "அப்பாடா.காய்ச்சல் என்று சொல்லி 10 நாட்களாக குளிக்காமல் இருந்தவளை குளிக்க வைத்துவிட்டோம்"என்று நினைத்தபடி 13 வது மாடியில் இருக்கும் தன் வீட்டில் அவளுக்குரிய TOWEL ம் அவளுடைய உடையையும் எடுத்துக் கொண்டு கிரௌண்ட் FLOORIL உள்ள ஸ்விம்மிங் பூலை நோக்கி விரைந்தான். "அவள் குதித்தது ஸ்விம்மிங் பூல்ல.யாரும் உணர்ச்சி வசப்படாதீங்க"............. :P :P Relaxplzz |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment