Relax Please: FB page daily Posts |
- டாக்டர் : நர்ஸ் அந்த நோயாளிக்கு ப்ப் இருக்கா? நர்ஸ் : இல்ல டாக்டர் : பல்ஸ் இரு...
- இன்டர்வியூ சமாளிபிகேஷன்..! நீங்க ஒரு Interview-க்கு போய்.. அங்கே உங்களுக்கு தெர...
- புறநகர் சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தேன். வீட்டில் கூலிங் கிளாசை மறந்துவைத...
- மடியில் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையை தூக்கம் கலையாமல் தொட்டிலுக்கு மாற்றுவதெ...
- ஆபாசமாக உடையணிவதை 'நாகரீகமென' நினைக்கும் பெண்களும், பொறுக்கித்தனத்தை 'வீரமென' நி...
- தமிழர்கள் உணவு பரிமாறும் விதம் 1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உண...
- பிரபலங்களின் க்ளைமாக்ஸ் வசனங்கள் * காந்தி இறக்கும்போது ' ஹே ராம் ! ' என்றார் ....
- திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள் 1. முதல் வி...
- "#டேய்_சாம்பு_மவனே" NAINA : மகனே,நீ நல்லா படிச்சு டாக்டரா வரணும். SON : அய்யோ...
- உடல் எடை குறைய சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால், வாயுத்தொல்லைய...
- தகவல் துணுக்குகள் *பறவையின் இறகுகளின் எடை அதன் எலும்புக் கூட்டின் எடையை விட அத...
- சென்னை அமிர்தா கல்லூரியின் முகத்திரை கிழிந்தது...ஊடகங்கள் வியாபாரநோக்கதோடு செயல்...
- #கனவில்_கிடைத்த_விடை தையல் மெஷினைக் கண்டுபிடித்த #சிங்கருக்கு முதலில் மெஷினின்...
- ATM அட்டை வைத்திருப்பவர்கள் இதனை ஒரு தடவை வாசிக்கவும் - தெரிந்துகொள்வோம் முன்பெ...
- எப்பவும் ஒருத்தன்,ரெண்டு பேர் தான் முதல் ரேங்க் வருவான்.. இந்த தடவை 'விஜய் அவார்...
- சிறுநீரக கல் பிரச்சனையை இயற்கை முறையில் குணப்படுத்தலாம் சிறுநீரக கல் பிரச்சினைக...
- சுப்பிரமணிய சுவாமி ஒரு திருமண நிகழ்வில் தன்னை மறந்து செய்த வேலை இன்றைய தலைப்புச்...
- தஞ்சை அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவி வைஷ்ணவி தமிழில் 100/99 மதிப்பெண்களும் மற்ற...
- # மகளெனும் தேவதை # உன் கிறுக்கல்களில் மறைந்திருக்கின்றன ஆயுளுக்கும் அழியாத அஜந்...
- :D :D Relaxplzz
- மருத்துவ பயன்கள் HELATH TIPS FOR U பழங்கள், காய்கறிகள், மூலிகைகளின்.. Ⓜமருத்துவக...
- யார் புத்திசாலி? ஒரு நாள் ஒருவர் தன் வண்டியை எடுத்து கொண்டு வேலைக்கு கிளம்பினார...
- காதலன் : நீ இதுக்கு முன்னாடி யாரையாச்சும் லவ் பண்ணிருக்கியா? காதலி : (பேச வில்ல...
Posted: 21 May 2015 09:50 AM PDT டாக்டர் : நர்ஸ் அந்த நோயாளிக்கு ப்ப் இருக்கா? நர்ஸ் : இல்ல டாக்டர் : பல்ஸ் இருக்கா? நர்ஸ் : இல்ல டாக்டர் : சுகர் இருக்கா? நர்ஸ் : உயிரே இல்ல அப்றம் எப்படி இது எல்லாம் இருக்கும்? டாக்டர் : ??? :O :O Relaxplzz |
Posted: 21 May 2015 08:13 AM PDT இன்டர்வியூ சமாளிபிகேஷன்..! நீங்க ஒரு Interview-க்கு போய்.. அங்கே உங்களுக்கு தெரியாத கேள்வி கேட்டா... நீங்க என்ன பண்ணுவீங்க.. " தெரியாதுன்னு " சொல்வீங்க..! அப்படிதானே..?! இனிமே அப்படி சொல்லாம அதை சமாளிக்கறது எப்படின்னு தான் இன்னிக்கு பார்க்கபோறோம்.. அது Very Simple.. " If You can't Convience them.. Then.. Try to Confuse Them..! " இப்ப உதாரணத்துக்கு. Question No.1 : " அலக்சாண்டர் குதிரை பேரு என்ன..? " " அலக்சாண்டர் குதிரை பேரா..? அவர்கிட்ட மூணு குதிரை இருந்தது.. நீங்க எந்த குதிரை பெயரை கேக்கறீங்க..?! கருப்பா., வால் குட்டையா இருந்ததே அதுவா..? வெள்ளை கலர்ல மூக்குல மட்டும் கருப்பு புள்ளி இருந்ததே அதுவா..? இல்ல சிகப்பா.. உசரமா இருந்ததே அந்த குதிரை பேரா..? ( எதோ ஒரு குதிரை பேரு சொல்லுன்னு சொன்னா.. நாமளும் நமக்கு பிடிச்ச எதோ பெயரை சொல்லிட வெண்டியது தானே..! ) Question No.2 : " பூமி சூரியனை சுத்துதுன்னு முதல்ல கண்டுபிடிச்சவர் யாரு..? " அதை முதன் முதல்ல கண்டுபிடிச்சி சொன்னவரு கிரேக்க மேதை " ஆல்பர்டோ பெர்ணாண்டஸ் " . Unfortunately அவரு பூமி Clock Wise-ல சுத்துதுன்னு சொல்லிட்டாரு.. ??!!? Question No 3 : " உப்பு சத்யாகிரகத்துல தீவிரமா ஈடுபட்ட தமிழக சுதந்திர போராட்ட வீரர் யார்..? " " அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள்..! " ( அதான் ரஜினி சாரே சொல்லி இருக்கார்ல.. ) Question No 4 : " தமிழ்நாட்டின் கல்வி அமைச்சர் யார்..? " " நேத்திக்கா.? இன்னைக்கா.? இப்பவா..? " ------------------------------------------------------------------- இப்படிதான் இன்டர்வியூல கேக்கற கேள்விக்கு.. டக் டக்னு பதில் சொல்லணும்.. புரியுதுங்களா.?! பின்ன.., அவங்க மட்டும் நமக்கு தெரியாத கேள்வியை கேக்கலாம்.. நாம மட்டும் அவங்களுக்கு தெரியாத பதிலை சொல்ல கூடாதா..?! :P :P Relaxplzz |
Posted: 21 May 2015 08:10 AM PDT புறநகர் சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தேன். வீட்டில் கூலிங் கிளாசை மறந்துவைத்து விட்டதால் கண்களில் தூசு படக்கூடாது என தற்காலிக பயன்பாட்டுக்கு ஒரு கண்ணாடி வாங்க போனேன்.அது சாலையோரத்தில் உள்ள ஒரு கடை. உள்ளே இரண்டு சிறுவர்கள்,ஒருவனுக்கு 12 வயது இருக்கும், இன்னொருவன் 10 வயது."கடையில் பெரியவங்க யாருமில்லையா?" என்றேன்."அப்பா சாப்பிட போயிருக்காங்க" என்று கோரசாக பதில் வந்தது.என்னிடம் ஒரு கண்ணாடியை விற்று திறமையை தந்தையிடம் நிரூபிக்க முனைப்பாக இருந்தனர். நான் கேட்காமலேயே "டேய் அதை எடுடா,டேய் இதை எடுடா" என்று அவர்களுக்குள் பேசி அனைத்து கண்ணாடிகளையும் காட்டினர்.நான் கடைசியாக ஒன்றை தேர்ந்தெடுத்து விலை கேட்டேன்."120 ரூபாய்" என்று உடனே பதில் வந்தது.அந்த கண்ணாடி 100 ரூபாய் தான். நான் விலையை மீண்டும் உறுதிபடுத்தினேன்."120 ரூபாய் தான்" என்று கோரசாக பதில் வந்தது. கறாரா இருக்காங்கலாமாம்.சரி ஒரு பீர் பாட்டிலை 150 சொன்னாலும் வாங்கி குடிக்கிறோம், சின்ன பசங்க முதல் வியாபாரம் பேரம் பேசாமல் வாங்கினால் அவர்கள் மனது சந்தோசப்படும் என்று சிரித்துக்கொண்டே 120 ரூபாய் கொடுத்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். அவர்களுக்குள் எதோ பேசி "அண்ணா" என்று அழைத்தனர். திரும்பி பார்த்தேன்."கண்ணாடி 100 ரூபாய் தான்,அப்பா தான் 120 சொல்லி 100 ரூபாய்க்கு விற்க சொன்னார்" என்று சொல்லி 20 ரூபாயை அப்பாவி தனமாக திரும்ப கொடுத்தனர்.அது வெகுளித்தனமாக இருந்தாலும் இந்த நேர்மை அவர்களை வியாபாரத்தில் இன்னும் உயரத்திற்கு அழைத்து செல்லும். - பூபதி Relaxplzz |
Posted: 21 May 2015 07:54 AM PDT |
Posted: 21 May 2015 07:53 AM PDT |
Posted: 21 May 2015 07:11 AM PDT தமிழர்கள் உணவு பரிமாறும் விதம் 1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது 2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில் 3. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய் 4. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம் 5. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள் பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்: முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ), பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ), பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும் ).. Relaxplzz |
Posted: 21 May 2015 07:11 AM PDT பிரபலங்களின் க்ளைமாக்ஸ் வசனங்கள் * காந்தி இறக்கும்போது ' ஹே ராம் ! ' என்றார் . * ஜூலியஸ் சீஸர் ' யூ டூ புரூட்டஸ் ? ' என்றார் . * கலிகுலா ( ரோம் ராஜ்ஜியத்தின் கொடுங்கோலன் ) : தன்னைக் கத்தியால் குத்திய பாதுகாவலர்களிடம் சொன்னான் , " நான் இன்னும் இறக்கவில்லை ! " * தாமஸ் ஆல்வா எடிசன் : " விளக்கை எரியவிடுங்கள் . என் ஆவி பிரியும்போது வெளிச்சம் இருக்கட்டும் ! " * பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் : " இறக்கும் மனிதனால் எதையும் எளிதாகச் செய்ய முடியாது ! " * பாபர் ( மொகலாயப் பேரரசர் ) : தன் மகன் ஹுமாயூனிடம் .... " இந்தியாவில் உள்ள இந்துக்களைத் துன்புறுத்தாதே ! " * ஜுல்ஃபிகர் அலி புட்டோ ( பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ) : " இறைவா .....நான் ஒரு குற்றமும் செய்யாதவன் ! " * டயானா : " கடவுளே ! என்ன நடந்தது எனக்கு ? " * ஜொன் ஆஃப் ஆர்க் ( பிரெஞ்சுப் புரட்சியாளர் ) : தீயில் எரிந்துகொண்டு இருந்த சமயத்தில் சொன்னது . " ஜீஸஸ் ! " * வால்டேர் : தூக்கு தண்டனைக்கு முன் ' சாத்தானை உன்னிடம் இருந்து துரத்திவிடு ' என்று சொன்ன பாதிரியாரிடம் , " எதிரிகளை உருவாக்கிக்கொள்வதர்கான நேரம் இது அல்ல ! " * கிளியோபாட்ரா : பூ நாகத்தைக் கையில் பிடித்துக் கொண்டு , " ஆஹா... இதோ ... என் முடிவு இங்கே இருக்கிறது ! " * பீத்தோவன் : " நண்பர்களே கை தட்டுங்கள்... இந்த நகைச்சுவை நாடகம் இன்றோடு முடியப்போகிறது ! " * ஆன் ( இங்கிலாந்து ராணி ) ; தன் உதவியாளரிடம் , " மக்களின் நன்மைக்காக கருவூலப் பணத்தை பயன்படுத்துங்கள் ! " * நெப்போலியன் : " ஃபிரான்ஸ் ... ஆர்மி...ஜோஸஃபின் ! " * மேரி க்யூரி : " என்னைத் தனிமையில் இருக்க விடுங்கள் ! " * எழுத்தாளர் ஜேன் ஆஸ்டஸ் : ' வேறு எதுவும் வேண்டுமா ' என்று கேட்ட தங்கையிடம் , " இறப்பைத் தவிர எதுவும்" * வின்ஸ்டன் சர்ச்சில் : " எனக்கு எல்லாமே போர் அடிக்குது ! " இந்த வார்த்தைகளுக்குப் பின் கோமாவுக்குச் சென்று , ஒன்பது நாட்களுக்குப் பின் மரணத்தைத் தழுவினார் . * பெருந்தலைவர் காமராஜர் : தன் உதவியாளரிடம் , " வைரவா ! விளக்கை அணைத்துவிடு ! " Relaxplzz |
Posted: 21 May 2015 07:10 AM PDT திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விதிகள் 1. முதல் விதி திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.) 2. இரண்டாவது விதி சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. 3. மூன்றாவது விதி இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி. 4. நான்காவது விதி புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல. …ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான் 5. ஐந்தாவது விதி துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது 6. ஆறாவது விதி முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும். 7. ஏழாவது விதி அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது. 8. எட்டாவது விதி திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது. 9. ஒன்பதாவது விதி திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி. 10. பத்தாம் விதி. மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது. 11. பதினொன்றாம் விதி கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது. - இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக் குறியுங்கள். Relaxplzz |
Posted: 21 May 2015 07:10 AM PDT "#டேய்_சாம்பு_மவனே" NAINA : மகனே,நீ நல்லா படிச்சு டாக்டரா வரணும். SON : அய்யோ டாக்டர் வேணாம் பா. NAINA : ஏன்டா மகனே? SON : நான் டாக்டராயிட்டா,நடு ராத்திரில போன் பண்ணி எமர்ஜென்சி கேஸ்னு சொல்லி ஹாஸ்பிட்டலுக்கு வரசொல்வாங்க. NAINA : நீ சொல்றதும் சரிதான்.அப்போ நீ இஞ்ஜினியரா வரணும். SON : அய்யய்யோ.இஞ்ஜினியரும் வேணாம் பா.அது ரெம்ப ரிஸ்க். NAINA : ஏன்டா மகனே? SON : பூகம்பத்துல பில்டிங் சரிஞ்சாக்கூட இஞ்ஜினியர தான் புடிப்பாங்க. NAINA : அய்யோ.அப்பனா அது வேணாம்.பேசாம நீ பெரிய வக்கீலா வந்திடு. SON : வக்கீலும் வேணாம் பா. NAINA : இது எதுக்கு வேணாம்? SON : நான் வக்கீலாயிட்டா நிறைய போலீஸ் கேஸ் வரும்,நான் கோர்ட்டுக்கும் ஸ்டேசனுக்கும் அழையணும் பா. NAINA : அப்போ என்ன தான் டா செய்யலாம்? SON : நான் படிச்சா தானே இம்புட்டு பிரச்சனை.ஸ்கூலுக்கு போறத நிறுத்திட்டா எந்த தொல்லையும் வராது பா. (பயபுள்ள ஸ்கூலுக்கு போறத கட் அடிக்க எம்புட்டு பேசுது பாரு.) Relaxplzz |
Posted: 21 May 2015 07:10 AM PDT உடல் எடை குறைய சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடிக் குடித்து வந்தால், வாயுத்தொல்லையே இருக்காது. அடிக்கடி வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அஜீரணத்தால் ஏற்படும் தலைவலி வரவே வராது. வெந்நீர் ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றுகிறது. வயிற்றுப் புண்ணினால் ஏற்படும் வலியைக் குறைக்க, மிதமான சூடான வெந்நீரைச் சிறிது சிறிதாகக் குடிப்பது நல்லது. நல்ல பலமான விருந்து சாப்பிட்ட பிறகு வெந்நீரைக் குடித்தால், சாப்பிட்ட விருந்தானது எளிதில் ஜீரணமாகிவிடும். மிருதுவான சருமம் பெற, பார்லி ஒரு தேக்கரண்டி போட்டு வேகவிட்ட வெந்நீரை அடிக்கடி குடித்து வரவேண்டும். கால் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரை ஒரு டப்பில் விட்டு, அதில் கல் உப்பையும் போட்டுக் கலக்கவும். அந்த வெந்நீரில், கால் பாதங்களைப் பதினைந்து நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வீக்கம் குறையும். பித்தவெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதங்களை வைத்து எடுத்த பிறகு, பாதங்களை பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்தால், நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகி விடும். தாகம் எடுத்தால் பச்சைத் தண்ணீரைக் குடிக்காமல், பொறுக்கும் அளவு சூடான வெந்நீரைக் குடித்து வந்தால், உடம்பில் உள்ள வேண்டாத கழிவுகள் வெளியேறும். சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு ஒரு டம்ளர் வெந்நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும். உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் உண்ண வேண்டிய உணவுகள்:- இயற்கையாக விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களில் கலோரி குறைவு. அவைகளை சாப்பிடுவது நல்லது. தினமும் நீங்கள் சாப்பிடும் உணவில் 80 சதவீதம் வீட்டு உணவாக இருக்க வேண்டும். 20 சதவீதம் வெளி உணவாக இருக்கலாம். பேக்கரி உணவுகளில் கலோரி அதிகம். அதில் சேர்க்கப்படும் வனஸ்பதியில் இருக்கும் டிரான்ஸ்பாற்றி ஆசிட் கொழுப்பை அதிகரித்து உடலை குண்டாக்கும். - நார்ச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். காய்கறி, பழங்கள், தானியங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. பிஸ்கெட், மைதா, வெள்ளை அரிசி உணவுகளை முடிந்த அளவு தவிர்த்திடுங்கள். - ஒரு உணவை சாப்பிடும் முன்பு அது ருசியா என்று மட்டுமே பார்க்கிறோம். அது ஆரோக்கியமானதா என்று பார்க்க பழகிக்கொள்ளுங்கள். – மாலை நேரத்தில் இனிப்பு, காரத்திற்கு பதில் காய்கறி- பழ சாலட் சாப்பிடுங்கள். மோர் பருகுங்கள். - ஐஸ்கிரீம், கொழுப்புள்ள பால், கேக் வகைகளை தவிர்த்திடுங்கள். - முடிந்த அளவு வீட்டு வேலைகளை செய்யுங்கள். வாரத்தில் நான்கு நாட்களாவது 45 நிமிடங்கள் வேகமான நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள். இதை கடைபிடித்தால் எடை குறைந்து-இடை மெலிந்து ஆரோக்கியமாக வாழலாம்! Relaxplzz |
Posted: 21 May 2015 06:10 AM PDT தகவல் துணுக்குகள் *பறவையின் இறகுகளின் எடை அதன் எலும்புக் கூட்டின் எடையை விட அதிகம். *சுண்டெலிக்கு வியர்க்கவே வியர்க்காது. *ஆப்பிரிக்க யானைகளுக்கு உணவை மெல்ல இருக்கும் பற்களின் எண்ணிக்கை நான்கே நான்குதான். *மிகவும் சிறிய இருதயம் கொண்ட மிருகம் சிங்கம். *பாம்புகளுக்கு ஒரு நுரையீரல் மட்டுமே உள்ளது. *ஒட்டகத்திற்கு மூன்று வயிறுகள் உள்ளன. *கட்டுல் என்ற வகை மீனுக்கு மூன்று இதயங்கள் உண்டு. *மின்னல்தாக்கி இறந்து போன மிருகங்களை மற்ற மிருகங்கள் உண்ணாது. *முள்ளம் பன்றி எலி இனத்தைச் சேர்ந்தது. *இறால் மீனுக்கு இருதயம் அதன் தலையில் உள்ளது. *கடலில் வாழும் நட்சத்திர மீன்களின் உடலில் மூளை என்ற பகுதி கிடையாது. *நம்மால் இரண்டு கண்களிலும் ஒரே காட்சியைத்தான் காண முடியும். ஆனால் ஓணான்களால் இரண்டு கண்ணில் இரண்டு வெவ்வேறு காட்சிகளைக் காண முடியும். *வெட்டுக்கிளிக்கு காதுகள் காலில் உள்ளன. *நண்டுகளுக்குப் பற்கள் வயிற்றில் உள்ளன. *உலகில் எல்லாப் பிராணிகளும் முன் பக்கமாகவே நடக்கும். ஆனால் நண்டு மட்டுமே பக்கவாட்டில் நடக்கக் கூடியது. *உலகில் கிட்டத்தட்டஇருபதாயிரம் வகை பட்டாம்பூச்சிகள் உள்ளன. Relaxplzz |
Posted: 21 May 2015 05:19 AM PDT சென்னை அமிர்தா கல்லூரியின் முகத்திரை கிழிந்தது...ஊடகங்கள் வியாபாரநோக்கதோடு செயல்படுவதின் விளைவு! கலைஞர்கள் காசுக்காக நடித்ததின் விளைவு! மக்களின் நம்பிக்கையின் பாத்திரம் இவை இரண்டும், மக்களின் நலனுக்கு எதிராக செயல்படலாமா? ![]() சென்னை அமிர்தா கல்லூரியின் முகத்திரை கிழிந்தது...ஊடகங்கள் வியாபாரநோக்கதோடு செயல்படுவதின் விளைவு! கலைஞர்கள் காசுக்காக நடித்ததின் விளைவு! மக்களின் நம்பிக்கையின் பாத்திரம் இவை இரண்டும், மக்களின் நலனுக்கு எதிராக செயல்படலாமா? |
Posted: 21 May 2015 05:10 AM PDT #கனவில்_கிடைத்த_விடை தையல் மெஷினைக் கண்டுபிடித்த #சிங்கருக்கு முதலில் மெஷினின் ஊசியை நிர்மாணிப்பதில் குழப்பம் வெகுநாட்களாக நீடித்தது. அதனால் தையல்மெஷின் கண்டுபிடிப்பு தாமதமாகிக்கொண்டே இருந்தது. ஊசிபற்றிய சிந்தனையோடே தூங்கிய சிங்கர் கனவுகண்டார். அக்கனவில் அவர் ஒரு காட்டுமிராண்டிக் குமபலில் நடுக்காட்டில் மாட்டிக்கொண்டது போலவும், அந்தக் காட்டுமிராண்டி கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவரைச்சுற்றி நடனமாடுவது போல கனவுகண்டார்! அந்த காட்டுமிராண்டிகளில் ஒருவன் ஒரு ஈட்டியால் அவரைக் குத்தவந்தான். அந்த ஈட்டியின் நுனியில் ஒரு துவாரம் இருந்தது. உடனே சிங்கர் தூக்கத்தி்லிருந்து டக் என்று விழித்து எழுந்து,அடடா....கையால் தைக்கும ஊசியில் ஊசியின் கடைசிபகுதியில் துவாரம் உள்ளது! அதே துவாரத்தை ஊசி நுனிப்பகுதியில் அமைத்தால் மெஷின் ரெடி என்பதை உணர்ந்தார்.செயல்படுத்தினார், #நமக்கு_தையல்_மெஷின்_கிடைத்தது! Relaxplzz |
Posted: 21 May 2015 03:10 AM PDT ATM அட்டை வைத்திருப்பவர்கள் இதனை ஒரு தடவை வாசிக்கவும் - தெரிந்துகொள்வோம் முன்பெல்லாம் ஒரு வங்கியில் கணக்கு வைத்து பராமரிப்பது என்பது பெரிய விஷயமாக இருந்தது. ஆனால், இப்போதோ ஒருவருக்கே பல வங்கிகளில் கணக்குகள் இருப்பது என்பது சர்வசாதாரணம் என்றாகி விட்டது. அதன் விளைவு, இன்றைக்கு பலரது பர்ஸையும் வண்ண, வண்ண ஏ.டி.எம் கார்டுகள் அலங்கரித்து வருவதைப் பார்க்கலாம். இது ஒருபுறம் வளர்ச்சியாக இருந்தாலும், இதன் பாதிப்புகள் அதிகம்..? என்ன அவை..? கார்டு தொலைந்தால்..? சிலர் ஏ.டி.எம் கார்டை தொலைத்துவிட்டு, தொலைத்தது கூட தெரியாமல் பல மணிநேரம் இருந்து விடுகிறோம். பிறகு ஞாபகம் வந்து தேடிப் பார்த்துவிட்டு, வங்கியின் உதவி எண்ணுக்கு தகவல் சொல்வதற்குள், கிட்டத்தட்ட நான்கு, ஐந்து முறையாவது அந்த கார்டு பயன்படுத்தப்பட்டு பணம் திருடப்பட்டிருப்பது தெரிய வரும். தொலைந்துபோன ஏ.டி.எம் கார்டைக் கொண்டு, பின் நம்பர் தெரியாமல் எப்படி பயன்படுத்துவார்கள்? ஒரு ஏ.டி.எம் கார்டை கொண்டு ஏ.டி.எம்-மில் பணம் எடுக்கத்தான் பின் நம்பர் தேவை. அதுவே கடைகளில் பொருட்களை வாங்கி அதற்கான தொகையை ஏடிஎம்-ல் செலுத்தும்போது, பின் நம்பர் தேவையில்லை. எனவே ஏ.டி.எம் கார்டு தொலைந்தவுடன் அதை உடனே சம்மந்தப்பட்ட வங்கிக்கு தெரியப்படுத்தி கார்டை பிளாக் செய்வது மிக மிக முக்கியம் ஏமாற்றுப் பேர்வளிகள் பலவிதம்! சில சமயங்களில் ஏ.டி.எம். சென்டரில் பின்னால் நிற்கும் ஆட்களோ, செக்யூரிட்டியோகூட தண்ணீர் எடுக்க வருவதுபோல் வந்து பாஸ்வேர்டை தெரிந்து வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே, ஏ.டி.எம். மையத்தை விட்டு வெளியில் வரும்போது கார்டு இருக்கிறதா என்று உறுதி செய்துவிட்டு வெளியேறுவது நல்லது. வங்கியின் அவுட்சோர்ஸிங் வேலைகளைச் செய்து வரும் பி.பீ.ஓ நிறுவன ஊழியர்கள் கூட, பின் நம்பர் உள்ளிட்ட தகவல்களை 'பாதுகாப்புக்காக' விசாரிப்பதுபோல் விசாரிப்பார்கள். தகவல்கள் நம்மிடம் இருந்து கிடைத்துவிட்டால், மின்னல் வேகத்தில் டூப்ளிகேட் கார்டை தயாரித்து மோசடியில் ஈடுபட அதிக வாய்ப்பு உள்ளது. என்னதான் அவசர வேலையாக இருந்தாலும் நண்பர்கள், உறவினர்களிடம் ஏ.டி.எம். கார்டைக் கொடுத்து பணம் எடுக்க அனுப்புவதையும் தவிர்க்க வேண்டும். பின் நம்பர் பத்திரம்! முடிந்தவரை ஏ.டி.எம். பின் நம்பரை யாரும் எளிதில் கண்டுபிடிக்காத மாதிரி வைத்திருப்பது அவசியம். பிறந்த நாள், திருமண நாள், வண்டி நம்பர், அலுவலக எண் போன்ற எளிதில் கணிக்கக் கூடிய எண்களைத் தவிர்க்கவும். பாஸ்வேர்ட் மறந்துவிடும் என ஏ.டி.எம் கார்டின் அட்டையிலேயே பாஸ்வேர்டினை எழுதி வைக்கும் முட்டாள்தனம் வேண்டவே வேண்டாம். ஸ்கேனிங் திருட்டு! நாம் பயன்படுத்தும் ஏ.டி.எம். கார்டு பிளாஸ்டிக்கால் ஆனது. அதன் பின்புறம் ஃபிலிம் போல ஒரு ஸ்டிக்கர் இருக்கும். அதில் உள்ள விவரங்கள்தான் ஏ.டி.எம். மெஷினுக்குத் தேவையான விவரங்கள். ஒரிஜினல் கார்டை ஒரு கருவியில் சொருகி, அதிலுள்ள தகவல்களை காப்பி எடுத்துக்கொண்டு, அதை வேறொரு பிளாஸ்டிக் கார்டில் பதிவு செய்து டூப்ளிகேட் கார்ட் ரெடி செய்து மோசடி செய்யவும் அதிக வாய்ப்பிருக்கிறது. எனவே, ஓட்டல்கள், பார்கள் போன்ற இடங்களில் கார்டை கொடுத்துவிட்டு பில் போடச் சொன்னால், அவர்கள் அதைக் ஸ்கேன் செய்துவிடலாம் என்பதால், நேரில் சென்று பில் போட்டுவிட்டு வருவது முக்கியம். ஆன்லைன் திருட்டு! ஏ.டி.எம். எண், பாஸ்வேர்ட்-ஐ இணையத்தில் அளித்து, டிக்கெட், ஷாப்பிங் என்று பல தேவைகளுக்கும் பயன்படுத்தும்போது, அது பாதுகாப்பான வலைதளமா, ஃபிஷிங் திருட்டா என்று விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். இணையத்தில் பாதுகாப்பில்லாத தளங்களில் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்வதை தவிர்க்கவும் விழிப்புணர்வு அவசியம்! திருடர்களுக்கு அரசும், வங்கியும் சேர்ந்து வாயில் லட்டு வைத்து ஊட்டிவிடுவது போல அல்லாமல், ஒருவர் ஏ.டி.எம். கார்டை எப்படிப் பயன்படுத்த வேண்டும், எந்தெந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஏ.டி.எம். மையம் அமைக்கும் இடத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிபார்த்தே அதற்கு அனுமதி அளிக்க வேண்டும். Relaxplzz |
Posted: 21 May 2015 02:52 AM PDT எப்பவும் ஒருத்தன்,ரெண்டு பேர் தான் முதல் ரேங்க் வருவான்.. இந்த தடவை 'விஜய் அவார்ட்ஸ்' ஜூரிஸ் பேப்பர் திருத்துனாங்களா? பரீட்சை எழுதுன எல்லாருக்கும் அவார்டு கொடுத்துருக்காங்க. ;-) 41 பேர் ஸ்டேட் ஃபர்ஸ்ட் 499 192 பேர் ஸ்டேட் செகண்ட்/498 541 பேர் ஸ்டேட் தேர்ட்.... 497 - Boopathy Murugesh @ Relaxplzz |
Posted: 21 May 2015 02:10 AM PDT சிறுநீரக கல் பிரச்சனையை இயற்கை முறையில் குணப்படுத்தலாம் சிறுநீரக கல் பிரச்சினைக்கு ஆபரேஷன் (அறுவை சிகிச்சை) இல்லாமல் இயற்கை முறையில் குணப்படுத்தலாம். ஆண் பெண் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் பகிருங்கள்.! சீறுநீர் கல்லடைப்பு இருக்கிறது அறுவை சிகிச்சை மூலம் தான் குணப்படுத்த முடியும் என்ற பேச்சுக்கு இனி இடமே இல்லை. எந்த அறுவை சிகிச்சையும் இல்லாமல் பணச்செலவே இல்லாமல் இயற்கை முறைப்படி உடனடியாக குணப்படுத்தலாம். மனிதனுக்கு நோய்வந்த போது அதை குணப்படுத்த நம் சித்தர்கள் எளிமையான இயற்கை மருத்துவ முறையை நமக்கு அளித்தனர். மனிதனை நோயிலிருந்து குணப்படுத்த வேண்டும். அடுத்த மனிதனுக்கும் தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவை நாளடைவில் ஒருவருக்கு ஒருவர் பொறாமை கொண்டு பணத்துக்காக சிதைந்து விட்டது. சிறுநீரக கல்லால் அவதிப்படுபவர்கள் இந்த முறையை பயன்படுத்தி பலன் பெறுங்கள். குறைந்தது உங்களின் உயர அளவுள்ள வாழைத்தார் போடாத வாழை மரத்தை, உங்களின் இடுப்பளவு உயரத்துக்கு சம மட்டமாக வெட்டி விடவும். ஆனால் வாழை மரத்தை வேரும் பிடுங்க கூடாது. இப்போது வாழைப்பட்டைகளுக்கு நடுவே, வாழைத் தண்டு என்று சொல்லப்படும் அதன் குருத்து இருக்கும். இக்குருத்தை உங்களது கையின் நடு விரல் நீளத்திற்கு நோண்டி எடுத்து விட வேண்டும். இவைகளை கட்டாயம் சூரியனின் மறைவுக்கு பின்னரே செய்ய வேண்டும். இப்போது அவ்வாழை மரத்தின் வெட்டப்பட்ட மேற்பரப்பைப் பார்த்தால், நாம் தண்ணீர் அருந்தும் டம்ளர் அல்லது குவளை போன்று காட்சியளிக்கும். இதன் மேலே மாவு சலிக்க பயன்படுத்தும் நைலானால் ஆன சல்லடை ஒன்றை மேற்பரப்பில் வைத்து விடவேண்டும். இது தோண்டிய குருத்துக் குழிக்குள் தும்பு, தூசி, கொசு, ஈ, பூச்சிகள் விழாமல் தடுப்பதற்கும், பொழியும் பனி நீர் அக்குருத்துக் குழிக்குள் செல்வதற்குமே. ஆதலால், துணி போன்ற வேறு எதையும் பயன்படுத்தக் கூடாது. அடுத்தநாள் காலை சூரிய உதயத்திற்கு முன் சுமார் 6.30 மணிக்கு பார்த்தால், அக்குருத்துக் குழிக்குள், வாழையின் உதிரம் என்று சொல்லக்கூடிய நீர் மற்றும் பனி நீர் ஆகியன முழுமாக நிரம்பியிருக்கும்.அதனை அப்படியே பானம் அருந்தும் ஸ்டிரா கொண்டு உறிஞ்சி குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதற்கு முன் எதையும் சாப்பிடக் கூடாது. சரியாக ஒன்பது மணிக்கு தேவைக்கு ஏற்ப குறைந்தது 200 மில்லி தண்ணீர் குடிக்க வேண்டும். பின் அரை மணி நேரம் கழித்து வழக்கம் போல சாப்பிடலாம். இதை குடித்து அரை நாளில் வலி படிப்படியாக குறைந்தது அன்றே முற்றிலுமாக வலி போய் விடும். சீறுநீர் கழிக்கும் போதும் வலி இருக்காது. இப்படியே ஒரு நாள் விட்டு ஒரு நாள் மூன்று நாள் சாற்றைக் குடித்து வர வேண்டும். பின்னர் 5 நாள் கழித்து ஸ்கேன் செய்து பாருங்கள் உங்கள் சிறுநீரகத்தில் கல் எதும் இல்லை என்ற முடிவு வரும். Relaxplzz |
Posted: 20 May 2015 11:00 PM PDT சுப்பிரமணிய சுவாமி ஒரு திருமண நிகழ்வில் தன்னை மறந்து செய்த வேலை இன்றைய தலைப்புச் செய்தியாகி விட்டது. இப்படி தன்னிலை மறந்து மலங்க மலங்க நிற்பது அதிக வேலைப்பளு உள்ளதாலோ, வயது காரணத்தாலோ நடக்கும் போது, அதை கேலியாக்குதல்...அருவருப்பாக இருக்கிறது. ஒரு பொருளை எடுக்க அடுத்த அறைக்குப்போய்விட்டு.... '..ம்...என்ன எடுக்க வந்தேன்?..' என தாவாங்கட்டையைச் சொரிந்தபடி நாம் நின்றதில்லையா? *டீசன்சி என ஒன்றை நாமாவது ....? (சில காலம் முன்பு பழுத்த அரசியல்வாதி ஒருவர் 'கேஸ்'விட்டதையும், பின் அவர் நெளிந்து புன்னகைத்ததையும் பரப்பி ஜோக் என சிரித்துக்கொண்டார்கள் சிலர்) ------------------------------------------------ சூனா பானா தடுமாறிட்டார் மணமகன் அதிர்ச்சி என்று எல்லா ஊடகங்களிலும் இணையத்திலும் இன்று இதுதான் ஓடிக்கொண்டிருக்கிறது. வயதானால் தடுமாற்றம் இருக்கத்தான் செய்யும்.அதற்காக சுப்பிரமணியசாமியை கிண்டல் செய்கிறோம் என்ற பேரில் அந்த வீடியோ காட்சிகள் புகைப்படங்கள் என்று பதிவிட்டு யாரை நோகடிக்கின்றீர்கள்? மணமக்கள் அந்த இடத்திலே அதை மறந்திருப்பார்கள்.ஆனால் ஊடகங்கள் வாழ்க்கையிலேயே அவர்கள் மறக்க முடியாத நிகழ்வாக இதை மாற்றி விட்டது.மணமக்களின் மனநிலை எப்படி பாதிக்கப்பட்டிருக்கும் என்பதெல்லாம் யாருக்கு கவலை? Hansa & Arulmozhi Chelliah @ Relaxplzz |
Posted: 20 May 2015 10:52 PM PDT |
Posted: 20 May 2015 10:36 PM PDT # மகளெனும் தேவதை # உன் கிறுக்கல்களில் மறைந்திருக்கின்றன ஆயுளுக்கும் அழியாத அஜந்தா ஒவியங்கள் !!! உன் உளறல்கள் ஒவ்வொருன்றும் கவிதை !! நீ இறைவனின் மொழிப் பேசும் இறைவன் !! உன் எச்சில் துளி தேன் துளி !! உன் நடையில் ராணுவப் படையும் தவிடுபொடி !!! உன் பொம்மைத் துப்பாக்கி அணுகுண்டுகளை விஞ்சும் !! உன் அழுகை மேகத்தை மிஞ்சும் !! மரங்களில் ஏறும் பாம்பைப் போல ஏறுகிறாய் என் மேல் !! கதவருகே ஒளிந்து கொண்டு தேட வைக்கிறாய் !!! ஊருக்காக உதட்டு புன்னகையை உடுத்தி திரிபவர்கள் நாங்கள் !!! நியோ உளமாற சிரிக்கிறாய் உண்மையாய் அழுகிறாய் !! தவறி விழுகிறாய் தாய்க்கண்டு அழுகிறாய் தானே எழுகிறாய் !! உன் தூக்கம் உலகின் இரவு !!! உன் விழிப்பு உலகின் பகல் !! உன் வாசனைக்கு உலக வாசனைத் திரவியங்கள் ஒரு பொருட்டே அல்ல !! உன் பாதச்சுவடுகள் அழியாதபடிக்கு என் இதயத்தில் இடம் பெற்றிருக்கின்றன ..... # மகளெனும் தேவதை # - கமல் @ Relaxplzz ![]() |
Posted: 20 May 2015 10:35 PM PDT |
Posted: 20 May 2015 11:01 AM PDT |
Posted: 20 May 2015 11:01 AM PDT மருத்துவ பயன்கள் HELATH TIPS FOR U பழங்கள், காய்கறிகள், மூலிகைகளின்.. Ⓜமருத்துவக் குணங்கள்; 1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் ""நெல்லிக்கனி."" 2) இதயத்தை வலுப்படுத்த ""செம்பருத்திப் பூ"". 3) மூட்டு வலியை போக்கும் ""முடக்கத்தான் கீரை."" 4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் ""கற்பூரவல்லி"" (ஓமவல்லி). 5) நீரழிவு நோய் குணமாக்கும் ""அரைக்கீரை."" 6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் ""மணத்தக்காளிகீரை"". 7) உடலை பொன்னிறமாக மாற்றும் ""பொன்னாங்கண்ணி கீரை."" 8) மாரடைப்பு நீங்கும் ""மாதுளம் பழம்."" 9) ரத்தத்தை சுத்தமாகும் ""அருகம்புல்."" 10) கான்சர் நோயை குணமாக்கும் "" சீதா பழம்."" 11) மூளை வலிமைக்கு ஓர் ""பப்பாளி பழம்."" 12) நீரிழிவு நோயை குணமாக்கும் "" முள்ளங்கி."" 13) வாயு தொல்லையிலிருந்து விடுபட ""வெந்தயக் கீரை."" 14) நீரிழிவு நோயை குணமாக்க "" வில்வம்."" 15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் ""துளசி."" 16) மார்பு சளி நீங்கும் ""சுண்டைக்காய்."" 17) சளி, ஆஸ்துமாவுக்கு ""ஆடாதொடை."" 18) ஞாபகசக்தியை கொடுக்கும் ""வல்லாரை கீரை."" 19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் ""பசலைக்கீரை."" 20) ரத்த சோகையை நீக்கும் "" பீட்ரூட்."" 21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் "" அன்னாசி பழம்."" 22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை) 23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது. 24) மார்புசளி, இருமலை குணமாக்கும் ""தூதுவளை"" 25) முகம் அழகுபெற ""திராட்சை பழம்."" 26) அஜீரணத்தை போக்கும் "" புதினா."" 27) மஞ்சள் காமாலை விரட்டும் "கீழாநெல்லி" 28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் "வாழைத்தண்டு"... Relaxplzz |
Posted: 20 May 2015 10:10 AM PDT யார் புத்திசாலி? ஒரு நாள் ஒருவர் தன் வண்டியை எடுத்து கொண்டு வேலைக்கு கிளம்பினார். சிறிது தூரம் சென்றதும் அவர் கார் டயர் பஞ்சர் ஆகிவிட்டது. அவர் வண்டி பஞ்சர் ஆன இடம் ஒரு மனநல மருத்துவமனை அருகில். சுற்றும் முற்றும் ஏதாவது மெக்கானிக் கடை இருக்கிறதா என்று பார்த்தார். எதுமே இல்லாததால் அவரே கழட்டி ஸ்டெப்னி மாத்தலாம் என்று முடிவெடுத்து போல்ட்டை கழட்ட ஆரம்பித்தார். நான்கு போல்ட்டையும் கழட்டி வைத்து விட்டு ஸ்டெப்னி எடுத்து வர சென்றார். ஸ்டெப்னி எடுத்து வரும் போது அவர் கால் இடறி நான்கு போல்ட்டும் அருகில் இருந்த கால்வாயில் விழுந்துவிட்டது.எப்படி எடுக்கலாம் என்று யோசித்து கொண்டு இருந்தார். அப்போது ஏதாவது பிரச்சனையா என்று ஒருவர் கேட்டார். அவரை பார்த்த அவர் மனநல மருத்துவமனையின் நோயாளி இவர், எப்படியாவது இவரை சாக்கடையில் இறக்கி போல்ட்டை எடுத்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து நடந்த கதையை அவரிடம் கூறினார். உடனே அந்த நபர் மற்ற மூன்று சக்கரங்களில் இருந்து தலா ஒரு போல்ட்டை கழட்டி, இந்த சக்கரத்தில் மாட்டி, அருகில் உள்ள மெக்கானிக் கடையில் 4 போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டி கொள் என்று சொன்னார். இவ்வளவு தெளிவா இருக்கறீங்க நீங்க எப்படி இந்த மருத்துவமனையில் என்று கேட்டார். இந்த மருத்துவமனையில் இருக்கிற எல்லாரும் முட்டாளும் இல்லை வெளியில் சுத்தற எல்லாரும் புத்திசாலியும் இல்லை என்றார் மனநல நோயாளி. எப்பவுமே ஒருவன் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள். Relaxplzz |
Posted: 20 May 2015 09:52 AM PDT காதலன் : நீ இதுக்கு முன்னாடி யாரையாச்சும் லவ் பண்ணிருக்கியா? காதலி : (பேச வில்லை) காதலன் : சொல்லு நா தப்ப நினைக்க மாட்டேன். காதலி : (பேச வில்லை) காதலன் : இப்ப நீ சொல்ல போரியா இல்லையா? காதலி : பேசாம இரு கவுன்ட்(கௌன்ட்) பண்ணிக்கிட்டு இருக்கேன் அப்புறம் மறந்துட போறேன். காதலன் : ????? :O :O Relaxplzz |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment