Relax Please: FB page daily Posts |
- டீச்சர் : "உன் கிட்ட 10 சாக்லேட் இருக்கு. அதுல மூனு உமாவுக்கு கொடுக்குற, மூன...
- ஒரு மாட்டு வண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்துகொண்டு இருந்தான் ஒருவ...
- இப்படியும் ஒரு வரலாறு. ------------------------------------------- நிகழ்ச்சியோ,...
- வங்கி அதிகாரி : நீங்க காருக்காக லோன் வாங்கியிருந்தீங்க. மாசம் தவணை கட்டாததால, நா...
- :) https://twitter.com/RelaxplzzTamil
- தமிழ்நாடு அரசு சார்பாக, நாகர்கோவிலில் ஏர் பஸ் விடப்பட்டுள்ளது.என்பதை மகிழ்ச்சிய...
- மனைவிகளே..... தாலி கட்டிய நாள் முதலாய் எங்கள் சந்தோஷத்துக்கு வேலிகட்டிய மாமியார...
- ஜெயலலிதாவிற்கு முதலில் ஜாமீன் கிடைக்கவில்லை என்று உடலை கொளுத்தி கொண்ட முட்டாளே ....
- ஹாங் காங் (Hong Kong) பரதநாட்டிய குழுவினர்.. தமிழர் கலை உலகமெங்கும் போற்றப்படுகி...
- ஒரு பையன் தன்னோட காதலிக்கு Call பண்ணுறான்.அப்போ அந்த பொண்னோட அப்பா போனை எடுக்கிற...
- குழந்தை பருவத்தின் சில நினைவுகள் : பக்கத்து வீட்டு சுவர்ல உக்காந்து ரோட்ட வேடிக...
- மிகவும் கஷ்டமான சூழ்நிலையிலும் கல்வியின் முக்கியத்துவதைத்தை உணர்ந்து கல்வி கற்க்...
- நாம் புதிதாக ஒரு Mobile Phone ஐ வாங்கும் போது அது தரமான மொபைலா என அறிந்து கொள்ளு...
- ஆண்களுக்கும் பெண்களுக்கும் , அன்பில் ஒரே வித்தியாசம் தான். பெண்ணானவள், தன் மனதில...
- தோற்றுப்போய் வீடு திரும்புகையில், தலை கோதி மடி சாய்க்க ஒருவர் இருந்தால் போதும்,...
- :) https://twitter.com/RelaxplzzTamil
- தட்டி பறித்து செல்லும் அண்ணனை விரட்டி பிடிக்கும் தங்கைகள் வாழ்வின் வரங்கள் <3 <3
- :) https://twitter.com/RelaxplzzTamil
- கவுண்டமணி அவர்க்ள் பேசி புகழ் பெற்ற வசனங்கள் அன்று முதல் இன்று வரை ................
- தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா? சூரியகாந்தி எண்ணை சாப்ப...
- :) https://www.facebook.com/Relaxplzz
- :) https://twitter.com/RelaxplzzTamil
- :) https://twitter.com/RelaxplzzTamil
- பசுமையான நினைவுகள் <3 பள்ளிக்கால வசந்தமான வாழ்க்கை இன்னும் நினைவில் இருப்பவர்கள...
- ஒரு பாதிரியாரிடம் ஒரு பெண் முறையிட்டாள். ஃபாதர்.. நான் இரண்டு பெண் கிளிகள் வளர்க...
- :) https://twitter.com/RelaxplzzTamil
- "நல்ல மாட்டுக்கு ஒரு சூடு"னு சொல்ற பெரியவங்களே உங்ககிட்ட ஒரே ஒரு கிராஸ் கேள்வி?...
- காலத்தால் கைவிடப்பட்டவை
- :) https://twitter.com/RelaxplzzTamil
Posted: 15 May 2015 09:50 AM PDT டீச்சர் : "உன் கிட்ட 10 சாக்லேட் இருக்கு. அதுல மூனு உமாவுக்கு கொடுக்குற, மூனு வித்யாவுக்கு கொடுக்குற , மூனு சிவாரிஷிக்கு கொடுக்குற, அப்ப உனக்கு என்ன கிடைக்கும்"....?.. ஸ்டூடண்ட் : " புதுசா எனக்கு மூனு கேர்ள் ஃப்ரெண்ட் கிடைக்கும் டீச்சர்"..! :P :P # நாங்கெல்லாம் அப்பவே அப்படித்தான் Relaxplzz |
Posted: 15 May 2015 09:10 AM PDT ஒரு மாட்டு வண்டியில் தேங்காய்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்துகொண்டு இருந்தான் ஒருவன்.குறுக்குப் பாதை ஒன்று வந்தது. அங்கே ஒரு சிறுவன் நின்றிருந்தான். ''தம்பி, இந்தச் சாலையில் போனால் ஊர் வருமா?'' என்று கேட்டான். ''வருமே...'' என்றான் சிறுவன். ''போய்ச் சேர எவ்வளவு நேரம் ஆகும்?'' ''மெதுவாகச் சென்றால் பத்து நிமிடத்தில் போய்விடலாம். வேகமாகச் சென்றால் அரை மணி நேரம் ஆகும்'' என்றான். சிறுவன் சொன்ன பதிலைக் கேட்டு மாட்டு வண்டிக்காரனுக்குக் கோபம்.''என்ன கிண்டலா? வேகமாகச் சென்றால் எப்படி நேரம் அதிகமாகும்?'' என்று கேட்டான். ''போய்த்தான் பாருங்களேன்'' என்று சிறுவன் சொன்னதும், அவன் வண்டியை வேகமாக விரட்டி சென்றான். சிறிது தூரம் போனதுமே சாலை முழுவதும் கற்கள் கொட்டி இருந்தது. வண்டி தடுமாறிக் கவிழ்ந்தது. தேங்காய்கள் சிதறின. வண்டியை நிமிர்த்திக் கீழே சிதறிய தேங்காய்களை பொறுக்கி எடுத்துப் போடுவதற்கு அரை மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது. வண்டிக்காரனுக்கு சிறுவன் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தது. "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருண் மெய்ப்பொருள் காண் பதறிவு" - குறள் 423 Relaxplzz |
Posted: 15 May 2015 09:00 AM PDT இப்படியும் ஒரு வரலாறு. ------------------------------------------- நிகழ்ச்சியோ, பொதுகூட்டமோ. மக்களோ , தொண்டர்களோ, காலணா அரையணா, ஒரு அணா என்று கொடுப்பார்கள். அதை வாங்கி பையில் போட்டுக்கொள்வார் காமராஜ். சென்னை வந்ததும் பார்ப்பார். ஐந்து ரூபாய், எட்டு ரூபாய் என்று சேர்ந்திருக்கும். அப்படியே கொண்டுபோய் தன் நண்பரான 'இந்து' பத்திரிகை முதலாளி கஸ்தூரி ரங்கனிடம் கொடுத்து விடுவார். நீண்ட காலம் அப்படி நீடித்தது. ஒரு முறை 'இந்து' கஸ்தூரிரங்கன் அவர்களுக்கு உடல்நிலை மோசமாகிவிட்டது. பிழைப்போமா என்பதில் அவருக்கே சந்தேகம். காமராஜரை அழைத்தார். "சாகும்போது கடன்காரனாக சாக விரும்பபவில்லை. உம் பணத்தை உம்மிடமே ஒப்படைத்து விடத்தான் அழைத்தேன்" என்றார். பெருந்தலைவர் காமராஜருக்கு கண் கலங்கிப்போனது. 'அப்படி ஏதும் நடக்காது. நீங்கள் நல்லபடியாக எழுந்து நிற்பீர்கள். கவலைப்பட வேண்டாம். இந்த பணத்திற்காகதான் வரச்சொன்னீர் எனத் தெரிந்திருந்தால் வந்திருக்க மாட்டேன்' என்றார் . சரி எத்தனை வருடம் எவ்வளவு தொகையை கொடுத்துவந்தீர் என்பதாவது ஞாபகம் இருக்கா? கணக்கு வைத்துள்ளீரா? என்றார் . அதெல்லாம் எனக்கு தெரியாது என்றார் காமராஜர். வீட்டில் உள்ளவர்களை அந்த நோட்டு புத்தகத்தை எடுத்துவரச் சொன்னார். தேதிவாரியாக எழுதி வைத்திருந்ததை காட்டி, இத்தனை ஆண்டுகள் இவ்வளவு தொகை இருக்கிறது என்று கூறியதோடு, 'எனக்கு ஏதாவது ஒன்று நடந்துவிட்டால் பணத்தை காமராஜரிடம் ஒப்படைத்துவிடுங்கள்' என்றும் வீட்டில் உள்ளவர்களிடம் கூறினார். பிறகு காமராஜர் நினைப்பை போலவே கஸ்தூரிரங்கன் குணமாகி நல்லபடியாக எழுந்தார். வழக்கம் போலவே ஒருமுறை இருவரும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது 'ஒரு நல்ல தொகை இருக்கிறது. வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது செய்து கொள்ளுங்கள்' என்றார் கஸ்தூரி ரங்கன். பதிலளித்த பெருந்தலைவர் 'அந்த பணத்தை வைத்து கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்.? சாப்பிடறது ரெண்டு இட்லி. அது எப்படியாவது எனக்கு கிடைச்சுடும். எனக்கெதற்கு பணம்' என்று யோசித்தவர் 'ஒன்று செய்யுங்கள் ஐய்யரே. உங்கள் கையாலேயே ஒரு இடத்தை வாங்கிகொடுங்கள்' என்றார். கஸ்தூரிரங்கனுக்கு மகிழ்ச்சி. இடத்தையாவது கேட்டாரே என்று. அலைந்து பிடித்து ஒரு பெரிய நிலத்தை பார்த்தார். விலை பேசினார். காமராஜர் கொடுத்து வைத்திருந்ததைவிட கூடுதல் விலை. அந்த கூடுதல் பணத்தை ஐய்யரே போட்டு நிலத்தை பேசிமுடித்தார். பத்திரபதிவுக்கு பெருந்தலைவரை அழைத்தார். யார் பெயரில் என்று கேட்கிறார். உம் பெயரில்தான் என்ற பதிலை கேட்டு அலறிய காமராஜர் 'எனக்கு எதற்கு காசு பணம், சொத்து எல்லாம். நானா சம்பாதிச்சேன். மக்கள் கொடுத்த காசு. என் பெயரில் வேண்டாம் என்கிறார். எவ்வளவு கூறியும் கேட்கவில்லை. கடைசியில் காமராஜர் சொன்னபடியே கட்சியின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. அந்த இடம்தான் இன்று அண்ணா சாலையில் உள்ள 'தேனாம்பேட்டை காங்கிரஸ் கட்சி மைதானமும், பெரிய காமராஜர் அரங்கமும்'. கோடி கோடியான மதிப்பில் சொத்து. யார் யாரோ, எப்படியெல்லாமோ அனுபவிக்கிறார்கள். அந்த பெருந்தலைவர் இறந்தபோதுகூட அவர் வாங்கிய இடத்தில் அடக்கம் செய்யப்படவில்லை. கிண்டியில் பொது இடத்தில், பொது சொத்தாகவே அடக்கம் செய்யப்பட்டார். தலை வணங்குவோம் இந்த தலைவனுக்கு.. Relaxplzz ![]() |
Posted: 15 May 2015 08:45 AM PDT வங்கி அதிகாரி : நீங்க காருக்காக லோன் வாங்கியிருந்தீங்க. மாசம் தவணை கட்டாததால, நாங்க கார் எடுத்துக்கிட்டு போகிறோம். * * * கடன் வாங்கியவர் : இப்படி நீங்க செய்வீங்கனு தெரிஞ்சிருந்தா என்னோட கல்யாணத்துக்கும் லோன் வாங்கியிருப்பேனே!!! :P :P Relaxplzz |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 15 May 2015 08:30 AM PDT |
Posted: 15 May 2015 08:20 AM PDT |
Posted: 15 May 2015 08:10 AM PDT மனைவிகளே..... தாலி கட்டிய நாள் முதலாய் எங்கள் சந்தோஷத்துக்கு வேலிகட்டிய மாமியார் பெத்த மகள்களே, கடவுளின் துகள்களே! தந்திரத்தால், தலையணை மந்திரத்தால், தொட்டுத் தாலி கட்டிய எங்களை எந்திரமாகச் சுழலவிடும் திரிபுரசுந்தரிகளே! கல்யாணத்துக்கு முன்னால இனிக்க இனிக்கப் பேசினீங்க... ஆனா, கல்யாணம் ஆனதில் இருந்து தட்டு டம்ளர்களை எடுத்து வீசுறீங்க! சத்தியமா நினைச்சுப் பார்க்கலை இப்படி ஒரு மாறுதலை; அதனாலதான் அரசாங்க பாருக்குத் தேடிப் போறோம் ஆறுதலை. கொஞ்சிப் பேசிய குரல் எங்கே, கிள்ளி விளையாடிய விரல் எங்கே, எங்க காதுல பாடின 'சிநேகிதனே... சிநேகிதனே...' பாட்டு எங்கே, ரிஷப்சனுக்கு வாங்கின ரேமண்ட்ஸ் கோட் எங்கே... ஆமா, நேத்து சட்டையில வெச்சிருந்த 100 ரூபாய் நோட்டு எங்கே? உங்களை கரெக்ட் பண்ணி, கல்யாணம் பண்ண உதவின ஃப்ரெண்ட்ஸ்களையே கட் பண்ணச் சொல்லி ஊட்ட ஆரம்பிக்கிறீங்க பொங்கச்சோறு... கடைசில எங்க நெருங்கிய நட்பு வட்டாரத்தைச் சுருங்கிய நட்பு வட்டாரம் ஆக்கிட்டுத்தான் போடுறீங்க மத்தியான சோறு. நட்புனா என்ன தெரியுமா? சின்ன பிரச்னைக்குக்கூட செவுத்துல காலைவெச்சு உதைக்கிற குங்ஃபூ இல்லம்மா... சுமாரா ஆடினாக்கூட 'சூப்பர்'னு மார்க் போடுற குஷ்பூம்மா... குஷ்பூ! காபி குடிச்சுட்டா 'கப்'பைத் தூக்கி எறியலாம்... ஆனா, கல்யாணம் பண்ணிட்டோம்னு நட்பைத் தூக்கி எறிய முடியுமா? ஜனவரி மாசம் ரெடி பண்ணின சாம்பாரை, பிப்ரவரி வரைக்கும் ஃப்ரிட்ஜ் என்ற மார்ச்சுவரியில் பாதுகாப்பா வைக்கிறீங்க. டி.வி, டேப் ரிக்கார்டரைத் தவிர மத்த எல்லாத்தையும் அதுக்குள்ளே திணிக்கிறீங்க. ஷாப்பிங் போயி லேட்டானாலோ, சீரியல் சென்ட்டிமென்ட்டுக்கு எமோட் ஆகிட்டாலோ, உடனே உப்புமா கிண்டிக் குடுக்கிறீங்க பாருங்க... மக்கழே, வாரம் ஒரு தடவை கிண்டுனாதான் அது உப்புமா... வருஷம் முழுக்க அதையே கிண்டுறது ரொம்பத் தப்பும்மா! போருக்குப் போனவன்கூடப் பொழைச்சு வந்திருக்கான், ஆனா பொண்ணுங்ககூட புடவை எடுக்கப் போனவன், கூடாரம் கவிழ்ந்து சேதாரமாகிப்போனதாதான் பலப் பல வரலாற்று ஆதாரங்கள் சொல்லுது. பொண்டாட்டிகூட துணியெடுக்க 'அமர்க்களம்' அஜித் போல போன பல பேரு, 'ஆரம்பம்' அஜித் போல தலை நரைச்சு வந்த தமாஸு ஊரு முழுக்க நிறையவே இருக்கு. அரசமரம் போல இருக்கும் புருஷ மரங்களின் தேக்கு உடம்பையே உதறவைக்கிற அளவு, புருஷனை அதட்டுறதுல பிஹெச்.டி., முடிச்ச நீங்க, கிச்சன்ல கரப்பான்பூச்சியையும், பாத்ரூம்ல பல்லியையும் பார்த்துட்டுப் போடுவீங்க பாருங்க ஒரு சத்தம்.... அதைக் கேக்கிற எங்களுக்கு, ஏதோ விட்டலாச்சார்யா வீட்டுக்குள்ளயே பேய் வந்த மாதிரி தலைக்கு ஏறும் பித்தம்! ஒரு தக்குனூண்டு கரப்பான்பூச்சிக்கே பயந்து கணவனைத் துணைக்குக் கூப்பிடுறீங்களே, நாங்களும்தான் பொண்டாட்டிக்குப் பயப்படுறோம். ஆனா, என்னைக்காவது அப்படில்லாம் கத்திக் கூப்பாடு போட்டிருக்கோமா!? எண்ணெயை விட்டு செஞ்ச பன்னு மேல கொஞ்சம் வெண் ணையைத் தடவுன மாதிரி, லைட்டா தொப்பை வந்தாலே, 'உடம்பைக் குறை, வயித்தை மறை'னு, காவடி சிந்து முதல் கண்ணீர் சிந்து வரை பேச்சா பேசிக் கொல்றீங்க. இல்ல தெரியாமத்தான் கேட்கிறேன்... இது என்னம்மா நியாயம்? டயட்டாவும் புருஷன்தான் இருக்கணும், கொயட்டாவும் புருஷன்தான் இருக்கணுமா? ஐ டோன்ட் நோ ஒய்... ஆல் ஹஸ்பண்ட்ஸ் சொல்லிங் பொய். இது எதுனாலனு உங்களுக்குப் புரியணுமா? நாங்க சொல்ற எல்லா பதில்களுக்கும், நீங்க திருப்பிக் கேள்விகளா கேட்டா, நாங்க பதிலா சொல்லுவோம்..? பொய்தான் சொல்லுவோம்! வீட்டுக்கு வந்த மனுஷன், பசி ஏப்பம்விட்டாக்கூட பீர் ஏப்பம்னு நினைச்சு மோப்பம் புடிக்கிறது, 'சாப்பாடு போடும்மா'னு கெஞ்சிக் கேட்டாலும், ரிமோட்டைத் தூக்கி தலையில அடிக்கிறது, வாய் திறந்து பேசினாலே நெருப்பா முறைக்கிறது. வேண்டாம் பேபிம்மா கோவம், ஆம்பளைங்க ஆல்வேஸ் பாவம்! கல்யாணமோ, காதுகுத்தோ, சீமந்தமோ, சினிமாவோ என்னைக்காவது சீக்கிரமா கிளம்பி இருக்கீங்களா? எட்டு முழம் ஸாரியை நீங்க பாடில சுத்தறதுக்குள்ள, அசோக் லேலண்டு லாரிக்கே பாடி கட்டிடலாம். நீங்க மேக்கப் முடிக்கிறதுக்குள்ள, 'இதுவரைக்கும் நீ மந்திரி, இந்த நிமிஷத்துல இருந்து நீ எந்திரி'னு அம்மா மினிஸ்ட்ரியையே மாத்திடுறாங்க. கிளியோபாட்ராவுக்கு எதுக்கும்மா த்ரெட்டிங்கு, மோனலிசாவுக்கு எதுக்கும்மா ப்ளீச்சிங்கு? தகரத்துக்கு ரப்பிங் பாலிஷ் போடுறது லாஜிக்... தங்கத்துக்கு டால்கம் பவுடர் போடுறதுல என்ன மேஜிக்? நீங்கள்லாம் தங்கம்மா... தங்கம்! மனைவிங்க ஊருக்குப் போற அன்னைக்குத்தான் பல கணவர்கள் பாருக்குப் போறாங்க. அதைப் புரிஞ்சுக்காம, 'கதவைத் தொறந்து போட்டுத் தூங்காதீங்க... கைலியைத் தொறந்து போட்டுத் தூங்காதீங்க... சிலிண்டரை ஆஃப் பண்ணுங்க, டி.வி சுவிட்சை ஆஃப் பண்ணுங்க'னு மொபைல்லயே குடும்பம் நடத்துறீங்களே... முடியலைம்மா! எதையாவது புரியிற மாதிரி பேசுறீங்களா? 'அஞ்சு நிமிஷம் சும்மா இருக்குதா... அப்படியே அப்பன்போல'னு நீங்க சொன்னா, லேப்டாப்பை மூடிவெச்சுட்டு நாங்க குழந்தையைப் பார்த்துக்கணும்னு அர்த்தம். 'ஆபீஸுக்கு சீக்கிரம் போகணுமா?'னு நீங்க கேட்டா, 'பாத்திரம் நிறைய சேர்ந்திடுச்சு... கொஞ்சம் வெளக்கித் தர்றீங்களா?'னு அர்த்தம். 'தலை வலிக்குது'னு சொன்னா, ஈவ்னிங் வரப்பவே டிபன் வாங்கிட்டு வரணும்னு அர்த்தம்... இதையெல்லாம் புரிஞ்சுக்கவே கோனார் நோட்ஸ் ஒண்ணு போடணும்! கல்யாணமான நாளுல இருந்து வீட்டுக்குள்ள முணுமுணுப்பும், இருக்கே தவிர, என்னைக்காவது ஒரு கிளுகிளுப்பு இருக்குதா? வருஷத்துல 365 நாள் இருக்கு... அதுல ஒரு நாள் உங்க பொறந்தநாளு. அதை மறந்தா என்னமோ, அம்மாவைச் சந்திச்சுட்டு வந்த அதிருப்தி எம்.எல்.ஏ-வை கேப்டன் முறைக்கிறதுபோல பாக்கிறீங்க. சரி பொறந்த நாளுகூட ஓ.கே... சோஷியல் மேட்டர் பண்ணிக்கலாம். ஒவ்வொரு கணவனும், தன் சந்தோஷத்தின் நினைவு நாளா நினைக்கிற கல்யாண நாளை, நினைவிலேயே வைக்கசொன்னா எப்படிம்மா? வீட்டுக்கு வந்தவுடனே 'வாயை ஊது'னு சொல்றீங்க. அதுவே விவரமா ஏதாவது பேசுனா 'வாயை மூடு'னு சொல்றீங்க. இதைத்தான் 'எகனைக்கு மொகனை'னு சொல்வாங்க. எங்க மேல ஏன் இவ்வளவு குரோதம்? மனைவிகளே... மனைவிகளே, நீங்கள் எங்களை வீட்டுக்கு வெளியே தூக்கியெறிந்தாலும், நாங்கள் வீட்டு வாசலில் செருப்பாகக் கிடப்போம். துணைவிகளே, துணைவிகளே, நீங்கள் எங்களைக் கோபத்தில் கும்மியெடுத்தாலும், குழம்புச் சட்டியில் பருப்பாகக் கொதிப்போம்! 'கேம் விளையாடிட்டுத் தர்றேன்... செல்போனைக் குடு'னு கேட்கிறப்பவே, அதுல பாம் செட் பண்ணுவீங்கனு எங்களுக்குத் தெரியாதா? பொம்பளைங்கன்னா கடுகு டப்பா, மொளகு டப்பால காசை ஒளிச்சுவைக்கிறதும்... ஆம்பளைங்கன்னா கால் லிஸ்ட், கான்டாக்ட் லிஸ்ட்ல ரிஸ்க் நம்பரை அழிச்சுவைக்கிறதும் சகஜம்தானே! ஃபேஸ்புக்ல எங்களோட நடமாட்டத்தை உளவுபார்க்க ஃப்ரெண்ட்ஸ் ஐடி, ஃபேக் ஐடினு வர்றீங்க. ஆட்டோட தாடியைப் பார்த்தே, அது இளங்கறியா, கடுங்கறியானு கணிச்சுச் சொல்ற நாங்க, எங்ககூட சாட்டிங் போடுறது லேடியா இல்ல கேடியானு கண்டுபிடிக்கவா மாட்டோம்!? ஆல் மனைவீஸ் நல்லா கேட்டுக்கங்க... நைட்டிக்குத் துப்பட்டாவா துண்டு செட்டாகாது, ஃபேஸ்புக்ல உங்க துப்பறியும் படம் ஹிட்டாகாது! பக்கத்து வீட்டு பாட்டில இருந்து நீங்க போற பியூட்டி பார்லர் ஆன்ட்டி வரை எங்களை 'அண்ணா'னு கூப்பிடச் சொல்லிவெச்சிருக்கீங்களே... அதுதான் வன்கொடுமைகளுக்கு மத்தியில் பெண்கொடுமை! ஒரு புருஷனோட பிரச்னைகளைப் புரிஞ்சுக்கணும்னா, ஒரு மாசம், வேணாம் ஒரு வாரம் நீங்க புருஷனா இருந்து பாருங்க... ஓ சயின்ஸ், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி அதுக்கு அனுமதிக்காதா? அப்போ ஆண்டவனாப் பார்த்து பொண்டாட்டிங்களுக்கு ஒரு பொண்டாட்டி அனுப்பிவெச்சாதான், பொண்டாட்டிங்களுக்கு, பொண்டாட்டிங்க பண்ற டார்ச்சர் புரியு... ;-) ;-) - Kamal Dhasan. Relaxplzz |
Posted: 15 May 2015 08:00 AM PDT ஜெயலலிதாவிற்கு முதலில் ஜாமீன் கிடைக்கவில்லை என்று உடலை கொளுத்தி கொண்ட முட்டாளே .!!! உனக்கு மீண்டும் பழைய உடல் வருமா ??? அவர் ஜெயிலில் இருந்தாலும் சகல வசதிகளுடன் தான் இருந்தார் .. அவருக்காக கொளுத்திக்கொண்ட நீ இன்னும் அரசு மருத்துவமனையில் தான் இருக்கிறாய் ... ஒரு கட்சி தலைவிக்காக கொளுத்தி கொண்ட நீ , பக்கத்தில் உன் வேதனை எண்ணி கதறி அழும் உன் அம்மாவுக்கு என்ன செய்திருக்கிறாய் ?? - பாட்சா சாதிக் Relaxplzz ![]() |
Posted: 15 May 2015 07:50 AM PDT |
Posted: 15 May 2015 07:10 AM PDT ஒரு பையன் தன்னோட காதலிக்கு Call பண்ணுறான்.அப்போ அந்த பொண்னோட அப்பா போனை எடுக்கிறார்.பிறகு அந்த பையன் எப்படி அவர்கிட்ட சமாளிக்கிறான்னு பாருங்க. UNCLE : hellooo....யாருங்க பேசுறது? BOY : சார்,நான் CITY BANK'ல இருந்து branch manager அழகேசன் பேசுறேன். UNCLE : சொல்லுங்க சார்.என்ன விசயம்? BOY : சார்,உங்க பொண்ணு காயத்ரி ஏதோ லோன் வேணும்னு கேட்டிருந்தாங்க.நாங்க லோன் தரலாம்னு இருக்கோம்.So,உங்க பொண்ணுகிட்ட சில Details கேக்கணும்.அவங்கள கொஞ்சம் கூப்பிடுங்க சார். UNCLE : ஓ....அப்படியா சார்.ஒரு நிமிசம் லைன்ல இருங்க சார்.இப்ப என் பொண்ணு வருவா. GIRL : Hello,நான் காயத்ரி பேசுறேன்.இப்ப சொல்லுங்க. BOY : ஏய்.... அம்முகுட்டி,நான் தான் விஷ்வா பேசுறேன்.உங்க அப்பன் சொட்ட தலையன் போனை எடுத்துட்டான்.அதான் பேங்க் மேனேஜர்னு சொன்னேன்.லிங்கா படத்துக்கு டிக்கெட் எடுத்துட்டேன்.நீ உடனே கிளம்பி ஆல்பட் தியேட்டர்க்கு வாடா செல்லம். GIRL : ஓகே சார்.நான் இப்பவே உங்க ஆபிசுக்கு வாறேன் சார்.நீங்க அங்கயே வெயிட் பண்ணுங்க.அஞ்சு நிமிசத்துல நான் வந்திடுவேன். UNCLE : சீக்கிறம் கிளம்பி போமா.அவர ரெம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிடாதே. GIRL : ஓகே டாடி.இதோ கிளம்பிட்டேன். #நீதி லவ் பன்றதுக்கு இவ்ளோ பித்தலாட்டம் பன்னவேண்டி இருக்கு. Relaxplzz |
Posted: 15 May 2015 06:10 AM PDT குழந்தை பருவத்தின் சில நினைவுகள் : பக்கத்து வீட்டு சுவர்ல உக்காந்து ரோட்ட வேடிக்கை பார்ப்போம். பக்கத்து வீட்டுக்குள்ள பந்த போட்டுட்டு அக்கா அக்கா எடுத்தாக்கான்னு கெஞ்சுவோம், எடுத்து தரலேனா அவங்க அசந்த நேரமா பாத்து சுவரேறி குதிச்சு எடுப்போம். தட்டான் பிடிச்சு அத கல்லை தூக்க சொல்லி கொடுமை பண்ணுவோம். மின்மினி பூச்சிய பிடிச்சு கண்ணாடி பாட்டில்ல அடைச்சு அதுக்கு இலைகள் உணவா போடுவோம். இலைய சாப்பிட்டு அது நல்லா வாழும்னு நெனப்போம்.. ஆனா கண்ணாடி பாட்டில் குள்ள காத்து போகாது, அதுனால சுவாசிக்க முடியாதுன்னு நம்ம மூளைக்கு எட்டாது. மண்ணை கொளப்பி சட்டி,பானை செஞ்சு விளையாடுவோம். ஆடி மாசமாவே இருக்காது ஆனாலும் பட்டம் விட்டு விளையாடுவோம். கிரிகெட் விளையாட தெரியலேனாலும் விளையாடுவோம், முக்கியமா அவுட் ஆனா ஒத்துக்கவே மாட்டோம். பரமபதம் விளையாடும் போது நம்ம தோக்க போறோம்ன்னு தெரிஞ்சா போது ஆட்டத்த கலச்சு விட்டுருவோம். ருசியே இல்லாட்டியும் ருசிச்சு சாப்பிடுவோம், நம்ம செஞ்ச கூட்டாஞ்சோற. கண்ணாமூச்சி ஆட்டம் ஆட கண்ண கட்டும்போது கண்ணு நல்லா தெரிஞ்சாலும் இல்ல எதுமே தெரியல ஒரே இருட்டா இருக்குன்னு கள்ளாட்டை விளையாடுவோம். இரவுநேரம் கரண்டு போச்சுனா பேய் மாதிரி சத்தம் போட்டு எல்லாரையும் பயமுறுத்துவோம். சைக்கில் ஓட்டி கீழ விழுந்தாலும் மண்ணை அள்ளி பூசிட்டு மறுபடியும் சைக்கிள் ஓட்டுவோம். நீளமான துணிய கழுத்துல கட்டிக்கிட்டு பேட் மேன், சக்தி மான்னு சொல்லிக்கிட்டு குதிச்சு விளையாடுவோம். தூங்குறதுக்கு மட்டும் தான் வீட்டுக்கு போவோம், மற்ற நேரம் முழுக்க தெருவுல தான் இருப்போம். நம்ம விளையாட்டுக்கள் அனைத்துமே நம்ம ஊரோட ஒட்டி இருந்தது. இப்ப நம்ம விளையாட்டுக்கள் அனைத்துமே நம் வீட்டு கணினியிலையும், செல் பேசிலையும் தான் இருக்கு. Relaxplzz |
Posted: 15 May 2015 05:50 AM PDT |
Posted: 15 May 2015 04:10 AM PDT நாம் புதிதாக ஒரு Mobile Phone ஐ வாங்கும் போது அது தரமான மொபைலா என அறிந்து கொள்ளும் முறை: நீங்கள் வாங்க விரும்பும் Mobile Phone தரமானதா என அறிந்துகொள்ள, அந்த Mobile Phone இன் பெட்டியில் உள்ள IMEI அல்லது Serial No. எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை அவதானிக்கவும் அல்லது Mobile Phone இல் *#06# என Type செய்யவும். அப்போது Mobile Phone இன் திரையில் 15 இலக்கங்கள் கொண்ட IMEI தோன்றும். அந்த 15 இலக்கங்கள் கொண்ட IMEI இல் உள்ள 7ஆம் 8ஆம் இலக்கங்களை கீழுள்ள தகவலுடன் ஒப்பிட்டு உங்கள் Mobile Phone இன் தரத்தினை அறிந்துகொள்ளுங்கள்: » 7 மற்றும் 8 ஆவது எண் 00 என இருந்தால் தரமான தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட தரமான Mobile Phone ஆகும். » 7 மற்றும் 8 ஆவது எண் 01, 03, 04, 10 என இருந்தால் சோதிக்கப்பட்டு தரமான Mobile Phone என உறுதிசெய்யப்பட்டது . » 7 மற்றும் 8 ஆவது எண் 08, 80 என இருந்தால் ஓரளவு தரமான Mobile Phone ஆகும். » 7 மற்றும் 8 ஆவது எண் 02, 20 என இருந்தால் கொரியன் மற்றும் துபாய் இல் Assemble செய்யப்பட தரமற்ற (தரமில்லாத மொபைல்) என்பதைக் குறிக்கும். » 7 மற்றும் 8 ஆவது எண் 13 என இருந்தால் அது மிகவும் தரம் குறைந்த Mobile Phone என்பதைக் குறிப்பிடுவதுடன் இது Charge செய்யும் போது வெடிக்கக் கூடிய சாத்தியம் அதிகம் கொண்டவை எனவும் குறிப்பிடுகிறது! Relaxplzz |
Posted: 15 May 2015 03:38 AM PDT |
Posted: 15 May 2015 01:20 AM PDT ஆண்களுக்கும் பெண்களுக்கும் , அன்பில் ஒரே வித்தியாசம் தான். பெண்ணானவள், தன் மனதிலுள்ள 10% அன்பையும், 100% வெளிப்படுத்துவாள். ஆனால் ஆண் என்பவன், மனதில் 100% அன்பை வைத்திருந்தாலும், 10% கூட வெளிக்காட்ட தெரியாதவனாக இருப்பான். கோபத்தை வெளிகாட்ட தெரிந்த அளவுக்கு, பாசத்தை வெளிக்காட்ட தெரியாதவன் ஆண். ஆணுக்கு பின்னால், பெண் இருக்கிறாள் என்பதை தெரிந்தவர்கள், பெண்ணுக்கு பின்னும், ஆண் மறைமுகமாக இருக்கிறான் , என்பதை மறந்து விடுகிறார்கள்.. :) :) Relaxplzz |
Posted: 15 May 2015 12:53 AM PDT தோற்றுப்போய் வீடு திரும்புகையில், தலை கோதி மடி சாய்க்க ஒருவர் இருந்தால் போதும், வாழ்க்கையை ஜெயித்துவிடலாம்.. ![]() ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 3 |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 15 May 2015 12:32 AM PDT |
Posted: 15 May 2015 12:04 AM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 14 May 2015 11:22 PM PDT |
Posted: 14 May 2015 11:10 PM PDT கவுண்டமணி அவர்க்ள் பேசி புகழ் பெற்ற வசனங்கள் அன்று முதல் இன்று வரை .............. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா சங்கூதுற வயசுல சங்கீதா இது உலக நடிப்புடா சாமி உலகத்திலேயே ரெண்டு புதிசாலிங்க. ஒண்ணு ஜி.டி. நாயுடு. இன்னொன்னு இந்த தர்மடி தர்மலிங்கம் பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா? ஆங்! இதுக்குத்தான் ஊருல ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்கறது! இப்போ ஆலையில ஓடுற கரும்பில அடிக் கரும்பா இருந்தா என்ன நுனிக்கரும்ப இருந்தா என்ன? நமக்கு வேண்டியது வெல்லம் தானேடா கோமுட்டித்தலையா! கூடை வைச்சிருக்கவங்களுக்கெல்லாம் பெட்ரோமேக்ஸ் லைட் தரதில்லை ஆடு எப்புட்றா பேசும் நாராயணா! இந்த கொசுத்தொல்லைத் தாங்கமுடியலடா! மருந்தடிச்சு கொல்லுங்கடா நல்ல சங்கீதத்தை கேளுங்கப்பா! ஒரு வித்வான பாத்து கேக்குற கேள்வியாயா இது! பாரு கேக்குறதையும் கேட்டுபுட்டு நையா பைசாவுக்கு ப்ரயோஜனம் இல்லாதவன் மாதிரி நிக்கிறான் அய்யோ ராமா! ராமா என்னை ஏன் இந்த மாதிரி கழிசடை பசங்களோட எல்லாம் சேர வைக்குற? சத்திய சோதனை ஏம்பா ரிக்ஷா வருமா? கவுண்டமணி: ரிக்ஷா தானா வராது நான் வந்தாதான் வரும். பேப்பர் ரோஸ்ட் சாப்பிட்டா, லிவருக்கு ரொம்ப நல்லது. சூரியனை யாரும் சுட முடியாது சார். சூரிய வெப்பம்தான் நம்மளைச் சுடும். போலீஸ்கார்... போலீஸ்கார்... எனக்கு ஒன்னும் தெரியாது போலீஸ்கார்... இதை தஞ்சாவூர் கல்வெட்டுல செதுக்கி வச்சிட்டு பக்கத்துல உட்கார்ந்துடு. உனக்குப் பின்னால வர சந்ததிகள் அதைப் பாத்துத் தெரிஞ்சுக்கட்டும். நாயக்... கல்நாயக்... ஊருக்குள்ளாற இந்த சினிமாகாரனுங்க மட்டும்தான் பொறந்தானுங்களா? டேக் த டொண்ட்டி பைவ் ரூப்பீஸ். குட் மார்னிங்க் ஆபீசர். ஸ்டார்ட் மியூசிக்... ஏம்மா நரி, ஒருக்கா ஊளையிடுமா... எட்டணா போட வக்கில்லாத நாயி, லா பேசுது பாரு. சேதுராமன் கிட்ட ரகசியமா? மர்க்கா மர்க்கா சொல்லு... பிச்சகாரனுக்கு செக்கூரிட்டி பிச்சகாரனே அட பரதேசி நாய.. புள்ளைய குடுக்குறதுக்கு முன்னாலயே ஆணா பொண்ணான்னு சொல்லிட்டு குடுங்கடா, இல்ல ஜட்டியவாவது அவுத்துட்டு குடுங்கடா. தமிழ்நாட்டு மானத்தை நான் தான் காப்பாத்த போறேன். தலை கீழாகத்தான் குதிப்பேன். ஏண்டா எப்பப் பாத்தாலும் மூஞ்சில எருமை சாணியை அப்புன மாதிரியே திரியுற. தூம் தாதா திங்குறதுக்கு சோறு இருக்காடா நாயே, உனக்கெதுக்குடா கிரிக்கெட் ஸ்கோரு??? கழுத மேய்க்குற பையனுக்கு இவ்ளோ அறிவான்னு ஊர்காரனுங்களுக்கு பொறாமை. இந்த தெரு எவ்ளோ வெலைன்னு கேளு... அது ஏண்டா என்னைப்பார்த்து அந்தக் கேள்வியைக் கேட்ட? ஆ! இங்க பூசு... இந்தா! இங்க பூசு... ஆங் ரைட்ல பூசு... இந்தா லெப்ட்ல பூசு... காந்தக் கண்ணழகி... ஸ்டார்ட் மியூசிக் அந்த இன்னொரு வாழைப்பழம் எங்கடா? டேய் நாதஸ்... ஜிம்பலக்கடி பம்பா. ஆப்பிரிக்கன் அங்கிள் உலகம் உருண்டைனு அமெரிக்காக்காரன் கண்டுபுடிக்கலை. ஐயம் (I am) தான் கண்டுபுடிச்சது. துண்டு போட்டவன எல்லாம் புடிச்சீங்கன்னா குண்டு போட்டவனையும் புடிச்சிரலாம். - ரகசிய போலீஸ் நன்றி - விக்கி மேற்கோள் . Relaxplzz |
Posted: 14 May 2015 11:02 PM PDT தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா? சூரியகாந்தி எண்ணை சாப்பிடலாமா? முன்பு எல்லாம் என்ன சொன்னார்கள்? தேங்காய் முழுக்க கொழுப்பு. அதனால் தேங்காய் எண்ணெய் சாப்பிடக்கூடாது. சூரியகாந்தி எண்ணெய்யில் சமையல் செய், கர்டி ஆயிலில் சமை, சோயா ஆயிலில் சமை என்றார்கள். தேங்காய் முழுக்க இருப்பது சாச்சுரேட்ட பேட் (உறைந்த கொழுப்பு). கெமிக்கல் மூலம் எண்ணெய் வித்துக்களில் இருந்து எடுக்கும் எண்ணெயில் இருப்பது பாலி அன் சேச்சுரேட்டட் பேட் என்ற உறையாத வகை கொழுப்பு. உறைந்த கொழுப்பு கொலாஸ்டிராலை அதிகரிக்கும் என்றார்கள். உறையாத கொழுப்பு கொல்ச்டிராலை குறைக்கும் என்ரார்கள். அதை நம்பி பலரும் பாரம்பரியமா உன்டு வந்த தேங்காய் எண்னெய் ச்மையலை நிறுத்திவிட்டு சூரியகாந்தி, எண்னெய்வித்துக்களுக்கு மாறினார்கள். ஆனால் இந்த அறிவாளிகள் சொல்லாமல் விட்ட விஷயம் தேங்காய் எண்ணெய் அதிகரிப்பது நல்ல கொல்ஸ்டிராலை என்பதை. நல்ல கொல்ஸ்டிரால் உங்கள் ரத்த நாளங்களில் இருக்கும் கெட்ட கொலஸ்டிராலை மீண்டும் லிவருக்கு கொன்டுபோய் ஜீரணம் செய்வித்துவிடும். அந்த நல்ல பணியை செய்யும் எச்டிஎல் கொலஸ்டிஆரலை தேங்காய் எண்னெய் அதிகரிக்கும். அந்த நல்ல கொலச்டிராலை எண்னெய் வித்துக்களில் இருந்து எடுக்கும் எண்னெய்கள் குறைக்கும். மேலும் தேங்காயில் இருக்கும் கொழுப்பு லாரிக் அமிலம் என்ற வகை கொழுப்பு. இது தேங்காய்பாலுக்கு அடுத்து மனிதனுக்கு கிடைக்கும் ஒரே சோர்ஸ் தாய்ப்பால் தான்!!!!!!! தாய்ப்பால் மூலம் ஒரு குழந்தைக்கு தினம் 1 கிராம் லாரிக் அமிலம் கிடைக்கும். மூன்று ஸ்பூன் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெய்யை உன்டால் அல்லது ஏழெட்டு தேங்காய் துன்டுகளை இது மனிதனுக்கு கிடைக்கும். இத்தனை அற்புதமான ஒரு பொருளை சாப்பிடவிடாமல் தடுத்து பாக்டரியில் இருந்து எடுக்கும் ஹைட்ரஜனேட்டட் எண்னெய்களை உண்ண வைத்ததன் பலன் அவற்றில் ட்ரான்ஸ்ஃபேட் எனும் வகை ஆபத்தான கொழுப்பு சேர்ந்து இதய அடைப்புகளுக்கும், மரணங்களுக்கும் காரணம் ஆகிவிட்டது. இது குறித்து நிகழ்த்தபாட்ட ஆய்வு ஒன்று கூறுவதாவது http://jn.nutrition.org/content/131/2/242.full இரு குழுக்கள் ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கபட்டன. ஒரு குழு சோயா எண்ணெய்யை சமையலுக்கு உட்கொண்டது. இன்னொரு குழு லாரிக் அமிலம் நிரம்பிய தேங்காய் எண்னெயால் ச்மைக்கபட்ட உனவுகலை உன்டது. ஆய்வு முடிவில் தேங்காய் எண்னெயில் செய்தவற்றை உன்ட குழுவினருக்கு நல்ல கொலஸ்டிரால் கணிசமாக அதிகரித்தது. ட்ரைகிளிசரைட்ஸும் குறைந்தது. அவர்கள் ஹார்ட் அட்டாக் ரிஸ்க் குறைந்தது. மோசமான எல்டிஎல் கொலஸ்டிரால் எண்ணிக்கையில் எந்த வித்தியாசமும் இல்லை (ஆனால் எல்டிஎல்/ எச்டிஎல் ரேஷியோ அதிகரித்தால் ஹார்ட் அட்டாக் ரிஸ்க் கணிசமாக குறையும்). அதை விட முக்கியமாக "வெஜிட்டபிள் ஆயிலில் இருந்து எடுத்த எண்னெயில் சமைத்தவர்களின் எச்டிஎல் கொலஸ்டிரால் குறைந்தது" என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் விஷயம். அப்புறம் ஏன் நாட்டில் ஹார்ட் அட்டாக்குகள் பெருகாது என கேட்கிறேன்? கொழுப்பை குறைக்கும் தேங்காய் . . . தேங்காயில் உள்ள "ஃபேட்டி ஆசிட்" (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தேங்காயில், தேங்காய் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம். உடலுக்கு ஆகாது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தேங்காயைத் தொடக்கூடாது" என்ற பிரசாரத்துக்கு இந்த ஆய்வு பெரும் சவால் விடுத்துள்ளது. அதேவேளையில் பூலோகத்தின் கற்பக விருட்சம் என்று சொல்லி தென்னையையும் அதன் முத்தான தேங்காயையும் சித்த மருத்தவம் உள்பட இந்திய மருத்துவ முறைகள் காலம் காலமாகப் போற்றி வருகின்றன. தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது இளநீரில் உள்ள புரதச் சத்து. சித்த மருத்துவம் உள்பட இந்திய மருத்துவ முறைகளில் தென்னையின் பயன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. தென்னையின் வேரிலிருந்து குருத்து வரை எல்லாப் பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடப்பதாகச் சொல்கிறது சித்த மருத்துவம். தேங்காய், தேங்காய் எண்ணெய் உடல் நலத்துக்குக் கேடு என்ற பிரசாரம் தேங்காய் எண்ணெய் மீது சுமத்தப்பட்டிருக்கும் அவதூறு என்கிறார்கள் நமது பாரம்பரிய மருத்துவர்கள். தேங்காய், தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. விருந்து, விழாக்கள், பண்டிகைகள், சடங்குகள் என எல்லா இடத்திலும் தேங்காய்க்கு முதல் மரியாதைதான். தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல: மருத்துவத்தின் அடையாளச் சின்னமும்கூட என்கிறது சித்த மருத்தவம். இந்தியாவுக்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னை வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வயது 80 ஆண்டுகள் முதல் 200 ஆண்டுகள் வரை. விதை வளர்த்து மரமான பின் விதைத்தவனுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது என்பதால் இதை "தென்னம்பிள்ளை" என்று அழைக்கிறார்கள். தேங்காய் உள்பட தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் பொருள்களில் உள்ள மருத்துவக் குணங்கள் குறித்து ஓர் அலசல். ஆண்மையைப் பெருக்கும் கொப்பரை. தேங்காயில் உள்ள சத்துக்கள் என்ன? புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. தேங்காய் உள்பட தென்னை மரத்தின் வெவ்வேறு பாகங்களின் மருத்துவக் குணங்கள் என்ன? தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது. மாதவிடாய் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது. மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங்குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு. தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து. தைலங்கள் . . . தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது. எளிதில் ஜீரணமாகும் . . . தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும். பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும். தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும். வயிற்றுப்புண்கள். . . தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது. தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்தால் அது உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி? மீடியம் செயின் ஃபேட்டி (Medium Chain Fatty Acid) ஆசிட் தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid) மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன. இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக் கால ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன. வைரஸ் எதிர்ப்பு . . . தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. தேங்காயில் உள்ள மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரல் லோடைக் குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது ஆண்மைப் பெருக்கி . . . முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் வைட்டமின் இ முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது. குழந்தை சிவப்பு நிறமாக . . . குழந்தைகள் நல்ல நிறமாக பிறக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூ சாப்பிடுவது வழக்கம். அதுபோல் குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது. இளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன? மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர். சுத்தமான சுவையான பானம். இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப் படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது. இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம். இளநீர் மிக மிகச் சுத்தமானது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் "ஜெல்" என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து. இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டா ஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது. இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும். தேங்காய் எண்ணெய் . . . இன்றைய நவீன உலகில் பலரும் தேங்காய் எண்ணெயை தலையில் தேய்ப்பதே இல்லை. தலை முடி ஒட்டிக் கொண்டு முகம் அழுது வழியும் என்பதே பலரும் முன்வைக்கும் காரணமாகும். ஆனால், தேங்காய் எண்ணெயைப் போன்று உடலுக்கு நன்மை செய்யும் ஒரு பொருள் வேறு எதுவுமே இல்லை என்று கூறலாம். தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொள்வது மிகவும் நல்லது. தலையின் தோல் பகுதியை வறண்டு விடாமல் தேங்காய் எண்ணெய் பாதுகாக்கும். மேலும், குளிப்பதற்கு முன்பும் தேங்காய் எண்ணெயை உடல் முழுவதும் பூசிக் கொண்டு ஊறவிட்டுக் குளிக்கலாம். இது தோலுக்கு மிகவும் நல்லது. அதிகமாக மேக்-அப் போடும் பெண்கள், இரவில் முகத்தை சுத்தம் செய்து விட்டு தேங்காய் எண்ணெயை தடவிக் கொண்டு படுக்கலாம். இதனால் சருமத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும். பொதுவாக நமது தலைச் சருமத்தைப் பாதுகாக்க அடிப்படையான விஷயம் என்றால் அது தேங்காய் எண்ணெய் தான். வறண்ட சருமத்திற்கு தேங்காய் எண்ணெய்தான் மிகச் சிறந்த மருந்தாகும். குளிர் காலத்தில் பொதுவாக அனைவரது சருமமும் வறண்டு போய்விடும். அந்த சமயத்தில் கை, கால்களில் தேங்காய் எண்ணெய் தடவுவது நல்லது. வெப்பத்தால் பாதிக்கப்படும் சருமத்திற்கு அருமருந்தாக இருப்பது தேங்காய் எண்ணெய் தான். புண்களில் நீர்த்தன்மையை அகற்றி அது விரைவாக ஆறுவதற்கு தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது. தலை முடியின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருப்பது தேங்காய் எண்ணெய். தேங்காய் எண்ணெயை தடவ பிடிக்காதவர்கள் கூட, இரவில் தேங்காய் எண்ணெய் வைத்து காலையில் தலைக்குக் குளித்து விடலாம். உதடுகள் உலர்ந்து போகாமல் இருக்க உதவும் நல்ல லிப் பாம் ஆக இருப்பதும் தேங்காய் எண்ணெய் தான். தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய் விழுதை முகத்திற்குப் பயன்படுத்தலாம். நல்ல பலனை அளிக்கும். தலைப் பொடுகை நீக்க, தேங்காய் எண்ணெயுடன் சில சொட்டு எலுமிச்சை சாறை விட்டு அதை வைத்து தலைக்கு மசாஜ் செய்யுங்கள். சிறிது நேரம் ஊறவிட்டு பிறகு தலைக்கு குளியுங்கள். இவ்வாறு ஒரு வாரத்தில் 2 முறை செய்தால் பொடுகு நீங்கிவிடும். சளித் தொந்தரவு உள்ளவர்கள், தேங்காய் எண்ணெயை நன்கு சூடாக்கி இறக்கி அதில் ஒரு சிறிய கட்டி கற்பூரத்தைப் போட்டு வெதுவெதுப்பாக எடுத்து நெஞ்சுப் பகுதிகளில் தடவினால் நிவாரணம் கிடைக்கும். வறண்ட சருமம் மற்றும் வறண்ட கூந்தலுக்கு தேங்காய் எண்ணெய் நன்மை அளிக்கும். Relaxplzz ![]() "நலமுடன் வாழ" - 2 |
:) https://www.facebook.com/Relaxplzz Posted: 14 May 2015 10:54 PM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 14 May 2015 10:45 PM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 14 May 2015 10:16 PM PDT |
Posted: 14 May 2015 09:40 PM PDT |
Posted: 14 May 2015 09:20 PM PDT ஒரு பாதிரியாரிடம் ஒரு பெண் முறையிட்டாள். ஃபாதர்.. நான் இரண்டு பெண் கிளிகள் வளர்க்கிறேன்.. அவை எப்போதும் டி.வி.யில் வரும் காதல் பாட்டுகளையே பாடிக்கொண்டு இருக்கின்றன. என்ன செய்வது..? ஃபாதர் சொன்னார்.. என்னிடமும் 2 ஆண் கிளிகள் உள்ளன.. எப்போதும் கடவுளை வேண்டி, தியானம் செய்து கொண்டும் பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டும் இருக்கின்றன. உன் கிளிகளை அவையுடன் ஒரு வாரம் பழகவிட்டால், நல்ல பழக்கங்களை கற்றுக்கொண்டடுவிடும்." அந்தப் பெண்ணுக்கு இது நல்ல யோசனையாக தோன்றவே மறுநாளே கொண்டுவந்து விட்டாள். பாதிரியார் பெருமையுடன், என் கிளிகள் என்ன செய்கின்றன என்று பார் என்றார். அவருடைய ஆண் கிளிகள் இரண்டும் கடவுளை மனம் உருகி வேண்டிக்கொண்டிருந்தன. பெண் கிளிகளோ, "அழகிய அசுரா.. அழகிய அசுரா.. அத்து மீற ஆசை இல்லையா..?" என பாடின. தியானத்திலிருந்த ஆண்கிளிகளில் ஒன்று சட்டென்று பெண்கிளிகளைப் பார்த்து பின்னர் தன் நண்பனை உசுப்பி, டேய்.. அங்க பாரு.. நம்ம வேண்டுதல் பலிச்சுடுச்சு" என்றது உற்சாகத்துடன்..!!!! - :P :P Relaxplzz |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 14 May 2015 08:49 PM PDT |
Posted: 14 May 2015 08:45 PM PDT "நல்ல மாட்டுக்கு ஒரு சூடு"னு சொல்ற பெரியவங்களே உங்ககிட்ட ஒரே ஒரு கிராஸ் கேள்வி? . . .. . நல்ல மாட்டுக்கு எதுக்குயா சூடு வைக்கிறீங்க? - வள்ளிநாயகம் சுட்கி @ Relaxplzz |
Posted: 14 May 2015 08:39 PM PDT |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 14 May 2015 08:29 PM PDT |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment