Tuesday, 12 May 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


ஒரு சின்ன கற்பனை. ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. பரிசு...

Posted: 12 May 2015 09:10 AM PDT

ஒரு சின்ன கற்பனை.

ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது.

பரிசு என்னவென்றால் -ஒவ்வொரு நாள் காலையிலும்
உங்கள் வங்கிக் கணக்கில் 86,400. ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.

ஆனால் இந்தப் பரிசுக்கு சில கண்டிஷன்கள் உண்டு.
அவை -

1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத
பணம் " உங்கள்கணக்கி
லிருந்து எடுக்கப்பட்டுவிடும்.

2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு அக்கவுண்டிற்கு மாற்றமுடியாது.

3) அதை செலவு செய்யமட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு

4) ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக்கணக்கில் அந்த நாளின் செலவிற்காக. 86400. ரூபாய்வரவு வைக்கப்படும்

5) எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக்கொள்ளலாம்.

6) வங்கி -
"முடிந்தது கணக்கு" என்று சொன்னால் அவ்வளவு தான்.
வங்கிக் கணக்கு மூடப்படும்,மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்படமாட்டாது.

இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா?

உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள்மனதுக்கு பிடித்தவர்களுக்கும் வாங்கித்தருவீர்கள்
இல்லையா?

உங்களுக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வீர்கள். ஏனென்றால்
அவ்வளவு பணத்தையும் உங்களுக்காக
மட்டுமே செலவு செய்வது சாத்தியமில்லை என்பதால் -அப்படித்தானே?

முடிந்தவரை ஒவ்வொரு ரூபாயையும் எப்படியாவது செலவு செய்து உபயோகிப்பீர்கள்தானே?

உண்மையில் இது ஆட்டமில்லை-
நிதர்சனமான உண்மை
ஆம்நம்
ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு வங்கி க்கணக்கு இருக்கிறது. நாம் தான் அதை கவனிக்கவில்லை.

அந்த ஆச்சரிய வங்கிக்கணக்கின்பெயர் -
காலம்.
ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும்போது வாழ்க்கையின்
அதியுன்னத பரிசாக
86400
வினாடிகள் நமக்கு வழங்கப்படுகிறது.

இரவு தூங்கப் போகும் போது நாம் மிச்சம் வைக்கும் நேரம்நமக்காக சேமித்து வைக்கப் படுவதில்லை.
அன்றைய பொழுது
நாம் வாழாத வினாடிகள்தொலைந்தது தொலைந்தது தான்.நேற்றைய பொழுது போனது போனது தான்.

ஒவ்வொரு நாள் காலையிலும்
புத்தம் புதிதாக நம்கணக்கில்86400நொடிகள்.
எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமானாலும்வங்கி உங்கள் கணக்கை
முடக்க முடியும்.

அப்படியிருக்கும் பட்சத்தில்நீங்கள் என்ன செய்வீர்கள்?

உண்மையில் 86400
வினாடிகள் என்பது அதற்கு சமமானஅல்லது அதற்கும் மேலான பணத்தை விடவும்மதிப்பு
வாய்ந்தது அல்லவா?

இதை ஞாபகம் வைத்துக்கொண்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நாம் கொண்டாடிக் கழிக்க மாட்டோமா? 𾀩𾀞𾀟𾀠𾀡𾀢𾀣𾀤𾀥𾀦𾀧𾀨

காலம் நாம் நினைப்பதை விட வேகமாக ஓடிவிடும்.𾟙
சந்தோஷமாகஇருங்கள் -

சுற்றியுள்ளவர்களை ஆழமாக நேசியுங்கள் -
வாழ்க்கையைக் கொண்டாடுங்கள

:) :)

Relaxplzz

இப்படில்லாம் நடக்கும்னு எனக்கு மூனாம் வகுப்புலையே தெரிஞ்சிருந்தா "மனுநீதி சோழன்"...

Posted: 12 May 2015 08:52 AM PDT

இப்படில்லாம் நடக்கும்னு எனக்கு மூனாம் வகுப்புலையே தெரிஞ்சிருந்தா "மனுநீதி சோழன்" கதைலாம் சொல்லித்தரப்போ கெக்கபெக்கேன்னு சிரிச்சிருப்பேன்.

#ஜெ. விடுதலை.

Kali Muthu @ Relaxplzz

Our judicial system.. ;-) A cow was running away from the jungle. .. An elepha...

Posted: 12 May 2015 08:48 AM PDT

Our judicial system.. ;-)

A cow was running away from the jungle. ..

An elephant stopped the cow and asked the reason behind the panic..

Cow said : "government had ordered to catch all the buffaloes in the jungle"

Elephant asked: "but you are a cow, why are you running ??

Cow said: " I know I am cow , but if they catch me , it will take 20 years to prove that I am a cow not a buffalo. ...!

Elephant also started running with the cow....

:D :D

Relaxplzz

(y) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 12 May 2015 08:21 AM PDT

இது எப்படி இருக்கு..!

Posted: 12 May 2015 08:20 AM PDT

இது எப்படி இருக்கு..!


இது எப்படி இருக்கு..!

இரவு 9 மணிக்கு மேல் நிச்சயம் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்!!! மனிதனுக்கு உண...

Posted: 12 May 2015 08:10 AM PDT

இரவு 9 மணிக்கு மேல் நிச்சயம் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்!!!

மனிதனுக்கு உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் மட்டுமின்றி, நிம்மதியான தூக்கமும் மிகவும் இன்றியமையாதது. மனிதன் ஒரு நாளைக்கு வேண்டிய தூக்கத்தைக் கடைப்பிடிக்காவிட்டால், அவனது உடலில் பல பிரச்சனைகள் அழையா விருந்தாளியாய் வந்து ஒட்டிக் கொள்ளும். இன்றைய காலத்தில் நைட் ஷிப்டில் வேலை செய்வோர் கூட, ஒரு நாளைக்கு வேண்டிய தூக்கத்தை மேற்கொள்கிறார்கள். ஆனால் மற்றவர்களோ இரவு நேரத்தில் தூக்கம் வராமல் கவலைப்படுகின்றனர்.
இரவு உணவுக்குப் பின் இதெல்லாம் செய்யாதீங்க!!
இதற்கு முக்கிய காரணம் உண்ணும் உணவுகள் தான். இரவில் சிலர் தூங்குவதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் சாப்பிட்டுவிட்டு, உடனே பெட்டில் படுக்க சென்றுவிடுவார்கள். ஆனால் இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற ஆசைப்பட்டால், இரவு 9 மணிக்கு மேல் ஒருசில உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இங்கு அப்படி இரவில் நல்ல தூக்கத்தைப் பெற இரவு 9 மணிக்கு மேல் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

1. பால்

இரவில் 9 மணிக்கு மேல் பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். பாலில் எவ்வளவு தான் புரோட்டீன், கால்சியம் இருந்தாலும், இரவில் படுக்கும் முன் குடித்தால், அதில் உள்ள லாக்டோஸ் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தி, நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் செய்துவிடும்.

2. பாஸ்தா

இரவு நேரத்தில் பாஸ்தா உட்கொள்வதைத் தவிர்க்கவும். ஏனென்றால் பாஸ்தாவில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், இரவில் தூங்க முடியாது. ஆகவே இதனை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

3. சாக்லேட்

பலருக்கு சாக்லேட் மிகவும் விருப்பமான ஒன்று. இதில் சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் இருக்கிறது. ஆகவே இதனை இரவில் சாப்பிட்டால், நல்ல தூக்கத்ப் பெற முடியாது போய்விடும். இப்படி தினமும் இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாவிட்டால், உடலில் கார்டிசோல் அளவு அதிகரித்து, திசுக்கள் உடைய வழிவகுக்கும்.

4. பிட்சா

இன்றைய காலத்தில் பிட்சா சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. பிட்சாவில் கார்போஹைட்ரேட், கொழுப்புக்கள், சோடியம் போன்றவை அதிக அளவில் இருப்பதால், அவற்றை இரவு 9 மணிக்கு மேல் சாப்பிட வேண்டாம். அதை மீறியும் சாப்பிட்டால், உடல் பருமனடைந்துவிடும். பின் அவற்றை குறைப்பது சிரமமாகிவிடும்.

5. பச்சை மிளகாய்

பச்சை மிளகாய் சாப்பிட்டால் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும். ஆனால் அதனை பகல் நேரத்தில் சாப்பிட்டால் நல்லது. அதுவே இரவில் பச்சை மிளகாய் சேர்த்து செய்யப்படும் உணவை சாப்பிட்டால், தூக்கமின்மை ஏற்படும். பின் பகல் நேரத்தில் சோர்வுடனேயே இருக்க நேரிடும்

6. இறைச்சிகள்

இரவில் சிலர் இறைச்சியை சாப்பிடுவார்கள். இறைச்சியில் புரோட்டீன் அதிகம் உள்ளது. பொதுவாக புரோட்டீன் உள்ள உணவுகள் செரிமானமாவதற்கு அதிக அளவு எனர்ஜி தேவைப்படும். ஆனால் இரவில் அவ்வளவு ஆற்றல் கிடைக்காததால், இறைச்சியை இரவில் உட்கொண்டால், நிம்மதியான தூக்கத்தை பெற முடியாது.

7. வெள்ளை சாதம்

வெள்ளை சாதத்தைக் கூட இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது. இவை கூட இரவில் தூக்கத்தைக் கெடுக்கும். முக்கியமாக இரவு 9 மணிக்கு மேல் இதனை சாப்பிடவே கூடாது. இல்லாவிட்டால் தூக்கத்தை தொலைக்கக்கூடும்.

Relaxplzz

திருமணமான புதிதில் பெண்கள் ************************************************** 1....

Posted: 12 May 2015 07:10 AM PDT

திருமணமான புதிதில் பெண்கள்
**************************************************
1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.
2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள்
அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்
3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம்.
இனிமேல் செய்ய மாட்டேன்.
4. எனக்கு புடவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.
5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.
6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.
7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு.
8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க.
9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி.போகலாம் பா.

சில ஆண்டுகள் கழித்து
**************************************
1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க.பக்கத்தில்
வந்து சொல்லிட்டு போனா என்ன?
2. நானும் குழந்தைகளும் போறோம்.10 நாள்கள் கழித்து வந்தால்
போதும் புரியுதா??
3. எனக்கு கோஸ் பொரியல்.உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை.
ஊறுகாய் போதும்ல?
4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ.
5. ம்ம்ம்.உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர்.
6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான்
இருக்கு.
7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே!
8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க
முடியுமா?
9. கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக்
கூப்பிடுவீங்க. நீங்க போங்க.

பல ஆண்டுகள் கழித்து
*********************************
1. காதில் வாங்குவதே இல்லை.
2. போறவளுக்கு வர்ற வழி தெரியும். யாரும் வர வேண்டாம்
3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க. இல்லாட்டி போங்க.
4. ஒரு 5000 ரூபாய் மட்டும் வெட்டுங்க. புடவையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.
5. உங்களை பெத்த இம்சை மகராசி தான் லெட்டர்.
6. போதும். போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான் மிச்சம்.
7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ...? வாயை மூடுங்க. கொசு உள்ள போயிடபோவுது.
8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ?
9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்டாம். என்
பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல இருக்கு.

Relaxplzz

எப்படியாவது என் ஒரு பையனை ஜட்ஜுக்கு படிக்க வைக்கணும் .அவ்வ்வ்வவ்வ்வ் ;-) . Moha...

Posted: 12 May 2015 06:58 AM PDT

எப்படியாவது என் ஒரு பையனை ஜட்ஜுக்கு படிக்க வைக்கணும் .அவ்வ்வ்வவ்வ்வ் ;-)

.
Mohamed Ali @ Relaxplzz

:P

Posted: 12 May 2015 06:52 AM PDT

:P


ஹலோ முதலாளியா நான் டிரைவர் பேசறேன்.. சொல்லு.. ஐயா ECR ரோட்டுல நம்ம வண்டி ஓவர் ஸ...

Posted: 12 May 2015 06:35 AM PDT

ஹலோ முதலாளியா நான் டிரைவர் பேசறேன்..
சொல்லு..

ஐயா ECR ரோட்டுல நம்ம வண்டி ஓவர் ஸ்பீடு கேஸ் போடுவேன்னு டிராபிக் இன்ஸ்பெக்டர் நிறுத்திவச்சுட்டாருங்க..

அப்படியா அவர் பேரு என்ன..?

குமாரசாமிங்க ஐயா...

கவலையை விடு..போனை அவர்ட்ட குடு ... உன்னை விட்டுருவாரு.!

- வெங்கடேஷ் ஆறுமுகம் @ Relaxplzz

;-)

Posted: 12 May 2015 06:24 AM PDT

;-)


கோயில் மற்றும் வீடுகளில் செய்யக்கூடாதவைகள் .... 1. புண்ணிய தீர்த்தங்களில் வந்தவ...

Posted: 12 May 2015 06:10 AM PDT

கோயில் மற்றும் வீடுகளில் செய்யக்கூடாதவைகள் ....

1. புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது.

2. பூஜை வேளையில் தீபத்தை ஆடவர்கள் அணைக்கக் கூடாது. பூசணிக்காயை பெண்கள் உடைக்கக் கூடாது.

3. கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.

4. எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது.

5. தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது.

6. மூர்த்தகளைத் தொடுதலோ, மூர்த்திகளின் திருவடிக்கருகில் கற்பூரம் ஏற்றுதல் கூடாது.

7. சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது.

8. வஸ்திரத்தை போர்த்திக் கொண்டு ஜபம், பிரதக்ஷிணம், நமஸ்காரம், பூஜை, ஹோமம் செய்யக்கூடாது.

9. பசுவிற்கும், அந்தணருக்கும் நடுவிலும், அந்தணர் அக்னியின் நடுவிலும், தம்பதிகளின் நடுவிலும், தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், குரு சிஷ்யரின் நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது

10. இரவில் துணி துவைக்கக் கூடாது. குப்பையை வெளியே கொட்டக் கூடாது. மரத்தில் நிழலில் தங்கக் கூடாது. ரகசியமான விஷயத்தைப் பேசக் கூடாது.

11. அன்னம், உப்பு, நெய் இவைகளை கையால் பரிமாறக் கூடாது.

12. ஒரே சமயத்தில் தனது இரு கைகளாலும் தன்னுடைய தலையை சொறியக்கூடாது.

13. ஆயுள், பொருள், வீட்டுத் தகராறு, மந்திரம், உடலுறவு, மருந்து, வருமானம், தானம், அவமானம் இந்த ஒன்பதும் பிறருக்குத் தெரியக்கூடாது.

14. சந்தியா கால வேளையில் சாப்பாடு, தூக்கம், உடலுறவு, அத்யயனம் இவைகள் செய்தல் கூடாது.

15. தீபாவளி தவிர மற்ற நாட்களில் அதிகாலைப் பொழுதில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளக்கூடாது.

16. இடது கையினால் நீர் அருந்தக்கூடாது.

Relaxplzz

#அன்புள்ளகணவனுக்கு நான் உனக்கு அன்பான மனைவிதான்! உன் சுதந்திரத்தில் நான் தலையிட...

Posted: 12 May 2015 06:10 AM PDT

#அன்புள்ளகணவனுக்கு

நான் உனக்கு அன்பான மனைவிதான்!
உன் சுதந்திரத்தில் நான் தலையிடாமல் இருக்கும் வரை;

நான் உனக்கு அன்பான மனைவிதான்!
உனக்கு மட்டுமே நான் வேலைக்காரியாக இருக்கும் வரை;

நான் உனக்கு அன்பான மனைவிதான்!
உன் குடும்ப பிரச்சினைகளை தாங்கும் வரை

நான் உனக்கு அன்பான மனைவிதான்!
நம் குழந்தையை நானே வளர்க்கும் வரை

நான் உனக்கு அன்பான மனைவிதான்!
என் விருப்பங்களை உன் மேல் திணிக்காத வரை

நான் உனக்கு அன்பான மனைவிதான்!
உனக்காகவே வாழும் வரை!!!

- ராமசுப்ரமணியன்

Relaxplzz

கோவணதையாச்சும் மிச்சம் விடுங்க ............ :( நேற்று நடந்த தீர்ப்பு சம்பவத்தில...

Posted: 12 May 2015 05:52 AM PDT

கோவணதையாச்சும் மிச்சம் விடுங்க ............ :(

நேற்று நடந்த தீர்ப்பு சம்பவத்தில் கிண்டலும் கேலியும் பதிவு இருந்தாலும் நிறைய பேரின் ஆதங்கம் அந்த கிண்டல் கேலியில் மறைந்து விட்டது .ஒரு அரசியல் வாதி ஊழல் பண்ணிட்டு நிரபராதி தீர்ப்பு வந்தத ஒரு திருவிழா போல கொண்டாடுவது அசிங்கத்திலும் அசிங்கம் .கட்சி சார்புள்ளவர்கள் நம்ம கட்சி ஆட்சிக்கு வந்தா நாம நினைத்ததை சாதிக்கலாம் என்ற எண்ணம், காண்ட்ராக்ட் நமக்கு கிடைக்கும் நமக்கு வேண்டியவங்களுக்கு வேல வாங்கி தரலாம் ஆதாயம் கிடைக்கும் ஆதரவு தருகிறான் . ஆனா எந்த கட்சி சாராமல் இருக்கும் சாமானியன் நிலை பார்க்கும் போது கண்ணீர் தான் மிச்சம் . மற்ற நாடுகளில் இருக்கும் அந்த நாட்டின் குடிமகன்களின் சுக போக வாழ்க்கை வாழ்றத பார்க்கும் போது நாமளும் இப்படி வாழ மாட்டோமா மனசு ஏங்குது .அந்த ஒரு நிமிஷம் நம் அரசியல் வாதிகளின் மேல் வெறுப்பு வராமல் இல்லை .

சவூதி நாட்ல அகதிகளாக வந்த பர்மா வாசிகளுக்கு சவூதி அரசாங்கம் மலைகளில் அவர்களுக்கு வீடு கட்டிகொடுத்து ,பிழைக்க அவர்களுக்கு வாகனம் வேலையும் கொடுத்து சந்தோசமா வச்சி இருக்கு . ஆனா நம் நாட்டில் நாம் அகதிகள் விட மோசமாக உள்ளோம் . நாம ஒரு லோன் வாங்க ,ஒரு சான்றிதழ் வாங்க நாயா சுத்தணும் இந்த சின்ன விசயத்துக்கு கூட எனக்கு அந்த ஆபிஸ் ல தெரிஞ்ச ஆள் இருக்கார் நா கூட்டு போறேன் இன்னொருத்தன தொங்க வேண்டி இருக்கு .எவளோதான் மற்ற நாடுகளை பற்றி பேசினாலும் இந்தியாவுக்கு தான் வந்து ஆகணும் .ஒன்னு இல்லாம இருந்த பாலைவனத்துல இன்னைக்கு எல்லாமே கிடைக்கு தரமான பொருள்கள் ,நாம அன்றாடம் பயன்படுத்தும் எல்லா பொருட்கள் இங்க கிடைக்கு ஆனா எல்லாத்திலும் தரம் இருக்கு . உதாரணம் கோல்கேட் பேஸ்ட் ,குடிக்கும் பெப்சி ரெண்டுக்கும் நிறைய வித்தியாசம் ,அது சின்ன நாடு நம்ம நாடு எவளோ பெருசு கம்பேர் பண்ணாதிங்க சொல்லலாம் அப என்ன மயித்துக்கு முதல்வர் ,அமைச்சர்கள் ,MLA ,MP, மேயர் ,நகராட்சி தலைவர் ,வார்ட் உறுப்பினர்கள் ,அரசு உழியர்கள் இவங்க எல்லாம் .

இந்த ஆறு மாசம் நம்ம தமிழ் நாடு நிர்வாகம் நடந்துச்சா முதல்வர் அமைச்சர்கள் கோயில் குளமுமா சுத்திட்டு இருந்தாங்க இங்க மக்கள் படுற பாட்டை ஒருத்தர் கூட திரும்பி பார்க்கல இன்னும் எங்க ஊர்ல நல்ல கழிப்பறை கிடையாது.இன்னும் வெளிய தான் மரத்துக்கு உரம் போட்டு கிட்டு இருக்காங்க . நாங்க என்ன கேக்கோம் சுத்தமான தண்ணி ,தரமான சாலைகள் ,நல்ல கல்வி இதுதான கேக்கோம் .ஒரு சிறு தொழில் தொடங்க வழி இல்ல ஆயிரம் பார்மாலிடிஸ் எல்லாத்துலயும் டாக்ஸ் ,வண்டி வாங்கும் போதே ரோடு டேக்ஸ் கட்டி தான் வாங்கறோம் ஆனா ரோட் ல வண்டி ஓட்ட ஒவ்வொரு டோல் கேட் க்கு பணம் கட்டி அழனும் .ஒவ்வொரு நாட்ல எல்லாமே ஏசி பேருந்துகள். நம்ம ஊர் பேருந்துகள் பிரேக் எங்கயாச்சும் முட்டிதான் நிறுத்த வேண்டி இருக்கு .மெட்ரோ ரயில் இன்னும் நம்ம தமிழ் நாட்ல வரல அதையே பெரிய சாதனையா பேசிட்டு இருக்கோம் ஆனா புல்லட் ட்ரைன் 600 KM வேகத்துல போக ஆரம்பிச்சிட்டு இன்னும் நெல்லை ல இருந்து சென்னை போக 12 மணி நேரம் ஆகுது .இது ஒன்னு கோபத்துல பொங்குறது இல்ல ஒரு சிறு ஆதங்கம் தான் .ஏசி ல உக்காந்து ஸ்டேடஸ் போட்டா போதுமா கேக்கலாம் .ஊர்ல ஏசி ல இருக்க வக்கத்து போய்தான் இங்க வந்து இருக்கோம் .திரும்ப திரும்ப அதே திருட்டு கும்பலுக்கு தான் ஒட்டு போடணும் 10 தலைமுறைக்கு பணம் காசு சேர்த்தாச்சு கொஞ்சமாச்சும் நல்லது செய்ங்கப்பா அடுத்த தலைமுறை ஆச்சும் நல்ல வாழ்க்கை அமையட்டும் .பஸ் ஸ்டான்ட் ல நிழல் குடை கட்டிட்டு அதுல நிதி மதிப்பிடு போடுறிங்க மக்களுக்கு என்ன தேவை மதிப்பிடு போடுங்க .தென் மாவட்டங்கள் நல்ல தொழில் துறை இல்ல தொழில் நுட்ப பூங்காக்கள் இல்ல இன்னும் சென்னை நம்பிதான் வாழ்ந்துட்டு இருக்காங்க மக்கள் .அப்ப சென்னை மாதிரி மத்த மாவட்டங்கள் எப்ப முன்னேறுவது .

நேற்று வெடி போட்டு ரோட் ல ஆடினவன் எல்லாம் ஏழைங்க சாமானிய மக்கள்தான் நம்ம ஊருக்கு என்ன நல்லது நடக்கும் நினைக்க மாட்டான் நம்ம தலைவர் நல்லா இருந்தா போதும் நினைச்சிட்டு கடைசில சாமானிய மனிதனா செத்து போவான் .அந்த மக்களின் பலகினத்தை வைத்து இவர்கள் பணம் சம்பாத்திகிறார்கள் . அடுத்த மாசம் பள்ளி கூடங்கள் திறக்க போகுது ஒவ்வொரு குழந்தைகள தனியார் பள்ளிகள் சேர்க்க பெற்றோர்கள் படும் பாடு சொல்லி மாளாது .அடுத்த மாசம் எல்லா அடமான கடைகளுக்கு அட்சய திருதி தான் .இதுல நான் பொங்கல் வச்சி என்ன ஆகா போவுது .

குறைந்த பட்சம் இந்த சபதம் ஆச்சும் எடுங்க இலவச பொருட்கள் தரும் எந்த கட்சிக்கும் ஒட்டு போட மாட்டோம் என்று .

கோவணதையாச்சும் மிச்சம் விடுங்க ............ :(

- Abdul Vahab @ Relaxplzz


தமிழக அரசியல் வியாபாரம் கேளுங்க.... சிரிங்க... சிந்தியுங்க...

Posted: 12 May 2015 05:40 AM PDT

தமிழக அரசியல் வியாபாரம்

கேளுங்க.... சிரிங்க... சிந்தியுங்க...


தமிழக அரசியல் வியாபாரம்

கேட்டவுடனே குலுங்கி குலுங்கி சிரிக்கிறா மாதிரி தமிழில் ஒரு வார்த்தை சொல்லுங்க பா...

Posted: 12 May 2015 05:28 AM PDT

கேட்டவுடனே குலுங்கி குலுங்கி சிரிக்கிறா மாதிரி தமிழில் ஒரு வார்த்தை சொல்லுங்க பார்ப்போம்..

#நீதி ;-)

- வெங்கடேஷ் ஆறுமுகம் @ Relaxplzz

கலைஞரின் ஐந்தாவது முறை முதல்வர் பதவியை சமன் செய்கிறார் ஜெயலலிதா - தின மலர் . பெ...

Posted: 12 May 2015 05:24 AM PDT

கலைஞரின் ஐந்தாவது முறை முதல்வர் பதவியை சமன் செய்கிறார் ஜெயலலிதா - தின மலர்
.
பெயிலாகி பெயிலாகி படிச்சா மூணாங்கிளாஸ் கூட ஐஞ்சு தடவை படிக்கலாம்.

- Anand Siddhan kumar @ Relaxplzz

சிரிக்க மட்டும் (ஆசிரியர் , மாணவன் நகைச்சுவை):- ஆசிரியர்: நம்ம தமிழ் பிறந்தது ம...

Posted: 12 May 2015 05:10 AM PDT

சிரிக்க மட்டும் (ஆசிரியர் , மாணவன் நகைச்சுவை):-

ஆசிரியர்: நம்ம தமிழ் பிறந்தது மதுரையில்.

வாண்டு பாபு: எந்த ஆஸ்பத்திரில சார்?

ஆசிரியர்: ???? :O :O

---------------------------------------

ஆசிரியர் : 1869ம் ஆண்டுல என்ன நடந்தது?

வாண்டு பாபு : எனக்கு தெரியாது சார்.

ஆசிரியர் : முட்டாள்... அந்த வருடம்தான் காந்திஜி பிறந்தார். சரி, அடுத்த கேள்வி. 1873ம் ஆண்டு என்ன நடந்தது?

வாண்டு பாபு : காந்திஜிக்கு நாலு வயசு நடந்தது சார்!

ஆசிரியர் : ??? :O :O

------------------------------------------------

டீச்சர்: பாபு.. காது கேக்காதவர்களை நாம் எப்படி கூப்பிடுவோம்?

வாண்டு பாபு: அவங்களுக்குதான் காது கேக்காதே. எப்படி கூப்பிட்டா என்ன?

டீச்சர்:???? :O :O

-----------------------------------------

ஆசிரியர் : தண்ணீரின் கெமிக்கல் பார்முலா என்ன?

வாண்டு பாபு: HIJKLMNO.

ஆசிரியர் : என்ன பதில் இது?

வாண்டு: நீங்கதானே முந்தின வகுப்புல 'H to O' னு சொன்னீங்க.

ஆசிரியர் : .............??? :O :O

--------------------------------------

ஆசிரியர் : மூன்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ?

வாண்டு பாபு: (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்.

ஆசிரியர் : ??? :O :O

----------------------------------------------

ஆசிரியர்: பாபு, எந்த மாசத்துல 28 நாள் இருக்கும்?

வாண்டு பாபு: எல்லா மாசத்துலயும் 28 நாள் இருக்கும்!

ஆசிரியர்: ???? :O :O

:P :P

Relaxplzz

இதை அனைவரும் அதிகமாக பகிருங்கள் நண்பர்களே இனி புலம்பாமல் டயல் செய்யுங்கள்! மின...

Posted: 12 May 2015 05:10 AM PDT

இதை அனைவரும் அதிகமாக பகிருங்கள் நண்பர்களே

இனி புலம்பாமல் டயல் செய்யுங்கள்!

மின்வெட்டு என்றாலே 1912 என்ற எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம், மொபைலில் இருந்தும் பேசலாம். புகார் தெரிவித்த பிறகு சரிசெய்து விடுகிறோம் என்று டிமிக்கி கொடுத்துவிடுவார்கள்... தொடர்ந்து பேசி புகார் தெரிவித்ததற்கு ஆதாரமாக புகார் எண்ணை மறக்காமல் கேளுங்கள்.... கேட்டால்தான் கொடுப்பார்கள்.

புகார் தெரிவித்த சில மணி நேரங்களில் உங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். அது மாதிரி மின்வெட்டை சரி செய்யாதபட்சத்தில் மாநகரம், நகரம். பஞ்சாயத்து என்ற ஊர்களை பொறுத்து ஒவ்வொன்றுக்கும் ஒரு சில மணிநேரங்கள் இருக்கிறது அதனை தாண்டியும் ஒன்றும் சரி செய்யவில்லையென்றால் மறுபடியும் அழைத்து உங்கள் புகார் எண்ணை தெரிவித்து மேல்முறையீடு செய்யும்போது மின்சார வாரியம் நுகர்வோருக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டியிருப்பதால், புகார் தெரிவித்து எண்ணை வாங்கிகொண்டாலே உங்கள் மின்வெட்டு பிரச்னை தீர்ந்த மாதிரிதான்...

எல்லோரும் முயற்சி செய்து பாருங்கள்.....!

ஷேர் பண்ணுங்க நண்பர்களே......! !

Relaxplzz

இஞ்சிப் பால்..! கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு ச...

Posted: 12 May 2015 04:10 AM PDT

இஞ்சிப் பால்..!

கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.

ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?

ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.

அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.

அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?

1. நுரையீரல் சுத்தமாகும்.

2. சளியை ஒழுச்சு கட்டிடும்.

3. வாயுத் தொல்லை என்பதே வராது.

4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.

5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.

6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.

7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.

8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.

9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.

10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.

அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?

3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.

ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.

மீதிப்பேர் சாப்பிடலாம்.

என்ன நாளையில இருந்து உங்க வீட்டில காப்பிக்கு பதில் இஞ்சிப்பால்தானே?

Relaxplzz

சிரிப்பு துளிகள் 1. கழுதைக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம் ? என்ன வித்தியாசம...

Posted: 12 May 2015 03:10 AM PDT

சிரிப்பு துளிகள்

1. கழுதைக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம் ?
என்ன வித்தியாசம் ?
மனிதனைக் கழுதைன்னு கூப்பிடலாம். கழுதையை மனிதன்னு கூப்பிட முடியாது
==========
2. நகை போடாம இருக்கிறதே மேல்
ஏன் ?
நகை போடுவது ஃபீமேல்
==========
3. தூங்கறதுக்கு முன்னால எல்லாரும் என்ன செய்வாங்க ?
என்ன செய்வாங்க ?
முழிச்சிருப்பாங்க
==========
4. தோசை நடுவில் ஏன் ஓட்டை இருக்கு ?
ஏன் ?
அதைச் சுடுகிறார்கள்
==========
5. ஏரிக்கு ஆப்போசிட் என்ன ?
என்ன ?
இறங்கி
==========
6. ஏய்யா... கிழிஞ்ச ரூபாய் நோட்டு கொடுக்கறே... இது செல்லாது... வேற கொடு
நீ மட்டும் டிக்கெட்டைக் கிழிச்சிக் கொடுக்கிறீயே... அது மட்டும் செல்லுமா ?
==========
7. உங்க ஃபேமிலி பேக்ரவுண்டைப் பத்திச் சொல்லுங்க...
எனக்கு ஃபேமிலியே கிடையாதுங்க... பேக் க்ரவுண்டும் இல்லை ஃபிரண்ட் க்ரவுண்டும் இல்லை வாடகை வீட்ல இருக்கேன்.
==========
இன்றைய மெகா பிட்டு ஜோக்:
8. இந்தப் படம் மூணாவது முறை பார்க்கும் போதுதான் புரிந்தது...
அவ்வளவு கஷ்டமான கதையா ?
ம்ஹூம்... முதல் இரண்டு தடவையும் கேர்ள் ஃப்ரெண்டோட போனேன்...

Relaxplzz

ஜெ.வுக்கு வாழ்த்து சொன்னார் ரஜினி !

Posted: 12 May 2015 12:50 AM PDT

ஜெ.வுக்கு வாழ்த்து சொன்னார் ரஜினி !


ஆண்களுக்கும் பெண்களுக்கும் , அன்பில் ஒரே வித்தியாசம் தான். பெண்ணானவள், தன் மனதில...

Posted: 12 May 2015 12:10 AM PDT

ஆண்களுக்கும் பெண்களுக்கும் , அன்பில்
ஒரே வித்தியாசம் தான்.
பெண்ணானவள், தன் மனதிலுள்ள 10%
அன்பையும்,
100% வெளிப்படுத்துவாள்.

ஆனால் ஆண் என்பவன், மனதில் 100%
அன்பை வைத்திருந்தாலும், 10% கூட வெளிக்காட்ட
தெரியாதவனாக இருப்பான்.

கோபத்தை வெளிகாட்ட தெரிந்த அளவுக்கு,
பாசத்தை வெளிக்காட்ட தெரியாதவன்
ஆண்.

ஆணுக்கு பின்னால், பெண் இருக்கிறாள்
என்பதை தெரிந்தவர்கள்,

பெண்ணுக்கு பின்னும், ஆண் மறைமுகமாக
இருக்கிறான் , என்பதை மறந்து விடுகிறார்கள்..

- Jaya Rani

Relaxplzz

மகனை படிக்கவைத்து தனது பரம்பரையில் முதல் பட்டதாரியாக உருவாக்கிவிட்ட அந்த #விவசாய...

Posted: 11 May 2015 11:50 PM PDT

மகனை படிக்கவைத்து தனது பரம்பரையில் முதல் பட்டதாரியாக உருவாக்கிவிட்ட அந்த #விவசாயி, தந்தைக்கு இனி ஒரேயொரு கவலைதான் தன்னோடு #விவசாயம், அழியப்போகின்றதே என்று,,


தோசை வடிவிலான அன்பு நாற்பத்தெட்டாண்டுகளாக தோசை சுடும் அம்மாவுக்கு அடுப்பெரியயெ...

Posted: 11 May 2015 11:10 PM PDT

தோசை வடிவிலான அன்பு

நாற்பத்தெட்டாண்டுகளாக
தோசை சுடும் அம்மாவுக்கு
அடுப்பெரியயெரிய
கண்களைத் திறந்துகொண்டேயிருக்கும்
இந்தத் தோசை
57,600-வது தோசையாக இருக்கலாம்.

அதன் மீது
உடைத்தூற்றிய கோழி முட்டையின்
வழுவழுத்தோடும் மஞ்சள் கருவை
ஓடி ஓடி விரட்டி
தோசையின் மீதே படியவிட்டு
சாமர்த்தியம் காட்டுகிறாள்.

சொய்ங் சத்தம் அடங்க அடங்க
தோசைப்பரிதியின் ஓரங்களில்
நெய் வார்க்கும் அம்மா
தன் வாசனையை
அறை முழுக்கப் பரப்பிவிடுகிறாள்.

தோசையின் முகம் மெத்தென மலர்ந்ததும்
கவிழ்த்துப்போட்டு
அதன் முதுகைத் தோசைக்கரண்டியால்
தடவிக்கொடுக்கிறாள்
அத்துணை வாஞ்சையோடு.

இரண்டரை வயதிலிருந்து
தோசை தின்று பழகிவிட்ட எனக்கு
பாதி வட்டத்தை இழந்துவிட்டு
தட்டில் கிடக்குமிந்த மீதி தோசை
நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்
8,399-வது தோசையாக இருக்கலாம்.

'போதும்' என நான் சொன்னாலும்
'இன்னொண்ணு போட்டுக்க கண்ணு' என்றே
இப்போதும் சொல்கிறாள்.
நான் சாப்பிடப்போகும்
8,400-வது தோசை
ஒரு முட்டை தோசையாக வெந்துகொண்டிருக்கிறது
அம்மாவின் அன்பு.

நான் சாப்பிடும் கடைசி தோசையில்
நெய் மணத்துக்கிடக்கிறது.
மேலும் அம்மாவின் அன்பு
தோசை வடிவிலானதாகவே
இருக்கக் கூடும்போல..!!

கவிதை: நாணற்காடன், ஓவியம்: செந்தில்

Thanks Vikatan

Relaxplzz

வெயிலை தணிக்க இலவச மோர் தானம் செய்யும் வயதான தம்பதியர்கள். வணக்கங்கள் (y)

Posted: 11 May 2015 10:37 PM PDT

வெயிலை தணிக்க இலவச மோர் தானம் செய்யும் வயதான தம்பதியர்கள்.

வணக்கங்கள் (y)


பேசாம இவங்க நாட்டுல இருக்க எல்லா கோர்ட்டையும் இடிச்சுட்டு அந்த இடத்துல 'ஷாப்பிங்...

Posted: 11 May 2015 10:31 PM PDT

பேசாம இவங்க நாட்டுல இருக்க எல்லா கோர்ட்டையும் இடிச்சுட்டு அந்த இடத்துல 'ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்' கட்டி வாடைகைக்காவது விடலாம்..

gokila_honey @ Relaxplzz

அழகான பெண்களையும் சிஸ்டர் என்று மன உறுத்தலின்றி கூப்பிட வைக்கும் ஒரே இனம் செவி...

Posted: 11 May 2015 09:57 PM PDT

அழகான பெண்களையும் சிஸ்டர்
என்று மன உறுத்தலின்றி கூப்பிட
வைக்கும் ஒரே இனம் செவிலியர் இனம்..!

#செவிலியர் தின வாழ்த்துக்கள்..!


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 11 May 2015 09:39 PM PDT

0 comments:

Post a Comment