Relax Please: FB page daily Posts |
- பேய், ஆவி குறித்த தகவல்கள்...!! 1.பேய்கள் உறங்குவதில்லை..தங்கள் சாவுக்கான நீதி...
- #அம்மா * ஆணினத்திற்கு கிடைக்காத பாக்கியம்... பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிச...
- Superla..... ;-) R.T.O ஆபீசில் எழுதப்பட்ட ஒரு வாசகம் : "உரிமம் வேண்டுமென்றால்...
- தொப்பையை தவிர்க்க , குறைக்க வேண்டிய முறைகள் :- 1 .முதலில் கொலஸ்ட்ரால் முழு சோதன...
- ரசத்தை விரும்பாரதவரா? படிங்க இதை... சித்த வைத்திய முறைப்படி நம் உணவில் தினசரி த...
- ஏப்பா.. நல்லா அழுகிற பொம்பளைகள மட்டும் முன்னாடி வரிசைல உக்கார வையு.. . போன தடவை...
- பள்ளியில் 'அ'கரம் கற்றுக்கொள்ளும் முன்பே, நாவில் அரங்கேறிய வார்த்தை அது... பசி...
- ஒரு வார்த்தையில் கவிதை கேட்டார்கள் அம்மா என்றேன். கேட்டது என் அம்மாவாக இருந்தி...
- :P https://twitter.com/RelaxplzzTamil
- நல்லா சாப்பிடு & உடம்பைக்குறை போன்ற முரணும் அம்மாவால் தான் முடியும் :)) #HappyM...
- :) https://twitter.com/RelaxplzzTamil
- இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.. <3
- "உறவைக் கத்துக் கொடுக்கலைன்னா பின்னாடி சந்தோஷமான வாழ்க்கையை இழந்துடுவோம்". (ஒரு...
- குட்நைட் செல்லம்ஸ் <3
- வாங்க... !!! ரிலாக்ஸ் பண்ணலாம்.... !!!
- :P Relaxplzz
- அழகிய மர வீடு
- :) Relaxplzz
- அழகிய இயற்கை.. Purple in Nature பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- அம்மா இன்னைக்கும் அதே சாம்பார்/புளிக்குழம்பு தானே வேண்டாம்மா..!" "பரவாயில்லை.....
- வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி! தற்பொழுது தகவல...
- :) Relaxplzz
- சல்மான் கான் தண்டனை நிறுத்திவைப்பு, திரையுலகினர் வரவேற்பு : செய்தி. இதுங்கலதான்...
- படத்தில் இருப்பது என்னவென்று தெரிகிறதா?? . . . . . . . . . . . . . கரூர் காவிரி...
- Why..? why....?????
- படத்தின் பெயரும் - முடிந்தால் காட்சியும் சொல்லவும்.. :)
- :) Relaxplzz
- :) Relaxplzz
Posted: 10 May 2015 10:10 AM PDT பேய், ஆவி குறித்த தகவல்கள்...!! 1.பேய்கள் உறங்குவதில்லை..தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும்வரை அலைந்தபடி இருக்கும். . 2 பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளவே விரும்பும்..எனவே தான் அறைகளில் நறுமணம் அல்ல்து வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன. . 3 பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காணமுடியும்.. உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக்கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம். . 4 பேய்கள் அல்லது ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல.. தங்களை வெளிக்காட்டிக்கொள்ளவே முயற்சி செய்யும். . 5 விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும். . 6 பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல விரும்பாதவ்ரகள்தான் கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக சுற்றுவார்கள். . 7 பேய்கள் அல்லது ஆவிகள் குளிர்மையானவை. அதனால் தான் அவைகளை நீங்கள் சந்திக்கின்ற பொழுது மிக குளிர்மையை உணர்வீர்கள். . 8 பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உங்கள் எதிர்காலம் நன்றாகவே தெரியும்.. சில நேரங்களில் அவை கனவுகளின் மூலம் வெளிப்ப்படுத்த முயற்சி செய்யும். . 9 நல்ல பேய்கள் அல்லது ஆவிகள் பயங்கரமான தோற்றம் அற்றவை. கெட்ட பேய்கள் அல்லது ஆவிகள் தோற்றம் மிக கொடூரமானதாக இருக்கும். . 10 பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோன உடல்களை சுற்றியோ அல்லது சுடுகாட்டிலோ இருக்காது..எப்பவுமே கோவில்கள்/சர்ச்சுகளை வழிபாடு தலங்களை அண்டியே சுற்றியபடி இருக்கும். . 11 பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உணர்ச்சிகள் (feelings)உண்டு..ஆனால் உணர (sense) முடியாது. . 12 பேய்கள் அல்லது ஆவிகள் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அல்லது தன் சாவுக்கு காரணமானவர்களுக்கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக்கொள்ள முயற்சிக்கும். . 13 பேய்கள் அல்லது ஆவிகளால் [கெட்ட] கொலைசெய்ய முடியாது.. ஆனால் ஒருவன் தன்னை தானே கொலைசெய்யும் அளவுக்கு தூண்டிவிடும் சக்தி உண்டு. . 14 பேய்கள் அல்லது ஆவிகளால் தரையை கால்களால் தொட முடியும். கைகளாலோ அல்லது உடலின் வேறு பகுதிகளாலோ அல்ல..எனவே தான் உங்களால் அவைகளின் காலடி ஓசையை கேட்க முடியும். . 15 பேய்கள் அல்லது ஆவிகளால் ஒரு மனித உடலில் புகுந்து மற்றொருவருடன் தகவல் தொடர்பு கொள்ள முடியும். . 16 பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்கள் மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள் வீட்டில் அருகில் இருக்க முடியும். . 17 பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோனவரின் உடலை அடக்கம் செய்யும் வரை அவர்களை பற்றி யார் பேசிக்கொண்டு இருந்தாலும் அருகில் நின்று கேட்கும் குணம் உண்டு. . 18 பேய்கள் அல்லது ஆவிகளை சாதாரணமாக் காணக்கூடியவர்களின் இரத்த பிரிவு (Blood Group) 'O' + or - ஆக இருக்கும்.. மற்றவகை இரத்த பிரிவு உள்ளவர்களின் கண்களுக்கு தெரிவது அபூர்வம்.. பின்குறிப்பு : 1. இதை வேலைவெட்டி இல்லாத எவனோ எழுதியிருக்கான். 2. அதை பொழுதுபோகாமல் நான் படிச்சேன், கொப்பி பேஸ்ட் பண்ணிட்டேன். 3. இதை இப்போ நீங்க பொழுதுபோகாமல் படிச்சிட்டு என்னை கழுவி ஊத்தப்போறீங்க! ப்ளீஸ் வேண்டாம் :P :P Relaxplzz |
Posted: 10 May 2015 09:10 AM PDT #அம்மா * ஆணினத்திற்கு கிடைக்காத பாக்கியம்... பெண்னினம் மட்டுமே பெற்று வந்த பரிசு ஒரு கவளம் சோற்றை கூட அதிகமாய் உட்கொள்ளாத வயிறு..! * ஒரு உயிரையே உள்ளே வளரச் செய்கிறது... உலக அதிசயம்..! * எவ்வளவு தான் விஞ்ஞான வசதிகள் வந்தாலும் கருவறையை விட பாதுகாப்பான அறையை குழந்தைக்கு யாரால் தர முடியும்..?????!! * இறைவனின் வல்லமைக்கு இதனை விட சான்று வேண்டுமா..??? * இது பெண்மையின் மறுபிறவி…! * பத்து நிமிடம் சுமந்தால் தோள் கனத்து போகிறது, பத்து மாதம் சுமந்தாலும் கருவறை கனப்பதில்லை..! * வலி என்றாலே உயிர் போகிறது என்பார்கள்– ஆனால் இந்த வலியில் மட்டுமே உயிர் வரும்..!!!! * குழந்தையாய்…சிறுமியாய்…குமரியாய்…மனைவியாய் வளரும் உறவு தாய்மையில் தான் தன்னிறைவு பெறுகிறது..! * கொஞ்சும் போது தனக்கும் ஆனந்தம் வருவதாலேயே தகப்பன் கூட குழந்தையை கொஞ்சுவது சாத்தியம்...! * நள்ளிரவில் குழந்தையின் அழுகை எல்லோருக்கும் எரிச்சல், தாய்மைக்குத் தான் பதட்டம்..!!! * தாய்மையின் மகத்துவத்தை எத்தனை தத்துவமாயும், தத்ரூபமாயும் சொல்லலாம். Relaxplzz |
Posted: 10 May 2015 08:30 AM PDT |
Posted: 10 May 2015 08:10 AM PDT தொப்பையை தவிர்க்க , குறைக்க வேண்டிய முறைகள் :- 1 .முதலில் கொலஸ்ட்ரால் முழு சோதனையும் ,சர்க்கரை அளவு சோதனையும் எடுக்கவேண்டும் . 2 . இயற்கை உணவுப்பொருள்களை பயன்படுத்த வேண்டும் , கிழங்கு வகைகளை கொஞ்சம் குறைக்க வேண்டும். 3 . அசைவ உணவினை அதிக அளவில் தவிர்க்க வேண்டும். 4 . செயற்கை குளிர்பானம் , ஆல்கஹால் மது அருந்துதல் முற்றிலும் தவிர்க்க வேண்டும். 5 . வீட்டினில் சாப்பிட முடியாதவர்கள் நல்ல உணவகங்களில் மட்டும் சாப்பிட வேண்டும், இல்லாவிட்டால் உடம்பிற்கு ஒத்து வராத பொருளை சேர்க்க வேண்டாம் என்று அவர்களிடம் கட்டளை இடுங்கள் . 6 . பழங்களை பயன்படுத்துங்கள் , பப்பாளி பழம் நான்கு துண்டுகள் தினமும் சாப்பிடலாம் .இது இரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன் சிறந்த மலம் உக்கியாகவும் பயன்படுகிறது . 7 . அதிக தொப்பை பெற்றிருப்பவர்கள் வாழைத்தண்டை வதக்கி கூட்டு செய்து வாரம் இரு முறையும் , மற்றவர்கள் வாரம் ஒரு முறையும் பயன்படுத்தலாம் . 8 . சாப்பாட்டில் கொத்தமல்லி , கருவேப்பில்லை , பொதினா மற்றும் கீரை வகைகள் பயன்படுத்தி வரவும் . இவைதான் இயற்கை முறை ... 9 . முடிந்தால் கொஞ்சம் நடை பயிற்சி அல்லது கொஞ்சம் உடற்பயிற்சி செய்யலாம் ... Relaxplzz |
Posted: 10 May 2015 07:10 AM PDT ரசத்தை விரும்பாரதவரா? படிங்க இதை... சித்த வைத்திய முறைப்படி நம் உணவில் தினசரி துணை உணவுப் பொருட்களாக வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம், புதினாக்கீரை, கறி வேப்பிலை, கொத்துமல்லிக் கீரை, கடுகு, இஞ்சி முதலியன சேர வேண்டும். இந்த ஒன்பது பொருட்களும் ஆங்காங்கே நம் உணவில் சேருகிறது என்றாலும், ஒட்டு மொத்தமாகச் சேர்வது ரசத்தில்தான். புளிரசம், எலுமிச்சை ரசம், மிளகு ரசம், அன்னாசிப் பழரசம், கொத்துமல்லி ரசம் என்று பலவிதமான சுவைகளின் ரசத்தைத் தயாரித்தாலும் இந்தப் பொருட்கள் பெரும்பாலும் தவறாமல் இடம் பெற்றுவிடும். நோய்களைக் குணமாக்கும் மாற்று மருந்து (Antidote) தான் இந்த ரசம். வைட்டமின் குறைபாடுகளையும் தாது உப்புக் குறைபாடுகளையும் இது போக்கிவிடுகிறது. அயல் நாட்டினர் உணவு முறையில் சூப்புக்கு முதலிடம் கொடுத்துள்ளனர். இது, ரசத்தின் மறுவடிவமே. ரசமோ, சூப்போ எது சாப்பிட்டாலும் பசியின்மை, செரியாமை, வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலியன உடனே பறந்து போய்விடும். சித்த வைத்தியப்படி உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் இந்தியர்கள் பின்பற்றுவது ரசத்தைப் பொறுத்தவரை 100 சதவிகிதம் பொருந்தும். ரசத்தில் போடப்படும் சீரகம், வயிற்று உப்புசம், தொண்டைக் குழாயில் உள்ள சளி, கண்களில் ஏற்படும் காட்ராக்ட் கோளாறு, ஆஸ்துமா முதலியவற்றைக் குணப்படுத்துகிறது. ரசத்தில் சேரும் பெருங்காயம் வயிறு சம்பந்தமான கோளாறுகள் அனைத்தையும் குணப்படுத்துகிறது. வலிப்பு நோய் வராமல் தடுக்கிறது. மூளைக்கும் உடலுக்கும் அமைதியைக் கொடுக்கிறது. நரம்புகள் சாந்தடைவதால் நோய்கள் குணமாகின்றன. ஆண்மை அதிகரிக்கிறது. அபார்ஷன் ஆகாமல் தவிர்த்துவிடுகிறது. புரதமும் மாவுச்சத்தும் பெருங்காயத்தில் தக்க அளவில் உள்ளது. கொத்துமல்லிக்கீரை ரசத்தில் சேர்வதால், காய்ச்சல் தணிந்து சிறுநீர் நன்கு வெளியேறுகிறது. உடல் சூடு, நாக்கு வறட்சி முதலியன அகலுகின்றன. கண்களின் பார்வைத் திறன் அதிகரிக்கிறது. புது மணத்தம்பதிகளின் தாம்பத்திய வாழ்க்கைக்கு கொத்துமல்லிக் கீரையும், கொத்துமல்லி சேர்ந்த ரசமும் சுவையூட்டுகின்றன. மாதவிலக்கு சம்பந்தமான கோளாறுகள் வராமல் தடுக்கிறது. வயிற்றிற்கு உறுதி தருவதுடன் குடல் உறுப்புகள் சிறப்பாகச் செயல்படவும், செரிமானக் கோளாறுகளைத் தடுக்கவும், நீரிழிவு, சிறுநீரக் கோளாறு முதலியவை இருந்தால் அவற்றைக் குணப்படுத்தவும், ரசத்தில் சேரும் கறிவேப்பிலை உதவுகிறது. கறிவேப்பிலையை ஒதுக்காமல் மென்று தின்பது நல்லது. கறி வேப்பிலையால் ரசம் மூலிகை டானிக்காக உயர்ந்து நிற்கிறது. ரசத்தில் சேரும் வெள்ளைப்பூண்டு, ஆஸ்துமா, இதயக் கோளாறு, குடல் பூச்சிகள், சிறுநீரகத்தில் உள்ள கற்கள், கல்லீரல் கோளாறுகள் முதலியவற்றைக் கட்டுப் படுத்துகிறது. இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய்கள் தடித்துப் போகாமல் பார்த்துக் கொள்கிறது. தக்க அளவில் புரதமும் நோய்களைக் குணமாக்கும் 'பி' வைட்டமின்களும், 'சி' வைட்டமின் களும் பூண்டில் இருப்பதால் நுரையீரல் கோளாறு, காய்ச்சல் போன்றவையும் எட்டிப் பார்க்காது. தலைவலி, தொடர்ந்து இருமல், மூக்கு ஒழுகுதல் போன்றவை ரசத்தில் சேரும் இஞ்சியால் எளிதில் குணம் பெறுகின்றன. ஆண்மைக்குறைவையும் போக்குகிறது. மூச்சுக்குழல், ஆஸ்துமா, வறட்டு இருமல், நுரையீரலில் காசம் முதலியவற்றையும் குணமாக்கி, குளிர்காய்ச்சலையும் தடுக்கிறது இஞ்சி. ஜலதோஷம், காய்ச்சல், நரம்புத் தளர்ச்சி, மலட்டுத்தன்மை முதலியவற்றை ரசத்தில் சேரும் மிளகு, சக்தி வாய்ந்த உணவு மருந்தாக இருந்து குணப்படுத்துகிறது. தசைவலியும், மூட்டுவலியும் குணமாகின்றன. வாதம், பித்தம், கபம் வராமல் தடுக்கிறது. ரசத்தில் சேரும் கடுகு உடம்பில் குடைச்சல், தலை சுற்றல் முதலியவற்றைத் தடுக்கிறது. வயிறு சம்பந்தமான கோளாறுகளை நீக்கி வயிற்றைச் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. ரசத்தில் புளியின் அளவை மட்டும் மிகக் குறைவாகச் சேருங்கள். மழைக்காலத்தில் உடல் நலத்தைக் காத்து முன்கூட்டியே நோய்களைத் தடுத்துவிடுவதால், ரசத்தின் உதவியால் ஜலதோஷம், ப்ளூ காய்ச்சல் இன்றி வாழலாம். வெயில் காலத்தில் நாக்கு வறட்சி, அதிகக் காப்பி, டீ முதலியவற்றால் வரும் பித்தம் முதலிய வற்றையும், தினசரி உணவில் சேரும் ரசம் உணவு மருந்தாகக் குணப்படுத்தும். எனவே, ரசம் என்னும் சூப்பர் திரவத்தைக் கூடியவரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். Relaxplzz |
Posted: 10 May 2015 06:04 AM PDT ஏப்பா.. நல்லா அழுகிற பொம்பளைகள மட்டும் முன்னாடி வரிசைல உக்கார வையு.. . போன தடவை ஒருத்தி பாக்கு போட்டுட்டு போஸ் கொடுத்தா.. அவளை முன்னாடி விடாதே.. . அந்த மீசைக்காரன் யாருன்னு பாத்து கேமராவுக்கு காட்டாதே .. காமெடி பீஸ் ஆக்கிருவாங்க.. . அப்புறம் தீச்சட்டில புகை வர மாதிரி எதோ மருந்து இருக்காமே... அது எல்லா தொகுதிக்கு அனுப்பிரு.. . தீக்குளிக்கிரவனுக்கு நம்ம பங்குல பெட்ரோல் ஃப்ரீயா கொடுத்துடு.. நல்லா எரியனும் பாத்துக்கோ.. . அப்புறம் பஸ் உடைக்கவெல்லாம் ஆள் ரெடியான்னு கேட்டுக்க.... . இந்த பேட்டி எடுக்க வர கேமரா காரங்க கிட்ட பேச நாலஞ்சு ஆள் ஏற்பாடு பண்ணிக்க.. அவங்களை இன்னிக்கே கூப்பிட்டு ட்ரெயினிங் கொடுத்துடு.. . உண்ணாவிரதம் இருக்கிற பந்தலுக்கு தவறாம பிரியாணி பேக்கட் போயிடனும் பாத்துக்கோ. போன தடவை எந்திரிச்சு சாப்பிட போயிட்டாங்க. . எந்த எந்த ஊர்ல எல்லாம் தற்கொலை நடக்குதோ அந்த பேமிலிய கப்புன்னு அமுக்கி வை.. செத்த பின்னாடி கட்சில சேர்த்துனா செலவு மிச்சம் பாத்துக்கோ .. . அப்புறம் நாங்கல்லாம் அழுவுற மாதிரி ஒரு பேனர் ரெடி பண்ணி ..எல்லா மேம்பாலத்திலையும் மாட்டிரு.. .அது போயஸ் காம்பவுண்டுள்ள நின்னு பாத்தாலும் தெரியனும் பாத்துக்க்.. . தீர்ப்பு வர நேரம் பாத்து கரண்ட் புடுங்க சொல்லி ஜி ஓ பாஸ் பண்ணிரு... . அப்புறம் ஃபேஸ்புக்ல இருக்கிற நம்ம வக்கீல் கிட்டயெல்லாம் சொல்லி ,, அம்மா விடுதலைன்னு நியுஸ் பரப்ப சொல்லு.. . கூடவே அவங்க வென்றால் நீதி வெல்லும் னு போஸ்ட் போட சொல்லிரு .. மறந்தும் கூட நம்மாளுன்னு காமிச்சுக்க வேண்டாம்னு சொல்லிடு.. . #நாளைக்கு தீர்ப்பு வரட்டும். மிச்சத்த பேசிக்கலாம். அந்த ஐஜி எங்க இருக்கார் ஓவர்.. . உங்க பொடனிக்கு பின்னாடி தான் நிக்கிறார் ஓவர்..!! . கலவரம் நடக்கிற மாதிரி கிளப்பணும் .தடுக்க கூடாது ஓவர் ஓவர் !! ;-) - Anand Siddhan Kumar @ Relaxplzz |
Posted: 10 May 2015 05:58 AM PDT பள்ளியில் 'அ'கரம் கற்றுக்கொள்ளும் முன்பே, நாவில் அரங்கேறிய வார்த்தை அது... பசியெனும் வேள்வி அடிவயிற்றில் பற்றி எரிய, அலறி அழைத்த வார்த்தை அது... பாசமெனும் பாற்கடலில் மூழ்கித் தழைக்க, பரிவோடு கூப்பிட்ட வார்த்தை அது... துயரம் உண்டாகி துவண்ட வேளையில், துக்கத்தை தூக்கில் ஏற்ற, தூயவளை விளித்த வார்த்தை அது... உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் உயிர் தந்த உயர்வான வார்த்தை அது... அண்டம் யாவும் பொருள் உணர்த்தும் அன்பெனும் அற்புத வார்த்தை 'அம்மா' !!! :) இனிய அன்னையர் தின நாள் வாழ்த்துக்கள் - முத்து ![]() "தாய்மைக் கவிதைகள்" |
Posted: 10 May 2015 01:06 AM PDT ஒரு வார்த்தையில் கவிதை கேட்டார்கள் அம்மா என்றேன். கேட்டது என் அம்மாவாக இருந்திருந்தால் ஒரு எழுத்தில் சொல்லி இருப்பேன் நீ.. என்று ! ♥ - யாரோ ![]() "தாய்மைக் கவிதைகள்" |
:P https://twitter.com/RelaxplzzTamil Posted: 09 May 2015 11:46 PM PDT |
Posted: 09 May 2015 11:38 PM PDT நல்லா சாப்பிடு & உடம்பைக்குறை போன்ற முரணும் அம்மாவால் தான் முடியும் :)) #HappyMothersDay |
:) https://twitter.com/RelaxplzzTamil Posted: 09 May 2015 11:34 PM PDT |
Posted: 09 May 2015 10:04 PM PDT |
Posted: 09 May 2015 08:15 PM PDT "உறவைக் கத்துக் கொடுக்கலைன்னா பின்னாடி சந்தோஷமான வாழ்க்கையை இழந்துடுவோம்". (ஒரு நிமிடக் கதை) அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய கணவன் சுதாகரிடம் காபியையும் பிஸ்கட் தட்டையும் நீட்டியபடியே மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள் வாணி. "ஹரிணிக்கும் வினோத்துக்கும் நேத்தோட பரீட்சை முடிஞ்சாச்சு. ஊருக்குப் போறதுக்கு எப்ப டிக்கெட் எடுக்கப் போறீங்க?!" "ஊருக்கா? எதுக்கு? பசங்களுக்குத்தான் லீவு. எனக்குமா லீவு விடுறாங்க?" சிடுசிடுப்பாய்க் கேட்டான் சுதாகர். "எங்களை ஊர்ல விட்டுட்டு வந்திடுங்க. நாங்க பத்து நாள் உங்க அம்மா வீட்ல இருப்போம். பத்து நாள் எங்க அம்மா வீட்ல இருப்போம். பசங்களுக்கு லீவுல போரடிக்குமே" என்றாள் வாணி. "நோ சான்ஸ்! நான் வேற திட்டம் வெச்சிருக்கேன். நம்ம ஹரிணியையும் வினோத்தையும் கம்ப்யூட்டர் கிளாஸ்ல சேர்க்கலாம்னு நினைச்சிருக்கேன். மாலை நேரத்துல மியூசிக் கிளாஸ் போகட்டும். பக்கத்துலயே கராத்தே வகுப்பு இருக்கு. அதுக்கும் சேர்த்துவிடுவோம். இப்படி உபயோகமா ஏதாவது கத்துக்கிட்டா படிப்போட வேற திறமையும் வளரும். அதைவிட்டுட்டு கிடைக்குற நேரத்தை வீணாக்கினா எதிர்காலத்துல நமக்குத்தான் இழப்பு. அதைப் புரிஞ்சுக்கோ வாணி." குரலை உயர்த்திப் பேசினான் சுதாகர். "அதையேதான் நானும் சொல்றேன். ஸ்கூல் போய்ட்டேகூட கம்ப்யூட்டர், மியூசிக் கத்துக்கிடலாம். ஊருக்குப் போய் பத்துநாள் இருந்துட்டு வர முடியுமா? சின்ன வயசுலயே தாத்தா, பாட்டி, மாமா, சித்தின்னு உறவுக்காரங்களோட நல்ல உறவை ஏற்படுத்திக்கணும். சொந்தக் காரங்களோட எந்தவித ஒட்டுதலும் இல்லாம இருந்துட்டு, படிப்பு வேலைன்னு ஓடி கடைசியில ஒரு உதவிக்குக்கூட ஆளில்லாம வாழ்றதாங்க வாழ்க்கை? சின்ன வயசுலயே குழந்தைகளை உறவுக்காரங்க வீட்டுக்கு அழைச்சுட்டு போய் உறவைக் கத்துக் கொடுக்கலைன்னா பின்னாடி சந்தோஷமான வாழ்க்கையை இழந்துடுவோம். அதுதாங்க பெரிய இழப்பு!" -வாணி சொன்னதில் சுதாகருக்கு ஏதோ புரிய ஆரம்பித்தது. "ஓ.கே. நாளைக்கு எனக்கும் ஆபீஸ்ல லீவு சொல்லிட்டு டிக்கெட்டுக்கும் ஏற்பாடு செய்யறேன்" என்றான். நன்றி-தமிழ் இந்து. Relaxplzz |
Posted: 09 May 2015 11:00 AM PDT |
Posted: 09 May 2015 10:53 AM PDT |
Posted: 09 May 2015 10:45 AM PDT |
அழகிய மர வீடு Posted: 09 May 2015 10:38 AM PDT |
Posted: 09 May 2015 10:30 AM PDT |
Posted: 09 May 2015 10:23 AM PDT |
Posted: 09 May 2015 10:17 AM PDT |
Posted: 09 May 2015 10:10 AM PDT அம்மா இன்னைக்கும் அதே சாம்பார்/புளிக்குழம்பு தானே வேண்டாம்மா..!" "பரவாயில்லை.. என் ராஜால்ல.. அம்மா உனக்கு உருட்டி தருவேனாம்.. நீ ஒவ்வொரு உருண்டையா சாப்பிடுவியாம்..!" என்று சொல்லிவிட்டு குழம்ப நல்லா சுண்டவெச்சு, சாதத்துல போட்டு, ஒவ்வொரு உருண்டையா உருட்டி, கையில் வெச்சு, அப்படியே வாய்க்குள்ள தள்ளி, அதுலயும் கடைசி உருண்டையில் மிஞ்சிய சாதத்துளிகளை பாத்திரத்தோட விளிம்புல ஒண்ணாசேர்த்து அதை அப்படியே லாவகமா வழிச்சு வாயில ஊட்டிவிடும் போது உள்ள சுகம் இருக்கே.. அது அப்படியொரு அழகான கவிதை..! சாப்பாடோட அன்பையும் சரிவிகிதமா கலந்து கொடுக்க அம்மாவை விட வேற யாரும் இருக்க முடியாது.. ♥ ♥ Relaxplzz |
Posted: 09 May 2015 10:00 AM PDT வைரஸ் தாக்கிய 'பென்ட்ரைவ்' இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி! தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது. இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம். இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Instal செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள். 1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள். 2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும். 3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம். 4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும். 5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும். ◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள். ◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் Relaxplzz ![]() |
Posted: 09 May 2015 09:55 AM PDT |
Posted: 09 May 2015 09:50 AM PDT சல்மான் கான் தண்டனை நிறுத்திவைப்பு, திரையுலகினர் வரவேற்பு : செய்தி. இதுங்கலதான் தலைவன்னு நம்பிகிட்டு ஒரு அல்லைக்கை கூட்டம் பாலாபிஷேகம் பண்ணுதுங்க... - செந்தில். ################### சல்மான் கான் தண்டனை நிறுத்திவைப்பு, திரையுலகினர் வரவேற்பு : செய்தி. நிஜவாழ்கைல செஞ்ச தப்ப ஒத்துகிட்டு தண்டனைய ஏத்துக்க மனசில்லாத இவனுங்க தான் சினிமாவில் வில்லன் பண்ண தப்புக்கு வெரட்டி வெரட்டி பழி வாங்குறானுங்க... - பூபதி முருகேஷ் Relaxplzz |
Posted: 09 May 2015 09:45 AM PDT படத்தில் இருப்பது என்னவென்று தெரிகிறதா?? . . . . . . . . . . . . . கரூர் காவிரி ஆற்றில் மணல் அள்ள காத்திருக்கும் லாரிகள்... அதிர்ச்சியாக உள்ளதா... கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் நாளைய தமிழகத்தின் நிலையை... #################################################### உலக தமிழர்கள் அனைவரும் நம் பக்கத்தில் இணைந்து ஆதரவு அளிக்க வேண்டுகிறேன்... முடிந்தவரை நம் பக்கத்தை உங்கள் நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்துக்கொள்ளுங்கள்........ - ஆம் நாங்கள் தமிழர்கள் ![]() |
Posted: 09 May 2015 09:40 AM PDT |
Posted: 09 May 2015 09:35 AM PDT |
Posted: 09 May 2015 09:30 AM PDT |
Posted: 09 May 2015 09:20 AM PDT |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment