Tamil History and Culture Facebook Posts |
- சித்திரை முதல் நாள் மட்டுமே தமிழ் புத்தாண்டு: சித்திரை முதல் நாள் அன்று தான் நா...
- அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ... உச்ச சூரியனின் உச்சுகுளி...
- இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :) கோலம் : பா ரேவதி பா விவேக்
Posted: 13 Apr 2015 11:56 PM PDT சித்திரை முதல் நாள் மட்டுமே தமிழ் புத்தாண்டு: சித்திரை முதல் நாள் அன்று தான் நாம் புத்தாண்டு கொண்டாட வேண்டும். நாமும் பல்லாயிரம் வருடமாக அதை சித்திரையே புத்தாண்டாக கொண்டாடுகிறோம். இதற்கு பல ஆதாரங்களை நான் தருகிறேன் .அதற்கான காரணங்கள் பல உள்ளன. சித்திரை மாதம் புத்தாண்டின் தொடக்கம் என்பது, வான நூலையும், பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது. பூமி, சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் ஓர் ஆண்டு. சூரியன், பூமத்திய ரேகையில் நேராகப் பிரகாசிக்கும் மாதம், ஆண்டின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.சூரியன், முதல் ராசியான மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து, அந்த ராசியை விட்டு வெளியேறும் வகையில் உள்ள காலம் சித்திரை மாதம். சித்திரையில் துவங்கி, பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில், அம் மாதத்தின் பவுர்ணமி அன்று வரும் அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அம் மாதத்தின் பெயர். உதாரணமாக, சித்திரை மாதம் பவுர்ணமியன்று சித்திரை நட்சத்திரம் வருவதால் அந்த மாதத்தின் பெயரே சித்திரை. இதே போன்று, வைகாசி மாதம் பவுர்ணமியன்று, விசாக நட்சத்திரம் வருவதால், அந்த மாதத்தின் பெயர் வைகாசி. இப்படி, ஒவ்வொரு மாதத்திற்கும், இந்த அடிப்படையிலே பெயர்கள் வழங்கப்படுகின்றன. சைத்ரா/சித்திரை மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இலக்கிய ஆதாரங்கள்: புஷ்ப விதி என்னும் நூலில், சித்திரை முதல் மாதம் என்று கூறுகிறார் ஞானப்பிரகாசர். அகத்தியரின், "பன்னாயிரத்தில்' பங்குனி மாதம் கடை மாதம் என்று கூறுகிறது . நக்கீரர் "திண்ணிலை, மருப்பின் ஆடுதலை' என்று கூறுகிறார். இதில் வரும் ஆடு தலைக்கு, மேஷ ராசி என்று, பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலில் ராசமாணிக்கனார் கூறுகிறார். சித்திரை அல்லது மேஷம் என்பது தான் தமிழில் முதல் மாதம். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலமும் சைத்ரா/சித்திரை முதல் நாளே புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். தமிழர் சித்திரைக்கும் மற்ற மாநில சைத்ராவிற்கும் 10 அல்லது 15 நாள் வேறுபாடு தான். அதற்கு காரணம் "சர்வதேச ஆண்டு முறையை இந்தியர்கள் ஏற்ற போது பல மாநிலங்கள் ஒரே தினத்தில் ஏற்கவில்லை. ஒரு மாநிலம் ஏற்று அண்டை மாநிலம் ஏற்க பல வருடங்கள் ஆயிற்று". சர்வதேச முறைக்காக பாரம்பரிய காலண்டரில் சில நாள் மாற்றப்பட்டது. அந்த இடைவெளியால் தமிழ் புத்தாண்டுக்கு சில நாள் முன்பு பல மாநிலமும், தமிழனுடன் அதே நாளில் "கேரளா,ஒரிசா, நேபாள்,மொரிசியஸ், பாலி இந்து மக்கள் புத்தாண்டு கொண்டாடுகின்றனர்". புத்தாண்டுக்கு ஒரு நாள் அல்லது சில நாள் கழித்து அல்லது அதே நாளில் குஜராத், அஸ்ஸாமில் புத்தாண்டு கொண்டாடுகின்றனர். அதன் விவரம் இதோ சித்திரை/சைத்ரா முதல் நாள் தமிழ் புத்தாண்டு, கேரளா விஷு, ஒரிசா விஷ்வா சங்கராந்தி, பஞ்சாப் வைசாகி, நேபாள் மைதிலி, இந்தோனேசியா பாலி இந்துக்கள் நியோபி,இவை அனைத்தும் ஒரே நாளில் புத்தாண்டை இந்த பெயரில் கொண்டாடுகின்றனர். தமிழ் புத்தாண்டுக்கு சில நாளுக்கு முன்பு தெலுகு உகாதி, கன்னட பேவு பெல்லா, ராஜஸ்தான் தாப்னா, சிந்தி சேட்டி சந்த், மணிப்புரி சஜிபு செய்ரோபா, மராட்டி குதிபத்வா, கொங்கணி நவ்வே வர்சாச்சே, ஹிமாச்சல் பிஷு இவை அனைத்தும் ஒரே நாளில் புத்தாண்டை இந்த பெயரில் கொண்டாடுகின்றனர். இரண்டு , மூன்று நாளுக்கு முன்பு அனைத்து ஹிந்தி மாநிலங்களும் 'சைத்ர பிரதிபடா' என்ற பெயரில் புத்தாண்டை கொண்டாடுகின்றனர். குஜராத், தமிழ் புத்தாண்டோடு அல்லது ஒரு நாள் முன்பு கொண்டாடுகின்றனர். அசாமி 'ரொங்காலி பிஹு' என்று ஒரு நாள் முன்பு தமிழ் புத்தாண்டோடு அல்லது ஒரு நாள் பின்பு புத்தாண்டை கொண்டாடுகின்றனர். இந்த இந்திய புத்தாண்டுகள் அனைத்துமே March 28 லிருந்து April17 க்குள் முடிந்து விடும். தமிழ் புத்தாண்டு என்பது சமய நம்பிக்கை சார்ந்தது வெளிப்படையாக சொன்னால் புத்தாண்டும், பொங்கல் எல்லாம் ஒரு சமயத்தினர் மட்டும் கொண்டாடுகின்றனர். இசுலாமியர் ஹிஜிராவையும் கிறித்தவர் ஆங்கில புத்தாண்டை கொண்டாடுகின்றனர். அவர்களின் நம்பிக்கை வேறு அது போல நாத்திகர்கள் புத்தாண்டில் மூக்கை நுழைக்க வேண்டாம். தமிழ் புத்தாண்டை மாற்ற அரசியல்வாதிக்கு உரிமையில்லை... -வி. ராஜமருதவேல் ( copyrights by rajamaruthavel) |
Posted: 13 Apr 2015 09:41 PM PDT அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ... உச்ச சூரியனின் உச்சுகுளிர வணங்கிடுவோம் ... பஞ்சபூதத்தின் மூத்தவனை நெஞ்சுகுளிர வணங்கிடுவோம் ... வசந்தகால வருகையை வானம்நோக்கி வரவேற்போம் ... கசந்தகாலம் இனியில்ல காலத்தை நாம்கேட்போம் ... ஆதித்தமிழன் இயற்கையை ஆண்டவனாய் பார்த்தவன் ... ஆதிகேசவன் உச்சநாளை ஆண்டுதொடக்கமாய் சேர்த்தவன் ... முப்பாட்டன் வணக்கிய முதல்நாளை வரவேற்போம் ... புத்தாண்டில் புதுவாழ்வு புலரட்டும் எனக்கேட்போம் ... நன்றி : செந்தமிழ்தாசன் பா விவேக் |
Posted: 13 Apr 2015 09:21 PM PDT |
You are subscribed to email updates from தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம் - Tamil History and Culture's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment