Wednesday, 29 April 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 29 Apr 2015 09:23 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 29 Apr 2015 09:17 AM PDT

நாராயணசாமியின் மனைவி ஒரு பூனை வளர்த்து வந்தாள். அது அவருக்கு சுத்தமாக பிடிக்கவி...

Posted: 29 Apr 2015 09:10 AM PDT

நாராயணசாமியின் மனைவி ஒரு பூனை வளர்த்து வந்தாள்.

அது அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதனை எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்று நினைத்தார்.

ஒரு நாள் மனைவிக்குத் தெரியாமல் அந்த பூனையைத் தூக்கி கொண்டு இருபது வீடுகள் தள்ளி எறிந்துவிட்டு வந்தார். வீட்டிற்கு வந்தால் பூனை வாசலில் நின்று கொண்டிருக்கிறது.

அடுத்தநாள் அப்பூனையை அடுத்த தெருவில் விட்டு வந்தார். அன்றும் பூனை அவருக்கு முன்னால் வந்து மாடியில் இருந்து அவரைப் பார்த்துக் கொண்டிருந்தது.

வெறுப்படைந்த அவர் அடுத்த நாள் பூனையைக் காரில் ஏற்றிக் கொண்டு வலது புறம்,இடது புறம் என்று மாறி மாறி நீண்ட தூரம் சென்று பூனையை விட்டு வந்தார்.

சிறிது நேரம் கழித்து நாராயணசாமி தன் மனைவிக்கு போன் செய்து கேட்டார்,

"உன் பூனை வீட்டிற்கு வந்து விட்டதா?"

"ஆம்" என்று மனைவி சொல்ல

நாராயணசாமி சொன்னார்,

"போனை பூனையிடம் கொடு...எனக்கு வீட்டிற்கு வர வழி தெரியவில்லை".

:P :P

Relaxplzz

இது கோவிலில் இருக்கும் தூணா, அல்லது தூணில் இருக்கும் கோவிலா.. தூண் என்றால் ஒரு...

Posted: 29 Apr 2015 09:00 AM PDT

இது கோவிலில் இருக்கும் தூணா,
அல்லது தூணில் இருக்கும் கோவிலா..

தூண் என்றால் ஒரு மேற்கூரையை தாங்கி நிற்கும் பொருள் என்பதை தாண்டி, கலை நயம் தாங்கி நிற்கும் கலைசெயல் என்று பொருளாக்கிவிட்டனர் நம் முன்னோர்...

இப்பேற்பட்ட செயல்களை கண்டு தான் "தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்" என பெயர் வந்ததோ...

நாயக்க மன்னர்கள் காலம்.
நெல்லையப்பர் கோயில்.
திருநெல்வேலி மாவட்டம்.

- சசி தரன்

Relaxplzz


"தமிழ் - தமிழர் பெருமை" - 2

:P https://twitter.com/RelaxplzzTamil

Posted: 29 Apr 2015 08:54 AM PDT

என் மனது காயப்பட விரும்பவில்லை அதனால்தான்,,,, யார் மனதையும் காயப்படுத்த விரும்பவ...

Posted: 29 Apr 2015 08:50 AM PDT

என் மனது காயப்பட விரும்பவில்லை அதனால்தான்,,,,
யார் மனதையும் காயப்படுத்த விரும்பவில்லை...

- மீரா @ Relaxplzz


எப்படி யோசிக்கிறாங்க பாருங்க.. நம்ம ஆளுங்க... :O TASMAC= பொருளாக்கம்..!! T- த...

Posted: 29 Apr 2015 08:45 AM PDT

எப்படி யோசிக்கிறாங்க பாருங்க..
நம்ம ஆளுங்க... :O

TASMAC= பொருளாக்கம்..!!

T- தமிழ் நாடு
A- அனைத்து
S- சமுதாயம்
M- மக்களும்
A- அருந்தும்
C- கூல்டிரிங்ஸ் ...

#வெளங்கிரும்

:P :P

Relaxplzz

ஒவ்வொரு அருமையான புகைப்படத்துக்கு பின்னும் இவ்வளவு உழைப்பு இருக்கின்றன.. பிடித்...

Posted: 29 Apr 2015 08:40 AM PDT

ஒவ்வொரு அருமையான புகைப்படத்துக்கு பின்னும் இவ்வளவு உழைப்பு இருக்கின்றன..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 29 Apr 2015 08:32 AM PDT

:P https://twitter.com/RelaxplzzTamil

Posted: 29 Apr 2015 08:20 AM PDT

;D https://twitter.com/RelaxplzzTamil

Posted: 29 Apr 2015 08:12 AM PDT

"இசைஞானியே! என்னோடுசேர்ந்துதான் வெற்றிபெறமுடியும் என்ற நிலையில் நீயும் இல்லை. உ...

Posted: 29 Apr 2015 08:00 AM PDT

"இசைஞானியே!

என்னோடுசேர்ந்துதான்
வெற்றிபெறமுடியும்
என்ற நிலையில் நீயும்
இல்லை.
உன்னோடுசேர்ந்துதான்
வெற்றிபெறமுடியும்
என்ற நிலையில் நானும்
இல்லை.

என் இலக்கியவாழ்க்கையின் இரண்டாம்
பாகத்தைத்தொடங்கிவைத்தவனே!
தூக்கிநிறுத்தியவனே!

உன்னை நினைக்கும்போதெல்லாம் என் மனசின்
ஈரமானபக்கங்களே படபடக்கின்றன.

கொட்டையை
எறிந்துவிட்டு,
பேரீச்சம்பழத்தைமட்டுமேசுவைக்கும்
குழந்தையைப்போல
என்
இதயத்தில் உன்னைப்பற்றிய இனிப்பானநினைவுகளுக்குமட்டுமே இடந்தந்திருக்கிறேன்.

மனைவியின்
பிரிவுக்குப்பிறகு அவள்
புடவையை தலைக்குவைத்துப்படுத்திருக்கும்
காதலுள்ள கணவனைப்போல அவ்வப்போது உன்
நினைவுகளோடு நான்
நித்திரைகொள்கிறேன்.

திரை உலகில் நான் அதிகநேரம்செலவிட்டது
உன்னிடம்தான்.

மனசில் மிச்சமில்லாமல்
பேசிச்சிரித்தது உன்னோடுதான்.

பெண்களைத்தவிர என்
கனவில்வரும் ஒரே ஆண்
நீதான்.

நமக்குள் விளைந்த பேதம்
ஏதோ நகம் கிழித்த கோடுதான்.

ஆனால் நான் கண்ணினும்
மெல்லியவன்;
நகத்தின்
கிழிப்பை என்
விழிப்பை தாங்காது.

பரணில் கிடக்கும்
ஆர்மோனியம் எடுத்து,
தூசுதட்டி,
வாசிப்பதுபோல் உன்
தூசுகளைத்துடைத்துவிட்டு உன்னை
நான் ஆர்மோனியமாகவே
நேசிக்கிறேன்.

நீளமான வருடங்களின்
நீண்ட இடைவெளிக்குப்பிறகு ராஜாஜி ஹாலில்
எம்.ஜி.ஆர். இரங்கல்
கூட்டத்தில் இருவரும்
சந்தித்துக் கொள்கிறோம்.

என்னை நீ
குறுகுறுவென்று
பார்க்கிறாய்.
உன்னை நானும்
பார்க்கிறேன்.

தூண்டிலில் சிக்கிய
மீனாய்த் தொண்டையில்
ஏதோ தவிக்கிறது.

வார்த்தை துடிக்கிறது;
வைராக்கியம்
தடுக்கிறது;

வந்துவிட்டேன்.

அன்று... இரவெல்லாம் உன்
ஞாபகக்கொசுக்கள்
என்னைத்தூங்கவிடவில்லை.

உன்னோடு சேர்ந்தபின்தான்
எத்தனை எத்தனை
மாற்றங்கள் என்னில்.

ஒரேவருஷத்தில்
சூரியனை என் பக்கம்திருப்பி
சுள்ளென்று அடிக்கவைத்தாய்.

இந்த விதைக்குள் இருந்த
விருட்சத்தை வெளியேகொண்டுவந்தாய்.

என் பெயரை
காற்றுக்குச்சொல்லிக்கொடுத்தாய்.

நீதான்... அந்த நீதான்
ஒரு நாள் எனக்கு வக்கீல்
நோட்டீசும் அனுப்பினாய்.

ஒரு கணம் திகைத்தேன்.
வெள்ளைத்தாமரையாய்
இருந்த மனசு கார்பன்தாளாய்க்கறுத்தது.

பிறகு நிதானமாய்
சிந்தித்தேன்.
நீ எனக்குச்செய்த
நன்மைகள்மட்டுமே என்
நினைவுக்குவந்தன.

சினிமாக்கம்பெனிகளின்
முகவரிகளே தெரியாத
அந்த வெள்ளைநாட்களில்
என்னை வீட்டுக்குவந்து
அழைத்துப்போவாயே!

அதை நினைத்தேன்.

நான் கார்வாங்குகிறகாலம்வரை உன் காரில்
என்னை என் வீட்டில்
இறக்கிவிட்டுப்போவாயே!

அதை நினைத்தேன்.

உன் வீட்டிலிருந்து உனக்காகக்காய்ச்சி அனுப்பப்படும்
ஒரு கோப்பைப்பாலில்
எனக்குப்பாதிகொடுக்காமல்
எப்போதும் நீ
அருந்தியதில்லையே!

அதை
நினைத்தேன்.

'ஆயிரம்
தாமரை மொட்டுக்களே'
பாடல்
பதிவாகிமுடிந்ததும்
என்னைப்பரவசத்தோடு
தழுவிக்கொண்டு என்
கன்னங்களை
வருடிக்கொண்டு,
அப்படியே
புகைப்படக்காரரைப்படமெடுக்கச்சொன்னாயே!

அதை நினைத்தேன்.

அந்த நினைவுகளின்
இதமான உஷ்ணத்தில் உன்
வக்கீல்நோட்டீஸ்
எரிந்துபோனது.

எனக்கு எதிராக உன்
பெயரில் ஓர்
அறிக்கை வருகிறது.
இருக்காதே என்று
நினைக்கிறேன்.

பிறகு நண்பர்களுக்குச்சொல்லி நகலைக்கைப்பற்றுகிறேன்.

உன் அறிக்கைதான்.
ஒரு பெண்
வெட்கப்படுவது மாதிரி
இருக்கும் உனது
கையெழுத்தேதான்.

படித்தேன்.
சிரித்தேன்.
கிழித்தேன்.
வேறோரு கோணத்தில்
நினைத்தேன்.

உன் எழுத்தில் இந்த
உஷ்ணம் இருந்தால் உன்
இருதய அடுப்பில்
எத்தனை விறகு
எரிந்திருக்கும்!

உன் உள்ள
உலை எத்தனை முறை
கொதித்திருக்கும்!

காரணமே இல்லையே.

இது இருதயத்திற்கு
ஆகாதே.

நண்பர் கமல்ஹாசன்
என்னை அழைத்து அவரது
புதிய சரித்திரப்படத்துக்கு வசனம் எழுதச்சொல்கிறார்.

சந்தோஷத்தோடு 'சரி'
என்கிறேன்.

ஆனால் லோக்சபையின்
தீர்மானத்தை ராஜ்யசபா
அடித்துவிடுவது மாதிரி
நீ தடுத்துவிடுகிறாய்.

இப்படியெல்லாம்
அடிக்கடி நான்
சிரித்துக்கொள்ள
சந்தர்ப்பம்தருகிறாய்.

நான் எப்போதும்
நேசிக்கும் இனியவனே!

இப்போது சொல்கிறேன்.
உனது பட்டறையில்
எனக்கெதிராய் அம்புகள்
மட்டுமே
தயாரிக்கப்படுகின்றன.

ஆனால் எனது யுத்தத்தொழிற்சாலையில்
கவசங்கள்மட்டுமே தயாரிக்கவேண்டும் என்று
கட்டளையிட்டிருக்கிறேன்.

ஏனென்றால்,
என்னை எதிரியாக நீ
நினைக்கிறாயே தவிர
உன்னை எதிரியாக நான்
நினைக்கவில்லை.

உன்னை நான்
பிரிந்தோ என்னை நீ
பிரிந்தோ அல்லது
பிரிக்கப்பட்டோ நாம்
தனித்துநின்றசமயம்
உனக்கு வேண்டாதவர்கள்
சிலர் என்
வீட்டுக்குவந்தார்கள்.

உனக்கெதிரான அவர்களின்
கூட்டணிக்கு என்னைத்தலைமையேற்க
சொன்னார்கள்.

நான் கொதித்தேன்.

"அவன் சிங்கம். நானும்
சிங்கம்.
சிங்கத்துக்கும்
சிங்கத்திற்குமே யுத்தம்.
நரிகளின்
கூட்டணியோடு சிங்கங்கள்
போர்க்களம்
புகுவதில்லை"

என்று சீறிச்சினந்து "போய்
வாருங்கள்" என்றேன்.

மறுகணம் யோசித்து,
வார்த்தைகளில்
பாதியை வாபஸ்
வாங்கிக்கொண்டு,
"போங்கள்" என்றேன்.

நீ வீழ்ந்தாலும் -
வீழ்த்தப்பட்டாலும்
எனக்கு சம்மதமில்லை.

இவ்வளவு உயரத்தில்
ஏறியிருக்கும்
ஒரு தமிழன்
உருண்டுவிடக்கூடாது.

நீயும் நானும் சேரவேண்டுமாம்.
சில தூய இதயங்கள்
சொல்லுகின்றன.

உனக்கு
ஞாபகமிருக்கிறதா?
'ஈரமான ரோஜாவே'
எழுதி முடித்துவிட்டு
ஆழியாறு அணையின்
மீது நடந்துகொண்டிருந்தோம்.

திடீரென்று என்னை நீ
துரத்தினாய்; நான்
ஓடினேன். நீ
துரத்திக்கொண்டேயிருந்
தாய்; நான்
ஓடிக்கொண்டேயிருந்தே
ன்.

மழை வந்தது.
நின்றுவிட்டேன்.
என்னை நீ
பிடித்துவிட்டாய்.

அப்போதுசேர்ந்து
விட்டோம்.

ஏனென்றால் இருவரும்
ஒரேதிசையில் ஓடிக்கொண்டிருந்தோம்.

இப்போது முடியுமா?
இருவரும்
வேறுவேறு திசையிலல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்?"

#இந்தக்குளத்தில்_கல்லெறிந்தவர்கள்

- - வைரமுத்து

Relaxplzz

https://twitter.com/RelaxplzzTamil


எழுத்தாளர் வரிகள் சில

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 29 Apr 2015 07:50 AM PDT

கல்யாணத்துக்கு முன்னாடி யாரையாவது லவ் பண்ணியா? (அமைதி) சாரி ஹர்ட் பண்ணிட்டேனா?...

Posted: 29 Apr 2015 07:45 AM PDT

கல்யாணத்துக்கு முன்னாடி யாரையாவது லவ் பண்ணியா?

(அமைதி)

சாரி ஹர்ட் பண்ணிட்டேனா?
.

.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
யோவ் இருயா1,2,3எண்ணிட்டு இருக்கேன்ல,ப்ச் இப்பதிரும்ப எண்ணனும்

- iamVariable

:P :P

Relaxplzz

:D https://twitter.com/RelaxplzzTamil

Posted: 29 Apr 2015 07:41 AM PDT

போராடி வாழ்ந்துவிடு (y)

Posted: 29 Apr 2015 07:32 AM PDT

போராடி வாழ்ந்துவிடு (y)


போராடி வாழ்ந்துவிடு (y)

குப்பைகளை போட தெரிந்த மனிதனுக்கு, ஒரு விதையை போட தெரிந்துகொள்ள மனமில்லை... - ரா...

Posted: 29 Apr 2015 07:31 AM PDT

குப்பைகளை போட தெரிந்த மனிதனுக்கு,
ஒரு விதையை போட தெரிந்துகொள்ள மனமில்லை...

- ராதிகா தமிழச்சி


ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 2

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 29 Apr 2015 07:21 AM PDT

:P https://twitter.com/RelaxplzzTamil

Posted: 29 Apr 2015 07:12 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 29 Apr 2015 07:06 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 29 Apr 2015 06:54 AM PDT

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 29 Apr 2015 06:31 AM PDT

இன்னும் கொஞ்ச காலத்திலே முதுகு எலும்பு பற்றி தெரியும்... :)

Posted: 29 Apr 2015 06:20 AM PDT

இன்னும் கொஞ்ச காலத்திலே முதுகு எலும்பு பற்றி தெரியும்... :)


ஒருவர்:- "எனக்கு வாய்ச்ச மனைவியும் சரி, எனக்கு வந்திருக்கிற சர்க்கரை வியாதியும்...

Posted: 29 Apr 2015 06:10 AM PDT

ஒருவர்:- "எனக்கு வாய்ச்ச மனைவியும் சரி, எனக்கு வந்திருக்கிற சர்க்கரை வியாதியும் சரி, இரண்டுமே ஒண்ணுதான்"!..

மற்றவர்:- "ஓ!.. இரண்டுமே அவ்வளவு ஸ்வீட்டுன்னு சொல்ல வர்றீங்களா"..?

ஒருவர்:- "அட நீங்க வேற!... இரண்டையுமே என்னால கன்ட்ரோல் பண்ண முடியலேன்னு சொல்ல வர்றேன்"...!

மற்றவர்:-?😈?😈?😈?😈?😈?😈?😈?😈? :O :O

Relaxplzz

தஞ்சாவூர் 100 வருடத்திற்கு பின் நடைபெறவிருக்கும் தேரோட்ட விழா

Posted: 29 Apr 2015 06:00 AM PDT

தஞ்சாவூர் 100 வருடத்திற்கு பின் நடைபெறவிருக்கும் தேரோட்ட விழா


ஜனவரியில நிப்பாட்டிருவேன் பிப்ரவரியில நிப்பாட்டிருவேன் என்று சொல்லும் குடிவெறியர...

Posted: 29 Apr 2015 05:51 AM PDT

ஜனவரியில நிப்பாட்டிருவேன் பிப்ரவரியில நிப்பாட்டிருவேன் என்று சொல்லும் குடிவெறியர்கள் கடைசியில் மார்ச்சுவரியில் தான் நிறுத்துகிறார்கள் !


#ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 5

:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 29 Apr 2015 05:40 AM PDT

Posted: 29 Apr 2015 05:36 AM PDT


:) https://twitter.com/RelaxplzzTamil

Posted: 29 Apr 2015 05:30 AM PDT

குழந்தைகளுக்கு நூடுல்ஸ் கூடவே கூடாது.! கம்பும், கேழ்வரகும், சாமையும் சமைத்து சா...

Posted: 29 Apr 2015 05:20 AM PDT

குழந்தைகளுக்கு நூடுல்ஸ் கூடவே கூடாது.!

கம்பும், கேழ்வரகும், சாமையும் சமைத்து சாப்பிட்ட மக்கள் படிப்படியாக அரிசி, கோதுமைக்கு மாறினார்கள். அதையும் விடுத்து இன்றைக்கு எந்தவித சத்துமே இல்லாத துரித உணவுகளை சாப்பிட்டு சத்துக்களற்ற மனிதர்களாக மாறிவருகின்றன. பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு காய்கறியும், முட்டையும் சமைத்து கொடுத்த காலம் போய், நூடுல்ஸ், பாஸ்தா, ப்ரட் டோஸ்ட் ஜாம் என டப்பாக்களில் அடைத்து அனுப்புகின்றனர் அன்னையர்.

இந்த உணவுகள் இரண்டு நிமிடங்களில் தயாராகிவிடுகிறது என்னவோ உண்மைதான். ஆனால் அதனை சாப்பிடக் கொடுப்பதன் மூலம் ஆரோக்கியமற்ற சமுதாயத்தை உருவாக்கிவிடுகிறோம் என்பதே நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கை.

குப்பையில் போடுங்கள்

ஒரு பாக்கெட் 10 ரூபாயில் தொடங்கி பாக்கெட் பாக்கெட்டாக வீட்டில் வாங்கி அடுக்கி வைத்திருக்கும் நூடுல்ஸை குப்பையில் போடும் உணவு என்று கூறுகின்றன ஆராய்ச்சிகள். என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா? மேலே படியுங்கள்.

ஆதாரத்தோடு நிரூபணம்

விளம்பரங்களால் இந்தியச் சந்தையை ஆக்கிரமித்து எண்ணற்ற வீடுகளில் காலை உணவாகிவிட்ட நூடுல்ஸ், உண்மையிலேயே சத்தான உணவுதானா என்று தெரிந்துகொள்ள விரும்பினார் அகமதாபாத்தைச் சேர்ந்த நுகர்வோர் விழிப்பு உணர்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைமைப் பொது மேலாளர் ப்ரீத்தி ஷா. இவர் 'இன்சைட்' என்கிற நுகர்வோர் விழிப்பு உணர்வு இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.

என்ன சத்துக்கள் இருக்கு?

இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் 15 நிறுவனங்களின் நூடுல்ஸ்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. நூடுல்ஸில் இவ்வளவு சத்துக்கள் இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இதற்கான அளவு மதிப்பீடுகள் ஏதும் இதுவரை வரையறுக்கப்படாததால், இங்கிலாந்தின் உணவுத் தரக் கட்டுப்பாட்டு முகமையின் அளவுகளை வைத்து இந்தத் தரச்சோதனை நடந்தது.

உடலுக்கு கெடுதல்தான் வரும்

குழந்தைகளை நூடுல்ஸ் சாப்பிட வைக்க கோடி கோடியாய் கொட்டி விளம்பரம் செய்கின்றன நிறுவனங்கள். ஆனால் எந்த முன்னணி நிறுவனங்களின் நூடுல்ஸும் விளம்பரங்களில் காட்டப்படுவதுபோல சத்துக்கள் அடங்கியதாக இல்லை. மாறாக குழந்தைகள் உடல் நலனுக்கு முற்றிலும் கெடுதல் ஏற்படுத்தக்கூடியதாகவே இருக்கிறது.

குறைவான சத்துக்கள்

குழந்தைகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் தேவையான கால்சியம், புரதம், நார்ச்சத்து ஆகியவை நூடுல்ஸ்சில் மிக மிக குறைந்த அளவிற்கே உள்ளன.

அதிக உப்பு இருக்கு

ஆனால் எல்லா பிராண்ட் நூடுல்ஸ்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் எக்கச்சக்க மடங்கு அதிகமாக உப்பு மற்றும் கொழுப்பு உள்ளன.

நூறு கிராம் நூடுல்ஸில் 130 முதல் 600 மில்லி கிராம் வரை அனுமதிக்கப்பட்ட சோடியம் அளவுதான் இருக்கவேண்டும். ஆனால், இந்தியாவில் விற்கப்படும் வெவ்வேறு நூடுல்ஸ் நிறுவனங்களின் தயாரிப்புகளில் 821 மில்லி கிராம் முதல் 1943 மில்லி கிராம் வரை சோடியம் இருக்கிறது.

அதிக கொழுப்பு இருக்கு

இந்த நூடுல்ஸ் உணவில் கொழுப்பும் மிகுதியாக உள்ளது. இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிதல், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் எனப் பல்வேறு ஆபத்துகளுக்கும் குழந்தைகள் ஆளாக நேரிடும்.

அலட்சியம் காட்டும் நிறுவனங்கள்

இந்த நிறுவனங்கள் தங்களின் வருமானத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்படுகின்றனவே தவிர வருங்கால சந்ததியினரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை. கம்பு, வரகு, சாமை, தினை, கேழ்வரகு என்று எவ்வளவோ சத்து மிக்க சிறுதானியங்கள் விளைந்த மண் விலை நிலமாக மாறிய காரணத்தால் குப்பைகளை கூட உணவுகளாக பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்கின்றன நிறுவனங்கள் என்று ஆதங்கப்படுகின்றனர் ஆய்வாளர்கள்.

கடிதம் அனுப்பிய ஆய்வாளர்கள்

இது தொடர்பாக விளக்கம் கேட்டு 15 நிறுவனங்களுக்கும் ஆய்வு நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பியும் அதை அலட்சியம் செய்துவிட்டன அந்த நிறுவனங்கள். இதுவரை அந்தக் கடிதங்களுக்கு எந்த நிறுவனமும் பதில் அளிக்கவில்லை.

விஷத்தை உணவாகக் கொடுக்கிறோம்

எந்தவித சத்துமே இல்லை என்று ஆய்வாளர்கள் கத்தி கதறினாலும் விளம்பரங்கள் மூலம் அவற்றை இருட்டடிப்பு செய்து விடுகின்றன நிறுவனங்கள். இதனால் குழந்தைப் பருவத்தில் இதுபோன்ற உணவுகளுக்கு அடிமையாகிவிடுகின்றனர் வருங்கால இந்திய சமுதாயத்தினர்.

நிரந்தர நோயாளிகளாக…

மசாலா கலந்த இந்த நூடுல்ஸ் வெறும் குப்பைதான் என்பதை ஒவ்வொரு இந்தியத் தாயும் உணரவேண்டும். இல்லை எனில் நாளை நம் குழந்தைகள் நிரந்தர நோயாளிகளாக மாற நாமே காரணம் ஆகிவிடுவோம் என்கின்றனர் நிபுணர்கள்.

இதனால்தான் என்னோட குழந்தைகளுக்கு நான் நூடுல்ஸ் தர்றதில்லை. அதோட ருசியையும் பழக்கினதில்லை. உங்க வீட்ல எப்படி?

- Dr.Lalithakrishnamoorthy

Relaxplzz

0 comments:

Post a Comment