Monday, 13 April 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


:) Relaxplzz

Posted: 13 Apr 2015 09:15 AM PDT

படித்ததில் ரசித்தது நமக்கு பிடிச்சவங்க மேல ரொம்ப கோவம் இருந்தாலும் அவங்க கிட்ட...

Posted: 13 Apr 2015 09:10 AM PDT

படித்ததில் ரசித்தது

நமக்கு பிடிச்சவங்க மேல ரொம்ப கோவம்
இருந்தாலும் அவங்க கிட்ட பேசாம நம்மளால இருக்க முடியாது...

அதே நேரம் பேசவும் மனசு வராது mobile display ல
அவங்க name தான் இருக்கும்

call பண்ணலாமா வேண்டாமான்னு 1000
முறை யோசிப்போம் . . .

ஏன் sometimes call பண்ணிட்டு ring
போறதுக்கு முன்னாடி cut
பண்ணிடுவோம்

அந்த time அவங்க நமக்கு call
பண்ணினா செம்ம happy ah feel
பண்ணுவோம்....

but பேசும்
போது என்னவோ கோவமா இருக்குற
மாறி தான் பேசுவோம்

but actual fact என்னன்னா அவங்க call
பண்ணதுமே நம்ம கோவம் போய்டும்.

:) :)

Relaxplzz

:) Relaxplzz

Posted: 13 Apr 2015 09:07 AM PDT

ஏப்ரல் 13: ஜாலியன்வாலாபாக் படுகொலை நடைபெற்ற தினம் - சிறப்பு பகிர்வு ஆங்கிலேயரே...

Posted: 13 Apr 2015 09:00 AM PDT

ஏப்ரல் 13: ஜாலியன்வாலாபாக் படுகொலை நடைபெற்ற தினம் - சிறப்பு பகிர்வு

ஆங்கிலேயரே ஆண்டிருக்கலாம் என்பவர்கள், இந்தச் சம்பவத்தையும், அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளையும் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்.

ஆங்கிலேய அரசு 1919இல் ரவுலட் சட்டத்தை கொண்டு வந்தது. விசாரணையே இல்லாமல், காரணமே சொல்லாமல் இந்தியர்களை கைது செய்ய முடியும் என கொடிய நடைமுறையை ஆங்கிலேய அரசு அறிவித்தது. பஞ்சாபில் முக்கியமான தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். ரவுலட் சட்டத்தை பயன்படுத்தி 581 பேர் கைது செய்யப்பட்டார்கள் ; நூற்றி ஏழு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது,264 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

கூடவே ஆங்கிலேயர் ஒரு தெருவில் தோன்றினால் அவருக்கு தலை குனிந்து வணக்கம் செலுத்த வேண்டும் ; தவழ்ந்தும் செல்ல வேண்டும். தவறினால் கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டது. சில இடங்களில் வன்முறைகளும் வெடித்தன. காந்தியடிகள் அமிர்தசரஸ் நகருக்குள் நுழைய தடை வேறு விதிக்கப்பட்டு இருந்து. சத்யபால் கிட்ச்லு எனும் இரு தலைவர்களை நாடு கடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதை எதிர்த்து ஜாலியன் வாலா பாக்கில் கூட்டம் நடந்தது.

அன்றைக்கு சீக்கியர்களின் பண்டிகையான பைசாகி திருநாள் அதற்காகவும் எண்ணற்ற மக்கள் கூடியிருந்தார்கள். பஞ்சாபில் நிலைமை கொதிநிலையில் இருக்கிறது புரட்சி வர வாய்ப்பிருக்கிறது என அம்மாகாணத்தின் காவல் துறை அதிகாரி ரெஜினால்ட் ஓ டயர் முடிவு செய்தான். பார்க்கில் 20,000 மக்கள் கூடியிருந்தார்கள். தொன்னூறு பேர் கொண்ட படைகளோடு வாகனங்களில் மெஷின் கன்களை எடுத்துக்கொண்டு வந்தது அவன் படை.

வெளியேற வழியாக இருந்த ஒரே குறுகலான பாதையை அடைத்து கொண்டார்கள். எந்த வித எச்சரிக்கையும் கொடுக்காமல் எந்த அறிவிப்பும் இல்லாமல் இந்தியர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு ரெஜினால்ட் ஒ டயர் உத்தரவு தர, ஐம்பது பேர் கொண்ட படை அப்பாவி மக்கள் நோக்கி 1,650 ரவுண்டுகள் சுட்டது. மக்கள் செத்து விழுந்தார்கள். பல பேர் கிணற்றில் விழுந்து இறந்து போனார்கள். நெரிசலிலும் பலபேர் இறந்து போனார்கள். அதிகாரப்பூர்வ மதிப்பீடு 379 பேர் இறந்தார்கள்; ஆயிரத்தி இருநூறு பேர் காயமடைந்தார்கள் என்றது. ஆங்கிலேயே மருத்துவரே எண்ணிக்கை ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என்றார்.

மாகாண ஆளுநர் மைக்கேல் டயர் ரெஜினால்ட் டயர் செய்ததை சரி என்று ஆதரித்தான். "நீங்கள் செய்த செயல் சரியானது. அதை நான் அங்கீகரிக்கிறேன்'' என்று சொன்னான். ஹண்டர் கமிஷன் இந்நிகழ்வை விசாரிக்க அமைக்கப்பட்டது. ''நான் மக்களைச் சுட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டுதான் வந்தேன். மெஷின் கன்களை வைத்திருந்த வாகனங்கள் உள்ளே வரும் அளவுக்கு இடமில்லை. இல்லையென்றால் இன்னமும் பல பேரை கொன்றிருப்பேன். மேலும், இதில் எந்த வருத்தமும் இல்லை. அவர்களை நான் எச்சரித்திருக்கலாம். ஆனால் ,அப்படி எச்சரித்து துரத்தி இருந்தால் மீண்டும் வந்து என்னைப் பார்த்து சிரித்து இருப்பார்கள். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு போக நான் எண்ணவில்லை. அது என் வேலையும் இல்லை. சுட்டேன் சுட்டேன் இந்தியர்களை இந்திய மண்ணிலேயே சுட்டேன்'' என டயர் கொக்கரித்தான். மேலும் குண்டுகள் தீர்ந்து போய் விட்டதாலேயே இவ்வளவு கம்மியான மக்களை கொல்ல முடிந்ததாக வருத்தமும் தெரிவித்தார் டயர்.

பெரும் நெருக்கடியின் காரணமாக வெறுமனே பதவியை விட்டு மட்டும் அனுப்பினார்கள். பதவியை விட்டு நீக்கப்பட்ட பொழுதும் பல லட்சம் ரூபாயை அவன் செய்த அற்புத செயலுக்கு ஆங்கிலேயர்கள் நிதி திரட்டி கொடுத்தார்கள்.மார்னிங் போஸ்ட் பத்திரிக்கை 26,000 பவுண்டுகள் திரட்டி அந்த கொலை பாதகத்தை கொண்டாடியது. இங்கிலாந்து நாடாளுமன்றம் அச்செயலை ஆதரித்து தீர்மானம் வேறு போட்டது.

உத்தம் சிங்…

இந்த படுகொலையை நேரில் பார்த்த உத்தம் சிங் இரு அதிகாரிகளையும் கொல்ல உறுதி பூண்டான். நேரடியாக இங்கிலாந்து போகாமல் கென்யா, ஆஸ்திரியா, அமெரிக்கா, ஜெர்மனி என அலைந்து அவனை கொல்ல இங்கிலாந்து சென்றார். பன்றி தொழுவத்தில் வேலை பார்த்தார். பசி வாட்டி எடுக்க இருபாதாண்டு கால வெறியை அடக்கி வைத்திருந்தார். ரெஜினால்ட் ஒ டையர் ஏற்கனவே இறந்து போக இயற்கை முந்திக்கொண்டது என வருத்தப்பட்டார்.

காக்ஸ்டன் ஹாலுக்கு மைக்கேல் டயர் மற்றும் ஜெட்லாண்ட் எனும் இந்திய விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் ஆகியோரை வந்ததும் குறிபார்த்து ஆறு முறை சுட்டார். இறந்து போனான் டயர் . அந்த வேலை முடிந்ததும் கம்பீரமாக ஓடாமல் அங்கேயே நின்ற உத்தம் சிங் ,"என்னுடைய வேலை முடிந்தது ; என் நெஞ்சின் கனல் தணிந்தது !" என்று அறிவித்தார்.

கோர்ட் படியேறிய பொழுது ,"டயர் தூக்கு தண்டனைக்கு உரியவன் அதைத்தான் நான் தந்தேன் !" என்று உறுதிபட சொன்னார் உத்தம் சிங். தன் பெயரை கேட்டபொழுது "ராம் முகம்மது சிங் ஆசாத் " எனச் சொல்லி மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் நாங்கள் என புரியவைத்தான்.

''சுட்டேன் சுட்டேன்… ஆங்கிலேயனை ஆங்கிலேய மண்ணில் சுட்டேன்!"என்று சொல்லி கம்பீரமாக தூக்கு மேடை ஏறினான் அந்த வீரன். தன்னுடைய பிணம் ஆங்கிலேய மண்ணில் புதைக்கப்படக்கூடாது என்கிற அளவுக்கு தேசபக்தி ஊறியிருந்தது அவரிடம். டைம்ஸ் பத்திரிக்கை சுதந்திர போராட்ட வீரன் அவர் என்று புகழாரம் சூட்டியது. யானை போல பழி வாங்காமல் ஓயமாட்டார்கள் இந்தியர்கள் என்று ஜெர்மனி வானொலி அறிவித்தது.

அவனன்றோ இளைஞன். சமீபத்தில் இங்கிலாந்தின் பிரதமர் கேமரூன், இந்தியா வந்தபொழுது அந்நிகழ்வுக்கு மன்னிப்பு கேட்காமல் ஆங்கிலேய அரசு உறுதியாக இருப்பது சரியே என்கிற தொனியில் பேசினார் என்பது கூடுதல் தகவல். ஜாலியன்வாலாபாக் படுகொலை நடைபெற்ற தினம் ஏப்ரல் 13

- பூ.கொ.சரவணன்

Relaxplzz


<3 Relaxplzz

Posted: 13 Apr 2015 08:55 AM PDT

சாமிக்கு மாலை போட்டிருந்தாலும், சாமியே வண்டி ஓட்டினாலும் "தலைக்கவசம் என்பது உயிர...

Posted: 13 Apr 2015 08:50 AM PDT

சாமிக்கு மாலை போட்டிருந்தாலும்,
சாமியே வண்டி ஓட்டினாலும் "தலைக்கவசம் என்பது உயிர்க்கவசம்"


(y) Relaxplzz

Posted: 13 Apr 2015 08:46 AM PDT

இப்படி ஒரு வீட்டில் இருக்க பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 13 Apr 2015 08:40 AM PDT

இப்படி ஒரு வீட்டில் இருக்க பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


கல்யாண் ஜூவல்லரி விளம்பரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் ஆவி கிராஃபி...

Posted: 13 Apr 2015 08:35 AM PDT

கல்யாண் ஜூவல்லரி விளம்பரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் ஆவி கிராஃபிக்ஸ் வடிவில் நடிக்காமலிருக்க எல்லாவல்ல இறைவனை வேண்டுகிறேன்!

- விழுதுகள் நாகை மாவட்டம்

:) Relaxplzz

Posted: 13 Apr 2015 08:25 AM PDT

:) Relaxplzz

Posted: 13 Apr 2015 08:16 AM PDT

மூன்று இளம் பெண்கள் ஒரு ஆணைக் காதலித்தனர்.... அவர் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்க எண...

Posted: 13 Apr 2015 08:05 AM PDT

மூன்று இளம் பெண்கள் ஒரு ஆணைக் காதலித்தனர்....
அவர் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்க எண்ணினார்....

அவர் மூன்று பெண்களிடமும் ரூ.5000 கொடுத்து ஒவ்வொருவரும் இதனை செலவிட்டு வாருங்கள் என்று அவர்களை சோதிக்க எண்ணினார்....
.
.
.
.
.
.
முதல் பெண் நிறைய
புதிய ஆடைகள் மற்றும் மேக்கப் சாதனங்களை வாங்கி தன்னை அலங்கரித்துக் கொண்டு, அவர் பார்வைக்கு நான் அழகாயிருப்பேன் எனத் தனக்குத்தானே கூறிக்கொண்டாள்....

இரண்டாவது பெண் செலவு செய்து அவருக்கு சட்டைகள் மற்றும் வாசனை திரவியங்கள் வாங்கி வைத்து, அவருக்காக எல்லாவற்றையும் வாங்கினேன் எனக் கூறிக்கொண்டாள்....

மூன்றாவது பெண் பணத்தை முதலீடு செய்தாள், இலாபம் கிடைத்தது, இலாபத்தை சேமிப்பில் வைத்துவிட்டு அசல் ரூபாயை அவரிடம் ஒப்படைக்க எண்ணினாள்,
இலாபத்தொகை அவர்களின் எதிர்கால சேமிப்புக்கு உதவும் என எண்ணினாள்....
.
.
இறுதியாக மனிதன் அப்பெண்களில் ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்....
.
.
.
.
.
.
.
.
யாரை தேர்ந்தெடுத்திருப்பார்????
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.மேக்கப் போட்டுட்டு வந்த முதல் பெண்ணைத்தான்,
அவள் ரொம்பவும் அழகாக இருந்தாள் .... :P :P
.
.
..நீதி : "ஆண்கள் எப்போதும் அழகை ஆராதிப்பவர்கள் "
A Male is always a Male :P :P

சிரிக்க மட்டும் , சண்டைக்கெல்லாம் வரப்பிடாது ;-) நானும் எங்க ஏரியால ரவுடிதான் :P :P

Relaxplzz


குசும்பு... 5

:) Relaxplzz

Posted: 13 Apr 2015 07:57 AM PDT

ஒரு சிறு புன்னகையை முகத்தில் வைத்திருங்கள் ! அது நீங்கள் எதிர் கொள்ளும் பிரச்னை...

Posted: 13 Apr 2015 07:50 AM PDT

ஒரு சிறு புன்னகையை முகத்தில் வைத்திருங்கள் !

அது நீங்கள் எதிர் கொள்ளும் பிரச்னையை பாதி ஆக்கி விடும் .....


:) Relaxplzz

Posted: 13 Apr 2015 07:46 AM PDT

நம் இளமைகாலங்களில் நம்மை அசர வைத்த இந்த பைக்கை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)

Posted: 13 Apr 2015 07:40 AM PDT

நம் இளமைகாலங்களில் நம்மை அசர வைத்த இந்த பைக்கை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.. (y)


:) Relaxplzz

Posted: 13 Apr 2015 07:39 AM PDT

:) Relaxplzz

Posted: 13 Apr 2015 07:29 AM PDT

கைக்குழந்தையின் தும்மலை விட அழகானவள் அவள்! கவித ..! கவித..! <3 <3 - கில்லர்

Posted: 13 Apr 2015 07:20 AM PDT

கைக்குழந்தையின்
தும்மலை விட
அழகானவள்
அவள்!

கவித ..! கவித..!
♥ ♥

- கில்லர்


:) Relaxplzz

Posted: 13 Apr 2015 07:09 AM PDT

:) Relaxplzz

Posted: 13 Apr 2015 07:02 AM PDT

விஜயவாடாவில் மாமியார் வீட்டில் மருமகனுக்கு வைத்த விருந்தைப் பாருங்க!(இது போதுமா...

Posted: 13 Apr 2015 06:58 AM PDT

விஜயவாடாவில் மாமியார் வீட்டில் மருமகனுக்கு வைத்த விருந்தைப் பாருங்க!(இது போதுமா - மாப்ளே?)


சும்மா... சும்மா... 5

:P Relaxplzz

Posted: 13 Apr 2015 06:40 AM PDT

:) Relaxplzz

Posted: 13 Apr 2015 06:30 AM PDT

:) Relaxplzz

Posted: 13 Apr 2015 06:22 AM PDT

அருமையான ஓவியம்.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 13 Apr 2015 06:00 AM PDT

அருமையான ஓவியம்..

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


;-) Relaxplzz

Posted: 13 Apr 2015 05:50 AM PDT

தெருமுக்கு வரைக்கும் புடவை,நகைய பத்தி பேசிட்டு சாவுவீடு வந்ததும் "என்ன பெத்த ஐயா...

Posted: 13 Apr 2015 05:45 AM PDT

தெருமுக்கு வரைக்கும் புடவை,நகைய பத்தி பேசிட்டு சாவுவீடு வந்ததும் "என்ன பெத்த ஐயா"னு அழும் பெண்கள் தேசியவிருதுக்கு தகுதியானவர்கள்

#எழவுடிவிட்

- ℳr.சித்தர்

:) Relaxplzz

Posted: 13 Apr 2015 05:40 AM PDT

மனதைக் கரைத்து விட்டது இந்த அழகான கதை " 'நம் உடம்பிலே மிக முக்கியமான உறுப்பு' எ...

Posted: 13 Apr 2015 05:30 AM PDT

மனதைக் கரைத்து விட்டது இந்த அழகான கதை

" 'நம் உடம்பிலே மிக முக்கியமான உறுப்பு' என்ற தலைப்பில் ஆசிரியர் தன் மாணவர்களை ஒரு கட்டுரை எழுதச் சொன்னார்.

அந்த வகுப்பில் உடல் ஊனமுற்ற ஒரு சிறுமியும் இருந்தாள். கட்டுரைக்கான தலைப்பே அவளுக்கு பிடிக்கவில்லை. தவிர, சக மாணவர்கள் அந்தச் சிறுமியின் ஊனத்தைச் சொல்லி கிண்டல் செய்ய.. அன்றைய வகுப்பு பாவம் அவளுக்கு நரகமாகக்
கழிந்தது.

மாலை வீடு திரும்பியதும் அந்தச் சிறுமி தன் தாயின் தோள்களில் சாய்ந்து அழுதபடியே கேட்டாள்..
"நம் உடம்பில் முக்கியமான உறுப்பு எதும்மா?"

"உடம்பிலே கண் தான் மா முக்கிய உறுப்பு! ஏன் என்றால், கண் இல்லையெனில் உலகமே இருட்டாகி விடுமே" என்று சொன்னாள் அம்மா.

ஆனால், அதைச் சரியான பதிலாக அந்தச் சிறுமியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

"அப்படியானால் கைகள் தான் முக்கியமான உறுப்பு. அது இல்லையென்றால் நம்மால் எழுதவோ, வேறு எந்த வேலையும் செய்ய முடியாது இல்லையா" ..

அம்மாவின் இந்த பதிலையும் சிறுமியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

கடைசியில் அந்தச் சிறுமியே ஒரு பதிலைச் சொன்னாள்.."

நம் உடம்பில் தோள்கள் தான்மா முக்கியமான உறுப்பு. மற்ற உறுப்புக்கள் எல்லாம் நமக்கு உதவியாக இருக்கும்.
ஆனால், தோள்கள் தான் ஆதரவு தேடும் அன்பு முகங்கள் புதைந்து கொள்ள இடம் கொடுக்கும். இதோ, நான் கூட இப்போது உன் தோள்களிலே முகம் புதைந்து அழுகிறேன்.

என்னைப் பொறுத்தவரை அடுத்தவர் அழுவதற்கு இடம் கொடுக்கும் தோள்கள் தான் உடம்பிலே முக்கியமான உறுப்பு!"

Relaxplzz


"நீதி கதை"

0 comments:

Post a Comment