Sunday, 12 April 2015

Interesting Tamil Facebook posts

Interesting Tamil Facebook posts


சுகமான வலிகளை தரும் பள்ளி தருணங்கள்.... 》அம்மாவிடம் இருந்து பிரிந்து போக முடியாம...

Posted: 12 Apr 2015 07:30 AM PDT

சுகமான வலிகளை தரும் பள்ளி தருணங்கள்....
》அம்மாவிடம் இருந்து பிரிந்து போக முடியாமல் அழுத தருணம்
》நாலு பேர் சேர்ந்து நம்மை பள்ளிக்கு இழுத்து சென்றாலும் நம் வீட்டையே திரும்பி திரும்பி பார்த்த தருணம்
》வேர்வையை சட்டையிலே துடைத்துவிட்டு விளையாடிய தருணம்
》ஆசிரியர் அடித்தால் வலிக்க கூடாது என்பதற்காக இரண்டு கால்சட்டையை போட்டு பள்ளிக்கு சென்ற தருணம்
》என்னிடம் ரப்பர் வைத்த பென்சில் இருக்கிறது என பெருமைபட்ட தருணம்
》புதிதாக வாங்கிய பேனாவை நண்பனிடம் காட்டி சந்தோஷபட்ட தருணம்
》வகுப்பு நடைபெறும் போது நண்பனிடம் புத்தக கிரிக்கெட் விளையாடின தருணம்
》நண்பர் மை இல்லாமல் தவிக்கும் போது பெஞ்சின் மேல் மை தெளித்து உதவிய தருணம்
》போர்டில் நம்ம பெயர் மி.மி.அ என்ற பட்டத்துடன் இருந்தால் நான் தாம்ல இந்த வகுப்புக்கு ரவுடி என சொல்லிக்கொண்ட தருணம் (மி.மி.அ- மிக மிக அடங்கவில்லை)
》சனி,ஞாயிறு விடுமுறை என்றாலும் மழைக்காக விடுமுறை விட்டால் அளவில்லாத சந்தோஷத்தில் துள்ளி குதித்திருப்போம்
》எல்லா நாட்களும் தாமதமாக செல்லும் நாம் பிறந்த நாள் என்றால் மட்டும் சீக்கிரமாவே பள்ளிக்கு செல்ல துடித்திருப்போம்... விடுமுறை நாளில் பிறந்த நாள் வந்தால் வருத்தப்படுவோம்
》அனைவரது சாப்பாட்டையும் சாதி,மத பேதம் பார்க்காமல் பகிர்ந்து உண்டு மகிழ்ந்தோம்
ஒன்பது மணி ஆனால் வருத்தப்பட்டோம், நான்கு மணி ஆனால் சந்தோஷபட்டோம்... இப்போ அந்த நாளுக்காக ஏங்கி நிற்கின்றோம்...!!!
இதை நீங்கள் அனுபவித்திருந்தால் பகிருங்கள்.


எப்பொழுதும் ஃபேஸ்புக்கில் இருப்பவரா நீங்கள்? மன அழுத்தத்தால் பாதிப்பு வரலாம் * ந...

Posted: 12 Apr 2015 06:34 AM PDT

எப்பொழுதும் ஃபேஸ்புக்கில் இருப்பவரா நீங்கள்? மன அழுத்தத்தால் பாதிப்பு வரலாம்
* நீங்கள் எவ்வித நோக்கமும் இல்லாமல் ஃபேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுகிறீர்களா?
* உங்களது விழிகள் திரையை விட்டு நீங்காமல் இருக்கின்றதா?
அப்படி என்றால் நீங்கள் மன அழுத்தத்தை உள்ளாகும் அபாயத்துக்கான அறிகுறிகள் உங்களிடம் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதிக நேரம் ஃபேஸ்புக்கில் செலவழிப்பவர்கள் பலர் மன அழுத்தத்தில் மூழ்கும் அபாயத்தில் ஏற்படும் என்றும், ஃபேஸ்புக் தளத்துக்கு அடிமையாவோர், தனிமை உணர்வால் வாடும் நிலைக்குத் தள்ளப்படும் சூழலுக்கு ஆளாவார்கள் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் நம் அனைவரையும் இணைக்கும் வண்ணம் காட்சியளித்தாலும், அதிக நேரம் பயன்படுத்தினால் ஆபத்தான விளைவுகளை தரக்கூடும் .
மூன்று கட்டமாக நடந்த இந்த ஆய்வில், முதல் கட்டமாக 123 ஜெர்மன் பேசும் ஃபேஸ்புக் வாசகர்களைக் கொண்டு ஆராய்ந்தனர். பெரும்பாலானவர்கள் ஃபேஸ்புக்கில் சிறிது நேரம் செலவிட்டவுடன் அவர்களின் மனநிலையில் மாற்றம் காணப்பட்டது. (அமேசான் மெகேனிகல் டர்க்) என்ற திட்டத்தின் மூலம் இதன் இரண்டாம் கட்ட ஆராய்ச்சியில் 263 பேர் பங்கேற்றனர். அதில் பங்கு பெற்றவர்களின் மனநிலையிலும் மாற்றம் காணப்பட்டது. இந்த ஆராய்ச்சியின் கடைசி கட்டமாக 101 ஃபேஸ்புக் வாசகர்களிடம் 'ஃபேஸ்புக் பக்கங்களைப் பார்ப்பது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்குமா அல்லது சோகத்தை உண்டாக்குமா?' என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இந்த கட்டத்திலும் 'ஃபேஸ்புக்கிலிருந்து வெளிவரும்போது தங்கள் வாழ்க்கையில் தனிமை ஏற்படுகிறது' என்று வைரல் க்ளோபல் நியூஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதனிடையே, கூச்ச சுபாவம் உள்ளவர்கள், பிறரிடம் அதிகம் பேசாத உள்முக சிந்தனையாளர்கள் ஃபேஸ்புக்கில் அதிக நேரம் செலவழிப்பதால் தன் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் பகிர்வது சிறிதே என்றும் அலபாமா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆராய்ச்சியில் தெரியவந்தது.


Posted: 12 Apr 2015 06:33 AM PDT


ஆராரோ ஆரிராரோ அம்புலிக்கு நேர் இவரோ.. . என்னவொரு இனிமையான குரல்!... யப்பா சான்சே...

Posted: 12 Apr 2015 05:41 AM PDT

ஆராரோ ஆரிராரோ அம்புலிக்கு நேர் இவரோ..
. என்னவொரு இனிமையான குரல்!... யப்பா சான்சே இல்லை



என்னதான் டெக்னாலஜி வளந்தாலும் ஆஃபாயில பார்சல் பண்ண முடியாது...

Posted: 11 Apr 2015 11:05 PM PDT

என்னதான் டெக்னாலஜி வளந்தாலும்
ஆஃபாயில பார்சல் பண்ண முடியாது...

Posted: 11 Apr 2015 10:49 PM PDT


நேற்று உன்னை காயப்படுத்தியவரை மறந்து விடு. ஆனால், இன்று உன்னுடன் அன்பாக இருப்பவர...

Posted: 11 Apr 2015 08:00 PM PDT

நேற்று உன்னை காயப்படுத்தியவரை மறந்து விடு.
ஆனால், இன்று உன்னுடன் அன்பாக இருப்பவரை மறந்து விடாதே.!
உன்னை அழ வைத்த கடந்த கால நிகழ்வுகளை மறந்து விடு.
இன்று உன்னை சிரிக்க வைக்கும் நிகழ் காலத்தில் கவனத்தை செலுத்து.!
உன் மனதுக்கு ஏற்பட்ட வலியை மறந்து விடு. ஆனால் அது கற்றுத்தந்த பாடத்தை மறக்காதே.!!

0 comments:

Post a Comment