Friday, 3 April 2015

ilovemynative: Facebook page wall posts in Tamil

ilovemynative: Facebook page wall posts in Tamil


சிகரெட் பிடித்தால் உடல்நலத்துக்கு பாதிப்பில்லை,கேன்சர் வராது - பாஜக எம்பி சியாமா...

Posted: 03 Apr 2015 09:03 AM PDT

சிகரெட் பிடித்தால்
உடல்நலத்துக்கு
பாதிப்பில்லை,கேன்சர்
வராது - பாஜக எம்பி
சியாமா சரண் குப்தா.

இவர் 'ஷ்யாம் பீடி'
கம்பெனியின்
ஓனராம். வருடத்திற்கு
200 - 250 கோடிக்கு
யாவாரம்
பண்ணுகிறாராம். நல்லா
இருக்கு ராசா உன்
வியாபார தந்திரம்...

@இளையராஜா

கன்னட தேசிய இனத்தவர் எங்கு சென்று எத்தகைய சாதனை நிகழ்த்தினாலும் தங்கள் தேசியக் க...

Posted: 03 Apr 2015 08:35 AM PDT

கன்னட தேசிய இனத்தவர்
எங்கு சென்று எத்தகைய
சாதனை நிகழ்த்தினாலும்
தங்கள் தேசியக் கொடியை
தூக்கி நிறுத்துவதில்
முனைப்பு
காட்டுகிறார்கள்..

நம்ம தான் இன்றும்
நமக்குன்னு ஒரு
கொடியை
உருவாக்காமல் இந்திய
கொடியை
புடிச்சிக்கிட்டு
திரியுரோம்..


அப்பா! ஏம்பா அம்மாவ மிதிச்சிட்டு போற.. மகனே, இதுவா அம்மா. இது வெறும் பொம்மை தான...

Posted: 03 Apr 2015 08:32 AM PDT

அப்பா! ஏம்பா அம்மாவ
மிதிச்சிட்டு போற..

மகனே, இதுவா
அம்மா. இது வெறும்
பொம்மை தானேடா.

எங்க விளையாட்டுல்ல இந்த பொம்மை தான்
அம்மா.

ஆஹா! நான் அம்மாவை
மிதிச்சிட்டேன்னு உள்ள
இருக்கற உங்க
அம்மாகிட்ட
சொல்லிடாதடா..

சாக்லேட் வாங்கி
தருவியா, சொல்ல
மாட்டேன்...

சரிடா...
:)

@இளையராஜா

கன்னடன் கன்னடனாக இருக்கும் போது, தெலுங்கன் தெலுங்கனாக இருக்கும் போது, மலையாளி மல...

Posted: 03 Apr 2015 08:21 AM PDT

கன்னடன்
கன்னடனாக இருக்கும் போது, தெலுங்கன்
தெலுங்கனாக இருக்கும் போது, மலையாளி
மலையாளியாக இருக்கும் போது

தமிழன் மட்டும் ஏன்
திராவிடனாகத் திரிக்கப்பட வேண்டும் ?

முல்லைப் பெரியாறும்,
ஒகனேக்கல்லும்,
காவிரியும்,
பாலாறும் தமிழகத்திற்குக் கிடைக்காமல் முடக்கப்படும்போது, தமிழ்நாட்டின் வளங்கள் மட்டும் அவர்களுக்கு வேண்டுமா?

இதுதான் இந்திய இறையாண்மையின் இலக்கணமா?

அல்லது இந்தியக் கட்டப் பஞ்சாயத்தில் கிடைக்கும் ஞாயமா?

கடந்த 1956 ல் மொழி வழி மாநிலமாக இந்தியா பிரிக்கப்படும்போது மொழி இன அடிப்படையிலான உரிமைகளுக்கு அது அங்கீகாரம் அளித்தது!

ஆனால், மராட்டிய இன உணர்வுகளும், சீக்கிய இன உணர்வுகளும், கன்னடத், தெலுங்கு, மலையாள மற்றும் பிற இன உணர்வுகளும் உரிமைகளும் இந்தியத் துணைக்கண்டத்தில் மதிக்கப்படும் போது தமிழர்களின் உரிமையும் தாகமும் மட்டும் நசுக்கப்படுவது ஏன்?

அந்தந்த மாநிலங்களை அவரவர் ஆளும்போது,

தமிழ்நாடு மட்டும் திறந்த வீடாகவும் வேலியில்லாக் காடாகவும் யார் வேண்டுமானாலும் ஆளலாம், ஆட்டம் போடலாம், ஏறி மேயலாம் என்ற
நிலை இருப்பது ஏன்?

வந்தேறிகள் ஆளவும் ஏய்க்கவும அரட்டவும் உருட்டவும் அவர்கள் வைத்திருக்கிற கைத்தடிதான் திராவிடம் என்கிற பொய்ப்பூச்சு!

அடுத்து, பெரியார் என்கிற ஊதிப் பெரிதாக்கி வைத்திருக்கிற பெயர்!

தமிழர்கள் ஏய்க்கப்படுவதும், ஏமாற்றப்படுவதும், நசுக்கப்படுவதும், கொல்லப்படுவதும் காலாகாலமாக நடந்து வருகின்ற ஒன்றுதான். தாக்கினால் திருப்பி அடிப்பார்கள் என்கிற நிலை இருக்கும் போது தான் உலகில் அமைதி நிலவுகிறது. அல்லது ஏறி மேய்கிறார்கள்!

மலேசியாவிலோ, பர்மாவிலோ, ஈழத்திலோ, கர்நாடகத்திலோ தமிழர்கள் தாக்கப்பட்டால் தாய்த் தமிழகம் கொதித்து எழும் என்கிற நிலை இருந்தால் பத்தரைக் கோடித் தமிழனைத் தொட எந்தக் கொம்பனுக்கும் உலகில் துணிவிருந்திருக்காது.

மாறாக, பர்மாவின் சயாம் நகரில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டபோதோ,

கர்நாடகத்தில் தமிழர்கள் வெட்டித் துண்டாடப்பட்டபோதோ,

மும்பையிலும் மணிப்பூரிலும் தமிழர்கள் விரட்டி அடிக்கப்பட்டபோதோ,
பர்மாவிலிருந்து தமிழர்
விரட்டப்பட்டபோதோ,

ஈழத்தில் 3 லட்சம் தமிழர்கள் கொடுமையாகக் கொன்றொழிக்கப்பட்டபோதோ

தாய்த் தமிழகத்தில் எதிர்ப்பில்லை, கொதிப்பில்லை, கொந்தளிப்பில்லை! காரணம் என்ன?

திராவிடம் என்ற நச்சு போதைபோல் ஏறி சித்தம் சிதைந்து கிடக்கிறான் தமிழன்!

ஈயும், எறும்பும், புழுவும், பூச்சியும் நசுக்கப்பட்டால் எதிர்ப்பு தெரிவிக்கிறது. காகம் ஒன்று கொல்லப்பட்டால் வானத்தையே கருப்பாக்கி காகக்கூட்டம் கரைகிறது!

ஒரு தெரு நாயைத் தாக்கினாலும் ஊர் நாய்களே ஒன்று சேர்ந்து மாந்தக் கூட்டத்தை வறுத்தெடுக்கிறது!

இரு சீக்கியர்கள் தாக்கப்பட்டதற்காக பஞ்சாப் பற்றி எரிகிறது.
மராத்தியன் பீகாரில் தாக்கப்பட்டால் பதிலடியில் நாடு எரிகிறது!
பீகாரியைத் தொட்டால் வடநாடு கொதிக்கிறது!

இரு இசுரேலியர்களை பாலத்தீனர்கள் சிறைப்பிடித்ததற்காக இரு பாலத்தீனிய நகரங்களை தடைமட்டமாக்கி இசுரேல் பாடம் கற்பித்தது!

உலகமே இப்படி இருக்கும்போது,
அது இனப்பற்றாக, இனப்பாதுகாப்பாகப் பார்க்கப்படும்போது தமிழர்நாடு மட்டும் விதிவிலக்காக இருப்பது ஏன்?

மூத்தஇனம் இங்கே முடங்கிக் கிடப்பதே தன் அடையாளத்தை இழந்ததால்தான்! தமிழனைத் திராவிடனாக திரித்து சிதைத்துவிட்டார்கள்.

மீண்டும் இழந்த தமிழன் என்கிற அந்த அடையாளத்தை நாம் உணர்ந்து தக்க வைத்தால் மட்டுமே எதிர்காலத் தலைமுறையை நாம் பாதுகாக்க இயலும்.

இதில் சமரசம் செய்து கொண்டு அரசியல் களத்தில் ஆராவாரம் செய்து யார் களம் இறங்கினாலும் அவர் தமிழினத்தின் எதிரியாகத்தான் இருப்பார்..


கடந்த பத்து மாதங்களில் மோடியின் செல்வாக்கு சரிவு--இந்தியா டூடே இவங்க ஆட்சிக்கு...

Posted: 03 Apr 2015 07:39 AM PDT

கடந்த பத்து மாதங்களில்
மோடியின் செல்வாக்கு
சரிவு--இந்தியா டூடே

இவங்க ஆட்சிக்கு
வந்ததுலருந்து சுத்தி
சுத்தி "மாடு-சாணம்-
கோமியம்" ன்னு
அங்கயே தான்
இருக்கானுங்க...


இதுக்கு நடிகர்
ராமராஜனை
பிரதமராக்கிருக்கலாம்.

@துரை மோகன்

சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம்...

Posted: 03 Apr 2015 02:32 AM PDT

சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம்...


திராவிட மொன்னைகளுக்கு.... திருச்சியை சேர்ந்த ஒரு தமிழ்குடும்பம் 30 ஆண்டுகளாக கர...

Posted: 03 Apr 2015 01:59 AM PDT

திராவிட மொன்னைகளுக்கு....

திருச்சியை சேர்ந்த ஒரு தமிழ்குடும்பம் 30 ஆண்டுகளாக கர்நாடகாவில் வசிந்து வந்தது. அவர்களது மகள் புற்றுநோயால் இறந்து விட்டாள். அவரை அடக்கம் செய்ய சென்ற பொழுது இந்த மாயானத்தில் அனுமதிக்கமுடியாது. வேற பக்கம் போங்கன்னு சொல்லியிருக்கான்னு. அந்த குடும்பம் கடைசியாக கஷ்டப்பட்டு திருச்சிக்கு வந்து அடக்கம் பண்ணியிருக்காங்க.

கர்நாடகாகாரனும் திராவிடன் தானே? இந்த மனிதாபிமானம் இல்லாத செயலை செய்யும் அவனை திராவிடன் என்று கொஞ்ச வேண்டுமா?

தமிழன் எல்லா பக்கமும் அடி வாங்கிகிட்டு இருப்பான்.
திராவிடம் பேசி கல்லா கட்டும் உங்களுக்கு நாங்க பொத்திட்டு இருக்கனுமா?

@வால் பையன்

ஊழலில் திளைக்கும் அரசியல் வாதிகளே... லஞ்சத்தில் கொழிக்கும் அரசு ஊழியர்களே.. ஏழைய...

Posted: 02 Apr 2015 11:06 PM PDT

ஊழலில் திளைக்கும்
அரசியல் வாதிகளே...
லஞ்சத்தில் கொழிக்கும்
அரசு ஊழியர்களே..
ஏழையின் நேர்மையைப்
பாருங்கள்..

@கவிதா


0 comments:

Post a Comment