+++++வாலிபம் கரைகிறது+++++
சதைக்குள் தசை வளர்ப்பதை ஆண்மையென எண்னும் வாலிபம்
இதயத்துள் ஈரம் சொட்டுதலை ஏற்காமலிருக்கிறது
இசைக்குள் வசை பாடுபவர்களையும் "தல" க்கனம் பிடித்த "தளபதி" களையும்
நாசமென்றறியாது நேசிக்கும் வாலிபம்
மார் கொடுத்த சோறு கொடுத்த பெற்றாரை மற்றாராக பர்க்கிறது
மண்டையின் கொண்டையில் கோடு போடுவதையும்
துப்பட்டாவின் சப்போட்டைப்பெற வாலிபத்தை வக்கில்லத்தனமாக்குவதையும்
"கெத்து" என்று சொல்லித்திரிகின்றது
நாக்கடியில் மூக்குப்பொடி வைப்பதிலும்
போக்கடியில் ஜோக்கடிப்பதிலும் நிகரில்ல இன்பம் காண்கிறது
"நன்பேண்டா" என்று சொல்லிக்கொண்டு படம் பார்க்க போவதிலும்
இடம் பார்க்க போவதிலும் நேரம் சுடும் வாலிபம், வீட்டில்
நரசிம்ம பாத்திரம் ஏற்கிறது
இழவு விழுந்தாலே சமுக ஊடகத்தில் பதிவேற்றும் வாலிபம்
ஊருக்குள் இடி விழுந்தாலுங்கூட தலையனையை கவட்டைக்குள் சொறுகி
போர்வைக்குள் facebookஇல் கிடக்கிறது
நான் எப்போதுமே பலமானவன் என்று எண்னிக்கொள்ளும் வாலிபம்
சுண்டு விரலளவு கஸ்டத்தின் போதே குதிக்க நீர் வீழ்ச்சிகளையும்
குடிக்க நீர் சூழ்ச்சிகளையும் தேடி ஓடுகிறது
அணிய முடியாத ஆடையணிந்து குனிய முடியாமல் தட்டுத்தடுமாரும் வாலிபம்
வியர்வை வாசமின்றி உயர்வை அடையப்பார்க்கிறது
காதிலும் கழுத்திலும் உலோகங்கள் மின்ன
வாக்கிலும் Walkஇலும் எகத்தாளம் என்ன
சத்தம் போட்டே சட்டமியற்றப்பார்க்கின்றது
வாலிபம் கரைகிறது
இந்த தலைமுறையில் அவதரித்ததில் வெட்கிறேன்
via ஷகீக் அஹ்மத்

0 comments:
Post a Comment