Monday, 9 March 2015

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


மருத்துவர் : என்ன பிரச்சினை??? பெண் : எனது மகனுக்கு பத்து வயதாகிறது... இருந்தும...

Posted: 09 Mar 2015 05:35 AM PDT

மருத்துவர் : என்ன பிரச்சினை???

பெண் : எனது மகனுக்கு பத்து வயதாகிறது... இருந்தும் வாயில் விரல் வைத்துக்கொண்டேயிருக்கிறான்.... என்ன செய்வதென்றே தெரியவில்லை...

மருத்துவர் : அவனுக்குரிய அளவினைவிட அதிக இடுப்பளவு கொண்ட ஆடையினை கொடுங்கள்...

பிரச்சினை சில மாதங்களில் சரியானவுடன்...

பெண் : எப்படி நீங்கள் இந்த யோசனையினைக் கூறினீர்கள்....???

மருத்துவர் : அந்த ஆடையின் அளவு பெரியதாக இருந்தால் அதனை சரியாக போடுவதற்கே அவனுக்கு நேரம் சரியாகயிருக்கும்... அப்படியிருக்கையில் வாயில் விரல் வைக்க அவனுக்கு தோன்றாது....

பெண்ணுக்கு மகிழ்ச்சி...

இதனை மற்றவர்களைப்போல் படித்துவிட்டு மட்டும் சென்றால் நீங்கள் சாதாரண மக்களில் ஒருவர்தான்...

எந்தவொரு கதையினைப் படித்தாலும் அதன் மூலம் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தினைப் பெற முடியுமா என்று சிந்திக்க வேண்டும்...

இக்கதையினை படித்தவுடன் எனக்குத் தோன்றியது....

வாழ்க்கையில் ஒரு பிரச்சினையில் இருக்கும்போது அதிலிருந்து எப்படி வெளிவர போகிறோம் என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்போம்... ஆனால் அதை விட பெரிய பிரச்சினை வந்தால் நமக்கு முன்னால் இருந்த பிரச்சினை எப்படி சரியானது என்றுகூட தெரியாமல் இருப்போம்...

இதைப்போல் உங்களுக்கு என்ன கருத்து தோன்றுகிறது என்பதையும், உங்களின் மனதில் தோன்றும் பிற கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்...

பா விவேக்

0 comments:

Post a Comment