Tamil History and Culture Facebook Posts |
Posted: 28 Mar 2015 07:40 PM PDT முழுவதும் படிக்கவும்... விவசாயத்திற்கு ஆட்கள் தேவை : வாய்க்கால், வரப்பு வெட்ட மற்றும் தண்ணீர் பாய்ச்ச "சிவில் எஞ்சினியர்கள்" தேவை. விதை விதைக்க, களை எடுக்க "கம்ப்யூட்டர் எஞ்சினியர்கள்" தேவை. விவசாய வாகனங்கள் மற்றும் பம்ப் செட் பழுது பார்க்க "மெக்கானிக்கல் எஞ்சினியர்கள்" தேவை. வயல்வெளிகளுக்கு இரவு நேர வேலைகளுக்கு மின் விளக்கு பொருத்த மற்றும் இதர மின்சார சம்பந்தமான வேலைகளுக்கு "எலெக்ட்ரிக்கல் எஞ்சினியர்கள்" தேவை. உழுவதற்கும், பொருட்கள் கொண்டு செல்வதற்கும் டிராக்டர் ஓட்ட "ஆட்டோமொபைல் எஞ்சினியர்கள்" தேவை. உரம் போட, பூச்சி மருந்து அடிக்க "கெமிக்கல் எஞ்சினியர்கள்" தேவை. தானிய மூட்டைகளை கப்பலில் வெளிநாட்டிற்கு ஏற்றி விட "மெரைன் எஞ்சினியர்கள்" தேவை. தானியங்களை விமானத்தில் ஏற்றி விட "ஏரோநாட்டிக்கல் எஞ்சினியர்கள்" தேவை. கதிர் அறுக்கும் இயந்திரத்தை ஓட்டுவதற்கு "மெக்கட்ரானிக்ஸ் எஞ்சினியர்கள்" தேவை. தானிய மூட்டைகளை எண்ணுவதற்கு "எம்.பி.ஏ" படித்தவர்கள் தேவை. விவசாய ஆட்களுக்கு சமைத்து போடுவதற்கு "கேட்டரிங்" படித்தவர்கள் தேவை. விவசாய மேற்பார்வை பணிக்கு "அக்ரிகல்சர் எஞ்சினியர்கள்" தேவை. பி.கு : முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். ஓவர்டைம், போனஸ் உண்டு. # விவசாயத்தை மதிக்கவில்லை எனில் ஒருநாள் உண்ணுவதற்கு உணவில்லாமல் நமது வருங்கால சந்ததிகளின் நிலைமை இப்படிதான் இருக்கும். விவசாய நிலங்களை அழிக்காதீர்கள், விவசாயத்தை மறக்காதீர்கள் (விழிப்புணர்பு பதிவு மட்டுமே. எனக்கும் சேர்த்து ) "விவசாயத்தை நேசிப்போம், வீரியமாய் வாழ்வோம்". |
You are subscribed to email updates from தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம் - Tamil History and Culture's Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment