Wednesday, 25 March 2015

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


துப்பாக்கி, பீரங்கி இல்லாமல் வெறும் வாளும், வில்லும் கொண்டு கங்கை முதல் இன்றைய இ...

Posted: 25 Mar 2015 07:30 AM PDT

துப்பாக்கி, பீரங்கி இல்லாமல் வெறும் வாளும், வில்லும்
கொண்டு கங்கை முதல் இன்றைய இந்தோனேசியாவான
சுமத்திரை வரை கி.பி.1000தில் ஆண்ட ராஜராஜ
சோழனையும், திறம் மிகுந்த நெடுஞ்செழியனையும்,
கல்லணை கட்டிய கரிகாலனையும் சொல்லி வளர்க்காமல்
ஒன்றுக்கும் உதவாத முதலாம், இரண்டாம் உலக
போர்களை அல்லவா சொல்லி வளர்த்தீர்கள்.
தமிழனின் சிறப்பை சொல்லி தமிழன்
என்று பெருமை கொள்ளும்படி செய்து, மேற்கத்தியர்கள்
5000 ஆண்டுகளுக்கு முன்
மொழியற்று காட்டுவாசிகளாய் இருந்த
போதே இங்கே கலாச்சாரம் தோன்றி சிலப்பதிகாரமும்,
குறளும் இயற்ற பட்டு விட்டன
என்பதை சொல்லி வளர்த்திருந்தால் இன்று ஏன் இளைஞன்
மேற்கு மோகம் கொண்டு அலைகிறான் ???

- தர்சன் பாலா


தமிழில் டீக்கு "தேநீர்', காபிக்கு "குளம்பி' என்று பெரும்பாலோருக்குத் தெரியும். ம...

Posted: 25 Mar 2015 04:33 AM PDT

தமிழில் டீக்கு "தேநீர்',
காபிக்கு "குளம்பி' என்று
பெரும்பாலோருக்குத் தெரியும்.
மற்ற சில முக்கியமான உணவு
பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்!
சப்பாத்தி - கோந்தடை
புரோட்டா - புரியடை
நூடுல்ஸ் - குழைமா
கிச்சடி - காய்சோறு, காய்மா
கேக் - கட்டிகை, கடினி
சமோசா - கறிப்பொதி, முறுகி
பாயசம் - பாற்கன்னல்
சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு
பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி
பொறை - வறக்கை
கேசரி - செழும்பம், பழும்பம்
குருமா - கூட்டாளம்
ஐஸ்கிரீம் - பனிக்குழைவு
சோடா - காலகம்
ஜாங்கிரி - முறுக்கினி
ரோஸ்மில்க் - முளரிப்பால்
சட்னி - அரைப்பம், துவையல்
கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு
பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்
போண்டா - உழுந்தை
ஸர்பத் - நறுமட்டு
சோமாஸ் - பிறைமடி
பப்ஸ் - புடைச்சி
பன் - மெதுவன்
ரோஸ்டு - முறுவல்
லட்டு - கோளினி
புரூட் சாலட் - பழக்கூட்டு...
நன்றி: தமிழன் வரலாறு..

தமிழ்நாட்டின் பெருமைகள் மற்றும் சில தகவல்கள்.... 1. தமிழக அரசு முத்திரை கோபுரம்...

Posted: 25 Mar 2015 03:07 AM PDT

தமிழ்நாட்டின் பெருமைகள் மற்றும் சில தகவல்கள்....

1. தமிழக அரசு முத்திரை கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்.

2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி

3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்

4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்புத்தூர்

5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர்

6. மிக உயரமான தேசியக்கொடி மரம் – புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)

7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் (ராமேஸ்வரம்)

8. மிகப் பெரிய தேர் – திருவாரூர் தேர்

9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை

10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை

11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)

12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்

13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – இராமேஸ்வரம் கோயில் பிரகாரம்

14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)

15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)

16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா
[ 2,636 m (8,648 ft) ]

17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )

18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)

19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)

20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)

21. மலைகளின் ராணி – உதகமண்டலம்

22. கோயில் நகரம் – மதுரை

23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)

24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்

25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)

நன்றி : ரமேஷ்

பா விவேக்

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டமைக்கான காரணங்கள். செம்மொழிக்குரிய அனைத்து 11 த...

Posted: 25 Mar 2015 01:30 AM PDT

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டமைக்கான காரணங்கள்.

செம்மொழிக்குரிய அனைத்து 11 தகுதிகளையும் தன்னகத்தே கொண்ட மொழி தமிழ் மொழி
ஒன்றே.தொன்மை,முன்மை, நுண்மை, திண்மை, எண்மை, ஒண்மை, இனிமை,
தனிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, மும்மை, செம்மை, இயன்மை, வியன்மை *என
பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது நம் தமிழ்மொழி ஒன்றே!
1)தொன்மை (Antiquity)
2)தனித்தன்மை (Individuality)
3)பொதுமைப் பண்பு (Common Characters)
4)நடுவு நிலைமை (Neutrality)
5)தாய்மைத் தன்மை (Parental Kinship)
6)பண்பாடு,கலை,பட்டறிவு வெளிப்பாடு (Finding expression in the culture,art and life experience of the civilized society)
7)பிறமொழிக் கலப்பில்லாத தனித்தன்மை.(Ability to function independently without any impact or influence of any other language and literature)
8)இலக்கிய வளம் (Literary Powers)
9)உயர்சிந்தனை (Noble Ideas and Ideals)
10)கலை,இலக்கியத் தன்மை வெளிப்பாடு (Originality in artistic and literary expressions)
11)மொழிக் கோட்பாடு (Linguistic Principles)


"மனைவி என்பவள் கணவனுக்கு கண்ணாடியை போன்றவள் ஆவாள். . ! கணவனாகிய நீங்கள் சிரித்த...

Posted: 24 Mar 2015 11:17 PM PDT

"மனைவி என்பவள் கணவனுக்கு கண்ணாடியை போன்றவள் ஆவாள். . !
கணவனாகிய நீங்கள் சிரித்தால் அவளும் சிரிப்பாள். . ! நீங்கள் அழுதால் அவளும் அழுவாள். . !
ஆனால் நீங்கள் முறைத்தாலோ அல்லது ஏசினாலோ அவள் உடைந்துவிடுவாள். . !
தயவு செய்து உங்களின் கவலைகளை கண்ணாடியிடம் பரிமாறுங்கள். . !
கோபத்தை காட்டி அதனை உடைத்து விடாதீர்கள்...!
- கலைசெல்வி


0 comments:

Post a Comment