Saturday, 14 March 2015

Tamil History and Culture Facebook Posts

Tamil History and Culture Facebook Posts


திருமணமான சில நாட்கள் கழித்து பிறந்த வீட்டிற்கு பெற்றோரை பார்ப்பதற்கு வரும் பெண்...

Posted: 14 Mar 2015 06:33 AM PDT

திருமணமான சில நாட்கள் கழித்து பிறந்த வீட்டிற்கு பெற்றோரை பார்ப்பதற்கு வரும் பெண்ணிடம் இன்னும் சில நாட்கள் இங்கிருந்துவிட்டு போயேன் என்று பெற்றோர்கள் கூறும்போது,
"நான் எனது வீட்டிற்கு செல்ல வேண்டும்"

என்று கூறும் பெண்கள் இருக்கும்வரை ஒருபோதும் தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிற்கு குறைவு வராது....

பா விவேக்

காலத்தை வென்ற மகாகவி பாரதியார்.... கண்ணம்மா-என் காதலி பாயு மொளி நீ யெனக்கு,பார்...

Posted: 14 Mar 2015 05:36 AM PDT

காலத்தை வென்ற மகாகவி பாரதியார்....

கண்ணம்மா-என் காதலி
பாயு மொளி நீ யெனக்கு,பார்க்கும் விழி நானுனக்கு,
தோயும் மது நீ யெனக்கு,தும்பியடி நானுனக்கு.
வாயுரைக்க வருகுதில்லை,வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே!கண்ணம்மா!
வீணையடி நீ யெனக்கு,மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு,புது வரிம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடீ
மாணுடைய பேர ரசே! வாழ்வு நிலையே!கண்ணம்மா!
வான மழை நீ யெனக்கு வண்ண மயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்கு,பாண்டமடி நானுனக்கு;
ஞான வொளி வீசுதடி,நங்கை நின் றன் சோதிமுகம்,
ஊனமறு நல்லழகே!ஊறு சுவையே!கண்ணம்மா!
வெண்ணிலவு நீ யெனக்கு,மேவு கடல் நானுனக்கு;
பண்ணு சுதி நீ யெனக்கு,பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே!கண்ணம்மா!
வீசு கமழ் நீ யெனக்கு,விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்கு,பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே!கனியே!அள்ளு சுவையே கண்ணம்மா!
காதலடி நீ யெனக்கு,காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு,வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கி வருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா!
நல்லவுயிர் நீ யெனக்கு,நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு,சேமநிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே!எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லைநிகர் புன்னகையாய்!மோதுமின்பமே!கண்ணம்மா!
தாரையடி நீ யெனக்கு,தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு,வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவமாய்ச் சமைந்தாய்!உள்ளமுதமே!கண்ணம்மா!

நன்றி : நரேந்திரன் தங்கப்பன்

பா விவேக்


# அம்மா மூன்றெழுத்து # அப்பா மூன்றெழுத்து # தம்பி மூன்றெழுத்து # அக்கா மூன்றெழ...

Posted: 14 Mar 2015 05:00 AM PDT

# அம்மா மூன்றெழுத்து
# அப்பா மூன்றெழுத்து
# தம்பி மூன்றெழுத்து
# அக்கா மூன்றெழுத்து
# தங்கை மூன்றெழுத்து
# மகன் மூன்றெழுத்து
# மகள் மூன்றெழுத்து
# காதலி மூன்றெழுத்து
# மனைவி மூன்றெழுத்து
# தாத்தா மூன்றெழுத்து
# பாட்டி மூன்றெழுத்து

இவையனைத்தும் அடங்கிய
# உறவு மூன்றெழுத்து உறவில் மேம்படும்
# பாசம் மூன்றெழுத்து பாசத்தில் விளையும்
# அன்பு மூன்றெழுத்து அன்பில் வழியும்
# காதல் மூன்றெழுத்து காதலில் வரும்
# வெற்றி மூன்றெழுத்து
# தோல்வி யும் மூன்றெழுத்து காதல் தரும் வலியால்வரும்
# வேதனை மூன்றெழுத்து வேதனையின் உச்சகட்டத்தால் வரும்
# சாதல் மூன்றெழுத்து சாதலில் பறிபோகும்
# உயிர் மூன்றெழுத்து.. இது நான் எழுதிய
# கவிதை என்றால் மூன்றெழுத்து.. இது
# அருமை என்றால் அதுவும் மூன்றெழுத்து
# மொக்கை என்றால் அதுவும் மூன்றெழுத்தே...
# நட்பு என்ற மூன்றெழுத்தால் இணைந்து இதைப்படித்த அனைவருக்கும் என்
# நன்றி ...
# நன்றி யும் மூன்றெழுத்தே ...!
# மூன்று ம் மூன்றெழுத்தே........!!!

# இவை அத்துனையும் உள்ளடக்கிய தமிழ் உம் மூன்றெழுத்து.

நன்றி : ரமேஷ்

பா விவேக்

சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள்.... பா விவேக்

Posted: 14 Mar 2015 02:31 AM PDT

சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள்....

பா விவேக்


எப்ப வந்தாய்னு கேட்டால்.. நாளைக்கு வந்தேன் சொல்லும் குழந்தையிடம் எல்லா இலக்கணப...

Posted: 13 Mar 2015 08:30 PM PDT

எப்ப வந்தாய்னு கேட்டால்..

நாளைக்கு வந்தேன் சொல்லும் குழந்தையிடம் எல்லா இலக்கணப்பிழையும் மறைந்து கொள்கின்றன!

நன்றி : கார்த்திக்

பா விவேக்


0 comments:

Post a Comment