Relax Please: FB page daily Posts |
- உங்களுக்கு சுலபமாக தூக்கம் வர சிறந்த வழிகள் … 1. எந்த நினைவுகளும் இல்லாமல் கண்க...
- சென்னை, பிழைப்பதற்கான ஊர், வாழ்வதற்கான ஊர் அல்ல!
- இனிமையான பேச்சு எங்கே? பழகிய மரியாதைகள் எங்கே? ஊரை விட்டு வந்த மனிதனே உன் உள்ளம்...
- உண்மை :(
- அன்று பெண் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொன்றார்கள்.. இன்று கற்பழித்து கொல்கி...
- உண்மையை சொன்னேன் .. 1.ஆஃபீஸ்ல மேனேஜர் லீவு போட்டா நமக்கு வர்ற சந்தோஷம் இருக்க...
- நீங்கள் எவ்வளவு பெரிய தவறு செய்திருந்தாலும், 'நம்ம நல்ல மனசுக்கு நல்லது தான் நடக...
- ஷப்பா :O
- ஒரு உயிரையை காப்பாற்ற உங்களது SHARE தேவை
- "சிறுகதை" - பள்ளித் தோழி நிச்சயம் இது அவளாகத் தான் இருக்கும். சந்தேகமே இல்ல...
- சிரியுங்கள்....! உங்களோடு இந்த உலகமே சிரிக்கும்...! அழுங்கள்...! நீங்கள் மட்டும...
- பென்சில சீவி சீவி வரைஞ்சிருக்காருப்பா...!!! பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- ;-) Relaxplzz
- உங்கள் கவனத்திற்கு. இந்தியா எங்கும் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது. 2015...
- :) Relaxplzz
- இவர் என் கம்பெனி அருகே தினமும் கம்மங்கூழ் வியாபாரம் செய்து வருகிறார் விலை அதிகம்...
- சாதி பார்க்கத் தெரியாமல் மதிய உணவைப் பகிர்ந்து உண்ட நாட்கள் ரொம்ப அழகானது.. - வ...
- "ஸ்கூல் வாத்தியாரைக் கல்யாணம் பண்ணினது தப்பப் போச்சு"!!... "ஏன் என்னாச்சு" ..?...
- இதன் சுவை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- சென்னை தியாகராய நகரை சேர்ந்த பட்டதாரி தம்பதி ஒன்று குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்டுள...
- :) Relaxplzz
- தீக்குச்சியில் அருமையான வீடு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- உங்கள் குழந்தைகள் உங்களிடம் விரும்பி எதிர்பார்க்கும் அன்பளிப்பு என்பது உங்கள் நே...
- "எம்பிளாய்மெண்ட் ஆபிசிலே நீ பதியறதுக்கு, உன்னோட அப்பா, தாத்தாவையும் கூட்டிட்டு வ...
- ;-) Relaxplzz
- :) Relaxplzz
- ஒரு பஸ் கண்டக்டர் இருந்தார்.. தினமும் அவருக்கு ஒரே ரூட் தான். ஒரு நாள் வழக்கமான...
- :) Relaxplzz
Posted: 08 Mar 2015 09:45 AM PDT உங்களுக்கு சுலபமாக தூக்கம் வர சிறந்த வழிகள் … 1. எந்த நினைவுகளும் இல்லாமல் கண்களை மூடுங்கள் … 2. முக்கியமாக எந்த ஞாபகமும் இருக்க கூடாது … 3. உங்கள் இதய துடிப்பை கவனியுங்கள் … 4. கவனத்தை நடு நெற்றி பொட்டில் வைங்க … பின் குறிப்பு ….. "உங்கள் முகத்தை " நினைக்கவே கூடாது " அப்படி நினைத்தால் தூக்கம் வராது…. ;-) ;-) Relaxplzz ![]() |
Posted: 08 Mar 2015 09:40 AM PDT |
Posted: 08 Mar 2015 09:00 AM PDT இனிமையான பேச்சு எங்கே? பழகிய மரியாதைகள் எங்கே? ஊரை விட்டு வந்த மனிதனே உன் உள்ளம் எங்கே? வீட்டருகில் ஓடும் நதிச் சத்தம் எங்கே? வீட்டின் மாடியில் கேட்கும் சிரிப்பு எங்கே? நிமிர்ந்து நிற்க சொல்லித் தந்த தமிழ்த்தாய் எங்கே? மரத்தடியில் சூழும் குழந்தைகள் எங்கே? காலை தண்ணீர் பிடிக்க நிற்கும் குமரிகள் எங்கே? வாழ்த்தி வணங்க முதியோர் எங்கே? வழி நடத்திச் செல்லும் நம் ஆசிரியர் எங்கே? இவ்வை இவ்வூரில் இருந்தாலும் ... நம் சுவை வளர்த்த இவர்கள் எங்கே? இங்கே, தோன்றிய சூரியன் மறைவதைக் காண்போம்! விழித்த மக்கள் எழுவதைக் காண்போம்! ஆனால், நாம் பழகிய பழக்கம் சரிவதைக் காண்போம்! மயங்காதே நண்பா, கலங்காதே நண்பா! நம் நாடு வெகு தூரத்தில் இல்லை இங்கு மறையும் சூரியன் ஒரு நாள் நம் ஊரில் உதிக்கும் அதைக் கைகோர்த்து நம் நாட்டில் அரசனாய் காண்போம் அதுவரை இருப்போம் அகதிகளாய் இவ்வூரில் தொலைத்த எண்ணத்துடன், சித்திரை ஞாபகங்களுடன் ஊரை விட்டு வந்த மனிதனாய் உள்ளத்தை தொலைத்தவனாய்! வருத்தப்பட்டு எந்தப் புண்ணியமும் இல்லை., வருங்காலத்திலாவது வசந்தமாக மாற்ற வழி வகுப்போம். - வைதீஸ்வரன் ரமேஷ் Relaxplzz ![]() |
உண்மை :( Posted: 08 Mar 2015 08:20 AM PDT |
Posted: 08 Mar 2015 07:50 AM PDT |
Posted: 08 Mar 2015 05:15 AM PDT உண்மையை சொன்னேன் .. 1.ஆஃபீஸ்ல மேனேஜர் லீவு போட்டா நமக்கு வர்ற சந்தோஷம் இருக்கே நாமலே லீவு போட்டா கூட வராது.. 2.வேலை தேடுவதை போல் கடினமான வேலை வேறேதும் இல்லை... 3.என்ன தான் நிழல் தந்தாலும் அசைந்து காற்று தராது காங்க்ரீட் சுவர்கள்.. 4.இரு அம்மாகிட்ட சொல்றேன் என்பது பீதிய கெளப்பும் வாசகம் குழந்தைகளுக்கும், அதிமுக எம்.எல்.ஏ களுக்கும்.. 5.குடிக்கப்பட்ட ு கீழே விழுந்துகிடக்கும் பாட்டிலுக்கான மரியாதை கூட, குடித்துவிட்டு கீழே கிடபவனுக்கு கிடைப்பதில்லை.. 6.அரிசிக் கஞ்சி குடிச்சா ஏழை , ஓட்ஸ் கஞ்சி குடிச்சா பணக்காரன்... 7.அம்மா உணவகங்களால் பாதிப்பு சரவணபவனுக்கோ வஸந்தபவனுக்கோ அல்ல...ரோட்டோர கையேந்தி பவன்களுக்கு தான்... 8.வெளுத்ததெல்லாம் பாலா இருக்கணும்னு அவசியம் இல்ல பால்டாயிலாவும் இருக்கலாம்.. 9.பொண்ணுங்ககிட்ட ஃப்ரெண்ட்ஸாக ஈசியான வழி, "ஐ லவ் யூ" சொல்வதுதான். சொன்ன உடனே, "லவ் பண்ண முடியாது. நாம ப்ரண்ட்ஸா இருந்துடலாம்"னு சொல்லிடறாங்க... Relaxplzz |
Posted: 08 Mar 2015 03:50 AM PDT |
ஷப்பா :O Posted: 08 Mar 2015 03:40 AM PDT |
Posted: 08 Mar 2015 03:32 AM PDT |
Posted: 08 Mar 2015 03:20 AM PDT |
Posted: 08 Mar 2015 03:05 AM PDT "சிறுகதை" - பள்ளித் தோழி நிச்சயம் இது அவளாகத் தான் இருக்கும். சந்தேகமே இல்லை. அவள் முகம் என் மனதில் ஆழப் பதிந்துள்ளது. நாங்கள் இருவரும் காதலித்து பிரிந்து ஏறக்குறைய பதினைந்து வருடங்கள் ஆகின்றன. இத்துணை நாள் கழித்து ஒரு ஷாப்பிங் மாலில் அவளைச் சந்திப்பேன் என்று நான் கனவிலும் எண்ணவில்லை. பள்ளிப் பருவத்தில், வயதின் வேகத்தில் காதலித்து சூழ்நிலை காரணமாக பிரிந்து வாழ்கிற மக்களில் நாங்களும் ஒருவர். இன்னும் அவள் வசீகரமான முகத்தில் மெருகு கூடி இருக்கிறதே தவிர குறையவில்லை. பள்ளிப்படிப்பை முடித்த பின், நாங்கள் இருவரும் வெவ்வேறு பாதையில் பயணிக்கத் தொடங்கினோம். அவளிடம் பேசலாமா? வேண்டாம். பேசு என்று மனதும், வேண்டாம் என்று அறிவும் கூறுகிறது. நான் எதைக் கேட்க? என்னுள் நானே போர்புரிந்து அறிவு கூறும் கூற்றை ஒதுக்கிவிட்டு மனது கூறிய ஆசையில் நனைந்து அவள் முன் எதேச்சையாக நின்றேன். அவள் என்னை திரும்பிப் பார்த்தாள். முதலில் அவளுக்கு அடையாளம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நொடிகளில் நான் யார் என்று அவளுக்கு தெரிந்திருக்கக்கூடும். அவள் கண்களில் மினுமினுப்பு உண்டாயிற்று. "எப்படி இருக்க? பாத்து எவ்வளவு நாளாச்சு" என்றேன் நான். சில நொடி தயக்கத்திற்குப் பின் மெல்லிய தென்றல் போல அவள் பேசினாள். ".நல்லா இருக்கேன். நீங்க?" மேற்கொண்டு என்ன பேசுவதென்று எனக்கு தெரியவில்லை. லேசான தயக்கம் உண்டானது ."உங்க ஹஸ்பன்ட் என்ன பண்றாரு? அவரு உங்க கூட வரலையா?" "அவரு வெளிநாட்ல இருக்காரு" இவ்வாறு நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, "அம்மா! அம்மா! இந்த ஹேர் பேண்ட் எப்படி இருக்கு?" என்று கேட்டபடி ஒரு அழகான சிறுமி அவளருகில் குதூகலத்துடன் வந்து நின்றாள். "நல்லா இருக்கு" என்றாள் என் முன்னாள் காதலி. "இந்த அங்கிள் யாருமா?" அவள் பெண் கேட்ட இந்த கேள்விக்கு அவளிடம் விளைந்த ஒரு சிறு தயக்கத்திற்கு பின், "பிரண்ட்" என்று அவள் இதழில் இருந்து வார்த்தை விழுந்தது. "ஹாய் அங்கிள்" "ஹாய்" இதற்கு மேல் எங்களிடம் பேச வார்த்தைகள் இல்லை. அதனால் விடை பெற எண்ணி புன்னகை சிந்தினேன். ""உங்க மனைவி....?" "என் மனைவியும் இங்க தான் இருக்கா. சில திங்க்ஸ் பர்ச்சேஸ் பண்ண போயிருக்கா" "பசங்க எத்தனை?" இதற்கு என்னிடம் நிச்சயமாக பதில் இல்லை. இது வரை எங்களுக்கு மழலை வரம் வாய்க்கவில்லை. அவளுக்கு நான் என்ன பதில் கூறுவது? என் தயக்கத்தை அவள் புரிந்துகொண்டாள். "என்னங்க நீங்க, ஒரு இடத்துல நிக்கமாட்டிங்களா. உங்களை எங்கலாம் தேடுறது?" என்று கூறியபடி என் மனைவி என்னை நோக்கி வந்தாள். என் அருகில் நின்றிருந்தவர்களையும் என்னையும் ஒரு முறை நோக்கி விட்டு, "யார் இவங்க?" "பிரண்ட்" என்றேன். என் மனதில் ஒரு சிறுவலி உண்டானது. "அப்படியா?" என்று என் மனைவி அவளுக்கு வணக்கம் தெரிவித்தாள். "நீங்க என்ன பண்றிங்க?" "நான் மகப்பேறு மருத்துவரா இருக்கேன்" என் மனைவியின் முகத்தில் மலர்ச்சி. "இப்படி ஒரு டாக்டர் பிரண்ட் இருக்காங்கனு என்கிட்ட இவர் சொல்லவே இல்ல" "நான் வெளிநாட்டுல இருந்தேன். சில மாசங்கள் முன் தான் தமிழ்நாட்டுக்கு வந்தேன். இப்போ தான் உங்க ஹஸ்பன்ட் கிட்ட குழந்தை பத்தி கேட்டுட்டு இருந்தேன். நான் வொர்க் பண்ற ஹாஸ்பிட்டல்க்கு வாங்க. என்னால முடிஞ்ச உதவி செய்றேன்" என்று கூறிவிட்டு விடை பெற்று சென்றாள். ஏதோ விடிவுகாலம் பிறந்ததுபோல் என் மனைவியின் முகம் மலர்ச்சியடைந்தது. நானோ, என் பள்ளிக் காதலி செல்வதையே கனத்த இதயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். - R.Murugesan Kpm. Relaxplzz ![]() "சிறுகதை" |
Posted: 08 Mar 2015 01:50 AM PST |
Posted: 08 Mar 2015 01:40 AM PST |
Posted: 08 Mar 2015 01:30 AM PST |
Posted: 08 Mar 2015 01:20 AM PST உங்கள் கவனத்திற்கு. இந்தியா எங்கும் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது. 2015 பிப்ரவரி 21 நிலவரப்படி 12,963 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.774 பேர் மரணமடைந்துள்ளனர். இந்த நேரத்தில் கிராம்பு ஏலக்காயை பொடி செய்து அதை உங்கள் கைக்குட்டையில் வைத்துக்கொண்டு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை நுகரவும். அதற்கு பன்றி காய்ச்சலுக்கு காரணமான வைரஸ்சை அழிக்கும் ஆற்றல் உண்டு. அனைவரும் பயன்பெற இந்த தகவலை முடிந்த வரை அனைத்து வழிகளிலும் பகிரவும். Relaxplzz |
Posted: 08 Mar 2015 01:10 AM PST |
Posted: 08 Mar 2015 01:00 AM PST இவர் என் கம்பெனி அருகே தினமும் கம்மங்கூழ் வியாபாரம் செய்து வருகிறார் விலை அதிகம் இல்லை 5 ரூபாய் தான்.. அவரிடம் இன்று பேச்சுக்கொடூத்தபோது ஏனம்மா ஊரே பத்துரூபாய்க்கு விற்கிறது நீங்கள் ஏன் விலை ஏற்றவில்லை அதற்க்கு அவர் சொன்ன பதில் என் வாழ்க்கையையே புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்று விட்டது.. இவர் சரியாக ஒரு நாளைக்கு ...பத்து கிலோ மீட்டர் தன் சைக்கிளை தள்ளி சென்று வியாபாரம் செய்கிறார் ,மேலும் கம்மங்கூழ் கேஸ் அடுப்பில் சமைத்தால் சுவை மாறிவிடும் என்று விறகு அடுப்பில் பாணை வைத்து இவரே தயாரிக்கிறார், இவ்வளவு சிரமபட்டு ஏன் குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறீர்கள் என கேட்டால் என் உழைப்புக்குண்டான ஊதியம் இப்போதே கிடைக்கிறது அதிக லாபம் எனக்கு தேவை இல்லை என்கிறார் இந்த பாட்டியின் நேர்மை இங்கே கடை விரிக்கும் வால்மார்ட் போன்ற நிறுவனங்களுக்கு இருக்குமா என்பது சந்தேகம் தான் நண்பர்களே இனி சாக்கடைகளை பற்றி எழுதுவதை விட இந்த மாதிரி உள்ளவர்களை தேடி பதிவிடுகிறேன் # பெண்கள் தினமான இன்று ஒரு அன்பு வேண்டுகோள் இதை அனைத்து நண்பர்களும் பகிரவும் இந்த பாட்டியின் நேர்மை உலகிற்கு தெரியட்டும்... (y) (y) Relaxplzz ![]() |
Posted: 08 Mar 2015 12:50 AM PST |
Posted: 08 Mar 2015 12:45 AM PST "ஸ்கூல் வாத்தியாரைக் கல்யாணம் பண்ணினது தப்பப் போச்சு"!!... "ஏன் என்னாச்சு" ..? "சமைச்சு முடிச்சதும் 'சமைப்பது எப்படி'ன்னு நோட்ஸ் எழுதச் சொல்றார்".!!! ?????/ :O :O |
Posted: 08 Mar 2015 12:40 AM PST |
Posted: 08 Mar 2015 12:30 AM PST |
Posted: 08 Mar 2015 12:20 AM PST சென்னை தியாகராய நகரை சேர்ந்த பட்டதாரி தம்பதி ஒன்று குழந்தை இல்லாமல் கஷ்டப்பட்டுள்ளனர். திருமணமான புதிதிலேயே கருவுற்ற மனைவிக்கு, 7 மாதத்தில் நஞ்சு பிரிந்து கடும் உதிரப்போக்கு ஏற்பட்டது. இதனால், இறந்த குழந்தையோடு அப்பெண்ணின் கர்ப்பப்பையும் மருத்துவர்கள் நீக்கி விட்டனர். இதனால, அத்தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்ள முடிவெடுத்தனர். வடபழனியில் உள்ள ஆகாஷ் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர் அவர்கள். அங்கு அவர்களைச் சோதித்த டாக்டர்கள் காமராஜ், ஜெயராணி ஆகியோர் ''வாடகை தாய்க்காக நீங்கள் அலைவது கஷ்டம். யாராவது பெண் கிடைத்தால் கூட அவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டியிருக்கும். அதோடு அவர்களை பராமரித்து சமாளிப்பதும் கஷ்டம். எனவே உறவு பெண்கள் யாராவது வாடகை தாயாக வந்தால் மிகவும் நல்லது'' எனத் தெரிவித்துள்ளனர். டாக்டர்கள் அளித்த கவுன்சிலிங்கைத் தொடர்ந்து, அப்பெண்ணின் 61 வயது தாயாரே மகளுக்காக வாடகைத் தாயாக மாற சம்மதம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தாயாரின் உடல் நிலை பரிசோதிக்கப் பட்டது. அப்போது மாதவிடாய் நின்று போயிருந்த போதும், அவரது கர்ப்பப்பை நன்றாக இருப்பது தெரிய வந்தது. டாக்டர்கள் மருந்து மூலம் மாதவிடாயை வரவழைத்து, கர்ப்பப்பை கருவை சுமப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர். மருமகனின் விந்தணுவும், மகளின் கருமுட்டையும் சேர்த்து கருவாக்கம் செய்து தாயின் கர்ப்பப்பையில் செலுத்தப்பட்டது. எதிர்பார்த்தபடியே கரு நல்ல நிலையில் வளர்ந்தது. டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த லட்சுமியின் தாய் கடந்த நவம்பர் மாதம் அழகான பெண் குழந்தையை பெற்று மகளுக்கு பரிசளித்தார். மகளுக்காக தாயே வாடகை தாயாக மாறி இருப்பது இந்தியாவில் இதுதான் முதல்முறை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தாய்மை மகத்துவமானது ♥ Relaxplzz |
Posted: 08 Mar 2015 12:09 AM PST |
Posted: 08 Mar 2015 12:01 AM PST |
Posted: 07 Mar 2015 11:53 PM PST உங்கள் குழந்தைகள் உங்களிடம் விரும்பி எதிர்பார்க்கும் அன்பளிப்பு என்பது உங்கள் நேரமளிப்பையே... ![]() #ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 5 |
Posted: 07 Mar 2015 11:45 PM PST "எம்பிளாய்மெண்ட் ஆபிசிலே நீ பதியறதுக்கு, உன்னோட அப்பா, தாத்தாவையும் கூட்டிட்டு வந்திருக்கியே! ஏன்?" "அப்பாவுக்குப் புதுப்பிக்கணும்... எங்க தாத்தாவுக்கு முதல் இண்டர்வியூ வந்திருக்கு!" :O :O |
Posted: 07 Mar 2015 11:41 PM PST |
Posted: 07 Mar 2015 11:30 PM PST |
Posted: 07 Mar 2015 11:20 PM PST ஒரு பஸ் கண்டக்டர் இருந்தார்.. தினமும் அவருக்கு ஒரே ரூட் தான். ஒரு நாள் வழக்கமான பாதையில் பஸ் பயணித்துக் கொண்டிருந்தது. நிறுத்தங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது.. ஒரு நிறுத்தத்தில் முரட்டுத்தனமான மனிதன் ஒருவன் ஏறினான். பெரிய மீசையும் தடித்த உருவமுமாய் இருந்தவனைப் பார்த்த எல்லோரு க்குமே கொஞ்சம் அச்சமாய் தான் இருந்தது. கண்டக்டர் அவனிடம் சென்று, "டிக்கெட்' என்று கேட்டார். அவன் உடனே, "எனக்கு டிக்கெட் வேண்டாம்' என்று சொல்லி சட்டென்று முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக் கொண்டான். "ஏன் டிக்கெட் வேண்டாம்' என்று கேட்க கண்டக்டருக்கு பயம், தள்ளி வந்து விட்டார். மறுநாளும் இதே கதை. "எனக்கு டிக்கெட் வேண்டாம்' என்று முறைத்தக் கொண்டோ சொல்லக் கண்டக்டர் வந்து விட்டார். இப்படியே ஒரு வாரம் கழிந்தது.. கண்டக்டருக்கு எரிச்சல் அதிகரித்தக் கொண்டே இருந்தது.. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணினார். அவன் பலசாலியாக இருப்பதால் தானே பயமாக இருக்கிறது, நாமும் பலசாலியாவோம் என்று எண்ணி உடற்பயிற்சிகள் செய்யத் துவங்கினார்.. தற்காப்பு கலை வகுப்புகளுக்குப் போனார், ஆறு மாதங்கள் இப்படியே போனது. கண்டக்டரின் உடல் வலுவானது.. பயம் கொஞ்சம் போனது. இன்று அந்த தடியனிடம் டிக்கெட் ஏன் எடுப்பதில்லை என்று கேட்டு விட வேண்டும் என்று பஸ்ஸில் ஏறினார். இரண்டு ஸ்டாப்புகள் கழித்து அவன் ஏறினான். கண்டக்டர் டிக்கெட் கேட்க அவன் வழக்கம் போல், "நான் டிக்கெட் எடுக்கத் தேவையில்லை' என்று சொல்லி தலையைத் திருப்பிக் கொண்டான். கண்டக்டர் தன் தைரியத்தையெல்லாம் வர வழைத்துக் கொண்டு "ஏன் தேவையில்லை?' என்று விறைப்பாய் கேட்டார். அதற்கு அவன் சொன்ன பதில், "நான் பஸ் பாஸ் வைத்திருக்கிறேன்'.' ஒரு பழமொழி: பிரச்னைகளை ஆராயாமல் பயப்படக் கூடாது! :) :) Relaxplzz |
Posted: 07 Mar 2015 11:11 PM PST |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment