Relax Please: FB page daily Posts |
- நீங்கள் ஒரு முக்கியமான வேலைக்காக வீட்டிலிருந்து அவசர அவசரமாக கிளம்பறீங்க. வாசற்ப...
- ராமநாதபுரத்தில் பெய்யும் மழையில் 1% மழைகூட ஓராண்டு முழுக்க இங்கு பொழியாது. நன்ன...
- ;-) Relaxplzz
- கரெக்ட் தானே.... :)
- நூதன மருத்துவ மோசடிகள்... சோரியாஸிஸ், மஸ்குலார் டிஸ்ட்ரோபி, மூளை வளர்ச்சி குறைப...
- வெயில் ரொம்ப ஜாஸ்தி போல !!! ;-)
- :) Relaxplzz
- குட்டிக்கதை: ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்திய...
- அடப்பாவிகளா சன்டே அதுவுமா குளிக்க வேண்டாம்னு இருந்தவன இப்படி பூசி மொழுகிட்டீங்க...
- :) Relaxplzz
- :::மத்திய அரசாங்கத்தின் செல்வமகள் சேமிப்பு திட்டம்.:: ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ....
- சிறு வயதில் கண்களை இப்படி செய்து மற்றவர்களை பயமுறுத்தி விளையாடிய அனுபவம் உள்ளவர்...
- 35 நாளிலேயே வளரும் KFC சிக்கன்..!! உலகில் உயிரினங்களை கொல்லும் பெரிய பண்ணையை வை...
- :) Relaxplzz
- விவசாயத்திற்கு நாம் ஒன்றும் கிழிக்க வேண்டாம்.. பேரூந்தில் அழுக்கு உடையில் விவசா...
- எழில் கொஞ்சும் பசுமை வயல்வெளி.. இடம்: சுசீந்திரம், குமரிமாவட்டம்...
- காசு... பணம்.. துட்டு... Money... Money... பணம் இல்லாத போது ஹோட்டல்ல வேலை செஞ்ச...
- காயப்படுத்த பலர் இருந்தாலும் மருந்தாக சிலர் இருப்பதாலேயே நம் வாழ்க்கை அடுத்த க...
- இனிய காலை வணக்கம் நண்பர்களே... :)
- குட்நைட் செல்லம்ஸ் <3
- :) Relaxplzz
- பூஜை நல்லபடியா முடுஞ்சது..... டிரைவர் சீட்டு பக்கதுல எழுமிச்சை பழத்தை தொங்க விட்...
- 18+ . . .. கந்தசாமி ஒரு நாள் படுக்க போகுறதுக்கு முன்னாடி அவன் மகன் ரமேஷ் அழுதுக...
- :) Relaxplzz
- உங்கள் வீட்டில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் காலாவதியாகும் தேதி (Expiry date) தெ...
- மெசேஜ். அதாவது. S.M.S.இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரியுமா??? . . . . . . ....
- :) Relaxplzz
- :) Relaxplzz
- மக்கள் பிரச்சினையை மக்களிடம் கேட்பவரே உண்மையான தலைவன்
Posted: 22 Mar 2015 03:10 AM PDT நீங்கள் ஒரு முக்கியமான வேலைக்காக வீட்டிலிருந்து அவசர அவசரமாக கிளம்பறீங்க. வாசற்படியிலோ அல்லது கீழே கிடக்கும் ஏதாவது பொருளிலோ இடித்துக் கொள்கிறீர்கள். இந்த நேரம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள், "புறப்படும்போதே சகுனம் சரியில்ல. கொஞ்ச நேரம் உட்கார்ந்து தண்ணீர் குடித்து விட்டுப் போ" என்பார்கள். அப்டி சொன்னால் யூத் என்ன பண்ணுவாங்க. இன்னும் அந்த காலத்துலையே இருக்கீங்க. எவனோ திண்ணைல படுத்த வெண்ணை சொன்னத இன்னும் நம்பிண்டு இருக்கீங்கனு நக்கல் பண்ணுவோம், நையாண்டி பண்ணுவோம், கிண்டல் பண்ணுவோம், கேலி பண்ணுவோம். இது மூட நம்பிக்கை அப்டினு நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் இல்லை. நீங்கள் வேகமாக புறப்படும் போதே விவேகத்தில் இல்லை என தெளிவாகிறது. விவேகம் அற்ற வேகம். வெற்றியை தருமா? நிதானத்தோடு புறப்பட்டு இருந்தால் இடித்து கொள்ள மாட்டீர்கள்தானே? அப்படி நிதானம் இல்லாமல் செய்யப்போகும் காரியமும் வெற்றி பெறாது.அந்த நேரத்தில் நமது மூளையும் சரியாக சிந்திக்காது. அதனால்தான் சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு தண்ணீர் குடித்தால் மூளை அமைதி பெறும். பிறகு நம் சிந்தனையும் சரியான விதத்தில் செயல்படும். எதிலும் விவேகத்தை கடைபிடியுங்கள்.. Relaxplzz |
Posted: 22 Mar 2015 03:00 AM PDT ராமநாதபுரத்தில் பெய்யும் மழையில் 1% மழைகூட ஓராண்டு முழுக்க இங்கு பொழியாது. நன்னீர் ஏரிகள் எதுவும் இல்லை,ஆறுகள் இல்லை,நிலத்தடிநீர் இல்லை. ஓரளவிற்கு மேல் ஆழமாக தோண்டினால் கச்சா எண்ணெய் மட்டுமே கிடைக்கும். ஆனால் இந்த தேசம் தண்ணீரில் தன்னிறைவடைந்த தேசம்.24 மணி நேரமும் தடையில்லாமல் வீடுகளுக்கு தண்ணீர் வரும். முழுக்க முழுக்க கடல்நீரை மட்டுமே நம்பி நா நனைகிறது. குடிக்கும் நீர் கடலில் இருந்துதான் எடுக்கப்பட்டது என சத்தியம் செய்து சொன்னாலும் சிலர் நம்ப மறுப்பார்கள். 'காசுக்கு ஏற்ற தோசை' என்பதுபோல இங்கு தண்ணீர் 'காஸ்ட்லி'தான். 1லி பெட்ரோல் 1.80 திர்ஹாம்ஸ் (ரூ.30) 1லி தண்ணீர் குடுவை கடைகளில் 3 திர்ஹாம்ஸ் (ரூ.51)விலைக்கு விற்பனையாகும். Dubai Electricity and Water Authorityயால் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் நீர் இந்த அளவிற்கு அதிக விலை இருக்காது.நீரின் தரமும் நன்றாகவே இருக்கும். DEWA வீடுகளுக்கு தண்ணீரை விநியோகித்து மட்டும் கட்டணம் வசூலிப்பதில்லை.வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீருக்கும் அதன் அளவை பொறுத்து கட்டணம் உண்டு. வீடுகளிலிருந்து வெளியேறும் அந்த கழிவு நீர்தான் மறுசுழற்சி செய்யப்பட்டு சாலையோர மரங்கள்,பூச்செடிகள்,பூங்காக்களுக்கு சொட்டு நீர்,தெளிப்பு நீர் பாசன முறையில் பாய்ச்சப்படுகிறது. ஜீலை,ஆகஸ்ட் மாதங்களில் சர்வசாதாரணமாக 115° F வெப்பம் வீசும் காலத்திலும் இங்கு சாலை ஓரங்களில் பல வண்ண பூக்கள் பூத்துக்கொண்டிருக்கும். அந்த செடிகளின் வேர்களில் நீர் சொட்டிக்கொண்டிருக்கும். தண்ணீரை வீணாக்காமல் அதைக்கொண்டு நகரை அழகுபடுத்தி சுற்றுலா பயணிகளை ரசிக்க செய்கிறார்கள். இன்று உலக தண்ணீர் தினம் என்றதும் ,ஒரு காலத்தில் தண்ணீரில்லாத இந்த தேசம் இன்று நீர் மேலாண்மையில் பெற்றிருக்கும் ஆற்றலை எழுத வேண்டும் என தோன்றியது. - நம்பிக்கை ராஜ் @ Relaxplzz ![]() ![]() |
Posted: 22 Mar 2015 01:20 AM PDT |
கரெக்ட் தானே.... :) Posted: 21 Mar 2015 09:20 PM PDT |
Posted: 21 Mar 2015 09:10 PM PDT நூதன மருத்துவ மோசடிகள்... சோரியாஸிஸ், மஸ்குலார் டிஸ்ட்ரோபி, மூளை வளர்ச்சி குறைபாடு மாதிரி பிரச்சனைகளுக்கு 100% குணம் கிடையாது, மருந்துகள் மூலம் அதை கட்டுக்குள் வைக்க மட்டுமே முடியும். ஆனால் இதை சரி செய்வதாக கூறி கல்லா கட்டுறது இப்போதைய செம பிஸினஸ் அதை எப்படிலாம் பண்றாங்கன்னு ஒரு இஞ்சக்ஷன் ரிபோர்ட். ஊருக்குள்ள இந்த மாதிரி பிரச்சனை உள்ள ஆட்கள் யாருன்னு தெரிஞ்சிக்க ஒரு ஃபீல்ட் சர்வே நடக்குது... அப்புறமா அவங்க கிட்ட தற்செயலா யாரோ ஒருத்தர் கடை தெருவிலோ அல்லது டீ கடையிலோ என்னங்க இப்படி இருக்கீங்கன்னு ஆரம்பிச்சு.. அங்க ஒரு டாக்டர் இருக்கார் எனக்கு இப்படி தான் இருந்துச்சு முழுசா சரியா போச்சுன்னு சொல்வார்... 'எதை தின்னா பித்தம் தெளியும்'ன்னு இருக்கிறவங்க இதை நம்பி போனா 'ரின் சோப்பு' தான் மொத்தமா உருவிருவானுங்க. சித்த, ஆயுர்வேத மருத்துவர், யுனானி மருத்துவர்ன்னு குப்பானி வைத்தியம்ன்னு டீவில விளம்பரம் வரும். உலகத்துல தீர்க்க முடியாத வியாதி எல்லாம் தீர்க்கும் ரோசினி கீரை'ன்னு அறிமுகபடுத்துவாங்க ஆனால் அவங்களுக்கு வியாதி வந்தா மீனாக்ஷி மிஷன்ல போய் படுத்துக்குவாங்க.. இவங்க விளம்பரத்தை நம்பி போனா.. அடுத்து திருவோடு தான். ஆந்திரா வைத்தியர்ன்னு ஒரு க்ரூப் தெரியுது.. இவங்க ஊருக்கு வெளிய டென்ட் போட்டுக்குவாங்க, ஜிலேபிய பிச்சு போட்டா மாதிரி என்ன மொழின்னே தெரியாத எழுத்துல என்னென்னமோ எழுதியிருக்கும், இவங்க டார்கெட் ஆண்மை குறைவு / நரம்பு தளர்ச்சி தான் விபரமில்லாத விடலைல இருந்து மீண்டும் 20'க்கு ஏங்கும் 60 தான் இவங்க கன்னில சிக்குற க்ரூப், சிக்கிட்டா காற்று போன பலூன் தான் மிஞ்சும். வீட்டுக்கே வந்து நாடி பிடிச்சு ஜோசியமா வைத்தியமான்னு தெரியாம ஏதோ ஒன்னு பண்ணுற ஒரு க்ரூப் இருக்கு, இவங்க உங்களை நம்ப வைக்க அடிக்கிற ஒரு விசயம் 'எங்கிட்ட காசு குடுக்காதீங்க... நான் ஒரு மருந்து சொல்றேன் அதை உங்க ஊர்ல இருக்கிற சித்த மருந்து கடையில வாங்கிக்குங்க, எனக்கு 20 ரூ காணிக்கை மட்டும் போதும்'ன்னு, அப்படியே உருகி போய் ரொம்ப நல்லவருன்னுட்டு மருந்து வாங்க கடைக்கு போவீங்க.. அங்க கடைகாரன் கூட டீல் போட்டு சின்ன விபூதி டப்பாவை இவனே அடிச்ச மருந்து லேபிள் ஒட்டி 10,000 பில் போட்டு வைப்பான் நீங்களும் நம்ம்ம்ம்பி வாங்குவீங்க, அப்புறமா எல்லாம் வெம்பிடும். இது மாதிரி இன்னும் நிறைய இருக்கு அடுத்தடுத்து சொல்றேன்... இதுக்கெல்லாம் என்ன தான்யா பண்றதுன்னு கேக்குறீங்களா... உள்ளூர்ல இருக்கிற ஒரு படிச்ச மருத்துவரை போய் பாருங்க, சந்தேகத்தோட கேள்வி கேளுங்க, உங்க வியாதியை பற்றி விளக்க சொல்லுங்க, 4 தடவை போனா தெளிவா தெரிஞ்சிடும், பெரிய அளவில பில் போட்டா என்ன காரணம்ன்னு கேளுங்க, மருந்து பெயர் கேளுங்க, 4 இடத்துல விசாரிச்சு வாங்குங்க, தலையில துண்டை போட்டுட்டு போய் எந்த வைத்தியமும் பாக்காதீங்க.. நேர்மையா ஆமா எனக்கு வியாதி இருக்கு என்ன இப்போன்னு நெஞ்சை தூக்கிட்டு போய் மருத்துவம் பாருங்க, மனுஷன்னா வியாதி வராமலா இருக்கும்?? முக்கியமா ரொம்ப கூட்டமா இருக்கிற மருத்துவரை முடிந்த அளவுக்கு தவிருங்க... புது மருத்துவர்கள் இன்னும் ஆர்வமா பொறுமையா பார்ப்பாங்க.. அதனால அவங்களையும் ஆலோசனை பண்ணுங்க. Keep Enjoying with your problems... After all we are human beings.. Dr.Sarav Urs. Relaxplzz |
Posted: 21 Mar 2015 08:40 PM PDT |
Posted: 21 Mar 2015 08:30 PM PDT |
Posted: 21 Mar 2015 08:10 PM PDT குட்டிக்கதை: ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான். அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார். கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார். சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது." புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்!". பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது." சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? " சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை". இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்!". :) :) Relaxplzz |
Posted: 21 Mar 2015 07:50 PM PDT |
Posted: 21 Mar 2015 07:20 PM PDT |
Posted: 21 Mar 2015 07:10 PM PDT :::மத்திய அரசாங்கத்தின் செல்வமகள் சேமிப்பு திட்டம்.:: ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை உங்கள் பெண் குழந்தையின் கல்வி மற்றும் திருமணத்திற்கு சேமிக்கலாம். 9.1% வட்டியுடன் உங்கள் சேமிப்பு எந்த வரி பிடித்தம் இல்லாமல் திரும்ப கிடைக்கும். ஒரு ஆண்டில் குறைந்தது ரூ 1000 இந்த திட்டத்தில் செலுத்த வேண்டும் - நாள் வாரம் மாதம் என்று எத்தனை தவணையாக வேண்டுமானாலும் செளுத்தாலம் அதிக பட்சம் ரூ 1.5 லட்சம் வரை செலுத்தலாம். - இந்திய அஞ்சல் துறை சார்பில் "செல்வமகள் சேமிப்பு கணக்கு" திட்டத்தை மத்திய அரசு கடந்த மாதம் அறிமுகம் செய்தது. - இத்திட்டம் 11 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தை உடையவர்களுக்கு மட்டும். -மாதம் ரூ.500 செலுத்துகிறோம் என்றால், 14 ஆண்டுகளுக்கு ரூ.84 ஆயிரம் செலுத்தி, 21-வது ஆண்டில் ரூ.3,03,564 பெற வாய்ப்பு உள்ளது. - தொடர்ந்து 14 ஆண்டுகளுக்கு சேமிக்கலாம். முதிர்வு தேதி குழந்தையின் 18-வது வயது ஆண்டில் தொடங்குகிறது. - கல்வி மற்றும் திருமணத் தேவைக்கு, கட்டிய தொகையில் இருந்து 50 சதவீதத்தை வட்டியுடன் பெற்றுக்கொள்ளலாம் அல்லது உங்கள் குழந்தை 18 வயது அடையும் தருவாயில் இந்த கணக்கு இடை நீக்கம் செய்ய முடியும் அல்லது குழந்தையின் 21 வயது வரை காத்து இருந்து முழு வட்டியுடன் பெற்றுக்கொள்ளலாம். - இதற்கு வருமான வரி சலுகை உள்ளது. - பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலமாக கணக்கு தொடங்கலாம். - விண்ணப்பத்துடன் குழந்தையின் பிறந்த தேதி சான்று, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அடையாள சான்று, அவர்களது புகைப்படத்தை இணைத்து ஒப்படைக்க வேண்டும். - உங்கள் குழந்தை இந்த கணக்கை அவர்கள் படிப்பு திருமணதிற்கு பின்பும் தொடரலாம். முகம் தெரியாத தனியார் நிதி நிறுவனத்திடம் பணத்தை கொடுத்து தலையில் துண்டு போட்டு கொள்வதற்கு பதில் அரசாங்க சேமிப்பு திட்டங்களை பயன்படுத்துங்கள். மேலும் தகவல்களுக்கு அருகில் உள்ள இந்திய அஞ்சல் துறை அலுவலகத்தை அனுகவும். படித்தவர்கள் படிப்பரிவிலாத பாமர மக்களுக்கு இந்த திட்டம் குறித்து முடிந்தவரை பகிரவும். யாதுமாகி பக்கம் இந்த பதிவை தன் சொந்த செலவில் குறைத்து ஒரு லட்சம் பேரிடம் கொண்டு செல்லும். Relaxplzz |
Posted: 21 Mar 2015 07:00 PM PDT |
Posted: 21 Mar 2015 06:45 PM PDT 35 நாளிலேயே வளரும் KFC சிக்கன்..!! உலகில் உயிரினங்களை கொல்லும் பெரிய பண்ணையை வைத்திருப்பதே KFC சிக்கன் தான். இங்கே என்ன நடக்கிறது என்ற விடையத்தை ஆங்கில ஊடகங்கள் தற்போது போட்டு உடைத்து வருகிறார்கள். இங்கே வளர்க்கபப்டும் சிக்கனின் ஆயுட் காலம் எவ்வளவு தெரியுமா ? வெறும் 35 நாட்கள் தான். இந்த சிக்கன் அனைத்தும் "அலி". அவை ஆண் அல்லது பெண் கிடையாது. அதனால் அவை வேகமாக வளர்கிறது. அதற்காக ஒரு நச்சுப் பதார்த்தத்தை அவர்கள் தீனியில் கலந்து கொடுக்கிறார்கள். இதனை உண்ணும் இந்த சிக்கன் , வெறும் 35 நாட்களில் ராட்சச சிக்கனாக மாறிவிடும். பின்னர் அதனை வெட்டி பார்சல் செய்கிறார்கள். ஒரு வகையான கழி எண்ணையைப் பயன்படுத்தியே KFC சிக்கனை பொரிக்கிறார்கள். அந்த எண்ணை தரமான எண்ணை கிடையாது. அதில் காலஸ்ரோல் என்னும் கெட்ட கொழுப்பு அதிகமாக கணப்படுகிறது. இவை எமது உடலில் சென்று ரத்த நாளத்தில் கலந்து அங்கே படிய ஆரம்பிக்கிறது. படிப்படியாக அவை படிந்து ரத்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனையே நாம் மாரடைப்பு என்று கூறுகிறோம். இந்த சிக்கினை விரும்பி உண்ணும் பெண் பிள்ளைகள், 12 வயதில் அல்லது 10 வயதில் கூட வயதுக்கு வந்துவிடுகிறார்கள். காரணம் என்னவென்றால் சிக்கனில் உள்ள அந்த நச்சுப் பதார்த்தம் தான் என்கிறார்கள். இது பெண் பிள்ளைகள் உடலில் கலந்து பூப்படைவை ஊக்குவிக்கிறது. Relaxplzz ![]() |
Posted: 21 Mar 2015 06:30 PM PDT |
Posted: 21 Mar 2015 06:20 PM PDT |
Posted: 21 Mar 2015 06:10 PM PDT |
Posted: 21 Mar 2015 06:00 PM PDT காசு... பணம்.. துட்டு... Money... Money... பணம் இல்லாத போது ஹோட்டல்ல வேலை செஞ்சாலும் வீட்ல வந்து சாப்பிடுகிறான் பணம் இருக்கும் போது வீட்டுல சமச்சாலும் ஹோட்டல்ல போய் சாப்பிடுகிறான் பணம் இல்லாத போது வயத்தை நிரப்ப சைக்கிள்ல போறான் பணம் இருக்கும் போது வயத்தைக் குறைக்க சைக்கிள்ல போறான் பணம் இல்லாத போது சோத்துக்காக அலைகிறான் பணம் இருக்கும் போது சொத்துக்காக அலைகிறான் பணம் இல்லாதபோது பணக்காரனாக நடந்து கொள்கிறான்; பணம் இருக்கும் போது ஏழையாக காட்டிக் கொள்கிறான். நிம்மதியாக இருக்கும் போது பணத்தைத் தேடுகிறான் பணம் இருக்கும் போது நிம்மதியை தேடுகிறான் # பணம் மட்டுமல்ல பணத்தை வைத்திருக்கும் மனிதனும் ஒரு குரங்கு. # படித்ததில் பிடித்தது # Relaxplzz |
Posted: 21 Mar 2015 05:45 PM PDT |
Posted: 21 Mar 2015 05:30 PM PDT |
Posted: 21 Mar 2015 11:00 AM PDT |
Posted: 21 Mar 2015 10:47 AM PDT |
Posted: 21 Mar 2015 10:45 AM PDT |
Posted: 21 Mar 2015 10:10 AM PDT 18+ . . .. கந்தசாமி ஒரு நாள் படுக்க போகுறதுக்கு முன்னாடி அவன் மகன் ரமேஷ் அழுதுகிட்டு இருந்ததை பார்த்தான். "ஏண்டா அழுவுற?" "அது ஒண்ணுமில்லை நைனா. அத்தை சாகுற மாதிரி கனவு கண்டேன்" "அட. உன்னோட அத்தை ஒலகத்துலே எல்லாரையும் சாகடிச்சிட்டு தான்டா கடைசியா சாவா. நீ பயப்படாம தூங்கு" அடுத்த நாளே ரமேஷின் அத்தை செத்து விடுகிறாள். அடுத்த வாரத்தில் ஒருநாள், ரமேஷ் அதே போல அழுது கொண்டிருக்கிறான். "ஏன்டா அழுவுற?" "என்னோட வாத்தியார் சாவுற மாதிரி கனவு" "அடப்போடா. அப்படியெல்லாம் ஆகாது" அடுத்த நாளே ரமேஷின் வாத்தியார் மண்டையை போட்டார். அதற்கடுத்த வாரம், அதே போல அழுது கொண்டிருந்தான் ரமேஷ். "அடேய்… நாளைக்கு யாருடா சாவப் போறான்?" "அப்பா..!" "அடப்பாவி… கடைசியா என்னையே சாவடிச்சிக்கிறியே". புலம்பியவாறே மறுநாள் கோயில் கோயிலாக சென்று சாமியை வேண்டிக் கொண்டேயிருந்தான் கருத்து கந்தசாமி. எப்படியிருந்தாலும் சாவு நிச்சயம் என்று வேறு பயந்தான். அப்படியே ஒரு கோயிலிலேயே படுத்து தூங்கியும் விட்டான். மறுநாள் காலை எழுந்து பார்த்தால், ….அட..சாகவில்லை. ஜாலியா வீட்டுக்கு போனான். அவனது மனைவி அங்கே கத்திக் கொண்டிருந்தாள் :"யோவ், நேத்து எங்கேயா போனா? எதிர்த்த வீட்டுக்காரரு திடீர்ன்னு செத்து போயிட்டாரு! கந்தசாமி : ???????????????? :O :O சிரிக்க மட்டும் ;-) @ Relaxplzz |
Posted: 21 Mar 2015 10:01 AM PDT |
Posted: 21 Mar 2015 10:00 AM PDT உங்கள் வீட்டில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் காலாவதியாகும் தேதி (Expiry date) தெரிந்து கொள்ள வேண்டுமா? காலாவதியான கேஸ் சிலிண்டரைப் பயன்படுத்துவதால் பயங்கரமான ஆபத்துகள் வர வாய்ப்புகள் உள்ளன. அதனால் இனி உங்கள் வீட்டுக்கு சிலிண்டர் கொண்டு வரும் போதோ, அல்லது வாங்கும் போதோ, முதலில் காலாவதியாகும் தேதியைப் பாருங்கள். பிறகு வாங்குங்கள். ஏற்கனவே காலாவதியாகி இருந்தால் அதை திருப்பி தந்து விடுங்கள். ஆபத்தை தவிருங்கள். அந்த Expiry date - ஐ எப்படி கண்டுபிடிப்பது என்பதை பார்க்கலாம். படத்தில் இருப்பது போலத் தான் ஒவ்வொரு கேஸ் சிலிண்டரின் இன்சைட்(inside)-லும் எழுதியிருக்கும். முதலில் வரும் ஆல்ஃபபெட்ஸ் லெட்டர் (alphabets letter) மாதத்தின் பெயரைக் குறிக்கிறது. இரண்டாவதாக வரும் டூ டிஜிட்ஸ் நம்பர் (two digits number) வருடத்தின் (Year) பெயரைக் குறிக்கிறது. A , B, C & D இந்த நான்கில் ஒரு லெட்டர்தான் ஒவ்வொரு சிலிண்டரிலும் எழுதப்பட்டிருக்கும். அதன் முழு அர்த்தம் இது தான். A - மார்ச் -முதல் காலாண்டு(1st quarter) B - ஜூன் -இரண்டாம் காலாண்டு(2nd quarter) C - செப்டம்பர் -மூன்றாம் காலாண்டு(3rd quarter) D - டிசம்பர் - நான்காம் காலாண்டு(4th quarter) உதாரணத்திற்கு, மேலே உள்ள படத்தில் B-13 என்று எழுதப்பட்டிருக்கிறது. அதன் அர்த்தம் ஜூன் மாதம் 2013-ம் (ஜூன், ஜூலை, ஆகஸ்ட்) வரை அந்த சிலிண்டரைப் பயன்படுத்தலாம்...!" அறியாமை தவறல்லா..!! அறியாமல் இருப்பது தான் தவறு. உங்களுக்கு தெரிந்த இந்த தகவலை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். Relaxplzz ![]() |
Posted: 21 Mar 2015 09:50 AM PDT மெசேஜ். அதாவது. S.M.S.இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரியுமா??? . . . . . . . . . . . . வாங்க சொல்றேன் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . S -சுருக்கமா M -மேட்டரை S -சொல்லுங்க ;-) ;-) Relaxplzz |
Posted: 21 Mar 2015 09:46 AM PDT |
Posted: 21 Mar 2015 09:42 AM PDT |
Posted: 21 Mar 2015 09:40 AM PDT |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment