Relax Please: FB page daily Posts |
- #அப்பா என் ஒவ்வொரு பருக்கை சோறும் சொல்லும் அதற்குபின் ஒளிந்திருக்கும் என் தந்த...
- :) Relaxplzz
- உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்கள் பட்டியலில் திருவள்ளுவர். உலகின் தலைசிறந்த சிந்...
- திருமணமாகப் போகும் தன் மகளுக்கு ஒரு தந்தையின் அறிவுரை : வழக்கமாக மணப்பெண்ணிற்கு...
- :) Relaxplzz
- ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வ...
- :( Relaxplzz
- கணவன் : Sports channal வை..எனக்கு கிரிக்கெட் பார்க்கணும் . மனைவி : முடியாது !!!...
- :) Relaxplzz
- விக்கல் எடுத்ததும் தன் பிள்ளைகள் தான் நினைக்கின்றார்கள் என என்னி மகிழ்கிறாள்......
- காதலித்துப்பார் - இதில் ஒன்றேனும் நடக்கும்..! அதிகாலையில் உன்னை எழுப்ப அலாரம் வ...
- தெரிந்துகொள்வோம் * ஒட்டகம் 300 கிலோ எடையை சுமந்து செல்லும். * நாய்களுக்கு விய...
- ;-) Relaxplzz
- :) @relaxplz
- ;-) Relaxplzz
- (y) Relaxplzz
- :) Relaxplzz
- :) Relaxplzz
- "Be bold" இந்த ஒத்தை வார்த்தைதான் அவர் விடுக்கும் ஒற்றை செய்தி . அது அவர் வாழ்க்...
- குதிரையும், கழுதையும் ஒன்றுக்கொன்று பேசி கொள்கிறது. குதிரை- நான் பாய்ந்து ஓடின...
- இந்திய தமிழ் மீனவன் இலங்கையால் தாக்கப்படும் போது வராத தேசப்பற்று...! ........ஒர...
- நாங்க! இதான் நாங்க..!!! தீமிதிக்கிறப்ப, முன்னால ஓடினவன் கால்தடத்தை ஃபாலொ பண்ணி...
- தந்தைக்கு... ------------- 1. தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..! அவ்வாறு செய...
- கேளுங்கள் உண்மை செய்தியை உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா...
- மன்னிக்கிறவன் மனுசன்.... மன்னிப்பு கேக்கிறவன்...? | | | | | | | | | | | | | | |...
- பொருட்களை பயன்படுத்துங்கள், நேசிக்காதீர்கள்.. மனிதனை நேசியுங்கள், பயன்படுத்தாதீர...
Posted: 21 Mar 2015 09:32 AM PDT #அப்பா என் ஒவ்வொரு பருக்கை சோறும் சொல்லும் அதற்குபின் ஒளிந்திருக்கும் என் தந்தையின் ஓயாத உழைப்பை நான் பொய் சொல்லி பணம் கேட்கும்போது உருத்தவில்லை, ஆனால் நான் கேட்டதற்கு அதிகமாக நீ கொடுத்தபோது வலித்து உன் தோள்களில் என்னோடு சேர்த்து எவ்வளவு பாறம் இருந்தாலும் நீ சோர்வுற்றதில்லை நீ என்னை பற்றி அதிகமாகவே மற்றவர்களிடம் புகழும்போதுதான் தெரிந்தது என் மீது நீ கொண்ட நம்பிக்கை மோசமாக சண்டையிட்டு கோபித்து பேசாமல் இருந்தாலும், நான் சாப்பிடேனா என்று வாய் தவறி கேட்டுவிடும் குழந்தைதான் என் அப்பா! பலர் நாத்திகன் ஆனதற்கு இரண்டு காரணங்கள்! ஒன்று கடவுள் இல்லையென்பது இரண்டு தன் தந்தை இருக்கிறார் என்று... Relaxplzz ![]() "மனம் தொட்ட வரிகள்" - 1 |
Posted: 21 Mar 2015 09:29 AM PDT |
Posted: 21 Mar 2015 09:00 AM PDT உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்கள் பட்டியலில் திருவள்ளுவர். உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்கள் பட்டியலில் திருவள்ளுவர். சிங்கப்பூரில் உள்ள பிரபல MDIS கல்வி நிலைய வளாகத்தில் திருவள்ளுவர் சிலை.சிங்கையில் உள்ள பிரபலமான மேலாண்மை பட்டப்படிப்பு வழங்கும் MDIS என்னும் (Management Development Institute of Singapore) கல்வி வளாகத்தின் நுழைவாயிலில் உலகின் தலைசிறந்த பத்து சிந்தனையாளர்களின் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழர்களின் பெருமையான திருவள்ளுவருக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் நிறுவப்பட்டு பல ஆண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டில் பலருக்கும் இது குறித்த செய்தி தெரியாது. அதனால் இதை பற்றியான செய்தியை நாம் பதிவு செய்கிறோம். பல்லாயிரம் பன்னாட்டு மாணவர்கள் பயிலும் இந்த கல்வி நிலையித்தில் இத்தைகைய சிந்தனையாளர்களின் சிலைகளை வைத்திருப்பது , மாணவர்களுக்கு நன்னெறிகளை கற்றுக் கொடுப்பதொடு, நன்மை தீமைகளை மாணவர்கள் பகுத்துணர்ந்து அறிய இத்தகைய முயற்சியை மேற்கொண்டுள்ளது MDIS நிர்வாகம். இதில் உள்ள உலகின் தலை சிறந்த சிந்தனையாளர்களின் பட்டியில் இதோ… இடமிருந்து வலம்.. லூயிஸ் பாஸ்டர், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், இப் கால்டன், பென் ஜான்சன், அரிஸ்டாட்டில், திருவள்ளுவர், பிளாடோ, கன்புயுசியஸ், சாக்ரடிஸ் மற்றும் மரியா மாண்டேசரி இடமிருந்து வலம் ..Louis Pasteur Albert Einstein Ibn Khaldoun Ben Johnson Aristotle Thiruvallur Plato Confucius Socrates, and Maria Montessori இந்த சிலைகளை இந்த கல்வி நிலையத்தில் நிறுவுவதற்கு காரணமாக இருந்தவர் MDIS நிறுவனத்தின் பொதுச் செயலாளர் முனைவர் தேவேந்திரன் ஆவார். தமிழரான இவரது தாய் தந்தையின் பூர்வீகம் இலங்கை ஆகும். இக்கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களை மனதளவில் ஊக்கப்படுத்தவும், அவர்கள் வாழ்க்கைக்கு தேவையான ஒழுக்கங்களை பெறுவதற்கும் இந்த தலைசிறந்த மனிதர்களின் உருவச் சிலைகள் உதவும் என்பதற்காக தேவேந்திரன் இந்த சிலைகளை கல்வி நிலையத்தின் வாசலில் நிறுவி உள்ளார். பன்னாட்டு மாணவர்கள் இப்போது யார் திருவள்ளுவர் என்பது பற்றியும் உலகப் பொது முறையாம் திருக்குறள் பற்றியும் அறிந்து வருவது தமிழர்களுக்கு பெருமை தானே. இது போல் உலகில் பல்வேறு நாடுகளிலும் திருக்குறளின் பெருமையை பற்றியும் திருவள்ளுவரை பற்றியும் அறியுமாறு தமிழர்கள் தங்களால் முடிந்த செயல்களை செய்ய வேண்டும். தமிழுக்கு பெருமை சேர்க்கும் இத்தகைய செயலை நாம் அனைவரும் பாராட்டுவோம். Relaxplzz ![]() |
Posted: 21 Mar 2015 08:10 AM PDT திருமணமாகப் போகும் தன் மகளுக்கு ஒரு தந்தையின் அறிவுரை : வழக்கமாக மணப்பெண்ணிற்கு அம்மா மட்டும் தானே அறிவுரை கூறுவார்கள், பின் ஏன் புதிதாய் உன் அப்பா உனக்கு அறிவுரை கூறுகிறேன் என்று உனக்கு வியப்பாக இருக்கிறதா? செல்லமே! அப்பாவும் மனம் திறந்து உன்னிடம் சில விஷயங்களை கூற விரும்புகிறேன், உன் எதிர்கால மணவாழ்க்கையில் ஏதோ ஒரு தருணத்தில் உபயோகமாக இருக்கட்டும் என்ற நம்பிக்கையில்.. 1.என் அப்பாவின் நேர்மை, என் அப்பாவின் திறம்பட முடிவெடுக்கும் திறன், என் அப்பா...என அடுக்கடுக்காக நீ உன் அப்பாவிற்கு சூட்டும் க்ரீடமும் , என் அப்பாதான் 'பெஸ்ட்' என்ற எண்ணமும் உன் மனதின் ஆழத்தில் மட்டுமே வைத்துக்கொள். வார்த்தைகளில் வெளிப்படுத்தி 'உன்னவரின்' மனதில் எரிச்சலை உண்டு பண்ண வேண்டிய அவசியம் இல்லை.உன் கணவரிடம், "என் அப்பா நேரம் தவற மாட்டார்"," என் அப்பா அதிகாலையில் உடற்பயிற்சி செய்வார்" என்று அப்பா புராணம் பாடாதே கண்ணம்மா. உன் அப்பாவும் ஒரு காலத்தில் காலை 8 மணி வரை தூங்கிய சோம்பேரி தான். 2. உன் பிடிவாதங்களை எல்லாம் கோபத்துடன் கையாளாமல் அப்பா பொறுத்துக்கொண்டது போல், உன் கணவரும் சகித்துக்கொள்வார் என்று எதிர்பார்க்காதே. என் வயதிற்கே உரிய பொறுமை மற்றும் உன் மீதான கண்மூடித்தனமான பாசமும் என் கோபங்களை கண் மறைத்திருக்கலாம்.அவரும் உன் பிடிவாதங்களுக்கு பின்னிருக்கும் குழந்தைதனத்தை புரிந்துக் கொள்ள அவகாசம் கொடு. முக்கியமாக உன் பிடிவாதங்களை தளர்த்தி, அப்பாவிற்கு பெருமை சேர்க்கப்பார். 3.சிறு சிறு வாக்குவாதங்கள்,கருத்து வேறுபாடு உங்கள் இருவருக்குள்ளும் வர தான் செய்யும்.அச்சமயங்களில் எல்லாம், "நான் என் அப்பா வீட்டிற்கு போகிறேன் "," எனக்கு என் அப்பா இருக்கிறார் " என்ற வசனங்களை பேசி உன் மேல் அவருக்கு கசப்பு வர வைத்து விடாதே.உன் கணவர் தான் இனி உன் உலகம் என்பதை அவருக்கு புரிய வை.நீ அவருக்கு கொடுக்கும் முக்கியத்துவமும்,மரியாதையும் அவர் மனதில் உன்னை சிம்மாசனம் போட்டு உட்கார வைக்கும். சுருக்கமாக கூற வேண்டுமானால்.... *அப்பா புராணம் பாடாதே. *அப்பாவோடு ஒப்பிடாதே . *'அப்பா செல்லம் ' என்ற பட்டம் பயன் தராது . *அப்பாக்கு கொடுத்த க்ரீடத்தை அவருக்கும் கொடு. 22 வருடங்கள் உன் கரம் பிடித்து நான் கற்றுக்கொடுத்த நற்பண்புகளை,இனிமேல் உன் கணவரின் கரம்கோர்த்து வெற்றியும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு வாழ்க்கை வாழ்ந்துக் காட்டுவதில் நிரூபித்துக் காட்டு. நீடுடி வாழ வாழ்த்துகள்....! -அன்புடன் அப்பா. - Sathya Priya. Relaxplzz |
Posted: 21 Mar 2015 07:17 AM PDT |
Posted: 21 Mar 2015 07:03 AM PDT |
Posted: 21 Mar 2015 06:58 AM PDT ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர். நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது அந்த அணுக்கள் குறைந்த ரத்தம் உடல் முழுவதும் உற்சாகமாக ஓட முடிவதில்லை. நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி வதில்லை. உடல் களைப்பு அடைகிறது. பத்து பேர்கள் செய்யவேண்டிய வேலையை இருவர் செய்வார்களானால், எவ்வளவு தாமதம் ஆகுமோ, எவ்வளவு தடங்கல் ஏற்படுமோ, அதே தடங்கலும், தாமதமும் நம் உடலில் ஏற்படுகிறது. உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது மேலே குறிப்பிட்ட அத்தனை குறைபாடுகளும் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்படுகிறது. நமது உடல் அதற்கு தேவையான சத்துக்களை, நாம் உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்து பிரித்து எடுத்துக் கொள்ளுகிறது. எவ்வளவு சத்துக்கள், எந்தெந்த சத்துக்கள் தேவையோ, அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிருந்து வெளியேற்றி விடுகிறது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை அளவு சத்துக்களையும் உடல் ஏற்றுக்கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது. ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ரத்தத்தில் எவ்வளவு அளவு ஹீமோகுளோபின் இருக்கிறது என்பதை சோதனைச் சாலையில் ரத்தத்தை பரிசோதிக்கும் பொழுது தெரியவரும். ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது நுரையீரலுக்குச் சென்று நாம் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும்போது, அந்த மூச்சுக் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை ரத்தம் ஏற்று உற்சாகம் பெறுகிறது. பிறகு ரத்தம் உடல் முழுவதும் சுற்றி வரும் பொழுது, தன்னில் ஏற்கும் கழிவுப் பொருட்களை கார்பன்டை ஆக்ûஸடு ஆக மாற்றி, நுரையீரலுக்கு திரும்ப வந்து வெளியேற்றுகிறது. பிறகு உற்சாக ரத்த ஓட்டமாக மாறி உடலுக்கு சக்தியூட்டுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவிலுள்ள சத்துக்களை ரத்தத்தில் ஏற்றுக்கொண்டு, உடலில் உள்ள பல சுரப்பிகளுக்கு வழங்கி, அவைகளை நன்கு இயக்கி, உடலுக்கு வேண்டிய திரவங்களை உற்பத்தி செய்ய வைக்கிறது. உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள். காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். பிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள். ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக்கொண்டு அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள், காலையில் 6மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்று விட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள். மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள். நாட்கள் காலை 6மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி. 1-வது நாள் 1, 1, 1, -3. 2-வது நாள் 2, 2, 2, = 6. 3-வது நாள் 3, 3, 3, = 9. 4-வது நாள் 4, 4, 4, = 12. 5-வது நாள் 4, 4, 4, = 12. 6-வது நாள் 4, 4, 4, = 12. 7-வது நாள் 3, 3, 3, = 9. 8-வது நாள் 2, 2, 2, = 6. 9-வது நாள் 1, 1, 1, = 3. ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள். தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும். உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். இப்படி செய்து இருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர்,ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும் செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம். Relaxplzz ![]() "உணவே மருந்து" - 2 |
Posted: 21 Mar 2015 06:49 AM PDT |
Posted: 21 Mar 2015 06:44 AM PDT |
Posted: 21 Mar 2015 06:40 AM PDT கணவன் : Sports channal வை..எனக்கு கிரிக்கெட் பார்க்கணும் . மனைவி : முடியாது !!! கணவன் : முடியாது ..கோபத்துடன் இரு பார்கிறேன்...!!! மனைவி :என்ன பார்க்கறீங்க??? . . . . . . . . . . . . . . . . . கணவன் :நீ என்ன channel பார்க்கிறாயோ..அதேயே நானும் பார்கறேன்னு சொன்னேன் !!!!!! :P :P Relaxplzz |
Posted: 21 Mar 2015 06:07 AM PDT |
Posted: 21 Mar 2015 06:04 AM PDT விக்கல் எடுத்ததும் தன் பிள்ளைகள் தான் நினைக்கின்றார்கள் என என்னி மகிழ்கிறாள்... முதியோர் இல்லத்தில் இருக்கும் தாய்...!!! -- TP Kannan ![]() #ரிலாக்ஸ்_நறுக்ஸ் - 5 |
Posted: 21 Mar 2015 05:15 AM PDT காதலித்துப்பார் - இதில் ஒன்றேனும் நடக்கும்..! அதிகாலையில் உன்னை எழுப்ப அலாரம் வைத்துவிட்டு, அலாரத்தை நீ எழுப்புவாய் நடைபாதை சாக்கடைநாற்றம் உன் நாசியைத் துளைக்காது கோவில்மணி ஓசையில் சிறகைக்கும் பறவைகளை ரசிப்பாய் மொட்டை வெயிலில், மொட்டைமாடியில் கவிதைகள் பிறக்கும் மழையையும் ரசிப்பாய் உச்சி வெயிலையும் ரசிப்பாய் தங்கையிடம் அத்தனையும் விட்டுக்கொடுப்பாய் அம்மாவை அவ்வப்போது அன்போடு கட்டியணைப்பாய் சிலமுறை முத்தம் கொடுப்பாய் என்றுமே கேட்காத அப்பா சொல்லை தட்டாமல் கேட்பாய் அவள் சிணுங்களை செல்போனில் ரசிக்க, சில்லறையைச் சேகரிப்பாய் ஆடைகளைக் களைகையில் அவனை நினைத்துக்கொள்வாய் (பெண்களுக்கு மட்டும்) நீ நாத்திகனானாலும் ஆத்திகத்தை அவ்வப்போது ஆதரிப்பாய் கல்லூரி, அலுவலகம் செல்லும்முன் - நீ கடைசியாகப் பார்ப்பது கண்ணாடியாகத்தான் இருக்கும் வாடிக்கிடக்கும் பூச்செடியைக் கண்டால் வருத்தப்படுவாய் பூங்காவில் சிறகடிக்கும் பட்டாம்பூச்சிகள் - உன் நண்பர்கள் பட்டியலில் இடம்பிடிக்கும் காரணமின்றி சிரிப்பாய் பெண்களை மதிப்பாய் கொலுசொலியில் வருவது சத்தமல்ல.. இசை என்பாய்.. வாலிக்கும், வைரமுத்துவிற்குமுள்ள ரசிகர்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடும் உனது கணினி பதிவிறக்கத்தில் காதல் படங்களே அதிகமாக இருக்கும் குட்டி குழந்தைகள் கிடைத்தால் குட்டி முத்தங்கள் கொடுப்பாய் மழையில் நனையும் வேளை, அவள் முந்தானை உன் முகம் துடைக்கும் கைக்குட்டையாகும் ஆயிரம்பேர் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் காய்கறிச்சந்தையில், எங்கோ ஒலிக்கும் இளையராஜாவின் இசை உன் செவிமடல்களை வருடும் ஊர் உறங்கும் வேளையில்... நத்தைக்கூட்டில் குடியேறி, சிலந்திவலை ஊஞ்சலில் அவளோடு உறவாடுவதாய் கனவு காண்பாய் அவளோடு இருக்கப் பிடிக்கும் இல்லை, தனிமையில் கிடந்து தவிக்கப் பிடிக்கும் தமிழை கொலைசெய்தேனும் கவி புனைவாய் - அதில் அவளது முகம் எப்படியும் நிலவோடு ஒப்பிடப்பட்டிருக்கும் சாதி மதங்களுக்கு சமாதிகட்ட வேண்டுமென்பாய் அறிவுரைகள் சொல்வாய். சுற்றி இருப்போருக்கு தலை சுற்றும்வரை... யாவற்றிற்கும் மேலாக.., அவள் காதலை ஏற்கும்வரை குடம் குடமாய் குடித்துவிட்டு - இன்று குடி குடியைக் கெடுக்குமென்பாய்.. டாஸ்மாக்கை ஊரைவிட்ட ஒழிக்க வேண்டுமென்பாய். இத்தனையும் நடக்கும்... **அன்பானா காதலி அழகாக அமையும் பட்சத்தில்..! ♥ ♥ Relaxplzz |
Posted: 21 Mar 2015 04:10 AM PDT தெரிந்துகொள்வோம் * ஒட்டகம் 300 கிலோ எடையை சுமந்து செல்லும். * நாய்களுக்கு வியர்ப்பது கிடையாது. * நத்தைகளில் 80 ஆயிரம் வகைகள் உள்ளன. * தன் காதை நாவால் சுத்தம் செய்யும் விலங்கு ஒட்டகம். * பென்குயினால் பறக்க முடியாது. ஆனால் 6 அடி உயரம் வரை குதிக்கும். * 23 நொடிகள் மட்டுமே பறக்கும் திறனுடைய பறவை கோழி. * யானையின் துதிக்கையில் 4 லட்சம் தசைகள் உள்ளன. * சிப்பியில் முத்து விளைய 15 ஆண்டுகள் ஆகும். * திருக்குறளில் பயன்படுத்தாத ஒரே உயிரெழுத்து ஒள. * மிக நீண்ட நாள் உயிர் வாழும் விலங்கு ஆமை. * தாய்லாந்தில் உள்ள ராயல் டிராகன் என்ற உணவகம் உலகில் மிகப் பெரியது. * சிறுத்தைகள் மணிக்கு 76 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும். * மரங்கொத்தி பறவைகள் ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தைக் கொத்துகின்றன. * ஜவஹர்லால் நேரு சிறையில் இருந்த காலத்தில் தனது மகள் இந்திராவுக்கு 930 கடிதங்கள் எழுதினார். * எறும்புகள் தனது மோப்ப சக்தியை இழந்துவிட்டால் இறந்துவிடும். * வண்ணத்துப் பூச்சி கால்களால் ருசியை உணர்கிறது. * பாம்புக் கடி விசமுறிவு மருந்தின் பெயர் ஆன்டி வெனின். * விலங்குகளில் மிகச் சிறிய இதயத்தைக் கொண்டது சிங்கம். * 1லிட்டர் கடல் நீரில் 35 கிராம் உப்பு உள்ளது. * சோதனைக் குழாய் மூலம் முதல் எருமைக் கன்றை உருவாக்கிய நாடு இந்தியா. * தொலைபேசி, வானிலை, வானொலி இந்த மூன்றிற்குமாக ஒரே செயற்கைக்கோளை உலகில் முதன் முதலாக அனுப்பிய நாடு இந்தியா.! Relaxplzz |
Posted: 21 Mar 2015 03:43 AM PDT |
Posted: 21 Mar 2015 03:31 AM PDT |
Posted: 21 Mar 2015 02:43 AM PDT |
Posted: 21 Mar 2015 02:01 AM PDT |
Posted: 21 Mar 2015 12:47 AM PDT |
Posted: 21 Mar 2015 12:33 AM PDT |
Posted: 21 Mar 2015 12:24 AM PDT "Be bold" இந்த ஒத்தை வார்த்தைதான் அவர் விடுக்கும் ஒற்றை செய்தி . அது அவர் வாழ்க்கை சூத்திரம் கூட . பேசும் வார்த்தைகளில் சுயநலம் துஞ்சூண்டு கூட அண்டவிடுவதில்லை இந்த போராளி .நாம் இங்கே ஏசியில் அமர்ந்து விடுக்கும் சவால்களை , நேரடியாக களத்தில் விடுகிறார் இந்த 80 வயது சமூக ஆர்வலர் . முந்தாநாள்தான் ஆட்சேபத்துக்குறிய கைதுக்குள்ளாகியவர், எடுத்த அடுத்த ஆயுதம் ஆளுங்கட்சி அலுவலக வாசலில் இருந்த விளம்பர தட்டி அகற்றியது. தைரியசாலிக்கு உடல்பலம் தேவையில்லை , மனதைரியம்தான் மூலதனம் என பறைசாற்றும் traffic Ramasamy அவர்களுக்கு என் அன்புகள் .. - Nagaraj Nataraj Relaxplzz ![]() |
Posted: 20 Mar 2015 08:15 PM PDT குதிரையும், கழுதையும் ஒன்றுக்கொன்று பேசி கொள்கிறது. குதிரை- நான் பாய்ந்து ஓடினால் பூமியே அதிரும், தெரியுமில்லை. கழுதை- நான் எட்டி உதைச்சால் எட்டு பல்லாவது கொட்டும். தெரியுமில்லை. குதிரை- ரொம்ப அழகாக இருக்கும் பெண்களை அரபு குதிரைனு சொல்வாங்க தெரியுமில்லை கழுதை- நிறைய மனிதர்கள் உருப்படாத கழுதைனு பேர் வாங்கின்டு இருக்காங்க, தெரியுமில்லை குதிரை- சரி, இந்த மனிதர்கள் மாதிரி உருப்படாத பெருமை பேச்சு வேண்டாம். வா, உருப்படற வேலையை பார்ப்போம். மிருகங்கள் கலாய்க்கும் நிலையில் தான் இன்று பல மனிதர்கள், இருக்கிறார்கள். வெற்றி பேச்சு பேசாமல் வெட்டி பேச்சு பேசி கொண்டிருக்கிறார்கள். :) :) Relaxplzz |
Posted: 20 Mar 2015 06:00 PM PDT இந்திய தமிழ் மீனவன் இலங்கையால் தாக்கப்படும் போது வராத தேசப்பற்று...! ........ஒரு அரசியல்வாதி மக்களை ஏமாற்றும் போது வராத தேசப்பற்று.....! ......ஒரு அரசு அதிகாரி லஞ்சம் வாங்கும் போது வராத தேசப்பற்று....! ........ஒரு அப்பாவி அநியாக்காரர்களால் பாதிக்கப்படும் போது வராத தேசப்பற்று...! ........வறுமைக்கூட்டிற்கு கீழ் வாழும் ஒரு குடி மகனுக்கு அரசின் திட்டங்கள் போய் சேராத போது வராத தேசப்பற்று....! ........ஒரு இந்தியன் வெளிநாட்டில் அநியாயமாக கொல்லப்படும் போது வராத தேசப்பற்று....! ...........ஒரு மாநில அரசாங்கமே தன் குடிமக்களை கொடூரமாக கொன்றழிக்கும் போது வராத தேசப்பற்று....! ......அட கேவலம் இங்கிலீஷ்காரன் விளையாட்டு கிரிக்கெட்டு பார்க்கும் போது மட்டும் எங்கிருந்துடா வந்து இறங்குது அந்த தேசப்பற்று....?????.. .............எல்லாமே விளையாட்டு.........தன் தேசப்பற்று, இறையாண்மை எல்லாத்தையும் கிரிக்கெட்டிற்கு அடகு வைத்து விட்டு...நிற்கிறான் சுதந்திர இந்தியாவின் சாமானிய இந்தியன்....!! நன்றி :- Sheik Mohamed Badhusha Relaxplzz |
Posted: 20 Mar 2015 06:00 PM PDT நாங்க! இதான் நாங்க..!!! தீமிதிக்கிறப்ப, முன்னால ஓடினவன் கால்தடத்தை ஃபாலொ பண்ணி நாலே ஜம்ப்ல தாண்டிடுவோம்... . வாசல்ல எறும்புக்கு தீனியா அரிசிமாவு கோலம் போடுவோம்! வீட்டுக்குள்ள பூச்சி மருந்த தெளிச்சு கொன்னுடுவோம்.. . இந்தியாவை தவிர மத்த எல்லா நாடும் சொர்க்கம்னு நினைபோம் . . புதுசா கார் வாங்கி சீட்ல இருக்குற பாலித்தீன் கவர கிழிக்காமலே கார்ல சுத்துவோம் . அடுத்த முதல்வர கோடம்பாக்கம் சாலிகிராமம் பக்கம் சல்லடை போட்டு தேடுவோம் .. . பெண்களை கடவுளாக வணங்குவோம். பெண்களுக்கு33% இடஒது க்கீட்டை எதிர்ப்போம்.. . சென்னைக்கு மிக அருகில் அப்டின்னு சொல்லி திண்டிவனத்துல இருக்குற ஃப்ளாட்ட காமிப்போம்... . கூல்டிரிங் பெட் பாட்டில வாட்டர் கேனா யூஸ் பண்ணுவோம் . மார்கழி மாசம்..கோவில்ல புனல் ஸ்பீக்கர கட்டி..நாலாப்புறமும் ஒரு பயலையும் தூங்க விட மாட்டோம்.. . ஷாப்பிங் மால்ல மறுபேச்சில்லாம பொருள் வாங்கிட்டு வெளில இளனி விக்கறவன்ட பேரம் பேசுவோம்.. . சினிமாக்காரன் விளம்பரத்திற்கு வந்தா பினாயிலா இருந்தாலும் வாங்கி குடிப்போம்.. . வெளிநாட்டுக் காரன்னாலே புத்திசாலின்னு நெனைக்கறது கோவிலில் சாப்பாட்டை பிரசாதம் என்றுசொல்லி வீட்டுக்கும் PARCEL வாங்குவது.. . அனுஷ்கா வந்தா ஜோதிகாவ மறப்போம், சமந்தா வந்தா அனுஷ்கா மறப்போம்,நஸ்ரிய ா வந்தா சமந்தாவ மறப்போம் . 26 எழுத்து கொண்ட ABCD வரிசையாக சொல்லுவோம் ,ஆனா18 எழுத்து கொண்ட கஙசஞ மாத்தி கூட சொல்ல மாட்டோம் . இண்டர்நெட் கனக்க்ஷன் இருக்கும் அல்லது நெட் பேக் தீரும் வரைதான் மக்கள் போராட்டம், பெண்ணியம் , ஜாதி கொடுமை , மனித நேயம் பற்றி பேசுவோம் நெட் பேக் தீர்ந்த பிறகுலாக் அவுட் செய்து விட்டு தூங்கி விடுவோம்.. இதான் நாங்க.. :) :) Relaxplzz |
Posted: 20 Mar 2015 10:10 AM PDT தந்தைக்கு... ------------- 1. தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்..! அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்.. 2. தந்தையின் கண்டிப்பை பொருத்து கொள்ளுங்கள்..! அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்.. 3. தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..! அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்யக் கூடும்..! 4. தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள்..! ஏனென்றால் பிறர் நமக்கு ஏதும் சொல்லும் நிலமை வரக் கூடாது..? 5.தந்தைக்கு முன்பு பார்வையை தாழ்த்தி கொள்ளுங்கள்..! அதனால் இறைவன் மக்கள் பார்வைக்கு முன்பு உயர்ந்த கண்ணியம் அளிப்பான்..! 6. தந்தையின் வாழ்க்கை; அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும்..! அந்த ஒவ்வொரு பக்கத்தைக் கொண்டு (பாடமாக) பயன் அடைந்துக் கொள்ளுங்கள்..! "தந்தை என்பவர் அனைத்தையும் விட மிக சிறந்த முறையில் நன்மை செய்யக் கூடியவர், மிக அழகாக பாதுகாக்க கூடியவர் ஆவார்..! அவரின் மரணத்திற்கு முன்பே.! அவருக்கு மரியாதை செய்வோம்.! அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளில் குறை வைத்து விட வேண்டாம். Relaxplzz |
Posted: 20 Mar 2015 10:00 AM PDT கேளுங்கள் உண்மை செய்தியை உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா....??? ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுக்காரர்கள் ஏமாற்றத்தான் செய்வார்கள் NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள். FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது. VICKS பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது. LIFE BOUY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப்பும் அல்ல. ஆனால், அது ஒரு cabolic சோப்பு, மிருகங்களை குளிப்பாட்ட பயன்படுவது. ஐரோப்பாவில், அது நாய்களை குளிப்பாட்ட பயன்படுகிறது, ஆனால், நம் நாட்டில்.... ? மாப்ளே, நீ எந்த சோப்பு போட்ற? COKE மற்றும் PEPSI ஆகியவை, உண்மையில், கழிவறையை சுத்தம் செய்பவை. அதில் 21 மாறுபட்ட விஷம் கலந்திருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், அதன் விற்பனை, இந்திய பாராளுமன்றத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அப்போ, இந்தியாகாரன் எல்லாம் இளிச்சவாயனா.? இனிமே டிவி ல, coke குடிங்க, பெப்சி குடிங்கன்னு எவனாச்சும் வரட்டும், மவனே, நாஸ்தி தான். வெளிநாட்டு கம்பனிகள் ஊட்டச்சத்து மிக்க பானம் என்று, பூஸ்ட், காம்ப்ளான், HORLICKS, மல்டோவா, PROTINEX ஆகியவற்றை விற்கின்றன. ஆனால், அதை, இந்தியாவில் டெல்லியில் ALL INDIA INSTITUTE (இந்தியாவில் உள்ள மிக பெரிய பரிசோதனை சாலை) இல், பரிசோதித்தபோது, நில கடலையிளிருந்து எண்ணையை பிரித்தெடுத்த பிறகு வரும் கழிவிலிருந்து தயாரிக்கபடுகிறது. அது, விலங்குகள் உணவாகும். இந்த கழிவிலிருந்தே, ஆரோக்கிய பானங்கள் தயாரிக்கிறார்கள். ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு பத்து மணி நேர தொடர்ச்சியான அறுவை சிகிச்சை நடந்தது. அவரது, பெரிய கணையத்தை மருத்துவர்கள் அறுத்து, அகற்றி விட்டார்கள். அதன் பிறகு, மருத்துவர்கள், அது கெட்டு போக காரணம், coke மற்றும் பெப்சி குடித்ததே என்று. அதிலிருந்து, அவர் பெப்சி, coke ஆகிய விளம்பரங்களுக்கு நடிப்பதில்லை. PIZZA பற்றி பார்ப்போம். PIZZA விற்கும் கம்பனிகள் "Pizza Hut, Dominos, KFC, McDonalds, Pizza Corner, Papa John's Pizza, California Pizza Kitchen, Sal's Pizza" இவை அமெரிக்கன் கம்பனிகள். PIZZA சுவையாக இருக்க வேண்டி, E-631 என்ற flavor Enhancer சேர்க்கபடுகிறது. இது, பன்றி, கோழி இறைச்சியில் இருந்து தயாரிக்கபடுகிறது. கீழ்கண்ட குறியீடுகள், உங்கள் உணவு பாக்கெட்களில் கானபட்டால், அதில் என்னென்ன கலந்திருக்கும் ? E 322 – எருது E 422 – ஆல்கஹால் E 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல் E 471 – எருது & ஆல்கஹால் E 476 – ஆல்கஹால் E 481 – எருது & கோழி E 627 – ஆபத்தான கெமிக்கல் E 472 – எருது, கோழி மற்றும் இறைச்சி E 631 – பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு. Note – இந்த code களை, பெரும்பாலான வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில் காணலாம். அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள் கம், டாபிஸ், குர்குரே மற்றும் மாகி (ஆமா, ரெண்டு நிமிஷத்துல தயாராகுமே, அதேதான்) நுகர்வோரே, விழித்து கொள்ளுங்கள் !!! * மாகி யில், flavor (E-635 ) என்ற code இருக்கும். *கூகிள் இல், கீழ்கண்ட code களையும் தேடி பாருங்கள், இவை அனைத்துமே, ஒவ்வொன்றாய் குறிக்கும் :- E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904. தயவு செய்து உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிருங்கள். !!! இயற்கையாய் இயற்கையோடு வாழ..! இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..! ஆலமர விழுதுகளாய் நாம் பகிர்வோம்..! மனிதநேய விதைகளாய் மாறுவோம்..! பொது நலம் கருதி வெளியிடுவோர் :-உங்கள் கிராமத்து இளைஞன். Relaxplzz ![]() |
Posted: 20 Mar 2015 09:50 AM PDT மன்னிக்கிறவன் மனுசன்.... மன்னிப்பு கேக்கிறவன்...? | | | | | | | | | | | | | | | புருசன் . :P :P - Mohan Doss M |
Posted: 20 Mar 2015 09:45 AM PDT |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment