Relax Please: FB page daily Posts |
- :) Relaxplzz
- கல்லிலே கலை வண்ணம் அழகு
- இலவச வீட்டில் இலவச அரிசி வாங்கி இலவச கிரைண்டரில் மாவரைச்சு இலவச காஸ் அடுப்பில் இ...
- தமிழ் பேச வெட்கப்படும் சில தமிழர்களுக்கான செய்தி இது !! PETER விடும் சில தமிழ் ம...
- (y) (y) Relaxplzz
- காம்ப்ளான் குடிச்சா வளரலாம், எங்கே ஜப்பான்காரனுக்கு குடு பார்போம்! ஏழு வாரங்களி...
- இந்த ஓவியத்தை வரைதவர்க்கு என் முதல் பாராட்ட்டுகள் .... இந்த ஓவியத்தில் எத்தனை உர...
- அழகு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- மோடி கேன்டீன்ல சாப்ட்டு அதற்கான தொகையை கொடுத்தார் -செய்தி # அப்போ நாங்கெல்லாம்...
- வெள்ளை காக்கா...பார்த்துகோங்க....
- ஆதார் அட்டை பின் விளைவுகள்..! நண்பர் ஒருவர் ஆதார் அட்டை ஜோக் என்று ஒன்றைப் பகிர...
- தமிழர்கள் அனைவரும் தற்காலத்தில் பின்பற்ற வேண்டிய அனைத்து செய்திகளையும் ஒரே கட்டு...
- :) Relaxplzz
- செருப்பு தைப்பவரிடம் காட்ட வேண்டிய மரியாதை !!! 1. செருப்பை கழட்டி உங்கள் கையால்...
- #பபி மோடி மிகபெரிய சாதனை. காங்கிரஸ் மன்மோகன்சிங் ஆட்சியில் 9 ஆண்டு கழித்து போர...
- சிறுவயதில் பூவரசம் இலையில் பீப்பி செய்து, ஊதி விளையாடி அனுபவம் உள்ளவர்கள் லைக் ப...
- :) Relaxplzz
- ;-) Relaxplzz
- இரவு 11 மணி சாலையில் ஓர் வாடகை டாக்ஸி வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நடுத்தர...
- இதோ இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம்..? 01. 1831 ல் வியாபாரத்தில் தோல்வி....
- :P Relaxplzz
- மனித உடல்45 யூனிட் வரை உள்ள வலியை மட்டுமே உணரும்..... ஆனாலும், பிரசவத்தின் போது...
- தமிழகத்தில் தன்னை விமர்சிக்க கலைஞர் இடம் கொடுத்த அளவுக்கு, வேறெந்த தலைவரும் தருவ...
- பள்ளி கல்லூரியில் நம்மல் அநேகர் இப்படித்தான்... உண்மையென நினைப்பவர்கள் லைக் பண்...
- (y) Relaxplzz
- Nice illusion... இருக்கு ஆனா இல்ல.. படத்தை நல்லா குறு குருனு ஒரு வாட்டி பாருங்க...
- தமிழ் சினிமாவின் விதிகள்.... 1.பத்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா பேஷன்ட் போலச்ச...
- பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி சாப்பிடக்கூடியது கொய்யாப...
Posted: 02 Mar 2015 09:30 AM PST |
Posted: 02 Mar 2015 09:20 AM PST |
Posted: 02 Mar 2015 09:10 AM PST இலவச வீட்டில் இலவச அரிசி வாங்கி இலவச கிரைண்டரில் மாவரைச்சு இலவச காஸ் அடுப்பில் இட்லி சுட்டு இலவச மிக்ஸியில் சட்னி அரைச்சு இலவச மின்விசிறியப் போட்டு இலவச TV-யப் பாத்துக்கிட்டு நோய் வந்தா இலவச இன்சூரன்சில் சிகிச்சை பெற்று இலவச 4 கி தங்கத்துடன் இருபத்தைந்தாயிரம் ரூபா வாங்கி கலியாணம் பண்ணி இருபதினாயிரம் உதவியுடன் குழந்தை பெற்று இலவச சத்துணவுடன் இலவச கல்வியும் நல்கி இலவச புத்தகம் இலவச சைக்கிள் இலவச செருப்பு இலவச சைக்கிள் இலவச லேப்டாப் இலவச பேருந்து பாசுடன் இலவச முதியோர் பென்சன் கிடைக்கும் போது எனக்கு எதுக்கப்பா வேலை? "மக்களாகிய நாம் சிந்திக்கக் கூடாது." PETROL PRICES AROUND D WORLD Pakistan. ₹ 26.00 Bangladesh ₹ 22.00 Cuba ₹ 19.00 Italy. ₹ 14.00 Nepal. ₹ 34.00 Burma. ₹ 30.00 Afghanistan. ₹ 36.00 Sri Lanka. ₹ 34.00 INDIA. ₹ 67 .80 How it comes to this...... Basic Cost per 1litre. 16.50 + Centre Tax. 11.80% + Excise Duty. 9.75% + Vat Cess. 4% + State Tax. 8% Total added up together becomes Rs 50.05 per 1 litre. + now another Rs 22. Extra. This 22/- extra for what no explaination for this. What a great job by the GOVT. Of INDIA !!!!!!!! PASS THIS MESSAGE TO ALL INDIANS. Relaxplzz |
Posted: 02 Mar 2015 09:00 AM PST தமிழ் பேச வெட்கப்படும் சில தமிழர்களுக்கான செய்தி இது !! PETER விடும் சில தமிழ் மக்களே..படியுங்கள் .. *************** *************** *** உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ? *************** *************** *** இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள் ள நான் பெருமையடைகிறேன் . ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம்"கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய"அங்கோர் வாட்" கோயில். இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலைநகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங் களிலேயே பெரியது!! இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கு ம் என்பதை கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!! இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது . இதன்பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த"வழிபாடு தளமாக மாற்றப்பட்டு. இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவ ே செயல் பட்டு வருகின்றது!. பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட ்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால்இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்க ியது.பின்னர் 1586 ஆம் ஆண்டு "António da Madalena" என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை அவர் "is of such extraordinary construction that it is not possibleto describe it with a pen, particularly since it is like no otherbuilding in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார். பின்னர் Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது . அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—mi ght takean honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged என்று குறிப்பிட்டுள்ள ார்!! பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!! இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர்கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்ப ட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு "கம்போடியநாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக"ஆட்சிப ் பொறுப்பு பொறிக்கப்பட்டுள ்ளது!. இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம், கடைசியாக ஒன்று இந்த2012 வரை கண்டுபிடிக்கப்ப ட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை!! வானத்தில்1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது!! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே! ! இன்றும் தாய்லாந்தில் மன்னர், ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் நமது திருப்பாவையை தாம் பாராயணம் செய்து பின்னர் பதவி ஏற்பதுதான் வழக்கத்தில் உள்ளது.. Relaxplzz ![]() |
Posted: 02 Mar 2015 08:55 AM PST |
Posted: 02 Mar 2015 08:50 AM PST காம்ப்ளான் குடிச்சா வளரலாம், எங்கே ஜப்பான்காரனுக்கு குடு பார்போம்! ஏழு வாரங்களில் சிகப்பழகு, எங்கே ஆப்ரிக்காகாரனுக்கு போடு பார்போம்! - guruleaks |
Posted: 02 Mar 2015 08:45 AM PST |
Posted: 02 Mar 2015 08:41 AM PST |
Posted: 02 Mar 2015 08:38 AM PST |
Posted: 02 Mar 2015 08:30 AM PST |
Posted: 02 Mar 2015 08:26 AM PST மோடி கேன்டீன்ல சாப்ட்டு அதற்கான தொகையை கொடுத்தார் -செய்தி # அப்போ நாங்கெல்லாம் சாப்பிட்டுட்டு மாவாட்டி கொடுத்துட்டா வர்றோம்..?? :P :P - கப்பல் வியாபாரி |
Posted: 02 Mar 2015 08:17 AM PST |
Posted: 02 Mar 2015 08:10 AM PST ஆதார் அட்டை பின் விளைவுகள்..! நண்பர் ஒருவர் ஆதார் அட்டை ஜோக் என்று ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.. அதன் தமிழ் வடிவம் இதோ.. 2020 ஆம் வருடத்தில் இருந்து ஒரு காட்சி.. ஆப்பரேட்டர் : ஹலோ.. பிஸ்ஸா ஹட்.. கஸ்டமர் : என்னோட ஆர்டரை எடுத்துக்குறீங் களா ப்ளீஸ்..? ஆப்பரேட்டர்: முதல்ல உங்க ஆதார் கார்டு நம்பரை சொல்றீங்களா சார்..? கஸ்டமர் :ஒரே நிமிஷம்.. என்னோட ஆதார் கார்டு நம்பர் 889861356102049998-45-54610 ஆப்பரேட்டர்: ஸோ.. நீங்கதான் மிஸ்டர் சிங்.. நம்பர் 17 மல்லிகை தெரு காந்தி நகர்ல இருந்து கூப்புடுறீங்க.. உங்க வீட்டு நம்பர் 40942366, ஆஃபீஸ் நம்பர் 76452302 மொபைல் நம்பர் 0142662566. இப்ப நீங்க உங்க மொபைல்ல இருந்து எங்களுக்கு கால் பண்ணி இருக்கீங்க.. கஸ்டமர் : வாவ்.. இத்தனை நம்பரையும் எப்புடி சார் புடிச்சீங்க..? ஆப்பரேட்டர்: நாங்க மெயின் சிஸ்டத்தோட கனெக்ட்டடா இருக்கோம் சார்.. கஸ்டமர்: வெல்.. எனக்கு ஒரு இறால் பிஸ்ஸா ஆர்டர் எடுத்துக்க முடியுமா..? ஆப்பரேட்டர்: என்னைக் கேட்டா அது வேணாம்னுதான் சொல்லுவேன் சார்.. கஸ்டமர் : வாட்..? எதுக்குங்க..? ஆப்பரேட்டர்: உங்க மெடிக்கல் ரெக்கார்ட்ஸ்படி உங்களுக்கு ஹை பிபி இருக்கு.. அதுவுமில்லாம உங்களோட கொலஸ்ட்ரால் லெவலும் அதிகமா இருக்கு.. கஸ்டமர் : வாட்..? அப்ப நான் என்னதான்ய்யா சாப்புடுறது..? ஆப்பரேட்டர்: எங்களோட லோ ஃபேட் ஹெக்கியன் மீ பிஸ்ஸாவை ட்ரை பண்ணிப் பாருங்க.. அது உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.. கஸ்டமர் : எனக்கு புடிக்கும்னு உங்களுக்கு எப்புடிப்பா தெரியும்.. ஆப்பரேட்டர்: போன வாரம் நேஷனல் லைப்ரரில இருந்து பாப்புலர் ஹெக்கியன் உணவுகள்ன்ற புத்தகத்தை போன வாரம் நீங்க எடுத்திருக்கீங்க சார்.. கஸ்டமர் : மை காட்.. போதும்ய்யா.. அப்பன்னா நீங்க சொன்னதையே மூணு பிஸ்ஸா ஃபேமிலி சைஸ்ல குடுத்துருங்க.. ஆப்பரேட்டர்: நிச்சயமா சார்.. பத்து பேரு கொண்ட உங்களோட குடும்பத்துக்கு அது நிச்சயமா போதுமானதா இருக்கும்.. பில் அமௌண்ட் 2450 ரூபா சார்.. கஸ்டமர் : என் கார்டுலயே நான் பே பண்ணிறலாமா..? ஆப்பரேட்டர்: இல்ல சார்.. நீங்க கேஷாத்தான் தர வேண்டி இருக்கும். உங்க கிரெடிட் கார்டு லெவலை நீங்க க்ராஸ் பண்ணிட்டீங்க. அது மட்டும் இல்லாம போன அக்டோபர்ல இருந்து 1,51,748 ரூபா க்ரெடிட் கார்டு பாக்கி வச்சிருக்கீங்க.. அதுல நீங்க கட்டாம விட்ட உங்க ஹவுசிங் லோனை நான் சேக்கலை.. கஸ்டமர் : சரி. அப்பன்னா உங்காளு வர்றதுக்குள்ள நான் பக்கத்துல இருக்குற ஏடிஎம்முக்கு போயி கேஷ் எடுத்து வச்சுர்றேன்.. ஆப்பரேட்டர்: அதுவும் முடியாது சார்.. இந்த ரெக்கார்டுபடி உங்க ஏடிஎம் ஓவர்டிராஃப்பட்ட லெவலையும் நீங்க தாண்டிட்டீங்க.. கஸ்டமர் : ப்ச்.. நான் எப்புடியாவது கேஷ் ரெடி பண்ணி வச்சுர்றேன்.. நீங்க பிஸ்ஸாவை அனுப்புங்க.. எவ்வளவுவ நேரத்துல வரும்..? ஆப்பரேட்டர்: 45 நிமிஷம் ஆகும்.. அவ்வளவு நேரம் வெய்ட் பண்ண முடியாதுன்னா உங்கக பைக்ல வந்து நீங்களே கூட வாங்கிட்டு போயிறலாம் சார்.. கஸ்டமர் : வாட்..? ஆப்பரேட்டர்: எங்க சிஸ்டத்துல இருக்குற தகவல்படி உங்ககிட்ட ஒரு பைக் இருக்கு. அதோட நம்பர் 1122 சார்.. கஸ்டமர் : ?? (இந்த படுபாவிக என் பைக் நம்பரை கூட தெரிஞ்சு வச்சிருக்கானுகளே..) ஆப்பரேட்டர்: வேற எதாவது வேணுமா சார்..? கஸ்டமர் : ஒண்ணும் வேணாம்ப்பா.. நீங்க விளம்பரத்துல சொன்னா மாதிரி அந்த மூணு ஃப்ரீ கோக் பாட்டிலையும் சேத்து அனுப்பிருவீங்கள்ல..? ஆப்பரேட்டர்: நார்மலா குடுப்போம் சார்.. ஆனா உங்க மெடிக்கல் ரெக்கார்டுப்படி உங்களுக்கு சுகர் இருக்கு.. அதனால உங்க ஹெல்த்தை மனசுல வச்சு நாங்க அந்த ஆஃபரை உங்களுக்கு தரமுடியாது. சாரி சார்.. கஸ்டமர் : ***%&$%%### You $##$%%@!))) (உங்களுக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளை ரீப்ளேஸ் செய்து கொள்க) ஆப்பரேட்டர்: சார்.. வார்த்தைகளை கவனமா பேசுங்க சார்.. இப்புடிதான் ஒரு போலீஸ்காரரை கெட்ட வார்த்தைல திட்டினதுக்காக 2012 மார்ச்ல உங்களுக்கு ரெண்டு மாச சிறை தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் கிடைச்சதுங்குறதை மறந்துறாதீங்க.. கஸ்டமர் : (மயக்கம் போட்டு விழுகிறார்) படித்துப் பாரக்கும்போது இது வேடிக்கையாகத் தோன்றலாம். ஆனால் ஆதார் அட்டை வினியோகிக்கும் அரசின் உள் நோக்கம் இதுதான்.. Relaxplzz |
Posted: 02 Mar 2015 08:00 AM PST தமிழர்கள் அனைவரும் தற்காலத்தில் பின்பற்ற வேண்டிய அனைத்து செய்திகளையும் ஒரே கட்டுரையாக.. 1. கையொப்பம் தமிழில் இடுங்கள். ஆங்கிலத்தில் இட்டு பழகி விட்டது என்று சொல்லாதீர்கள். மாற்றிக் கொள்ளுங்கள்! நமது மொழியை விட்டு விட்டு ஆங்கிலத்தில் இடுவது அவமானம் என்று உணருங்கள். ஏற்கனவே ஆங்கிலத்தில் கையொப்பம் இடுவதால் சட்டப்பூர்வமாக செல்லாது என்பவர்களுக்கு:- நீங்கள் இன்றிலிருந்து கூட மாற்றலாம். உங்களது வங்கிக்கு ஒரு கடிதம் கொடுங்கள். பின்னர் எல்லா இடங்களிலும் உங்களது தன்மானமுள்ள தமிழ் கையொப்பத்தை இடுங்கள். சட்டப்பூர்வமாக செல்லும். 2. உறவுகளை அழைக்கும் போது MUMMY, DADDY, UNCLE, AUNTY … என்பதை விடுத்து தமிழில் நமது முன்னோர்கள் சொல்லிய உறவுப் பெயர்களை வைத்து அழையுங்கள். நமது குழந்தைகளையும் அவ்வாறே பழக்கப்படுத்துங்கள். 3. எதிர்ப்படுபவர் தமிழ் தெரிந்தவர் என்றால் தமிழில் மட்டுமே பேசுங்கள். அது நண்பராயிருந்தாலும்...உறவாயிருந்தாலும்...தொழில் ரீதியாக இருந்தாலும். 4. உங்களது முகவரி அட்டை (VISITING CARD) களை தமிழில் அச்சிடுங்கள். தேவைப்படின் பின்பகுதியில் ஆங்கிலத்தில் அச்சிடுங்கள். VISITING CARD ஐ எதிர்ப்படுபவரிடம் அளிக்கும் போது தமிழ் அச்சிட்டிருக்கும் பக்கம் பார்க்குமாறு கொடுங்கள்; அது தமிழே தெரியாதவராக இருந்தாலும். அவருக்கு தேவைப்படின் அவர் திருப்பிப் பார்த்துக் கொள்ளட்டும். 5. உங்கள் அஞ்சல் தாள் (LETTER HEAD) போன்றவற்றில் நிறுவனம் மற்றும் முகவரிகளை தமிழிலும் அடுத்த மொழியிலும் அச்சிடுங்கள். தமிழை மேலேயும் அடுத்த மொழியை கீழேயும் அச்சிடுங்கள். 6. நிறுவனத்தின் பெயர்பலகையை தமிழ் மற்றும் வேற்று மொழிகளில் எழுதுங்கள். முதலில் தமிழிலும் அடுத்த மொழியை தமிழ் FONT ல் பாதி அளவாகவும் எழுதுங்கள். இது தமிழ்நாட்டுச் சட்டமும் கூட (TAMILNADU SHOPS AND ESTABLISHMENTS ACT 1948 ). முகவரியையும் தமிழில் எழுதுங்கள். 7. குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது சோதிடர்கள் சொல்வதை (எ.கா: மோ...மை...எழுத்தில் ஆரம்பிக்கவேண்டும்) நம்பாமல் தூய தமிழ்ப்பெயர்களை வையுங்கள். நீங்கள் வைப்பது தமிழ்ப்பெயர்தானா என்பதை நல்ல தமிழ் ஆர்வலர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். வடமொழி எழுத்துக்களான ஸ்,..ஷ், ஜ, போன்றவற்றைத் தவிருங்கள். 8. திருமணப்பரிசு அளிக்கும் போது நல்ல தமிழ்ப் புத்தகங்ககளை அளியுங்கள். 9. விழாக்களுக்கு அடிக்கும் அழைப்பிதழில் தமிழில் மட்டுமே அச்சிடுங்கள். ஆங்கிலம் தேவைப்படின் இதோடு கலக்காமல் தனியே அச்சிட்டு, தமிழே தெரியாதவர்களுக்கு மட்டும் கொடுங்கள். 10. இரு சக்கர வாகனம், மகிழுந்து மற்றும் பிற வாகனங்களை வைத்திருப்பவர்கள் அதன் பதிவு எண்ணை தமிழில் எழுதுங்கள். எ.கா TN 20 A 1234 என்று இருந்தால் தமிழ்நாடு 20 ஏ 1234 என்று எழுதுங்கள். 11. கடிதம் எழுதும்போது, ஆங்கில தேதி மாதம் வருடம் எழுதும்போது மறக்காமல் ஆங்கிலத்திற்கு மேல் தமிழில் திருவள்ளுவராண்டு தேதி மாதமும் எழுதுங்கள். எ.கா: திருவள்ளுவராண்டு 2044 மீனம் (பங்குனி) 09 / ஆங்கில தேதி 22 மார்ச் 2013. திருவள்ளுவராண்டிலிருந்து 31 ஆண்டுகளைக் கழித்தால் கிடைப்பது ஆங்கில ஆண்டு. 12. தொலைபேசியில் பேசும்போது முதலில் ஹலோ என்பதை விட்டுவிட்டு வணக்கம்! என்று சொல்லி ஆரம்பியுங்கள். அதே போல் தாங்க்ஸ் என்பதை விட்டு விட்டு நன்றி என்று சொல்லி முடியுங்கள். (வணக்கம் ஐயா...வணக்கம் அம்மா, நன்றி ஐயா...நன்றி அம்மா..) 13. எதெற்கெடுத்தாலும் 'EXCUSE ME' என்பதற்கு பதிலாக மன்னிக்கவும்... மன்னிக்கனும்... மன்னிச்சுங்குங்க... என்று சொல்லுங்கள். அதே போல் 'PLEASE' என்பதற்கு பதிலாக 'தயவுசெய்து' என்ற வார்த்தையைப் பயன்படுத்துங்கள். 14. மகிழுந்துகளில் செல்லக் குழந்தைகளின் பெயரை எழுத விருப்பப்பட்டால் தமிழில் மட்டும் எழுதுங்கள். 15. செல்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பும்போது தமிழ் எழுத்துரு இல்லாவிட்டால் பரவாயில்லை. தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் அனுப்புங்கள். எ.கா: I'LL CALL YOU LATER என்பதற்கு NAAN PIRAGU AZHAIKKIREN (நான் பிறகு அழைக்கிறேன்). 16. ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கு உள்ள படிவங்களை தமிழில் மட்டுமே பதிவு செய்யுங்கள். படிவம் தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ளது. (தமிழ் வளரும்). இதை நடைமுறைக்கு கொண்டு வருவது சிரமம் காரணம் நாம் ஆங்கில மோகத்தில் இருக்கிறோம் நாம் நினைத்தால் போறாது அனைவரும் இதை செயல் படுத்த முயற்சி எடுக்க வேண்டும். - தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு Relaxplzz ![]() |
Posted: 02 Mar 2015 07:58 AM PST |
Posted: 02 Mar 2015 07:50 AM PST செருப்பு தைப்பவரிடம் காட்ட வேண்டிய மரியாதை !!! 1. செருப்பை கழட்டி உங்கள் கையால் எடுத்து கொடுங்கள். பிய்ந்தசெருப்பை அவரை நோக்கி கழட்டி காலால்தள்ளுவது அவமரியாதை. 2. பேரம் பேசாதீர். தினமும்எத்தனை பிய்ந்த செருப்பு கிடைத்துவிட போகிறது என்று நினைக்கிறீர்கள்? 3. அவசியம் 'நன்றி' தெரிவித்துவிட்ட வாருங்கள். அவர் செய்யும்தொழிலை எல்லாவராலும் செய்ய முடியாது. Relaxplzz ![]() |
Posted: 02 Mar 2015 07:45 AM PST #பபி மோடி மிகபெரிய சாதனை. காங்கிரஸ் மன்மோகன்சிங் ஆட்சியில் 9 ஆண்டு கழித்து போராடிய அன்னா ஹசாரேவை 9 மாதங்களிலேயே போராட வைத்து விட்டார் மோடி! வாட் எ மேன்! |
Posted: 02 Mar 2015 07:40 AM PST |
Posted: 02 Mar 2015 07:32 AM PST |
Posted: 02 Mar 2015 07:24 AM PST |
Posted: 02 Mar 2015 07:10 AM PST இரவு 11 மணி சாலையில் ஓர் வாடகை டாக்ஸி வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, டாக்ஸி என கையசைத்து நிறுத்தினார். "தம்பி ஆஸ்பத்திரி போகனும்" "நான் சாப்பிட்டுட்டு, படுக்கப் போற நேரம்" "என் மகளுக்கு பிரசவ நேரம்ப்பா, தயவுசெய்து வரமாட்டேன்னு சொல்லிடாதேப்பா" என்றார் அப்பெண்மணி. "நீங்க இவ்வளவு சொல்றதாலே வர்றேன். 500 ரூபா ஆகும்" என்றான் அந்த டாக்ஸி ஓட்டும் இளைஞன். அப்பெண்மணி 500 ரூபா என்ன 1000 ரூபாய் கேட்டால் கூட தர சம்மதம் என்பதுபோல் வேகவேகமாக தலையாட்டி சம்மதிக்க, டாக்ஸி அவர்களுடன் மருத்துவமனைக்கு விரைந்தது. டாக்ஸி ரெயில்வே கேட்டை நெருங்கவும், எச்சரிக்கை மணி ஒலிக்க கேட் மூடப்பட்டது. அக்கர்ப்பிணியின் முனகல் சற்று அலறலாக மாறியது. நல்ல வேளை அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லை. இரண்டு ரயில் வண்டிகள் எதிர் எதிர் திசையில் கடக்க, பத்து நிமிடத்தில் கேட் திறந்தது. இப்போது டாக்ஸி இன்னும் சற்று வேகமாக ஓடி மருத்துவமனையில் நின்றது. நடுநிசியின் நிசப்தத்தைக் கிழித்தது அப்பிரசவத் தாயின் அலறல். மூடிய விழிகளில் நீர் மல்க, அந்த நடுத்தர வயதுப் பெண்மணி கைகளைக் கூப்பி மகளுக்காக இறைவனிடம் வேண்டினாள். அந்த டாக்ஸி இளைஞனும் அமைதியாக அங்கே நின்றிருந்தான். சற்று நேரத்தில் சுகப் பிரசவம். "தம்பி! ரொம்ப நன்றிப்பா. இந்தா நீ கேட்ட பணம்" என பணத்தை நீட்டினாள் அப்பெண்மணி. "வேணாம்மா. எங்கம்மா என்னைப் பெற எவ்வளவு வேதனைப் பட்டிருப்பாங்கன்னு இறைவன் எனக்கு புரிய வச்சிட்டார். பணத்தை நீங்களே வைங்க" என்று சொன்னபடி நடக்க ஆரம்பித்தான். ஏதோ யோசிக்க மொபைலை எடுத்து ஒரு நம்பரை கண்டுபிடித்து டயல் பண்ணினான். "ஹலோ முதியோர் இல்லமா?" "ஆமா என்ன இந்த நேரத்துல போன் பண்ணுறீங்க?" "மன்னிக்கவும். நாளு நாளைக்கி முன்னாடி அனாதைன்னு சொல்லி ஒருத்தவங்கள உங்க இல்லத்துல சேர்த்தேன்.. இல்லையா? அவுங்க அனாதை இல்லை என்ன பெத்த தாய். நாளைக்கு காலையிலே வர்றேன் அவுங்கள கூட்டிட்டு போக" முதியோர் இல்ல பொறுப்பளரின் அனுமதியைக் கூட கேட்காமல் மொபைலை கட் பண்ணி விட்டு வண்டியை தீர்க்கமான முடிவோடு ஸ்டார்ட் செய்தார் . 'ஆம். நிஜத்தை தரிசிக்கும் ஒவ்வொரு இதயமும்... ஒரு மனிதனைப் பிரசவிக்கிறது.. Relaxplzz |
Posted: 02 Mar 2015 07:00 AM PST இதோ இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம்..? 01. 1831 ல் வியாபாரத்தில் தோல்வி. 02. 1832 ல் சட்டசபைத் தேர்தலில் தோல்வி. 03. 1834 ல் வியாபாரத்தில் மீண்டும் தோல்வி. 04. 1835 ல் அவரது காதலி மரணம். 05. 1836 ல் அவருக்கு நரம்பு நோய் வந்தது. 06. 1838 ல் தேர்தலில் தோல்வி. 07. 1843 ல் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி. 08. 1848 ல் மீண்டும் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி. 09. 1855 ல் செனட் தேர்தலில் தோல்வி. 10. 1856 ல் துணை அதிபர் தேர்தலில் தோல்வி. 11. 1858 ல் செனட் தேர்தலில் மீண்டும் தோல்வி. 12. 1861 ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று அமெரிக்க ஜனாதிபதியானார். இத்தனை தோல்விகளையும் சந்தித்தவர் வேறுயாருமில்லை... உலகம் அறிந்த மிகவும் பிரபலமான அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்தான். அதிக தோல்விகள், அதிக பாடங்கள், இவையே வெற்றியின் இரகசியம்...! Relaxplzz ![]() |
Posted: 02 Mar 2015 06:54 AM PST |
Posted: 02 Mar 2015 06:50 AM PST |
Posted: 02 Mar 2015 06:45 AM PST தமிழகத்தில் தன்னை விமர்சிக்க கலைஞர் இடம் கொடுத்த அளவுக்கு, வேறெந்த தலைவரும் தருவதில்லை என்ற விஷயத்திற்காகவது அவரை பாராட்டித்தான் ஆகவேண்டும்! - Nizamdheen |
Posted: 02 Mar 2015 06:40 AM PST |
Posted: 02 Mar 2015 06:30 AM PST |
Posted: 02 Mar 2015 06:20 AM PST |
Posted: 02 Mar 2015 06:10 AM PST தமிழ் சினிமாவின் விதிகள்.... 1.பத்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா பேஷன்ட் போலச்சிருக்க மாட்டாருன்னு டாக்டர் சொல்றது 2.நம்ம டிபார்ட்மென்ட்டுக்கே கேவலம்னு சொன்னதும் எல்லோரும் தலையைக் குனியுறது .. 3.ஹீரோவ எங்க அடிச்சாலும் வாய் ஓரத்துல ரத்தம் வரும் அத தொட்டு பாத்தவுடன் வீரம் வரும்.. 4..ரேப் பண்ற வில்லன அடிச்சி போட்டுட்டு ஹீரோயினோட மழை பாட்டு பாடுறது ... 5.எவ்வளவு நேரம் இருந்தாலும் டைம்பாமை 00:01 செக்கண்ட்லையே டிப்யூஸ் பண்ணுரது 6.ஹீரோவோட தங்கச்சி எல்லாம் வில்லன் கிட்ட மாட்டி கஷ்டபடுறது. 7.துப்பாக்கி வச்சி சுட்டாலும் ஹீரோ மட்டும் குண்டு படாம தப்பிகிறது 8.காதலனை மறந்து விடுன்னு கதாநாயகியின் தந்தை மிரட்டியவுடன், பெட்ரூமிற்கு ஓடி போய் மெத்தையில் குப்புற விழுந்து அழுவது. 9. யாரவது படத்தோட முதல் சீன்ல சாகும் போது, சொல்ல வந்த ரகசியத்தை சொல்லாம செத்துடுவாங்க.. இதுவே கடைசி சீனா இருந்தா எல்லா ரகசியத்தையும் சொல்லிட்டு தான் சாவாங்க..சாகும் போது கண்ணை திறந்திட்டேதான் சாவாங்க, நம்ம ஹீரோ கண் இமைகளை தடவி மூடுவார் 10.கிளைமாக்ஸ் பைட்டுல நிராயுதபாணியா நிற்கிற ஹீரோவை வில்லன் குத்தவோ / சுடவோ வரும் போது அவரை யாரவது பின்னாடி இருந்து குத்திடுவாங்க.. வில்லன் மெதுவா சரிய பின்னாடி யாருன்னு பார்த்தா செகன்ட் ஹீரோயினோ, கடைசியா திருந்தின வில்லியோ இருப்பாங்க. 11.ரேப் ஸீனுக்கு புலி, மானைக் காட்டுறது. முதலிரவு ஸீனுக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கப்பறம் லைட்டை ஆஃப் செஞ்சிடறது. மேக்ஸிமம் ரேப் ஸினுக்கு நம்ம ஹீரோயின் சேலைதான் கட்டியிருப்பாங்க.(ரேப் ஸீன் அஞ்சு நிமிசத்துக்குள்ள முடிஞ்சிருது . வில்லன் சிவராஜ் சித்த வைத்தியரை பார்க்குறது முக்கியம் ;-) ) 12.பனி பொழியுற நாட்டுப் பாடல் காட்சிகள்ல, ஹீரோ மட்டும் கோட்டு, சூட்டு, கிளவுஸ் எல்லாம் போட்ருப்பாரு, ஆனா ஹீரோயின் அம்மணிக்கு மட்டும் டூபீஸ்....சே...என்ன மாதிரி சமுகத்தில் வாழ்கிறோம் நாம் ..? 13.படத்தோட உச்சக்கட்டமா வில்லன் எங்கேயாவது பாம் வச்சுடுவான். அதை டிஃப்யூஸ் பண்ண வர்ற ஹீரோ எந்த கலர் வயர வெட்டுறது அப்படின்னு டென்ஷனாகி செவப்பா நீலமான்னு மாத்தி மாத்தி யோசிப்பார். ஆனா அவர் கவலையே பட வேண்டாம். ஏன்னா அவர் எந்த வயர வெட்டினாலும் பாம் அமந்து போகும். (தக்காளி ..நீ புடுங்குற எல்லாமே தேவையில்லாத ஆணிதான்..) 14.Censored ;-) 15.ஹீரோ ரெட்டைப்புள்ளையா இருந்தா அதுல ஒருத்தர் கண்டிப்பா ரொம்பக் கெட்டவனா இருப்பாரு. ஆனா கிளைமாக்ஸ்ல "நான் ஏன் அப்படி இருந்தேன் தெரியுமா"ன்னு ஒரு பாடாவதி டயலாக் பேசி நல்லவனா மாறிடுவார்.. :) :) Relaxplzz |
Posted: 02 Mar 2015 06:00 AM PST பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி சாப்பிடக்கூடியது கொய்யாப் பழம். இதில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டது. வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துகளும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் கொய்யா பழத்தில் நிறைந்துள்ளது. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். இம்மரத்தின் பட்டை பாக்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப் போக்கும். வேர்ப்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தும். கொய்யாப்பழத்தை அரிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு பற்களில் படும்படி நன்றாக மென்று தின்பதே நல்லது. இதன்மூலம் பற்களும், ஈறுகளும் பலப்படும். வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் உள்ளது. எனவே, வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும். கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலுடன் சாப்பிட வேண்டும். முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது. மதுபோதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம். உணவு சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ சாப்பிட்டால் நல்லது. நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல், தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் நோய் அதிகமாகும். ஒரு சிலருக்கு மயக்கம் ஏற்படும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடவே கூடாது. மற்றவர்கள் கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடாமல் இருப்பது சிறந்தது. இரவில் சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவிற்கதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும். Relaxplzz ![]() |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment