Tuesday, 10 March 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


* சாப்பிட்டேன் என்று அம்மாவிடமும், * அடுத்த முறை வேலை கிடைத்து விடும் என அப்பாவ...

Posted: 10 Mar 2015 09:45 AM PDT

* சாப்பிட்டேன் என்று அம்மாவிடமும்,

* அடுத்த முறை வேலை கிடைத்து விடும் என அப்பாவிடமும்,

* வேலை கிடைத்தவுடன் முதல் மாத சம்பளத்தில் சுடிதார் வாங்கி தருகிறேன் என தங்கையிடமும்,

* முதல் மாத சம்பளத்தில் ஸ்மார்ட் போன் வாங்கி தருகிறேன் என்று தம்பியிடமும் சொல்லிவிடலாம்,

ஆனால்,

சாப்பிடல மச்சான் ரொம்ப பசிக்குது ஒரு டீ வாங்கி கொடு என #நண்பனிடம் மட்டும் தான் கேட்க முடியும்....

#நண்பன்

Relaxplzz


மணமகனுக்கும் மணமகளுக்கும் பொருத்தம் பார்ப்பதை விட மாமியாருக்கும் மருமகளுக்கும் ம...

Posted: 10 Mar 2015 09:45 AM PDT

மணமகனுக்கும் மணமகளுக்கும்
பொருத்தம் பார்ப்பதை விட
மாமியாருக்கும் மருமகளுக்கும்
முதலில் பொருத்தம் பாருங்கள்

அப்போ தான் ஒவ்வொரு
ஆம்பளையும் நிம்மதியா
வாழ முடியும்.

இவிங்க சண்ட போடுறதுலயே பாதி
ஆம்பளைங்க பாழாய்ப் போய்டுறாங்க

:( :(

- Ashok kumar

டோனி: அடுத்து யாருடா, ஜிம்பாவே'யா..? இவனுங்க இப்படி தான், மாட்னா மொத்தமா மாட்டுவ...

Posted: 10 Mar 2015 09:40 AM PDT

டோனி: அடுத்து யாருடா, ஜிம்பாவே'யா..? இவனுங்க இப்படி தான், மாட்னா மொத்தமா மாட்டுவானுங்க.. :D

- Ambuja simi


அழகு பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 10 Mar 2015 09:35 AM PDT

அழகு

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 10 Mar 2015 09:30 AM PDT

மூளைக்கோரு வேலை.. இதில் எத்தனை தீக்குச்சிகள் உங்கள் கண்ணுக்கு தெரிகின்றன..???

Posted: 10 Mar 2015 09:23 AM PDT

மூளைக்கோரு வேலை..

இதில் எத்தனை தீக்குச்சிகள் உங்கள் கண்ணுக்கு தெரிகின்றன..???


சரியா.., தவறா...?

Posted: 10 Mar 2015 09:17 AM PDT

சரியா.., தவறா...?


நீங்கள் உடுத்தும் சேலை, ஓர் உடையே இல்லை மேலே உள்ள தலைப்பை பார்த்து பயப்பட வேண்ட...

Posted: 10 Mar 2015 09:00 AM PDT

நீங்கள் உடுத்தும் சேலை, ஓர் உடையே இல்லை

மேலே உள்ள தலைப்பை பார்த்து பயப்பட வேண்டாம். இவ்வார்த்தையை கூறியது ஓர் ஜெர்மானியர் " this is not a dress. this is a song""நீங்கள் உடுத்துவது ஒரு உடையல்ல அது ஒரு கவிதை". ஆம் காஞ்சிபுரத்தை சுற்றி பார்க்க வந்த ஒரு ஜேர்மனி நாட்டு அறிஞர் ஆரல்பக்பீயும் அவரது மனைவியும் பார்த்தது - ஒரு தமிழ் பெண் குடத்தை ஏந்தி நடந்து போனாள், குடத்தை படியில் வைத்துவிட்டு குளத்தில் இறங்கினாள். அவள் உடுத்தியிருந்த சேலையை பார்த்த அந்த அறிஞர் "இந்த பெண் அணிந்துள்ள தமிழ்நாட்டு கவுன் எவ்வளவு அழகாக இருக்கிறது" என்று தன் மனைவியிடம் கேட்டார். மனைவி சொன்னார் "இந்த தமிழ்நாட்டு தையல்காரன் கெட்டிக்காரன் மடிப்பு மடிப்பாக எத்தனை தட்டுகள் வைத்து இந்த கவுனை தைத்து இருக்கிறான்".

சிறுது நேரம் கழித்து படிகாட்டில் அமர்ந்து நாகரிகமாக தன் சேலையை தண்ணீரின் மேல்பரப்பில் ஓடவிட்டாள். பிறகு தான் அந்த தம்பதிகள் அது கவுன் அல்ல அது சேலை என்று கண்டு எவ்வளவு கலை நுணுக்கத்தோடு மடித்து உடுத்தி இருக்கிறாள் என்று திகைத்துப்போய் " this is not a dress,this is a song" என்றனர்.

இந்த அறிஞர் போவதற்கு முன் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார் ' மேலைநாட்டவராகிய எங்களை பின்பற்றுவதாக நினைத்து எதோ புதிய பழக்கங்களை நீங்கள் பின்பற்ற தொடங்கி இருக்கிறீர்கள்.அதனால் உங்கள் அடையாளங்களை கலை செல்வங்களை இழப்பீர்கள்.உங்களுடைய கலைகள் எல்லாம் ஒப்பற்ற கலை உங்கள் பெண்கள் புடவை அணிந்து கொள்கிற அரிய கலையாகும். எதனை இழந்தாலும் இந்த உடை செல்வத்தை இழந்துவிடாதீர்கள் உங்கள் சேலை உடை ஒரு கவிதை" என்றார்.

Relaxplzz


குழந்தை அழகா இருக்கு,கண்ணு படக்கூடாதுனு திருஷ்டி பொட்டு வச்சா அது இன்னும் அழகாயி...

Posted: 10 Mar 2015 08:50 AM PDT

குழந்தை அழகா இருக்கு,கண்ணு படக்கூடாதுனு திருஷ்டி பொட்டு வச்சா அது இன்னும் அழகாயிடுது :)

- Krishitize


இந்தியாவுக்கு சுற்றுலா வந்த நரேந்திர மோடி, . . . . . . . . . . . . சுற்றுப்பயண...

Posted: 10 Mar 2015 08:45 AM PDT

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த நரேந்திர மோடி,
.
.

.
.
.
.
.
.
.
.
.
.
சுற்றுப்பயணம் முடிந்து, இன்று இலங்கை உள்ளிட்ட 3 நாடுகளுக்கு புறப்படுகிறார்..

:D :D

- Ambuja Simi

மிருதுவான சப்பாத்தியுடன் சுவையான மட்டன் கிரேவி காம்பினேஷன்... பிடித்தவர்கள் லைக...

Posted: 10 Mar 2015 08:40 AM PDT

மிருதுவான சப்பாத்தியுடன் சுவையான மட்டன் கிரேவி காம்பினேஷன்...

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:) Relaxplzz

Posted: 10 Mar 2015 08:30 AM PDT

:) Relaxplzz

Posted: 10 Mar 2015 08:20 AM PDT

நம் நாட்டுக்காக ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்வீர்களா...? .......PLEASE SHARE...

Posted: 10 Mar 2015 08:10 AM PDT

நம் நாட்டுக்காக ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்வீர்களா...?

.......PLEASE SHARE THIS

நீங்கள் செய்யும் ஒவ்வொரு SHARE-ம் நாம் நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது......

சமீப காலமாக விலைவாசி உயர்ந்து விட்டதே என்று அரசைக் குறைக்கூறுவது நாம் செய...்யும் தவறு...

விலைவாசி உயர்வுக்கு நாம் தான் காரணம்...

கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா....??

கீழே படியுங்கள்......

ஒரு வருடத்திற்கு முன் 1 US $ = ரூ 45.

இன்று 1 US $ = ரூ 66.

அமெரிக்க பொருளாதாரம் உயர்கின்றதா....???

அதுதான் இல்லை..

இந்தியாவின் பொருளாதாரம் வீழ்கிறது....!!!

நாம் குடிக்கும் ஒவ்வொரு குளிர்பானத்தின் தயாரிப்பு செலவு 70-80 பைசா மட்டுமே...

ஆனால்

விற்கப்படும் விலை ரூ 9 -10... அதாவது ஒரு குளிர்பானத்தின் ஒன்பது ருபாய் வெளிநாட்டிற்கு செல்கிறது...

இதை தடுக்கவே முடியாதா...???

முடியும்.

நாம் மனசு வைத்தால்...!!!

நாம் என்ன செய்ய வேண்டும்...???

1 ) ஆயிரக்கணக்கான இந்திய நிறுவனங்களின் பொருட்கள், வாங்குவதற்கு ஆள் இல்லாமல் தேங்கிக் கிடக்கின்றன...

அவற்றை வாங்குவதற்கு நாம் முன் வரவேண்டும்.

2 ) ஒவ்வொரு இந்தியனும் இதில் கலந்து கொண்டால் தான், நம் இந்தியாவை நாம் காப்பாற்றமுடியும்..

கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் இந்திய பொருள்களை வாங்கவும், வெளி நாட்டு பொருள்களை வாங்குவதை தவிர்க்கவும் முயற்சி செய்வோம்...

LIST OF PRODUCTS:--

COLD DRINKS:-

வாங்கவும்:-
DRINK LEMON JUICE, FRESH FRUIT JUICES, CHILLED LASSI (SWEET OR SOUR), BUTTER MILK, COCONUT WATER, JAL JEERA, ENERJEE,and MASALA MILK...

தவிர்க்கவும்:-
INSTEAD OF COCA COLA, PEPSI, LIMCA, MIRINDA, SPRITE

BATHING SOAP:-

வாங்கவும்:-
USE CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA

தவிர்க்கவும்:-
INSTEAD OF LUX, LIFEBUOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVE

TOOTH PASTE:-

வாங்கவும்:-
USE NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK.

தவிர்க்கவும்:-
INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT.

TOOTH BRUSH:-

வாங்கவும்:-
USE PRUDENT, AJANTA , PROMISE.

தவிர்க்கவும்:-
INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B

SHAVING CREAM:-

வாங்கவும்:-
USE GODREJ, EMAMI.

தவிர்க்கவும்:-
INSTEAD OF PALMOLIVE, OLD SPICE, GILLETE.

BLADE:-

வாங்கவும்:-
USE SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA.

தவிர்க்கவும்:-
INSTEAD OF SEVEN-O -CLOCK, 365, GILLETTE.

TALCUM POWDER:-

வாங்கவும்:-
USE SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS.

தவிர்க்கவும்:-
INSTEAD OF PONDS, OLD SPICE, JOHNSON'S BABY POWDER, SHOWER TO SHOWER.

MILK POWDER:-

வாங்கவும்:-
USE INDIANA, AMUL, AMULYA.

தவிர்க்கவும்:-
INSTEAD OF ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID.

SHAMPOO:-

வாங்கவும்:-
USE NIRMA, VELVETTE.

தவிர்க்கவும்:-
INSTEAD OF HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE.

MOBILE CONNECTIONS:-

வாங்கவும்:-
USE BSNL, AIRTEL.

தவிர்க்கவும்:-
INSTEAD OF VODAFONE.

Food Items:-

வாங்கவும்:-
Eat Tandoori chicken, Vada Pav, Idli, Dosa, Puri, Uppuma.

தவிர்க்கவும்:-
INSTEAD OF KFC, MACDONALD'S, PIZZA HUT, A&W.

BUY INDIAN TO BE INDIAN...

நீங்கள் செய்யும் ஒவ்வொரு SHARE-ம் நாம் நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது..

Relaxplzz

பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!! மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோப...

Posted: 10 Mar 2015 08:00 AM PDT

பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!!

மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில்
கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும்
இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம்
இருந்ததாம். என்ன காரணம்? தேடிப்
பார்ப்போம் வாருங்கள்.

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும்
அதன் மேல் இருக்கும் கலசங்களையும்
பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால்
இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத்
தெரியாது. ஆனால், அதற்குப்
பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல்
ஒளிந்திருக்கிறது என இப்போது தான்
தெரிந்தது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி,
செப்பு அல்லது ஐம்பொன்னா
செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும்.
இக்கலசங்களிலும் அதில்
கொட்டப்படும் தானியங்களும்,
உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும்
சக்தியினை (earth) கலசங்களுக்குக்
கொடுக்கின்றன. (நெல், கம்பு,
கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம்,
சாமை, எள்) ஆகியவற்றைக்
கொட்டினார்கள். குறிப்பாக
வரகு தானியத்தை அதிகமாகக்
கொட்டினார்கள். காரணத்தைத்
தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது,
"வரகு" மின்னலைத் தாங்கும் அதீத ஆற்றலைப்
பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல்
கூறுகிறது. அப்போது எந்தக் கல்லூரியில்
படித்தார்கள் எனத் தெரியவில்லை!!.
இவ்வளவு தானா... இல்லை,
பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழு
பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய
தானியங்கள் நீக்கப்பட்டு புதிய
தானியங்கள் நிரப்பப்படுகிறது",
அதை இன்றைக்குச் சம்பரதாயமாக
மட்டுமே கடைப்பிடிக்கிறார்கள்.

காரணத்தைத்
தேடினால், அந்தத்
தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்க
தான் சக்தி இருக்கிறது. அதன்
பின்பு அது செயல் இழந்து விடுகிறது!!
இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!.
அவ்வளவு தானா அதுவும் இல்லை,
இன்றைக்குப்
பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை
தொடர்ந்து மூன்று மாதங்கள்
பெய்தது, ஒருவேளை தானியங்கள்
அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால்,
மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது?
இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ
வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும்
எடுத்து விதைக்கலாமே!!!
ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில்
அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில்
"எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக்
காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப்
பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள்
இடிதாங்கிகள். உதாரணமாகக்
கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால்
நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில்
எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள்
இடி தாக்காமல் காக்கப்படுவார்கள்.

அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில்
இருக்கும் மனிதர்கள்
காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில
கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன,
அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர்
பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கி
இது ஒரு தோராயமான கணக்குத் தான்,
இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட
அதிகமான பணிகளைச் சத்தமில்லாமல்
செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!
இதை எல்லாம் பார்க்கப் போனால் "கோயில்
இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற
பழமொழி தான்
நினைவுக்கு வருகின்றது.
சும்மாவா சொன்னாங்க
பெரியவங்க

Relaxplzz


குப்பை தொட்டியோடு உன்னையும் சுமக்கிறேன், என்ன செய்வது ரெண்டுமே முக்கியம், #தந...

Posted: 10 Mar 2015 07:50 AM PDT

குப்பை தொட்டியோடு உன்னையும் சுமக்கிறேன்,
என்ன செய்வது ரெண்டுமே முக்கியம்,

#தந்தைமை

- தினேஷ்


அருமையான பென்சில் ஓவியம் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 10 Mar 2015 07:42 AM PDT

அருமையான பென்சில் ஓவியம்

பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


:D Relaxplzz

Posted: 10 Mar 2015 07:38 AM PDT

:) Relaxplzz

Posted: 10 Mar 2015 07:30 AM PDT

ஒரு கார்ப்பரேட் நீதி கதை ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். தனது ஊரிலி...

Posted: 10 Mar 2015 07:20 AM PDT

ஒரு கார்ப்பரேட் நீதி கதை

ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளை கொண்டு சென்று பக்கத்து ஊர் சந்தையில் விற்பது அவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்து இருந்தான்.

ஒரு நாள் அவன் வண்டியில் பூட்டும் மாடு அவனிடம் வந்து "எஜமான்! இரண்டு ஆண்டுகளாக நான் உங்களிடம் வேலை செய்கிறேன். ஆனால் நான் செய்யும் வேலைக்கு நீங்கள் எனக்கு சாப்பிட கொடுக்கும் புல்லின் அளவோ மிக குறைவு. தயவு செய்து எனக்கு நீங்கள் கொடுக்கும் புல்லின் அளவை அதிகரியுங்கள்" என்றது.

மாடு சொன்னதை கவனமாக கேட்ட வியாபாரி "மாடே! நீ கடினமாக உழைப்பது உண்மையே. ஆனால் பக்கத்துக்கு வீட்டுக்காரன் மாடு 25 மூட்டைகளை தன் வண்டியில் சுமக்கிறது. ஆனால் நீயோ தினமும் 20 மூட்டைகளை மட்டுமே சுமக்கிறாய். நீ அதிக மூட்டைகளை சுமந்தால் உனக்கு புல்லின் அளவைஅதிகரிப்பதை பற்றி யோசிக்கிறேன்" என்றான். பக்கத்து வீட்டு மாடு பஞ்சு மூட்டைகளை மட்டுமே சுமக்கிறது என்பதை அறியாமல் இந்த மாடும் அதிக மூட்டைகளை சுமக்க ஒப்பு கொண்டது.

இப்படியே ஓராண்டு சென்றது. மாடு மீண்டும் சென்று வியாபாரியிடம் புல்லின் அளவை அதிகரிக்க கேட்டது. அதற்கு வியாபாரி "மாடே! அதிக பாரம் ஏற்றியதால் நம்முடைய பழைய வண்டி பாதிப்பு அடைந்து விட்டது. எனவே நான் இப்போது புது வண்டி செய்ய சொல்லியுள்ளேன். அதற்கு ஆகும் செலவை வேறு நான் பார்க்க வேண்டும். இன்னும் சற்று நாள் பொறுத்துக் கொள். நான் புல்லின் அளவை நிச்சயம் அதிகரிக்கிறேன்" என்றான். வேறு வழியின்றி மாடும் ஒத்து கொண்டது.
புது வண்டி வந்த ஆறு மாதங்களுக்கு பின் மாடு மீண்டும் வியாபாரியிடம் சென்று வழக்கமான கோரிக்கையை வைத்தது.

இப்போது வியாபாரி, "மாடே! இப்போதெல்லாம் உன்னுடைய வேகம் மிக குறைந்து விட்டது. பக்கத்துக்கு ஊருக்கு செல்ல முன்பை விட அதிக நேரம் எடுத்து கொள்கிறாய். இதனால் நான் வியாபாரம் செய்ய கூடிய நேரம் குறைந்து விட்டது. எனவே உனக்கு அதிக புல் தருவது இப்போதைக்கு சாத்தியமில்லை" என்றான்.

கோபமடைந்த மாடு "எஜமான்! இந்த புது வண்டியின் பாரம் பழைய வண்டியை விட மிக அதிகம். இந்த கனத்தையும் சேர்த்து இழுக்க வேண்டியதாலேயே என்னால் முன்பு போல விரைவாக செல்ல முடியவில்லை" என்றது. அதற்கு வியாபாரி "மாடே! நீ என்ன காரணம் சொன்னாலும் உன்னால் எனக்கு அதிக லாபத்தை பெற்று தர முடியவில்லை. நான் உன் மேல் ஏற்றும் மூட்டைகளின் எண்ணிக்கையை வேண்டுமானால் குறைத்து விடுகிறேன். ஆனால் நீ அதிக புல் கேட்காதே" என்றான். தன் இத்தனை ஆண்டு உழைப்பும் வீணாகி விடும் என்று பயந்த மாடு "வேண்டாம் எஜமான். நான் எப்படியாவது வேகமாக சென்று உங்களுக்கு அதிக லாபம் பெற்று தந்து விடுகிறேன்" என்று கூறியது.

மறுநாள் முதல் மாடு தன் சக்தியெல்லாம் திரட்டி வேகமாக ஓட ஆரம்பித்தது. மீண்டும் முன்பு எடுத்து கொண்ட அதே நேரத்திலேயே பக்கத்துக்கு ஊருக்கு சென்று வியாபாரியை சேர்க்க தொடங்கியது. ஆனால் மிக கடின உழைப்பால் ஒரே மாதத்திலேயே நோயுற்று படுத்த படுக்கையானது. வழக்கமாக சாப்பிடும் புல்லை கூட அதனால் சாப்பிட முடியவில்லை. சில நாட்கள் அதற்கு நோய் குணமாக மருந்து கொடுத்த வியாபாரி ஒரு நாள் அதனிடம் "மாடே! உன்னை நல்ல விலைக்கு ஒருவர் கேட்கிறார். அவரிடம் உன்னை விற்று விட போகிறேன்" என்றான். "எஜமான்! நான் இப்போது இருக்கும் நிலைமையில் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னை ஏன் அவர்கள் விலைக்கு கேட்கிறார்கள்?" என்றது. வியாபாரி அதற்கு "அவர்கள் உன்னை வேலை செய்ய சொல்ல வாங்கவில்லை. உன்னை கொன்று உன் தோலை எடுக்கவே உன்னை விலைக்கு கேட்கிறார்கள்" என்றான்.

வியாபாரி சொன்ன பதிலை கேட்டதும் மாட்டிற்கு கண்களில் நீர் வர தொடங்கியது. "எஜமான்! நீங்கள் செய்வது அநியாயம். உங்கள் பேச்சை நம்பி மாடாய் உழைத்தாலேயே நான் நோயுற்றேன். இல்லாவிடில் நான் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருந்திருப்பேன். நீங்கள் செய்தது துரோகம்" என்றது.

அதை கேட்ட வியாபாரி, "நான் செய்தது துரோகம் இல்லை. ஒரு எஜமானனின் லட்சியம் தன் தொழிலாளியிடம் முடிந்த அளவு அதிக வேலை வாங்கி லாபம் பெறுவது. நான் அதையே செய்தேன். உன்னால் ஐந்து ஆண்டுகளில் சம்பாதிக்க வேண்டிய பணத்தையும் மூன்றே ஆண்டுகளில் சம்பாதித்து விட்டேன். இப்போது உன்னை விற்பதன் மூலமும் பணம் சம்பாதிக்க போகிறேன். என்னுடைய அதிக லாபம் பெரும் நோக்கம் நிறைவேற உன்னுடைய ஆசையை மூலதனமாக்கி கொண்டேன். நீ முதல் முறையிலேயே சுதாரித்து கொண்டிருந்தால் தப்பித்து விட்டு இருக்கலாம்" என்றான். மாடு தன் முட்டாள் தனத்தை எண்ணி நொந்து கொண்டது.

நீதி: நிர்வாகத்தின் நோக்கம் ஊழியர்களிடம் இருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வேலை வாங்குவது. இதற்காக அவர்கள் பொய்யான வாக்குறுதிகளையும் தரலாம். ஊழியர்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

Relaxplzz


"குட்டிக்கதைகள் - 2"

:D Relaxplzz

Posted: 10 Mar 2015 07:10 AM PDT

:) Relaxplzz

Posted: 10 Mar 2015 07:00 AM PDT

;-) Relaxplzz

Posted: 10 Mar 2015 06:50 AM PDT

ஆறறிவு உள்ளவர்களாக காட்டிக்கொள்ளும் மனிதர்களுக்கு, ஐந்தறிவு கொண்ட ஜீவன் ஒன்று தன...

Posted: 10 Mar 2015 06:42 AM PDT

ஆறறிவு உள்ளவர்களாக காட்டிக்கொள்ளும் மனிதர்களுக்கு, ஐந்தறிவு கொண்ட ஜீவன் ஒன்று தனது செய்கையின் மூலம் பாடம் நடத்தியிருக்கும் காட்சி ஒன்று நம் கண்களில் சிக்கியது.

ராமநாதபுரம் அரண்மனை வீதியில் மாலை நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவர். வாகன போக்குவரத்தும் அதிகமாக உள்ள அந்த மாலை நேரத்தில் காளை மாடு ஒன்றை கையில் பிடித்து வந்த ஒருவர் மதுவின் போதை தலைக்கு ஏற சாலையிலேயே சாய்ந்துவிட்டார்.

தமிழகத்தில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுதானே என எண்ணிய மக்கள் இதனை கவனத்தில் கொள்ளாமல் கடந்து சென்றனர். இந்த நிலையில்தான் அந்த போதை மனிதர் கூட்டி வந்த காளைமாட்டின் எஜமான் விசுவாசம் வெளிப்பட்டது.

போதையில் தன்நிலை மறந்து கிடந்த தனது எஜமானரை நாவால் வருடியும், காலால் உரசியும் பயனில்லாமல் போனது. இதனால் அந்த குடிகார எஜமானரின் அருகிலேயே காளை மாடும் படுத்து கொண்டது. இதன் பின் நடந்த சம்பவங்கள் இன்னும் சுவையானது.

உச்சகட்ட போதையில் உருண்டு கிடந்த அந்த நபர், தான் என்ன செய்கிறோம் எனத் தெரியாத நிலையில் தனது கை, கால்களை வாகனங்கள் சீறி பறக்கும் சாலையில் பரப்பியபடி புரண்டு கொண்டும், அவர் அருகில் படுத்திருக்கும் காளைமாட்டின் முகத்தினை தடவிவிடுவதுமாக இருந்தார். குடிபோதையிலும் தன் மீது பாசம் காட்டும் தனது எஜமானரை நினைத்து உருகிய அந்த காளை, அவ்வப்போது சாலையின் மையப்பகுதிக்கு சென்று, தனது எஜமானரின் கை, கால்கள் மீது தனது கால்களை போட்டு அமுக்கியவாறு அரண் அமைத்தது. இதனால் அப்பகுதியில் சென்ற வாகனங்களில் சிக்கி சிதையாதவாறு தப்பித்தார் அந்த குடிகார எஜமானர்.

மன்னராட்சி காலத்தில் மக்களுக்கு அரணாக திகழ்ந்த மன்னன் வாழும் இடம் அரண்மனை ஆகும். அந்த அரண்மனை அமைந்திருக்கும் சாலையில் சென்ற மக்கள் ஒரு காளை மாட்டின் எஜமான் விசுவாசத்தை கண்டு மெய்சிலிர்த்து போனார்கள்.

இதுபோன்ற ஐந்தறிவு ஜீவன்களிடம் உள்ள பரிவை, ஆறறிவு உள்ள மனிதர்களும் காட்டுவார்களா?

நன்றி : விகடன்


நெகிழ வைத்த நிஜங்கள் - 2

:) Relaxplzz

Posted: 10 Mar 2015 06:21 AM PDT

ருத்ராட்சத்தின் மருத்துவ குணங்கள்! READ FULLY ... . SHARE THIS TO EVERY ONE ர...

Posted: 09 Mar 2015 11:10 PM PDT

ருத்ராட்சத்தின் மருத்துவ குணங்கள்! READ FULLY ...

. SHARE THIS TO EVERY ONE

ருத்ராட்சத்தைக் கழுத்தில் அணிவதால் புற்று நோய் கூட தணியும் என்று சமீபத்தில் வெளியான சில ஆராய்ச்சிக் குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன. பித்தம், தாகம், விக்கல் போன்வற்றிற்கு இது மிகவும் நல்லது. கபம், வாதம், தலைவலி போன்ற நோய்களுக்கு ருத்ராட்சம் சிறந்த மருந்தாகும் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது. ருசியை விருத்தி அடையச் செய்யும். மன நோய்களுக்கு சாந்தம் அளிக்கும். கண்டகாரி, திப்பிலி என்பவற்றுடன் இதைச் சேர்த்து கஷாயம் செய்து அருந்தினால் சுவாச கோசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடையும்.

ஐந்து முக ருத்ராட்சம் ஒன்றை எடுத்து அதில் எலுமிச்சம் சாறு விட்டு இழைத்து, அந்தச் சாற்றை தேள் கொட்டிய இடத்தில் தடவினால் வலி உடனே நீங்கும். இந்த ருத்ராட்சம் துõக்கம் இல்லாமல் துன்பப்படுபவர்களுக்கு நல்ல நிவாரணி. இதை பால்விட்டு இழைத்து அந்தச் சாற்றை கண் இமைகள் மீது தடவிக் கொண்டால் நிம்மதியான உறக்கம் வரும். இந்த ருத்ராட்சத்தை தூளாக்கி துளசிச் சாற்றில் கலந்து உட்கொண்டால், பக்கவாத நோயும் குணமாகும்.

தண்ணீரில் இதைப் போட்டு சில மணி நேரம் ஊற வைத்து, பிறகு ருத்ராட்சத்தை எடுத்துவிட்டு தண்ணீரை உட்கொண்டால் ரத்த அழுத்த உபாதைகள் நிவாரணம் ஆகும். ஒரு முக ருத்ராட்சம் மிகவும் அரிதாகக் கிடைக்கிறது. ஒரு முக ருத்ராட்சத்தை சன்யாசிகள் மட்டுமே அணிய வேண்டும். பிறர், வீட்டில் உள்ள சாளக்கிராமம் மற்றும் விக்ரகங்களுடன் வைத்துப் பூஜை செய்யலாம். ருத்ராட்சத்தைக் கழுத்தில் மாலையாக 32ம், கை மணிக்கட்டில் 12ம், மேல் கையில் 16ம், மார்பில் 108ம் ஆக தரிக்கலாம்.

ஏக முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பரமசிவன். இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
இரண்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை ஸ்ரீகண்ட பரமசிவம். இதை அணிவதால் பசுவைக் கொன்ற பாவம் விலகும். பொருட் செல்வம் பெருகும்.
மூன்று முக ருத்ராட்சத்தின் அதி தேவதை அக்னி தேவன். மும்மூர்த்திகளும் சந்தோஷம் அடைவர். ஸ்திரீகளுக்குச் செய்த தோஷம் விலகும்.

நான்கு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பிரம்மா. மனிதர்களுக்கு இழைத்த பாவம் விலகும்.
ஐந்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை காலாக்னி ருத்ரன். இதை அணிவதால் சதாசிவம் சந்தோஷம் அடைகிறார். செய்யக் கூடாத செயல்களைச் செய்வதால் உண்டாகும் தோஷம் விலகும்.

ஆறு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை சுப்ரமணியர். இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் விலகும்.
ஏழு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை ஆதிசேஷன். களவு தோஷமும் கோபத்தீயும் விலகும்.
எட்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை விநாயகப் பெருமான். பாவங்கள் விலகும்.

ஒன்பது முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பைரவர். இதை அணிவதால் நவ தீர்த்தங்களில் குளித்தால் என்ன புண்ணியமோ அந்தப் புண்ணியம் கிட்டும். பைசாச உபாதைகளும் துஷ்டப் பிரயோகங்களும் விலகும்.
பத்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை விஷ்ணு. நாக தோஷமும், பைசாச தோஷமும் விலகும்.
பதினோரு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பதினோரு ருத்ரர்களாகச் சொல்லப்பட்டுள்ளது. பல அஸ்வமேத யாகம் செய்த பலன்களும் பல வாஜபேய யாகம் செய்த பலனும் கிட்டும்..
.
ருத்ராட்சம் அணிவதால் அனைத்து நற்குணங்களும், நன்மைகளும் கிடைக்கும். அத்தகைய ருத்ராட்சத்தை அணிந்து வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று உய்வோம்...

Relaxplzz

ஒரு பூனையும் அதோட பூனைக் குட்டியும் வாக்கிங் போயிட்டு இருக்குறத .... ஒரு நாயி ப...

Posted: 09 Mar 2015 10:10 PM PDT

ஒரு பூனையும் அதோட பூனைக் குட்டியும் வாக்கிங் போயிட்டு இருக்குறத ....

ஒரு நாயி பாத்துச்சு...

பொறுக்குமா???

சேசிங் ஸ்டார்ட்....

பூனையும் குட்டியும் ஓட....

நாயி விரட்ட ....

பூனையும் குட்டியும் ஓட....

நாயி விரட்ட ....

பூனையும் குட்டியும் ஓட....

நாயி விரட்ட ....

பூனையும் குட்டியும் ஓட....

நாயி விரட்ட ....

என்ன போரடிக்கிதா?

பூனை சடன் ப்ரேக் ....

அபவுட் டேர்ன்....

நாயி : உர்ர்ர்ர்ர்ர்

பூனை: பௌ.... பௌ...

பூனைக் குட்டி: அம்மா மியாவுக்கு பதிலா வொய் பௌ பௌ?

பூனை : சும்மாக் கிட பௌ...பௌ....

நாயி: மியாவுக்கு பதிலா பௌ பௌ வா?

பூனை: பௌ ... பௌ...

நாயி: வாலச் சுருட்டிக்கிட்டு ஓட்டம்...

பூனை தன் குட்டியிடம்: இப்போத் தெரியுதா செகண்ட் லாங்குவேஜோட மதிப்பு....

நாளைலேர்ந்து ஒழுங்கா தாய் மொழி தவிர இரண்டாவதா ஒரு மொழி கத்துக்கோங்க

புரிஞ்சுதா நட்பூஸ்?

:) :)

Relaxplzz

பிள்ளைகளுக்கு நல்ல சிந்தனைகளை கூறுங்கள்! ஒரு குழந்தையைவிட நாம் உயர்ந்தவர் என்று...

Posted: 09 Mar 2015 09:59 PM PDT

பிள்ளைகளுக்கு நல்ல சிந்தனைகளை கூறுங்கள்!

ஒரு குழந்தையைவிட நாம் உயர்ந்தவர் என்று நினைக்காதீர்கள்….

01. பிள்ளைகள் எதாவது செய்தால் எப்போதும் குறை கூறுதல், அவர்கள் பாராட்டும்படி செய்தாலும் கண்டு கொள்ளாதிருத்தல் போன்ற செயல்களை பலர் செய்கிறார்கள் இதனால் பிள்ளைகளின் மன வளர்ச்சி குன்றும்.

02. எந்தக் குழந்தையும் பின்னால் எப்படி ஆகுமென எவருமே கூற முடியாது, மூடன் அறிவாளியாகலாம் பைத்தியம் தெளிந்த சித்தமுடையவனாகலாம் ஆகவே பிள்ளைகளை ஒருகாலமும் தப்பாக மட்டுக்கட்டி அலட்சியம் செய்யக் கூடாது.

03. தாமஸ் ஆல்வா எடிசன் மரமண்டை என்று பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டவர் பின்னாளில் ஆயிரம் கண்டு பிடிப்புக்களுக்கு அவரே அதிபதி.

04. லூயி பாஸ்டியர் சராசரி மாணவனாக பாடசாலையில் இருந்தவர் பின்னாளில் நோபல் பரிசு வாங்கினார்.

05. அல்பிரட் ஐன்ஸ்டைன் போன்ற மூளை அழுகிய மாணவனை நான் பார்த்ததே இல்லை என்றார் அவர் ஆசிரியர் ஆனால் அவரே 20 ம் நூற்றாண்டின் அதி சிறந்த விஞ்ஞானியானார்.

06. குழந்தைகளுடன் ஒரு நாளில் சிறிது நேரமாவது பேசுங்கள், நல்லதைப் பேசுங்கள் கனிவுடன் பேசுங்கள். அவர்கள் குறைகளைப் பற்றி அதிக நேரம் பேசாதீர்கள் நிறைகளை பற்றிப் பேசுங்கள்.

07. பிள்ளைகளுடன் யாரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள், அவன் அவனே.. நீங்கள் நீங்களே.. நீங்களே முன்னுதாரணமாக இருங்கள் உங்களைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.

08. வாழ்வில் வெற்றிபெற்றவரைப்பற்றி பேசுங்கள், ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களைப்பற்றி பேசுங்கள்.

09. எப்படி இருக்கக் கூடாது என்று ஒப்பிட்டு பேசுவதைவிட எப்படி இருக்க வேண்டுமென ஒரு முன்னுதாரண மனிதரைப்பற்றிப் பேசுங்கள்.

10. பிள்ளைகளுக்கு வீட்டுக்குள் விலங்கிடாதீர்கள் வீடு ஒரு சிறைச்சாலைக் கூடமல்ல மனிதர்களை தோற்றுவிக்கும் கோயில்.

11. நல்ல மேற்கோள்களை கொடுங்கள், சுதந்திரம் கொடுத்து, கட்டாயப்படுத்தி வழிக்குக் கொண்டு வாருங்கள்.

12. மலர் தூவியுள்ள பாதையைப்பற்றி பிள்ளைகளுக்கு சொன்னால் அவர்கள் முள் நிறைந்த பாதையை புரிந்து கொள்வார்கள்.

13. உழைப்பைப்பற்றி சொல்லிக் கொடுங்கள் அவர்கள் உழைப்பில்லாத கேடுகளை புரிந்துகொள்வார்கள்.

14. வெற்றி பெற்றவர்களை சொல்லும்போது தோல்வியின் காரணங்களை அவன் அறிந்து கொள்வான்.

15. சுறு சுறுப்பை சொல்லிக் கொடுத்தால் அவன் சோம்பலை அடையாளம் காண்பான், விதியை வென்றவர்களை சொல்லும்போது அவன் வேதனையில் நொந்து அழிந்தவர்களை கண்டு கொள்வான் – இது போதும்.

Relaxplzz


"சுட்டீஸ் பக்கம்"

வறுமைக்கு ஏழையைப் பிடித்திருக்கிறது.. திமிருக்கு பணக்காரனைப் பிடித்திருக்கிறது..

Posted: 09 Mar 2015 09:50 PM PDT

வறுமைக்கு ஏழையைப் பிடித்திருக்கிறது..

திமிருக்கு பணக்காரனைப் பிடித்திருக்கிறது..


0 comments:

Post a Comment