எதிரியையும் மதித்த எங்கள் தலைவன்..!!
--------------------------------------------------------------------
1992 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் பதற்றமான நிலையில் யாழ் குடா இருந்தது.! அந்த நேரத்தில் எதிரி யாழ் குடாவை கைப்பற்றும் முயற்சியில் முழு மூச்சாக இருந்தான். அதற்கான தயார் படுத்தலில் விரைவு பட்டிருந்தான். அதற்கு வசதியாக தீவகமும் அவனது கட்டுபாட்டில் இருந்தமையால் அந்த நடவடிக்கைக்குச் சாதகமான நிலையில் எதிரி இருந்தான்.
அந்த கால கட்டத்தில் சேந்தான்குளம் ஊடாக முன்னேறுவது போல புலிகளை திசை திருப்ப எதிரி போக்கு காட்டிக் கொண்டிருந்தான். அனால், எதிரி தீவகத்திலிருந்து கடல் நீரேரி ஊடாக நவாலியில் தரையிறங்கி யாழை கைப்பற்றத் திட்டமிட்டிருந்தான்.
எதிரியின் திட்டத்தை தலைவர் முன் கூட்டியே உணர்ந்து அரியாலையில் இருந்து அராளி, நவாலி அண்டிய பிரதேசங்கள் முழுவதும் இரவு வேளைகளில் பதுங்கு குழிகள் அமைத்து எதிர் தாக்குதலுக்குப் புலிகளைத் தயார் படுத்தினார்.
இந்தத் தாக்குதலை அப்போதைய வடக்கு பகுதிக்கான சிங்கள இராணுவ தளபதி லெப். ஜெனரல். டென்சில் கொப்பேக்கடுவ வழிநடத்த ஆரம்பித்திருந்தார். இந்த இடத்தில் கொப்பேகடுவ பற்றி கூற வேண்டி உள்ளது. இவர் சிங்கள அரசின் புகழ் பூத்த தளபதி. தலைவர் அவர்களும் எதிரியில் மதித்த ஒரு தளபதி கொப்பேக்கடுவ மட்டுமே. இதைத் தலைவர் பலதடவை கூறியுள்ளார்.
அதற்குக் காரணம் 1987 இல் ஒப்ரேசன் லிபரேசன் மற்றும் 1990 ஆம் ஆண்டு முல்லை முகாம் எம்மிடம் விழும் நிலையில் இருந்த போது கடலால் ஒரு தரையிறக்கம் செய்து அந்த முகாம் காப்பாற்றியது, அதேபோல் 1990 இல் கிளிநொச்சி முகாம் எம்மிடம் விழ இருக்கும் போது ஆனையிறவிலிருந்து வந்து எமது முற்றுகையை உடைத்து இராணுவத்தை மீட்டுச் சென்றது, 1991இல் ஆனையிறவில் எமது முற்றுகை இறுக்கியபோது கடலால் தரையிறங்கி தாக்குதலை நேரடியாக களத்தில் நின்று வழிநடத்திய ஒரு எதிரி தளபதி கொப்பே கடுவ என்பதால் தலைவருக்கும் அவன் மேல் மதிப்பிருந்தது.
இப்படி இருக்கும் போது யாழை கைப்பற்றும் நாளும் நெருங்கி கொண்டிருந்தது. அதை நிறுத்துவதற்கு புலத்திலும் அதற்கு வெளியிலும் இலக்கு தேடி அலைந்தனர் புலிகள். நாங்கள் ஒரு இக்கட்டான காலகட்டத்தில் இருந்தோம். அப்போது பிரிகேடியர். சசிகுமார் மாஸ்டர் அவர்களால் பயிற்று விக்கப்பட்ட விசேட வேவுப்போராளிகள் மணியம்தோட்டம் குட்டி முகாமிலிருந்து மேஜர் கார்வண்ணன் தலைமையில் 6 பேர் கொண்ட அணியொன்று தீவினுள் ஊடுருவியது.
இதில் சீசர் என்னும் போராளி தனது தலையில் வைத்து வாகன வெடிகுண்டு ஒன்றை சுமந்து செல்கிறான். அங்கு சென்ற பின் ஹெய்ஸ் என்னும் இடத்தில் எதிரியின் போக்கு வரத்தை மறைந்திருந்து அவதானித்த போது பாலம் ஒன்று உடைந்திருந்தமையால் வாகனங்கள் மெதுவாக பாலத்திற்கு பக்கவாட்டாக செல்வதை அவதானித்து அதில் அந்தக் குண்டை குழி தோண்டி புதைத்து வைத்து விட்டார்கள்.
அடுத்த நாள் 08.08.1992 அன்று காலை 8.00 மணிக்கு கொப்பேக்கடுவ வந்த லாண்ட் றோவர் (Land Rover) வாகனம் கண்ணிவெடியில் சிக்கிச் சிதறியது.!!!
சிங்கள தேசம் அதிர்ந்து போனது.! தமிழர் தேசம் விழாக்கோலம் கொண்டது.
அந்த தாக்குதலில் லெப். ஜெனரல். டென்சில் கொப்பேக்கடுவ, மேஜர் ஜெனரல். விஜய விமலரட்ன, கொமடோர் ஜெயமஹா (கடற்படை), கேணல். ஆரியரட்ண உட்பட 8பேர் கொல்லபட்டனர். இதில் சாரதியான கோப்ரல் ஜெகத் விக்ரமரட்னவை தவிர அனைவரும் அதிகாரிகளே.!
இந்த தாக்குதல் எதிரியை நிலைகுலைய வைத்தது. புலிகளுடனான போரில் ஒரே தடவையில் கொல்லபட்ட தளபதிகள் இவர்களே. அத்தோடு அந்த இராணுவ நடவடிக்கையை எதிரி கைவிட்டான். ஆனால் தங்களது தளபதிக்கு அவர்கள் சிலை ஒன்றை தீவில் அமைத்திருந்தார்கள்.
காலம் சுழன்று 1994 ஆம் ஆண்டு தீவில் எடுக்கப்பட வேவுக்கு அமைய தாக்குதல் ஒன்று தலைவர் அவர்களால் திட்டம் தீட்டப்பட்டு போராளிகளுக்கு அது விளங்கப்படுத்தப்பட்ட போது தலைவர் கண்டிப்பான உத்தரவொன்ரையும் போட்டார்.!! எக்காரணம் கொண்டும் தாக்குதலின் போது கொப்பேக்கடுவவின் சிலையில் ஒரு சூடு கூட விழக்கூடாது என்று கூறியிருந்தார். அத்தோடு அந்தத் தாக்குதலை வழிநடத்திய தளபதி பிரிகேடியர் பாணு அண்ணாவிற்கும் இறுக்கமாகச் சொல்லியிருந்தார்.
அதன் பின்னும் சண்டையின் போது தன்னுடன் நின்ற போராளிகள் 5 பேரை சண்டை முடியும் வரை அந்தச் சிலைக்கு பாதுகாப்புக்கு அனுப்பியிருந்தார்.!
இது தான் எங்கள் தலைவன்.! ஒரு வீரனால் மட்டுமே இன்னொரு வீரனை இனம் காண முடியும். எதிரியின் வீரத்துக்கு மதிப்பளித்த பெரும் வீரன் எங்கள் தலைவன். எம்மால் கொல்லப்பட்ட எதிரி தளபதி சிலைக்கும் பாதுகாப்பு கொடுத்தார் எங்கள் அண்ணன். எமக்காகவும், நாட்டுக்காகவும் மடிந்துபோன எங்கள் வீரரின் கல்லறைகளை உடைத்து உடலங்களை எடுத்து வெளியில் போட்ட எதிரி நல்லவன், அவனது சிலைக்கே பாதகாப்பு கொடுத்த எங்கள் தலைவன் பயங்கரவாதி??
"நித்திரையில் இருப்பவனை எழுப்ப முடியும், நித்திரை போல் நடிப்பவனை (எம்மை பயங்கரவாதி என்பவர்களை )"??? எழுப்ப முடியாது..!!!
- ஈழத்து துரோணர்

0 comments:
Post a Comment