Sunday, 15 March 2015

Facebook Tamil pesum Sangam: FB page posts

Facebook Tamil pesum Sangam: FB page posts


# அம்மா மூன்றெழுத்து # அப்பா மூன்றெழுத்து # தம்பி மூன்றெழுத்து # அக்கா மூன்றெழுத...

Posted: 15 Mar 2015 08:50 AM PDT

# அம்மா மூன்றெழுத்து
# அப்பா மூன்றெழுத்து
# தம்பி மூன்றெழுத்து
# அக்கா மூன்றெழுத்து
# தங்கை மூன்றெழுத்து
# மகன் மூன்றெழுத்து
# மகள் மூன்றெழுத்து
# காதலி மூன்றெழுத்து
# மனைவி மூன்றெழுத்து
# தாத்தா மூன்றெழுத்து
# பாட்டி மூன்றெழுத்து
இவையனைத்தும் அடங்கிய
# உறவு மூன்றெழுத்து
உறவில் மேம்படும்
# பாசம் மூன்றெழுத்து
பாசத்தில் விளையும்
# அன்பு மூன்றெழுத்து
அன்பில் வழியும்
# காதல் மூன்றெழுத்து
காதலில் வரும்
# வெற்றி மூன்றெழுத்து
# தோல்வி யும் மூன்றெழுத்து
காதல் தரும் வலியால்வரும்
#
வேதனை மூன்றெழுத்து வேதனையின்
உச்சகட்டத்தால் வரும்
# சாதல் மூன்றெழுத்து
சாதலில் பறிபோகும்
# உயிர் மூன்றெழுத்து..
இது நான் எழுதிய
# கவிதை என்றால்
மூன்றெழுத்து..
இது
# அருமை என்றால் அதுவும்
மூன்றெழுத்து
# மொக்கை என்றால் அதுவும்
மூன்றெழுத்தே..
# நட்பு என்ற மூன்றெழுத்தால்
இணைந்து இதைப்படித்த
அனைவருக்கும் என்
# நன்றி ..
# நன்றி யும் மூன்றெழுத்தே ...!
# மூன்று ம்
மூன்றெழுத்தே... .....!!!
# இவை அத்துனையும்
உள்ளடக்கிய
தமிழ் உம்
மூன்றெழுத்து.

கடந்த ஒரு ஆண்டாக பரிசோதனை வடிவில் மட்டுமே இருந்த வாட்ஸ்அப்பின் பேசும் வசதி இப்போ...

Posted: 14 Mar 2015 06:20 PM PDT

கடந்த ஒரு ஆண்டாக
பரிசோதனை வடிவில்
மட்டுமே இருந்த வாட்ஸ்அப்பின்
பேசும்
வசதி இப்போது அதிகாரப்பூர்வமா
க வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் 70
மில்லியனுக்கு மேற்பட்டவர்கள்
வாட்ஸ்அப்பின் மெசேஜ்
அனுப்பும்
வசதியை பயன்படுத்துகிறார்கள்.
இது மொத்த வாட்ஸ்அப்
பயனாளிகளில் 10 சதவீதம் ஆகும்.
இதனால் அதில் பேசும்
வசதியை அறிமுகப்படுத்த
முடிவு செய்து கடந்த
ஒரு ஆண்டாகவே இந்தியாவில்
தேர்ந்தெடுக்கப்பட்ட சில
பயனாளர்களுக்கு மட்டுமே பேசும்
வசதியை கொடுத்து பரிசோதனையில்
ஈடுப்பட்டு வந்தது வாட்ஸ்அப்.
இதனால் இந்த வசதி கிடைக்காத
பலர் ஏமாற்றம் அடைந்தார்கள்.
இந்நிலையில் அவர்களின்
ஏமாற்றத்தை போக்கும் விதமாக
ஆண்ட்ராய்ட் போன்
வைத்திருப்போர் அனைவரும்
பயன்படுத்தும் விதத்தில் இந்த
அறிவிப்பை வெளியிட்டுள்ளது
வாட்ஸ்அப். இந்த அப்ஸ்-ஐ
கூகுள் ப்ளேஸ்டோர் (2.11.528)
மற்றும் வாட்ஸ்அப் (2.11.531)
தளத்தில் இருந்த பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம்.
ஏற்கனவே வாட்ஸ்அப் பேசும்
வசதியை பயன்படுத்தி வரும்
ஒருவர், உங்களுக்கு கால்
செய்வதன் மூலம் இந்த புதிய
வசதியை நீங்களும் பயன்படுத்த
தொடங்கலாம்.
இது அலைபேசி சேவையில்
ஈடுப்பட்டுள்ள ஏர்டெல், ஏர்செல்
போன்ற நிறுவனங்களுக்கு
பலத்த அடியாக இருக்கப்
போகிறது. #Aminu

0 comments:

Post a Comment