Facebook Tamil pesum Sangam: FB page posts |
- உன் சாதி யாதென கேட்டார் ? மனிதன் என்றேன்... . . . . உன் மதம் யாதென கேட்டார் ? மன...
- வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்...! 1. நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம்...
- என்னைக் கேட்டால், நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதியை பேட்டி எடு...
Posted: 10 Mar 2015 08:01 AM PDT உன் சாதி யாதென கேட்டார் ? மனிதன் என்றேன்... . . . . உன் மதம் யாதென கேட்டார் ? மனிதநேயம் என்றேன்... . . . . நீ யாரென்று கேட்டார் ? தமிழன் என்றேன்... |
Posted: 09 Mar 2015 06:36 PM PDT வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்...! 1. நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும் 2. உன் தகுதி பிறருக்குத் தெரியவேண்டுமானால் பிறர் தகுதியை நீ தெரிந்துகொள். 3. திருட்டுப் பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனை விட மோசமானவன். 4. தூக்கம் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது. 5. அறிவுக்காக செய்யப்படும் முதலீடு எப்போதுமே கொழுத்த வட்டியையே தரும். 6. நல்ல மனைவியை விட உயர்ந்த வரமும் இல்லை. கெட்ட மனைவியை விட மோசமான சாபமும் இல்லை. 7. முதலில் மனிதன் மதுவைக் குடிக்கிறான். பின்பு மது மனிதனை குடிக்கிறது. 8. ஆயிரம் பேர் சேர்ந்து ஒரு தொழிற்சாலையைக் கட்டி விடலாம். ஒரு வீட்டைக் கட்ட ஒழுக்கமான ஒரு பெண் வேண்டும். 9. இரண்டு கால் உள்ள எல்லோரும் நடந்து விடலாம். ஆனால் இரண்டு கை உள்ள எல்லோருமே எழுதிவிட முடியாது. 10. உழைப்பு உடலை வலிமையாக்கும். துன்பங்களே மனதை வலிமையாக்கும். 11.ஒருவன் தான் செய்த தவறை ஒத்துக்கொள்ள வெட்கப்படக் கூடாது. ஒப்புக்கொள்வதன் பொருள் என்ன? அவன் நேற்றைவிட இன்று அதிக அறிவு பெற்று விட்டான் என்பதே. 12. வாழ்க்கை சுவையானது. உங்கள் அறியாமையினால் அதை நரகமாக்கி விடாதீர்கள். 13. பிறரைப் பாராட்டுங்கள். பாராட்டு கிடைக்கும். பிறரை மதியுங்கள். மதிப்புக் கிடைக்கும். அன்பு செலுத்துங்கள். அன்பு தேடி வரும். இவை ஒற்றைவழிப் பாதைகள் அல்ல. இரட்டை வழிப் பாதைகள். அன்பில் வணிகத்திற்கு இடமில்லை. வணிகத்தில் அன்புக்கு இடமில்லை. 14. தனக்கென வாழ்ந்தவன் தாழ்ந்தவன் ஆகிறான். பிறருக்கென வாழ்பவன் பெருவாழ்வு வாழ்கிறான். அடக்கம் அணிகலன் மட்டுமல்ல. அறத்தின் காவலன். 15. சொற்கள் நம் சிந்தனையின் ஆடைகள். அவற்றைக் கந்தல்களாகவும், கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக் கூடாது. 16. சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும். ஊக்கமுள்ளவனுக்க ு எல்லாமே எளிதாகத் தோன்றும். 17. எந்தவிதக் கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை திசைகாட்டும் கருவி இல்லாத கப்பல் நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும். 18.எந்த மனிதன் தீவிரமாகவும், திடமாகவும், சிந்திக்கிறானோ அந்த சிந்தனைகளின் வளர்ச்சி கலையாகும். அவ்வாறு சிந்திக்கிறவனே கலைஞன் ஆவான். 19. பல அறிஞர்களுடன் பழகினால் நீ அறிவாளி ஆவாய். ஆனால் பல பணக்காரர்களுடன் பழகினாலும் பணக்காரன் ஆக மாட்டாய். 20. இன்பத்தின் இரகசியம் எதில் அடங்கியிருக்கிறது தெரியுமா? நீ விரும்பியதைச் செய்வதில் அல்ல. நீ செய்வதை விரும்புவதில்தான். |
Posted: 09 Mar 2015 12:01 PM PDT என்னைக் கேட்டால், நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதியை பேட்டி எடுத்ததும் அதனை வெளியிட்டதும் சரியே. இந்த பேட்டியின் மூலம் பெரும்பாலான இந்திய ஆண்கள் பெண்களை இந்த கண்ணோட்டத்திலேய ே பார்க்கின்றனர் என்னும் தவறான ஒரு எண்ணம் வந்துவிடும் என சிலர் கூக்குரலிடுகின்றனர். இந்த பேட்டி வெளி வந்தாலும் வரா விட்டாலும் இந்திய ஆண்கள் அனைவருமே பெண்களை ஒரு பொருளாகவே பார்க்கின்றார்க ள். ஒவ்வொருவரின் பார்வையின் extremity வேண்டுமானாலும் வேறுபடும். சிலர் எல்லாப் பெண்களையுமே உடலுறவுக்குரியவ ளைப் போலவே பார்க்கின்றனர். சிலர் அதிலும் உற்றார் உறவினர் என exemption கொடுத்து தெரியாத பெண்களை மட்டும் கண்களாலேயே கற்பழிக்கின்றனர ். இங்கு என்னதான் யோக்கிய சிகாமணி வேடம் தரித்தாலும் ஆண், குறிப்பாக இந்திய ஆணின் ஆழ்மனது வக்கிரங்கள் நிறைந்தது. வாய்ப்பு கிடைப்பவனும் வசதி படைத்தவனும் ஆசையை ரகசியமாக நிறைவேற்றிக் கொள்கிறான். வாய்ப்பு அமையாதவனும் காசில்லாதவனும் சூழ்நிலை அமையும் போது ஏற்றவாறு நடந்துகொண்டு குற்றவாளி ஆகிவிடுகிறான். நூறு பேர் இருக்கும் இடத்தில் நட்ட நடு இரவில் கூட ஒருவனும் அரைகுறை ஆடை அணிந்த ஒரு பெண்ணை தொடக்கூட மாட்டான். ஆனால் இதே பட்டப்பகலில் தன்னந்தனியாக இழுத்து போர்த்திக் கொண்டு செல்லும் பெண்ணை கற்பழிக்க தயங்க மாட்டான். it is not about any woman's dressing or behaviour. வாய்ப்பு கிடைத்தால் அனுபவிக்க நினைப்பான். அது தான் ஆண். தாய் இல்லாத நேரங்களில் மகள்களையே கற்பழிக்கும் தந்தைகள் உண்டு இந்த திருநாட்டில். இதெல்லாம் நடப்பது தெரிந்தும் அமைதியாக ஒத்துழைக்கும்படி சொல்லும் தாய்மார்களும் உண்டு. ஆனாலும் இது எல்லாமும் தெரிந்தாலும் எல்லாம் இப்படித்தான். நம்ம நாட்டை மாத்த முடியாது என அடுத்த வேளை சோற்றுக்குண்டான வழியைத் தேடி சென்றுவிடும் மக்கள் நாமும் இங்கு உண்டு. உண்மையிலேயே அந்த குற்றவாளியை தூக்கில் இடுவதற்கு பதில் அவன் ஆணுறுப்பை கொஞ்சம் கொஞ்சமாக அறுத்து எறியலாம். நாள்தோறும் அவன் அறுபட அறுபட அனுபவிக்கும் வலியையும் இதே போல் டாகுமெண்டரி எடுத்து வீடியோ ரிலீஸ் செய்யலாம். திரையரங்குகளில் படத்திற்கு முன் இதனை ஒரு எச்சரிக்கையாக திரையிடலாம். முகேஷைக் கண்டு புகையிலையைக் கைவிடாதவர்கள் கூட இந்த பரதேசியைக் கண்டு கற்பழிக்கும் எண்ணத்தைக் கைவிட வாய்ப்புண்டு. இனி வரப்போகும் இளைய சமூகத்தை வேண்டுமானால் சிறிய வயது முதலே பாலியல் கல்வி, பெண்களை போகப்பொருளாக அல்லாமல் சக மனிதராக பாவித்தல் போன்றவற்றை சொல்லிக்கொடுத்த ு வளர்க்கலாம். ஆனால் இப்போது இருக்கும் வயது வந்த ஆண்களை இனி பாடம் நடத்தி திருத்த முடியாது. பயமுறுத்தி தான் அடக்கி வைக்க முடியும். எத்தனை நாட்களுக்கு உயிரோடிருக்கப் போகிறார்கள்? சில பல வருடங்கள் பிடிக்கும் இந்த வக்கிர அங்கிள்களும் தாத்தாக்களும் மண்டையைப் போடுவதற்கு. அது வரை அவர்கள் பெண்கள் மீது கைவைக்காமல் இருக்க சில ஆண்கள் தங்கள் ஆணுறுப்பை தானம் கொடுப்பதொன்றும் பெரிய விசயமில்லை. கிட்னி கொடுத்ததாக நினைத்துக்கொள்ளட்டும். if i were to be the president i will immediately make castration as the capital punishment for rape.. கோபங்களுடன் வித்யா |
You are subscribed to email updates from பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கம்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment