Monday, 23 February 2015

Relax Please: FB page daily Posts

Relax Please: FB page daily Posts


இரவு 9 மணிக்கு மேல் நிச்சயம் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்!!! மனிதனுக்கு உண...

Posted: 23 Feb 2015 09:13 AM PST

இரவு 9 மணிக்கு மேல் நிச்சயம் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்!!!

மனிதனுக்கு உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் மட்டுமின்றி, நிம்மதியான தூக்கமும் மிகவும் இன்றியமையாதது. மனிதன் ஒரு நாளைக்கு வேண்டிய தூக்கத்தைக் கடைப்பிடிக்காவிட்டால், அவனது உடலில் பல பிரச்சனைகள் அழையா விருந்தாளியாய் வந்து ஒட்டிக் கொள்ளும். இன்றைய காலத்தில் நைட் ஷிப்டில் வேலை செய்வோர் கூட, ஒரு நாளைக்கு வேண்டிய தூக்கத்தை மேற்கொள்கிறார்கள். ஆனால் மற்றவர்களோ இரவு நேரத்தில் தூக்கம் வராமல் கவலைப்படுகின்றனர்.
இரவு உணவுக்குப் பின் இதெல்லாம் செய்யாதீங்க!!
இதற்கு முக்கிய காரணம் உண்ணும் உணவுகள் தான். இரவில் சிலர் தூங்குவதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் சாப்பிட்டுவிட்டு, உடனே பெட்டில் படுக்க சென்றுவிடுவார்கள். ஆனால் இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற ஆசைப்பட்டால், இரவு 9 மணிக்கு மேல் ஒருசில உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இங்கு அப்படி இரவில் நல்ல தூக்கத்தைப் பெற இரவு 9 மணிக்கு மேல் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

1. பால்

இரவில் 9 மணிக்கு மேல் பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். பாலில் எவ்வளவு தான் புரோட்டீன், கால்சியம் இருந்தாலும், இரவில் படுக்கும் முன் குடித்தால், அதில் உள்ள லாக்டோஸ் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தி, நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் செய்துவிடும்.

2. பாஸ்தா

இரவு நேரத்தில் பாஸ்தா உட்கொள்வதைத் தவிர்க்கவும். ஏனென்றால் பாஸ்தாவில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், இரவில் தூங்க முடியாது. ஆகவே இதனை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

3. சாக்லேட்

பலருக்கு சாக்லேட் மிகவும் விருப்பமான ஒன்று. இதில் சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் இருக்கிறது. ஆகவே இதனை இரவில் சாப்பிட்டால், நல்ல தூக்கத்ப் பெற முடியாது போய்விடும். இப்படி தினமும் இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாவிட்டால், உடலில் கார்டிசோல் அளவு அதிகரித்து, திசுக்கள் உடைய வழிவகுக்கும்.

4. பிட்சா

இன்றைய காலத்தில் பிட்சா சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. பிட்சாவில் கார்போஹைட்ரேட், கொழுப்புக்கள், சோடியம் போன்றவை அதிக அளவில் இருப்பதால், அவற்றை இரவு 9 மணிக்கு மேல் சாப்பிட வேண்டாம். அதை மீறியும் சாப்பிட்டால், உடல் பருமனடைந்துவிடும். பின் அவற்றை குறைப்பது சிரமமாகிவிடும்.

5. பச்சை மிளகாய்

பச்சை மிளகாய் சாப்பிட்டால் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும். ஆனால் அதனை பகல் நேரத்தில் சாப்பிட்டால் நல்லது. அதுவே இரவில் பச்சை மிளகாய் சேர்த்து செய்யப்படும் உணவை சாப்பிட்டால், தூக்கமின்மை ஏற்படும். பின் பகல் நேரத்தில் சோர்வுடனேயே இருக்க நேரிடும்

6. இறைச்சிகள்

இரவில் சிலர் இறைச்சியை சாப்பிடுவார்கள். இறைச்சியில் புரோட்டீன் அதிகம் உள்ளது. பொதுவாக புரோட்டீன் உள்ள உணவுகள் செரிமானமாவதற்கு அதிக அளவு எனர்ஜி தேவைப்படும். ஆனால் இரவில் அவ்வளவு ஆற்றல் கிடைக்காததால், இறைச்சியை இரவில் உட்கொண்டால், நிம்மதியான தூக்கத்தை பெற முடியாது.

7. வெள்ளை சாதம்

வெள்ளை சாதத்தைக் கூட இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது. இவை கூட இரவில் தூக்கத்தைக் கெடுக்கும். முக்கியமாக இரவு 9 மணிக்கு மேல் இதனை சாப்பிடவே கூடாது. இல்லாவிட்டால் தூக்கத்தை தொலைக்கக்கூடும்.

Relaxplzz


"நலமுடன் வாழ" - 2

2050-ல் உலகம் எப்படி இருக்கும்? ஒரு சின்ன கற்பனை: பையன்: அம்மா இவன்தான் உன் பே...

Posted: 23 Feb 2015 09:10 AM PST

2050-ல் உலகம் எப்படி இருக்கும்?

ஒரு சின்ன கற்பனை:

பையன்: அம்மா இவன்தான் உன் பேரன்.

அம்மா: கல்யாணத்துக்கு ஏன்டா எங்கள கூப்டல....!

பொதுமக்கள்: அண்ணாச்சி மினரல் வாட்டர் கேன் ஒன்ணு கொடுங்க. கடைகார அண்ணாச்சி: ஒரு கேன் 2000 ரூபாய். தரவா...

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தில் ரஜினியின் அம்மா வேடத்தை தெய்வதிருமகள் சாரா ஏற்றார்.

35 வருடங்களுக்கு முன் காணாமல் போன மலேசிய விமானத்தை திரு. விஜயகாந்த் கண்டுபிடித்தார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு.

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

கொல்கத்தா அருங்காட்சியகத்தில் 45 வருடங்களுக்கு முன் உபயோகித்த Nokia 1100 47 கோடிக்கு ஏலம் போனது.

தமிழக அரசு வழங்கிய இலவச Iphone 10s செல்போனில் ஊழல் நடந்துள்ளதாக சட்டசபையில் எதிர்கட்சிகள் வெளிநடப்பு.

உலகிலேயே அதிக மக்கள் தொகை உள்ள முதல் நாடு என சீனாவின் சாதனையை இந்தியா முறியடித்தது.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக சிலுக்குவார்பட்டி சிவகார்த்திகேயன் பொறுப்பேற்றார்.

Relaxplzz

குழந்தை நலம்: 'கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள்!!' எனது நண்பரி...

Posted: 23 Feb 2015 09:00 AM PST

குழந்தை நலம்: 'கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள்!!'

எனது நண்பரின் நண்பர் மகனுக்கு நடந்தது. இதனால், அவரது வாழ்க்கை கடந்த முப்பது நாட்களாக 'ரோலர்கோஸ்டர்' போல மாறிவிட்டிருந்தது. என்ன நடந்தது என்று அவரே சொல்கிறார் இதோ கேளுங்கள்:

"வீட்டில் சாமி போட்டோவிற்கு முன் கற்பூரம் வைத்திருந்தோம். அதை 'கல்கண்டு' என்று நினைத்து மூடிவைத்திருந்ததை எப்படியோ திறந்து ஒரே ஒரு துண்டு கற்பூரத்தை கடித்து தின்றுவிட்டான். அதை உடனடியாக பார்த்த நான் கடித்திருந்த பாதியை வாயில் இருந்து எடுத்துவிட்டேன்.

'கற்பூரம் சாப்பிட்டால் என்ன ஆகும்?'- என்று மனைவி கூகுளில் பார்த்து தெரிவித்த அடுத்த நிமிடமே, என் மகனுக்கு இழுப்பு வந்துவிட்டது. அது நான்கு நிமிடம் நீடித்தது. உடனே ஆம்புலன்ஸ் 911 உதவிக் கேட்டேன். அவர்கள் வந்தபோது, இழுப்பு சரியாகிவிட்டது. முதலுதவிக்கு வந்தவர்கள் குழந்தை தூங்கினால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னார்கள்.

ஆனால், மீண்டும் கண்கள் செருக ஆரம்பித்துவிட்டன. உடனே 'எமர்ஜென்ஸி' பிரிவுக்கு குழந்தையை எடுத்துச் சென்றோம்.

கற்பூரத்திலிருக்கும் 'கேம்பர்' (Camphor) என்ற கொடிய நச்சுப் பொருள் கடுமையான பாதிப்புகளை உருவாக்கக் கூடியது – என்று 'நச்சுத் தடுப்பு' துறையினர் (பாய்ஸன் கண்ட்ரோல்) மூலம் அறிந்த எமர்ஜென்ஸி மருத்துவர்கள், உடனே அதற்கு தகுந்த சிகிச்சையில் இறங்கினார்கள்.

அதற்காக 'சலைன்' (டிரிப்) ஏற்ற ஊசி குத்தும் போது குழந்தை எந்த விதமான எதிர்ப்பையும் காட்டாதது எங்களுக்கு அடிவயிற்றைக் கலக்கியது. அதாவது அவன் சுயநினைவு இழந்த 'டிப்ரெஷன் மோடு'க்கு சென்றுவிட்டிருந்தான்.

உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் 'டாலஸ் மெடிக்கல் சென்டரின்' குழந்தை நல அவசர சிகிச்சைப் பிரிவுக்கு (சில்ரண்ஸ் ஐசியூக்கு) மாற்றப்பட்டான்.

ஆம்புலன்ஸில் இருந்து இறங்கும்போது "அப்பா!" – என்று ஈனஸ்வரத்தில் அவன் அழைத்தாலும் அது எனக்குத் தெம்பூட்ட தைரியமானேன்.

கேம்பர் என்னும் அந்த கொடிய நச்சுப் பொருளின் மூன்றாம் நிலை கோமாவுக்கு கொண்டு சென்றுவிடும். அதை என் மகன் குறைந்த அளவு சாப்பிட்டதால் கோமா நிலைக்கு செல்லாமல் தப்பித்துவிட்டான்.

இது ஒருவிதமான அதிஷ்டமேயானாலும் அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. தகுந்த நேரத்தில் கண்டதாலும், உடனே சிகிச்சைக்கு கொண்டு சென்றதாலும் இறையருளால் எங்கள் கண்மணியை எங்களால் காக்க முடிந்தது. அதுவும் கிட்டத்தட்ட 16 மணி நேர மருத்துவப் போராட்டத்துக்குப் பின்தான் அதுவும் சாத்தியமாயிற்று!"

கேட்டீர்களா... விபரீதத்தை?

அதனால், கற்பூரம் என்னும் கொடிய விஷப் பொருளை வீட்டில் வைப்பதை தவிருங்கள். குழந்தைகளுக்கு எட்டாமல் பாதுகாப்பாக வையுங்கள். அப்படி குழந்தைகள் ஏதாவது சாப்பிட்டதாக சந்தேகம் வந்தால்.. உடனே தாமதிக்காமல் தகுந்த மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுங்கள்.

Relaxplzz


கடவுள் உன்னைச் சோதிக்கின்றார் என்றால் கவலைப்படாதே, சிரித்துக்கொண்டு ஏற்றுக்கொள...

Posted: 23 Feb 2015 08:40 AM PST

கடவுள் உன்னைச் சோதிக்கின்றார் என்றால் கவலைப்படாதே,
சிரித்துக்கொண்டு ஏற்றுக்கொள் ஏனென்றால் சோதிக்கத் தகுதியானவானக உன்னைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்று,,
#தினேஷ்


:) Relaxplzz

Posted: 23 Feb 2015 08:30 AM PST

குட்டி டீச்சர் அம்மாவ பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)

Posted: 23 Feb 2015 08:25 AM PST

குட்டி டீச்சர் அம்மாவ பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)


அடடே அப்படியாப்பா :P

Posted: 23 Feb 2015 08:20 AM PST

அடடே அப்படியாப்பா :P


:) Relaxplzz

Posted: 23 Feb 2015 08:14 AM PST

ஒரு பையன் அவனோட MOBILEல தெரியாம format பண்ணிட்டான்.so அதில இருந்த numbers எல்லாம...

Posted: 23 Feb 2015 08:10 AM PST

ஒரு பையன் அவனோட MOBILEல
தெரியாம format பண்ணிட்டான்.so
அதில
இருந்த numbers எல்லாம் delete
ஆயிடிச்சு!

அவனுக்கு எந்த numbersஉம்
நினைவு இல்ல!
அப்போ அவனுக்கு loverட இருந்தும்
friendட
இருந்தும் message வந்துச்சு!-hi என்று.

அவன் ரெண்டு numbersகும் who are you?
என்று reply போடான்.
அதுக்கு ரெண்டு numbers லயும்
இருந்து வந்த replys ...........

lover : என்ன பாத்தா யார்?
என்று கேக்குறா.......
i hate u ...........

friend : டேய்! மச்சான், அது who are you
இல்லைடா,how are you
i 'm fineda

நண்பேன்டா (y)

Relaxplzz

லியொனார்டோ டா வின்சி (Leonardo Da Vinci) என்பவரால் ஐநூறு வருடங்களுக்கு முன் வரைய...

Posted: 23 Feb 2015 08:00 AM PST

லியொனார்டோ டா வின்சி (Leonardo Da Vinci) என்பவரால் ஐநூறு வருடங்களுக்கு முன் வரையப்பட்ட "மோனாலிசா" என்கிற ஓவியம் உலகப் புகழ் பெற்றது, இன்று வரை இதை ஆஹா...ஓஹோ...இதை போல் ஒரு ஓவியம் இன்று வரை வரையப்படவில்லை.இந்த ஓவியத்தின் உதட்டில் புன்னகை இருந்தாலும்,அவரது கண்களில் ஒருவித சோகம் தெரிகிறது,மோனாலிசாவின் வயிற்றில் கரு இருப்பதால் தான், அவர் வயிற்றை மறைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறார், மோனாலிசா ஒரு ஆண் ஏனெனில் இவரது உடலுக்கும், முகத்திற்கும் வித்தியாசம் தெரிகிறது,இந்த ஓவியம் லியொனார்டோவின் அம்மாவான காத்திரினா டா வின்சியை வைத்து வரையப்பட்டது,மோனாலிசா ஓவியமானது டா வின்சி இளமையில் இருக்கும் போது தாடி இல்லாமல் இருப்பதாக உள்ளது,மோனாலிசா ஆண் மற்றும் பெண் கலந்த கலவை, ஏனெனில் லத்தின் வார்த்தையான ஆமோன் மற்றும் எலிசா சேர்ந்து தான் மோனா லிசா என்ற பெயர் வந்துள்ளது ,மோனாலிசா விசித்திரமாக துறவி போன்று காணப்படுவதற்கு காரணம், அவருக்கு முகத்தில் முடி இல்லை. சொல்லப்போனால், முகத்தில் புருவங்கள் கூட சுத்தமாக இல்லை. மேலும் 16 ஆம் நூற்றாண்டில் உள்ள உன்னதமான பெண்களுக்கு புருவங்களே இருக்காது என்பன போன்று, இந்த ஒரே ஒரு ஓவியத்தை வைத்துக்கொண்டே ஐரோப்பியர்கள் இவ்வளவு அளப்பரைகளை கொடுத்து எப்படியோ உலகப் புகழுக்கு இதை கொண்டு சென்று விட்டனர்.

செஞ்சி அருகே பனைமலை என்ற இடத்தில் வெயில், மழை, பனி, வெட்டி ஆட்களின் கைவரிசை போன்ற பல இன்னல்களை தாண்டி இன்றும் இவ்வளவு உயிர்ப்புடன் வலது புறம் இருக்கம் இந்த ஓவியம் பல்லவர்களின் கைகளினால் வரையப்பட்டு 1300 ஆண்டுகள் ஆகின்றது!. இதை வரைந்தவன் அவன் பெயரை கூட விட்டுச் செல்லவில்லை!.ஆள் அரவமற்ற ஒரு மலையின் மீது கேட்பாரற்று கிடக்கும் இந்த ஓவியம் எப்படி வரையப்பட்டது என்று தெரியுமா? கோயில் சுவரின் அதாவது பாறைகளின் மீது சுண்ணம் தீட்டி, அந்த சுண்ணத்தின் ஈரம் காய்வதற்குள் இந்த ஓவியத்தை தீட்டி முடித்தாக வேண்டும்!, இதோ முடித்து விட்டான் பாருங்கள் அந்த பல்லவ ஓவியன், இவ்வளவு குறிகிய நேரத்தில், இவ்வளவு நேர்த்தியாக இத்தனை நகை அலங்காரங்களோடு தீட்டி இருக்கும் இந்த ஓவியத்தை என்னவென்று கூறுவது? இந்த ஓவியத்தை நாம் அறியவேண்டுமென்றால் எவ்வளவு ஆராய வேண்டும், இப்படி கவனிப்பாரற்று கிடந்து, இவ்வளவு பழுதாகியும் எவ்வளவு பொலிவுடன் இருக்கின்றது இந்த ஓவியம்,அந்த சொக்கும் கண்கள் எதை நோக்குகின்றது, அந்த புன்னகை எதை குறிக்கின்றது ?கழுத்தில் இருக்கும் நகைகள், தலையில் இருக்கும் கிரிடம்,அடடா..விவரிக்க வார்த்தை இல்லையே.. எவ்வளவு கைதேர்ந்த ஆட்கள் நம்மிடம் இருந்திருந்தால் இது போன்றவற்றை நாம் சாதித்திருக்க முடியும்.

சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம்

- சசிதரன்

Relaxplzz


கருப்பு எனது நிறம் மட்டுமல்ல திமிராய் சொல்வேன் அது என் அடையாளமும் கூட...

Posted: 23 Feb 2015 07:50 AM PST

கருப்பு எனது நிறம் மட்டுமல்ல
திமிராய் சொல்வேன் அது என் அடையாளமும் கூட...


:P Relaxplzz

Posted: 23 Feb 2015 07:47 AM PST

ஒரு தம்பதியினர் கோயிலுக்குச் சென்றனர். அங்கு ஒரு கிணறு இருந்தது. அது விருப்பத்...

Posted: 23 Feb 2015 07:44 AM PST

ஒரு தம்பதியினர் கோயிலுக்குச் சென்றனர். அங்கு ஒரு கிணறு இருந்தது.

அது விருப்பத்தை நிறைவேற்றும் கிணறு. அதனிடம் சென்று கணவன் தன் விருப்பத்தைக் கூறிவிட்டு வந்தான்.

பிறகு மனைவி அந்த கிணற்றுக்கு அருகே சென்றாள். அவளுக்கு உயரம் போதாததால் கொஞ்சம் எட்டிப்பார்த்தால். அவ்வளவுதான் அவள் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டாள்.

கணவன் பதறியபடி, நிஜமாகவே பலிக்கிறதே என்றான்.

:P :P

சிரிக்க மட்டும் @ Relaxplzz

தூளியில் இட்டு தூங்க செய்தாலும் அம்மாவை தேடும் இரு கண்கள்!

Posted: 23 Feb 2015 07:40 AM PST

தூளியில்
இட்டு
தூங்க
செய்தாலும்
அம்மாவை
தேடும்
இரு
கண்கள்!


:) Relaxplzz

Posted: 23 Feb 2015 07:33 AM PST

இம்புட்டு கண்டு புடிச்சாங்கேலே ... . . வாசம் அடிக்காத சரக்கு கண்டு புடிக்கலாம்ல....

Posted: 23 Feb 2015 07:24 AM PST

இம்புட்டு கண்டு புடிச்சாங்கேலே ...
.
.
வாசம் அடிக்காத சரக்கு கண்டு புடிக்கலாம்ல.....?
.
பிசினெஸ் டெக்னிக்கே தெரியாம இருக்காங்கே...
.
வீட்டுகாரம்மடையும் சிக்க மாட்டோம்..போலிசுட்டையும் சிக்க மட்டோம்னா அதான் யாவாரம் ஓடும்..

- ரிட்டயர்டு ரவுடி

உங்கள் திருமண அழைப்பிதழில் ஜாதி அச்சிடப்பட்டிருந்தால் அதை இங்கே பகிராதீர்கள் !...

Posted: 23 Feb 2015 07:19 AM PST

உங்கள் திருமண அழைப்பிதழில் ஜாதி அச்சிடப்பட்டிருந்தால் அதை இங்கே பகிராதீர்கள் !

#நீங்கள் இன்ன ஜாதியென்று தெரியாமலே நாம் நண்பர்களாய் இருப்போமே !

- Kali Muthu

நாங்கெல்லாம் ரொம்ப நல்ல பாதுகாப்பு யோசனை கொடுப்போம் ;-)

Posted: 23 Feb 2015 07:12 AM PST

நாங்கெல்லாம் ரொம்ப நல்ல பாதுகாப்பு யோசனை கொடுப்போம் ;-)


வில்லேஜ் விஞ்ஞானி - 2

ஒரு சிறு விழிப்புணர்வு: (புரிந்து உணர்ந்தவர்கள் மட்டும்...இந்த பதிவினை பகிர்ந்து...

Posted: 23 Feb 2015 07:05 AM PST

ஒரு சிறு விழிப்புணர்வு:
(புரிந்து உணர்ந்தவர்கள் மட்டும்...இந்த பதிவினை பகிர்ந்து...உணர்வுடன் செயல்படுங்கள்...நன்றி)

கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம், மனிதனுக்கும் நாய்க்கும் கல்யாணம்...உயிர் பலி இன்னும் பல சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்த மூடநம்பிக்கையை விட்டு விட்டு...

மரத்திற்கும் மண்ணிற்கும் கல்யாணம் பண்ணிவைக்க முயற்சித்துப்பாருங்கள்...உங்கள் வரும்கால சந்ததியினர் நோய் இன்றி நன்றாக வாழ்வார்கள்.

மகிழ்ச்சியை கொண்டாட நினைக்கும் ஒவ்வொருவரும் அன்றைக்கு ஒரு மரக்கன்றை வைத்தால் போதும் அவன் வாழ்வில் பெறும் பலன்கள் என்ன என்று பார்த்தால்...

ஒரு மரம் அதன் வாழ்நாளில் குறைந்தது 5 லட்சம் டன் ஆக்சிஜனை வெளிவிடுகின்றது...

நீங்கள் ஊன்றும் ஒரு மரத்தில் இருந்து கிடைக்கும் சுத்தமான ஆக்சிஜனை எத்தனை பேர் சுவாசித்து நோய் இன்றி வாழ்கிறார்கள்...

நீங்கள் தனித்தனியாக தானம் செய்து புண்ணியம் தேடுவதைவிட...இவைபோன்ற செயல் செய்து...மொத்த தானங்களின் புண்ணியமும் ஒரு செயலில் பெறலாம்.


"விழிப்புணர்வு"

ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்...

Posted: 23 Feb 2015 05:00 AM PST

ஆசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.

"இது எவ்வளவு வெயிட் இருக்கும்?"

100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.

"இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல"

வாத்தியார் தொடர்ந்தார். "இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?"

"ஒண்ணுமே ஆகாது சார்"

"வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா...?"

"உங்க கை வலிக்கும் சார்"

"ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா..."

"உங்க கை அப்படியே மரத்துடும் சார்"

"வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?"

"இல்லை சார். அது வந்து..."

"எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?"

"கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்"

"எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?"

Relaxplzz


"""ஏன் புள்ள...... மாமா எப்படி இருக்கேன்னு கொஞ்சம் சொல்லுரது? """""

Posted: 23 Feb 2015 04:45 AM PST

"""ஏன் புள்ள...... மாமா எப்படி இருக்கேன்னு கொஞ்சம் சொல்லுரது? """""


:) Relaxplzz

Posted: 23 Feb 2015 04:30 AM PST

புருசன்மார்களிடம் பொண்டாட்டிகள் கேட்க விரும்பும் கேள்விகள்ன்னு இந்த போஸ்ட்டை போட...

Posted: 23 Feb 2015 04:15 AM PST

புருசன்மார்களிடம் பொண்டாட்டிகள் கேட்க விரும்பும் கேள்விகள்ன்னு இந்த போஸ்ட்டை போடுறேன்(அப்பாவி ஆண்கள்லாம் என்னை மன்னிச்சுடுங்க..).

1. கல்யாணம் நிச்சயமான புதுசுல பர்த்டே, லவ்வர்ஸ் டே, வுமன்ஸ் டேன்னு ஏதேதோ சாக்கு சொல்லி வீட்டுக்கு வருவீங்க. ஆனால், கல்யாணம் ஆகிட்டாலோ எங்க பர்த்டே கூட மறந்து போகுதே! நிஜமாவே எங்களைத்தான் பார்க்க வருவீங்களா? இல்லை மச்சினிச்சியை பார்க்க வந்தீங்களா?

2. மீட்டர் 25ரூபாய்க்கு மேல துணி எடுத்து சட்டை போடாத கஞ்சூஸ் நீங்க, மாமனார் துணி எடுக்கும்போது மட்டும் பார்க் அவென்யூ சர்ட்டும், ரேமாண்ட் ஃபேண்டும் தவிர வேறேதும் போடாத மாதிரி சீன் போடுறிங்களே எப்படி?

3.உங்க வீட்டு விசேஷத்துக்கு மட்டும் ஒரு வாரத்துக்கு லீவ் கிடைக்குது. ஆனால், எங்க வீட்டு விசேசத்தன்னிக்கு மட்டும் ஆடிட்டர் வந்துடுறார், இண்டெர்வியூ, மீட்டிங்க் ஏதாவது வந்துதுடுதே அதெப்படிங்க?

4. உங்க வீட்டு விசேசத்துல வாசல்ல வாழைமரம் கட்டுறது முதற்கொண்டு , மிச்சம் மீதி மளிகை சாமான் வண்டில ஏத்தி வீட்டுக்கு கொண்டு வந்து இறக்கும் வரை மாடா வேலை செய்யும் நீங்கள், எங்க வீட்டு விசேசங்களில் மட்டும் டீக்கா டிரெஸ் பண்ணிக்கிட்டு கால் மேல் கால் போட்டுக்கிட்டு உக்காந்துக்கிட்டு மாப்பிள்ளை முறுக்கு காட்டுறீங்களே அது எப்படிங்க?

5. உங்க வீட்டு விசேசங்களுக்கு சீர் செய்ய மட்டும் லோன் போடாம, சீட்டு பணத்தை உடைக்காம 25,000 கூட பணம் வருது. ஆனால், எங்க வீட்டு விசேசத்துக்கு சீர் செய்யறதுக்கு மட்டும், இன்கம் டாக்ஸ், மன்த் எண்ட் வந்து 1001க்கு மேல செய்ய முடியாம போய்டுதே எப்படிங்க ?

6. உங்க அக்கா பிள்ளைங்க, தம்பி பிள்ளைங்க கோடை விடுமுறைக்கு வந்து டி.வி, வாசிங்க் மெசின், ஏசிலாம் ரிப்பேர் செஞ்சு 1000, 2000ன்னு தண்டம் அழுதாலும் குழந்தைங்கன்னா அப்படிதான்மான்னு சொல்லிட்டு, எங்க அக்கா பிள்ளையோ, அண்ணன் பிள்ளையோ வந்து ஒரு 10ரூபாய் பொம்மையை உடைச்சுட்டால்கூட வானரப்படைகள்ன்னு திட்டுறிங்களே எப்படிங்க?

7. கம்மல் வாங்கி தாங்க, செயின் வாங்கி தாங்கன்னு கேட்டால் மட்டும் வானத்துக்கும் பூமிக்கும் எகிறி குதிக்கும் நீங்க வீடு கட்ட, வண்டி வாங்கும்போது பணம் பத்தலை உன் செயினை தாயேன் கொலுசை தாயேன்னு ஒண்ணுமே தெரியாத அப்பாவி போல வந்து நிக்குறிங்களே எப்படி?

8. புடவை எடுக்கும்போது 500 ரூபாய்க்கு மேல புடவை எடுத்தால் முகத்தை தூக்கி எரவானத்துல வச்சுக்கிட்டு, எங்காவது கிளம்பும்போது எங்க ஆபீஸ் மேனேஜர் வீட்டு விசேசம் இப்படியா சாயம் போன சேலை கட்டிக்கிட்டு வருவே...,ன்னு வழியெல்லாம் திட்டிக்கிட்டே வருவீங்களே. காஸ்ட்லியா புடவை எடுத்துக்குடுக்காத உங்களுக்கு வெட்டி பந்தா மட்டும் ஏங்க?

9. ஒருமணி நேரம் புடவை கட்டி, மேக்கப் போட்டு உங்களோடு வந்தாலும் அழகா இருக்கு, உன் நிறத்துக்கு எடுப்பா இருக்குன்னு சொல்லாத நீங்க பார்த்த பத்து செகண்டுக்குள் இந்த புடவை உங்களுக்காகவே தயாரிச்ச மாதிரி இருக்குங்க. இந்த மயில் டிசைன் அழகுன்னு டைப்பிஸ்ட்டுக்கிட்ட ஜொள்ளு வழிய வழிய சொல்றிங்களே எப்படிங்க?

10. உங்க வீட்டுல இருந்து யாராவது வந்தால், லீவ் போட்டு ஊரை சுத்தி காட்டி, ஊரு கதை, உலகத்து கதைலாம் பேசறீங்க. ஆனால், எங்க வீட்டுல இருந்து யாராவது வந்தால் மட்டும் ஆபீசுல மீட்டிங்க், எம்டி வந்துட்டான்ன்னு சொல்லி ராப்பிச்சைக்க்காரன்கூட தூங்கினப்பின் வர்றீங்களே அதெப்படிங்க?

11.உங்களுக்கு சின்னதா தலைவலி வந்தால்கூடா ஆ, ஊன்னு கத்தி ஊரையே கூட்டி, பொழுதன்னிக்கும் படுத்து ரெஸ்ட் எடுக்கும் நீங்க..., எங்களுக்கு உடம்பு முடியாதப்ப ஃப்ரெண்ட்சை கூட்டி வந்து ஒரு சாம்பார், ரசம், ஒரு பொறியல், அப்பளம் மட்டும் செஞ்சுடேன். வேற எதும் வேணாம்ன்னு உங்களால் மட்டும் சொல்ல முடியுதே எப்படிங்க.

12. நீங்க ரெண்டு வீட்டுக்கு முன்னாடி வரும்போதே உங்க தொப்பை நம்ம வீட்டு வாசல்ல வந்து நிக்குறதை மறந்து.., எங்க ஆபீஸ் ஸ்டெனோ ஸ்லிம்மா சூப்பரா இருக்கா. நீயும் இருக்கியேன்னு பூசுனாப்புல குஷ்பூ போல இருக்கும் எங்களை கிண்டல் பண்றீங்களே எப்படி?

13. நண்பன் ரொம்ப நாள் கழிச்சு ஊருக்கு வந்திருக்கான் அதுக்கு பார்ட்டின்னு சொல்லி ராத்திரி முச்சூடும் பார்லயே பழியா கிடந்துட்டு, கடைத்தெருவுல காலேஜ் மேட்டை பார்த்து ஹாய் பார்த்து ரொம்ப நாளாச்சுடின்னு சொல்லும் தோழிக்கிட்ட பேசக்கூட விடாம பஸ் போய்டும், கிரிக்கெட் மேட்ச் இருக்குன்னு சொல்றிங்களே எப்படிங்க.

14. பொழுது போகாம சீரியல் பார்க்குற எங்களை குறைச் சொல்லி, ரிமோட்டை பிடுங்கி ஒரு நியூஸ் சேனல் விடாம பார்த்துட்டு, அப்பா இப்போ தமிழக கவர்னர் யார்ப்பா?ன்னு குழந்தை கேட்கும் கேள்விக்கு ரோசையாவோ? சுர்ஜித் பர்னாலாவோன்னு நினைக்குறேன். எதுக்கும் அம்மாவை கேட்டுக்கோன்னு சொல்றீங்களே, நிஜமாவே நியூஸ்தான் பார்த்தீங்களா? இல்லை நியூஸ் வாசிக்குற லேடீசை பார்த்திங்களா?

15. பொழுதன்னிக்கும் ட்விட்டர், விடியோ சாட், ஆடியோ சாட், ஃபேஸ்புக், பிளாக், பஸ்ன்னு நெட்டுல சுத்திக்கிட்டு..., ஸ்கூல்ல போய் அஞ்சாவது ஏ செக்‌ஷன்ல படிக்குற குமாரை பார்க்கனும் சொல்ல பியூன் கூட்டி வரும் பையனை பார்த்து இது என் பையனில்லையேன்னு விழிக்க.. சார் உங்க பையன் பேரு சுகுமார்ன்னு அந்த வழியா வரும் கிளாஸ் டீச்சர் சொல்ற லட்சணத்துல குடும்பம் நடத்திட்டு..., பொண்டாட்டிகள்கிட்ட புருசன்மார்கள் கேட்க விரும்பும் கேள்விகள்ன்னு ஒரு பதிவை மனசாட்சி இல்லாம போட்டீங்களே எப்படிங்க?

Relaxplzz

புகையை பற்றி சில அதிர்ச்சியூட்டும் உண்மைகள் இதய நோய்களுக்கு பகைவனாக விளங்கும் ப...

Posted: 23 Feb 2015 04:00 AM PST

புகையை பற்றி சில அதிர்ச்சியூட்டும் உண்மைகள்

இதய நோய்களுக்கு பகைவனாக விளங்கும் புகையை பற்றிய சில அதிர்ச்சியூட்டும் உண்மைகள் இங்கு தரப்பட்டுள்ளன.

1. ஒவ்வொரு சிகரெட்டும் உங்கள் விலை மதிப்புள்ள வாழ்க்கையிலிருந்து ஐந்து நிமிடங்களை பறித்துக் கொள்கிறது.

2. ஒவ்வொரு புகை இழுப்பும் 4,000 வெவ்வேறு தீய பொருட்களைக் கொண்டது. இதில் புற்றுநோய் மற்றும் இருதய நோய் ஏற்படுத்தும் ரசாயனங்களும் அடங்கும்.

3. சிகரெட்டின் எரிமுனையில் வெப்பநிலை 900 டிகிரி செல்சியஸ் ஆகும். இது நீரின் கொதிநிலையை விட 9 மடங்கு அதிகமானது. இந்த வெப்பநிலையில் சில ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு மிகவும் விஷமுள்ள பொருட்களை விடுவிக்கப்படுகின்றன.

4. புகையில் 95 சதவீதம் வாயுக்கள் இருக்கின்றன. அவற்றில் கார்பன் மோனக்சைடின் செறிவு 2-8 சதவீதம் உள்ளது. 60 சதவீதம் கார்பன் மோனக்சைடு செறிவு உயிருக்கு ஆபத்து என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

5. எரியும் புகையிலிருந்து கிடைக்கும் நச்சுக்கலவையில் நிகோடின் அதிகம் உள்ளது. இது உடலின் பல முக்கியமான உறுப்புகளை கடுமையாக பாதிக்கும்.

6. புகைப்பதால் ஏற்படும் மாரடைப்பால் இறக்கும் வாய்ப்புகள் 60-70 சதவீதம் அதிகமாக இருக்கிறது. இங்கு 40-25 மடங்கு மாற்ற முடியாத நுரையீரல் நோய் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம். நுரையீரல் புற்றுநோய் உருவாகும் ஆபத்து 10-25 மடங்கு அதிகம்.

7. உணவுக்குழாய், வயிற்று மற்றும் மூச்சுக்குழாய்கள் ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இவர்களுக்கு அதிகமிருக்கும்.

8. மனைவி கருவுற்றிருக்கும் போது, அவர் கணவர் அருகில் புகைப்பிடித்தால் குழந்தை வளர்ச்சி தடைபட்டு எடை குறைவாக பிறக்கும். கருச்சிதைவு அபாயம் மற்றும் சிசுவின் மரணத்திற்கு வாய்ப்பு அதிகம்.

மேலும் குழந்தையின் அறிவு வளர்ச்சி தாமதப்படும். மனவளர்ச்சி குன்றிப்போகும். குழந்தைப்பருவ ஆஸ்துமா அந்த குழந்தைக்கு மற்ற குழந்தைகளை காட்டிலும் அதிகம் வரும்.

9. இன்றைய காலக்கட்டத்தில் 20 வயதில் கூட மாரடைப்பு வரும். இளைஞர்கள் சிறு வயது முதலே "Passive Smoking'' என்ற வகையில் புகை பிடிக்கும் அப்பாவின் அருகிலிருந்து வளர்வதும் ஒரு காரணம்.

10. எரிமுனையிலிருந்து வரும் புகையை சுவாசிப்பதும், பக்க வீச்சும் அதிக தீமையானது. அது அப்பாவிகளான உங்கள் குழந்தை மற்றும் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை குலைக்கும். உங்கள் மனைவிக்கும் மாரடைப்பை ஏற்படுத்தும்.

11. ஒரு நாளைக்கு ஒரு பேக்கட்(Packet) புகை பிடிப்போர் ஓராண்டில் 4000 சிகரெட்டை புகைக்கிறார்கள். சிகரெட்டுகளுக்காகவும், புகை பிடிக்கும் பழக்கத்தால் வரும் நோய்க்காகவும் நீங்கள் செலவிடும் தொகையை கொண்டு வீட்டில் பல நவீன சாதனங்களை ஒவ்வொரு ஆண்டும் வாங்கலாம்.

12. 20 வயது முதல் சுமார் 40 வயது வரை தினமும் ஒரு பாக்கேட் சிகரெட் பிடிப்பவரின் சிகரெட்டுகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கினால் அது எவரெஸ்ட் மலையின் உயரத்தை எட்டிப் பிடிக்கும்.

Relaxplzz


தனது குழந்தையின் பாத சுவடை தன் கையில் பச்சை குத்திகெண்ட தந்தை. இந்த பாசத்திற்கு...

Posted: 23 Feb 2015 03:45 AM PST

தனது குழந்தையின் பாத சுவடை தன் கையில் பச்சை குத்திகெண்ட தந்தை. இந்த பாசத்திற்கு ஈடுஇணை ஏது. ♥


:) Relaxplzz

Posted: 23 Feb 2015 03:30 AM PST

படிப்புக்களும் அதன் தமிழ்ப்பெயர்களும்..(Ology) -தெரிந்துகொள்வோம் 1. Anthropolo...

Posted: 23 Feb 2015 03:15 AM PST

படிப்புக்களும் அதன் தமிழ்ப்பெயர்களும்..(Ology) -தெரிந்துகொள்வோம்

1. Anthropology - மானுடவியல்/ மானிடவியல்
2. Archaeology - தொல்பொருளியல்
3. Astrology - சோதிடவியல் (சோதிடம்)
4. Astrology - வான்குறியியல்
5. Bacteriology பற்றுயிரியல்
6. Biology - உயிரியல்
7. Biotechnology - உயிரித்தொழில்நுட்பவியல்
6. Climatology - காலநிலையியல்
7. Cosmology - பிரபஞ்சவியல்
8. Criminology - குற்றவியல்
9. Cytology - உயிரணுவியல்/ குழியவியல்
10. Dendrology - மரவியல்
11. Desmology - என்பிழையவியல்
12. Dermatology - தோலியல்
13. Ecology - உயிர்ச்சூழலியல்
14. Embryology - முளையவியல்
15. Entomology - பூச்சியியல்
16. Epistemology - அறிவுநெறியியல்/ அறிவாய்வியல்
17. Eschatology - இறுதியியல்
18. Ethnology - இனவியல்
19. Ethology - விலங்கு நடத்தையியல்
20. Etiology/ aetiology - நோயேதியல்
21. Etymology - சொற்பிறப்பியல்
22. Futurology - எதிர்காலவியல்
23. Geochronology - புவிக்காலவியல்
24. Glaciology - பனியாற்றியியல்/ பனியியல்
25. Geology - புவியமைப்பியல்/ நிலவியல்
26. Geomorphology - புவிப்புறவுருவியல்
27. Graphology - கையெழுத்தியல்
28. Genealogy - குடிமரபியல்
29. Gynaecology - பெண்ணோயியல்
30. Haematology - குருதியியல்
31. Herpetology - ஊர்வனவியல்
32. Hippology - பரியியல்
33. Histrology - இழையவியல்
34. Hydrology - நீரியல்
35. Ichthyology - மீனியியல்
36. Ideology - கருத்தியல்
37. Information Technology - தகவல் தொழில்நுட்பவியல்
38. Lexicology - சொல்லியல்
39. Linguistic typology - மொழியியற் குறியீட்டியல்
40. Lithology - பாறையுருவியல்
41. Mammology - பாலூட்டியல்
42. Meteorology - வளிமண்டலவியல்
43. Metrology - அளவியல்
44. Microbiology - நுண்ணுயிரியல்
45. Minerology - கனிமவியல்
46. Morphology - உருவியல்
47. Mycology - காளாம்பியியல்
48. Mineralogy - தாதியியல்
49. Myrmecology - எறும்பியல்
50. Mythology - தொன்மவியல்
51. Nephrology - முகிலியல்
52. Neurology - நரம்பியல்
53. Odontology - பல்லியல்
54. Ontology - உளமையியல்
55. Ophthalmology - விழியியல்
56. Ornithology - பறவையியல்
57. Osteology - என்பியல்
58. Otology - செவியியல்
59. Pathology - நொயியல்
60. Pedology - மண்ணியல்
61. Petrology - பாறையியல்
62. Pharmacology - மருந்தியக்கவியல்
63. Penology - தண்டனைவியல்
64. Personality Psychology - ஆளுமை உளவியல்
65. Philology - மொழிவரலாற்றியல்
66. Phonology - ஒலியியல்
67. Psychology - உளவியல்
68. Physiology - உடற்றொழியியல்
69. Radiology - கதிரியல்
70. Seismology - பூகம்பவியல்
71. Semiology - குறியீட்டியல்
72. Sociology - சமூகவியல்
73. Speleology - குகையியல்
74. Sciencology - விஞ்ஞானவியல் (அறிவியல்)
75. Technology - தொழில்நுட்பவியல்
76. Thanatology - இறப்பியல்
77. Theology - இறையியல்
78. Toxicology - நஞ்சியல்
79. Virology - நச்சுநுண்மவியல்
80. Volcanology - எரிமலையியல்
81. Zoology - விலங்கியல்

Relaxplzz

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி சிலுவையில் அறைந்து கொண்டார் கராத்தே ஹூசைனி....

Posted: 23 Feb 2015 03:10 AM PST

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி சிலுவையில் அறைந்து கொண்டார் கராத்தே ஹூசைனி.

எந்த அமைச்சரும் இந்தாளுக்கு ஈடு குடுக்க முடியாது போல.. :O


:) Relaxplzz

Posted: 23 Feb 2015 03:08 AM PST

பெண்கள் கொலுசு அணிவது ஏன்?. நகைகள் என்பது தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியம்...

Posted: 23 Feb 2015 02:57 AM PST

பெண்கள் கொலுசு அணிவது ஏன்?.

நகைகள் என்பது தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத்தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது.

வெப்பத்தை குறைத்து ,உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றது. தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. அதாவது நமக்கு நோய்கள் உருவாவதை தடுப்பதற்கு மருந்துகளை உபயோகிப்பதை விட நகைகளை நாம் அணிந்தால் அது நல்ல பயன் தரும்.

தங்கத்தில் என்று இல்லாமல் (முத்து, வெள்ளி போன்றவற்றில்) நாம் நகை அணிதல் நல்லது. பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை.

அத்துடன் வெள்ளி நகைகள் நம் ஆயுளை விருத்தி செய்யக் கூடியவை. நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும். சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு கொலுசு அணிவித்து விடுகின்றோம். குழந்தைக்கு நடக்கும்போது எப்போதும் சங்கீதம் கேட்க வேண்டும் என்பதாலும் குடும்பத்தினருக்கு குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிப்பதற்கும் கொலுசு அணிவிக்கப்படுகிறது.

உணர்ச்சி வசப்படுதல் என்பது எப்பொழுதும் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது. மேலும் பெண்களின் இடுப்பு பகுதியை ஸ்திரப்படுத்தவும் கொலுசு பயன்படுகிறது.

Relaxplzz


"தெரிந்து கொள்வோம்" - 2

0 comments:

Post a Comment