Relax Please: FB page daily Posts |
- ஒரு நாள் கணவனும் மனைவியும் மதிய வேளையில் காரில் பயணம் செய்தனர்.சிறிது தூரத்தில்...
- ஒரு பையன் ஆசையாக நாய்குட்டி ஒன்று வளர்த்தான், ஒரு நாள் திடீரென்று அந்த நாய்க்குட...
- :) Relaxplzz
- குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் பாம்பு வளர்ப்பு தொழில் ********************...
- நீர் வேண்டுமென்றேன் கடவுள் ஏரியை பரிசளித்தான்! பூ வேண்டுமென்றேன் கடவுள் ஒரு பூங...
- நெல்லிக்காயினால் கிடைக்கும் அழகு நெல்லிக்காயின் சுவை பலருக்கு பிடிக்கும். அதே ச...
- கற்காமல் பிழை இல்லாமலும் குழந்தைகள் பேச கற்றுக் கொண்ட முதல் வார்த்தை, #அம்மா
- அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- கடமைன்னு வந்துட்டா ...நாங்க எதையும் பாக்க மாட்டோம்.... ;-) ;-)
- அம்மா ஒர் தேவதை நான் கண் விழித்ததும் என் முன்னே நிற்பவள் பாலூட்டுபவள் சோறூட்டுபவ...
- உலகின் மொத்த மொழிகள் 6809ல் பேசவும் எழுதவும் முடியும் மொழிகள் சுமார் 700 மட்டும்...
- "நீயும் நானும் ஒன்னு, காந்தி பெறந்த மண்ணு, டீ கடையில நின்னு, தின்னு பாரு பன்னு"...
- சோப்பு நுரையில் 'முட்டை' விட்ட அனுபவம் உள்ளவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- நம்ம ஊருல இப்படித்தான் ;-) ;-)
- "நான் எந்த பரிசு வென்றாலும் அதை அப்படியே "அகரம்" Foundationக்கு கொடுத்துவிடுவேன்...
- சரித்திர வெற்றி 〰〰〰〰〰〰 இந்த வெற்றியை கொண்டாடுபவர்கள் லைக் பண்ணுங்க... (y) உலகக...
- சோற்றுநீர்..! "ஆற்றுநீர் வாதம் போக்கும் அருவிநீர் பித்தம் போக்கும் சோற்றுநீர் இ...
- ரத்தம் தேவைனா குடிச்சிட்டு போய் தொலையேன், அதவுட்டுட்டு காதுல சும்மா நொய்யி நொய்ய...
- அருமை.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- அடேய். யாருடா நீங்க???! எங்கேருந்துடா வர்றீங்க?? உலகத்துல உள்ள அத்தனை அறிவாளியும...
- தான் வெளியூர் சென்று திரும்பும்முன் தான் எழுதிய நூலைப் படித்து முடித்துவிடுமாறு...
- புத்தி உள்ளவன் பிழைத்து கொள்வான் ரஷ்ய ஜெயிலில் மூன்று தூக்குதண்டனைக் கைதிகள்...
- வெற்றியோ தோல்வியோ எதுவாயினும் கடைமையச் செய்வோம் யார் பாராட்டினாலும் பாராட்டா...
- அழகு.. பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க... (y)
- :) Relaxplzz
- :P Relaxplzz
Posted: 22 Feb 2015 08:10 AM PST ஒரு நாள் கணவனும் மனைவியும் மதிய வேளையில் காரில் பயணம் செய்தனர்.சிறிது தூரத்தில் ஒரு பெண் இரத்தக் காயங்களுடன் தங்கள் காரை நோக்கி ஓடி வருவதை பார்த்தனர். உடனே மனைவி காரை நிறுத்தாமல் செல்லுங்கள் நமக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடும் என்று எச்சரித்தாள். ஆனால் அவள் கணவரோ வண்டியின் வேகத்தை குறைத்து அந்த பெண்ணிடம் என்ன நடந்தது என்று கேட்டார். நாங்கள் வந்த கார் விபத்து ஏற்பட்டு அங்கே நிற்கிறது, என் கணவர் விபத்தில் இறந்துவிட்டார் என் குழந்தை உயிருக்கு போராடி கொண்டு இருக்கிறது .தயவு செய்து என் குழந்தையை காப்பாற்றுங்கள் என்று கதறினாள். அவரும் இறங்கி சென்று விபத்துக்குள்ளான காரை பார்த்தார்.முன் சீட்டில் ஒரு பெண்ணும் அவள் கணவரும் இறந்து கிடந்தனர் பின் சீட்டை பார்த்தார் அங்கு ஒரு குழந்தை அடிப்பட்டு மயக்கத்தில் கிடந்தது. உடனடியாக அந்த குழந்தையை எடுத்து கொண்டு தன் காரை நோக்கி ஓடினார் ,குழந்தையை தன் மனைவியிடம் கொடுத்து விட்டு தன்னிடம் உதவி கேட்ட பெண் எங்கே என்று தேடினார். எங்கும் காணாததால் விபத்துகுள்ளான காரை நோக்கி சென்றார்.காரில் இறந்து கிடந்த ஒருவரையும் அவருக்கு அடுத்த சீட்டில் சீட் பெல்ட் மாட்டியபடி இறந்து கிடந்த பெண்ணை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தன்னிடம் சற்று முன் தன் குழந்தையை காப்பாற்றும்படி உதவிகேட்ட அதே பெண் தான் அவள். அன்னை என்பவள் தான் இருந்தாலும் இறந்தாலும் குழந்தையின் வாழ்வுக்காகவே வாழ்பவள். அன்னையைவிட சிறந்த தெய்வத்தை வேறு எங்கும் காண முடியாது. ***************************************************************************** உங்கள் கண் சிறிதளவு கலங்கினாலும் ஷேர் செய்து விடுங்கள். Relaxplzz |
Posted: 22 Feb 2015 08:00 AM PST ஒரு பையன் ஆசையாக நாய்குட்டி ஒன்று வளர்த்தான், ஒரு நாள் திடீரென்று அந்த நாய்க்குட்டி இறந்து விட்டது. பையன் விடாமல் அழுதுகொண்டே இருந்தான்.வீட்டில் எவ்வளவோ ஆறுதல் சொல்லிப் பார்த்தார்கள். ஒன்றும் நடக்கவில்லை. அழுகையும் நின்றபாடில்லை. பிறகு ஒரு மனோதத்துவ டாக்டரிடம் அழைத்துப் போய் கவுன்சிலிங் செய்யச் சொன்னார்கள். அவரும் பல ஆறுதல் வார்த்தைகளை சொல்லிவிட்டு கடைசியில் அவனிடம், 'இதோ பார் இந்த சின்ன விஷயத்திற்காக ஏன் இப்படி அழுகிறாய்? எங்க தாத்தா கூட போன வாரம் செத்துப் போனார். நான் என்ன அழுகிறேனா பார்' என்றார். உடனே அந்தப் பையன் "நீங்க என்ன, என்னை மாதிரி குட்டியில இருந்தா உங்க தாத்தாவை வளர்த்தீங்க?" என்றான் கோபத்தோடு.டாக்டர் வாயே பேசவில்லை. குழந்தைகள் என்றும் குழந்தைகளே! :) :) Relaxplzz ![]() |
Posted: 22 Feb 2015 06:30 AM PST |
Posted: 22 Feb 2015 06:10 AM PST குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் பாம்பு வளர்ப்பு தொழில் ********************************************************* கரு நாகப்பாம்பு வளர்ப்பது எப்படி? கரு நாகப்பாம்பு வளர்ப்பு தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. பண்ணை அமைத்து சிரத்தையுடன் தொழிலில் ஈடுபட்டால் லாபத்தை அள்ளலாம் என்று நெல்லை மாவட்டத்தில் 'ஸ்னேக் ஃபார்ம் இந்தியா' நடத்திவரும் ஜெயந்த் பிரபாகர் கூறுகிறார். "2004ம் ஆண்டு 5 ஜோடி கரு நாகப்பாம்புகளுடன் பெருந்துறையில் பண்ணை துவங்கினேன். அவை முட்டையிட துவங்கியதும் வேறொரு பண்ணையாளரிடம் கொடுத்து குஞ்சு பொரிக்க செய்து, அவற்றையும் சேர்த்து வளர்த்தேன். கரு நாகப்பாம்பு வளர்ப்பையே முழு நேர தொழிலாக மேற் கொண்டேன். தமிழகத்தில் கரு நாகப்பாம்பு எண்ணிக்கை குறைவு. ஒப்பந்த அடிப்படையில் கரு நாகப்பாம்புகளை வளர்க்க விவசாயிகளிடம் ஆர்வத்தை உருவாக்கினேன். சிரமம் இல்லாத வளர்ப்பு முறை, அதனால் கிடைக்கும் வருமானத்தை பார்த்து இன்று தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையிலும், சொந்தமாகவும் ஆயிரக்கணக்கானோர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். சந்தை வாய்ப்பு! கரு நாகப்பாம்புகளை விற்பனையாளர்கள் நேரடியாகவே பண்ணைக்கு வந்து வாங்கிச் செல்கின்றனர். அக்கம்பக்கத்தினர் வீட்டுத்தேவைக்கும், பாம்பாட்டிகளும் சர்கஸ் காரர்களும் வந்து வாங்கிச் செல்வர். விசேஷங்களுக்கும் வாங்கிச் செல்வார்கள். ஓட்டல்கள், உணவு விடுதிகளுக்கும் நேரடியாக ஆர்டர் பிடித்து சப்ளை செய்யலாம். பயன்கள்: மற்ற பறவை, விலங்கினங்களை ஒப்பிடும்போது கரு நாகப்பாம்புவில் கழிவு குறைவு. முட்டை, விசம், இறைச்சி, எண்ணெய் கிடைக்கிறது. கரு நாகப்பாம்புகளின் இறைச்சி மற்ற இறைச்சிகளை விட சுவையில் தனித்தன்மை வாய்ந்தவை. ஆடு, மாடு போன்ற கால்நடைகள்தான் சிவப்பு மாமிசம் கொடுக்கும். சிவப்பு மாமிசம் கொடுக்கும் பறவை இனம் கரு நாகப்பாம்பு. கரு நாகப்பாம்புகளை இறைச்சிக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. 4 முதல் 5 கிலோ எடை கொண்ட கரு நாகப்பாம்புகளை இறைச்சிக்காக வெட்டும்போது 1முதல் 2 கிலோ கொழுப்பு தனியாக கிடைக்கும். கொழுப்பை காய்ச்சி எண்ணெய் எடுக்கப்படுகிறது. 5 ஜோடி கரு நாகப்பாம்புகள் வளர்த்தால் 1/2 முதல் 3/4 லிட்டர் கரு நாகப்பாம்பு விசம் கிடைக்கும். இதனை சுத்திகரிப்பு செய்து வலி நிவாரணி, அழகு சாதன கிரீம்கள் தயாரிக்க பயன்படுத்தப்படு கிறது. இந்த விஷத்தினை ஒரே ஒரு நாள் மட்டும் ஒரு ஸ்பூன் அருந்தினால் போதும். வாழ் நாள் முழுக்க எந்த நோயும் அண்டாது. ஒரு கரு நாகப்பாம்பில் 6 சதுரஅடி தோல் கிடைக்கும். மிருதுவாகவும், அதிக வலுவாகவும் இருப்பதால் செருப்பு, கைப்பை, பர்ஸ்கள் செய்ய பயன்படுத்தப் படுகிறது. ஒரு கரு நாகப்பாம்புகளை வீட்டில் வளர்ப்பதால் செல்வம் பெருகும் என்பது அவர்களது நம்பிக்கை. கட்டமைப்பு பண்ணை தொடங்க குறைந்தது 5 ஜோடி கரு நாகப்பாம்பு குட்டிகள் (ரூ.7500) வேண்டும். 4அடி நீளம், 35 அடி அகல இடம் வேண்டும். இடத்தை சுற்றி 5 அடி உயரம் கம்பி வேலி, தீவனம் மழையில் நனையாமல் இருக்க சிறிய ஆஸ்பெஸ்டாஸ் ஷெட், தீவனம் வைக்க 2 பாத்திரம், 10 மண்பாணை (இதற்கு செலவு ரூ.5 ஆயிரம்), முட்டைகளை பொரிக்க வைக்க இன்குபேட்டர் (ரூ.3 லட்சம்), சீரான மின் சப்ளைக்கு ஜெனரேட்டர் (ரூ.1 லட்சம்) போன்றவை வேண்டும். எங்கு வாங்கலாம்? கரு நாகப்பாம்பு குட்டிகள் மற்றும் தீவனங்களை தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் உள்ள பாம்பு பண்ணைகளில் பெற்றுக் கொள்ளலாம். இன்குபேட்டர், ஹேச்சர் மெஷின் ஐதராபாத்தில் கிடைக்கும். குஞ்சுகள் தேர்வு கரு நாகப்பாம்பு குட்டிகளை வாங்கும்போது பார்வை, கேட்கும் திறன் சரியாக உள்ளதா, நன்றாக கடிக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். வருமானம் 3 மாத வயதுள்ள 5 ஜோடி கரு நாகப்பாம்பு குட்டிகள் வளர்த்தால் 6 மாதத்துக்குள் 3கிலோ எடையுள்ள கரு நாகப்பாம்புகள் கிடைக்கும். 5 ஜோடி வளர்க்கும்போது 100 முட்டைகள் கிடைக்கும். இதன்மூலம் தரமான நன்றாக கடிக்கக்கூடிய வீரியமுள்ள 60 பாம்புகள் கிடைத்தால் அவற்றை விற்று ரூ.4.5 லட்சம் சம்பாதிக்கலாம். 6 மாதங்களுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் தலா ரூ 1.5 லட்சங்கள் சம்பாதிக்கலாம். அணுக வேண்டிய முகவரி : ..ரிலாக்ஸ் ப்ளீஸ்.. சீட்டிங் ல்காம்ப்ளெக்ஸ் 7th முட்டுச்சந்து சென்னை 60000018 தொலை பேசி எண் : இனிமேல்தான் வாங்க வேண்டும். # ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் யப்ப்ப்ப்ப்ப்ப் ப்ப்ப்ப்பா, இந்த மக்கள நம்ப வக்கிறதுக்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு. Relaxplzz |
Posted: 22 Feb 2015 05:10 AM PST நீர் வேண்டுமென்றேன் கடவுள் ஏரியை பரிசளித்தான்! பூ வேண்டுமென்றேன் கடவுள் ஒரு பூங்காவை எனக்காய் தந்தான்! மரம் வேண்டுமென்றேன் கடவுள் ஒரு வனத்தையே அருளிச்சென்றான்! கேட்பதைவிட எல்லாமே அதிகமாய் அள்ளித்தரும்,, நீதான் வேண்டும் கடவுளே என்றேன்....... அவன் தன்னைவிட மேலாய் உள்ள... என் தாயை தந்துபோனான்! ♥ ♥ #அம்மா_எனும்_தெய்வம் Relaxplzz |
Posted: 22 Feb 2015 05:00 AM PST நெல்லிக்காயினால் கிடைக்கும் அழகு நெல்லிக்காயின் சுவை பலருக்கு பிடிக்கும். அதே சமயம் அந்த நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படும். அதிலும் பெரிய நெல்லிக்காய் தான் மிகவும் நல்லது. ஏனெனில் அந்த நெல்லிக்காயில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் நெல்லிக்காய் சாப்பிடுவதால், உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் நெல்லிக்காயில் கிடைக்கும் அழகு நன்மைகளைப் பற்றி பலருக்கு தெரியாது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை நெல்லிக்காயினால் கிடைக்கும் அழகு நன்மைகளைப் பட்டியலிட்டுள்ளது. அதற்கு அந்த நெல்லிக்காயை சாறாகவோ அல்லது பொடியாகவே பயன்படுத்தலாம். இப்படி பயன்படுத்துவதால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைவது, சருமத்தின் பொலிவு அதிகரிப்பது, நரை முடி மற்றும் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடுவது என்று பல நன்மைகள் கிடைக்கும். அதுமட்டுமின்றி, நெல்லிக்காய் சருமத்தில் உள்ள கொலாஜன் செல்களின் உற்பத்தியை அதிகரித்து, இளமை தோற்றத்தை தக்க வைக்கும் நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தால், சருமத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, கொலாஜன் உற்பத்தி அதிகரித்து, சரும சுருக்கம் நீங்கி, சருமம் இளமையுடன் காட்சியளிக்கும். ஒருசிலருக்கு சருமத்தில் ஆங்காங்கு கருமையான திட்டுக்கள் காணப்படும். இது வயதான தோற்றத்தைத் தரும். ஆகவே தினமும் நெல்லிக்காய் சாறு பருகி வந்தால், அந்த திட்டுக்கள் மறைந்து, சருமம் பொலிவோடு அழகாக காணப்படும்.அழகைக் கெடுக்கும் வகையில் உடல் எடை அதிகமாக உள்ளதா? அப்படியானால் தினமும் உடற்பயிற்சி செய்வதுடன், நெல்லிக்காய் சாற்றினையும் பருகி வர வேண்டும். இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் எடை குறையும் நாள்தோறும் ஒரு டம்ளர் நெல்லிக்காய் சாற்றினை பருகி வந்தால், அது உடலுக்கு மட்டுமின்றி, கூந்தலுக்கும் நல்லது. அதிலும் அதில் உள்ள வைட்டமின் சி சத்தினால், முடியின் வலிமை அதிகரித்து, முடி வெடிப்பு, பொலிவிழந்த காணப்படும் கூந்தல் போன்றவற்றை தடுத்து நிறுத்தி, நல்ல ஆரோக்கியமான கூந்தலைப் பெறலாம். நெல்லிக்காயின் மற்றொரு அழகு நன்மைகளில் ஒன்று தான் நரை முடி பிரச்சனை. அதற்கு தினமும் நெல்லிக்காய் சாற்றினை பருகி வர வேண்டும். இதனால் அதில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி நரைமுடியை தடுத்து நிறுத்தும். உலகில் இருக்கும் தொல்லையில் பெரிய தொல்லை என்றால் அது பொடுகு தொல்லை என்று தான் சொல்ல வேண்டும். அத்தகைய பொடுகு தொல்லையை நெல்லிக்காய் ஜூஸ் பருகுவதால் தடுத்து நிறுத்தலாம்.நெல்லிக்காய் சாற்றின் அதிகப்படியான வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், அவை இரத்தத்தை சுத்தப்படுத்தி, செரிமானத்தை அதிகரித்து, உடலில் தங்கியுள்ள நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்றி, பிரச்சனை இல்லாத பொலிவான சருமத்தை தரும். மென்மையான மற்றும் இளமையான தோற்றத்தைக் கொடுப்பது கொலாஜன் செல்கள் தான். ஆனால் வயதாக வயதாக அந்த செல்களின் உற்பத்தி குறைவதால் தான், முதுமைத் தோற்றத்தை அனைவரும் பெறுகிறோம். ஆனால் இந்த கொலாஜன் செல்களின் உற்பத்தியை அதிகரிக்கும் திறன் நெல்லிக்காய்க்கு உள்ளது. Relaxplzz ![]() |
Posted: 22 Feb 2015 04:50 AM PST |
Posted: 22 Feb 2015 04:40 AM PST |
Posted: 22 Feb 2015 04:30 AM PST |
Posted: 22 Feb 2015 04:20 AM PST |
Posted: 22 Feb 2015 04:10 AM PST அம்மா ஒர் தேவதை நான் கண் விழித்ததும் என் முன்னே நிற்பவள் பாலூட்டுபவள் சோறூட்டுபவள் என்று என்னி இருத்தேன் நான் பிறந்த 60மாதங்கள் வரை ஒரு நாள் நான் என் வீட்டு கதவை உருட்டி விளையாடி கொண்டிருக்க தன்னை அறியாமல் அவள் மூடிய கதவு என் கை விரல்களை நசுக்கியது நான் அழ தொடங்கினேன் என் கண்ணீரை துடைத்து அவள் #அழதொடங்கினாள் அன்று எனக்கு புரிய வந்தது அம்மா என்பவள் உயிர் கொடுத்தவள் எனக்காக மறுபடியும் #உயிரையும்கொடுப்பாள் என்று -Amul Amul. |
Posted: 22 Feb 2015 04:00 AM PST உலகின் மொத்த மொழிகள் 6809ல் பேசவும் எழுதவும் முடியும் மொழிகள் சுமார் 700 மட்டும் தானாம்... சொந்த வரிவடிவம் கொண்ட மொழிகள் 100 தானாம்... அவற்றுக்கெல்லாம் தாயாக மூல மொழியாக திகழ்பவை 6 மொழிகளாம்... எபிரேயம் கிரேக்கம் இலத்தீன் சமஸ்க்ருதம் தமிழ் சீனம் இவற்றுள் தமிழ்,சீனம் தவிர மற்றவை பேச்சு வழக்கில் இல்லை.....! உலகின் மூலமொழியாம் தமிழ் மொழியை தாய்மொழியாகப் பெற்றமைக்கு பெருமைகொள்வோம். தாய் தமிழ் போற்றுவோம்...! Relaxplzz ![]() |
Posted: 22 Feb 2015 03:50 AM PST |
Posted: 22 Feb 2015 03:40 AM PST |
Posted: 22 Feb 2015 03:30 AM PST |
Posted: 22 Feb 2015 03:20 AM PST |
Posted: 22 Feb 2015 03:10 AM PST "நான் எந்த பரிசு வென்றாலும் அதை அப்படியே "அகரம்" Foundationக்கு கொடுத்துவிடுவேன்" என்றாள் அனுஷ்யா (தமிழர்) "நான் பரிசாக பெற்ற ஒரு கிலோ தங்கத்தை அப்படியே ஈழத்தில் உள்ள அநாதை குழந்தைகளுக்கு கொடுக்கிறேன்" என்றாள் ஜெசிகா (ஈழத்தமிழர்) "எனக்கு கிடைத்திருக்கும் இந்த வீட்டில் (70 லட்சம்) என் பெற்றோருடன் சந்தோஷமாக இருப்பேன்" என்கிறாள் கர்நாடகாவை சேர்ந்த ஸ்பூர்த்தி #இது தான் தமிழனுக்கும் திராவிடனுக்கும் உள்ள வித்யாசம்- எங்கள் தமிழினத்தில் பிறந்த குழந்தைகளும் கூட பெருந்தன்மை மிக்கவர்கள். - சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா? |
Posted: 22 Feb 2015 03:04 AM PST |
Posted: 22 Feb 2015 03:00 AM PST சோற்றுநீர்..! "ஆற்றுநீர் வாதம் போக்கும் அருவிநீர் பித்தம் போக்கும் சோற்றுநீர் இரண்டையும் போக்கும்" -சித்தர் தேரையர். கிராம மக்களின் தினசரி உணவாகவும், காலைநேர பானமாகவும் தொன்று தொட்டு காலை பழக்கத்தில் இன்றுவரை தொடரும் அன்றாட ஆரோக்கிய பானம் நீராகாரம். முதல்நாள் இரவில் 2 பிடி சோற்றினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 குவளை சுத்தமான தண்ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் அதில் தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து சிறிய வெங்காயம் 3 நறுக்கிப் போட்டுக் கரைத்து அப்போதே சாப்பிட வேண்டும். உச்சிப் பொழுதில் பச்சைநிற வயல் வெளியில் புங்கமர நிழலில் இதே நீராகாரத்தை மாங்காய் ஊறுகாயுடன் அல்லது பூண்டு + வெங்காயம் சேர்ந்த வத்தக்குழம்புடன் தொட்டுத் தொட்டு சுவைத்துப் பருகினால் ஆஹா...! எழுதும்போதே நாவில் உமிழ்நீர் அருவியாக சுரக்கின்றதே.... இப்படி கோடைக்காலம் முழுதும் தினசரி ஒரு வேளையாவது சோற்றுநீரை (நீராகாரத்தை) 2 குவளை பருகினால் என்ன நிகழும்? ஒரு சித்தர் தேரையர் பாடல் பதில் சொல்கிறது. ஆற்றுநீர் வாதம் போக்கும் அருவிநீர் பித்தம் போக்கும் சோற்றுநீர் இரண்டையும் போக்கும் ஆமாங்க! ஆறும், அருவியும் இல்லாத ஊரில் உள்ள மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்ததுதான் சோற்றுநீர். இதனால் வாத நோய்களான பக்கவாதம் கைகால் அசதி, முடக்குவாதம் மற்றும் பித்த நோய்களான வயிற்றுப்புண், இரத்த மூலம், சரும நோய்கள் வராது தடுக்கும். அத்துடன் கோடைக்கால பாதிப்புகளான வயிற்றுவலி, சருமத்தில் தோன்றும் வேனல் கட்டி, வேர்க்குரு, தேக அனல் ஆகியன வராது காக்கும். சோற்றுநீர் அருமையை உணர்ந்த மேல்நாட்டு விஞ்ஞானி ஒருவர் அதனை சோதனைச் சாலையில் ஆராய்ந்து பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளார் என்பது சோற்றுநீரின் அருமைக்குக் கிடைத்த அண்மைக்கால பெருமை! Relaxplzz ![]() |
Posted: 22 Feb 2015 02:45 AM PST ரத்தம் தேவைனா குடிச்சிட்டு போய் தொலையேன், அதவுட்டுட்டு காதுல சும்மா நொய்யி நொய்யினுட்டு, அப்பால போ சாத்தானே #கொசு - Kannan420 |
Posted: 22 Feb 2015 02:42 AM PST |
Posted: 22 Feb 2015 02:30 AM PST |
Posted: 22 Feb 2015 02:20 AM PST |
Posted: 22 Feb 2015 02:10 AM PST தான் வெளியூர் சென்று திரும்பும்முன் தான் எழுதிய நூலைப் படித்து முடித்துவிடுமாறு குருகுலத்தில் சீடர்களிடம் சொல்லிச் சென்றார் அந்த குருநாதர். எல்லோரும் முழுமையாகப் படித்து முடித்திருந்தார்கள். ஒரே ஒரு சீடர், அதில் ஒரேயொரு வரியை மட்டுமே படித்ததாக சொன்னார். மிகக்கடுமையாய் ஏசினார் குரு. சீடர் முகம் வாடவில்லை. ஓங்கி அறைந்தார் குரு. அந்த இளைஞர் வருந்தவில்லை. சிறிது நேரம் போனது. அமைதியடைந்த குரு, அந்த சீடரை அழைத்து "நீ படித்த வரி என்ன?" என்று கேட்டார். "உன் கோபத்தைக் கட்டுப்படுத்து. எப்போதும் நிதானமாக இரு" என்பதே அந்த வாசகம். வெட்கித் தலை கவிழ்ந்தார் குரு. அந்த குரு, துரோணர். அந்த சீடர் தருமர். :) :) Relaxplzz |
Posted: 22 Feb 2015 02:00 AM PST புத்தி உள்ளவன் பிழைத்து கொள்வான் ரஷ்ய ஜெயிலில் மூன்று தூக்குதண்டனைக் கைதிகள் இருந்தனர். அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றும் காலம் வந்தவுடன் அவர்களிடம் இறக்கும் முன் அவர்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன என்று கேட்கப்பட்டது. முதல் கைதியின் ஆசை: நல்ல பெண், நல்ல மது, லெனின் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட வேண்டும் என்று கூறினான். மூன்று ஆசைகளும் நிறைவேற்றப்பட்டன. இரண்டாவது கைதியின் ஆசைகள்; நல்ல பெண், நல்ல உணவு, ஸ்டாலின் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட வேண்டும். அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன. மூன்றாவது கைதி தனது முதல் ஆசையாக மாம்பழம் கேட்டான். அப்போது மாம்பழ சீசன் இல்லை. எனவே தூக்கு தண்டனை ஆறு மாதம் ஒத்தி வைக்கப்பட்டது. ஆறு மாதத்திற்குப்பின் மாம்பழம் வாங்கிக் கொடுத்து இரண்டாவது ஆசையைக் கேட்டனர். செர்ரிப் பழம் என்று பதில் வந்தது. அப்போது செர்ரிப் பழ சீசன் இல்லை என்பதால் மறுபடியும் தூக்கு தண்டனை ஆறு மாதம் தள்ளி வைக்கப்பட்டு, பின் செர்ரிப்பழம் வாங்கிக் கொடுக்கப்பட்டது. மூன்றாவது ஆசையாக அவன் சொன்னான், '' என் உடல் தற்போதைய அதிபரின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும். ''அதிகாரிகள் அதிர்ந்துவிட்டனர், ''என்ன சொல்கிறாய், நீ? அவர் உயிருடன் அல்லவா இருக்கிறார்! ''கைதி அமைதியாகச் சொன்னான்,''அவர் இறக்கும் வரை நான் காத்திருக்கிறேன். Relaxplzz ![]() # படித்ததில் பிடித்தது # - 1 |
Posted: 22 Feb 2015 01:50 AM PST |
Posted: 22 Feb 2015 01:40 AM PST |
Posted: 22 Feb 2015 01:29 AM PST |
Posted: 22 Feb 2015 01:25 AM PST |
Posted: 22 Feb 2015 01:20 AM PST |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment