Relax Please: FB page daily Posts |
- :) Relaxplzz
- ஒருவன் வேலை முடிச்சு போறப்ப திடீர்னு ஒரு காட்டுக்குள்ள வச்சு அவன் வந்த பைக் பஞ்ச...
- மன அழுத்ததை (டென்ஷன்) போக்கும் 6 சிறந்த வழிகள் இன்றைய சுறுசுறுப்பான வேலை பளுமிக...
- இதை ஷேர் செய்து உங்கள் நண்பர்களுக்கு உதவி செயுங்கள்...! ரேசன்கார்டு(குடும்ப அட்...
- (y) Relaxplzz
- மனசு சஞ்சலப்படுகிறதா? ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப் பட்டுக் கொண்டி...
- கோடியில் ஒருவர்…… தமிழர் !!! ஏழூர் அய்யாசாமி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதிய...
- காகித கப்பல் செய்யும் வயதில் படிப்பு சுமை ஏற்றி குழந்தைகளின் மழலையை நாம் தொலைய வ...
- :) Relaxplzz
- சில யதார்த்தமான் உண்மைகள்..உங்களால் மறுக்கவே முடியாது !!!! கல்யாணத்துக்கு முன்ன...
- எதிர்பார்புகள் நிறைந்த வீடு... பல சலனப் பார்வைக்கு மத்தியில், உன்னை எனக்காய் என...
- உங்கள் கைபேசி எண்ணை வைத்து உங்கள் வயதை கணிக்கலாம்...! 1) உங்கள் மொபைல் எண்ணின்...
- :) Relaxplzz
- அரண்மனையில் ஒரு போட்டி! விஷ பாம்புகள் நிறைந்த ஒரு குளத்தை நீந்தி கடந்து சாதனை ப...
- கருவில் இருக்கும் குழந்தைகிட்ட எப்படி பேசலாம்?... கருவில் இருக்கும் குழந்தையானத...
- தனது உடல் செயலிழந்த தம்பியை சிறு வயது முதல் கையிழேந்தி வளர்க்கும் பாசமான தேவதை.....
- :) Relaxplzz
- கிராமங்களை நோக்கித் தேடுங்கள். கிரிக்கெட்டை தாண்டி ஏனைய விளையாட்டுகள் தெரிந்த அத...
- :P Relaxplzz
- சாமி அவ தங்கச்சி வந்தாக் கூட பரவாயில்லை ஆனா அவ அம்மா வரக்கூடாது
- மனதைக் கரைத்து விட்டது இந்த அழகான கதை " 'நம் உடம்பிலே மிக முக்கியமான உறுப்பு' எ...
- :) Relaxplzz
- உடல் இளைக்க கிரீன் டீ :- கிரீன் டீ-யின் பயன்கள் :- 1 கேன்சர் உருவாவதை தடுக்கிற...
- :) Relaxplzz
- பேஸ்புக் ஓனர் "மார்க் ஜூகர்பெர்க்" ஒரு தமிழர் !!!! ஆதாரம்: 1. வீட்டு விசேஷங்களி...
- அதிகம் அன்போடுநடந்து கொள்ளாதேஅடிமையாக்கி விடுவார்கள்.. அதிகம் பொறுமையுடன் நடக்...
- :) Relaxplzz
- காதலைப்_பற்றி_இவர்கள்_சொல்லும்_கருத்து * பரோட்டா மாஸ்ட்டர் : காதல் என்பது பரோட...
- இரவு 9 மணிக்கு வீட்டின் முதல் மூன்று படி ஏறியதும் யம்மா அப்பா வந்துட்டு னு எட்...
- :) Relaxplzz
| Posted: 18 Feb 2015 09:30 AM PST |
| Posted: 18 Feb 2015 09:15 AM PST ஒருவன் வேலை முடிச்சு போறப்ப திடீர்னு ஒரு காட்டுக்குள்ள வச்சு அவன் வந்த பைக் பஞ்சர் ஆய்ருச்சு. உடனே பக்கத்துல பார்த்தான் தூரத்துல ஒரு மடம் தெரிஞ்சது உடனே அங்க போய் எதாவது உதவி கிடைக்குமான்னு கேட்கலாம்னு போனான் அங்க இருந்த துறவி சொன்னாரு . தம்பி நேரம் வேறு போயிருச்சு இந்த இருட்டுக்குள்ள நீங்க ஊருக்கு வண்டிய சரி பண்ணி போகனுமா ? பேசாம இங்க தங்கிட்டு காலைல போங்கன்னு . உடனே இவனும் சரின்னு ஒத்துக்கிட்டான். அங்கேயே சாப்பிட்டு தூங்கி கொண்டிருக்கும்ப ோது மடத்துக்கு பின்னாடி டமால்னு ஒரு பெரிய சத்தம் . ஆனா ஒருத்தரும் எழும்பி என்னனு பார்க்கல . உடனே இவனும் அப்படியே படுத்து தூங்கிட்டான் . மறுநாள் காலைல வண்டிய சரிபண்ணிட்டு போகும் போது. அந்த சத்ததுக்கான காரணத்தை தலைமை துறவிகிட்ட கேட்டான் உடனே அவரு அத உன்கிட்ட சொல்ல கூடாது. நீ போகலாம் அப்படின்னு சொல்லிட்டார் . இவனும் வந்துட்டான் அப்புறம் ஒரு வருடம் கழிச்சு அதே வழிய வரும் போது அதே மாதிரி வண்டி பஞ்சர் ஆகி அதே மடத்துல தங்க வேண்டி வந்தது . அன்னைக்கு ராத்திரியும் அந்த சத்தம் கேட்டது . இவனும் மறு நாள் காரணம் கேட்டான் . ஆனா தலைமை துறவி அப்பவும் சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டார் மறுபடியும் மூன்றாவது தடவையும் இப்படி நடந்தப்ப அவர்கிட்ட காரணம் கேட்டான் . அவர் அப்பவும் மறுத்தார் . உடனே இவனுக்கு கோபம் வந்துருச்சு . ஒரு தரவ கூட காரணத்த சொல்ல மாட்டங்குறீங்க . ஏன்னு கொஞ்சம் கோபத்தோட கேட்டான். அதுக்கு அவரு நீயும் என்ன மாதிரி துறவி ஆனா சொல்றேன் அப்படின்னார் . உடனே இவனும் வீட்டுக்கு போய் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு துறவியாக வந்துட்டான் . வந்ததும் அவரு இவன தவம் பண்ண சொன்னார் . இவனும் பண்ணினான் ஆறு மாதம் கடுமையா தவம் இருந்த பிறகு அந்த தலைமை துறவி இந்தாப்பா இந்த சாவிய வச்சு அந்த கதவ தொற அங்க தான் நீ கேட்ட கேள்விக்கு பதில் இருக்குன்னு சொல்லி ஒரு கதவ காண்பிச்சார் . உடனே இவனும் தொறந்தான். அங்க இன்னொரு கதவு, பக்கத்தில ஒரு சீட்டு அதில ஒரு கேள்வி . அதுக்கு பதில் கண்டு புடிச்ச பிறகு அடுத்த சாவி தருவேன்னு துறவி சொன்னார் . இவனும் கண்டுபிடிச்சான் அடுத்த சாவியும் தந்தார் . இவன் தொறந்தான் . அப்புறம் இன்னொரு கதவு அதுக்கு ஒரு கேள்வி . ஒரு வழியா அதுக்கும் பதில் கண்டுபிடிச்சி அந்த கடைசி கதவ தொறந்தான் அங்க தான் இவன் அந்த சத்ததுக்கான காரணத்தை கண்டு புடிச்சான் . .. . அது என்னனு உங்களுக்கு சொல்லனும்னா நீங்க துறவியாகனும். :P :P Relaxplzz |
| Posted: 18 Feb 2015 09:00 AM PST மன அழுத்ததை (டென்ஷன்) போக்கும் 6 சிறந்த வழிகள் இன்றைய சுறுசுறுப்பான வேலை பளுமிக்க நம் வாழ்க்கை முறையில், மன அழுத்தம் என்னும் தவிர்க்க இயலாத ஒரு அங்கமாகவே மாறித்தான் போய்விட்டது. நமக்கு ஏற்படும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த, மனதை அழுத்தத்தில் இருந்து வேறு ஏதாவது சிந்தனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். நாம் செய்யும் செயல்கள் நமக்கு பிடித்த விடயமாக மட்டுமில்லாமல் அது நம் கவலைகளையும் மறக்கச் செய்வதாக இருக்க வேண்டும். அது சிறிது நேரத்திற்கு மட்டுமே உண்டான செயலானாலும் கூட, மன அழுத்தத்தை குறைக்க உதவும் பொருட்டு ஒரு ஆறு பொழுதுபோக்குகளை உங்களுக்காக பரிந்துரைக்கிறோம். அதைப் பின்பற்றி மன அழுத்தத்தைக் குறைத்து சந்தோஷமாக வாழுங்கள். புத்தகம் படிப்பது புத்தகம் படிப்பது என்பது மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு புகழ் பெற்ற வழி. பிடித்த நல்ல புத்தகங்களை வைத்திருந்தால், அவைகளை படிக்க ஆரம்பிக்க வேண்டும். இதனால் அறிவை வளர்ப்பதோடு, மனமும் நல்ல புத்துணர்ச்சியுடன் இருக்கும். யோகாசனம் தினசரி யோகாசனம் பயிற்சி செய்வதால் உடம்பிலுள்ள தசைகள் நன்கு விரிவடைந்து ஒய்வு பெரும். இதனால் மன அழுத்தம் கண்டிப்பாக குறையும். யோகாசனத்தால் உடம்பு விரிவடையும் பொழுது மனமானது சாந்தமாகி பின்னர் அமைதி அடையும். இசையை கேட்பது கூடுதலான மன அழுத்தம் அடையும் நேரத்தில் முதலில் செய்ய வேண்டியது நல்ல இசையை கேட்டு மகிழ்வதே இசை நம் மனதுக்கு இதமானதாக இருக்கும். மேலும் நமக்கிருக்கும் துன்பங்களை மறக்கச் செய்யும். எனவே துன்பம் தரும் விடயங்களால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க இசை பெரிதும் உதவி புரிகிறது. தோட்டக்கலை தோட்டக்கலையில் ஈடுபடும் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் அது இயற்கைக்கு மிக அருகில் அழைத்துச் செல்லும். திறந்த வெளிக்குச் சென்று, செடிகள் நட்டு, அவற்றிற்கு தண்ணீர் ஊற்றி, பூக்கள் மற்றும் கனிகளின் அழகை ரசித்தோமானால் அன்றாடம் அனுபவிக்கும் மன அழுத்தம் குறையும். மேலும் மனமும் இயற்கையாகவே அமைதியடையும். சமைப்பது சமைக்கத் தெரியுமா? ஆமெனில், மன அழுத்தத்தை குறைக்க இது ஒரு சிறந்த வழியாகும். சமையல் செய்வதினால் சிந்தனையானது தயார் செய்து கொண்டிருக்கும் உணவின் மீதும், அதை எப்படி சுவையாக செய்யலாம் என்பதிலும் தான் இருக்கும். மேலும் அது ஆக்கத்திறனையும், கற்பனை வளத்தையும் தூண்டி விடுவதால், கவலைகளை மறக்கச் செய்து மன அழுத்தத்திற்கு மருந்தாக விளங்குகிறது. எழுதுவது மன அழுத்தத்தில் இருந்து விடுபட மற்றொரு வழி எழுதுவது. அது ஒரு சொந்த நினைவேடாகவும் இருக்கலாம் அல்லது சிறு கதைகளாவும் இருக்கலாம். எது எப்படியோ, அது மனதில் உள்ளவையை காகிதம் அல்லது கணனி மூலம் ஒரு படிவம் தருவதாக இருக்கும். இந்த எழுத்து அனுபவம், நம் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளை சுலபமாக தீர்க்கவும், நம் கற்பனைகளை வளர்க்கவும் துணையாக நிற்கும். ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் Relaxplzz ![]() |
| Posted: 18 Feb 2015 08:45 AM PST இதை ஷேர் செய்து உங்கள் நண்பர்களுக்கு உதவி செயுங்கள்...! ரேசன்கார்டு(குடும்ப அட்டை) விண்ணபித்து 60 நாட்களுக்குள் வழங்க வேண்டும். விண்ணப்பமனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணம் தெரிவிக்க வேண்டும் புகார் தெரிவிக்க: S.M.S.-9445464748 PHONE-7299008002 Relaxplzz ![]() |
| Posted: 18 Feb 2015 08:30 AM PST |
| Posted: 18 Feb 2015 08:15 AM PST மனசு சஞ்சலப்படுகிறதா? ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப் பட்டுக் கொண்டிருந்தார். ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள். புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக் கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார். அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏறியைக் கடந்து சென்றார். ஏரி கலங்கி விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப் படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது. இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பிவிட்டார். அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார். ஒரு மணி நேரம் சென்ற பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று வரப் பணித்தார். நீர்நிலையருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது . சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது. ஒரு பானையின் தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடன் புத்தரிடம் திரும்பினான். புத்தர் தண்ணீரைப் பார்த்தார். சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார். தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்..? நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று! நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா? ஆமாம் சுவாமி! நம் மனமும் அப்படிப்பட்டதுதான்.. மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். அது தனக்குத்தானே சரியாகிவிடும். நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப் படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம். அது அமைதியாகிவிடும் . அது தன்னிச்சையாக நடக்கும். அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது நடக்கும். It will happen. It is effortless. மன அமைதி என்பது இயலாத செயல் அல்ல! இயலும் செயலே! அதற்கு நம் பங்கு எதுவும் தேவை இல்லை!!! Relaxplzz |
| Posted: 18 Feb 2015 08:00 AM PST கோடியில் ஒருவர்…… தமிழர் !!! ஏழூர் அய்யாசாமி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் 3000க்கும் மேற்பட்ட மரங்களைத் இலாபநோக்கின்றி தன்னார்வத்துடன் நட்டு வளர்த்த சூழல் ஆர்வலர். சத்தியமங்களத்திலிருந்து பங்களாபுதூர் வரும் வழியில் இருக்கிறது ஏழூர். ஏழூரிலிருந்து வடக்குத் திசையில் திரும்பி ஒரு மைல் கடந்தால் வருகிறது வேட்டுவன் புதூர். முதலில் வரவேற்கிறது மிகச்சிறிய ஒரு கடை. வெளியூர் ஆட்கள என்று தெரிந்ததுமே தானாகவே கேட்கிறார்கள "அய்யாச்சாமி அண்ணன தேடி வந்தீங்களா!"… "இந்த மரம் வளர்த்துறாரே" என்று இழுக்க, "அட அய்யாச்சாமியண்ணந்தான்…. இந்த அப்பிடி போங்க.. அந்த ஓட்டு வீடுதான்" ஏழூர் சென்று அவரைச் சந்திக்கிறோம் என்ற தகவலைச் சொன்னபோதே காஞ்சிக்கோவில் நாகராஜன் நம்முடம் கிளம்பிவிட்டார். திரு. அய்யாசாமி பற்றி முரளிகுமார் பத்மநாபன் வலைப்பக்கத்தில் ஏற்கனவே படித்திருக்கிறேன். கொளுத்தும் வெயிலில் அந்த வீட்டை அடைந்தோம். ஏழடி அகலத்தில் பதினைந்தடி நீளத்தில் ஒரு ஓட்டு வீடு. குனிந்து உள்ளே எட்டிப் பார்க்கிறோம். இரண்டு கயிற்று கட்டில்களில் இளைத்த உடம்போடு ஒரு தம்பதி, சத்தம் கேட்டு எழுந்து வாங்க என்று வரவேற்கிறார். எலும்பு தோலுமாய் காட்சியளிக்கும் பெரியவர் திரு. அய்யாசாமி (80120-26994) 74 வயதை தாண்டிக்கொண்டிருக்கிறார். சின்ன வயதிலிருந்தே இவருடைய தந்தை மரங்களின் மேல் கொண்டிருந்த காதல் இவருக்கும் தொத்திக் கொள்கிறது. விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த இவர், ஆடு மேய்க்கும் போது, ஊர் ஓரம் இருக்கும் உபரி நீர் செல்லும் பள்ளத்தில் வேப்ப மர விதைகளை ஊன்றி, நீருற்றி கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்தது ஏறக்குறைய பத்தாயிரம் மரங்கள். திட்டம் தீட்டி சமூக விரோதிகள் கொள்ளையடித்தது போக இன்று மிஞ்சியிருப்பது சுமார் 3000 மரங்கள். சிறு செடி முதல் முப்பது, முப்பத்தைந்து வயது வரை இருக்கும் வேப்ப மரங்களை பார்க்கும் போது உடலும், மனதும் சிலிர்க்கிறது. சுவாரசியமான தகவல், கடும் கோடையில் வீட்டிலிருந்த தண்ணீரைக் கூட எடுத்துச் சென்று செடிகளுக்கு ஊற்றியிருக்கிறார். "ஊட்டுல தண்ணியில்லைனா ஒரு நா சண்ட போடுவாங்க, இல்லன சோறு ஊத்த மாட்டாங்க, ஆனா செடி செத்துப்போச்சுன்னா என்ன பண்றதுங்க" என்ற போது, அருகில் எலும்பும் தோலுமாய் நின்ற அவரது மனைவி வெட்கத்தில் சிரிக்கிறார். அதிசயம், இந்த தள்ளாத வயதிலும் பெரியவர் அய்யாசாமி வீட்டில் பத்துப் பதினைந்து மரக்கன்றுகள் தயாராக இருக்கின்றது. பேசி, நெகிழ்ந்து, மனது கனத்து, நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு கிளம்பும் போது "அந்த பள்ளத்தோரம் போனிங்கனா, மரங்களைப் பார்க்கலாம்" என்று சொல்கிறார். கிட்டத்தட்ட மூன்று மைல் தூரம் பள்ளம் முழுதும் கனத்துக் கிடக்கிறது அழகான வேம்பு. பார்க்க பார்க்க வெயிலில் வெம்பிய உடல், மனதோடு சேர்ந்து குளிர்கிறது. அவருக்கு உதவியாக இருக்கும் திரு. விஜயகுமார் (98423-44399) நம்மோடு வந்திருந்து சுற்றிக் காட்டுகிறார். எல்லாம் முடிந்து கிளம்பும் போது, வேட்டுவன் புதூரில் முதலில் நாம் பார்த்த அந்த சிறிய மளிகை கடையில் பெரியவர் திரு. அய்யாசாமி நமக்காக காத்திருக்கிறார். விடைபெற்றுக் கிளம்புபோது ஒரு குளிர்பான பாக்கெட்டை கட்டாயப்படுத்தி கையில் திணிக்கிறார். வாகனத்தை இயக்கியபடி அந்த பாக்கெட்டை வாயில் கடித்து உறிஞ்சுகிறேன், இதுவரை அறியாத ஒரு சுவையை அதில் உணர்கிறேன். இந்த மாமனிதர்களின் தியாகங்களை நினைத்து, மனதிற்குள் அலையடிக்கிறது. யாரோ சிலரின் தியாகங்களால் தானே இந்த உலகம் யாரால் இயங்குகிறது. யாரோ போட்ட பாதையில் தானே நாம் எளிதாய் பயணிக்கிறோம், ஏதோ பறவையின் எச்சத்தில் விழுந்த மரம் வெளியிடும் ஆக்சிசனைத் தானே சுவாசிக்கிறோம். ஒரு ஏமாற்று சாமியாருக்கு, திரையில் மினுக்கும் ஒரு நடிகனுக்கு, மட்டையை சுழற்றி கோடியில் கொழிக்கும் விளையாட்டுக்காரனுக்கு கிடைத்த கவனம், இந்த மாமனிதர்களுக்கு கிடைக்க வில்லையென்பதை நினைக்கும் போது நிறைய அவமானமாக இருந்தது. ஒரு மரம் தன் வாழ்நாளில் நாம் சுவாசிக்க கொடுக்கு சுத்தமான காற்றின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாயாம். வறுமையின் பிடிக்குள் இன்னும் சிக்கித்தவிக்கும் இந்த மனிதர்கள் இந்த பூமிக்கு அர்பணித்தது பலாயிரம் கோடிகள் என்றால் மிகையாகது. விருதுகளும், கவனமும் இவர்களை அங்கீகரிக்க வில்லையென்றால், அந்த விருதுக்குத்தான் கேவலமேயொழிய இந்த மாமனிதர்களுக்கில்லை, ஏனெனில் இவர்கள், எதையும் எதிர்நோக்கி, தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்யவில்லை. இந்த மனிதர்களை வரும் காலத்தில் உலகம் மறக்காமல் இருக்க ஆவணப்படுத்த வேண்டும் என்ற வேட்கை மனதில் உருவானது. அவர்களிடம் அனுமதியோடு, எப்பாடுபட்டேயானும் அவர்களின் தியாகம் குறித்து ஒரு ஆவணப் படத்தை எடுத்து வரும் காலத்திற்கு பதிவு செய்துவிட்டுப் போக வேண்டும். அடுத்து அவர்களைப் பற்றிய செய்திகளை இன்னும் எதிர்மறை எண்ணம் அதிகம படியாத மாணவர்களிடம் எப்படியாவது எடுத்துச் சென்று அவர்களின் மனதில் நிரப்பிடவேண்டும். எல்லாம் ஒரு சிறுபுள்ளியில் தானே ஆரம்பித்திருக்கும், இதோ ஒரு சிறுபுள்ளியில் பசுமைக்கான ஒரு பயணம் ஆரம்பமாகிறது. முதிய வயதிலும் மரங்களைப் பேணி வந்த அய்யாசாமி மார்ச் 7, 2011 அன்று காலமானார். Relaxplzz ![]() |
| Posted: 18 Feb 2015 07:45 AM PST |
| Posted: 18 Feb 2015 07:30 AM PST |
| Posted: 18 Feb 2015 07:15 AM PST சில யதார்த்தமான் உண்மைகள்..உங்களால் மறுக்கவே முடியாது !!!! கல்யாணத்துக்கு முன்னால் வழுக்கை என்று போட்டோவை பார்த்து பையன்களை நிராகரித்த90% பெண்கள் கல்யாணமான ஒரூ 10 வருடத்திற்குள் ஒரு வழுக்கை கணவனுடந்தான் வாழ்கை நடத்த வேண்டி இருக்கிறது :) :) உடனே ஆண்கள் ரொம்ப சந்தோஷ பட வேண்டாம் ...... கல்யாணத்துக்கு முன்னால் போட்டோவை பார்த்து பெண் குண்டாக இருக்கிறாள் என்று நிராகரித்த 90% ஆண்களும் கல்யாணமான 2-3 வருடதிற்க்கு பின் குண்டு மனைவியுடன் தான் வாழ வேண்டியுள்ளது :) :) Relaxplzz |
| Posted: 18 Feb 2015 07:00 AM PST எதிர்பார்புகள் நிறைந்த வீடு... பல சலனப் பார்வைக்கு மத்தியில், உன்னை எனக்காய் என் குடும்பம் கண்டெடுத்த நாள் அது.. எனக்கு முகவரி கொடுத்த தந்தையின் முதல் எழுத்தும் மாற்றியாகிவிட்டது, என் தந்தையின் இடத்தில் உன்னை சுமந்து எதிர்பார்ப்புகள் நிறைந்த நான் வாழ்ந்த வீட்டில் இருந்து வாழப் போகும் வீட்டுக்கு வந்த கணம் அது.. சுமக்க முடிய மனச்சுமை என்னை பயமுறுத்த, புதிதாய் கிடைத்த சொந்தகளின் சிரிப்பும் அன்னியமாய்த் தெரிய, ஆறுதல் என்னவோ ஆழப் பொதிந்திருந்த உன் மீதான நம்பிக்கை மட்டும் தான். உயிர் கொடுத்த உறவில் தொடங்கி, அடித்து விளையாடும் என் உடன்பிறந்தவரில் இருந்து , விரும்பிக் குடித்த தேநீர் குவளை, அணைத்துறங்கும் என் செல்ல பொம்மையென, அனைவரையும் நீ சூடிய ஒற்றை கயறோடு பிரிந்து வந்தாகிற்று... உன் பிரமாண்டம் என்னை பயமுறுத்த, அம்மாவின் இடத்தில் அத்தையும், அப்பாவின் இடத்தில் மாமாவையும், தம்பியின் இடத்தில் கொழுந்தனையும், தங்கையின் இடத்தில் நாத்தனாரையும், என் இஷ்ட தெய்வத்தின் இடத்தில் உன் குலதெய்வத்தையும், வைக்கையில் உணர்ந்தேன் ஆணாய் பிறந்திருக்கலாம் என்று.. வேரோடு பிடிங்கிய மரமாய் நான் நிற்க, மரத்தாலான ஜன்னலும், கதவும், உன் வீட்டின் பிரமாண்ட வரவேற்பறையும், இனி என் கனவுகளின் கூடாரம் இது என்று விமர்சிக்க, எதார்த்தங்களின் வாசிகியாய் என் முதல் அடியை வைக்கின்றேன். விமர்சனங்கள் நிறைந்த வீடு என்னை வரவேற்க காத்திருக்க, என் கனவுக்கு உயிர் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் முதல் அடியை வைக்கின்றேன்.. - ரேவா பக்கங்கள் ![]() |
| Posted: 18 Feb 2015 06:45 AM PST உங்கள் கைபேசி எண்ணை வைத்து உங்கள் வயதை கணிக்கலாம்...! 1) உங்கள் மொபைல் எண்ணின் கடைசி ஒரு எண்ணை எடுக்கவும்... 2) அதை இரண்டால் (2) பெருக்கவும்... 3) அதனுடன் ஐந்தை (5) கூட்டவும்... 4) கிடைக்கும் விடையை 50 ஆல் பெருக்கவும்... 5) வரும் தொகையுடன் 1764 ஐ கூட்டவும்... 6) அதனுடன் நீங்கள் பிறந்த வருடத்தை கழிக்கவும்...(-1985,1987,1956 etc) இப்பொழுது உங்களுக்கு (3 digit) ஒரு விடை கிடைத்திருக்கும்... அதில் முதல் எண் உங்கள் மொபைலின் கடைசி எண்... மற்ற (2 digit) எண் உங்களின் வயது....! Relaxplzz ![]() |
| Posted: 18 Feb 2015 06:30 AM PST |
| Posted: 18 Feb 2015 06:15 AM PST அரண்மனையில் ஒரு போட்டி! விஷ பாம்புகள் நிறைந்த ஒரு குளத்தை நீந்தி கடந்து சாதனை புரிபவருக்கு 1000 வராகன் பொன், அல்லது 10 கிராமங்கள், அல்லது தன் ஒரே மகளான இளவரசியை திருமணம் செய்வது, இந்த மூன்றில் ஒரு பரிசை போட்டியாளர் தேர்ந்தெடுக்கலாம். உயிர் பிழைப்பது சிரமம் என்பதால் போட்டி அறிவித்து வெகு நேரம் ஆகியும் யாரும் போட்டிக்கு வரவே இல்லை. திடீர் என்று ஒரு இளைஞன் குளத்தில் குதித்ததும் மன்னருக்கு குஷி. உயிரையும் துச்சமாக மதித்து ஒரு சாதனையாளன் போட்டிக்கு தயாராகி விட்டானே? ஒரு வழியாக நீந்தி பத்திரமாக கரையேறி விட்டான். அவனை கட்டி அணைத்து, பாராட்டுதல்களை தெரிவித்து, "உனக்கு என்ன பரிசு வேண்டும் கேள்! ஆயிரம் வராகன் பொன்னா?" "இல்லை..." "பின்னே... 10 கிராமங்களா?" "ப்ச்! வேண்டாம்..." "ஆஹா! அப்படி என்றால் இளவரசியை திருமணம் செய்து கொள்கிறாயா?" "தேவை இல்லை..." "இது மூன்றில் ஒன்றை தானே பரிசாக அறிவித்து இருந்தேன். மூன்றுமே வேண்டாம் என்று சொல்லி விட்டாயே? ஆனாலும் உன்னை வெறும் கையுடன் அனுப்ப எனக்கு மனம் வரவில்லை. உனக்கு என்ன வேண்டுமோ அதை கேள், கட்டாயம் அதை தருகிறேன்..." "என்னை எவன் இந்த குளத்தில் தள்ளி விட்டான் என்று தெரியனும்...!" :P :P Relaxplzz |
| Posted: 18 Feb 2015 06:00 AM PST கருவில் இருக்கும் குழந்தைகிட்ட எப்படி பேசலாம்?... கருவில் இருக்கும் குழந்தையானது இந்த உலகத்தை பார்க்கத் தான் 10 மாதங்கள் வேண்டும். ஆனால் இந்த குழந்தை வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தாயுடன் வாழ்ந்து தான் வருகிறது. தாயானவள் ஒவ்வொரு நாளும் இந்த குழந்தையின் அசைவையும் உணருவாள். மருத்துவ ஆய்வின் படி, குழந்தைக்கு 16 வாரத்திலேயே கேட்கும் திறன் வந்துவிடுமாம். மேலும் இதனால் எல்லாவற்றையுமே புரிந்து கொள்ளவும் முடியுமாம். ஆகவே அப்போது குழந்தையிடம் தாயானவள் என்னென்ன செய்ய வேண்டும், எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று மகப்பேறு மருத்துவர் கூறுகிறார். அது என்னென்னவென்று படித்து பாருங்களேன்... கருவில் இருக்கும் குழந்தையிடம் பேசுவதற்கு சில டிப்ஸ்... 1. முதலில் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லக் பெயரை வைத்து பேசலாம். நிறைய பெற்றோர்களுக்கு என்ன குழந்தை என்று தெரியாமல் எப்படி பெயர் வைப்பதென்று ஒரு சந்தேகம் வரும். ஆனால் இதற்கு ஒரு வழி இருக்கிறது. அது தான் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லப் பெயரை, அதாவது இரு பாலினத்திற்கும் பொதுவான ஏதேனும் ஒரு செல்லப் பெயரை வைத்து அழைக்கலாம். வேண்டுமென்றால் இந்த பெயரை பிறந்த பிறகு மாற்றிக் கொள்ளலாம். 2. தாயானவள் முதலில் குழந்தையிடம் பேச வேண்டும். இது ஒரு பழைய நம்பிக்கை தான், இருப்பினும் குழந்தைக்கு தாயின் குரலானது மிகவும் பிடிக்கும். அப்படி பேசுவதால் குழந்தையானது அமைதியுடன், தாயின் குரலைக் கேட்டுக் கொண்டு நிம்மதியாக இருக்கும். மேலும் இப்படி பேசுவதால் பிறக்கும் போது அழும் குழந்தை கூட தாயின் குரலை கேட்டதும் அழுகாமல் இருக்கும். 3. கர்ப்பமாக இருக்கும் பெண் பாட்டு கேட்டால் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் கருவில் இருக்கும் குழந்தைக்கு மென்மையான பாட்டுக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே வீட்டில் ஏதேனும் ஒரு மென்மையான பாட்டை ப்ளேயரில் போட்டு, ஹெட் செட்டை வயிற்றில் வைக்கலாம். அப்படி பாட்டுக்களை கேட்கும் போது குழந்தை வயிற்றில் உதைத்தால் அது சந்தோஷத்தில் நடனம் ஆடுகிறது என்று அர்த்தம் ஆகும். 4. மேலும் குழந்தை கருவில் இருக்கும் போது எப்போதும் பாசிடிவ்-ஆகவே யோசித்து பேச வேண்டும். இதனால் குழந்தையானது பிறந்த பின்னும் எப்போதும் பாசிட்டிவ்-ஆகவே யோசிக்கும். மேலும் தாயானவள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அதனால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும். 5. அனைத்து தாய்க்கும் குழந்தை வயிற்றில் உதைக்கும் போது கணவர் அதை உணர வேண்டும் என்று நினைப்பர். அப்படியே அவர்களது கணவரும் ஆசைபடுவர். ஆகவே அப்படி உதைக்கும் போது, குழந்தையின் தந்தையும் குழந்தையிடம் அடிக்கடி பேச வேண்டும். அப்போது தான் தாய்க்குப் பின் தந்தை தூக்கினாலும் குழந்தை இது தான் தந்தை என்பதையும் புரிந்து கொள்ளும். மேலும் இவ்வாறு அந்த குழந்தை உதைக்கும் போது தந்தை அதை நன்கு உணர, அவருக்கும் அந்த பிரசவத்தின் அற்புதமும் நன்கு புரியும். எனவே, இப்படியெல்லாம் நடந்து பாருங்கள், குழந்தை ஆரோக்கியமாக புத்திக்கூர்மையுடன் பிறக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். Relaxplzz ![]() |
| Posted: 18 Feb 2015 05:45 AM PST |
| Posted: 18 Feb 2015 05:30 AM PST |
| Posted: 18 Feb 2015 05:15 AM PST கிராமங்களை நோக்கித் தேடுங்கள். கிரிக்கெட்டை தாண்டி ஏனைய விளையாட்டுகள் தெரிந்த அத்லெட்டிக் வீரர்கள் நிறையக் கிடைப்பார்கள். கிராமங்களை நோக்கித் தேடுங்கள். இயற்கை வேளாண்மை பற்றிய தெளிவு கொண்ட விஞ்ஞானிகள் நிறையக் கிடைப்பார்கள். கிராமங்களை நோக்கித் தேடுங்கள். மதிய உணவிற்காக மட்டுமே பள்ளிக்குச் சென்றும், அறிவியலில் சாதிக்கும் குழந்தைகள் நிறையக் கிடைப்பார்கள். கிராமங்களை நோக்கித் தேடுங்கள். சிலம்பாட்டம் முதல் கரகாட்டம் வரையிலான தமிழர் கலைகள் இரத்தத்திலேயே ஊறிப்போன கலைஞர்கள் நிறையக் கிடைப்பார்கள். என்று இந்த நாடு கிராமங்களை நோக்கி தேட ஆரம்பிக்கிறதோ.. என்று இந்த நாடு கிராமங்களிலும் எல்லாம் இருக்கிறது என்பதை நம்புகிறதோ.. என்று இந்த நாடு திறமையுள்ள எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரி அங்கீகரிக்கிறதோ.. அன்றே அறிவியல், கலை, விளையாட்டு என அத்தனை துறைகளிலும் இதுவரை இல்லாத மாபெரும் வளர்ச்சியைக் காண முடியும். Relaxplzz |
| Posted: 18 Feb 2015 05:00 AM PST |
| Posted: 18 Feb 2015 04:49 AM PST |
| Posted: 18 Feb 2015 04:39 AM PST மனதைக் கரைத்து விட்டது இந்த அழகான கதை " 'நம் உடம்பிலே மிக முக்கியமான உறுப்பு' என்ற தலைப்பில் ஆசிரியர் தன் மாணவர்களை ஒரு கட்டுரை எழுதச் சொன்னார். அந்த வகுப்பில் உடல் ஊனமுற்ற ஒரு சிறுமியும் இருந்தாள். கட்டுரைக்கான தலைப்பே அவளுக்கு பிடிக்கவில்லை. தவிர, சக மாணவர்கள் அந்தச் சிறுமியின் ஊனத்தைச் சொல்லி கிண்டல் செய்ய.. அன்றைய வகுப்பு பாவம் அவளுக்கு நரகமாகக் கழிந்தது. மாலை வீடு திரும்பியதும் அந்தச் சிறுமி தன் தாயின் தோள்களில் சாய்ந்து அழுதபடியே கேட்டாள்.. "நம் உடம்பில் முக்கியமான உறுப்பு எதும்மா?" "உடம்பிலே கண் தான் மா முக்கிய உறுப்பு! ஏன் என்றால், கண் இல்லையெனில் உலகமே இருட்டாகி விடுமே" என்று சொன்னாள் அம்மா. ஆனால், அதைச் சரியான பதிலாக அந்தச் சிறுமியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. "அப்படியானால் கைகள் தான் முக்கியமான உறுப்பு. அது இல்லையென்றால் நம்மால் எழுதவோ, வேறு எந்த வேலையும் செய்ய முடியாது இல்லையா" .. அம்மாவின் இந்த பதிலையும் சிறுமியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடைசியில் அந்தச் சிறுமியே ஒரு பதிலைச் சொன்னாள்.." நம் உடம்பில் தோள்கள் தான்மா முக்கியமான உறுப்பு. மற்ற உறுப்புக்கள் எல்லாம் நமக்கு உதவியாக இருக்கும். ஆனால், தோள்கள் தான் ஆதரவு தேடும் அன்பு முகங்கள் புதைந்து கொள்ள இடம் கொடுக்கும். இதோ, நான் கூட இப்போது உன் தோள்களிலே முகம் புதைந்து அழுகிறேன். என்னைப் பொறுத்தவரை அடுத்தவர் அழுவதற்கு இடம் கொடுக்கும் தோள்கள் தான் உடம்பிலே முக்கியமான உறுப்பு!" Relaxplzz ![]() # படித்ததில் பிடித்தது # - 5 |
| Posted: 18 Feb 2015 04:32 AM PST |
| Posted: 18 Feb 2015 04:15 AM PST உடல் இளைக்க கிரீன் டீ :- கிரீன் டீ-யின் பயன்கள் :- 1 கேன்சர் உருவாவதை தடுக்கிறது. 2சர்க்கரை நோயை கட்டுபடுத்துகிறது. 3இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது. 4ஆரோக்கியமான சருமத்தை ஊக்குவிக்கும், முகப்பரு மற்றும் சுருக்கங்களை தடுக்கிறது. 5எடை இழப்பிற்கு உதவி செய்கிறது . 6.முதுமை அடைவதை தடுக்கிறது , 7.இளமையாக இருக்க உதவுகிறது. 8.சீரான செரிமானத்திற்கு உதவுகிறது . 9.குடல் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்குகிறது. 10.சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்றவற்றை பாதுகாக்கிறது . 11.எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. 12.சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகிறது. 1.கிரீன் டீ நம் உடலில் உள்ள கொழுப்பை எரிக்க செய்து நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.பசிஎடுக்கும் உணர்வு குறைக்கபடுவதால் குறைந்தளவே சாப்பிட முடியும் .ஆதலால் உடலில் தேவையற்ற ஆற்றல் சேர்வது குறைக்கபடுகிறது. இயற்கையான வழியில் உடல் இளைக்க கிரீன் டீ உதவுகிறது . 2.நமது உடலில் இருக்கும் அதிகப்படியான நீர் நம் உடல் குண்டாக தோன்றுவதற்கு ஒரு காரணமாகும். அத்தகைய நீரினை கிரீன் டீ உடலிலிருந்து குறைப்பதால் மெலிதான தோற்றத்தை அடையலாம். 3.கிரீன் டீ-யில் catechins என்ற வேதிப்பொருள் இருப்பதால் உடலை வெப்பப்படுத்தும் பணியை செய்கின்றன.இது உடலில் உள்ள கொழுப்பை எரித்து ஆற்றலை கொடுக்கிறது .இதனால் கொழுப்பு இழக்கப்படுகிறது, உடல் எடை குறைக்கபடுகிறது . 4. உடலில் கார்போஹைட்ரேட்டை மெதுவாக செயல்பட வைப்பதால் இரத்தத்தில் இன்சுலின் அளவு குறைக்கபடுகிறது . இதனால் குளுகோஸ் கொழுப்பாக மாறும் அளவும் குறைக்கபடுகிறது.உடல் எடையும் குறைக்கபடுகிறது . Relaxplzz |
| Posted: 18 Feb 2015 03:30 AM PST |
| Posted: 18 Feb 2015 03:15 AM PST பேஸ்புக் ஓனர் "மார்க் ஜூகர்பெர்க்" ஒரு தமிழர் !!!! ஆதாரம்: 1. வீட்டு விசேஷங்களில் மாற்றிமாற்றி மொய் செய்து கொள்ளும் தமிழர் பாரம்பரிய முறையை பின்பற்றி "லைக்" செய்யும் முறையை அறிமுக படுத்தியுள்ளார். 2. மகிழ்ச்சி, தளர்ச்சி, குறைகளை மற்றவர்ககளிடம் பகிர்ந்து கொள்ள "share" செய்யும் முறை! 3. திண்ணை யில் அமர்ந்து வெட்டி அரட்டை அடிப்போருக்கான "comment" "chat" செய்தல் முறை. 4. சும்மா இருப்பவனைத் தூண்டி விட்டு வம்பளக்க வைக்கும் தமிழரின்(திராவிட) சிறப்பை உணர்த்தும் "poke" (உசுப்பி விடுதல்) பட்டன். 5. கூட்டமாக சென்று வம்பு செய்ய "group" 6. சுய தம்பட்டம் அடிக்க "profile" 7. கோர்த்து விட்டு கூத்து பார்க்க "Add tag" 8. "நான் செத்தாலும் என்னை பார்க்க வராதே" என்னும் வீராப்பு பார்ட்டி களுக்காக "Unfriend" "Block this person" 9. புரளிகள் பரப்ப , கிசுகிசு பேச "messages" 10. திக்குத் தெரியாத முட்டுச் சந்தில் வைத்து அடிக்க, துண்டு போர்த்தி அடிக்க "fake id" இப்படி தமிழரின் பாரம்பரிய பெருமைகளை காப்பாற்ற பேஸ்புக் கை உருவாக்கிய "மார்க்" அவர்களை அமெரிக்க சனாதிபதி ஆக்க பரிந்துரை செய்யுமாறு தமிழர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.. படித்தவுடன் மறவாமல் மொய் எழுதிச் செல்லவும். அதாங்க "like" பட்டன் !! Relaxplzz |
| Posted: 18 Feb 2015 02:45 AM PST அதிகம் அன்போடுநடந்து கொள்ளாதேஅடிமையாக்கி விடுவார்கள்.. அதிகம் பொறுமையுடன் நடக்காதே பைத்தியம் ஆகும் வரை விட மாட்டார்கள்.. எல்லாம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று நினைக்காதே பலர் உன்னை வெறுக்க நேரிடும்.... எல்லோரையும் நம்பி விடாதே ஏமாற்ற பலர் இருக்கிறார்கள். கோபப்டாமலே இருந்து விடாதே கோமாளியாக்கி விடுவார்கள்.. Relaxplzz ![]() வாழ்வின் மொழி... |
| Posted: 18 Feb 2015 02:33 AM PST |
| Posted: 18 Feb 2015 02:15 AM PST காதலைப்_பற்றி_இவர்கள்_சொல்லும்_கருத்து * பரோட்டா மாஸ்ட்டர் : காதல் என்பது பரோட்டா மாதிரி.ரெண்டு பக்கமும் நல்லா வேகணும்.அப்பதான் ருசியா இருக்கும். * போலீஸ்காரர் : லவ்வுங்கிறது மாமூல் மாதிரி.அதிகமா கிடைச்சா சந்தோசம்,கம்மியா கிடைச்சா வருத்தம்.இதாங்க லவ்வு. * ஆட்டோகாரர் : காதல்னா ரெகுலர் சவாரி மாதிரி இருக்கணும்பா.இப்படி லோக்கல் சவாரி மாதிரி என்னிக்காவது வரக்கூடது பா. * அரசியல்வாதி : காதல்னா,மத்திய அரசு மாதிரி ஸ்ட்ராங்கா இருக்கணும். மாநில அரசு மாதிரி பொறுப்பில்லாம இருக்கக்கூடாது. * பைலட் : காதல் ஒரு Run Way மாதிரி ஒரே லெவல்ல இருக்கணும். கொஞ்சம் முன்ன பின்ன இருந்துச்சுனா Take-Off ஆவுறது கஷ்ட்டம். * டாக்டர் : காதல் என்பது Anti Biotic Medicine(ஆன்டி பயோட்டிக் மெடிசின்) மாதிரி.வருமுன் காப்பதே சிறந்தது. * பத்திரிக்கையாளரர் : காதல் என்பது "கண்ணித்தீவு" தொடர் மாதிரி.இதுவரைக்கும் முடிவே வரலை. * பாய்ஸ் : சார்,லவ்வுங்கிறது வேற மாதிரியான Feelings.அத சொல்ல முடியாது,அனுபவிக்க தான் முடியும். * கேல்ஸ் : காதல்னா அன்பு.அன்புனா காதல்.That's it..... Relaxplzz |
| Posted: 18 Feb 2015 01:45 AM PST இரவு 9 மணிக்கு வீட்டின் முதல் மூன்று படி ஏறியதும் யம்மா அப்பா வந்துட்டு னு எட்டாத கதவின் தாழ்பாளை திறக்க முயற்சிக்கும் என் மகளை என்னனு சொல்ல .. # மகளெனும் தேவதை # - Divya Kannan ![]() # மகளெனும் தேவதை # |
| Posted: 18 Feb 2015 01:32 AM PST |
| You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |






















0 comments:
Post a Comment