Relax Please: FB page daily Posts |
- மீத்தேன் திட்டம் என்றால் என்ன? நண்பர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டி...
- உரக்கக்கூறுகிறேன் கேளுங்கள் உண்மை செய்தியை பகிருங்கள் உங்கள் மீடியா எப்போதாவது...
- நண்பா... நண்பா... நண்பா... :) 1.கல்லூரி உணவகத்தில் சாப்பிடும் தட்டிற்கு பஞ்சம்...
- தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... 1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ண...
- ஒரு பள்ளி சிறுவன் உணவு இடைவேளை விடும்போது தன நண்பர்களுடன் அமர்ந்து சாப்பிடுவதை வ...
- ஒரு மு்ட்டைக்குள் கோழிக்குஞ்சு எப்படி உருவாகிறது... (முதலில் உருவாகிறது கண்)
- எதிர்பார்ப்பும் இல்லை, ஏமாற்றமும் இல்லை கிராமத்து வாழ்வு...
- ஐந்து பேர் கலந்துகொண்ட ஓட்டபந்தயத்தில்., எனக்கு கடைசி இடந்தான் கிடைத்தது .. நண்...
- “நீங்கள் செய்த அறிவிப்பால் பாவம் பெருகப்போகிறது. ஏன் இப்படி ஓர் அறிவிப்பை செய்தீ...
- உங்கள் கனவுகளை கலைத்து விடாதீர்கள், எது நேர்ந்தாலும் களைத்து விடாதீர்கள், அவற்றை...
Posted: 16 Feb 2015 09:00 AM PST மீத்தேன் திட்டம் என்றால் என்ன? நண்பர்களே, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய செய்தி. தயவுசெய்து படிங்கள். படிக்க நேரமில்லை என்றால் share மட்டுமாவது செய்யுங்கள். அக்கறை உள்ள தமிழன் தெரிந்து கொள்ளட்டும். 2010 ஆம் ஆண்டு மன்மோகன்சிங் மீத்தேன் வாயு திட்டத்தை பற்றி முதன்முதலாக அறிவித்தார். அவர் கூறியதாவது, " இந்தியாவில் இயற்கை எரிவாயுவின் பயன்பாடு கடந்த ஆண்டை விட 18% அதிகரித்துள்ளது. அதனால் இந்தியாவில் மீத்தேன் எடுக்கப்பட வேண்டும் " என்று கூறினார். அதற்காக நடத்திய ஆய்வில் இந்த மீத்தேன் எரிவாயு தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் அதாவது காவிரி டெல்டா பகுதிகளில் பூமிக்கடியில் அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக நடத்திய ஏலத்தில் Great Eastern Energy Corporation Limited என்ற வடமாநில தனியார் நிறுவனத்திற்கு தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் ஓப்பந்தத்தை மத்திய அரசு வழங்கியது. ஆனால் பூமிக்கடியில் இருந்து மீத்தேன் எடுக்கும் முறையை பற்றி அறிந்தால் நமது இதயமே பதறும். அதை பற்றி சுருக்கமாக காணலாம். இந்த மீத்தேன் திட்டத்திற்காக 1,64,819 ஏக்கர் விவசாய நிலங்கள் பலியாக உள்ளன. கீழே உள்ள செயல்முறைகள் பசுமை நிறைந்த வயல்களில் செய்யப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மீத்தேன் எடுக்கும் முறை: மீத்தேன் வாயுவானது பூமிக்கடியில் ஆயிரக்கணக்கான அடிகளுக்கு கீழே பாறை இடுக்குகளில் சிக்கி நிறைந்துள்ளது. இதை Hydraulic Fracturing என்று அழைக்கப்படும் ' நீரியல் விரிசல் ' முறையை பயன்படுத்துவார்கள். முதலில் செங்குத்தாக ஆயிரக்கணக்கான அடிகள் துளைகளை இடுவார்கள். பின்பு கிடைமட்டமாக பல கிலோமீட்டர்களுக்கு துளைகளை இடுவார்கள். பின்னர் நிலத்தடி நீர் முழுவதையும் வெளியேற்றி விடுவார்கள். பின்னர் அந்த துளைகளின் வழியே நீரையும் , 600 க்கும் அதிகமான நச்சுத்தன்மை உடைய வேதிப்பொருட்களையும் அதிக அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை வெடிக்கச் செய்து அடைபட்டுள்ள மீத்தேனை வேதிப்பொருட்களோடு வெளியே கொண்டு வருவார்கள். பின்னர் அந்த வேதிப்பொருட்களிலிருந்து மீத்தேனை மட்டும் தனியாக பிரித்து எடுப்பார்கள். மீதமுள்ள நச்சுத்தன்மை வாய்ந்த வேதிக்கழிவுகள் பூமியிலேயே கொட்டப்படும். சற்றே சிந்தித்து பாருங்கள். தமிழத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா பகுதிகளில் நிலத்தடி நீரை முற்றிலும் உறிஞ்சி எடுத்து விட்டால் , அழுத்தக்குறைவு காரணமாக கடல்நீர் நிலத்திற்குள் புகுந்துவிடும். நிலம் உள்வாங்கும். பசுமையான வயல்வெளிகள் பாலைவனமாக மாறும். மேலும் வேதிப்பொருட்களால் நிலம் நஞ்சாகும். சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிநீர் விஷமாகும். இதை போன்ற திட்டம் ஏற்கனவே பல நாடுகளை காவு வாங்கியது. தற்போது தமிழகத்திற்கும் வந்துள்ளது. இவ்வளவு பெரிய ஆபத்தான திட்டத்தை அரசியல் அமைப்புகளும் ஊடகங்களும் மறைக்கின்றன. இதை மக்களுக்கு தெரியபடுத்தவேண்டியது நமது கடமை அல்லவா. நாம் அனுபவித்த இயற்கை வளங்களை நமது சந்ததிகளும் அனுபவிக்க வேண்டாமா........... இதை படித்தவர்கள் தங்களது பெயரின் முதல் எழுத்தையாவது command செய்யுங்கள். எததனை பேர் இதை படித்துள்ளனர் என தெரிய விளைகிறேன். கண்டிப்பாக share செய்யுங்கள். Relaxplzz ![]() |
Posted: 16 Feb 2015 07:10 AM PST உரக்கக்கூறுகிறேன் கேளுங்கள் உண்மை செய்தியை பகிருங்கள் உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா??? ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுக்காரர்கள் ஏமாற்றத்தான் செய்வார்கள் #NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள். #FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது. #VICKS பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது. #LIFE BOUY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப்பும் அல்ல. ஆனால், அது ஒரு cabolic சோப்பு, மிருகங்களை குளிப்பாட்ட பயன்படுவது. ஐரோப்பாவில், அது நாய்களை குளிப்பாட்ட பயன்படுகிறது, ஆனால், நம் நாட்டில் ? மாப்ளே, நீ எந்த சோப்பு போட்ற? #COKE மற்றும் PEPSI ஆகியவை, உண்மையில், கழிவறையை சுத்தம் செய்பவை. அதில் 21 மாறுபட்ட விஷம் கலந்திருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், அதன் விற்பனை, இந்திய பாராளுமன்றத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அப்போ, இந்தியாகாரன் எல்லாம் இளிச்சவாயனா? இனிமே டிவி ல, coke குடிங்க, பெப்சி குடிங்கன்னு எவனாச்சும் வரட்டும், மவனே, நாஸ்தி தான். #வெளிநாட்டு கம்பனிகள் ஊட்டச்சத்து மிக்க பானம் என்று, பூஸ்ட், காம்ப்ளான், HORLICKS, மல்டோவா, PROTINEX ஆகியவற்றை விற்கின்றன. ஆனால், அதை, இந்தியாவில் டெல்லியில் ALL INDIA INSTITUTE (இந்தியாவில் உள்ள மிக பெரிய பரிசோதனை சாலை) இல், பரிசோதித்தபோது, நிலகடலையிளிருந்து எண்ணையை பிரித்தெடுத்த பிறகு வரும் கழிவிலிருந்து தயாரிக்கபடுகிறது. அது, விலங்குகள் உணவாகும். இந்த கழிவிலிருந்தே, ஆரோக்கிய பானங்கள் தயாரிக்கிறார்கள். #ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு பத்து மணி நேர தொடர்ச்சியான அறுவை சிகிச்சை நடந்தது. அவரது, பெரிய கணையத்தை மருத்துவர்கள் அறுத்து, அகற்றி விட்டார்கள். அதன் பிறகு, மருத்துவர்கள், அது கெட்டு போக காரணம், coke மற்றும் பெப்சி குடித்ததே என்று. அதிலிருந்து, அவர் பெப்சி, coke ஆகிய விளம்பரங்களுக்கு நடிப்பதில்லை. #PIZZA பற்றி பார்ப்போம். PIZZA விற்கும் கம்பனிகள் "Pizza Hut, Dominos, KFC, McDonalds, Pizza Corner, Papa John's Pizza, California Pizza Kitchen, Sal's Pizza" இவை அமெரிக்கன் கம்பனிகள். PIZZA சுவையாக இருக்க வேண்டி, E-631 என்ற flavor Enhancer சேர்க்கபடுகிறது. இது, பன்றி, கோழி இறைச்சியில் இருந்து தயாரிக்கபடுகிறது. # கீழ்கண்ட குறியீடுகள், உங்கள் உணவு பாக்கெட்களில் கானபட்டால், அதில் என்னென்ன கலந்திருக்கும் ? E 322 – எருது E 422 – ஆல்கஹால் E 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல் E 471 – எருது & ஆல்கஹால் E 476 – ஆல்கஹால் E 481 – எருது & கோழி E 627 – ஆபத்தான கெமிக்கல் E 472 – எருது, கோழி மற்றும் இறைச்சி E 631 – பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு. # Note – இந்த code களை, பெரும்பாலான வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில் காணலாம். அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள் கம், டாபிஸ், குர்குரே மற்றும் மாகி (ஆமா, ரெண்டு நிமிஷத்துல தயாராகுமே, அதேதான்) # நுகர்வோரே, விழித்து கொள்ளுங்கள் !!! ● மாகி யில், flavor (E-635 ) என்ற code இருக்கும். ● கூகிள் இல், கீழ்கண்ட code களையும் தேடி பாருங்கள், இவை அனைத்துமே, ஒவ்வொன்றாய் குறிக்கும் :- E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904. தயவு செய்து உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிருங்கள். !!! இயற்கையாய் இயற்கையோடு வாழ..! இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..! ஆலமர விழுதுகளாய் நாம் பகிர்வோம்..! மனிதநேய விதைகளாய் மாறுவோம்..! +++++++++++++++++++++++++++++++ பொது நலம் கருதி வெளியிடுவோர் :-உங்கள் கிராமத்து இளைஞன். Relaxplzz |
Posted: 16 Feb 2015 06:15 AM PST நண்பா... நண்பா... நண்பா... :) 1.கல்லூரி உணவகத்தில் சாப்பிடும் தட்டிற்கு பஞ்சம் வந்த போது, கிடைத்த ஒரு தட்டில் இருவரும் சாபிட்டதுண்டு. 2.உன் உடையை நானும், என் உடையை நீயும் மாற்றி அணிந்ததுண்டு. 3.நீ என் வீட்டில் தங்கி தேர்விற்கு இரவெல்லாம் இருவரும் ஒன்றாய் படித்ததுண்டு.நான் உன் ஊருக்கு வந்து உன் வீட்டில் தங்கி கடைசி வருட ப்ராஜெக்ட் யை முடித்ததுண்டு. 4.கல்லூரி பேருந்து நெரிசலில் உன் மடியில் அமர்ந்து நான் பயணம் செய்ததுண்டு. 5.சட்டை கிழிய சண்டை போட்டாலும் , சட்டென சமாதானம் ஆனதுண்டு. 6.என் தவறுக்கு என்னுடன் சேர்ந்து நீ தண்டனை வாங்கியதுண்டு. 7.என் ரெக்கார்ட் நோட்டில் என் கை எழுத்தை விட, உன் கை எழுத்தே அதிகம் இருக்கும். 8.உன் புத்தகத்தின் கடைசி அட்டையில் என் கிறுக்கல்களே அதிகம் இருக்கும். # இப்படியே சென்ற நான்கு வருட கல்லூரி வாழ்வில், நீ என்ன சாதி என்று நானும் , நான் என்ன சாதி என்று நீயும் கடைசி வரை கேட்கவே இல்லை. - கனா காண்கிறேன் Relaxplzz |
Posted: 16 Feb 2015 06:15 AM PST தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்.... 1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு... தப்புங்க தப்பு,,, ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு... இதாங்க சரி... 2.படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்.... இதுவும் தப்பு சரியானது என்னன்னா ........... படிச்சவன் பாட்டை கொடுத்தான் , எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் ... . 3.ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்... இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை ) ஆயிரம் வேரை கொன்றவன்n அரை வைத்தியன்....... 4.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு .... சூடு அல்ல சுவடு... சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது... ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும்.... 5.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான்.... அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்.... வள்ளல் ஆனவரை கஞ்சனாக மாற்றி விட்டோம் ... காலப்போக்கில்.... நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்... Relaxplzz |
Posted: 16 Feb 2015 05:15 AM PST ஒரு பள்ளி சிறுவன் உணவு இடைவேளை விடும்போது தன நண்பர்களுடன் அமர்ந்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தான்.மற்ற சிறுவர்கள் பேசிக்கொண்டும் தமக்குள்ள சண்டை போட்டுக்கொண்டும் உணவை கீழே இறைத்து கொண்டும் சாபிட்டர்கள். அவர்கள் அதை பற்றி பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் இந்த சிறுவன் அமைதியாக ஒரு பருக்கை கூட கீழே சிந்தாமல் கவனமாக சாபிட்டான். ஒன்றிரண்டு சோற்று பருக்கை டிபன் தூக்கில் ஒட்டி கொண்டு இருந்தாலும் அதையும் எடுத்து சாப்பிட்டுவது அவன் பழக்கம். இதை பார்த்த அவன் நண்பர்கள் அவனை "பிச்சைகாரன்" என்று கேலி செய்தனர். அவன் அதற்காக கவலைப்படவில்லை. இதை கூர்ந்து கவனீத்த அவன் நண்பனொருவன் ஒருநாள் இதை பற்றி கேட்ட பொழுது அந்த சிறுவன் அதற்கு பின் வருமாறு விளக்கம் கொடுத்தான். "இதோ பார் நண்பா ..நான் ஒரு பருக்கை கூட வீணாகாமல் சாபிடுவது என் பெற்றோர்களுக்கு நான் காட்டும் மரியாதை. என் அன்னை அதிகாலையில் எழுந்து குளிர் பனி என்று பாராமல் எனக்கு பிடித் உணவை அன்புடன் செய்து கொடுத்து என்னை பள்ளிக்கு அனுப்பி வைக்கிறாள். என் தந்தை இரவு பகல் என்று பாராமல் வெளியே உழைது வீட்டை நடத்தி செல்ல பொருள் ஈட்டி கொண்டு வருகின்றார். அது மட்டும் அல்ல . நாம் கீழே சிந்தி வீணாக்கும் ஒவ்வோர் பருக்கையும் நம் தாய் தந்தையரோடு மழை வெயில் பாராது தன நெற்றி வேர்வை நிலத்தில் விழ பாடுபடும் விவசாயிகளையும் அவமதிப்பதாகும். உலகில் எவ்வளவோ பேர்கள் உண்ண உணவில்லாது அவதிபடுகிறார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் நான் சிறிது கூட சிந்தாமல் வீணாகாமல் சாப்பிடுகிறேன் " என்று பதில் அளித்தான். நாம் எல்லோரும் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம்தான். (படித்ததில் பிடித்தது ) Relaxplzz |
Posted: 16 Feb 2015 12:48 AM PST |
Posted: 15 Feb 2015 09:50 PM PST |
Posted: 15 Feb 2015 06:35 PM PST ஐந்து பேர் கலந்துகொண்ட ஓட்டபந்தயத்தில்., எனக்கு கடைசி இடந்தான் கிடைத்தது .. நண்பர்கள் கிண்டல் செய்தார்கள் நான் கவலை கொள்ளவில்லை .. அமைதியாக அவர்களை பார்த்து சொன்னேன்.. வேடிக்கை பார்த்திட மட்டுமே முடிந்த உங்களால் தோல்வி அடையக்கூட போராட தைரியமில்லையே... வெற்றியோ தோல்வியோஎன்னையும் பார்க்க., பல்லாயிரம் ரசிகர்கள் அமர்ந்து இருந்தார்கள் அல்லவா.. அந்த வெற்றியே எனக்கு போதுமென்றேன். (y) (y) Relaxplzz |
Posted: 15 Feb 2015 05:00 PM PST "நீங்கள் செய்த அறிவிப்பால் பாவம் பெருகப்போகிறது. ஏன் இப்படி ஓர் அறிவிப்பை செய்தீர்கள்" என்று பரமசிவனிடம் பார்வதி கோபித்துக்கொண்டார். சிவனே என்றிருந்த சிவனுக்கு ஒன்றும் புரியவில்லை. "நீங்கள் உங்கள் இஷ்டத்திற்கு கங்கையில் குளித்தால் பாவம் போகும் என்று அறிவித்து விட்டீர்கள். இதனால் நாட்டில் பாவம் பெருகிவிடாதா? " என்றார். நியாயம்தானே. கங்கையில் குளித்தால் பாவம் போய்விடும் என்ற தைரியத்தில் இனி பயமே இல்லாமல் பாவம் செய்வார்களே.. பரமசிவன் சிரித்துக்கொண்டே, "உன் கேள்விக்கு பதிலை கங்கைக்கரையில் சொல்கிறேன்" என்று பார்வதியை அழைத்துக்கொண்டு கங்கைக்கரைக்கு வந்தார். இருவரும் மாறுவேடத்தில் இருந்தார்கள். இருவரும் பேசி வைத்தபடி சிவன் மயக்கம் வந்தவர் மாதிரி நடித்து மயங்கி விழுந்தார். பார்வதி உதவி கேட்டு கூச்சலிட்டார். எல்லோரும் கூடிவிட்டனர். யாராவது ஒருவர் கங்கையிலிருந்து தண்ணீர் கொண்டுவந்து தெளித்தால் மயக்கம் தெளியும். உதவி செய்யுங்கள் என்றார் பார்வதி. எல்லோரும் ஓடினர். "ஒரு நிமிஷம். உங்களில் யார் பாவம் செய்யாதவரோ அவர்கள் தண்ணீர் கொண்டு வந்து தெளித்தால்தான் மயக்கம் தெளியும்" என்றார் பார்வதி எல்லோரும் சட்டென்று பிரேக் போட்டது போல நின்று விட்டார்கள். காரணம் எல்லோரும் பாவம் செய்திருக்கிறார்கள். பத்து நிமிடம் ஆயிற்று. இருபது நிமிடம் ஆயிற்று. ஒருவர் கூட அசையவில்லை. திடீரென்று கூட்டத்திலிருந்த ஒருவன் ஓடிப்போய் கங்கையில் குதித்தான். முங்கிக் குளித்தான். தண்ணீர் அள்ளிக்கொண்டு வந்து சிவன் முகத்தில் தெளித்தான். சிவன் மயக்கம் தெளிந்ததுபோல எழுந்திருக்க, கூட்டம் கலைந்தது. சிவன் சொன்னார், "கங்கையில் குளித்தால் பாவம் போகும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஒருவன் மட்டுமே நம்பினான். கங்கையில் குளித்தால் பாவம் போகும் என்று தெரிந்தவனுக்கு எல்லாம் பாவம் போகாது. கங்கையில் குளித்தால் பாவம் போகும் என்று நம்பியவனுக்கு மட்டும்தான் போகும்" என்றார். நம்பிக்கையாய் இருந்தால் முடியும் என்பதே முதல் வெற்றி. என்றும் நம்பிக்கையுடன்.. (y) (y) Relaxplzz |
Posted: 15 Feb 2015 04:45 PM PST |
You are subscribed to email updates from ரிலாக்ஸ் ப்ளீஸ்'s Facebook Wall To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |
0 comments:
Post a Comment